Thursday, January 27, 2011

விவாகரத்து செய்து வைப்பாரா சிதம்பரம் சிவபெருமான்?

நாயன்மார்களின் கதைகளை, பெரிய புராண மிகைப்படுத்தல் இல்லாமல், மூல நூலில் உள்ளது உள்ள படி சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக...
இன்று திருநீலகண்ட நாயனாரின் குருபூசை (நினைவு நாள்) - தை விசாகம் (Jan-27-2011)!
கதையைப் பார்க்கலாமா? தலைப்பைப் பார்த்து பயந்து விடாதீர்கள்! :)
இவர் வாழ்க்கை சாதாரணப்பட்டது இல்லை! பல குடும்பச் சிக்கல்கள் கொண்டது!

காரைக்கால் அம்மையார் என்னும் தோழி புனிதாவின் கதையைப் பந்தலில் படித்து இருப்பீர்கள் அல்லவா? தமிழ்மணம் விருதும் பெற்ற புனிதாவின் நெஞ்சகத்துக் கதை! அதே போல் தான் திருநீலகண்டர் கதையும்! ஆனால் நல்ல வேளை, புனிதாவுக்கு ஏற்பட்ட கொடுமைகள் இங்கு ஏற்படவில்லை!

* அங்கு புனிதா தள்ளி வைக்கப்பட்டாள், அவள் ஆன்மீகத்தைக் காரணம் காட்டி!
* இங்கு நீலகண்டன் தள்ளி வைக்கப்பட்டான், அவன் "ஆண்"மீகத்தைக் காரணம் காட்டி! :)

* அங்கு கணவன் தள்ளி வைத்தான்! ஊரே தள்ளி வைத்தது!
* இங்கு மனைவி தள்ளி வைக்கவில்லை! தள்ளிக் கொண்டாள்!

* அங்கு தள்ளி வைக்கப்பட்டதும் இல்லாமல், நிராதரவாக விடப்பட்டாள்! சுடுகாட்டு வாய்க்கரிசியாச்சும் பசிக்குக் கிடைக்கிறதே என்று, ஒரு பேதை பேய்மகளிர் ஆனாள்!
* இங்கு நீலகண்டன், நிராதரவாக எல்லாம் விடப்படவில்லை! மனைவி, தள்ளி மட்டுமே கொண்டாள்!

காமம் மிக்க நீலகண்டன் - திரு-நீலகண்டர் ஆனான்!
இவனைத் தான் நாயன்மார்கள் பட்டியலில் முதலில் வைத்துப் பாடுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்!
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்!
திருநீல கண்டத்துக் குயவனார்க்கும் அடியேன்!
இப்பேர்ப்பட்ட நாயன்மாரின் திருக்கதையைப் பார்க்கலாமா? வாருங்கள்!தில்லை!
அன்று அவ்வளவு தொல்லை இல்லை!

தில்லைக்கு வெளியே மண் பானைகள் மற்றும் ஓடுகள் சுட்டு விற்கும் குயவர் சேரி! அதில் பிறந்தவன் நீலகண்டன்!
அவன் தில்லையம்பலத்து அழகனைப் பாடுவதிலும் பக்தி செய்வதிலும் மட்டும் காலம் கழித்து விடவில்லை! அடியார்களுக்கு உதவியாகவும் இருந்தான்!

இறைப்பணியை விட, இறைவன் பேரை முன்னிட்டுச் செய்யும் மானிடப் பணி, மிகவும் உயர்ந்தது! அதுவே இறைவனுக்கு உகப்பும் கூட!
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே - என்று நம்மாழ்வார் இத்தனை முறை அடியார் என்று சொல்லி, அடியார்களை முன்னிட்டே தொண்டர் குலத்தை நிலைநாட்டுகிறார்!

அது போன்ற தொண்டர் குலத்துக்கு உதவியாக, அவர்கள் உண்ணும் பானைகளையும் திருவோடுகளையும் செய்து தருவது நீலகண்டன் வழக்கம்!
காசு வாங்க மாட்டான்! ஊருக்கு விற்கும் இதர மண்பாண்டங்களின் காசு மட்டுமே குடும்பத்துக்கு! நாம செய்வோமா, இன்றைய சம்பளத்தைக் கொண்டு? :) ஆனால் அன்றே செய்தான் நீலகண்டன்!

நீலகண்டனுக்கு, சைவ சமயப் பரப்பல், சமய வாதப் போர் எல்லாம் தெரியாது! சிவபெருமானை மட்டுமே தெரியும்!
அதிலும் உலகத்துக்காக அவர் தாமே நஞ்சுண்ட தியாகம் மட்டுமே தெரியும்! நீலகண்டம் நீலகண்டம் என்று அவன் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்!
இப்பேர்ப்பட்டவனுக்கு, ஒன்னே ஒன்னில் மட்டும் கொஞ்சம் சபலம்! = காம சுகம்! :)காமம்! தவறில்லை!

சிற்றின்பம் கூடச் சிவ இன்பமாகி விட்டால் பேரின்பம் தானே! தோழி கோதை, காமத்தால் அல்லவோ ஆண்டாள், தமிழை ஆண்டாள்?
காதல் இன்பத்தில், காம இன்பமும் சேர்ந்தால், இன்பமோ இன்பம் தான்!
ஆனால் அது காதலில் சேரும் போது மட்டுமே! வெறுங் காமத்தில் இல்லை!

தோழனொருவன் நீலப்படம் பார்ப்பதிலும் கிளுகிளு-வெனப் பேசுவதிலும் இன்பம் காண்பவன் என்றாலும், அது முருக இன்பத்தோடு சேரும் போது, உருக இன்பம் ஆகிவிடுகிறது அல்லவா! முருகா..மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்! உன்னுடைக் காமங்கள் ஏற்றேலோ ரெம்பாவாய்!

நீலகண்டனுக்கு, நல்ல மனைவி வாய்த்திருந்தாள்!
ஆனால் வீட்டுக்கு வெளியேயும் சுகம் தேடும் மனசு போல நீலகண்டனுக்கு! :)

காலம் தாழ்ந்த கல்யாணம், இளமை அல்லாத இள-வயசில் வரும் ஆசை, அவ்வளவு சீக்கிரம் அடங்கி விடுவதில்லை போலும்! ஒரு பொழுதில் ஓர் ஆசை, சுகம் சுகம் அதிலே, ஒரே சுகம்! :)
நீலகண்டனும் இப்படித் தான் போல! இருவரும் உடன்பட்ட Consensual தானே, தவறில்லை என்று சொன்னாலும், பாவம்....அவனையே நம்பிக் காத்துக் கிடக்கும் ஒரு ஜீவன் என்ன செய்யும்?

ஒரு நாள், மனைவியின் காதுக்கு இது எட்டி விட்டது!
கண்ணால் பார்த்தும் விட்டாள்! ஆனால் அவள் பார்த்தது....அவனுக்குத் தெரியாது!

வீட்டுக்கு வந்து, வீட்டு சுகமும் தேவைப்பட்டதோ என்னவோ!
இன்ப எண்ணிக்கையைக் கூட்ட...
எண்ணிக் கையை நீட்டினான்!
= "தொடாதீர்கள் - திருநீலகண்டர் மேல் ஆணை!"அந்த நீலகண்டப் பெருமான் மேல்.........இந்த நீலகண்டனுக்கே சத்தியமா?
காதலின் உச்சியில் தாபமெல்லாம் திரண்டு........சாபமாக வந்து விட்டதே!

உள்ளத்தைக் கொடுத்த பேதையின்....உள்ளம் நொந்ததால் வாய்ச்சொல் வெந்தது!
"என்னைத் தொடாதே" என்று சொல்லவில்லை!
"தொடாதே" என்று பொதுவாகச் சொல்லி விட்டாள்! அதனால் நீலகண்டன் அதிர்ந்தே போனான்!

பல உடல்களோடு உறவாடிய போதெல்லாம் கூசாத உடல், கூசியது!
அசைவம் சாப்பிட்ட நாக்கே, நமக்கெல்லாம் அடங்க மறுக்குது!
அசைவம் அனுபவித்த உடல் அடங்குமோ? உள்ளம் அடங்குமோ?

அடங்கியது! அடி-முடித் தேடு பொருளின் மீது ஆணை என்று சொன்னதால்...
அன்று முதல் யாரையும் தேடுவதும் இல்லை! தொடுவதும் இல்லை!

காதல் மனைவியும் - காதல் கணவனும், காதல் இன்றி, வெறும் கணவன்-மனைவியாக, ஊருக்கு வாழ்ந்தனர்! உள்ளத்துக்கு வாழவில்லை!
ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு மட்டுமே மிஞ்சியது! ஆசை மிஞ்சவில்லை! ஆண்டுகள் பல கடந்து விட்டன!ஏழு ஆண்டு பிரிஞ்சி இருந்தாலே போதும்...மணமுறிவு-Divorce ஆமே! இவர்கள் பல காலம் பிரிஞ்சி இருக்காங்களே! யார் செய்து வைப்பது மணமுறிவை?
காமனை எரித்த அண்ணல், சிவபெருமான் வந்து இவர்கள் காமத்தை எரிப்பாரா? Divorce செய்து வைப்பாரா?

அண்ணல் வந்தார்..."மணத்தை" முறிக்க அல்ல! கல் போல் இறுகிக் கிடந்த "மனத்தை" முறிக்க!

சிவனடியார் வேடம் பூண்ட அண்ணல், நீலகண்டக் குயவனிடம் ஒரு ஓட்டைக் கொடுத்து, அது மந்திர ஓடு, தான் யாத்திரை சென்று திரும்பும் வரை, பாதுகாத்துத் தருமாறு வேண்டினார்!
இவன் தான் ஒருமையுள் ஆமை போல் ஓட்டை ஒடுக்கி வாழ்கிறானே, இந்த ஓட்டையும் காத்து வாழ ஒப்புக் கொண்டான்!
உலகத்துக்கே படி அளக்கும் ஓடு, இப்போது இவர்கள் வீட்டில்!

அவ்வப்போது அவனுக்கு மனசில் ஆசை எழும்!
ஆனால் அதே மனசுக்குள்ளேயே அடங்கியும் விடும்!
- நீலகண்டத்தின் மேல் ஆணை, ஒரு ஆணை, பூனை ஆக்கி விட்டது!

வந்தார் சிவயோகி! ஓட்டைத் திரும்பக் கேட்க, ஓடு காணோம்!
எங்கெங்கு தேடியும் காணோம்! வேறு ஓடு செய்து தருவதாகச் சொன்னாலும், மந்திர ஓட்டுக்கு எங்கே போவது?
பணம் கொடுத்துச் சரிக்கட்ட மனம் வரவில்லையே! செய்யாத தவறுக்கும், தலை குனிந்து, இறைவா என்று நிற்கவே மனம் சொல்லுகிறது!

- இதுவே சரணாகத நிலை! தன்னைத் தான் காத்துக் கொள்ளத் தெரியாத, "அவனே" என்று நின்று விட்ட நிலை!"மந்திர ஓடு என்று தெரிந்து அபகரித்துக் கொண்டாய்! பொய் சொல்கிறாய்! இத்தனை நாள் சிவ வேடம் போட்டாய்" - இதற்கெல்லாம் பேதை உள்ளம் என்ன பதிலைச் சொல்லும்?

தன்னைத் தான் நிலைநாட்டிக் கொள்ளவும் தோன்றாது.....தேமே என்று மனத்துள்ளே அழுது கிடக்கிறதே! அதனிடம் போய், பொய் சொல்லி விட்டாய், பொய் சொல்லி விட்டாய் என்றால்?...

"ஐயா, உங்கள் ஓட்டை நான் திருடவில்லை! ஆனால் அதை உங்களிடம் எப்படித் தெரிவித்து, நீரூபிப்பது என்று தான் தெரியவில்லை! எனவே, தாங்கள் இட்ட வழக்காக இருந்து விடுகிறேன்!"

"ஓ...அப்படியானால், சிவகங்கைத் திருக்குளத்தில் இறங்கி, தம்பதி சமேதராக, உன் மனைவியின் கையைப் பிடித்து, சத்தியம் செய் பார்ப்போம்!
எதற்கு மனைவியோடு இறங்கிச் சத்தியம் செய்யச் சொல்கிறேன்-ன்னு பார்க்கிறாயா? அவள் உன் சக-தர்மினி! இல்லறம் இரண்டறமல்லாது ஓர் அறமாகச் செய்யும் நல்லறம்! நீங்கள் பொய்ச் சத்தியம் செய்தால், குடும்பமே நிர்மூலம் ஆகி விடும்! அதான் இப்படி நிரூபிக்கச் சொல்கிறேன்!"

"ஐயா...வெளியில் சொல்ல வெட்கமாக இருக்கிறது! இப்படி என்னைச் சூழ்ந்து வருகுதே சோதனை! நான் பொய்யனாகவே ஆகி விடுவேனோ?
ஐயா, நானும் என் மனைவியும், ஒரு காரணமாகத் தீண்டல் இன்றி இருக்கிறோம்!
அதனால் வேறு ஒரு மாற்று வழி சொல்லுங்களேன்! உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்!"

"எலே...ஒரு பொய்யை மறைக்கப் பலப்பல பொய்களா? நீ சரிப்பட மாட்டாய்! வா...தில்லை நீதி மன்றத்துக்கு...நீதி...அதுவே உனக்கு நீ தீ!"தில்லை அம்பலத்தில், நீதி அம்பலம் ஏறுமா?
பொன்னம்பலம் - சிற்றம்பலம் - எடுத்த பொற் பாத அம்பலம் - அங்கே நெஞ்சுக்கு நீதி அம்பலம் ஏறுமா?

வழக்கினைக் கேட்டு, தில்லை வாழ் அந்தணர்கள், தீர்ப்பு உரைக்கின்றனர்! அன்று அவர்கள் தான் தீர்ப்பு சொல்லும் அதிகாரத்தில் இருந்தனர் போலும்!
"சக-தர்மிணியின் கைப்பிடித்து, தம்பதி சமேதராய் மூழ்கிச் சத்தியம் பண்ணுங்கோ! அப்போ தான் நம்புவோம்!"

என்ன சொல்வது? ஊர் அறிய எப்படிச் சொல்வது?
இவளை இப்போதெல்லாம் தொடுவதில்லை! பேசியும் பல நாள் ஆகுது! - இதை எப்படி எல்லார் முன்னாடியும் சொல்ல முடியும்? - ஊர் அறிய, ஒரு உள்ளத்தை மறுதலிப்பதா? தகுமா?

கற்பனை செஞ்சிப் பாருங்க! நீங்களும்-உங்கள் நண்பரும் மனஸ்தாபத்தால் பேசிக் கொள்வதில்லை என்றாலும், அதை ஊரறியச் சொல்ல உங்களுக்கு மனம் வருமா?
இங்கோ.....அவனையே நம்பி வந்தவள்! அவளை எப்படி ஊரறிய மறுதலிப்பது? அதன் வலி எத்தனை கொடுமையானது!

பேசாமலும்-தொடாமலும் இருப்பது கொடுமை தான்!
ஆனால் அதை விடக் கொடுமை, ஒரு ஜீவனைப் பிறர் அறிய மறுதலிப்பது! :(


நீலகண்டன் - ஒரு காலத்தில் காமுகனாயிற்றே! அவளை மறுதலிக்கப் போகிறானா?

குளத்தில் அவனும் அவளும் மூழ்கி விட்டார்கள்!
ஒருவரை ஒருவர் கையால் பிடித்துக் கொண்டா? இல்லை! மூங்கில் கோலைப் பிடித்துக் கொண்டு!
ஒரு முனை அவள் கையில் - மறு முனை அவன் கையில்! இருவர் மானமும் இறைவன் கையில்....

இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்!
குளத்தில் மூழ்கி எழுந்த தம்பதிகள், தம்மையும் அறியாமல், இளமை பொங்க மீண்டு எழ...
சிவனடியார் மறைந்து, சிவனே தோன்றி அருளினார்! இந்தக் காட்சி கண்டு ஊரே அதிசயிக்க...

"ஒருநீல கண்டத்தின் பொருட்டு, புலனையும் அடக்கத் துணிந்த, திருநீல கண்டா!
புலன் அடக்குவதாகச் சொல்லி, வித்தை மட்டுமே காட்டுவோர் இருக்க......,
ஒரு தியான யோகமும் அறியாத நீ, அன்பினால் மட்டும் அடக்கினாயே!!!

ஒரு பேதையின் பொருட்டு, அவளை மறுதலிக்காது, நோன்பினை விடமாட்டாத உறுதியே உறுதி!

அவளும் கடைசி வரை உன்னை மறுதலிக்காது, உன் மானத்துக்காக, தன் மானமும் விட்டு மூழ்கினாளே!
இருவரும் நீங்கா இளமை இன்பத்தில், இல்லறம் இருந்து, உலகத்துக்கெல்லாம் எடுத்துக் காட்டாய், சிவ இன்பம் அடைவீராக! சிவ இன்பம் அடைவீராக!!"


ஞான யோகம்-கர்ம யோகம்-தியான பீடம் என்று பேசுவோரெல்லாம் "அடக்க" கஷ்டப்பட்டு, வேடமே தரிக்கும் நிலையில்....
ஒரு யோகமும் அறியாத குயவன்......காமுகனாய் இருப்பினும், சிவ-அன்பினால் மட்டும் அடக்கினானே!

மனைவி மட்டும் தானே, தொடாதே, என்று சொன்னாள்? மாற்றாரைத் தொட்டிருக்கலாமே! காமுகன் தானே!
ஆம்! அவன் காமுகன் தான்! ஆனால் அது காதல்-காமம்! "காதலாகி", கசிந்து கண்ணீர் மல்கி, மற்றை நம் "காமங்கள்" மாற்றேலோ ரெம்பாவாய்!

குயவர் திருநீலகண்ட நாயனார் - அவர் தம் காதல் மனைவியார் திருவடிகளே சரணம்!

தமிழக மீனவர்கள் படும் அல்லலை முன்னிட்டு, அவர்களுக்கான விண்ணப்பமாய், எம்பெருமானிடம் இப்பதிவைச் சமர்ப்பிகின்றேன்!

22 comments:

 1. திருநீலகண்ட குயவனார்க்கும் அடியேன் .

  Fentastic krs:)

  ReplyDelete
 2. //ஒருநீல கண்டத்தின் பொருட்டு, புலனையும் அடக்கத் துணிந்த, திருநீல கண்டா!
  புலன் அடக்குவதாகச் சொல்லி, வித்தை மட்டுமே காட்டுவோர் இருக்க......,
  ஒரு தியான யோகமும் அறியாத நீ, அன்பினால் மட்டும் அடக்கினாயே!!!//

  சிவன் மேல் அன்பு தானாக வராது . அதற்கும் சிவ அருள் வேண்டும் . சிவ அருளும் தானாக வராது . நாம் சிவ அடி பணிந்து கேட்க வேண்டும் .

  உடனே இவரு முன்பு முனிவராக இருந்தார், அதனால் இந்த பிறவியில் பழுத்த சிவ பக்தனானார் என்று இதற்க்கு கதைகள் நிச்சயமாக இருக்கும் என்று நினைக்கிறேன் . அதெல்லாம் கும்மி கதைகளே:)

  என்னை பொறுத்த வரை திருநீலகண்டர் ஒரு குயவர் . சிவன் மேல் வைத்தார் தூய அன்பை . அவ்வளவுதான்:)

  ReplyDelete
 3. அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு
  அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே
  :
  super

  ReplyDelete
 4. @ராஜேஷ்
  //உடனே இவரு முன்பு முனிவராக இருந்தார், அதனால் இந்த பிறவியில் பழுத்த சிவ பக்தனானார் என்று இதற்க்கு கதைகள் நிச்சயமாக இருக்கும் என்று நினைக்கிறேன் . அதெல்லாம் கும்மி கதைகளே:)//

  பாயிண்டைப் புடிச்சீங்க! ராதா வந்து புடிக்கப் போறாரு! :)

  இப்படியெல்லாம் கதை சொல்வது, சமயத்தை ஒரு உசரத்துக்கு தூக்கி நிறுத்த! ஆனால் அவர்களையும் அறியாமல் ஒரு தவறு செய்து விடுகிறார்கள்!
  முற்பிறவிச் சிவ பக்தி தான் இதற்கெல்லாம் காரணம்-ன்னு சொல்லி, சிவ பக்தி என்பது ரொம்ப கஷ்டம் என்பது போல் தோற்றம் காட்டி, பக்தர்கள் உருவாவதை இவர்களே தடுத்து விடுகிறார்கள்! :(

  சைவப் பற்று இருக்கும் அளவுக்குச் சிவப் பற்று இருக்குதா என்று தான் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேணும்!

  ReplyDelete
 5. // Narasimmarin Naalaayiram said...
  திருநீலகண்ட குயவனார்க்கும் அடியேன்
  Fentastic krs:)//

  ஒரு வேண்டுகோள்!
  என்ன காரணத்தினாலோ, திருநீலகண்டரைச் சொன்னவர்கள், அவர் மனைவியின் பேரைச் சொல்லாது விட்டுவிட்டார்கள்! அவர் மனைவியும் சிறந்த சிவ உள்ளமே! நாயனாருக்கு இணையான, சிவ-அன்பு/மன உறுதி கொண்டவர்! அவரையும் சேர்த்தே...நீலகண்டர்-மனைவியார்க்கு அடியேன் என்றே சொல்லுவோம்!

  ReplyDelete
 6. அருமையான பகிர்வு தல ;)

  ReplyDelete
 7. படங்கள் எல்லாம் அருமை இரவி!

  ReplyDelete
 8. பதிவும் அருமை இரவி!

  ReplyDelete
 9. @KRS: வெளியில நல்ல குளிரா இருக்கே, KRS 'சூடா' பதிவு போட்டா நல்லா இருக்கும்னு நினைச்சேன்.. COrrectஆ
  போட்டுடீங்க.

  ReplyDelete
 10. ஆன்மீகம், "ஆண்"மீகம் சொற்றொடர் அருமை; காரைக்கால் அம்மையாரையும் திருநீலகண்டரையும் compare செய்து சொன்ன விதம் அருமையோ அருமை... தமிழ் KRS கரங்களில் விளையாடுது...

  ReplyDelete
 11. @ கோபி...
  எப்படி இருக்கே? எப்படி இருக்கு சென்னை?

  ReplyDelete
 12. @ குமரன்!
  எங்கே படம் மட்டும் தான் அருமை-ன்னு சொன்னீங்களோ-ன்னு நினைச்சேன்! ஏழு நிமிஷம் கழிச்சி வந்து பதிவு பத்தியும் சொன்னதற்கு நன்றி! :)

  ReplyDelete
 13. @பிரசாத்
  //நல்ல குளிரா இருக்கே, KRS 'சூடா' பதிவு போட்டா நல்லா இருக்கும்னு நினைச்சேன்//

  இங்க என்ன போண்டா/கீரைப் பக்கோடாவா போடறோம், "சூடா" எதிர்ப்பாக்குறீய? :) பதிவில் ஒரு "சூடும்" இல்லையேப்பா! :)

  ReplyDelete
 14. //காரைக்கால் அம்மையாரையும் திருநீலகண்டரையும் compare செய்து சொன்ன விதம்//

  காரைக்கால் அம்மையார்!
  I want to call her புனிதா...Shez very close to my heart! I can easily relate with her, as a friend!

  //அருமையோ அருமை... தமிழ் KRS கரங்களில் விளையாடுது...//

  முருகனருள்!
  தமிழின் கரங்களில் நான் துள்ளி விளையாடுகிறேன்! அவ்ளோ தான்! :)

  ReplyDelete
 15. சுவைபட எழுதும் உங்கள் பணிதொடரட்டும்

  ReplyDelete
 16. சுவைபட எழுதும் உங்கள் பணிதொடரட்டும்

  ReplyDelete
 17. //முருகனருள்! தமிழின் கரங்களில் நான் துள்ளி விளையாடுகிறேன்! //

  என்னதான் தமிழ் தெய்வம் திருமால்னு இரவி பதிவுக்கு மேல் பதிவு (சண்டை ) போட்டாலும், தமிழ்னு சொன்னதும் முதல்ல நம்ம இரவிக்கு (கூட) தெரிவது என் முருகன் தான்!
  (சூட்டை கிளப்பியாச்சுப்பா... )

  ReplyDelete
 18. @பிரசாத்
  இதில் என்ன "சூடு" இருக்கு? :)
  ஐயமே இல்லை! தொல்காப்பிய காலத்துக்கும் முன்னாலிருந்தே திருமால் தமிழ்க் கடவுளே! தமிழ் முருகனுக்கு மட்டுமே உரியதல்ல!

  தனிப்பட்ட எனக்கு, தமிழ் என்றவுடன் முருகன் ஞாபகம் வருவதால், திருமால் தமிழ்க் கடவுள் இல்லை என்றாகி விட மாட்டார்!
  எனக்கு முருகன் நினைவுக்கு வரக் காரணம், அது என் புகுந்த வீடு என்பதால்! :)

  ஆனால் பொது மக்களுக்கும் அறிஞர்களுக்கும், வேறு மாதிரி...
  * தமிழ் என்றால் முருகன் நினைவுக்கு வரும்!
  * தமிழ்த் தொண்டு என்றால் திருமாலே நினைவுக்கு வரும்!
  அந்த அளவுக்குத் திருமால் ஆலயங்களில் தமிழுக்கு ஏற்றம்...

  இதை நான் சொல்லவில்லை! நம்ம அருணகிரி தான் சொல்றாரு!

  ஆனானப்பட்ட அருணகிரி எங்கேயாச்சும் முருகனைத் தமிழ்க் கடவுள்-ன்னு பாடி இருக்காரா?
  ஆனால் பெருமாளை என்ன சொல்றாரு பாருங்க...

  திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள் மனையின் தயிர் உண்டவன் ...
  எண் திசை திகழும் புகழ் கொண்டவன்...
  வண் தமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன் ...

  தமிழின் பின்னால் திரிகின்றவனாம் திருமால்! அப்படித் தானே ஆலயங்களில், தமிழ் ஓதி முன்னே செல்ல, தமிழைப் பின் தொடர்கிறான் நாரணன்! அதை அருணகிரியும் கண்டு பாடுகிறார் பாருங்கள்!

  ReplyDelete
 19. @நேசன்
  வாழ்த்துக்கு நன்றி! பதிவு உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி!

  ReplyDelete
 20. நாயன்மார்களின் கதையை ஒரு வித்யாசமான கோணத்தில் சொல்லிய விதம் அருமை .....
  நன்றி

  http://www.devarathirumurai.wordpress.com
  தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 5 GB அளவு பாடல்கள் உள்ளன , மேலும் 63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது. இன்னும் நிறைய உள்ளன , சென்று உலாவுங்களேன்.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP