Monday, January 03, 2011

தயிர்க்காரி - தும்பையூர் கொண்டி! - Part2

தும்பையூர் கொண்டி மனசில் ஏதோ முடிவெடுத்து விட்டாள்! - விபரீதமாகவா??
தினப்படி மூனுபடி! அதிகாலையிலேயே தயிர் அளந்து விட்டு, யார் கண்ணிலும் படாமல் மறைந்து விடுவாள்! கதையின் முதல் பாகம் இங்கே!
தயிர் கொடுத்த நங்கை, பங்கை மட்டும் பெற்றுக் கொள்ளவில்லை!
சரி, மாதம் பிறந்ததும், ஊதியம் போல் கொடுத்து விடலாம் என்று நினைத்தார்கள்! மாதமும் பிறந்தது...


முதலியாண்டான்: "என்னம்மா, தும்பையூர் கொண்டி, நல்லா இருக்கீயா? ஆளே காணலை? இந்தா பிடி.....முப்பது நாளும் மூனு படி அளந்த! படிக்கு ஒரு காசு வீதம், மொத்தம் 90 செப்புக்காசு!"

கொண்டி: "காசு வேணாம் சாமீ! நான் இராமானுசரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்! யாரையும் ஒதுக்க மாட்டார்-ன்னு தெரிஞ்சி, என் சொந்த அன்பின் பேரில் தான் தயிர் அளந்தேன்!"

முதலி: "என்ன, விளையாடுறியா? ரொம்ப செல்வச் செழிப்பா இருக்கே-ன்னு நினைப்போ? பேசாம தயிர்க் காசை வாங்கிக்கோம்மா! பெருமாளுக்கு மட்டுமே கடன்பட்டிருக்கும் எங்களை, தயிருக்கெல்லாம் கடனாளியா ஆக்கீறாத தாயே!"

கொண்டி: "அப்படீன்னா, உங்க இராமானுசர் கிட்ட..., நான் ஒன்னு கேட்டதாச் சொல்லி, வாங்கிக் கொடுங்க ஐயா! அது போதும்!"

முதலி: "ஆகா! இதுல விவகாரம் ஒன்னும் இல்லீயே?
என்ன கொண்டி, கோயிலுக்குள் போகணுமா? இப்பல்லாம் நீயே போகலாமே! அவரு சொல்லித் தான் உள்ளே விடுவாங்க என்பதெல்லாம் ஆரம்பத்தில் தான்! இப்போ மாறி விட்டது! "திருக்குலத்தார்" என்று உங்களுக்குச் சிறப்புப் பெயர் வேற கொடுத்திருக்காரு! உங்களைத் தடுத்தா, எங்களை வெளியே துரத்தினாலும் துரத்தீருவாரும்மா! ஹா ஹா ஹா!"

கொண்டி: "அதில்லீங்க! கோயிலுக்கு நானே போய்க் கொள்கிறேன்! எனக்கு ஒரேயொரு சீட்டு மட்டும்....அவர் கிட்டே வாங்கித் தாங்க! அது போதும்!"

முதலி: "சீட்டா?......என்ன சீட்டு?"

கொண்டி: "மோட்ச ஓலை!"

முதலி: "அப்படியொரு சீட்டா? என்னமா சொல்லுற நீயி??"

கொண்டி: "முன்பு திருவரங்கத்தில், நம் சொத்துக்கு "உடையவர்"-ன்னு சொன்னானாமே அரங்கன்! அதான் யாரு "உடையவங்களோ", அவங்க கிட்ட இருந்து ஒரே ஒரு சீட்டு!

சீட்டு எழுதிக் கொடுத்தால் போதும்! நான் திருவேங்கடமுடையானிடம் அதைக் காட்டி வேண்டிக் கொள்வேன்! எனக்கு இங்கே தனியா கிடந்து அல்லாடுறது பிடிக்கலீங்க! அவன் கிட்ட போய் அவனுக்காகவே இருந்துடணும்-ன்னு ஆசையா இருக்கு!" - கண்களில்....தோமாலை சேவை!

முதலியாண்டானுக்குத் தூக்கி வாரிப் போட்டது!
"ஒரு வேளை, இவள் "உடையவர்" என்பதைக் கேலி பேசுகிறாளோ? இல்லையே! கண்ணில் இருந்து கொட்டும் அருவியைப் பார்த்தால் அப்படித் தெரியலையே!

ஒரு வேளை, நாம் தான் "உடையவர்" என்பதை முழுமையாக நம்பலையோ? அது சும்மா ஒரு பட்டப் பெயர்-ன்னு மட்டும் நினைச்சிட்டோமோ?
கேவலம், தயிர்க்காரிக்குத் தோனினது.....யாரு உடையவங்களோ, அவங்க கிட்ட இருந்து ஒரு சீட்டு....இவ்வளவு நாள் நமக்குத் தோனாமல் போச்சே!

சே! தவறு தவறு! "கேவலம் தயிர்க்காரி" என்றெல்லாம் சொல்லக் கூடாது! ஏன் தான் என் நாக்கு அன்றில் இருந்து இன்று வரை அப்படியே இருக்கோ?
உடையவர் என்னை அடிக்கடி கடிந்து கொள்வது இதனால் தானோ? ஜாதி அபிமானம், என்னை அறியாமல் இன்னும் என்னிடம் ஒட்டிக்கிட்டு இருக்கோ? "


இராமானுசர்: "என்ன தாசரதி (எ) முதலியாண்டானே! ஏன் இவ்வளவு பதற்றம்?"

முதலியாண்டான், விஷயங்களைச் சொல்லச் சொல்ல இராமானுசருக்கே தூக்கி வாரிப் போடுகிறது!

"என்னது? மோட்சம் போவதற்காக என்னிடம் சீட்டு கேட்டாளா?
மோட்சம் என்பது எம்பெருமான் தானே தரவேணும்? அதைத் தரும் "வல்லமை" ஒரு சாதாரண மனிதனான எனக்கு இருக்கா?
ஆகா................! வல்லமை! வல்லமை!
அந்தப் பாட்டின் பொருள் இப்போது விளங்கி விட்டது! நன்றாக விளங்கி விட்டது!

நீள் விசும்பு அருளும்!
அருளோடு, பெரு நிலம் அளிக்கும் வலம் தரும்!
வலம் தரும் = வல்லமை தரும்!
எனக்கு வல்லமை தரும்!"

முதலி: "உடையவரே, என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னுமே புரியலை!"இராமானுசர்: "அம்மா, தாயே! தயிர்க் காரியாய் வந்து, தயை காரியம் செய்தாயே!
ஆழ்வாரின் தமிழ், வெறும் தமிழ் அல்ல! = அது ஈரத் தமிழ்!

அந்த ஈரம், இன்று வந்து என்னை நனைத்து விட்டதே! வேத/வேதாங்கம் படிக்கும் போது கூட புரியாத ஒன்று....இன்று தமிழ் வேதம் படிக்கும் போதா புரிய வேண்டும்?
மாறன் பணித்த தமிழ் மறைக்கு, மங்கையர் கோன் ஆறங்கம் கூற...
கார்த்திகையில் கார்த்திகை நாள்
...என்பது எவ்வளவு பொருத்தம்!

"வெறும் பாடமாக" இல்லாமல்......"வாழ்க்கைப் பாடமாய்ப்" பொருள் உணர்த்தி விட்டாயே, தயிர்க்காரி! தும்பையூர் கொண்டி!
வாம்மா! உள்ளே வா! இதோ, நீ கேட்ட மோட்ச ஓலை! நான் எழுதித் தருகிறேன்!


திருமலை!
இன்று, தெலுங்கில் "படிக்காவாலி" எனப்படும் வெள்ளைக் கோபுர வாசல்!


பச்சைப் புடைவையாய் மலைகள் சூழ, வண்ண மலர்கள் அதற்குச் சரிகை போட,
வெள்ளைக் கழுத்துள்ள பெண், நம் குழந்தை வந்து விட்டதா என்று எட்டிப் பார்ப்பது போல்......., அந்தக் கோபுரம் எட்டிப் பார்க்கிறது...

வாசலில் ஒரே கலாட்டா! தும்பையூர் கொண்டி அதிகாரிகளிடம் முறையிட்டுக் கொண்டு இருக்கிறாள்! கையில் இராமானுசர் எழுதிக் கொடுத்த மோட்ச ஓலை!

"ஏம்மா! உனக்கு புத்தி கித்தி பிசகிப் போச்சா? ஓலையைக் காட்டினா எல்லாம் மோட்சம் கிடைக்குமா? அதுவும், மனுசன் கட்டி வைச்ச கோயில்-ல்ல நுழைஞ்சி மோட்சம் போகணும்-ன்னு கேட்கிறாயே? முடியுமா?
இராமானுசர், உன் மனம் நோக வேணாமே-ன்னு சும்மா எழுதிக் கொடுத்து இருப்பார்! அதை இங்கே எடுத்தாந்து, உள்ளே விடுங்க-ன்னா எப்படி?"

"போ, போ! போய் உன் வீட்டுப் பூஜை அறையில் ஓலையை வச்சிக்கோ! கடைசிக் காலத்தில் அதைத் தொட்டுப் பாத்துக்கோ! மோட்சம் போவ!"

"இன்னும் இளமை இருக்கே உனக்கு! இங்கேயே மோட்சம் இருக்கே கொண்டி! இளமையா-இன்பமா சுகபோகமா இருக்குறது தான் மோட்சம்! அதை விட்டுட்டு....பெருசா ....ஓலையாம், உடையவராம், மோட்சமாம்...."

இப்படி ஆளாளுக்கு வியாக்யானம் பண்ணிக் கொண்டிருக்க....ஆளாய் அங்கே வந்தான், ஒரு கட்டிளங் காளை! செல்வச் சீமானோ?
அவன் நடையழகு! பின்னும் உடையழகு! பின் வரும் குடையழகு! பின்னே சடையழகு! சக்கரப் படையழகு!
உடுப்பில் தோன்றும் மிடுக்குக்கு ஒரு தனி மதிப்பு தான் போல! பேசுவார்களையும் பேசாமல் இருக்கச் செய்து விடுகிறதே!

"ஏம்மா...என்ன ஓலை அது? இப்படிக் கொடு, பார்ப்போம்!"


ஓலை:
அகலகில்லேன் என்று அவளுறை திருவேங்கடமுடையானே,
நலம்; நலமறிய ஆவல்!
உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு! நிற்க!

இந்த ஓலையைக் கொண்டு வரும் தும்பையூர்க் கொண்டி, புகல் ஒன்றில்லா அடியவள்! உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே என்று "ஆசை"ப்படுகிறாள்!

உம்முடைய நித்ய-லீலா விபூதிகளுக்கு "உடையவன்" ஆகிய அடியேன்,
இவள் அன்பினால் அளந்த தொன்னூறு தயிர்ப் படிக்கு ஈடாக,
மோட்சப் படியை அளிக்கக் கடமைப்படுகிறேன்! நீயும் அவ்வண்ணமே தந்தருள நம் நியமனம்!

தொன்னூறு தயிர்ப்படிக்கு...
முடிவும் முழுதுமாக நான் கட்டும் தவணைத் தொகையாக,
இவள் வைகுந்தம் புகுந்து கொள்ளக் கடவது!

இங்ஙனம்...
(திருவாழி முத்திரையோடு:
ஒப்பம் - இராமானுசன்)




ஹா ஹா ஹா

அழகுச் சீமான்: "அதிகாரிகளே! பாவம்! ஏதோ, நம்பி வந்து விட்டாள்! எதுக்கு இவளைத் தடுத்து நிறுத்தி...தேவையில்லாமல் ஒரு களம் உருவாக்குகிறீர்கள்?
ஓலையாவது, பாலையாவது? அது பற்றி நமக்கென்ன கவலை!
மற்றவர்களைப் போல் இவளையும் தரிசனத்துக்கு உள்ளே அனுப்புங்கள்! இவளும் பார்த்து விட்டு இவள் வழியில் போகட்டுமே!"

உள்ளே விட்டு விட்டார்கள்!
தும்பையூர் கொண்டி வரிசையில் ஊர்ந்து ஊர்ந்து நகர்கிறாள்!
அவள் முன்னேயும் பின்னேயும் விதம் விதமான அடியார்கள் கூட்டம்! அவரவருக்கு ஒவ்வொரு ஆசை! ஒவ்வொரு ஏக்கம்!
ஒவ்வொருவராக அவனை நோக்கி நகர்ந்து கொண்டே....அவரவர் விதி வழி அடைய "நின்றனரே"!

மகாத் துவாரம், கொடி மரம், ரெங்க மண்டபம், அயன மண்டபம், வெண்டி வாகிலி, பங்காரு வாகிலி என்று தாண்டித் தாண்டி...

இதோ திருமாமணி மண்டபத்துக்கு வந்தாகி விட்டது....
தங்க வாயில்...ஜய விஜயர்கள் இரு புறமும் வைத்த மா நிதியைக் காத்து நிற்க,
பெரிய திருவடியாகிய கருடன் ஏகாந்தத்தில் அவனையே கண்டு கொண்டிருக்க....

அத்தனை மக்களின் கூச்சலும், ஓர் நொடிக்குள் அடங்கி விட....
ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்,
பணத்தப்பர், அதிகாரப் பத்துமப்பர்
உதயப்பர் ஆகி விட்டு, ஓர் நொடிக்குள்,
ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி....
ஒப்பப்பர் ஆகி.....அவரவர் தலைமேல் அவரவர் கைகள்!

அதோ..அதோ..சென்னி ஓங்கு..எம்பெருமான் திருவேங்கடமுடையான்....
மாயனார் திரு நண் மார்பும், மரகத உருவும், தோளும்
தூய தாமரைக் கண்களும், துவர் இதழ்ப் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும், அடியோர்க்கு அகலலாமே!

அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறை மார்பா!

என்னை ஆள்வோனே!

உன் வென்றி வில்லும், வாளும், தண்டும்,
சங்கோடு சக்கரமும்....

இன்று வந்து என் கண்ணுள் நீங்காது!
என் நெஞ்சுள்ளும் நீங்காது நீங்காதே!


உன் கோல நீள் கொடி மூக்கும்,
தாமரைக் கண்ணும், கனி வாயும்,

நீல மேனியும், நான்கு தோளும்,
ஐயோ....வந்து.....என் நெஞ்சம் நிறைந்ததுவே!



நிவேதனத் திரை போட்டு விட்டார்கள்!
பார்த்துக் கொண்டே வந்த கொண்டிக்கு, காட்சித் தடை ஆகி விட்டதே! ஐயோ!

தெரியேன் பாலகனாய், பல தீமைகள் செய்து விட்டேன்!
பெரியேன் ஆயின பின், பிறர்க்கு உழைத்தே ஏழை ஆனேன்!

நாயேன்....உன் வீட்டு வாசலை வந்து அடைந்தேன்!
அன்பே.......அணைத்து என்னை ஆட் கொண்டருளே!

அவளுக்குத் தாள மாட்டாது, கைகள் தானாகவே சென்னி மேல் குவிய...கோவிந்தாஆஆஆ......

சென்னி மேல் உள்ள அவள் கையோலை கீழே விழ,
கருவறையில் போட்டிருந்த திரைச் சீலையும் அறுந்து விழ...
தும்பையூர்க் கொண்டியும் அடிமரமாய் விழ...

பின்னால் வரும் அத்தனை அடியார்களும், அவளை மிதித்து விடுவோமோ என்று பதறிப் போய் பின் வாங்குகிறார்கள்!
பட்டர்களும் அர்ச்சகர்களும் கூடப் பின் வாங்குகிறார்கள்....பாதி நைவேத்யம் பண்ணும் போது திரை அறுந்துட்டதே! என்ன தீட்டோ என்னமோ?

காற்றே இல்லாத கருவறையில், அந்த ஓலை காற்றடித்துப் பறக்கிறது! பறந்து பறந்து அவன் அடிக் கீழ்.....அவள் உயிர்....
புகல் ஒன்றில்லா அடியேன், உன் அடிக்கீழ்....தும்பையூர் கொண்டி புகுந்தாளே!

கதவுகள் இழுத்து மூடப்படுகின்றன! கர்ப்பக் கிருஹத்தில் மரணம் ஆயிடுத்து! புண்யாகவசனம் பண்ணுங்கோ!
தீட்டு கழிக்கப்படுகிறது! :) எம்பெருமானுக்குத் தீட்டா? ஆமாம்! அவன் குழந்தையைத் தீண்டும் "தீட்டு"!
அன்று வைகுந்த வாசமெல்லாம், தும்பையூர் கொண்டியின் தயிர் வாசம்! தயிர் வாசம்!


கீழ்த் திருப்பதியில் சேதி பரவுகிறது! இராமானுசரும், அவர் குருவான பெரிய திருமலை நம்பிகளும்....மீண்டும் அதே பாடம்.....
சேதி கேட்ட இராமானுசருக்கு, கண்ணோரத்தில் நீர்! பாட்டின் பொருளைக் காட்டியவள் அல்லவோ தயிர்க்காரி? அப்படி என்ன தான் காட்டி விட்டாள்?

நாராயணா என்னும் நாமம்...

* நீள் விசும்பு அருளும் = மோட்சம் தரும்!
* அருளொடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு, மோட்சம் தரும்!
* வலம் தரும் மற்றும் தந்திடும்!
எதற்கு இரண்டு முறை.....மோட்சம் தரும், மோட்சம் தரும்-ன்னு சொல்லணும்? அவ்ளோ சந்தேகமா?

அப்படி வரியை உடைத்துப் படிக்கக் கூடாது குருவே! இப்போது பாருங்கள்!
* நீள் விசும்பு அருளும் = மோட்சம் தரும்!
* அருளொடு, பெருநிலம் அளிக்கும் வலம் தரும் = கருணையோடு, பிறர்க்கு மோட்சம் அளிக்கும் வலிமையைக் கூட நமக்குத் தரும்! = நாரணா என்னும் நாமம்!

ஆகா!
மோட்சம் இறைவனால் மட்டும் தானே கொடுக்க முடியும்?

இல்லை....
நம்மாலும் கொடுக்க முடியும்!!!! எப்படி?
எனக்கு மோட்ச ஓலை எழுதித் தாருங்கள்! - கேட்டது, தயிர்க்காரி! எழுதிக் கொடுத்தது ஒரு மானிடர்! கிடைத்தது மோட்சம்!


கருணை....
"எம்பெருமான் மேல் எனக்குத் தானாகவே பக்தி வந்தது", என்று யாராலும் சொல்ல முடியுமா? பக்தி என்பது சுய சம்பாத்தியமா?

என்றைக்கோ ஒரு அடியவர், "ஐயோ....இப்படி ஒரு புழுவாய்....இது சாக்கடையில் கிடந்து நெளிகிறதே, இதற்கு ஒரு விடிவு கிடைக்காதா? நாராயணா!" என்று அந்தப் புழுவைப் பார்த்துச் சொல்லி இருப்பாரோ?
அதனால் தான் அந்தப் புழு, இன்று பதிவுகளில் எம்பெருமானை ஆழ்ந்து ஆழ்ந்து அனுபவிக்கிறேனோ?

அன்று சாக்கடைப் புழுவாய்க் கிடந்தவனுக்கு, இன்று எம்பெருமானை அனுபவிக்கும் "மோட்ச" ஆசையைக் கொடுத்தது யாரோ?
யாரோ ஒரு முகம் தெரியாத அடியவர் தானே! அவர் நினைத்த நினைப்பு = பெருநிலம் அளிக்கும் வலம்/வல்லமை தந்தது அவருக்கு!!

அருளொடு = கருணையொடு
பெருநிலம் அளிக்கும் வலம் தரும்! = பிறர்க்கு, மோட்சம் கொடுக்கக் கூடிய வலிமையும் தர வல்லது! பிறர் மனதில் மோட்ச விதையைத் தூவ வல்லது!

* மற்றும் தந்திடும்! = இன்னும் என்ன தான் தந்திடாது?
* பெற்ற தாயினும் ஆயின செய்யும் = கருப்பைக்குள்ளே கை நீட்டி உதவ முடியாதவள் நம் தாய்! அவளைக் காட்டிலும், ஆயின செய்யும்!


மோட்சம் என்பது என்ன?
= சுயநலமாய்....இனிமேல் துன்பமே அனுபவிக்காது, பிறவிச் சுழலில் இருந்து நான் மட்டும் விடுபட்டுடணும்-அதுவா மோட்சம்?

அதற்காக, கணக்குகள் போட்டு, கர்ம-ஞான யோகம் செய்வதா மோட்சம்?
யோகம் செய்தால் மோட்சம் போய் விடலாம், அப்பறம் கவலையே இல்லை! இனி பிறக்கவே மாட்டோம்!
பிறவா யாக்கைப் பெரியவர்கள் ஆகி விடலாம்! = நானே சிவம்! அஹம் பிரம்மாஸ்மி! நான் கடவுள்!

"அவதாரம் எடுக்கப் போகிறேன், என்னோடு வருகிறீர்களா? என்று இறைவனே கேட்டாலும்....வர மாட்டோம் என்று சொல்லி விடலாம்! :)

அட, இத்தனை கஷ்டப்பட்டு மோட்சத்துக்கு வந்திருக்கோம்? மறுபடியும் பிறப்பதா? உலக உயிர்கள் கடைத்தேறுவதா முக்கியம்? நம்ம "மோட்சம்" தானே நமக்கு முக்கியம்? :)
கோதையைப் போல் லூசா நாமெல்லாம்? எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்-ன்னு....போயும் போயும் பிறவியைக் கேட்டாளே அந்த லூசு! :)

மோட்சம் என்றால் என்ன? <> சம்சார துக்க நிவர்த்தி! மாயை விலகல்! இரண்டு அல்லாத ஒரே அத்வைத நிலை! = இதுவா மோட்சம்? இல்லை!
அந்தமில் பேரின்பத்து அடியவர்களுடன் கூடி,
தொண்டு எனும் கைங்கர்யம்...
அவனுக்"கே" அவனுக்"கே" இருப்பது = இதுவே மோட்சம்!

இது கருணையால் மட்டுமே வருவது! அந்தக் கருணையின் பாற்பட்ட கைங்கர்யமே மோட்சம்!

* நீள் விசும்பு அருளும் = மோட்சம் கொடுக்கும்!
* அருளோடு, பெருநிலம் அளிக்கும் வலம் தரும் = கருணை என்னும் குணத்தால், சக அடியார்களுக்கு, மோட்ச விதையை மனசிலே தூவும்!
எது? = நலம் தரு சொல்லை, நான் கண்டு கொண்டேன், நாரணா என்னும் நாமம்!

தயிர்க்காரி, தும்பையூர் கொண்டி திருவடிகளே சரணம்!

71 comments:

  1. கணக்குகள் போட்டு, கர்ம-ஞான யோகம் செய்வதா?

    அது என்ன யோகமோ அத பற்றி தெரியலங்க!
    நமக்கு தெரிஞ்சதெல்லாம் பெருமாள் மட்டும்தாங்க!

    ReplyDelete
  2. நல்லா அனுபவிச்சு எழுதி இருங்கீங்க!
    superb! nice post! thanks:)

    ReplyDelete
  3. நலம் தரு சொல்லை, நான் கண்டு கொண்டேன், நாரணா என்னும் நாமம்! :)
    paathi muzhungiteenga! azhaga muzhusaa podalaamaaa!

    நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
    நாராயணா என்னும் நாமம்!
    Ten Amuthu pola Sweeeeeeeeeeeeeeeeeeeet:)

    ReplyDelete
  4. எதிர்பார்த்தபடியே....:-)
    நாராயணா ! நாராயணா ! நாராயணா !

    ReplyDelete
  5. Same story wonderfully narrated in English.

    http://www.indusladies.com/forums/saturdays-with-varalotti/53440-oh-my-god-episode-2-a.html

    ராமானுஜர் திருவடிகளே சரணம்.தும்பையூர் கொண்டி மாதிரி மகாத்மாக்கள் தான் எம்.எஸ்.அம்மா மாதிரி மறுபடி பிறக்கிறார்களோ என்னவோ.

    ReplyDelete
  6. அரங்கன் அல்லது திருவேங்கடவன் என்று வரும் பொழுது பந்தல் வேறு ஒரு தளத்திற்கு உயர்ந்து விடுகிறது. :-)

    ReplyDelete
  7. அருமை அருமை உங்கள் விளக்கம் மிக மிக அருமை! நன்றி

    ReplyDelete
  8. //Radha said...
    அரங்கன் அல்லது திருவேங்கடவன் என்று வரும் பொழுது பந்தல் வேறு ஒரு தளத்திற்கு உயர்ந்து விடுகிறது. :-)//

    என்ன தளத்துக்கு உயருது ராதா? நான் இருப்பது 37வது மாடி:)

    அப்படியெல்லாம் இல்லை! என் ஆருயிர் முருகனுக்கும் அது உயரும் தான்!

    விஷயம் என்னன்னா, அது அரங்கனோ முருகனோ இல்லை! அன்பும் காதலும்;
    காரேய்க் "கருணை" என்பதை ஜீவநாதமாகக் கொள்ளும் இறைத் தத்துவம்! சரணாகதி! அதனால் அப்படித் தெரிகிறது!

    ReplyDelete
  9. //Radha said...

    எதிர்பார்த்தபடியே....:-)
    நாராயணா ! நாராயணா ! நாராயணா !//

    எதை எதிர்பார்த்தபடியே? :)

    ReplyDelete
  10. // Radha said...
    Same story wonderfully narrated in English.//

    அருமை! முழுக்க வாசித்தேன்! ஆங்கிலத்தில் பாசுரச் சுவை! கதையில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில மாற்றம் இருக்கு! பரவாயில்லை!
    கொண்டி வாசலிலேயே உயிர் விடுவதாகச் சொல்லி உள்ளார்கள்! ஆனால் குரு பரம்பரையில் திரை அறுந்து சன்னிதிக்குள் தான் உயிர் விடுகிறாள்!

    ஆனால் பாட்டின் பொருள் பொருந்தி வருகிறது! ஏன் இரண்டு முறை மோட்சம் என்பதற்கும் எனக்குப் பிடித்தமான அதே விளக்கத்தை அளித்துள்ளார்கள்!

    இந்த விளக்கம் ஆராயிரப் படியிலும், கதை அனந்தாழ்வானின் நூலிலும் சேர்த்தே சொல்லப்படுகிறது!

    ஆனால் பெரியவாச்சான் பிள்ளை, "அருளோடு, பெருநிலம் அளிக்கும் வலம் தரும்" என்பதை ஏன் சொல்லாமல் விடுத்தார்-ன்னு தான் தெரியலை! ஆனால் பெருநிலம்=கைங்கர்யம் என்பதை மட்டும் சொல்லி விடுகிறார்!

    //ராமானுஜர் திருவடிகளே சரணம்.தும்பையூர் கொண்டி மாதிரி மகாத்மாக்கள் தான் எம்.எஸ்.அம்மா மாதிரி மறுபடி பிறக்கிறார்களோ என்னவோ//

    கொண்டி மகாத்மா எல்லாம் கிடையாதே! சாதாரண பக்தை! தயிர்க்காரி அவ்வளவே! :) அவளால் முடிந்தது என்றால் நம்மாலும் முடியும்! அவள் மேல் மகாத்மா-த்தனம் ஏற்றிட வேண்டாமே! :)

    என்ன, அவள் "உடையவர்" என்பதை உபசாரம் என்று கருதாது, நம்பினாள், பிரகலாத நம்பிக்கை போல! தன் சுய முயற்சியால் சாதனை/மோட்சம் என்று கணக்குப் போடாது, ஒரு குழந்தை போல எனக்கு ஓலை தாருங்கள் என்னும் மனப்பான்மை! அதுவே முக்கியம்!

    ReplyDelete
  11. // Narasimmarin Naalaayiram said...
    அது என்ன யோகமோ அத பற்றி தெரியலங்க!
    நமக்கு தெரிஞ்சதெல்லாம் பெருமாள் மட்டும்தாங்க!//

    சூப்பர் ராஜேஷ்
    !
    யோகம் எல்லாம் General Knowledge! அறிஞர்கள் சபையில் பேசவும் எழுதவும் உதவும்! விதம் விதமான பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்கும்!
    ஆனால் பயின்று வருவதா காதலும் அன்பும்? :)
    அவனே! அவனே! அவனே!

    ReplyDelete
  12. //நல்லா அனுபவிச்சு எழுதி இருங்கீங்க!
    superb! nice post! thanks:)//

    :)
    வீட்டு வாசலில் அவனே அவனே என்று போய் நின்ற அனுபவம்! :)

    ReplyDelete
  13. நாரணா என்னும் நாமம்! :)
    paathi muzhungiteenga! azhaga muzhusaa podalaamaaa!

    போடலாம் தான்! ஆனால் இங்கே Focus = கருணையோடு, பெருநிலம் அளிக்கும் வலம் தரும் - என்பது தான்! அதான் மத்த பத்து பாசுரங்களை முழுக்கப் போடலை! :)

    ReplyDelete
  14. //அப்படியெல்லாம் இல்லை! என் ஆருயிர் முருகனுக்கும் அது உயரும் தான்!
    //
    அப்படின்னா என் பார்வை ஒரு தலைப்பட்ட பார்வைன்னு சொல்லலாம். அவரவர்க்கு இஷ்ட தெய்வத்தை பற்றி படிக்கும் பொழுதோ கேட்கும் பொழுதோ ஒன்றி விடுதல் இன்னும் கூடுதலாம்.
    என்னுடைய மனதிற்கு பிடித்த தெய்வங்கள் இந்த வரிசையில்:
    1. கிருஷ்ணன் (அதுல இன்னும் பிருந்தாவன கிருஷ்ணன்....)
    2. சீதா-ராமர், அம்பாள்-சிவன், நரசிம்மர்
    3. அம்பாள்
    4. அம்பாள்
    ....
    ...
    13. அம்பாள்
    14. முருகர்
    15. விநாயகர்.
    16. ஐயப்ப சுவாமி
    முருகர் ரொம்ப லேட்டா வரார்...ஏன்னு அவரை தான் கேட்கனும். :-) [அதனால தான் முருகர் பதிவுகளின் உயரத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை என்று தோன்றுகிறது.]

    ReplyDelete
  15. //அவள் மேல் மகாத்மா-த்தனம் ஏற்றிட வேண்டாமே! :)
    //
    என்னை போன்றவர்களுக்கு மகாத்மா தான். என்ன ஒரு நம்பிக்கை !!

    ReplyDelete
  16. //என்னுடைய மனதிற்கு பிடித்த தெய்வங்கள் இந்த வரிசையில்:
    1. கிருஷ்ணன் (அதுல இன்னும் பிருந்தாவன கிருஷ்ணன்....)
    2. சீதா-ராமர், அம்பாள்-சிவன், நரசிம்மர்
    3. அம்பாள்
    4. அம்பாள்
    ....
    ...
    13. அம்பாள்//

    :)
    ராதா ராதா....

    இப்போ தெரியுது, கண்ணன் பாட்டுக்குப் பத்து பின்னூட்டம், ராமன்-நரசிம்மன் பாட்டுக்கு ஐஞ்சு பின்னூட்டம், கவிக்கா-வோட அம்மன் பாட்டுக்கு மூனு பின்னூட்டம்-ன்னு ஏன் போடுற-ன்னு! :))))

    ராதா ராதா!
    ரா-ன்னு ஆரம்பிக்கும் போதே, ராகவா-ன்னு வருதா...அப்பறம் ஓ திஸ் இஸ் கண்ணன் பாட்டு ராதா-ன்னு உறைக்குது! :)

    ReplyDelete
  17. //1. கிருஷ்ணன் (அதுல இன்னும் பிருந்தாவன கிருஷ்ணன்....)
    2. சீதா-ராமர், அம்பாள்-சிவன், நரசிம்மர்
    3. அம்பாள்
    4. அம்பாள்
    ....
    ...
    13. அம்பாள்//

    முதல் ரெண்டு இடமும் கண்ணன்-இராகவனாம்!
    ஆனா அடுத்த பத்து இடமும் அம்பாளுக்காம்!
    ஆனாலும் அம்பாள் மூனாவது இடமாம்!
    Omg! Radha's Mind is so complicated! - Complicatingly Colorful! Awesome! :)

    ReplyDelete
  18. //என்னை போன்றவர்களுக்கு மகாத்மா தான். என்ன ஒரு நம்பிக்கை !!//

    நம்ம மக்கள் "மகாத்மா"-ன்னு சொல்லி, அவளை ஒதுக்கி வச்சிருவாங்க! அவளைப் போலத் தான் தாங்களும் என்பதை மறந்து போயிருவாங்க or மறக்கணும்-ன்னு முயல்வாங்க! :)
    அதுக்காகத் தான் மகாத்மா-த்தனம் வேணாம்-ன்னு சொன்னேன்! வேற ஒன்னும் இல்லை ராதா! Yes she is a great soul! She cud even trigger the heart of Ramanuja! தும்பையூர் கொண்டி திருவடிகளே சரணம்!

    பிகு:
    அவ, எங்கூரு தான், தெரியும்-ல்ல? :))

    ReplyDelete
  19. பந்தலில் போடப்பட்ட படங்கள் யாவும் பாசுரத்திற்கும் & நிகழ்ச்சிக்கும் உயிர்வூட்டுகிறது. உங்கள் எழுத்து அத்தணைக்கும் உணர்வூட்டுகிறது. வாழ்த்துக்கள்.

    // கண்களில்....தோமாலை சேவை! //

    //பச்சைப் புடைவையாய் மலைகள் சூழ,
    வண்ண மலர்கள் அதற்குச் சரிகை போட,
    வெள்ளைக் கழுத்துள்ள பெண்,
    நம் குழந்தை வந்து விட்டதா என்று
    எட்டிப் பார்ப்பது போல்.......,
    அந்தக் கோபுரம் எட்டிப் பார்க்கிறது...

    அவன் நடையழகு!
    பின்னும் உடையழகு!
    பின் வரும் குடையழகு!
    பின்னே சடையழகு!
    சக்கரப் படையழகு! //

    சொக்கவைக்கும் வர்ணனை.....

    //அத்தனை மக்கள் கூச்சலும், ஓர் நொடிக்குள் அடங்கி விட....
    ஒப்பப்பர் ஆகி.....அவரவர் தலைமேல் அவரவர் கைகள்!
    அதோ....அதோ.....சென்னி ஓங்கு....எம்பெருமான் திருவேங்கடமுடையான்....
    ...கோவிந்தாஆ...... //

    திருமலை பெருமானை கண்முன்னே கொண்டுவந்து விட்டீர்கள்......

    ReplyDelete
  20. தும்பையூர் கொண்டி - எமக்கு அறிவித்தவர் நீர். வாழ்வாங்கு வாழ்வீராக.

    நன்றி

    ReplyDelete
  21. மோட்சம் கேட்ட தயிர்காரிக்கு ஓலையெழுதி அனுப்பினார் உடையவர்; அந்த ஓலையை ஏற்றுக்கொண்டு மோட்சம் தந்தான் திருவேங்கடமுடையான் - இப்படி ஒற்றை வரியாக அறிந்திருந்த நிகழ்வை விளக்கமாகச் சொன்னதற்கு நன்றி இரவி.

    ReplyDelete
  22. அருமை! அற்புதம்! Ammmmmazing! வேறென்ன சொல்றதுன்னு தெரியல. இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்! (உங்ககிட்டதான் கத்துகிட்டேன் :)

    //முதல் ரெண்டு இடமும் கண்ணன்-இராகவனாம்!
    ஆனா அடுத்த பத்து இடமும் அம்பாளுக்காம்!
    ஆனாலும் அம்பாள் மூனாவது இடமாம்!
    Omg! Radha's Mind is so complicated! - Complicatingly Colorful! Awesome! :)//

    :)))

    ReplyDelete
  23. @KRS:
    Sorry: Kettu vaangiya post-kku late comment kodupathukku

    thankyou: for this post!!!!
    do i need to say that it is wonderful? Of the little which i have read, this is one of your best posts, perhaps second only to thirupaavai :))

    ReplyDelete
  24. //நீள் விசும்பு அருளும் = மோட்சம் கொடுக்கும்!
    * அருளோடு, பெருநிலம் அளிக்கும் வலம் தரும் = கருணை என்னும் குணத்தால், சக அடியார்களுக்கு, மோட்சம் அளிக்க வல்ல வலிமையைக் கூடத் தரும்! கைங்கர்ய குணத்தை நம் மனசிலே கொடுக்கும்!//

    Beautiful!!

    1) நீள் விசும்பு அருளும்- avan naamam
    what does that mean?
    saying His name gives us moksha! Great!
    easy part! (to understand)
    2)அருளோடு, பெருநிலம் அளிக்கும் வலம் தரும் = கருணை என்னும் குணத்தால், சக அடியார்களுக்கு, மோட்சம் அளிக்க வல்ல வலிமையைக் கூடத் தரும்! - Naam enna ramanujara??? :))) udayavar-agiya avar olai kuduthaar, ordinary people enna seyvaangalam?

    avar naamam sonnaal mokshamaam..
    adhu oru vagai suyanalamagi pogalaam
    aanal...
    avar bhaktar endraal...
    the devotee must spread His name, His fame, and so on...
    nee avar naamam solli, unnai paarthu innoruvan solla, avanukkum Perumal arul kidaikuthu!!
    if saying His name can give us that satisfaction in the corner of our hearts, why shouldn't the world get that satisfaction???

    amazing! amazing! amazing!
    beautiful post!
    absolutely loved it!!

    ReplyDelete
  25. //மோட்சம் என்னும் அவனோட சொத்துக்கு "உடையவர்" ஆச்சே! அதான் யாரு "உடையவங்களோ", அவங்க கிட்ட இருந்து ஒரே ஒரு சீட்டு!
    அவரு ஓலை எழுதிக் கொடுத்தால் போதும்! நான் திருவேங்கடமுடையானிடம் அதைக் காட்டி வேண்டிக் கொள்வேன்! எனக்கு இங்கே தனியா கிடந்து அல்லாடுறது பிடிக்கலீங்க! அவன் கிட்ட போய் அவனுக்காகவே இருந்துடணும்-ன்னு ஆசையா இருக்கு!"///

    :))))

    @KRS:
    Recently, talking to a person who was talking about jealousy in her love for Krishna, i complained to Parthasarathy.
    enakku mattum en "J" varave maatengudhu? en kaadhal poiyanadha apadinna??

    ippa solren, enakku indha "thayirkaari" meedhu appadi oru "j"! ippadi yosikka thonaliye enakku!!!!

    "ellam avane"-nnu aandal manadhaara sonnathai, naam vaayal solvadhai, "in action" pannitaangle ivanga!!!!
    haiyyo!! ivanga style-e thani!! I AM HER FAN!!

    ReplyDelete
  26. Periya perumalukku oru periya salute!!!
    eppodhum i'll go fall at His feet, but this time, hats off!!
    edhume vendam, nee mattum podhum-nu vandha oru devotee-kum, oru chinna "doubt"-udan suthiya Ramanujarukkum mudichu pottu, super-aa naadagam nadathi mudithuvitaaru!!! great!!!
    phenomenal direction!! :))

    ReplyDelete
  27. @krs:
    ////போட்டாச்சும்மா போட்டாச்சு! மீசையோடு போட்டாச்சு! :)//
    :)))
    parthen, parthen, :)
    That too, He is showing His hands down, supposedly at His feet!
    But, what do i see?
    the word "moksham"!!
    did you mean it to be like this- a symbolic representation that His hands point to feet, which are actually the abode of moksha??
    :))
    ---
    btw, en PSP-kku en mel oru "possesiveness"!
    neenga "beware of falling at PP's feet-nu solli vaikka, naanum appave (post varsadhukku munadiye) vilundhida, inga en PP-yai paarka vandhen!
    But, when i read the word "azhagan", i scrolled down to see if you had put any pic (of PP)!
    And, what do i see?
    My PSP!! :))
    "naan irukken, naan irukken!"-nnu azhaga sirikkum PSP!
    Evalavu "possessive"-aga irundha ippadi pannuvaaru indha PSP?? :))
    Evalavu love?? maddening me!

    in the words of Vairamuthu,
    "idhe anaippu, anaippu,
    idhe azhutham, azhutham,
    vaazhvin ellai varai vendum vendume!"
    no no..
    vaazhvin ellai afterall very small
    "ellai-atra anaippu arulvaayaga!"
    Keep me forever, in Your posession, PSP! Forever in Your loving posession!! :))

    ReplyDelete
  28. //கொண்டி: "முன்பு திருவரங்கத்தில், நம் சொத்துக்கு "உடையவர்"-ன்னு சொன்னானாமே அரங்கன்! மோட்சம் என்னும் அவனோட சொத்துக்கு "உடையவர்" ஆச்சே! அதான் யாரு "உடையவங்களோ", அவங்க கிட்ட இருந்து ஒரே ஒரு சீட்டு//////

    <<<<<<<<<>..யே அப்பா! உடையவரை
    எத்தனை நன்றாக புரிந்துகொண்டிருக்கிறாள்! ஆசாரியர் மூலமாகவே நான் பெருமாளை அடையவேண்டும் என்பார்கள் இது ஒரு தயிர்க்காரிக்கு அந்த நாளிலேயே தெரிந்திருக்கிரது!

    ReplyDelete
  29. /"என்னது? மோட்சம் போவதற்காக என்னிடம் சீட்டு கேட்டாளா? அதைத் தரும் வல்லமை தான் எனக்கு இருக்கா?
    ஆகா! அந்தப் பாட்டின் பொருள் இப்போது விளங்கி விட்டது! விளங்கி விட்டது!
    நீள் விசும்பு அருளும்!
    அருளோடு, பெரு நிலம் அளிக்கும் வலம் தரும்!
    வலம் தரும்! வலம் தரும்! எனக்கு வல்லமை தரும்!"

    ////


    வலம் தரும் என்பதற்கான பொருள் இதுதானா? அருமை!

    ReplyDelete
  30. //வெறும் பாடமாக" இல்லாமல்......"வாழ்க்கைப் பாடமாய்ப்" பொருள் உணர்த்தி விட்டாயே, தயிர்க்காரி! தும்பையூர் கொண்டி!
    வாம்மா! உள்ளே வா! இதோ, நீ கேட்ட மோட்ச ஓலை! நான் எழுதித் தருகிறேன்!

    //

    <<<<<<<<<<<<<<<<<காரேய் கருணைக்கடல் அல்லவா அதான் தன்னை இங்கே யாரென்று நிரூபிக்கிறது.

    ReplyDelete
  31. // கருணை!

    "எம்பெருமான் மேல் எனக்குத் தானாகவே பக்தி வந்தது", என்று யாராலும் சொல்ல முடியுமா? பக்தி என்பது சுய சம்பாத்தியமா?
    என்றோ ஒரு அடியவர், "ஐயோ....இப்படி ஒரு புழுவாய்....இது சாக்கடையில் கிடந்து நெளிகிறதே, இதற்கு ஒரு விடிவு கிடைக்காதா? நாராயணா!" என்று அந்தப் புழுவைப் பார்த்துச் சொல்லி இருப்பாரோ?
    அதான் இந்தப் புழு, இன்று பதிவுகளில் எம்பெருமானை ஆழ்ந்து ஆழ்ந்து அனுபவிக்கிறேனோ///

    <<<<<<<<<<.எம்பெருமானின் சம்பந்தம் கிடைத்துவிட்டாலே நாம் அனைவரும் புழு அல்ல பூதான்!

    ReplyDelete
  32. //அருளொடு = கருணையொடு
    பெருநிலம் அளிக்கும் வலம் தரும்! = பிறர்க்கு, மோட்சம் கொடுக்கக் கூடிய வலிமையும் தர வல்லது!
    = இதுவே கைங்கர்யம்! தொண்டு! அடியார்களுக்கு இரங்கும் தொண்டு////


    பாகவத கைங்கர்யம் என்பார்கள் அண்ணல் இதைத்தானே நம்மிடம் எதிர்பார்க்கிறான்?
    இந்த நிலைக்கு நம்மை கொண்டுசெல்வதுதான் பக்தியின் முதல் கட்டம் என்பார்கள். நலம்தரும் சொல் நாராயணா என்பதுபோல மனதிற்கு நலம் தரும் பதிவாக இது அமைந்துள்ளது. அதிலும் சில வர்ணனைகள் காட்சியாய் நிற்கிறது! அவன் நடையழகு எனும்போது நடந்து அழகாய் ஒரு இளைஞனே வந்துவிட்டான்!இப்படியெல்லாம் எழுதவும் அவன் அருள் இன்றி நடக்காது.

    ReplyDelete
  33. I Veryyyyyy much like this தும்பையூர்க் கொண்டி:)

    அடியார்ந்த வையமுண்டு* ஆலிலை அன்ன வசஞ்செய்யும்,*
    படியாதுமில் குழவிப்படி* எந்தைபிரான் தனக்கு,*
    அடியார் அடியார் தம்* அடியார் அடியார் தமக்கு*
    அடியார் அடியார் தம்,*அடியார் அடியோங்களே.
    :)

    ReplyDelete
  34. @KRS:
    thirumba thirumba padikka thoondum post! :)
    //"இப்ப கொஞ்சம் இளமையாத் தானே இருக்கே! இங்கேயே மோட்சம் இருக்கே கொண்டி! இன்பமா இருக்குறது தான் மோட்சம்! அதை விட்டுட்டு....பெருசா ....ஓலையாம், உடையவராம், மோட்சமாம்...."//

    adhu enna, vayadhukkum, bhaktikkum sambandham??

    ReplyDelete
  35. //தங்க வாயில்...ஜய விஜயர்கள் இரு புறமும் வைத்த மா நிதியைக் காத்து நிற்க,
    பெரிய திருவடியாகிய கருடன் ஏகாந்தத்தில் அவனையே கண்டு கொண்டிருக்க....//
    @Periya Perumal: next time varappo, "neya nilakkadhavam neekelorempaavay!"

    andha thanga vaayilile niruthividaatheenga!!

    ReplyDelete
  36. //நிவேதனத் திரை போட்டு விட்டார்கள்!
    பார்த்துக் கொண்டே வந்த கொண்டிக்கு, காட்சித் தடை ஆகி விட்டதே! ஐயோ!//
    This line stirs up a lot of memories!
    beautiful line, but the pain of His invisibility is beyond description...

    ReplyDelete
  37. @KRS:
    After reading your post again, this time, in slow speed, more like having darshan of Kuzhaikaathar than Periya Perumal, i have but one thought:
    Won't Perumal consider sending His "udayavar" again to guide this world?
    People are distraught here, without knowing where to go, what to do.
    People seek easier paths to spirituality, they seek easier ways in life.
    But, the easiest thing ever would be to fall flat at His feet.
    idhai uraikka, inge oru ramanujar illaye!!
    idhai eduthu kaata, inge oru "udaiyavar" illaye!!
    avar pugalai parappa indru oru ramanujar illaye!!
    elloraiyum "attract" pannum Perumalidam nammai ellam "attract" panna oru guiding force illaye!!

    ReplyDelete
  38. we say "bhakti", and we ask Him for ourselves.
    We beg for His help, we depend on him, we fight, play, connect with Him.
    atleast, that's my case. :)
    i say surrender, and let Him take care of all my problems. His infinity+1 headache!

    Bhaktas may even get moksha like our kondi here.
    but, what of ...things beyond our "self-growth", self-liberation?
    i am not able to put it down properly in words right now, what i mean.

    all i can say is: May He bless us with all the desire, strength and conviction to serve Him!

    ReplyDelete
  39. @KK
    //@KRS:
    thirumba thirumba padikka thoondum post! :)//

    வெட்கத்தை விட்டுச் சொல்லட்டுமா?
    இத்தோட நானே நாலஞ்சு முறை படிச்சிட்டேன்! :)
    இது என்ன "சுய-லயிப்பு"-ன்னு எனக்கே ஒரு மாதிரி இருக்கு!

    ஏன்-ன்னு தெரியலை...
    இதைப் படிக்கும் போதெல்லாம் என் தோழன் ஞாபகமும் சேர்த்தே வருகிறது, as if we are slowly moving and seeing the Lord..like how Kondi sees the Lord in full glimpse!

    ஆழ்வாரின் ஈரத் தமிழ் கண்டமேனிக்கு ஞாபகம் வந்து தொலைக்குது! :(

    உன்னைக் காண்பதோர் "ஆசையினால்"
    நாயேன்....உன் வீட்டு வாசலை வந்து அடைந்தேன்!

    கோல நீள் கொடி மூக்கும், நீல மேனியும்,
    ஐயோ....வந்து.....என் நெஞ்சம் நிறைந்ததுவே!

    ReplyDelete
  40. @KK
    //"இப்ப கொஞ்சம் இளமையாத் தானே இருக்கே! இங்கேயே மோட்சம் இருக்கே கொண்டி! இன்பமா இருக்குறது தான் மோட்சம்! அதை விட்டுட்டு....பெருசா ....ஓலையாம், உடையவராம், மோட்சமாம்...."//

    adhu enna, vayadhukkum, bhaktikkum sambandham??//

    :)
    You are so innocent KK! :)

    Those lines, I wrote from a perspective of a lustful person! :)

    Actually Lust is good too,
    When soaked, deep in Love!

    Mostly, ppl make fun, by saying, you are lost in thoughts to the Lord and hence forget that the pleasures are here itself.
    No need to think of Moksham! Being youthful is Moksham! :)

    Very true! Am also saying the same thing...
    There is nothing a separate place called Moksham!
    * If I am able to dwell in His thoughts day in and day out - Thatz Moksham!
    * If I exist for his pleasure, and just the sight of his pleasure, triggers my pleasure - Thatz Moksham!

    உனக்கே நாம் ஆட்செய்வோம்!
    உன் தன்னோடு-உறவேல்-எனக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!
    நீயே நினைத்தாலும், சர்வ சக்தி படைத்த உன்னாலும், நம் உறவை ஒழிக்க ஒழியாது....

    கோல நீள் கொடி மூக்கும்
    உன் நீல மேனி ஐயோ....
    வந்து என் நெஞ்சம் நிறைந்ததுவே!

    மற்றை நம் காமங்கள் மாற்று மாற்று!
    நீயே என் காமங்கள் என்று ஏற்று ஏற்று!

    ReplyDelete
  41. //But, when i read the word "azhagan", i scrolled down to see if you had put any pic (of PP)!
    And, what do i see?
    My PSP!! :))//

    :)
    Actually, I zoomed "your PSP", snapped only the selective portion and saved the image & posted it!

    Why? = Bcoz I said, Azhagan, I have to hunt for a kuru-kuru meesai!

    The Lord on Hills is not sporting a meesai! Too bad Venkatavaa! :(

    Hey wait!
    Lo...Venkatavaa+Meesai=Venkata Krishnan...and wherez he? Alli kENi kaNdEne!

    I always love to meesai varainju-fy for my beloved!
    Murugan-kku! My thOzhan knows this! :)

    There are two parts on my love's face which can never lie - Eyes & Meesai! They will not sync with his lying lips :)

    ReplyDelete
  42. நல்ல பகிர்வு தல :) நன்றி ;)

    ReplyDelete
  43. //Actually Lust is good too,
    When soaked, deep in Love!//

    @ KRS:
    this line took me to my favourite sloka..
    Radha knows..
    i can't post Sanskrit in comment, so please go read it here!

    http://mydearestkrishna.blogspot.com/2010/11/when-will-i-experience.html

    ReplyDelete
  44. In Love With Krishna said

    idhai uraikka, inge oru ramanujar illaye!!
    ராமானுஜர் ஸ்ரீ பெரும்புதூரில் இருக்கிறாரே!:)

    idhai eduthu kaata, inge oru "udaiyavar" illaye!!
    உடையவர் நமது உள்ளத்தில் இருக்கிறாரே!:)

    avar pugalai parappa indru oru ramanujar illaye!!
    இன்றும் பல தூய தொண்டு புரியும் ராமானுஜ தாசர்களாக silarum (intha name veli alavil vaittukollaamal kooda palarum) புகழ் பரப்ப இருக்கிறார்களே!:)

    ReplyDelete
  45. ஓலை:
    அகலகில்லேன் என்று அவளுறை திருவேங்கடமுடையானே,

    நலம்; நலமறிய ஆவல்!
    உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு! நிற்க!

    இந்த ஓலையைக் கொண்டு வரும் தும்பையூர்க் கொண்டி, புகல் ஒன்றில்லா அடியவள்! உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே என்று புக "ஆசை"ப்படுகிறாள்!

    உம்முடைய நித்ய-லீலா விபூதிகளுக்கு "உடையவனா"கிய அடியேன், இவள் அன்பினால் ஈந்த தொன்னூறு படிக்கு ஈடாய், மோட்சப் படியை அளிக்கக் கடமைப்படுகிறேன்! நீயும் அவ்வண்ணமே தந்தருள நம் நியமனம்!

    தொன்னூறு தயிர்ப்படிக்கு...முடிவும் முழுவதுமாய் நான் கட்டும் தவணைத் தொகையாக, இவள் வைகுந்தம் புகுந்து கொள்ளக் கடவது!

    இங்ஙனம்...
    (திருவாழி முத்திரையோடு:
    ஒப்பம் - இராமானுசன்)

    tayirukku kaasu vaangiruntha onne mukkaal roobaayodu poi irukkum

    aanaal perumaalidam sera vendum enra aasaiyodu ramanujar paatham patriyathaal alavilamudiyaatha sevam allavaa vanthu vitthathu:)

    ReplyDelete
  46. @NPR:
    //ராமானுஜர் ஸ்ரீ பெரும்புதூரில் இருக்கிறாரே!:)

    idhai eduthu kaata, inge oru "udaiyavar" illaye!!
    உடையவர் நமது உள்ளத்தில் இருக்கிறாரே!:)//

    Forgive English, but i can't type in Tamil in a flow.

    When bhaktas discuss bhakti, it is between them.
    But, Ramanuja was different.
    He went and picked up those people who were totally against "Perumal" and made them fall at His feet.
    That's why Perumal called Him udayavar. Because, He was leaving untold wealth to so many people.
    Do anyone of us have that ability? Or the courage??

    i, for example, grew up with all faiths around me. Even now, there are all faiths around me, but what i grew up in was a different scenario.

    Did i ever have the courage to convince someone to go worship Him? Or the faith and backing to stand firm on what i say when the other persom argues?
    no, and that's the biggest weakness.
    We (atleast i) do not have what the main focus of this topic is. Most people don't.

    And, that's why Ramanujar should have been born NOW. People are making out "people" to be "Gods".
    If Shri Ramanuja was there today, amidst us, He would have made all these misguided, disillusioned people to go fall at Perumal's feet :)

    ReplyDelete
  47. @NPR:
    You are perfectly right in saying Ramanujar lives on!!
    But, imho, what i was trying to say was different!

    ReplyDelete
  48. @KRS:
    thirumba thirumba padikka thoondum post!
    Adhanaal, thirumba thirumba doubt ketkavaikkum post!!

    Ramar mele irukka, ramanujar mattum en keele irundhaar?
    (i have read a story of him refusing to go up, and then coaxed to go up Tirumala, but i believe that was before this story??)

    ReplyDelete
  49. //@KRS:
    thirumba thirumba padikka thoondum post!//

    oh no! dont make me blush and feel shy :)

    //Adhanaal, thirumba thirumba doubt ketkavaikkum post!!//

    போச்சுறா! :)

    //Ramar mele irukka, ramanujar mattum en keele irundhaar?
    (i have read a story of him refusing to go up, and then coaxed to go up Tirumala, but i believe that was before this story??)//

    (கொஞ்சமே தலை சாய்த்த) ராமர் மேலே இருக்க, இவர் மட்டும் ஏன் கீழே இருந்தார்? - நல்ல கேள்வி!

    இராமானுசர், திருமலைக்குச் சென்றது மொத்தம் மூன்று யாத்திரைகள்! அதில் முதல் முறை மட்டுமே மலையேற மறுத்தார்!
    ஏனென்றால் திருமலையே ஆதிசேஷ அம்சமாய் இருப்பதால் - ஆழ்வாரின் வாக்குப்படி -
    சென்று சேர் திருவேங்கட மாமலை
    ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே!

    பெருமாளைத் தொழச் சொல்லாது மலையைத் தொழச் சொல்லும் மாறன்! அதனால் கால் வைத்து ஏற மனசோரமா ஒரு தயக்கம் இந்த மாறனடிக்கு! ஆழ்வார்களும் மலையேறாமல் கீழிருந்தே சேவித்ததாக ஒரு நாட்டு வழக்கு (Folk Lore)!

    (But I dont fully take this traditional hearsay; IMHO, atleast tirumangai wud have climbed the hills, even though the path was inhospitable at that time. He sings நாயேன் "வந்து அடைந்தேன்")

    இராமானுசர் மலையேறாமல் இருந்து விட்டால், அதைப் பார்த்து பிறரும் ஏற மாட்டார்கள்! அப்புறம் எம்பெருமான் அங்கே கோயில் கொண்டு என்ன பயன்? அடியார்களே இல்லாமல், காட்டில் பூத்த மல்லியாகி விடுமே என்று அனந்தாழ்வான் சுட்டிக் காட்டியதால், மலையேறத் துவங்கினார்! மேலும் தான் மட்டும் ஏறாது, ஆனால் தன் சீடர்களை ஏறச் சொல்லி மலர்க் கைங்கர்யம் பண்ணச் சொன்னாரே! அப்படீன்னா சீடர்கள் மட்டும் ஆதிசேஷன் மேல் ஏறிப் பாவம் சேர்த்துக் கொள்வார்கள், நீங்கள் ஏற மாட்டீர்கள், அப்படித் தானே?-என்று அன்பாக குருவையே மடக்குவான் சீடன்! அதனாலும் ஏறுவார்! :)

    But when he reaches the top, and has the mesmerizing darshan, he wud feel - திருவேங்கடமுடையான் ஒரு தொந்தரவு! :)

    "இது தேவர்களும், முனிகளும் ஏகாந்தமாய் தொழும் இடம்! நான் அதிக நாள் இங்கே இருக்க அருகதையற்றவன்" என்று சொல்லி இறங்கி விடுவார்!
    மூன்று நாட்களுக்கு மேல் அங்கே இருந்து சேவித்தால், தன்னை வசீகரித்து இழுத்து விடும் என்ற பயம் இராமானுசருக்கு! அப்பறம் கைங்கர்யம் ஆற்ற ஊர் ஊராச் செல்ல முடியாதே!

    அவருக்கு, அவன் பணியை விட, அடியார் பணி தான் மனதில் அதிகம்! அந்த ஒரே காரணம் தான், அவரைத் திருமலை மேல் அதிக காலம் தங்க விடவில்லை! இதுவே மனப்பூர்வமான காரணம்!

    * முதல் யாத்திரை = பெரிய திருமலை நம்பிகளிடம் இராமாயண பாடம் கேட்க..(ஒரு வருடம், ஆனால் கீழ்த் திருப்பதியில் இருந்து கொண்டு)
    * இரண்டாம் யாத்திரை = பெருமாள் வேறு தேவதையோ என்று ஒரு சிலர் திடீர் கிளப்பி விட்ட குழப்பத்தை நீக்க
    * மூன்றாம் யாத்திரை = திருமலைக் கோயில் நிர்வாகச் சீரமைப்பிற்காக...தில்லை கோவிந்தராச உற்சவரை, தில்லையிலேயே வைக்க வேணும் என்று அடம் பிடிக்காது, பொது அமைதி காத்து, கீழ்த் திருப்பதியிலேயே பிரதிட்டை செய்ததும் இந்த யாத்திரையில்...

    //but i believe that was before this story??)//

    Yes!
    கொண்டியின் நிகழ்வு, முதல் யாத்திரையில்! ஆனால் மலையேறி விட்ட பின்பு! அடிவாரத்தில் இராமாயண பாடம் கேட்கத் துவங்கிய பின்னால்..

    ReplyDelete
  50. @KRS:
    i also have read that he climbed Tirumala on his knees, as he wished not to set his foot on Tirumala.
    adhai pathi unga comments?

    ReplyDelete
  51. //climbing on knees//

    Is it possible? - thinks a so called rational mind - krs! :)

    But when he walked to tirumala once, he saw a lean person climbing on knees - polio attacked handicapped person - sliding & moving swiftlier than krs! :)

    So, the real issue is:
    Not the ability of knee climbing
    But the "sentiment" of such climbing!
    Nobility of Thought is what matters!

    Folklore might say Ramanuja climbed on knees, but only for the 1st time visit!
    Nobility of Thought is what matters, not the climbing as such!

    ReplyDelete
  52. //(But I dont fully take this traditional hearsay; IMHO, atleast tirumangai wud have climbed the hills, even though the path was inhospitable at that time. He sings நாயேன் "வந்து அடைந்தேன்")//

    ஆதிசேடனாகிய மலை மேல் கால் வைக்க அஞ்சி..
    ஆழ்வார்கள், பெருமாளைப் பார்க்க மலையேறாமல், அடிவாரத்தில் இருந்தே சேவித்து விட்டார்கள் என்பது Folklore! No Proof! Just a Nobility of Thought! No need for verification!

    But, we can read the pasurams and understand still better!
    உன்னைக் காண்பதோர் "ஆசையினால்"
    நாயேன் "வந்து அடைந்தேன்"
    வேயேய் பூம்பொழில் சூழ்
    விரையார் திரு வேங்கடவா...
    - என்று திருமங்கை பாடுகிறார்!

    உன்னைக் காண்பதோர் "ஆசையினால்" - ஆசை வெட்கம் அறியாது! :)
    அதுவும் திருமங்கை மன்னனின் ஆசை! ஹிஹி! முயல்கறி என்றெல்லாம் பாசுரத்தில் எழுதியவர்! ஆகையினாலே, இவர் திருவேங்கடமுடையான் அழகினைக் கண்ணால் பருகியிருக்க வாய்ப்புண்டு! - "நாயேன் உன்னை வந்தடைந்தேன்", "உன்னைக் காண்பதோர் ஆசையினால்"!

    ReplyDelete
  53. Thambi Kalakiteenga...

    Vazhga Vazhamudan.

    ReplyDelete
  54. உன்னைக் காண்பதோர் "ஆசையினால்"
    நாயேன் "வந்து அடைந்தேன்"
    வேயேய் பூம்பொழில் சூழ்
    விரையார் திரு வேங்கடவா...
    - என்று திருமங்கை பாடுகிறார்


    இன்னும் இதல்லாம் நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். 1000வருடங்களுக்கு முன்னாள் சென்னையே காடுதானே! திருமங்கை ஆழ்வார் எப்படி எல்லாம் கடினப்பட்டு பாதை அறிந்து போனார் என்றெல்லாம் நினைக்கும் போது ஒரு பிரமிப்பு!


    1012
    மென்ற பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய்* அவுணன்
    பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்*
    நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய*
    சென்று காண்டர்க்கரிய கோயில் சிங்கவேள்குன்றமே. 1.7.5

    அதுவும் இப்போது அஹோபிலம் போறதுக்கே கொஞ்சம் திணறல் மக்களுக்கு! பாதை அப்படி பட்டது. அதுவும் திருமங்கை 1000வருடங்களுக்கு முன்பே நரசிம்மரை தரிசித்தார் என்பது வியப்பான ஒன்று. புரியாத புதிர்? எல்லாம் பெருமாளின் ஆசிர்வாதம் என்று நினைக்கிறேன்!

    இப்பல்லாம் மக்கள் கொஞ்ச நேரம் நடந்தாலே ஐயோ அம்மா என்று அலட்டி கொள்கிறார்கள்:) காலம் அப்படி:

    how to tell i dont know? திருமங்கை ஆழ்வார் கிரேட்! கிரேட்! கிரேட்!

    ReplyDelete
  55. அந்த குலசேகரன் படியை விட்டுட்டீங்களே...?

    ReplyDelete
  56. Dear Mr. Kannabiran ,

    Appreciate your blog as well as your humor. Need a small help for our
    http://godharangan.blogspot.com/

    Can I use your pictures for our blog?I know you will say "yes". But still…….. If you could help us with some more Andal pictures we would be much obliged. I tried to find your emai id. I could not get it. That's why this comment

    ReplyDelete
  57. @Sujatha
    //Can I use your pictures for our blog?I know you will say "yes"//

    What makes u think I will say "Yes"?
    Okies, lemme say opposite of "No"! :)

    The pics used in panthal are not always mine, but taken after considerable amount of search n satisfaction. Sometimes I cut them from videos as well...

    //If you could help us with some more Andal pictures we would be much obliged. I tried to find your emai id.//

    My email id is in my profile. Pl click the name link and u will get it. Best wishes for Margazhi posts!

    ReplyDelete
  58. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    அந்த குலசேகரன் படியை விட்டுட்டீங்களே...?//

    :)
    வாங்க ஜீவா! அடியேன் படியை நானே விடுவேனா? :)
    கொண்டி, அது வரை (கருவறைப் படி) போகவே இல்லை! அதற்கும் முன்னாலேயே திரை அறுந்தவுடன் வீழ்ந்து விடுகிறாள்! அதான்!

    ReplyDelete
  59. @ ராஜேஷ்
    //திருமங்கை ஆழ்வார் எப்படி எல்லாம் கடினப்பட்டு பாதை அறிந்து போனார் என்றெல்லாம் நினைக்கும் போது ஒரு பிரமிப்பு!//

    :)
    ஆசை தான் காரணம்!
    உன்னைக் காண்பதோர் "ஆசை"யினால்! :)

    ஆழ்வாரை விடுங்க! அவர் ருசி அறிந்தவர்! இந்த வீடியோவைப் பாருங்க! சின்னக் குழந்தை எப்படி திருமலைப்படி ஏறுகிறது! So Cute! :)
    http://www.youtube.com/watch?v=G8o9NRVoXds&feature=related

    ReplyDelete
  60. முதலி: "இதுல விவகாரம் ஒன்னும் இல்லீயே?
    என்ன கொண்டி, கோயிலுக்குள் போகணுமா? இப்பல்லாம் நீயே போகலாமே! அவரு சொல்லித் தான் உங்களையெல்லாம் உள்ளே விடுவாங்க என்பதெல்லாம் ஆரம்பத்தில் தான்! இப்போ மாறி விட்டது!
    "திருக்குலத்தார்" என்று உங்களுக்குச் சிறப்புப் பெயர் வேற கொடுத்திருக்காரு! உங்களை நாங்க தடுத்தா, எங்களை வெளியே துரத்தினாலும் துரத்தீருவாரும்மா! ஹா ஹா ஹா!"


    முதலியாண்டனே கெக்கே கெக்கே ன்னு சிரிச்சா போல இருக்கு KRS:)
    ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க:)

    ReplyDelete
  61. //முதலி: "இதுல விவகாரம் ஒன்னும் இல்லீயே?
    என்ன கொண்டி, கோயிலுக்குள் போகணுமா? இப்பல்லாம் நீயே போகலாமே! அவரு சொல்லித் தான் உங்களையெல்லாம் உள்ளே விடுவாங்க என்பதெல்லாம் ஆரம்பத்தில் தான்! இப்போ மாறி விட்டது!
    "திருக்குலத்தார்" என்று உங்களுக்குச் சிறப்புப் பெயர் வேற கொடுத்திருக்காரு! உங்களை நாங்க தடுத்தா, எங்களை வெளியே துரத்தினாலும் துரத்தீருவாரும்மா! ஹா ஹா ஹா!//

    கொண்டி அம்மையார் யாதவ குலத்தைச் சேர்ந்த ஜென்ம வைஷ்ணவ மாது. திருக்குலத்தார் என்று உடையவர் அழைத்தது ஆதிக்க இனத்தாரால் தாழ்த்தப்பட்ட தலீத் மக்களையே தவிர யாதவர்களை அல்ல! கண்ணன் பிறந்த திருக்குலத்தைச் சேர்ந்த கொண்டி அம்மையார் தம் குல முன்னோனை வணங்கச் செல்வதற்கு எந்த இடைத்தரகரின் அனுமதியும் தேவையில்லை. கண்ணனோடு தேக சம்பந்தம் பெற்றவர்கள் என்பதால் யாதவர்களுக்குச் சமாஸ்யரணமே தேவையில்லை என்று ஆசாரியர்களால் கொண்டாடப்பெறுகின்ற யாதவகுலப் பெண்மணியையும் எம்பெருமானாரின் தாசானுதாசனாகிய வணக்கத்திற்குரிய முதலியாண்டானையும் கேவலப்படுத்திவிருக்ககீறீர்கள்.

    ந.செல்லக்கிருஷ்ணன்

    ReplyDelete
  62. வணக்கம் திரு.செல்லக் கிருஷ்ணன்

    //ஆசாரியர்களால் கொண்டாடப்பெறுகின்ற யாதவகுலப் பெண்மணியையும் எம்பெருமானாரின் தாசானுதாசனாகிய வணக்கத்திற்குரிய முதலியாண்டானையும் கேவலப்படுத்திவிருக்ககீறீர்கள்//

    மன்னிக்கவும்! அவசரப்பட்டு வார்த்தையை விடாதீர்கள்! பதிவின் ஒற்றை வாசகத்தைப் பிடித்துக் கொண்டு, மேலான நோக்கத்தினைக் கைவிடாதீர்கள்!

    //திருக்குலத்தார் என்று உடையவர் அழைத்தது ஆதிக்க இனத்தாரால் தாழ்த்தப்பட்ட தலீத் மக்களையே தவிர யாதவர்களை அல்ல!//

    :)
    மற்றவர்களெல்லாம் திருவில்லாத குலத்தவரா? :)
    யாரையெல்லாம் திருவினை அண்ட விடாது வைத்திருந்தார்களோ, அவர்கள் அனைவருமே திருக்குலத்தார் தான்!

    //கண்ணன் பிறந்த திருக்குலத்தைச் சேர்ந்த கொண்டி அம்மையார் தம் குல முன்னோனை வணங்கச் செல்வதற்கு எந்த இடைத்தரகரின் அனுமதியும் தேவையில்லை//

    இடைத்தரகா?
    கண்ணன் யாதவன் என்றால், அப்போ யாதவ குலத்துக்கு அனுமதி தேவையில்லை! ஆனால் மற்ற குலத்துக்கு மட்டம் அனுமதி தேவையோ? இதென்ன நீதி? குலத்தின் பாற்பட்ட நீதியோ? :(

    //கண்ணனோடு தேக சம்பந்தம் பெற்றவர்கள் என்பதால் யாதவர்களுக்குச் சமாஸ்யரணமே தேவையில்லை//

    சமாஸ்ரயணம் என்னும் ஐந்தொழுக்க முறைகள், விதிக்கப்படவில்லை! அறிவுறத்த மட்டுமே பட்டது! கண்ணனின் தேக சம்பந்தம் என்பது, யாதவ நன் மக்களுக்கு, வைணவம் கொண்டாடிய ஏற்றம் மட்டுமே! சாதி அபிமானமோ/உயர்ச்சியோ அல்ல!

    கண்ணனின் தேக சம்பந்தம் யாதவர்க்கு மட்டும் தானா? பிருந்தாவன செடி கொடி, பசுக்கள்-மயில், மாணவர்கள், பின்னாளில் துவரைப்பதி குடி மக்கள், ஏன்...சிகண்டி என்னும் திருநங்கைக்குக் கூட உண்டு!

    அதனால் ஏதோ ஒரு குலத்துக்கு மட்டும் தேக சம்பந்தம் என்று காட்டி, குலக் கொண்டாட்டம் பாராட்டவில்லை ஆசார்யர்கள்! "அறிவொன்றுமில்லாத ஆய்க் குலத்து உன் தன்னைப் பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்" - என்ற திருப்பாவை வாசகத்துக்கேற்ப, மகிழ்வின் பாற்பட்ட ஏற்றம் மட்டுமே அது!

    தும்பையூர் கொண்டி, ஏதோ யாதவ குலத்தவள் என்பதால், தனிச் சலுகைகள் பெற்று விடுவாள் என்று குலத்தை ஒட்டி, அவள் பக்தியை வைக்காதீர்கள்! அப்படிச் செய்தால் அன்புள்ளமான தும்பையூர் கொண்டியை நீங்கள் தான் கேவலப்படுத்துவதாக ஆகி விடும்! :(

    //எம்பெருமானாரின் தாசானுதாசனாகிய வணக்கத்திற்குரிய முதலியாண்டானையும் கேவலப்படுத்திவிருக்ககீறீர்கள்//

    :)
    முதலியாண்டான், உடையவரின் தண்டும்-பவித்திரமுமான அணுக்கர்களில் ஒருவர்! ஆனால் மனத்தளவில் சற்றே சாதி அபிமானம் இருந்ததால் தான், அவருக்கு மட்டும் பல சோதனைகளை வைப்பார் உடையவர்! இது பல நிகழ்வுகளில் குறிக்கப்பட்டுள்ளது!

    நீராடும் முன் இவரையும், நீராடிய பின் "so called கீழ்க் குலமான" வில்லிதாசனையும் பற்றி இராமானுசர் நடந்து வரும் நிகழ்ச்சி, அதை எதிர்த்து முதலிகள் கேட்பது போன்ற நிகழ்வெல்லாம் இதன் பாற்பட்டதே! அதையே கதையிலும் வைத்துள்ளேன்!
    பெரியோரை வியத்தலும் இலமே!
    சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே!

    முதலியாண்டான் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  63. N.Sellakrishnan said...
    கண்ணனோடு தேக சம்பந்தம் பெற்றவர்கள் என்பதால் யாதவர்களுக்குச் சமாஸ்யரணமே தேவையில்லை :

    படைத்தவன் குலம் கோத்ரம் என்று பெயர் வைத்து படைக்க வில்லை .
    குலம் ஜாதி இதெல்லாம் பின்னாளில் மக்களாகவே ஏற்படுத்தி கொண்டது.
    கண்ணனின் தேக சம்பந்தம் அனைவருக்கும் உண்டு ok sir:

    ReplyDelete
  64. நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா எனும் நாமம்.

    நாராயணா நாராயணா.

    மோடசம் கிட்ட நல்லவழி நாராயணா எனும் நாமம்.

    ரவிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  65. Swami, this is an interesting narration of a great story in the life of Emperumaanar. Thank you for that. I hope it's okay if I use parts of your narration for an English version.
    I would also like to know names of some of the books you refer to when it comes to Azhwars and Acharyas. Thanks!
    -Dasyai

    ReplyDelete
  66. "எம்பெருமான் மேல் எனக்குத் தானாகவே பக்தி வந்தது", என்று யாராலும் சொல்ல முடியுமா? பக்தி என்பது சுய சம்பாத்தியமா?

    என்றைக்கோ ஒரு அடியவர், "ஐயோ....இப்படி ஒரு புழுவாய்....இது சாக்கடையில் கிடந்து நெளிகிறதே, இதற்கு ஒரு விடிவு கிடைக்காதா? நாராயணா!" என்று அந்தப் புழுவைப் பார்த்துச் சொல்லி இருப்பாரோ?
    அதனால் தான் அந்தப் புழு, இன்று பதிவுகளில் எம்பெருமானை ஆழ்ந்து ஆழ்ந்து அனுபவிக்கிறேனோ?

    அந்தமில் பேரின்பத்து அடியவர்களுடன் கூடி,
    தொண்டு எனும் கைங்கர்யம்...
    அவனுக்"கே" அவனுக்"கே" இருப்பது = இதுவே மோட்சம்!

    இந்த இனிய பதிப்பை கண்டு ஆனந்த கண்ணீரால் கண் கலந்காதொரும் உண்டோ?

    ReplyDelete
  67. "எம்பெருமான் மேல் எனக்குத் தானாகவே பக்தி வந்தது", என்று யாராலும் சொல்ல முடியுமா? பக்தி என்பது சுய சம்பாத்தியமா?

    என்றைக்கோ ஒரு அடியவர், "ஐயோ....இப்படி ஒரு புழுவாய்....இது சாக்கடையில் கிடந்து நெளிகிறதே, இதற்கு ஒரு விடிவு கிடைக்காதா? நாராயணா!" என்று அந்தப் புழுவைப் பார்த்துச் சொல்லி இருப்பாரோ?
    அதனால் தான் அந்தப் புழு, இன்று பதிவுகளில் எம்பெருமானை ஆழ்ந்து ஆழ்ந்து அனுபவிக்கிறேனோ?

    அந்தமில் பேரின்பத்து அடியவர்களுடன் கூடி,
    தொண்டு எனும் கைங்கர்யம்...
    அவனுக்"கே" அவனுக்"கே" இருப்பது = இதுவே மோட்சம்!

    இந்த இனிய பதிப்பை கண்டு ஆனந்த கண்ணீரால் கண் கலந்காதொரும் உண்டோ?

    ReplyDelete
  68. தயிர்க்காரி பெற்ற பேறு பெரும் பேறு ...!!

    ReplyDelete
  69. இன்னிக்கு தயிர்காரியை மீண்டும் வாசித்தேன். ஏனாம்? தெரியலை, நெசமாவே தெரியலையாக்கும், கேட்டோ!

    ReplyDelete
    Replies
    1. வாங்க டீச்சர்:)
      பெருமாள், இப்பிடி விதம் விதமா டகால்ட்டி வேலை பண்ணி, வாசிக்க வைப்பாராக்கும் கேட்டோ:)
      Just kidding.. ஒங்க வீட்டுல தயிர் சரியா தோய்ஞ்சிருக்காது போல இன்னிக்கி, அதான் u came to buy from தயிர்க்காரி தும்பையூர் கொண்டி:)

      Delete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP