Sunday, April 14, 2013

சங்கத் தமிழ் "விஜய வருஷத்" தமிழ்ப் புத்தாண்டு!

அனைவருக்கும் "விஜய வருஷத் தமிழ்ப் புத்தாண்டு" வாழ்த்துகள்!

சென்ற ஆண்டின் "தமிழ்ப் புத்தாண்டு" பதிவு பத்தி, ரெண்டு-மூனு பேரு, மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டுக்கிட்டே இருக்காங்க;
தமிழன்பர்கள் போலத் தான் தெரியுறாங்க; Dunno, why ppl. drill down in panthal & getting old posts;

அந்தப் பதிவைப் படிக்க வேணாம்-ன்னு கேட்டுக்கறேன்;
அப்போ, ஏதோ "தெரியாத்தனமா" எழுதிட்டேன்;

I don't have much internet in this camp; So a real quickie below;
* "ஜயம்" = வெற்றி;
* "விஜயம்" = "பிரமாண்டமான" வெற்றி;

உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி வேணுமா? வேண்டாமா?
வேணும்-ன்னா, "விஜய வருஷம்" தான் = தமிழ்ப் புத்தாண்டு!


இந்த "விஜய வருஷத்தில்" எந்தக் "காரியம்" துவக்கினாலும், அது "க்ஷேமமா" நடக்கும்;
"சத் காரியங்களும்" வரிசை கட்டி வந்தே தீரும் என்று முன்னோர்கள் வாக்கு;

மண்ணில் விஜய , வருடமழை மிகுதி
எண்ணுசிறு தானியங்கள் எங்குமே - நண்ணும்
பயம்பெருகி  நொந்த  பரிவாரம் எல்லாம்
நயங்களின்றி வாடுமென நாட்டு
- இது "சர்வ முகூர்த்த பஞ்சாங்க" வெண்பா(ம்)

இது எட்டுத் தொகையா? எட்டாங் கிளாஸ் தொகையா?.. யாரு எழுதினது?-ன்னு எல்லாம் கேட்கப் படாது;
பாருங்க, "வருஷத்துக்கு" தமிழ் வெண்பாவே இருக்கு; இதுல இருந்தே தெரியலையா? - "விஜய வருஷமும்" தமிழ் ஆண்டு தான் ஐயா;

"ஜிம்"-க்குப் போவதற்குக் கூட வெண்பா(ம்) இருக்கு; உடல் "ஆரோக்கியம்";
ஜிம்மிலே ஓடிபின், ஜம்மென்று கண்டதையும்
சும்மாச் சவைக்கா திருப்பாயே – நண்பாநீ
உப்பைக் குறைத்த உணவினை உண்டுயினி
தப்பான வாழ்வைத் தவிர்
- இதுல இருந்தே தெரியலையா?- "ஜிம்" சங்கத் தமிழிலேயே இருந்துச்சி-ன்னு?

புத்தாண்டு, புத்தாண்டு-ன்னு கூறு கெட்ட "டுமீல் & டுமீலன்ஸ்" பேத்திக்கிட்டு இருக்காங்க; "ஓவரா"த் தமிழார்வம் தலை விரிச்சி ஆடுது;

1st of all,  தமிழை, எழுத்துப் பிழை இல்லாம எழுத முடியுமா, இவனுங்களால?
2nd of all, "அனர்த்தம்" வந்துறாம, தமிழ் பேசத் தெரியுமா, இவங்களுக்கு?

இலக்கணம் முக்கியமா? தமிழுணர்ச்சி முக்கியமா?
= எலக்கணம் தான்-யா முக்கியம்; சகரிக-மநிநிச;
= ரீதி கெளளையில், "நிஷாதத்தை" அசைக்கலாமோ?
சின்னக் கண்ணன் "அசைக்கிறான்":))



இந்த "விஜய வருஷத்தின் ராஜா" = "குரு பகவான்";
குரு பார்க்க, கோடி "தோஷம்" விலகும்;
வாழ்க்கை-ல்ல நல்லா இருக்கணும்-ன்னு ஆசை இருக்கு தானே? எதுக்கு வீணா, "குரு பகவானை", பகைச்சுக்கிட்டு?

எவர் ஒருவர், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில்,  தமிழ்ப்-"பஞ்சாங்கம்" வாசிப்பதைக் கேட்கிறாரோ,
* அவருக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பது "ஐதீகம்"
* அவர்களின் "விரோதிகள்" அழிவார்கள்;
* "துஷ்ட" கனவுகள் ஏதும் இல்லாமல் வாழ்வார்கள்;
* "கங்கா ஸ்நானம்" பண்ணின பலன் கிடைக்கும்;

இந்த ஆண்டு "ஆதாயம் 53, விரையம் 56" எனக் கூறப்பட்டுள்ளது;
"ஆதாயத்தை" விட "விரையம்" கூடுதலாக இருப்பதால் அரசுக்கு வருவாய் குறையும்; (even better than CAG forecast)
எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் இருந்தாலும், ஆளும் கட்சியை பாதிக்காது; கருப்புப் பணம் கிடைக்கும்;
நல்ல மழை பெய்யும். அரசாங்க "கஜானா" நிறையும்;

சுக்ல பட்சம், சதுர்த்தி திதி, 
ரிஷப ராசி, மகர லக்னம்,
நவாம்சத்தில் மேஷ லக்னம் 
= இப்படித் தான், "தமிழ்ப்" புத்தாண்டு பிறக்கிறது; ஒங்க கண்ணுக்குத் தெரிகிறதா?

"தன் மானம்" மிகுந்தவர் நீங்கள் (??) ;
உங்களுக்கு 2-வது ராசியில் "வருஷம்" பிறப்பதால், பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள்;
பணப் புழக்கம் கூடும்; உங்களின் "பூர்வ புண்யாதிபதி" சாரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்கள் "அந்தஸ்து" கூடும்;

இதெல்லாம் வாழ்க்கை நன்மைக்கே!
ஏற்கனவே வாழ்க்கையில் ஆயிரம் "கஷ்டங்கள்"; இதுல, நல்லா வாழறதை விட்டுட்டு....
தமிழ்ப் புத்தாண்டு எது? -ன்னு யாராச்சும் கேள்வி கேட்டுக்கிட்டு இருப்பாங்களோ?


சென்ற ஆண்டு,  இங்கே = "தமிழ்ப் புத்தாண்டு" பற்றி ஏதோ "அறியாமையில்" எழுதிட்டேன்;


இன்றைய "இலக்கிய" உலகில்: மேற்கண்ட தமிழ் அறிஞர்கள் எல்லாம் தேவையில்லை; 
= "வணிகத் தமிழ்" அறிஞர்களே, ’அறி’ஞர்கள்! 

"விஷ்ணுபுரம்" தான் தமிழின் ஒரே நாவல்-ன்னு ட்வீட்டத் தெரிஞ்சிருக்கணும்; 
= தமிழ் முனைப்பை விடத், "தன் முனைப்பே" பெரிது; 

தரவு குடுத்தாலே / ஆதாரம் காட்டினாலே...
* ட்விட்டர் பெரிய மனுஷங்க பகையைச் சம்பாதிச்சிக்க வேண்டி இருக்கும்;
* வசவாப் பேசினாக் கூடத் தப்பில்லை; பொண்ணு கூடச் சேந்து, போலீசில் மாட்டி விட்டாக் கூடத் தப்பில்லை; அவங்க கிட்ட கூட உறவாடுவோம்;

ஆனா, வெறுமனே தரவு குடுக்குறவனை?
* ஆயுசுக்கும் மன்னிக்க மாட்டோம்;
* துன்ப காலத்தில் கூட நலம் விசாரிக்க மாட்டோம்;

என் தமிழ்ப் பதிவுகள் = தப்பு தான்!
பெரியவங்க எல்லாரும் மன்னிக்கணும்;

வெறுமனே, "காகைக்கா காகூகை"  -ன்னு சொல் விளையாட்டுப் பதிவுகளா/ கம்ப ரசங்களா இட்டிருக்கணும்; அது மட்டும் தானே தமிழ்??
தமிழ் உணர்ச்சி/ தமிழ் அன்பு -ன்னு, "உணர்ச்சி"யைப் பற்றும் பதிவுகள் தவறல்லவா? உள்-மனதைத் தேடுதலில் ஈடுபடுத்தலாமோ?

அது மட்டுமா? "பகவான் பார்வை - குரு பார்வை".. இதெல்லாம் எனக்கும் வேணும்;
வாழ்க்கையில் நல்லா இருக்கத் தானே ஆசைப்படுவாங்க? பட்ட "கஷ்டம்" எல்லாம் போதும்;

இனிமேல், "சம்போகம்", "சந்தோஷம்" -ன்னு எனக்கு ஒரு வாழ்வைக் குடு முருகா!
இப்பிடி மாறுபட்ட மனசா என்னைப் படைச்சிட்டியே; ஒன்னையே நம்பி வந்துட்டேனே... முருகவா;



குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ

மேலே, சிவப்புச் சிவப்பா எழுத்து எதுக்கு? -ன்னு பாக்குறீங்களா?
= அவையெல்லாம் தமிழ்ச் சொற்களே!
நல்லாப் பாருங்க.... சர்வ முகூர்த்த விஜய விருஷம் = இது தமிழ் தானே?

(மனசாட்சி): "இல்ல..."ஸர்வ/ முகூர்த்த/ விஜய/ வருஷ" தமிழ் மாதிரி தெரியல; அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு";

தயக்கமா??? என்ன ஸ்வாமி பேசறீரு?

*சங்கத் தமிழ்க் கடவுள், மாயோன் (எ) திருமால் = முன்னை மரபின் முதுமொழி முதல்வ! 
ஷ் போட்டு-ஷ் போட்டே, "விஷ்ணு" -ன்னு வெற்றிகரமா மாத்தீட்டோம்-ல்ல?

*சங்கத் தமிழ்க் கடவுள், சேயோன் (எ) முருகன் = அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக! 
இவனைத் தான் இன்னும் "பரிபூர்ணமா" மாத்தலை;
ஆனாலும் சுப்ரமணிய ஸ்வாமி தேவஸ்தானம் -ன்னு அறுபடை வீடெல்லாம் எப்பவோ ஆயிருச்சே!

*சங்கத் தமிழ்க் கடவுள், கொற்றவை (எ) சமயபுரத்தாள்;
கொற்றம் + அவ்வை; அவ்வா-ன்னு தெலுங்கிலும் உண்டு = முதுமகள்;
பூர்வகுடி/ நாட்டார் வழக்கமா? போயே போயிருச்சி; "ஸமயபுர ஸ்தல புராணம்" உருவாகி, அங்கும் அஷ்டோத்திர அர்ச்சனை தானே?

Wait Wait Wait, சமயபுர-ஆத்தாளா?
"ஆத்தாள்"??? = ட்விட்டரில் செட்டு (set) சேர்த்துக்கிட்டு... பேசிப் பேசியே நாம தான் அதை bad word ஆக்கிட்டோமே; "அம்பாள்" -ன்னு சொல்லுங்க!

லேசு மாசா, தமிழ் இலக்கணம் எதுக்குப் படிச்சிருக்கோம்?
எவனாச்சும் தமிழ் உணர்ச்சி-ன்னு பேசி, அறியாமல் எழுத்துப் பிழை பண்ணினா, விளாசீற மாட்டோம்?
" டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா, அப்பறம் டுமீல் கோஷம் போடப் போவலாம்"

சுப்ரமணியன் = தமிழ் இல்லீயா?
அப்படீன்னா தமிழ்க் கடவுள் = தமிழ் இல்லீயா?
-ன்னு கேட்டு "பேஜார்" பண்ணீறலாம் ஓய்; ஆடிப் பூடுவாங்க;

* திருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி = தமிழ் தான்!
* அதே போல், சர்வ முகூர்த்த விஜய விருஷம் = தமிழ் தான்; அதுவே தமிழ்ப் புத்தாண்டு!

(மனசாட்சி:) இல்ல... அது அப்பிடியில்ல; தொல்காப்பியம், தொன்மம் -ன்னு தரவு... அதெல்லாம் உண்மை போலத் தான் தெரியுது; அதான்...

யோவ்..
ஆயிரம் "தரவு" இருக்கு ஈழத்துக்கு; ஆனா, எதுனா "புடுங்க" முடிஞ்சுதா?
.......... புரிஞ்சிக்கோ!
சர்வ முகூர்த்த - விஜய வருஷ - "தமிழ்ப் புத்தாண்டு" வாழ்த்துகள்;

26 comments:

  1. கே.ஆர்.எஸ்,

    ஹி..ஹி பகவான் ஷக்திய பார்த்தேளா,அம்பி என்னமா தமிழ்ப்புத்தாண்டு விளக்கம் சொல்லுது பேஷ்..பேஷ்,அப்படினு பெரியவா சொல்லணுமா வேண்டாமா,அப்போ நானும் மனம் திருந்தி ஜோதியில சங்கமிச்சிட வேண்டியது தான்,சம்போ மஹா தேவா :-))

    "ஷர்வ முஹூர்த தமிழ் விஜய வர்ஷ அபி நூதன ஸம்வத்ஸரஸ்ய ஷுபஷயஹா"

    ஹி..ஹி யாரு சொன்னா இதெல்லாம் தமிழ் இல்லைனு ,இதெல்லாம் செந்தமிழ் ஆயாச்சு, இப்போ இப்படிலாம் செந்தமிழில் வாழ்த்தலாம் :-))

    ReplyDelete
  2. கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. //ஒங்களுக்கு, வாழ்க்கை-ல்ல நல்லா இருக்கணும்-ன்னு ஆசை இருக்கு தானே? எதுக்கு வீணா, "குரு பகவானை", பகைச்சுக்கிட்டு?//

    தப்பும் தவறுமாக எழுதுறேள், நன்னா இருக்கனும்னு வரனும், அப்பதான் வாசிக்க கனஜோராக இருக்கும்.

    :)

    வருஷம் இல்லே, வர்ஷம்

    ReplyDelete
    Replies
    1. nalamaa Govi aNNa?
      I should NOT talk to ppl like u - Thatz one of the advice given by one "free mason" earlier - theeNdaamai:)

      Delete
  4. கே.ஆர்.எஸ்,

    …ரொம்பதான் நொந்து போயிருக்கிங்க!

    ReplyDelete
    Replies
    1. Yes-nga!
      I didn't write or come online for past 4-5 months;
      This triggered it

      Delete
  5. ஒரு வேண்டுகோள்:

    இதில் குறிப்பட்ட ஒரு சமூகத்தின் பரிபா"ஷை"களைக் கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்;

    * இது = எந்தவொரு சமூகத்துக்கோ "எதிரான" பதிவு அல்ல; (அப்படித் தொனித்து இருப்பின், மன்னிக்கவும்)
    * இது = தமிழை ஊடாடித் தள்ளும் "போக்கு" / தமிழுணர்ச்சியை எள்ளித் தள்ளும் "போக்கு" - இதற்கு மட்டுமே எதிரானது;

    I have been in hiding mode for many months & not so well;
    I am in a child cancer camp and not much net; My only friend is moderating on my behalf; So please...

    ReplyDelete
  6. இந்தப் "போக்கு" எவர் செய்யினும் - சம்ஸ்கிருதமோ/ சிங்களமோ - தவறு தவறே!

    சிங்களச் சின்னங்களை நிறுவி நிறுவி, இன்னும் இரண்டு நூற்றாண்டில், தமிழ்க் குழந்தைகள், சிங்களச் சொற்களும் தமிழ் தான் என்று சொல்லும் நிலை கூட வரலாம்:(

    அப்படி ஆனது தான் தமிழ்த் தொன்மச் சிதைப்பும், இது போன்ற புத்தாண்டுக் குழப்பங்களும்;

    ஆமாம்டா, எல்லாச் சொல்லும் தமிழில் இருந்து தான் சிங்களத்துக்குப் போச்சாம்;
    Tablet கூட தேய்ப்பு-இலட்டு; வந்துட்டானுங்க டுமீலன்ஸ் -ன்னு யாரேனும் சிங்களவர்கள், எள்ளி எள்ளி இன்புறலாம்:(

    ஆனால், சிங்கள நிறுவலுக்காக, நாம் "புத்தரை" வெறுத்து விடுவதில்லை; அவர் கருணையே உருவானவர்;
    = இது, அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு செய்யும் குழு மேலாதிக்க அரசியலே!
    = அந்தத் தெளிவு நமக்கு இருக்கும் வரை சரி;
    ---------

    தமிழ் இலக்கியத்துக்குத் தொண்டு புரிந்த பல "அந்தணர்கள்" உளர்;
    * சூரிய நாராயண சாஸ்திரிகள் (பரிதி மால் கலைஞர்)
    * உ.வே. சாமிநாத ஐயர்
    * மு. இராகவ ஐயங்கார்
    என்று சிலர்...

    இன்னும் பலர், தமிழ்ப் பேராசான்களாக இருந்தாலும், சம்ஸ்கிருதப் பிடிப்பும் ஒரு சேரக் கொண்டவர்கள்;
    அதனால், தமிழ்த் துறையில், வடமொழிக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்கும் தமிழ் முயற்சிகளையே அவர்கள் மேற்கொண்டார்கள்;

    இருப்பினும், "தமிழ் முயற்சிகள்" எதுவாயினும், போற்றத் தக்கவையே;
    அதனால், சமூகப் பரிபா"ஷை"களை இதில் தவிர்த்து விட்டு, பதிவின் சாரத்தை மட்டுமே கொள்ளுமாறு, வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்;


    ReplyDelete
  7. //தமிழ் இலக்கியத்துக்குத் தொண்டு புரிந்த பல "அந்தணர்கள்" உளர்;
    * சூரிய நாராயண சாஸ்திரிகள் (பரிதி மால் கலைஞர்)
    * உ.வே. சாமிநாத ஐயர்
    * மு. இராகவ ஐயங்கார்
    என்று சிலர்...//


    வைணவர் ராமானுஜரை இதில் சேர்க்கலாமோ?

    ReplyDelete
    Replies
    1. chErkkalam:)

      *He signed as "raamanusan" & not ramanujan;
      *Itz he who codified compulsory singing of tamizh paasurams in kaRuvarai, even 1000 years back;
      *Respectfully calling vaNNaan as "eeram kolli udaiyaar"

      In this century,
      *Swamy Vedachalam = maRai malai adigaL
      *Surya Narayana Sastry = parithi maal kalaignar
      But even 1000 years back, with no inspiration from any one...
      * Jaamathru Muni = maNavaaLa maamunigaL

      Delete
  8. பிராமண பாஷை இங்கு வருவது வேண்டுமென்றே இல்ல; உண்மையாக அவர்களுடைய influence இதில் இருக்கும் போது அதை பதிவு செய்தே ஆக வேண்டும்; அப்படி செய்வதில் தவறு இல்ல.

    சென்னையில் உழைக்கும் வர்க்கம் பேசும் தமிழை மெட்ராஸ் பாஷை என்று சொல்லி அவர்கள் தான்(சோ, மௌலி, s.v.சேகர், YGP, YGM, காத்தாடி ராமூர்த்தி, இன்னும் பலர்) அவர்கள் நாடகங்களில் போட்டு கிழித்தார்கள்...அதற்க்கு அப்புறம் தான் இந்த அவாள் இவாள் கிண்டல் பிரமணர் அல்லாதார் ஆரம்பித்தது...

    இரண்டும் தவறு இல்லை...இருவரும் கிண்டல் செய்து கொள்ளலாம்.

    மேலும், சென்னையில் எங்களை மாதிரி படித்த, மற்றும் இப்போ படிக்கும் சென்னை மாணவர்கள் தமிழ் வல்லினம் இடையினம் மெல்லினம் உச்சரிப்பில் கெட்டிக்காரர்கள்.
    மற்ற மாவட்ட மக்களைவிட சென்னை மாணவர்கள் தமிழ் உச்சரிப்பு பிராமாதம்.

    சென்னைக்கு தெற்கே....ழகரம் மட்டும் தகராறு இல்லை...ல'கரமும் ள'கரமும் எல்லாமே தகராறு தான்.

    கிரந்த எழுத்துக்கள் உச்சாரிப்பு சுத்தம்...ஸ்டேஷன் எனக்கு தெரிஞ்சு டேஷன் தான்..
    Tantex (ஜட்டி) எப்பவுமே...டேன்டெக்ஸ் (இதில்..'ட' உச்சரிப்பு...டேய்...இந்த டே சத்தம் தான்.

    ReplyDelete
  9. அற்புதம்
    "ஜிம்மிலே ஓடிபின், ஜம்மென்று கண்டதையும்
    சும்மாச் சவைக்கா திருப்பாயே – நண்பாநீ
    உப்பைக் குறைத்த உணவினை உண்டுயினி
    தப்பான வாழ்வைத் தவிர்"

    ReplyDelete
    Replies
    1. that was not a 8th century veNpaa sir:)
      this veNpaa(m) is from a friend, elavasa kothanaar

      Delete
  10. விஜய வருட வாழ்த்துகள், கண்ணா!

    ReplyDelete
    Replies
    1. dank u -ka!
      iniya hindu puthaaNdu/ vijaya aaNdu vaazthukkaL

      Delete
  11. விஜய வருடவாழ்த்துகள் ரவி!

    நொந்து போன மனதின் எழுத்தாக தெரிகிறது விவரம் புரியவில்லை ஆனாலும் உங்க எழுத்தை விரும்பிப்படிக்க நாங்கள் இருக்கிறோம்..பந்தலில் தமிழ்மாரி பெய்யட்டும் தொடர்ந்து! அதற்கு உங்க தோழி ஆண்டாள் கூடவே இருக்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. no issues ka!
      i am "destined" this way till death; murugan aruL

      Delete
  12. I did not like the tone of this post. In my personal experience, a message conveyed by love lasts longer than a message conveyed by scolding someone else. Remember how people loved Balaraman's post. I knew a lot of people who shared it so happily because it was a message of love and not one of hate. I suggest you write without bringing in terms like "dumeelan" to refer to people who use those words. If they want to use it, let them use it, why dont you spread happiness instead of negativity :)

    I used to be good at doing such negative posts and mails, but in my experience I have found that bringing a positive message helps in the longer run. This is why I am sharing it to you. You are free to do what pleases you :) I am just trying to show that there is a better (in my perspective) way :)

    ReplyDelete
    Replies
    1. :)
      This is my way!
      This is Periyar way!

      Periyar way is NOT way of love
      Periyar way is way of Justice!

      Delete
    2. I agree :)

      But Buddha preached in the way of love and his style has lived on for years. Periyar, as you rightly said, practiced the way if justice and brutal honesty. Look whose effect is long lasting and more impacting :)

      Compare: Peiyar's direct sucessor Veeramani and some very very very later succesor of Buddha, say Dalai Lama. Whose knowledge has been carried longer ?

      I used to be a very open honest critic in my professional life. But at some stage some people labelled me as negative guy and did not heed to the valid reasons in my commentary. This changed after I toned down. It is a balance :) Right now I believe that your approach may give you such a negative person image. That is why I wanted to shae this comment.

      I may be wrong too.

      Delete
    3. சங்கர்
      உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது; அன்பிற்கு நன்றி

      //-ve person image//

      *தமிழை = டுமீல் என்றும்,
      *தமிழுணர்ச்சியை எள்ளி எள்ளி நகையாடும் போதும்,
      *இந்த -ve person image வருவதில்லையே? ஏன்?
      Can someone give a very honest answer to this 1 question?

      யார் கூட்டு சேர்ந்து, குழு மனப்பான்மையில், இந்த "-ve person image" உருவாக்குகிறார்கள் என்று தெரிகிறதா?
      -----

      உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது; Balancing both sides of friends!
      ஆனால், friends என்று சுருக்கிக் கொண்டு, அவர்களை எண்ணியே, பந்தலில் எழுதும் வழக்கம் = எனக்கு என்றுமே இருந்ததில்லை;

      இது பரந்துபட்டது; தமிழ் சார்ந்தது
      பந்தலில் எழுதும் போது, அதை வாசிப்பவர்கள் பலர் = முகம் தெரியாதவர்கள்;
      முகம் தெரிந்தவர்களின் பிடித்தங்களை எழுத்தில் "adjust" செய்து கொள்ளும் பழக்கம் எனக்கு என்றுமே இருந்ததில்லை;

      = வாழ்வில் என் "விசுவாசம்" = நட்புக்கு உறுதியா நிக்கும் (நான் வீழ்ந்தாலும்);
      = ஆனால் எழுத்தில் என் "விசுவாசம்" = தமிழுக்கு மட்டுமே; முருகனுக்குக் கூட அல்ல!
      -----

      //without bringing in terms like "dumeelan" to refer to people who use those words. If they want to use it, let them use it, why dont you spread happiness instead of negativity :)//

      டுமீலன் -ன்னு சொன்னாலும் பரவாயில்லை; இராம.கி ஐயா போன்ற தமிழார்வலர்களை எள்ளிக் கொண்டே இருந்தாலும் பரவாயில்லை;
      = நான் உங்களுக்கு "அன்பு" மட்டுமே தருவேன்;
      = நீங்க எனக்கு "டுமீலன்" தாருங்கள்; பரவாயில்லை;
      உங்கள் அடி நயந்து இருத்தலே +ve; அதுவே long lasting:)))
      -----

      இங்கு மற்றவர்கள் இட்ட பின்னூட்டத்திலும், குறிப்பிட்ட சமுதாய மொழி "தவிர்" என்று வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டதையும் பார்த்து இருப்பீர்கள்;

      என் முருகனை விட, தமிழ் பெரிது
      தமிழை விட, மானுடம் பெரிது

      எவரையேனும் "பழித்தோ/ இழித்தோ" பேசி இருந்தால், காட்டுங்கள்; உடனே பொதுவில் மன்னிப்பு கேட்கத் தயங்க மாட்டேன்;

      Delete
    4. ஆனால், ஆதாரங்களை/ தரவுகளை முன் வைத்தாலே, அதை ஒரு "Challenge" ஆக எடுத்துக் கொண்டால், ஒன்றும் செய்வதற்கில்லை!

      தரவுகளை முன் வைப்பது, ஒருவரின் "Ego" வுக்காக அல்ல; தமிழுக்காக!
      ------

      தொல்காப்பியனுக்குத் தொம்பி/ ஆண்டாளுக்கு ஆண்ணன்
      மானம் கெட்டவனே,
      தரவு காட்ட வந்துட்டான் பன்னி,
      கய்தே வியாக்யானம் பேசுது,
      ஆடத் தெரியாத முண்டம் மேடை கோணல்-ன்னு சொல்லுச்சாம்
      கழுதைக்கு தெரியல ஓய் கற்பூர வாசனை
      பூச்சி மருந்து அடிச்சி, இவனை ஒழிச்சிக் கட்டுங்க (http://idlyvadai.blogspot.com/2012/07/blog-post_416.html)

      மேற்கண்டவை எல்லாம் தனிப்பட்ட வசவுகளா?
      இல்லை... தமிழுக்கான பதிவில் ஆதங்கம் தொனிக்க எழுதுவது மட்டுமே negativityயா?
      = இது மனசாட்சிக்கான கேள்வி;
      = பகவத் சரணார விந்தம் (எ) இறைவன் திருவடி நீழலில், இந்தக் கேள்வியின் மனத் தாபம் அடங்கட்டும்!

      Delete
    5. கே.ஆர்.எஸ்,

      // ஆனால் எழுத்தில் என் "விசுவாசம்" = தமிழுக்கு மட்டுமே; முருகனுக்குக் கூட அல்ல!//

      உண்மையில செம டச்சிங்கான ,மிக நேர்மையான ஒரு பதில்!

      இப்படி சொல்ல ஒரு"மன உறுதி" வேண்டும்!!!

      நான் கூட உங்களை பல சமயம் தவறாக நினைத்துக்கொள்வதுண்டு(ஆன்மீகவாதி, அப்படித்தான் பேசுவார்னு),அவ்வாறு எண்ணியது தவறென உணர்கிறேன்!

      உங்களைப்போல நாலு பேர் இருந்தாப்போதும் தமிழ் என்றும் வாழும்!

      வாழ்த்துக்கள்&பாராட்டுக்கள்!

      Delete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP