Showing posts with label PaavaiPod14. Show all posts
Showing posts with label PaavaiPod14. Show all posts

Thursday, December 29, 2011

கோதைத்தமிழ்14: புழக்கடை @raguC

மக்கா, இன்னிக்கி பேசறவரு தமிழ் ஆர்வலர் மட்டுமில்ல! தண்ணி ஆர்வலரும் கூட! அட... நான் சொல்லுறது நீர்ப்பாசனத் தண்ணி-ங்க:)
அணை - மதகு - பாசனம் - அறிவியல் ன்னு அவர் பதிவுகளை வாசிங்க தெரியும்! இதோ @raguC உங்கள் முன்பு!



நன்றி ரகு! இயல்பான, செறிவான பேச்சு!


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள்,
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்!
செங்கல் பொடிக் கூறை வெண் பல்-தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்!


எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய், எழுந்திராய்! நாணாதாய், நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு, ஏல்-ஓர் எம் பாவாய்.


மேலோட்டமான பொருள்: ஏன்டீ, உங்க புழக்கடையில், ஒரு சின்ன குளம் இருக்கே! அதுல தாமரைப் பூவெல்லாம் பூத்து, ஆம்பல் (அல்லி) பூவெல்லாம் கூம்பிருச்சி! இன்னுமா எழுந்திருக்கலை நீயி?

செங்கல் வண்ணத்துல கூறை உடை உடுத்திக்கிட்டு, பல வெள்ளை மனசு முனிவர்கள், கோயில் நோக்கி சங்கு ஊதிக்கிட்டே போறாங்கடீ!

என்னமோ எங்களையெல்லாம் எழுப்பி விடுவேன்-ன்னு வாய் மட்டும் பேசின நீயி? வாடீ நாணாத நங்கையே! சங்கு-சக்கரம் ஏந்திக் காட்சி குடுக்கும் கண்ணனைப் பாடி வருவோம்! கிளம்பு கிளம்பு!



இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = புழக்கடை

இன்றைய நகரா-நரக-நகர வாழ்க்கையில் 2BHK, 3BHK, Patio, Cul-de-sac, Walk-in Closet, இன்னும் என்னன்னமோ சொல்லுறோம்!
புழக்கடை-ன்னா என்ன? எத்தினி பேருக்கு அது தெரியும்? எத்தனை பேர் வீட்டுல இருக்கு? இல்லை புழக்கடை Patio ஆகி விட்டதா? :)

புழக்கடை = புழை+கடை!
* கடை-ன்னா கடைசி;
* புழை-ன்னா குறுகிய வாயில்!
குறுகிய வாசலைத் தாண்டி, வீட்டின் கடைக் கோடியில் இருப்பது புழக்கடை!

என்ன அழகான தமிழ்க் காரணப் பெயர் பார்த்தீங்களா?
புழக்கடை புழங்கும் கடையும் கூட! சின்ன தோட்டம், குளம் கூட இருக்கும்!
பண்ட பாத்திரங்களை இங்கு தான் பல நேரங்களில் விளக்குவார்கள்!
துணியும் காயப் போட்டுக்கலாம்! புழக்கடையைத் தாண்டினா அடுத்து கொல்லை தான்! கொல்லையில் கழிப்பறைகளும் உண்டு!

புழக்கடை = சின்னப் பசங்க ஒளிஞ்சி விளையாட சூப்பரான இடம்!
கூடை, வைக்கோற் புதர், துணி மேடை, கிணற்றடி-ன்னு ஒளிஞ்சிக்க நிறைய இடங்கள்! கோழிக் கூண்டுல கூட ஒளிஞ்சிக்கலாம்!:) உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்!

நாளைக்கிப் பேசப் போறது...ட்விட்டர் பிரபலம்...பல தேர்தல்-லயும் வெல்லும் வீரரு! யாரு? வர்ட்டா?:)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP