Thursday, December 29, 2011

கோதைத்தமிழ்14: புழக்கடை @raguC

மக்கா, இன்னிக்கி பேசறவரு தமிழ் ஆர்வலர் மட்டுமில்ல! தண்ணி ஆர்வலரும் கூட! அட... நான் சொல்லுறது நீர்ப்பாசனத் தண்ணி-ங்க:)
அணை - மதகு - பாசனம் - அறிவியல் ன்னு அவர் பதிவுகளை வாசிங்க தெரியும்! இதோ @raguC உங்கள் முன்பு!



நன்றி ரகு! இயல்பான, செறிவான பேச்சு!


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள்,
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்!
செங்கல் பொடிக் கூறை வெண் பல்-தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்!


எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய், எழுந்திராய்! நாணாதாய், நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு, ஏல்-ஓர் எம் பாவாய்.


மேலோட்டமான பொருள்: ஏன்டீ, உங்க புழக்கடையில், ஒரு சின்ன குளம் இருக்கே! அதுல தாமரைப் பூவெல்லாம் பூத்து, ஆம்பல் (அல்லி) பூவெல்லாம் கூம்பிருச்சி! இன்னுமா எழுந்திருக்கலை நீயி?

செங்கல் வண்ணத்துல கூறை உடை உடுத்திக்கிட்டு, பல வெள்ளை மனசு முனிவர்கள், கோயில் நோக்கி சங்கு ஊதிக்கிட்டே போறாங்கடீ!

என்னமோ எங்களையெல்லாம் எழுப்பி விடுவேன்-ன்னு வாய் மட்டும் பேசின நீயி? வாடீ நாணாத நங்கையே! சங்கு-சக்கரம் ஏந்திக் காட்சி குடுக்கும் கண்ணனைப் பாடி வருவோம்! கிளம்பு கிளம்பு!



இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = புழக்கடை

இன்றைய நகரா-நரக-நகர வாழ்க்கையில் 2BHK, 3BHK, Patio, Cul-de-sac, Walk-in Closet, இன்னும் என்னன்னமோ சொல்லுறோம்!
புழக்கடை-ன்னா என்ன? எத்தினி பேருக்கு அது தெரியும்? எத்தனை பேர் வீட்டுல இருக்கு? இல்லை புழக்கடை Patio ஆகி விட்டதா? :)

புழக்கடை = புழை+கடை!
* கடை-ன்னா கடைசி;
* புழை-ன்னா குறுகிய வாயில்!
குறுகிய வாசலைத் தாண்டி, வீட்டின் கடைக் கோடியில் இருப்பது புழக்கடை!

என்ன அழகான தமிழ்க் காரணப் பெயர் பார்த்தீங்களா?
புழக்கடை புழங்கும் கடையும் கூட! சின்ன தோட்டம், குளம் கூட இருக்கும்!
பண்ட பாத்திரங்களை இங்கு தான் பல நேரங்களில் விளக்குவார்கள்!
துணியும் காயப் போட்டுக்கலாம்! புழக்கடையைத் தாண்டினா அடுத்து கொல்லை தான்! கொல்லையில் கழிப்பறைகளும் உண்டு!

புழக்கடை = சின்னப் பசங்க ஒளிஞ்சி விளையாட சூப்பரான இடம்!
கூடை, வைக்கோற் புதர், துணி மேடை, கிணற்றடி-ன்னு ஒளிஞ்சிக்க நிறைய இடங்கள்! கோழிக் கூண்டுல கூட ஒளிஞ்சிக்கலாம்!:) உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்!

நாளைக்கிப் பேசப் போறது...ட்விட்டர் பிரபலம்...பல தேர்தல்-லயும் வெல்லும் வீரரு! யாரு? வர்ட்டா?:)

6 comments:

  1. வழக்கம் போல அருமை KRS. இயர்-போன் இல்லாததால் பேச்சைக்
    கேட்க முடியவில்லை. சரி.
    கோயிலுக்கு சென்று தானே சங்கை ஊதுவார்கள்?படத்தில்
    அவர்கள் ஊதிக்கொண்டே போவது கொஞ்சம் ஓவர்..
    வெண்பல் தவத்தவர் என்பதற்கு வெள்ளைமனம் கொண்ட பல
    தவத்தவர் என்று சொல்கிறீர்கள்.மனம் என்ற வார்த்தை வரவில்லையே,
    எனிவே, புதிய விளக்கம்..
    'நாவுடையாய்' என்கிறாள் ஆண்டாள். நாக்கு தான் எல்லாருக்கும் இருக்கே
    அதை ஏன் சொல்லணும் என்றால் , இன்று சில பேர் அர்த்தம் இல்லாமல்
    வள வள என்று பேசுவதைப் பார்த்தால் அவர்கள் உடம்பு முழுவதும் நாக்கு
    தான் இருக்கோ என்று சந்தேகம் வரும்.எனவே சும்மா அதை செய்வேன் இதை செய்வேன் என்று நாக்கு இருக்கிறதே என்று பேசாதே, செயலில் காட்டு என்கிறாள் கோதை.

    ReplyDelete
  2. பாடலின் ராகத்தையும் போடலாமே
    For quick reference :-

    1 . நாட்டை 2 .கௌளை 3 .ஆரபி 4 . வராளி 5 .ஸ்ரீ 6.சங்கராபரணம் 7.பைரவி 8.தன்யாசி 9.ஹமீர் கல்யாணி 10.தோடி
    11.ஹுசேனி 12.கேதாரகௌளம் 13.அடானா 14.ஆனந்தபைரவி 15.பேகடா
    16.மோகனம் 17.கல்யாணி 18.சாவேரி 19.சஹானா 20.செஞ்சுருட்டி
    21.நாதநாமக்ரியா 22.யமுனாகல்யாணி 23.பிலஹரி 24.சிந்துபைரவி 25.பெஹாக்
    26.குந்தளவராளி 27.பூர்விகல்யாணி 28.காம்போஜி 29.மத்யமாவதி 30.சுருட்டி

    ReplyDelete
  3. திருப்பாவை படங்களில் மாட்டுக்குக் கூட நாமம் (ஒற்றை சூர்ணம்) போடவேண்டுமா?
    ஆண்டாள் பாசுரங்கள் வைணவர்களுக்கு மட்டும் அல்லாது எல்லாருக்கும்
    பொது என்பது என் தாழ்மையான கருத்து

    ReplyDelete
  4. இப்பாடலில் மலர் ஒன்று மலர்ந்து மூடுவதை Sequential ஆக சொல்கிறாள் கோதை .
    செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து - மலர்தல்
    ஆம்பல் வாய் கூம்பின -கூம்புதல்
    எழுப்புவான் வாய்பேசும் - அவள் பேசும் போது வாய் தாமரை போல மலரும் -மலர்தல்
    சங்கொடு சக்கரம்- திருமால் கையில் இருக்கும் சங்கு கூம்பிய தாமரை போலிருக்கிறது -கூம்புதல்
    பங்கயக்கண்ணன் -கண்ணன் விழிகள் மலர்ந்த தாமரை மலரை ஒக்கும் -மலர்தல்

    ReplyDelete
  5. நன்றி கே ஆர் எஸ்! வாய்ப்புக்கும் விளம்பரத்திற்கும்!

    ReplyDelete
  6. Ragupathi Raja Chinnathambi தான் @raguC என்று அறிகிறேன். நன்றாக பேசினீர்கள். செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து என்பதற்கு ஏற்ற விளக்கம் கொடுத்தீர்கள்! நன்றி.
    ஏன் அத்தை எப்பொழுதும் கொல்லைப்புரத்துக்கு புழக்கடை என்றே சொல்லுவார். அவர் இறைவனடி எய்திய பிறகு யார் அந்த வார்த்தையை பயன் படுத்தினாலும் எனக்கு அவர் ஞாபகம் தான் வரும். அவர் கிராமத்தில் வளர்ந்தவர். பல நல்ல தமிழ் வார்த்தைகளை பேச்சு வழக்கில் பயன்படுத்துவார்.
    எப்பொழுதுமே தான் முதலில் எழுந்து மற்றவர்களை எல்லாம் எழுப்புகிறேன் என்று சொல்கிறவர் தான் கடைசியில் எழுந்திருப்பார் :)
    சமுத்ரா, உங்கள் விளக்கங்களும் தகவல்களும் மிகவும் அருமை :)
    என்னுடைய ஆசிரியர் வெண்பல் தவத்தவர் என்பதற்கு வெண்மையான பற்களை உடைய தவசிகள் என்று சொன்ன மாதிரி ஞாபகம்.
    amas32

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP