கோதைத்தமிழ்10: நாற்றம்-தேற்றம் @Kuumuttai
மக்கா, வணக்கம்! இன்னிக்கி திருப்பாவை பேசப் போறது, என் நண்பன், கூமுட்டை!
ஒரு கூமுட்டையை எல்லாம் எதுக்குடா நண்பனா வச்சிக்கிட்டு இருக்கே?-ன்னு கேக்காதீக:)) இது வேற = @kuumuttai என்ற Twitter குல திலகம்!:)
சில பேரிடம் நேரில் பேசியது கிடையாது, பார்த்தது கிடையாது! அவ்வளவு ஏன்?...கூமு குரலே இப்பத் தான் எனக்குத் தெரியும்!
ஆனாலும் அதையும் தாண்டி ஒரு நட்பு ஆழமாய் இருப்பது சற்று வியப்பு தான்!
அதுக்காக என்னைய சோழன்-ன்னோ, கூமு-வைப் பிசிராந்தையார்-ன்னோ எல்லாம் நான் சொல்ல வரலை! சேச்சே, கூமு-க்கு செந்தமிழ் அவ்ளோவா வராது:))
ஆனாலும் இசை! எனக்காகவே கூமு, youtube-இல் ஏற்றிய அபூர்வ பாடல்கள் நிறைய!
அதையும் தாண்டி சிலுக்கு என்னும் தாரகை! அவளே எங்களுக்கு வழிகாட்டி!:))
என் முருகன் எனக்குக் காட்டுவதெல்லாம்...குமரன், செந்தில், சண்முகம்-ன்னே வருது:)
கூமு-வின் குரலில் இன்றைய திருப்பாவை! கூமு (எ) பெங்களூர் குமரன் இதோ உங்க முன்னே!
நன்றி கூமு! தென்கச்சி சாமிநாதன் போல என்னமா BuildUp குடுக்குற நீயி?:) கோர்வையான பேச்சு!

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்,
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன்! நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால்! பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்,
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற ஏல்-ஓர் எம் பாவாய்!
மேலோட்டமான பொருள்: அவனை அடைய, நோன்பு நோற்கும் தோழியே! நீ கதவைத் தான் திறக்கலை, வாயைக் கூடவாத் திறக்க மாட்டே? எழுந்து பதில் சொல்லுடீ!
மணம் மிக்க துளசியைச் சூடிய கண்ணன்! அவனைப் போற்றிப் பாட, அதிகாலையில் எழுந்து போகிறோம்!
முன்பு, அவனிடம் தோற்றானே, கும்பகருணன்! அவன் உன்னிடமும் தோற்று, அவன் தூக்கத்தை உனக்குக் குடுத்துட்டானோ என்னமோ?
ஆற்றும் செருக்கும், ஞானச் செருக்கும் உனக்கு ரொம்ப இருக்கு போல! அதெல்லாம் வேணாம்டீ என் நல்லவளே! நிச்சயமாய் வந்து கதவைத் திறடீ!

இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = நாற்றம்-தேற்றம்!
நாற்றம் = மணம்
பேசிப் பேசி...கும்மியடித்து அடித்து, இன்னிக்கி இது துர்-நாற்றத்தை மட்டுமே குறிக்கத் துவங்கி விட்டது!:)
ஆனா அது நறு-நாற்றத்தையும் குறிக்கும்!
நாற்றத் துழாய் = துளசி என்பதால்...இங்கே நறுமணம்!
நாறுதல் என்பதே மூலப் பெயர்!
எப்படி, கண்=பார்த்தலோ, மூக்கு=நாறுதல்!
Can you Smell it? = அதை நாறுகிறாயா? (அ) முகர்கிறாயா?
நாற்றம் பொதுவான சொல்!
-------
"தேற்றமாய்" வந்து கதவைத் திற-ன்னு சொல்லுறாய்ங்க! = Come & Surely open the door
தேற்றம் = நிச்சயம்/ உறுதி!
Pythagoras Theorem = பிதாகரஸ் தேற்றம்-ன்னு சொல்லுறோம்-ல்ல?
அது கணித உறுதிப்பாடு! a^2 + b^2 = c^2 இது நிச்சயம் இப்படித் தான் என்பதால் = தேற்றம்!
தேற்றேகாரம்-ன்னும் சொல்லுவாய்ங்க!
"ஏ"காரம் நிச்சயத்தன்மையைக் குறிக்கும்! என் கடன் பணி செய்து கிடப்ப"தே"! If u want to add surety, add ஏ to the end:) கிடப்பது & கிடப்பதே!
-------
கூமு கேட்ட கேள்வி = மாற்றமும் தாராரோ?
மாற்றம் = மாற்று மொழி! (alternate word)
ஒருவன் ஒன்னு சொன்னா, அதுக்குப் பதில் மொழி சொல்லுறது = மாற்றம்!
அவனோடு "மாறு" = Debate with him!
"மாறு"படு சூரரை வதைத்த முகம் ஒன்று!
கதவைத் தான் தொறக்கல, மாற்றமாச்சும் தர மாட்டியா? Can you not exchange words?
நாளைய பேச்சாளர் = நானா?:)

கூமுட்டை, உங்க பேர் என்ன? :)நல்லா பேசியிருக்கீங்க!
ReplyDeleteசோம்பேறி பெண்ணையும் எவ்வளவு போற்றிப் பாடுகிறாள் ஆண்டாள் நாச்சியார். அருங்கலமே என்கிறாள். அரிய ஆபரணமே, எழுந்து வந்து கதவை திற என்கிறாள். நாமும் நமக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால் குழந்தைகளை கண்ணே மணியே என்றுக் கொஞ்சி, கொஞ்சம் கடைக்கு போய்விட்டு வரியா என்போம். அது போல இவளும் அந்தப் பெண்ணை சோம்பேறிக் கழுதை என்று திடட்டாமல்
நல்ல வார்த்தைகள் சொல்லி அவளை எழுப்பிகிறாள். கோதையின் தோழியாவதற்கு அவள் முற்பிறப்பில் என்ன தவம் செய்திருந்தாளோ!
amas32
நல்லா சொல்லிருக்கீங்க.
ReplyDelete'கும்கர்ணனே உன் கிட்ட தோத்துருவான் - அப்படி ஒரு தூங்குமூஞ்சி நீ' அப்படின்னு சொல்றதுல ஒரு விளையாட்டுப் பெண்ணோட சிறுபிள்ளைத்தனமான பேச்சு இருக்கு.
ஆனா அதுல கூட
'கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணன்'
னு சொல்றா.
கூற்றுவனான யமன் வாய்ல விழுந்து அழிஞ்சு போன கும்பகருணன்.
திருமால் பெருமையை சொல்லாம இருக்க முடியலை அவளுக்கு :-)
குமரன், தெளிவான பலுக்கல் (உச்சரிப்பு) உங்க கிட்ட இருக்கு. நானெல்லாம் தெளிவா பலுக்கனும்னே தனிக்கவனம் செலுத்துவேன்; செலுத்தணும்; இல்லாட்டி சொதப்பிரும். உங்களுக்கு இயல்பா தெளிவான பலுக்கல் இருக்கு.
ReplyDeleteமாற்றத்துக்கு இரவி மாற்றம் தந்துட்டார். இப்ப இன்னொரு தடவை இந்தப் பாசுரத்தைப் படிச்சா அந்த வார்த்தையும் தெளிவா புரியும். இல்லை?!
amas32, dagalti, குமரன், அனைவருக்கும் நன்றி. உண்மையச் சொல்லனும்னா Audacityல என்னோட "ம்ம்ம்", "அப்புறம்", போன்றவற்றை எல்லாம் எடிட் பண்ணி, வேகமாக பேசுவது போல் செய்து குடுத்தேன். :-) 1915 திருப்பாவை தனியன் - உரைனு ஒரு புக் டவுண்லோடினேன். அதுல இருந்ததை அப்படியே சொல்லிட்டேன்... ;-)
ReplyDeleteமாற்றம் = மாற்று மொழி... சந்தேகம் தீர்ந்தது.. நன்றி.
யாராவது கதவைத் தட்டினால் உடனே திறக்கணும்.(இந்தக் காலத்தில் யாரும் திறக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்)இல்லையென்றால் 'இதோ வந்தேன்' என்று உள்ளேயிருந்து ஒரு குரலாவது கொடுக்கணும்
ReplyDeleteஅந்த common manners கூட உனக்கு இல்லையே என்கிறாள் கோதை
நன்றி கூமுட்டை. ரசித்தேன்.
ReplyDeleteநன்றி ரவி. வியந்தேன்.
மதுரையில் அதிகாலையில் வெற்று உடம்போடு சுருதி பெட்டியோடு தெரு தெருவாக பஜனை கோஷ்டிகள் சுற்றிவரும். ஒவ்வொரு வருடமும் ஒரு புகைப்படம் எடுத்து வீட்டில் வருசையாக மாட்டிவிட்டிருப்பார்கள். அப்பொழுது புகைப்படம் ஒரு ஆச்சர்யம். இன்று அது மறைந்து போயிற்று.