Thursday, December 22, 2011

கோதைத்தமிழ்07: கீச்சுகீச்சு @KumaranMalli

மக்கா, வணக்கம்! இன்னிக்கி பேச இருந்தது, ஒரு பெரிய நாத்திகர் = நம்ம @tbcd 
ஆனா, ஆத்திகம் கிட்ட நாத்திகம் தோத்துருச்சி:))

திடீர்-ன்னு @tbcd "As I am suffering from fever"-ன்னு கடிதம் போட...நாத்திகத்தை நிரப்ப வந்தது யாரு?:) = என் பதிவுலக குருநாதர்!
தமிழ்ப் பதிவுலகின் ஆன்மீக சூப்பர் ஸ்டார் என்று கொடி கட்டிப் பறந்த "கூடல் குமரன்" @kumaranmalli பேசும் Podcast இன்று!

என் பதிவுகள் கூடல் ஏறி இருக்கு! ஆனால் குமரன் பதிவுகள் பந்தல் ஏறியதில்லை!
இதுவே முதல் முறை! ஆகா! வருக குமரன் அண்ணா வருக! வற்றாத் தமிழின்பம் தருக!

கேளுங்க மக்கா...குமரனின் வீச்சை, பேச்சை!நன்றி குமரன் அண்ணா!
உங்களால் ரெண்டு மணி நேரம் கூட இதப் பத்திப் பேச முடியும்-ன்னு எனக்குத் தெரியும்!
ஆனா ரெண்டே நிமிடம் பேசு-ன்னு உங்களைக் கூண்டுக்குள் அடைத்து விட்ட இந்த KRS "நாயகப் பெண் பிள்ளையை" மன்னித்து அருள்க!:))

இந்த 'எழுப்பும்' பாட்டை, குமரன், தன் மகளான தேஜஸ்வினிக்கு பாடித் 'தூங்க' வைக்கும் ஒலிச்சுட்டி இதோ!:)


கீசு கீசு என்று எங்கும்,ஆனைச் சாத்தன் கலந்து,
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக், கை பேர்த்து,
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்


ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:  கருங்குருவி (ஆனைச்சாத்தன்) பறவைகள் கீச் கீச் எனக் கீச்சுகின்றன! அது உன் காதுல விழலையாடீ?
அடி பேய்ப் பெண்ணே, ஆய்ச்சி தயிர் கடையும் சத்தம்...புர்ர் புர்ர்-ன்னு புலி உறுமுறாப் போல...கேக்கலையா உனக்கு?

அவளோட கையில் - தங்க நகையின் மேல் முத்தும் பவழமும் உராயும் சத்தம் கூடவா கேக்கலை உனக்கு?

தமிழ்க் கடவுளான திருமாலைப் பாடுகிறோம்! கேட்டும், கேட்டுக்கிட்டே தூங்குற மூஞ்சியைப் பாரு!
ஏய்ய்ய்ய்....கோச்சிக்காத....மூஞ்சில ஒளி மின்னுதுடீ! கதவைத் திறடீ! கள்ளீ!


இன்றைய எழிலான சொல் = வாச-நறுங்-குழல்!

கீச்சு = Tweet!
கீச்சு கீச்சு-ன்னு பறவைகள் கீச்சியதை...முதல் பதிவிலேயே பார்த்துட்டோம்-ல்ல? அதனால் இன்னிக்கி வேற சொல் எடுத்துப்போம் = குழல்!

குழல் = புல்லாங்குழல் (அ) கூந்தல்!

*குழல்வதால் = குழல்! காரணப் பெயர்!
தமிழில் வினையை (செயலை) ஒட்டி அமைந்த காரணப் பெயர்களே அதிகமா இருக்கும்! நாமாக இட்டுக் கொண்ட இடுகுறிப் பெயர்கள் மிகவும் சொற்பமே!

=>செல்வதால் = செல்வம்
=>இடுவதால் = இட்லி
=>தோய்ப்பதால் = தோசை
=>குழலுவதால் = குழல்

குழலுதல் = சுருண்டு-வளைதல் = Curl 
* பெண்/ ஆணின் கூந்தல் அப்படி இருந்தால் = குழல்!
* கூந்தலுக்குச் சரி! ஆனா புல்லாங்குழலுக்கு எப்படி அதே பேரு வந்துச்சி?

புல் + ஆம் + குழல்
* புல் = மூங்கில் என்பது ஒரு வகைப் புல்! (Bamboo is a weed/grass)
* ஆம் = ஆன
* குழல் = ஓட்டைகளில் காற்று சுருண்டு-வளைந்து, இசை வரும்

மூங்கிலால் ஆன + குழலுதல் ஓசை வருவதால் = புல்+ஆம்+குழல் = புல்லாங்குழல்!
தமிழ்ப் பேர்களே அவ்ளோ நல்லா இருக்கு-ல்ல? வாங்க, திருப்பாவையில், தமிழின்பத்தில் தோய்வோம்!

நாளிக்கி, ஒரு தமிழ் அறிஞர் - தமிழ் ஆர்வலர் பேசப் போறாரு! யாரு?:) வர்ட்டா?:)

15 comments:

 1. இன்னிக்குக் கேட்ட பேச்சோவியம் ஆருமையிலும் அருமை! ஆண்டாள் நாச்சியார் ஒவ்வொருவர் மனதிலும் புகுந்து அழகாக பேச வைக்கிறார்.தோழிகளை எழுப்பப் பாடும் பாசுரத்தை பெண்ணை உறங்க வைக்க தாலாட்டாக மாற்றிய அவரின் திறனை ரொம்ப மெச்ச வேண்டும்:) It was very soothing to listen to @tbcd.
  amas32

  ReplyDelete
 2. @amas32
  போச்சுறா! பேசினது @tbcd அல்ல! @kumaranmalli :))

  ReplyDelete
 3. குழல் = ஓட்டைகளில் காற்று சுருண்டு-வளைந்து, இசை வரும்/

  வ்ளையாத மூங்கிலில் ராகம்
  வளைஞ்சு ஓடுதே

  மேகம் முழிச்சு கேக்குதே!!

  ரசித்துப்படித்த மிக அருமையான
  பாவைப் பாசுர விளக்கத்திற்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. வணக்கம் கூறி கீச்சுகீச்சென்றில்லாமல் அழகாய் ஆரம்பித்த அருமைத்தம்பி குமரன் விளக்கம் அருமை..மகளூக்கு இதுதான் தாலாட்டா?! அருமை எல்லாமே!

  ReplyDelete
 5. சரியா போடக் கூடாதா, என்னை மாதிரி மக்குப் பசங்களுக்குப் புரியற மாதிரி போடுங்க :)
  amas32

  ReplyDelete
 6. Sorry,@kumaranmalli. Your speech touched me very much. Thank you.
  amas32

  ReplyDelete
 7. //கீசு கீசு என்று எங்கும்,ஆனைச் சாத்தன் கலந்து,பேசின//
  கீசு, மாற்றிப் போட்டால் சுகி அதாவது கிளி; ஒருவேளை கருங்குருவியும் கிளி மாதிரி பேசியதோ?

  ReplyDelete
 8. தபிகுதி (@TBCD) பேசியிருந்தா என்ன பேசியிருப்பார்ன்னு கேக்க ஆர்வமா தான் இருக்கு. அவர் உடல் நலம் தேறி விரைவில் இதே தலைப்பில் பேசித் தரவேண்டும். நீங்கள் அதனை இங்கே இடவேண்டும் இரவி.

  ReplyDelete
 9. ரெண்டு நாள் முன்னாடி 'முன்னாள்'ன்னு சொன்னீங்க. இப்ப 'கொடி கட்டி பறந்த'ன்னு எழுதுறீங்க. திரும்பவும் தொடர்ந்து எழுதுனா இந்த பட்டத்தை எல்லாம் திருப்பி குடுப்பீங்களா இல்லையா? :-)

  ReplyDelete
 10. இரவி, எனக்கு மட்டும் தான் மறதி அதிகம்ன்னு நினைச்சிருந்தேன். உங்களுக்கும் மறதி இருக்கே.

  பந்தல்ல என் பதிவு இதுக்கு முன்னாடியும் வந்திருக்கு. http://madhavipanthal.blogspot.com/2009/10/blog-post.html

  ReplyDelete
 11. நாளைக்கு பேசப் போறது தமிழ் அறிஞரா? யாரு? ஆர்வமா இருக்கு.

  ReplyDelete
 12. @amas32

  பேச்சும் பாட்டும் நல்லா இருந்ததுன்னு பாராட்டுனதுக்கு நன்றிங்க. பாட்டை இன்னும் தாலாட்டாவே பாடினது இங்கே இருக்கு. முடிஞ்சா கேட்டுப் பாருங்க. http://cinch.fm/kumaranmalli2/thiruppaavai/330867

  ReplyDelete
 13. Thiru Kumaran, I did listen and enjoy the lullaby, thank you :-)
  amas32

  ReplyDelete
 14. அத்தனை காலையில் எழுந்து கொண்டு தயிர் கடைகிறார்களா?ஓகே//
  வாச நறுங்குழல்- காலை ஆறு மணி சுமாரில் மீரா சீகைக்காய்
  பவுடர் போட்டு தலைக்குக் குளித்து வந்திருப்பார்களோ?

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP