Friday, December 16, 2011

கோதைத்தமிழ்01: நேரிழை @nchokkan @dagalti

தமிழ் அன்பர்கள் - Twitter நண்பர்கள் - பந்தல் வாசகர்கள் எல்லோருக்கும், குளிர்ர்ர்ந்த-கதகதப்பான மார்கழி வாழ்த்துக்கள்:)

* இந்த ஆண்டு மார்கழியில், ஒரு தமிழ்த் தேர்!
* ஊர் கூடி இழுப்பது = Tamil Twitters!
ஒவ்வொரு நாளும் உங்கள் அபிமான Twitter நட்சத்திரங்கள்! 

அவங்க கீச்சுகளை.....படிக்க மட்டுமே அல்லாது, அவங்க குரலைக் கேட்கவும் போறீங்க!:))
 PaavaiPodcast - Entirely Podcasted by Tamil Twitters!!

திருப்பாவை என்னும் தமிழ்த் தேரை ஓடவிட்டவள் = ஒரு அற்புதமான காதலி!
அவனோட செவ்வாய் நாறுமோ? தித்தித்து இருக்குமோ?-ன்னு 1000 ஆண்டுக்கு முன்பே வெளிப்படையாக் கேட்டவ! காதலனை, Publicஆ ஓட்டி மகிழ்ந்தவ!:)

அது என்ன ட்விட்டர் மக்கள் மட்டும் தான், தேரை இழுக்கணுமா?
தமிழ் =அனைவரின் சொத்து! எல்லாரும் விளையாடலாம் வாங்க!:)
ஆனா Twitter-க்கு மட்டும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு! என்னான்னு தெரியுமா?

Tweet = சிறு பறவைகளின் சத்தம்!
Lil' Birds are Tweeting! தமிழில் = கீச்சு!

கீச்சு கீச்சு என்றெங்கும், ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ?
-ன்னு அன்னிக்கே Tweetஐ = கீச்சு ஆக்கியவள் தோழி கோதை! அதான், இன்னிக்கி இத்தனை Twitter மக்களும் இங்கே = "கீச்சு"கின்றனர்!:))

ஆங்.....வாங்க..............எல்லாரும் ஒரு கைப்பிடிங்க! எல்லாருக்கும் இளஞ்சூடான பனைவெல்லப் பானகம்!
ஆங்.....இழுங்க............தமிழ்த் தேர் அசைந்து, அசைந்து...
மாசறு பொன்னே வருக! மணி ரதமதில் உலவ...தமிழே வருக!

இதோ...நாம் அனைவரும் அறிந்த...நாக சொக்கநாதன்!
Naga S/ எழுத்தாளர் சொக்கன்/ @nchokkan கொடியசைத்து, துவக்கி வைக்கிறார்! கம்பீரமான/வேகமான சொக்கனின் குரலைக் கேளுங்க :))



நன்றி சொக்கரே!:)
அது ஏன்-யா திருப்பாவை மட்டும், 1000+ ஆண்டுகளா, இத்தனை பிரபலம், இத்தனை பேச்சு-கீச்சுகள்? அப்படி என்ன தான்-யா அதுல இருக்கு?

பணம்? சண்டை? காமெடி? 'ஜா'தக-'ஜோ'சிய பரிகாரம்? = ஒன்னுமே இல்ல! ஞானம்/தத்துவம்-ன்னு அடுக்கலை!
* எளிய தமிழ் இருக்கு!
* நட்பு இருக்கு!
* நட்பு-க்குள்ள தினமும் பேசிக்குற பேச்சு இருக்கு! = அதான் இத்தனை வெற்றி!

பல உரைகள் இருக்கு! நாம அதுக்குள்ள எல்லாம் போவப் போறதில்லை! ஆராயாமல், அனுபவிக்க மட்டுமே போகிறோம்:)))


@dagalti = நமக்கெல்லாம் நல்லாத் தெரியும்! பேரைப் போலவே ஆளும் டகால்ட்டி:)
கம்பன் கவியில் தோய்பவர்!
Twitter Timeline-இல் திடீர்-ன்னு தோன்றி, அசால்ட்டா கலக்குபவர்! ஆனா அவரு குரலு எப்படி இருக்கும்? கேட்டு இருக்கீயளா? இதோ!



மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்?
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
,



ஏர் ஆர்ந்த கண்ணி, யசோதை இளம் சிங்கம்,
கார்மேனி, செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்!
நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்!!
பாரோர் புகழப் படிந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!



மேலோட்டமான பொருள்:  இந்தக் காலத்துப் பொண்ணுங்க, காதலனைக் காதலிக்கத் தொடங்கும் முன்னர் ஒரு Bio-Data போடுதுங்க-ல்ல? அது போலப் போடறா ஆண்டாள்! :)

* மொதல்ல Dating Date-ஐக் குறிச்சி வச்சிக்கிறா = மார்கழித் திங்கள்! மதி நிறைந்த நன்னாள்!
* அப்புறம் ஊரு = சீர் மல்கும் ஆய்ப்பாடி!
* அப்புறம் Daddy = கூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன்! - கையில் வேலு இருக்காம்....இவரு நந்த-கோபனா? கந்த-கோபனா?:))
* அப்புறம் Mummy = ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை!
* அப்புறம் அவ ஆளு = கார்மேனி(கருப்பன்), செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்!

* அவன் பேரு = ?
அதை மட்டும் "கண்ணன்"-ன்னு சொல்லாம, மறைச்சி வைக்குறா! புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை!:)


இன்றைய அழகான சொல் = நேர்+இழை
இழை = Fibre
ஒளி+இழை = Optical Fibre
மெல்லீசா, நுட்பமா, ஒன்னுக்குள்ள ஒன்னு 'இழை'ந்து இருப்பது = இழை!

ஒட்டி உறவாடும் சில நண்பர்களைப் பார்த்து, "ஏன்டா நீங்க ரெண்டு பேரு மட்டும் இப்படி இழையறீங்க"-ன்னு கேக்குறோம்-ல்ல?:)
இலக்கியத்தில் பெண்களுக்கு = இழை-ன்னே பேரு! இழைவா இருக்காங்க-ல்ல?:))

* நேரிழை
* சேயிழை
* ஏந்திழை (ஏந்தி இருக்காங்களாம் நகையை)
* ஆயிழை (ரொம்பவே ஆராய்ஞ்சி shopping பண்ணுவாங்க போல:)
* முறுக்கிழை (வளையல்)

அன்மொழித் தொகை-ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? பள்ளியில், இலக்கணக் குறிப்பு-ன்னு 6th முதல் 12th வரை கொடுமைப் படுத்துவாங்களே?:)))

எப்பமே, தேர்வுக்காகப் படிக்கும் போது புடிக்காத ஒன்னு,...
அப்பறமா சாவகாசமாப் படிக்கும் போது ரொம்பப் பிடிச்சிப் போயீரும்!

ஆபிசில் அவளைக் கண்டாலே பத்திக்கிட்டு வரும்! ஆளு இனிக்க இனிக்கத் தான் பேசுறா, ஆனா சரியான அல்டாப்பு கேசு-ன்னு முதலில் முறைப்பு, அப்பறமா அதுவே காதலாகி இனிக்குதே!
அதே போலத் தான்! சொல்லிக் குடுக்குறவங்க சொல்லிக் குடுத்தா, தமிழ் ரொம்ப ரொம்ப இனிக்கும்!:)

அன்மொழி = அல் (இல்லை) + மொழி
பல சொற்கள் நேரடியா இடம் பெறாது; நாமளாச் சேர்த்து....பொருள் கூட்டிப் புரிஞ்சிக்கணும்! அதான்....அன்+மொழி+தொகை!
=> நேரிழை வந்தாள் = இழை(யை) (அணிந்திருக்கும்) (பெண்) வந்தாள்

* இதுல 'ஐ' மறைஞ்சி (தொகைஞ்சி) வருது = 2ஆம் வேற்றுமை
* 'அணிந்திருக்கும்'-ன்னு நாமளாச் சேர்த்துக்க வேண்டியிருக்கு!
* முக்கியமா, 'பொண்ணு'-ன்னே சொல்லல! :)) நாமளாக் கற்பனை பண்ணிக்க, இவ என்ன Anushka-வா?:)

இப்படி, 2ஆம் வேற்றுமை தொகைஞ்சி, கூடவே பலதும் தொகைஞ்சி வருவதால்....
*** நேரிழை = 2ஆம் வேற்றுமைத் தொகை + புறத்துப் பிறந்த + அன்மொழித் தொகை!
சுருக்கமா = அன்மொழித் தொகை!:) Ok-vaa?:))

நாளைக்கு எந்த ட்விட்டரு-ப்பா Podcasting?
அவரு பேருலயே முத்தம் இருக்கும்! அவரே தான்!:)
அது வரை வர்ட்டா style-இல் வரட்டா?:)

18 comments:

  1. me the first.... அருமையான தொடக்கம்.. உங்கள் குரலும் அருமை

    ReplyDelete
  2. Dagalti, as always, fantastic! KRS, great effort! ஆண்டாள் நாச்சியார் நிச்சயம் மனம் மகிழ்ந்து நம்மை வாழ்த்துவாள் ;-)
    amas32

    ReplyDelete
  3. மதி நிறைந்த நன்நாளில் மனம் மகிழ வச்சத்துக்கு நன்றி.

    நல்வரவு.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. நல்ல முயற்சி தொடரட்டும் கீச்சர்களின் மார்கழித் தமிழ் பொழிவு

    ReplyDelete
  6. kalakkal...............

    ReplyDelete
  7. ரொம்ப நன்றி Mr.Ravi. என்னதான் மார்கழி வந்தாலும், திருப்பாவை கேட்க புண்ணியம் பண்ணிருக்கணும். கண்ணனுடைய அருளும் கருணையும் இருப்பதால்தான் இந்த அற்புதத்தை செவிமடுக்க முடிந்தது. உங்கள் முயற்சிக்கு ”நன்றி” மிகச்சிறிய வார்த்தைதான். உங்கள் திருப்பாவைப் பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. அருமையான முயற்சி, இப்போதுதான் படித்தும் கேட்டும் ரசித்தேன்

    ReplyDelete
  9. மார்கழிமாதப் பாவைப் பதிவு ரசித்தேன் தமிழ்ச்சுவையை ருசித்தேன் தொடங்கள்!

    ReplyDelete
  10. * இந்த ஆண்டு மார்கழியில், ஒரு தமிழ்த் தேர்!
    * ஊர் கூடி இழுப்பது = Tamil Twitters!
    ஒவ்வொரு நாளும் உங்கள் அபிமான Twitter நட்சத்திரங்கள்!

    அவங்க கீச்சுகளை.....படிக்க மட்டுமே அல்லாது, அவங்க குரலைக் கேட்கவும் போறீங்க!:))
    PaavaiPodcast - Entirely Podcasted by Tamil Twitters..

    >>>>>>புதுமையான முயற்சி...ரவி கைய வச்சா ராங்காப்போனதில்ல! அமர்க்களமா வரப்போகுது வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. weet = சிறு பறவைகளின் சத்தம்!
    Lil' Birds are Tweeting! தமிழில் = கீச்சு!

    கீச்சு கீச்சு என்றெங்கும், ஆனைச்சாத்தன் கலந்து
    பேசின பேச்சரவம் கேட்டிலையோ?
    -ன்னு அன்னிக்கே Tweetஐ = கீச்சு ஆக்கியவள் தோழி கோதை! அதான், இன்னிக்கி இத்தனை Twitter மக்களும் இங்கே = "கீச்சு"கின்றனர்<<<><>>>

    மார்கழிக்கடி இதுதான்:)

    ReplyDelete
  12. இதோ...நாம் அனைவரும் அறிந்த...நாக சொக்கநாதன்!
    Naga S/ எழுத்தாளர் சொக்கன்/ @nchokkan கொடியசைத்து, துவக்கி வைக்கிறார்! கம்பீரமான/வேகமான சொக்கனின் குரலைக் கேளுங்க :))

    <<<<>>
    கேட்டேன் ரொம்ப இயல்பா இருக்கு..மேடை சொற்பொழிவுபோல எந்தவித பந்தாவும் இல்லாமல் அருமையாய் எதார்த்தமாய் இருக்கிறது சொக்கன் அவர்களுக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  13. நேரிழைக்கு விளக்கம் அருமை உங்க பாணில வழக்கம்போல குறும்போட சொல்லி இருக்கீங்க ரசிச்சேன்!!

    ReplyDelete
  14. நல்ல முயற்சி இரவி. கீச்சர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. அருமையான முயற்சி. தமிழ்ப்பாடல்களை அலசிப்பார்ப்பதே ஒரு மகிழ்ச்சி. அதை நம் டுவீட்டர்கள் செய்வது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    நம்ம சொக்கனின் குரலை நிறைய முறை கேட்டிருக்கிறேன். dagaltiயின் விளக்கம் அருமை.
    வாழ்த்துகள் இரவி! :)

    ReplyDelete
  16. அருமையான முயற்சி

    ReplyDelete
  17. vanakam Ravi. Sorry roomba naal achi unga kitta pesi. Ennai ungalukku niyabagam iruka vaipu illa nu nenaikiren. Inga oru chinna marghazhi group nadathurom with family and friends. meendum inga padika vanthen...nalla meel ninaivugal. sorry tamil fond install pannalai. pudhu computer. seekiram install pannikiren. nanri nanri, intha neengatha ninaivugalukku...Vijay

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP