கோதைத்தமிழ்12: SweetHeart @nilaakaalam
மக்கா, இன்னிக்கி திருப்பாவை பேசப் போறது, ஒரு பெண்புலி! பெண்நிபுணி! பெண் FM:)
வேற யாரு? நம்ம @nilaakaalam (எ) நிலா தான்!
அவங்க சும்மா எல்லாம் பேச மாட்டாங்களாம்! ஒவ்வொரு பேச்சுலயும் BGM (எ) பின்னணி இசை இருக்கணுமாம்! அப்போ தான் பேசுவாங்களாம்!
அதுக்காக, இவங்க Podcastக்கு, நான் என்ன இளையராஜா-வையா BGM போடச் சொல்ல முடியும்?:)
கேளுங்க ஒலிக் கோப்பை!
விடிகாலை ஒலி, மாடு கத்தும் ஒலி, இராம-இராவணக் கத்திச் சண்டை ஒலி, எழுந்திருக்கும் ஒலி, காதல் ஒலி-ன்னு...
பின்னணி ஒலிகளோடு...கோதை ஊருக்கே நம்மைக் கூட்டிப் போறாங்க!
இந்தப் பெண்ணின் மிக வித்தியாசமான Podcast! அழகா யோசிச்சிச் செஞ்சி இருக்காங்க! நல்ல மாற்றுச் சிந்தனை!
நிலா நிலா ஓடி வா! நில்லாமல் பேசி வா!
FM Station ஏறி வா! இசை நிலவு கொண்டு வா:)
நன்றி நிலா! நல்ல முயற்சி! எழிலான பேச்சும் ஒலியும்! வாழ்த்துக்கள்!
கனைத்து, இளம் கற்றெருமை, கன்றுக்கு இரங்கி,
நினைத்து, முலை வழியே, நின்று பால் சோர,
நனைத்து, இல்லம் சேறாக்கும்! நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ, நின் வாசற்கடை பற்றிச்,
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற,
மனத்துக்கு இனியானைப் பாடவும், நீ வாய் திறவாய்!
இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேர் உறக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!
மேலோட்டமான பொருள்: கன்னுக்குட்டியைப் பார்த்தவுடன் மனசு இரங்கிப் போய்...எருமை கனைக்கிறது! நினைத்த மாத்திரத்தில் தானாவே பால் வடியுது!
இப்படி வடியும் பால் ஆறாய் ஓடி, வீட்டையே சேறாக்குகிறது! அடியே நற்செல்வன் என்னும் கண்ணனின் ஆருயிர்த் தோழனின் தங்கச்சியே, எழுந்திருடீ!
ஒரே பனி பெய்யுது எங்க தலை மேலே! இருந்தாலும் உன் வீட்டு வாசலில் வந்து உன்னைக் கூப்புடுகிறோம்! எதுக்கு?
இலங்கை வேந்தனைச் சினந்து வென்றவன்! அவன் தானே நமக்கு Sweet Heart? அவனைப் பாடும் ஒலி கேட்டுமா நீ வீட்டைத் திறக்கலை?
அப்படியென்ன ஒரு பெரிய தூக்கம்? அக்கம் பக்கத்து வீட்டுக்கெல்லாம் உன் தூங்குமூஞ்சிப் புராணம் தெரிவதற்குள் எழுந்து, எங்களோடு வாடீ!
இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = மனத்துக்கினியான்!
Sweet Heart என்று காதலில் கொஞ்சுகிறோமே? அதுக்கு நல்ல மொழியாக்கம் என்ன? தமிழைப் படுத்தாத தமிழ்ப்படுத்தல் என்ன?:)
கோதை ஒரு நல்ல மொழியாளர்! மிக அழகான சொல்லாக்கம் தருபவள்! இதோ தருகிறாள் பாருங்கள்! Sweet Heart = மனத்துக்கினியான்!
அடுத்த இரண்டு நாளும், தானியங்கிப் பதிவுகள்! Posts & Tweets are scheduled:) வர்ட்டா?:)

குதிரை கனைக்கும் என்று படித்திருக்கிறோம். எருமை எழுப்பும் ஒலியும் கனைப்பு தானா?
ReplyDeleteபின்னணி ஒலிகளோடு நல்ல பதிவு, நிலா. வாழ்த்துகள்!
ReplyDeleteமனத்துக்கினியான் என்று சொல்லும்போதே கற்கண்டுச் சுவையை நாவில் உணர முடிகிறது. Definitely Krishna is a sweet Heart only :) மதுராவிற்கு கம்சனால் கண்ணன் அழைத்து வரப்பட்ட பொழுது, தேவகிக்கும் கண்ணன் வருவது தெரிந்து அவள் முலைகள் தானாகவே பாலை சொரிந்தன. அப்போ கண்ணனுக்கு பத்து வயது இருக்கலாம் என்று நினைக்கிறேன். அவள் தாய்பால் கொடுத்து இன்புறவில்லை. அதனால் அவனை பார்க்கப் போகும் இன்பத்தை நினைத்து இந்த பசுக்களை போலவே அவள் முலைகளும் பாலை சொரிந்தன. yashodha's gain was Devaki's loss.
amas32
@வேங்கட ஸ்ரீனிவாசன்
ReplyDeleteமனிதன் கூட அப்பப்போ தொண்டையைக் கனைக்கிறானே, பாடுவதற்கு முன்பு!:)
பொதுவா குதிரை = கனைக்கும் (Horses Neigh)
ஆனா,பிற விலங்குகளும் அந்த ஒலியை எழுப்ப வல்லவை! ஆனா குதிரை மட்டுமே எப்போதும் எழுப்ப வல்லது!
காலை வேளையில் அதிகம் கத்தாம, வீட்டு மனிதர்கள் தூக்கம் கெடாம, Shorter Intervalsல, ஒலி எழுப்புது போல எருமை!:) அதான் "கனைப்பு"
சோருதல், செறுத்தல், கோமான் போன்ற அருஞ்சொற்களை விட்டு விட்டீர்களே?
ReplyDelete"நற்செல்வன் தங்காய்"
-சில பேர் நற்செல்வன் நங்காய் என்று பாடுகிறார்கள்.
பேருறக்கம் பெரிய தூக்கம் என்றும்
தூக்கம் வராவிட்டாலும் பெயருக்கு உறங்கும் உறக்கம் என்றும் சொல்லலாம்.
நன்றி ரவி.
ReplyDelete//காலை வேளையில் அதிகம் கத்தாம, வீட்டு மனிதர்கள் தூக்கம் கெடாம, Shorter Intervalsல, ஒலி எழுப்புது போல எருமை!:) அதான் "கனைப்பு"//
So, if we "neigh", we'll be known as a good neighbor. Isn't it?
இனிமையான குரலில் இனிப்பான திருப்பாவை பாடக்கேட்க கசக்குமா என்ன??
ReplyDeleteமனதுக்கினியான்- அருமையான விளக்கம்.
அருமை! அருமை!
ReplyDeleteஎனக்கும் இந்த அரிய வாய்ப்பளிதத தம்பி கே.ஆர்.எஸ்'க்கு மிக்க நன்றி!! :)
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி amas அவர்களே!! :)
ReplyDeleteநன்றி கடம்பவன குயில் & குமரன் அவர்களே.. :)
ReplyDelete//கன்னுக்குட்டியைப் பார்த்தவுடன் மனசு இரங்கிப் போய்...எருமை கனைக்கிறது! நினைத்த மாத்திரத்தில் தானாவே பால் வடியுது!//
ReplyDeleteஇதுக்கு இன்னும்கூட ஒண்ணு சொல்லுவாங்க.
பசுமாடு கன்னுக்குட்டியைப் பார்த்தா தான் பால் சுரக்கும் (hence the stuffed கன்னுக்குட்டி) ஆனா எருமை அது இல்லாமையே சுரக்கும்னு சொல்லுவாங்க. உண்மையான்னு வெவரம் தெரிஞ்சவங்க சொல்லலாம்.
அதுனாலதான் 'கற்று கறவை கணங்கள்'னு பாடின ஆண்டாள் 'நினைத்து முலைவழியே நின்று பால்சோர'ன்னு பாடினதா சொல்லுவாங்க.
'அருள் பொழிபவர் தானே நினைத்து அருள் பொழிவது போல'ன்னு அர்த்தப்படுத்திக்கலாம்.
//நனைத்து இல்லம் சேறாக்கும்// என்ன ஒரு இமேஜரி!
//yashodha's gain was Devaki's loss. //
amas, you may know this already - there is a decad of poems by kulasEkara aazhwAr where he writes as Devaki ruing about her loss and yasOdhA's gain. Extremely poignant ones.
//yashodha's gain was Devaki's loss.
அருமையான குரல் மற்றும் பின்னணி இசையில் ஒரு நல்ல விளக்கம். நன்றி. :)
ReplyDeleteநன்றி பலராமன் அவர்களே.. :)
ReplyDeleteவெகு நிதானமான நடை, நன்று
ReplyDeleteஅட.. டா.. நிலா.. நான் இப்பத்தான் வூட்டுக்கு வந்தேன்.. வந்தவுடனே.. கேட்டேன்.. , ஆத்தா.., நீ பாட்டுக்கு வித் பாக் கிரௌண்ட் மியூசிக் போட்டுட்டே..!! நாங்களும் லைன்ல இருக்கோம்.... இப்படிதெரிஞ்சா மொத்தம் முப்பது பாட்டையும் நிலாவையே பாட சொல்லிருக்கலாம். அருமை.. நிலா அருமை..!
ReplyDeleteநாச்சியார் திருமொழி எப்போ Dear KRS...!??
மிக்க நன்றி கானா பிரபா & ஆனந்த் அண்ணா.. :)
ReplyDeleteகாலம் கடந்து பார்க்க, படிக்க, கேட்க நேர்ந்தாலும், என்றென்றும் இனிமை மாறாமல் தந்துள்ள நிலாகாலதிற்கும் ரவிக்கும் நன்றி. வாழ்க நிம் பணி. சிறக்கட்டும் உங்கள் முயற்சி.
ReplyDelete