Sunday, December 18, 2011

கோதைத்தமிழ்03: கயல்-உகள @MayilSenthil

வாங்க மக்கா, இன்னிக்கி ட்விட்டர் குல திலகம், ராஜா ரசிகன், மயிலேறும் பெருமாள்- @MayilSenthil கோதைத்தமிழ் பற்றிப் பேசுறாருங்கோ!:)

இதை, அம்மா-அப்பாவிடமெல்லாம் போட்டுக் காட்டி, வாழ்க்கையில் மொத முறையா நல்ல பேரு வாங்கிக் கொண்ட மயில் செந்திலின் குரலில், கேட்டு + கண்டு மகிழுங்கள்! :)


ஏயப்பா...என்னமாப் படங் காட்டுறாரு! அன்னாரின் soundcloud இங்கே! அவர் தேன் குரலைத் தரவிறக்கிக் கொள்ள விரும்புவோர்க்கு:) நயம்பட உரைத்தமைக்கு நன்றி மயிலு!:)இன்றைய பாசுரம், மிகவும் மங்களகரமான பாசுரம்!
நாங்க சைவக் குடும்பமாய் இருந்தாலும், மணமக்கள் சபையில் விழுந்து வணங்கும் போது, கிராமத்துப் பெரியங்க இந்தப் பாசுரத்தைச் சொல்லியே வாழ்த்துவாங்க! - நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

ஓங்கி உலகளந்த உத்தமன், "பேர்" பாடி,
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து,
ஓங்கு பெரும் செந் நெல் ஊடு கயல் உகளப்
,பூங் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்!
நீங்காத செல்வம் நிறைந்து ஏல்-ஓர் எம் பாவாய்!

மேலோட்டமான பொருள்: முன்னொருகால், குள்ளமாய் இருந்து, பின்பு ஓங்கி உலகளந்தாரு ஒருத்தரு!
அப்போ, உலகத்தில் உள்ள நம்ம அத்தனை பேரையும் ஒரு Surveyor போல் அளந்து, தன் பொருளை(நம்மை) தனக்கே சொந்தமாக்கிக்கிட்டாராம்!

அவன் பேரைச் சொல்லிக் கொண்டே, குளிர்-ல்ல கதகத-ன்னு குளிப்போமா?
'ஏய், உன் காதலுக்கு நாங்க ஏன்டி குளிர்ல குளிக்கணும்'?-ன்னு கேக்காதீக! இது நோன்பு-டீ! இப்படிச் செஞ்சா...

நல்ல மழை பொழியும், மழை வளத்தால் வயல் நிரம்பும்
நெல் வயல் தண்ணியில் மீனும் துள்ளும்-ன்னா பாத்துக்கோங்களேன்!
(Extra Bit: கடல் மீனை விட, ஆற்று மீன்/ வயல் மீனின் சுவையே சுவை:)

குவளைப் பூவில், பொறிவண்டு, குடிச்சிட்டுப் படுத்துக் கிடக்குது!
பசுக்கள் பாலைத் தேக்காமல், சும்மா ஒரு இழு இழுத்தவுடனேயே, குடம் முழுக்க நிறைஞ்சிரும்!
தனக்கு இல்லீன்னாலும், ஊருக்கே குடுக்கும் உண்மையான வள்ளல்=பசுக்கள்!

இப்படியான 1. மழை வளம், 2. உணவு வளம், 3. பொருள் வளம், 4. மன வளம் எல்லாம் பெருகும்! நீங்காத செல்வம் நிறையும் எம்பாவாய்!இன்றைய அழகான சொல் = ஊடு+கயல்+ உகள

அது என்ன "உகள"? பொருளை விடுங்க! உகள-ன்னு சொல்லும் போதே, மீன் அப்படியே கையில் துள்ளி நழுவற feeling வருதுல்ல?:)

* உகள = Leap, தாவுதல்!
மீனுக்குத் தண்ணில தான் மூச்சு!
அதைத் தண்ணியில் இருந்து அரை நொடிக்கு எடுத்தாலும், அது பல விதமாய் எம்பும், எகிறும், தாவும், குதிக்கும், வழுக்கும், நழுவும்!
கழுவுற மீன்-ல நழுவுற மீன்-ன்னு சொல்வோமே! அதே தான்!:)

எம்பும், எகிறும், தாவும், குதிக்கும், வழுக்கும், நழுவும்
= இத்தனைக்கும் ஒரே எழிலான தமிழ்ச் சொல் = "உகள"!


கோல நன் னாகுகள் உகளு மாலோ!
கொடியென குழல்கள் குழறுமாலோ!
மல்லிகை அலம்பி வண்டு ஆலுமாலோ!!
- இப்படியெல்லாம் அழகான தமிழ்ச் சொற்கள், ஆழ்வார்கள் அருளிச் செயலிலே கொட்டிக் கிடக்கும்!

ஆண்டாளின் இந்தப் பாட்டையே பாருங்க! இன்னும் நிறைய இருக்கு! "தினம்-ஒரு-சொல்" என்பதால் ஒன்னோட நிறுத்திட்டேன்:)
பூங்குவளைப் போது, பொறி வண்டு, சீர்த்த முலை, வள்ளல் பசு, நீங்காத செல்வம்!

அதென்ன "நீங்காத செல்வம்"? செல்வம்-ன்னாலே நீங்குறது தானே? செல்வம், செல்வம், செல்வோம்-ன்னு நகர்ந்து கொண்டே இருப்பது தான் பணம்! Cash"Flow"!
= அப்பறம் என்ன நீங்காத செல்வம்? யோசிங்க:) வர்ட்டா?:)

நாளைய குரல், podcasted by a perfect singer on twitter:)

12 comments:

 1. திரு மயில்செந்தில் அவர்களே, எவ்வளவு தெளிவா, அழகா விளக்குறீங்க! ரொம்ப நன்றி :) இன்று படக் காட்சிகளுடன் பதவுரை கேட்டது மிகவும் அருமை. தினம் யார் வந்து பேசப்போறாங்கன்னு கேட்பதற்கு ரொம்ப ஆவலா இருக்கு. நல்ல முயற்சி. ஒரு வார்த்தைக்கு எவ்வளவு விளக்கம்!
  amas32

  ReplyDelete
 2. கயல் உகள - நல்ல விளக்கம் @mayilsenthil

  ReplyDelete
 3. "நீங்காத செல்வம்" ஞானத்தை தான் குறிக்கிறது என்று நினைக்கிறேன். மற்ற எல்லா செல்வங்களும் நம்மை விட்டு அகல வாய்ப்பு இருக்கிறது அனால் இறைவன் அருளால் நாம் பெரும் ஞானம் என்றும் நம்முடனேயே இருக்கும். இறைவனை பற்றிய எண்ணமே நீங்காத செல்வம்.
  amas32

  ReplyDelete
 4. அருமையான விளக்கம்.. நன்றி..

  ReplyDelete
 5. அருமையான முயற்சி! விளக்கங்களும் அருமையாக வருகின்றன. மார்கழியை தமிழோடு கொண்டாட வைத்ததற்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. @amas32, @dagalti: நன்றி! :)
  adithyasaravana, பூமி: நன்றி! :)

  ReplyDelete
 7. நல்ல ஐடியாவே இருக்கே! ரசித்தேன், கண்ணா.

  ReplyDelete
 8. பேச்சுத் தமிழில் மிக அழகாக சொல்லியிருக்கிறார் மயிலேறும் பெருமாள்! :-) Liked it very much!

  ReplyDelete
 9. @கவிநயா: இரவிசங்கர் ’ஐயா’(;)) எப்பவும் அப்டித்தான் போல?
  @குமரன்: ரொம்ப நன்றி! பயந்துட்டுருந்தேன் எதுனா தப்புசெஞ்சிருப்போமோன்னு. :)

  ReplyDelete
 10. கயல் உகள - nice ...:) thanks

  ReplyDelete
 11. பிரமாதம். விளக்கவுரை ரசித்தேன். பூங்குவளை, அருமை! நீங்காத செல்வம் உகள :)

  ReplyDelete
 12. ரவி! அருமை.
  இலங்கையில் இளமையில் திருமுறைகள் படித்த அளவுக்கு, பிரபந்தம் படிக்கவில்லை. பின் பிரபந்தமும் தமிழ்ச் செழுமைக்குச் சான்று, அவை வைணவ ஆலயங்களில் பூசகர்களால் தினமும் ஓதப்படுகிறது என்பதை இணைய வாயிலாக அறிந்தேன்.
  இப்போது தேடிப் படிக்கிறேன்.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP