Tuesday, December 27, 2011

கோதைத்தமிழ்11: "பொண்டாட்டி" என்றால் என்ன?

மக்கா...இன்று பேச வேண்டிய நம்ம @4SN குழந்தை, As I am Suffering from thoNdai katting-ன்னு விடுப்புக் கடிதம் விடுத்ததால்...
@4SN க்கு இணையான @வேளுக்குடி பேசுவதைச் "சற்றே" கேளுங்கள்:) செஞ்சொற் தமிழ்க் கொண்டல்!




கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறல் அழியச், சென்று செருச் செய்யும்,
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்று அரவு அல்குல் புனமயிலே, போதராய்!


சுற்றத்து, தோழிமார் எல்லாரும் வந்து, நின்
முற்றம் புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட,
சிற்றாதே, பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏல் ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: கன்றை, கறவை மாட்டுக்கு அருகே விட்டு, பால் கறக்கும் ஆயர்கள்....போருக்கும் செல்லக் கூடிய சங்கத்தமிழ் வீரர்கள்!
தங்கள் ஆநிரைகளை எதிரி நாட்டுப் படைகள் கவர்ந்து போகும் போது, வெட்சி/கரந்தைப் பூச்சூடி இந்தப் போர்!

இப்படியான கோவலர்கள் வீட்டுப் பெண்ணே! பாம்பின் படம் போல் அதிசய வளைவுடீ உன் இடுப்பு! அதை ஆட்டி ஆட்டி, எழுந்து வாடீ:)

இத்தனை தோழிகளும் உன் வீட்டின் முற்றத்தில் வந்து நிக்கறோம்-ல்ல? அவனைப் பாடுறோம்-ல்ல? அப்பறம் என்ன இன்னும் தூக்கம் வேண்டிக் கிடக்கு உனக்கு?

சிற்றாதே பேசாதே = முணுமுணுக்காதே, கத்தாதே! பணம் படைத்த பெருந்தனக்காரியே! இப்படித் தூங்கி என்னத்த கண்ட? வா வெளியே! போவோம்...அவனைக் காண!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = பெண்டாட்டி!:)

பொண்டாட்டி என்பது கொச்சை போலவும், மனைவி என்பது தான் நல்ல தமிழ் போலவும், இன்னிக்கி ஒரு மாயத் தோற்றம் வந்துருச்சி! 
ஆனா உண்மையிலேயே பெண்டாட்டி = ஓர் அழகிய தமிழ்ச் சொல்!

பெண்டாட்டி = பெண்டு + ஆட்டி
* பெண்டு = பெண்
* ஆட்டி = ? (ஆட்டி வைப்பதாலா?:))))

=> ஆட்டல் = நிர்வகித்தல்
இல்லத்தை நிர்வாகம் செய்பவள் ஆதலாலே = ஆட்டி!
ஆளுதல்=ஆள், ஆட்டி! ஆளுதல் doesn't always mean rule! ஆளுதல்=நிர்வகித்தல்! முறம் ஆள வசதியா இருக்கு-ன்னு சொல்றோம்-ல்ல? அதான்!

ஆட்டி என்பது ஒரு வகை பெண்பால் விகுதி!
சீமாட்டி, பெருமாட்டி, மகவாட்டி, கோமாட்டி (கோமான்) என்றெல்லாம் பல வகை ஆட்டிகள், தமிழிலே உண்டு!

அதுக்காக குரங்கு+ஆட்டி-ன்னெல்லாம் நீங்க யோசிச்சா, அதுக்கு நான் பொறுப்பில்லை-ப்பா!:) உங்களை நோக்கி, எம்பெருமானின் சக்கரத்தை விட, என் முருகனின் வேலை விட, சக்தி வாய்ந்த பூரிக்கட்டை பறக்கட்டும்:))


இன்றைய பாசுரத்தில்...இன்னும் பல நற்றமிழ்ச் சொற்கள் இருப்பதால், விட மனசில்லாது, சுருக்கமாக் காட்டிச் செல்கிறேன்!

* கற்றுக் கறவை = கன்று + கறவை
* கோவலர் = மாடு + காப்போர் = ஆயர்கள்

* முற்றம் = Itz not a Corridor, But an Inner Court Yard!
வீட்டிற்கு உள்ளே, முன்பக்கத்தில், வானம் பார்த்தபடி, சூழ்ந்து இருக்கும் பகுதி!

* சிற்றாதே-பேசாதே
= முணுமுணுக்காதே-உரக்கவும் பேசாதே!


* அல்குல் = பெண் குறி (அ) மேல்-இடுப்பு (based on context)
Hip = இடுப்பு
Waist = அல்குல்
Therez a difference between Hip & Waist! See Picture!
The Curve between her Hip & Waist is so sexy:) Like the head of the cobra!
So கோதை coins a Beautiful Tamizh Chol = புற்று அரவு அல்குல் புனமயிலே!

நாளைக்கு பேசப் போவது...என்னைத் தம்பி தம்பி-ன்னு ஓட்டும் ஓர் இன்குரல் இசைக்காரி:) வர்ட்டா?

4 comments:

  1. அது என்ன முகில் வண்ணன்?? முகில் என்பது மேகம் தானே...இங்கு மழை பெய்யும் காலத்தையொட்டிய மேகத்தைக் கோதை குறித்தால், தலைவர் கருப்பு(கார்மேக வண்ணன்) ஓகே... ஆனால்,மார்கழி மாசத்தில் முகில் என்பது வெண்மை நிறம்தானே... அதை ஏன் தலைவரோட நிறத்துக்கு ஈடு செய்யுறா கோதை??

    ReplyDelete
  2. @4SN க்கு பதிலா வேளுக்குடியா, பலே!
    பெண்டாட்டி பற்றிய விளக்கம் நன்றாக உள்ளது. பெண்டாட்டி = இல்லத்தரசி. (So சிம்பு தூய தமிழில் தான் பாடியிருக்கார்.)
    இந்த பாசுரத்திலும் அரவு reference வருகிறது. "புற்று அரவு அல்குல் புனமயிலே," KRS, அதற்கும் நல்ல விளக்கம் கொடுத்திருக்கீங்க. நன்றி.
    amas32

    ReplyDelete
  3. இரவி,

    வேளுக்குடியார் சொல்லும் பாசுர விளக்கம் நல்லா இருக்கு. ஆனா அது இந்த திருப்பாவைப் பாசுரத்துக்குத் தானா? வேறு ஏதோ ஒரு பாசுரத்துக்கான விளக்கம் போல இருக்கே. கொஞ்சம் பாருங்க.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP