Wednesday, December 21, 2011

கோதைத்தமிழ்06: Function Overloading @PSankar

இன்னிக்கிப் பேசப் போறவரு ஒரு Techie Guy! ட்விட்டரில் மேலாண்மைக் கருத்துக்களைக் கீச்சுபவர்! @psankar

Android  மணம் கமழுற ஒருத்தரு, தமிழ் மணமும் கமழ, இதோ...கேளுங்க வெங்கலக் குரலை:)
ஆண்டாள் Function Overloading செஞ்சி இருக்காளாம்!
அடிப்பாவி, நீயும் software பொண்ணாடீ? கிழிஞ்சிது போ!:) பேசாம என்னை மாதிரி bankingக்கு வந்துறேன்டீ:)நன்றி சங்கர்! இரத்தினச் சுருக்கமா, கோதைத்தமிழை Techie ஆக்கிய உம்மை மறக்கவே மாட்டேன்:) கல்லூரியில் படித்த C++ க்குச் சென்று விட்டேன்!

function int GenerateRandomNumber(int Value)
{
return rand * Value
}


function int GenerateRandomNumber(int MinValue, int MaxValue)
{
return MinValue + rand * (MaxValue - MinValue)
}

ஒரே பேரு!
ஆனா குடுக்குற குடுப்பைப் பொருத்து, விதவிதமான அமைப்பை உருவாக்கலாம்! அதானே?
தோழி கோதையும் அதைத் தான் பண்ணுறாளோ? :)

function string அரவம்(சங்கு)
{
return சத்தம்
}


function string அரவம்(கடல்)
{
return பாம்பு
}

:))
ஐயோ...என்னை அடிக்க வராதீங்க! சும்மா பழைய ஆர்வத்தில் Try பண்ணேன்! எதுனா ஒரு compilerல compile பண்ணிக்கோங்க ராசாக்களா/ ராணிகளா:))


புள்ளும் சிலம்பின காண்! புள் அரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய் முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி,

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து, "அரி" என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து, குளிர்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: பறைவைகள் கீச்சத் துவங்கியாச்சு! பறவையரசன் கருடன் கோயில்ல, சங்கு ஊதுற சத்தம் உன் காதுக்கு கேட்கலயா? எழுந்திருடீ!

பூதகி என்னும் பேயிடம் பால் குடிச்சவன்; சகடம் என்னும் சக்கரமாய் வந்த அரக்கனை அடக்கியவன்!
பாற்கடல் வெள்ளத்தில் துயில் அமர்ந்தவன்! = "அமர்ந்தவன்"? = உட்கார்ந்து கிட்டே தூங்குவாரோ ஒங்க பெருமாள்?:))

அவனை உள்ளத்தில் ஏந்திக் கொண்டு, சான்றோர்கள், "அரி அரி" என்று சொல்லியவாறு செல்கின்றார்களே!
அந்தச் சத்தம், நம் உள்ளத்தில் போய், ஒரு குளிர்ந்த தன்மையைக் குடுக்குதே! எழுந்துரு செல்லம், எழுந்துரு!:)


இன்றைய எழிலான சொல் = ஓச்சி!

ஓச்சுதல்-ன்னா என்ன? இராசராச சோழன் கோலோச்சினான்-ன்னு படிப்போம்-ல்ல? = செங்கோலை ஓச்சுதல்!
* சோழன் கோல் ஓச்சினான்
* கண்ணன் கால் ஓச்சினான்

ஓச்சுதல் = உயர்வு/ எழுச்சி
செங்கோலை உயரத் தூக்கிப் பிடித்து அரசாளுதல் = (செங்) கோல் ஓச்சுதல்!
அதே போல் கண்ணன், காலை உசரத் தூக்கி, மாய அரக்கன்-சக்கர உருவில் வந்தவனின் மேலத் தன் காலை வச்சான்-ன்னு பாடுறா தோழி!

அடுத்த தபா, யாராச்சும் ரொம்பவே அலட்டினாங்க-ன்னா, என்னடா, ரொம்பத் தான் ஓச்சுற?-ன்னு தாராளமாக் கேட்கலாம்:)
ஆண்டொரு கணிச்சியை அவுணன் ஓச்சினான்-ன்னு கந்த புராணத்தில் இன்னொருத்தரு பாடுவாரு! பொருள் என்னைய கேக்காதீக! கண்டிப்பாக 18+ :)

நாளைக்கு Podcast = நாடறிஞ்ச நாத்திகர்!:))) வர்ட்டா?

9 comments:

 1. கண்ணபிரான் தன்னை அழிக்க வந்த அரக்கன் மீது காலை வைக்கிறார். புண்ணியம் செய்த அந்த அரக்கனும் அவரின் பட்டுப் போன்றத் திருப்பாதம் பட்டு அவரிடமே லயித்து விடுகின்றான்.
  திருமால் அரிதுயில் கொள்கிறவர். எல்லாவற்றையும் பார்த்துகொண்டு சாட்சியாக இருக்கிறார். அமர்ந்தும் உறங்குவது போல் பாவனை செய்வார், அரவில் படுத்தும் அதே!
  KRS, நீங்க நேற்று "பேசுவது" என்பதற்கு பல வார்த்தைகளை எழுதியிருந்தீர்கள். புகழுவதற்கும் கொஞ்சம் போட்டீர்களானால் வசதியாக இருக்கும். தினம் வந்து நம்மிடையே பக்தியை வளர்க்கும் இவர்களை புகழ என்னிடம் வார்த்தைகளே இல்லை :-)
  சங்கர், to the point சொல்லியிருக்கிறீர்கள். ரொம்ப நன்றாக இருக்கு, வாழ்த்துகள்!
  amas32

  ReplyDelete
 2. அரவம்ங்கற சொல் ஆண்டாளுக்கு ரொம்ப பிடிக்குமோ? தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கிறா? அதுவும் பேரரவம்! :-)

  ReplyDelete
 3. //அரவம்ங்கற சொல் ஆண்டாளுக்கு ரொம்ப பிடிக்குமோ? தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கிறா? அதுவும் பேரரவம்!//

  நேற்று தமிழில் “செப்பி”யவுடன் தெலுங்குப் பெண் என்று நினைக்காதே, நான் “அரவுடு” தான் என்று சொல்கிறாளோ?
  :-)

  ReplyDelete
 4. ரவி, தமிழ்மணப் பட்டையை காணவில்லையே? (ஓட்டு போட முடியவில்லை)

  ReplyDelete
 5. @குமரன்
  //அரவம்ங்கற சொல் ஆண்டாளுக்கு ரொம்ப பிடிக்குமோ?//

  ஆமா:)
  இந்தப் பாட்டில்
  1. வெள்ளை விளி சங்கின் பேரரவம்
  2. மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

  அடுத்த பாட்டில்
  3. பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
  4. ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ

  ReplyDelete
 6. வேங்கட ஸ்ரீனிவாசன் - நன்றிங்க! It took long to load tamizhmanam services yday; So took it off; now put it back:)

  ReplyDelete
 7. .. வேங்கட ஸ்ரீனிவாசன் said...
  //அரவம்ங்கற சொல் ஆண்டாளுக்கு ரொம்ப பிடிக்குமோ? தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கிறா? அதுவும் பேரரவம்!//

  நேற்று தமிழில் “செப்பி”யவுடன் தெலுங்குப் பெண் என்று நினைக்காதே, நான் “அரவுடு” தான் என்று சொல்கிறாளோ?
  :-)

  <<<<<


  நானும் இப்படித்தான் நினச்சேன்ள்:)

  நல்ல விளக்கம் .

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP