கோதைத்தமிழ்16: மலையாள நென்னல் @ThirumaranT
மக்கா, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
முன்பு 2012 ன்னு படம் வந்துச்சு! இப்ப 2012யே வந்துருச்சி:)
முருகனருளால், இப்புத்தாண்டு, அனைவருக்கும் நிம்மதி என்கிற பேரின்பத்தைக் கொண்டு வந்து சேர்க்கட்டும்!
ஒவ்வொரு ஆண்டின் முதல் நாளும், British ஆபீசர்களுக்கு என்ன வணக்கம் சொல்வது? நாம, நம்மவனுக்கு வாழ்த்து சொல்லுவோம்-ன்னு துவங்கியதே = Jan 1st திருத்தணிப் படிப்பூசை!
இன்றும் விடாமல் நடக்கும் விழா! ஆங்கிலப் புத்தாண்டு விழா, தமிழ்க் கடவுள் முருகனுக்கு!:)
மார்கழியைத் தொடர்வோமா? இன்னிக்கு பேசப் போவது Amsterdam Arignar!
யாரு? ஒரு விகடனாரைக் முகப்பில் கொண்ட விகடனார் = நம்ம திருமாறன் aka @ThirumaranT
நல்ல தமிழ் ஆர்வலர், ட்விட்டர் தமிழ் முயற்சிகளில் நல்ல புரிதல் உள்ளவர்! என்ன சொல்றாரு-ன்னு கேளுங்க! இதோ...
All thozhis have finished giving missed calls to each other & now assembled in front of Kannan Mall:)
நன்றி திருமாறன்! புத்தாண்டு அதுவுமா உங்க Podcast! உங்கள் சார்பாகவும் வாசகர்களுக்கு இனிய 2012 வாழ்த்துக்கள்!:)
இன்றிலிருந்து 2nd half of திருப்பாவை! அடுத்த 15 பாடல்கள்!
சென்ற பாட்டோடு,
* காலையில் எழுந்து, பெருமாளே-ன்னு சொல்லியாச்!
* ஊர் நல்லா இருக்க மழை வேணும்-ன்னு வேண்டியாச்!
* எல்லா வகையான பெண்களையும் எழுப்பியாச்!
* எல்லாரும் நோன்பில்!
* குள்ளக் குளிரக் குடைந்து நீராடியாச்!
* புறத் தூய்மை-அகத் தூய்மை ரெண்டும் பண்ணிக்கிட்டாச்!
* நேரே கண்ணன் வீட்டுக்கு!!
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக் கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமியரோமுக்கு, அறை பறை
மாயன் மணி வண்ணன், நென்னலே வாய் நேர்ந்தான்!
தூயோமாய் வந்தோம்! துயில் எழப் பாடுவான்!
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக் கதவம் நீக்கு! ஏல்-ஒர் எம் பாவாய்!
மேலோட்டமான பொருள்: எங்கள் ஊருக்கே நாயகன் = நந்தகோபன்! கூர்வேல் கொடுந்தொழிலன்! கண்ணனின் அப்பா! அவரு தான் ஊர்த் தலைவரு!
அவர் வீட்டைக் காவல் காக்கும் வீரர்களே, உங்களுக்கு வணக்கம்! கதவைத் திறங்கோள்!
எங்களை நேராப் பார்த்து, பறை என்னும் நோன்புச் சாமான் தருவதாக, கண்ணன் நேற்றே வாக்களித்து விட்டான்!
அதனால் நாங்களும் தூய்மையா வந்து, துயில் எழப் பாடுகிறோம்!
சாக்கு போக்கு எதுவும் சொல்லாமல், காவல் வீரர்களே, அவன் கதவைத் திறங்கோள்!
அவன் கதவே நேசக் கதவு! பாசக் கதவு! அதைத் திறந்து, எங்களை அவனுக்குக் காட்டுங்கள்!
இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = நென்னல்
நெருநல் என்பதன் திரிபு = நென்னல்! (மரூஉ மொழி, மருவிய மொழி)
"நெருநல்" உளன் ஒருவன், இன்று இல்லை என்னும்
பெருமை படைத்து இவ்வுலகு - ன்னு குறள்!
* நென்னல் = நேற்று!
நம்ம அண்டை வீடான மலையாளத்தில், நென்னலே-வை, இன்னலெ என்று, இன்னிக்கும் புழங்குகிறார்கள்!
* நேற்று = இன்னெல்
* இன்று = இன்னு
* நாளை = நாள
அதே போல்
* ஓர்ந்து (நினைத்து - ஓர்மையாச்சோ)
* விளி (அழைப்பு - அவள் விளிக்குன்னு)
* நோக்கு (பார்த்தல் - அவன் நோக்கியான்)
* புறம் (வெளியே - ஆயாளு புறத்துப் போயி)
* பறைதல் (சொல்லு,பேசு - எந்தா பறைஞ்சு)
இப்படி, நாம மறந்து போன தமிழ் கூட மலையாளத்தில் இருக்கு!:)
இப்படியான பண்பாட்டு ஒற்றுமை இருந்தும், வீண் மனத்தாபங்கள்!
அணையால் அணைக்க வேணாமா? புத்தாண்டில் புரிதல் வரட்டும்!
------
இந்தப் பாசுரத்தில் "தாள்"-ன்னு இருக்கு பாருங்க! = மணிக்கதவம் தாள் திறவாய்!
இலக்கிய வழக்கோ, பொது வழக்கோ...தாழ்-தாள் இரண்டுமே சரி தான்! பூட்டும் Pin/Latchஐக் குறிப்பவை!
பூங்கதவே 'தாள்' திறவாய் என்ற வைரமுத்து பாட்டும் சரியே!:)
அகராதியில் இருந்து...
தாள் = (புறநானாறு. 395).
Bolt, bar, latch; தாழ்ப்பாள். தம்மதி தாந்திறப்பர் தாள் (பு. வெ. 9, 24). Wooden catch turning on a central screw that fastens a pair of shutters; கொய்யாக்கட்டை.
15. Pin that holds a tenon in a mortise; மூட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும்
தாள் போடு = காலைப் போடு-ன்னு எல்லாம் டபுள் மீனிங் எடுத்துக்கிட்டு....
நமக்குப் பிடிக்கல-ங்கிற ஒரே காரணத்துக்காக எல்லாம்.....
தமிழ்ச் சொற்களை, மொழியை விட்டே துரத்தி விட முடியாது:)
அதே போலத் தான் வாழ்த்துக்கள்!
விண்ணோடும் மண்ணோடும் உடுக்களோடும்…உடுக்கள்=நட்சத்திரங்கள்! அதே போல் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்/ வாழ்த்துகள் இரண்டும் சரியான பயன்பாடே!
வாழ்த்து+க்+கள் - கள்ளைக் குடிங்க-ன்னு எல்லாம் டபுள் மீனிங் எடுத்தா, மொழியில் பாதிச் சொல்லைத் துரத்த வேண்டி இருக்கும்!:))
ஒரு மொழியில் சொல் உருவாவது, கரு உருவாவது போல!
பார்த்தீங்க-ல்ல, மலையாளத்தில் எப்படிச் செந்தமிழ்ச் சொற்கள் இருக்கு-ன்னு?:)
நம் அறியாமையால், இருக்கும் தமிழ்ச் சொற்களை எல்லாம், நாமே புறம் தள்ளி விடக் கூடாது! அந்தப் புரிதல் வரவேண்டும்!
* நெருநல் - நென்னல் = New Years Eve
* இன்று = Happy New Year 2012! புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

திருமாறன், குரலை தெரியப் படுத்தி விட்டீர்கள், முகத்தை தான் காட்ட வேண்டும் :) நல்லா பேசியிருக்கீங்க, வாழ்த்துகள!
ReplyDeleteஇன்னிக்கு பதினாறாம் நாள் பாசுரம். ஊர் நல்லா இருக்க மழை வேண்டினோம். நல்ல மழை காலையிலேயே!
பெரிய மனிதர்கள் வீட்டிற்குச் சென்றால் வாயில் காப்போன் அல்லது அவரின் உதவியாளர் உங்களை வரச் சொல்லியிருந்தாரா என்று தான் முதலில் கேட்பார். அதைத் தான் இங்கே ஆண்டாள் முதலிலேயே வாயில் காப்போனிடம் சொல்லிவிடுகிறாள். நேற்றே வாக்கு கொடுத்து விட்டார் இன்று எங்களுக்கு பறை தருவதாக, அதனால் தான் வந்திருக்கிறோம் கதவை திற என்கிறாள்.
நேச நிலைக்கதவம் திறவேலோ என்கிறாள். எவ்வளவு அருமையான ஒரு எண்ணம்! மனக் கதவை திறந்து நேசத்தை வெளியே விட்டால் அன்புப் பிரவாகம் தான். அதன் பின் அனைவரிடமும் வேற்றுமை இன்றி ஒற்றுமை தான். ஆண்டாள் திருவடிகள் பணிந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கிறேன்.
amas32
இப்படி, நாம மறந்து போன தமிழ் கூட மலையாளத்தில் இருக்கு!:)
ReplyDeleteஇப்படியான பண்பாட்டு ஒற்றுமை இருந்தும், வீண் மனத்தாபங்கள்!
அணையால் அணைக்க வேணாமா? புத்தாண்டில் புரிதல் வரட்டும்!
நம் அனைவரின் பிரார்த்தனையும் நிறைவேறட்டும்..
அருமையான படமும் விளக்கமும் பாசுரத்தை கண்முன் நிகழ்த்திக்காட்டின.
ReplyDeleteபாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
ReplyDeleteவாழ்க வளமுடன்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், தினமும் திருப்பாவை படித்துக்கொண்டிருக்கிறேன்.
ReplyDelete@amas நன்றி அம்மா...உங்கள் விளக்கமும் அருமை
ReplyDeleteநென்னல் என்பது நின்னே என்று கன்னடத்திலும் இன்றும் வழங்குகிறது.
ReplyDeleteபிறகு ஒரு விஷயம். சில விஷயங்களை உங்கள் கருத்தாகக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.
வாழ்த்துக்கள் என்று எழுதுவதற்கு உடுக்களை எடுத்துக்காட்டுகின்றீர்கள்.
உடு - ஒருமை
உடுக்கள் - பன்மை
அப்படியானால் மாடு, வீடு, காடு, ஓடு ஆகிய சொற்களின் பன்மை என்ன? மாடுக்கள், வீடுக்கள், காடுக்கள், ஓடுக்கள் என்று எழுதலாமா?
ஆனால் மடு? மடுகல் அல்ல. மடுக்கள்.
நீங்கள் இலக்கணம் தெரியாமல் யாராவது தூத்துக்குடியிலிருந்து சொன்னாலும் தொல்காப்பியம் காட்டுகின்றவர். இதற்கும் தொல்காப்பியத்தில் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும்.
நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDelete@திருமாறன்: அருமையான விளக்கம். நிறுத்தி இடைவேளை விட்டு அழகா பேசியிருக்கீங்க. :)
@இரவி சங்கர்: இந்த பாவை இணைய ஊடகபரப்பு என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்!
@G.Raghavan
என் புரிதலின் படி குற்றியலுகரம் பின் வரும் வல்லினத்துக்கு ஒற்று மிகும், மற்ற உகரங்களுக்கு ஒற்று மிகாது. சரியா @kryes?
கருத்துக்கு நன்றி பலராமன் :)
ReplyDelete//வாழ்த்துக்கள் என்று எழுதுவதற்கு உடுக்களை எடுத்துக்காட்டுகின்றீர்கள்//
ReplyDeleteஉடு - ஒருமை
உடு~க்கள் - பன்மை
வாழ்த்து = ஒருமை
வாழ்த்து~க்கள் = பன்மை
//அப்படியானால் மாடு, வீடு, காடு, ஓடு ஆகிய சொற்களின் பன்மை என்ன? மாடுக்கள், வீடுக்கள், காடுக்கள், ஓடுக்கள் என்று எழுதலாமா?//
கூடாது! யானைக்கு எர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் அல்ல:)
Can=Cans! Man=Mans என்றா கேட்க முடியும்?:) Man=Men!
மைனா = மைனாக்கள்! பேனா = பேனாக்கள்!
மைனாகள், பேனாகள்-ன்னு இதே போல் பலரும் கேட்கலாமே?:)
ஒன்றுக்கு ஆகி வருவது, அனைத்துக்குமே ஆகி வராது!
* எழுத்துகள், எழுத்துக்கள் - இரண்டுமே சரி தான்! (பார்க்க, தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம்)
* வாழ்த்துகள், வாழ்த்துக்கள் - இரண்டுமே சரியான பயன்பாடு தான்!
* தாழ், தாள் - இரண்டுமே சரியான பயன்பாடு தான்!
- இதை மட்டுமே சொல்ல வந்தேன்! நமக்குச் சரிவரத் தெரியாததால், இவற்றை மொழியில் இருந்தே விரட்டி விட முடியாது என்று மட்டுமே சொல்ல வந்தேன்!
முது பெரும் தமிழ் அறிஞர், இராம.கி ஐயா, வாழ்த்துக்கள் என்று புழங்குவதையும் பாருங்கள்!
http://madhavipanthal.blogspot.com/2011/09/satellitecity.html?showComment=1321319352599#c5215761088802503310
இல்லையில்லை! வாழ்த்துக்கள் - தவறு தான் என்பவர்கள்.....
ஏன் தவறு? எந்த இலக்கண விதி? என்று தொல்காப்பியத்தில்/ நன்னூலில் இருந்து, இருந்து தரவுகளைக் குடுங்களேன்!
ஒரு பொருளை ஆதாரம் இல்லாமல் கூட ஏற்கலாம்!
ஆனால் ஆதாரமே இல்லாமல், ஒன்றை நிராகரிக்க முடியாது!
குற்றவாளிகள் தப்பலாம்! ஆனால் நிரபராதிகள் தண்டிக்கப்படவே கூடாது!
- இதுவே தமிழ்வழி!
வாழ்த்துக்கள்/ எழுத்துக்கள் என்று இலக்கியங்களில் உள்ளன!
இலக்கியம் தவறு என்றால், இலக்கணமே சரி என்றால்....இலக்கணத்தின் "எந்த விதிப்படி தவறு" என்றும் சொல்ல வேண்டுவதே சால்பு அல்லவா! நீங்கள் அறியாததா?:)
@Balaraman குற்றியலுகரம் என்றால் கு,சு,டு,து,பு,று ஆகியவை தானே.. அப்படியே பார்த்தாலும், காடு என்பதன் உகரம் குற்றியலுகரமே. ஆனால், அதைக் காடுக்கள் என்று சொல்லமுடியாதே..."குற்றியலுகரம் பின் வரும் வல்லினத்துக்கு ஒற்று மிகும்" என்ற விதி இங்கு அடிபட்டு விடுகிறதே..
ReplyDeleteதிருமாறன். மிக நல்ல பேச்சு. இரண்டு இடங்களில் எப்படி இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம் என்று அருமையாகச் சொன்னீர்கள்.
ReplyDeleteராகவா & @balaraman, @bala
ReplyDeleteஇந்த “க்கள்” பன்மை விகுதி பத்தி, இன்னோரு நாள் விரிவா, தொல்காப்பியம் / நன்னூலில் இருந்து சொல்லுறேன்!
வாழ்த்துக்கள், எழுத்துக்கள் தவறு-ன்னு இணையத்தில் அவசரக் கோலத்தில் இதை அணுகி விட்டார்கள்!
புழுக்கள், பசுக்கள், குருக்கள், உடுக்கள், வாழ்த்துக்கள், எழுத்துக்கள்
= புழுகள், பசுகள், குருகள்-ன்னு சொல்லிப் பாருங்க:)
அதுக்காக வீடுக்கள்-ன்னு சொல்லலாமா?-ன்னு கேக்கக் கூடாது:)) வீடுகள் தான்!
Can=Cans; Man=Mans?:) Man=Men
இதுக்குப் பேரு தான் = “மரபியல்”
வீடு=நெடில் ஒட்டி வந்த உ; அதனால் வீடுகள்
புழு=குறில் ஒட்டி வந்த உ; அதனால் புழுக்கள்
முத்து, வாழ்த்து, எழுத்து = மெய் ஒட்டி வந்த உ; அதனால் முத்துக்கள், வாழ்த்துக்கள், எழுத்துக்கள்
புழு-க்-கள் = புழுவின் கள் = சைனீஸ் சூப்-ன்னு அர்த்தம் பண்ணிக்கலாம்:))
விளையாட்டுக்கு வேணும்-ன்னா உதுவுமே தவிர, “தமிழ் மரபியலுக்கு” அல்ல!:))
————-
நச்சினார்க்கினியர் உரையை எடுத்துப் பார்த்தால் தெரியும்; வாழ்த்துக்கள், எழுத்துக்கள் -ன்னு சரளமாப் புழங்குவாரு!
தொல்காப்பிய உரையாசிரியர்கள் நச்சினார்க்கினியர், இளம்பூரணர், இவங்கெல்லாம் “எழுத்துக்கள்”-ன்னே பல இடங்களில் எழுதறாங்க!
நீங்களே மொத்த நச்சினார்க்கினியரையும் வாசிச்சிப் பாருங்க...எத்தனை முறை "எழுத்துக்கள்" ன்னு பயன்படுத்தறாரு-ன்னு தெரிந்து கொள்வீர்கள்
http://tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=1&pno=1
ஆனானப்பட்ட தொல்காப்பிய உரையாசிரியர் இலக்கணப் பிழை பண்ணிட்டாரு-ன்னு சொல்வோமா?:)))
“மொழி மரபியலை”, நம் விருப்பத்துக்கேற்ப அணுகாமல், பொறுமையோடு அணுகிப் பார்த்தா, புலப்படும்!
பருக பருக அமுதமாய் உள்ளது. நன்றி ரவி. வாழ்க வளர்க நிம் பணி
ReplyDelete