கோதைத்தமிழ்17: நீ என்ன பெரிய கொம்பனா?
மக்கா, இன்னைக்கு பேசுபவருக்குத் தொண்டை கட்டி விட்டது! நேற்றைய New Year Party அப்படி:)
அதனால் இன்றைய Podcast-இல் நீங்களே வாய் விட்டுப் பேசிக் கொள்ளவும்:))
முக்கியமா ஒன்னு சொல்லணும்! இந்தப் பொண்ணுங்க, நேற்றைய பாட்டில் = வாயில் காப்போனைப் பாடினாங்களா? (அ) எழுப்பினாங்களா?
"எழுப்பினாங்க"-ன்னு சொன்னா, அப்பவே காவல்காரர்கள் பணியில் தூங்குற வழக்கம் இருந்திருக்கோ?:)
எதுக்கும் பழைய பாட்டை ஒரு தபா, look விட்டுருங்க!:) எழுந்திராய்-ன்னே வராது! தாள் திறவாய்-ன்னு மட்டுமே வரும்! பரவாயில்லை, Good Watchman of the Day:)
அம்பரமே, தண்ணீரே, சோறே, அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா, எழுந்திராய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குல விளக்கே,
எம் பெருமாட்டி யசோதாய், அறிவுறாய்!
அம்-பரம் ஊடு அறுத்து, ஓங்கி, உலகு அளந்த,
உம்பர் கோமானே, உறங்காது எழுந்திராய்!
செம் பொற் கழலடிச் செல்வா, பலதேவா,
உம்பியும் நீயும் உறங்கேல்-ஓர் எம் பாவாய்!
மேலோட்டமான பொருள்:
* மானம் மறைக்க ஆடை, அப்பறம் குடிக்கத் தண்ணீர், அப்பறம் உண்ண உணவு என்று அறங்கள் செய்யும் தலைவர் நந்தகோபரே எழுந்திருங்கள்!
* பெண்களுக்கு எல்லாம் கொழுந்தே, குல விளக்கே, அம்மா, யசோதை..கண் விழியுங்கள்!
(ஆண்கள் அடிச்சிப் போட்டாப் போலத் தூக்கமாம், அதனால் எழுந்திராய்! பெண்கள் மென் துயிலாம், அதனால் அறிவுறாய்! ஏய் கோதை...என்னாடி நியாயம் இது?:))
* உலகத்தை ஊடாகச் சென்று ஓங்கி உலகளந்தவனே! போதும்! எழு!
* பொற்கழல் வீரரே, அண்ணா பலதேவரே, உங்கள் தம்பியும் நீரும் பாவம்! உறங்கு+ஏல் = கொஞ்சமா உறங்குங்க! உறங்கேல் = தூங்காதீங்க!:)
அடிப்பாவி கோதை...ஏன்டீ மாத்தி மாத்திப் பேசுற?
ச்சே...அவன் பாவம்-ப்பா! அவன் களைப்பு எனக்குத் தான் தெரியும்! தூங்கட்டும்! ஆனா எழுந்து, நம்மை ஒரு பார்வை பாத்துட்டு தூங்கட்டும்!
அறி துயிலோ, அரைத் துயிலோ யார் கண்டது? = உறங்கேல், உறங்கு ஏல்!:))
இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = கொம்பன்
இது ஆண்பாலா? பெண்பாலா? 'அன்' வருவதால் ஆண்பால்-ன்னா, கொம்பனார்-ன்னு பெண்களை அல்லவோ சொல்லுறா கோதை?
நீ என்ன பெரிய கொம்பனா?-ன்னு கேக்குறோம்-ல்ல?
பொதுவா ஆண்களை நோக்கி வீசப்படும் இக்கேள்வி, பெண்களுக்கும் பொருந்தும் தான்:) ஆனா வேற பொருளில்!
கொம்பு = கொடி தவழும் கோல்!
அதாச்சும் மென்மையான முல்லைக் கொடிகள், அந்த மென்மைக்கே, கனம் தாங்காமல் தாழும்! சுருண்டு விழும்! அதன் இயல்பு அப்படி!
பெண்களைக் கொடி, இடுப்பை = கொடி இடை-ன்னும் சொல்லுற கூட்டம் நாம!:)
இடுப்பு மென்மையா? சுருண்டு விழுமா?-ன்னு எல்லாம் என்னைக் கேட்காதீங்கப்பா:)
எனக்குத் தெரிஞ்சதெல்லாம் சிலுக்கின் பேசும் கொடி இடை, அப்பறமா என் முருகனின் அதிபயங்கர வளைவுகள் கொண்ட கொடி இடை! அவ்ளோ தான்:))
மென்மையான முல்லைக் கொடிகளைத் தாங்க, முட்டுக் குடுப்பதற்குப் பேரு = "கொம்பு"!
கொழு கொம்பு இல்லாக் கொடி போல-ன்னு சொல்றோம்-ல்ல சில பேரை!
பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கும்! தாங்கக் கூட ஆதரவில்லாம, துவண்டு கிடக்கும் முல்லைக் கொடிகளை, முருகா, காப்பாத்து!
இந்தக் கொடி தாங்கும் கொம்பு எப்படி இருக்கணும்? = நல்லா குண்டா? திமு திமு-ன்னு?
இல்லை! கொம்பும் மென்மையாத் தான் இருக்கணும்! ஆனா கொடியை விடக் கொஞ்சம் பலமா இருக்கணும்! அப்போ தான் கொடி படரும்!
* ரொம்பக் குண்டா இருந்தா = கொடிக்கு உறுத்தும்!
* ரொம்பப் பொடிசலா இருந்தா = கொடியைத் தாங்க முடியாது!
அதான் "கொழு கொம்பு" = மென்மை + பலம்!
பெண்களை, வெறுமனே கொடி என்று பல கவிஞர்கள் வருணிக்க...
பெண்களை, கொம்பு என்கிறாள் கோதை! = மென்மை+பலம் இரண்டுமே உண்டு பெண்களுக்கு (அ) பெண் மனங்களுக்கு!
கொம்பனார்க்கு எல்லாம் "கொழுந்தே" = குலவிளக்கே = பெண்ணே! எழுந்திரு!
நாளை பேசுபவர்: நீங்களும் நானும் நன்கறிந்த இலக்கியவாதி:) வர்ட்டா?

ஆண்டாள் முதலில் நந்தகோபனையும், பின் யசோதையையும், அதன்பின் பலராமனையும் எழுப்புகிறாள். கடைசியாக கண்ணனை எழுந்திருக்கச் சொல்கிறாள். இந்த மூன்று பேரையும் தாண்டி தான் கண்ணன் இருக்கும் அறைக்குச் செல்ல முடியும் என்று தோன்றுகிறது. அதனால் தான் அந்த orderல் எழுப்புகிறாள். அப்போ கண்ணன் உள்ளறையில் உறங்குவதாகக் கொள்ளலாம் இல்லையா?
ReplyDeleteamas32
(ஆண்கள் அடிச்சிப் போட்டாப் போலத் தூக்கமாம், அதனால் எழுந்திராய்! பெண்கள் மென் துயிலாம், அதனால் அறிவுறாய்! ஏய் கோதை...என்னாடி நியாயம் இது?:))
ReplyDeleteஅழகான பகிர்வு.. பாராட்டுக்கள்..
@ amas,
ReplyDeleteபெரியவர்களெல்லாம் எழுந்து கண்ணனின் தேவைகளை தயார் செய்யாட்டும் என்றோ அல்லது ஒருவேளைத் தன் தலைவன் ஒரு நிமிடம் அதிகம் தூங்கட்டுமே என்பதற்காகவோ கூட இருக்கலாம்!!
//கோதைத்தமிழ்17: நீ என்ன பெரிய கொம்பனா?//
ReplyDeleteதலைப்பு சுண்டி இழுக்குது . படிக்கணும்னு
பெண்களைக் கொடி, இடுப்பை = கொடி இடை-ன்னும் சொல்லுற கூட்டம் நாம!:)
இடுப்பு மென்மையா? சுருண்டு விழுமா?-ன்னு எல்லாம் என்னைக் கேட்காதீங்கப்பா:)
Why??
நன்றி
ReplyDeleteநந்தகோபாலன், யசோதை, உலகளந்த உம்பர்கோமான், செல்வன் பலதேவன் என்ற வரிசைப்படி தானே எழுப்புகிறாள்?! மாற்றிச் சொல்கிறீர்களோ @amas?
ReplyDeleteஎல்லாப் பாசுரங்களும் அதற்கான விளக்கங்களும் அருமை.
ReplyDeleteதமிழ் கொஞ்சி விளையாடுகிறது உங்களிடம்.