கோதைத்தமிழ்30: தமிழில் 12 வித மாலை @raama.ki.ayya
மக்களே வணக்கம்!
இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
கடந்த ஒரு மாதமாய், ஆடி ஆடி, அசைந்து அசைந்து...
துண்டெழுத்து வீதியான ட்விட்டரில்...
சிறப்புடன் வலம் வந்த தமிழ்த் தேர்...
இதோ நிலைக்கு வந்து விட்டது!
* நற்றமிழ் அறிஞர், நுட்பியல் பொறியாளர்,
* SPIC நிறுவன முன்னாள் மேலாண்மை இயக்குநர்...
* துறை சார் தமிழ் - அறிவியல் தமிழ் - சங்கத் தமிழ் என முழு வட்டம் சுழல் வல்லார்...
* இணையத் தமிழில் இணையிலா ஈடுபாடு காட்டுபவர்...
* பலரையும் தமிழ்ப் பெருமிதம் கொள்ளச் செய்பவர்...
ஆசான் இராம.கி ஐயா-வின் நிறைவு நாள் உரை!
கீச்சர்களின் தமிழ்த் தேருக்கு அணிகலன்! இதோ!
(குறிப்பு: ஐயாவின் பணி நிமித்தங்களால், அவர் எழுத்து உரையை வாசிப்பது, என் தந்தை மு. கண்ணபிரான் அவர்கள்)
நன்றி ஐயா!
உரை சால் உரையுடன், கீச்சர்களின் இந்தத் தமிழ் விழா நிறைந்தது மட்டிலா மகிழ்ச்சி!
பாசுரம்:
வங்கக் கடல் கடைந்த, மாதவனை, கேசவனை,
திங்கள் திரு முகத்து சேய் இழையார், சென்று, இறைஞ்சி,
அங்கு அப் பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங் கமலத் தண் தெரியல், பட்டர் பிரான் கோதை சொன்ன,
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
இங்கு இப் பரிசு உரைப்பார், ஈர் இரண்டு, மால் வரை தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவர் எம் பாவாய்!
தை-01: "தை-ஒரு" திங்கள் என்னும் முதல் நாச்சியார் திருமொழி!
தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்,
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா!
உய்யவும் ஆங்கொலோ? என்றுசொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்,
வெய்யதோர் தழல்-உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே!
இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = தெரியல் (டரியல் அல்ல:)))))
தெரியல் = மாலை!
பல விதக் கதம்பமான மலர்களால், 'தெரிந்தெடு'த்துக் கட்டியதால் = தெரியல்!
தமிழ் மாலைகள் பல உண்டு!
* தொங்கல் = இரு புறமும் தொங்கும் மாலை
* தெரியல் = பல வண்ணப் பூவால் 'தெரிந்தெடு'த்துக் கட்டிய மாலை
* கண்ணி = ரெண்டு ரெண்டு பூவாய்த் தொடுத்த மாலை
* கோதை = கொண்டை/கழுத்தில் நெருக்கமாய்ச் சூடும் மாலை
* கோவை = ஊசியால் கோர்த்த மாலை
* தார் = வாழைத்தாரில் பூக்கள் சொருகிய மாலை (பெரும் அலங்காரத்துக்கு)
* படலை = பச்சை இலைகள+பூக்களால் தொடுத்த மாலை
* அலங்கல் = சரிகை/துணி சுற்றிய மாலை
* பிணையல் = பின்னல் போல் முறுக்கிக் கட்டிய மாலை
* சிகழிகை = தலை மாலை
* சூட்டு = நெற்றி மாலை
* ஆரம் = கழுத்து மாலை
இப்படி பலப்பல மாலையாய் மணக்கும் தமிழ் = நம் கோதைத் தமிழ்!
இந்தத் தமிழ்த் தேரினை இழுத்துக் குடுத்த ட்வீட்டர்கள் அனைவருக்கும் இனிய நன்றி! பந்தல் வாசகர்கள் அனைவருக்கும் பரவிய நன்றி!
நன்றி மட்டும் சொன்னால் போதுமா? கீச்சர்-ன்னா சும்மாவா?
இதோ அவள் நினைவாக, அவள் சூடிக் கொடுத்த மாலையும், பாடிப் பேசிய கிளியும்...உங்கள் பரிசாக...பரிசேலோ ரெம்பாவாய்!
எழுத்தாளர் சொக்கனும் & நானும் தோழன் ராகவனும் மட்டுமே பேசுவதாய் இருந்த பாசுரங்களை.....
இந்த மாதம் முழுதும்.....அனைத்து ட்வீட்டர்களும்.....அவரவர் இயல்பில் பேசிக் குடுத்து.....
ஒரு அழகிய தமிழ்ச் சூழலை உருவாக்கித் தந்த தமிழ்க் கீச்சர்களுக்கு என் பல்கால் நன்றி!
* அனைத்து ட்வீட்டர்களின் குரல்கள் இங்கே
= https://soundcloud.com/kryes-1/sets/paavaipodcast
ட்வீட்டர்களின் குரல், இது போலவே, தமிழுக்கும் மனிதநேயத்துக்கும் என்றும் ஒலிக்கட்டும்! வர்ட்டா?:)

இராம.கி ஐயா அவர்களுக்கு என் வணக்கம். பறை பற்றிய விளக்கம் என் நெடு நாள் ஐயத்தைப் போக்கியது, நன்றி ஐயா!
ReplyDeleteமுப்பது நாளும் நீங்கள் செய்த சேவைக்கு நன்றி KRS. நான் நிறைய கற்றுக் கொண்டேன். பங்குபெற்ற அனைத்து கீச்சர்களுக்கும் பாராட்டுக்கள் :)
ஆண்டா0ள் திருவடிகளே சரணம்!
amas32
இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுயற்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடுத்த வருடமும் இதைப் போல புதுமையாக ஏதேனும் செய்யுங்கள்
ரொம்ப நன்றி.திருப்பாவையை எத்தனை தடவை யார் சொன்னாலும் 12 மாதமும் கேட்கலாம்.அதுவும் உங்களைப் போன்றவர்கள் மார்கழியில் சொன்னால் கேட்க கசக்குமா ? பரிசுக்கு மிகவும் நன்றி.அடு்த்த மார்கழியில் சந்திக்கலாம்
ReplyDelete