Tuesday, January 10, 2012

கோதைத்தமிழ்26: மாலே மணிவண்ணா @kanapraba

மக்கா, இன்று பேசப் போவது, என்றும் 16, எங்கள் @kanapraba!:)
கா.பி என்று நான் செல்லமாக அழைத்தாலும், கானா என்பது தான் உலகப் புகழ்!:)

இசையின் பால் மாறாத காதல் கொண்ட இந்த உள்ளம், அந்த இசையின் வடிவாகவே தன்னை விதம் விதமாக வெளிப்படுத்திக் கொள்கிறது....
அது றேடியோஸ்பதி ஆகட்டும், ATBC வானொலி ஆகட்டும், கானா FM ஆகட்டும்...இந்த Podcastயே ஆகட்டும்....

ஆனா, அந்த இசையினூடே, ஆழ்ந்த தமிழ்ப் பற்று ஒளிந்திருப்பதை, நுட்பமாகக் கவனிப்பவர்கள் அறியலாம்!

ஈழத்துக்கு என்னைக் கூட்டிச் செல்வதாக அவர் வாக்குறுதி இன்றும் நிலுவையில் இருக்கு!:)
நான் மிக விரும்பும் இடங்களான.......பன் மதக் கதிர்காமம், கடலை ஒட்டிய மலை திருக்கேதீச்சுரம், வள்ளிபுர ஆழ்வார், நல்லூர்-ன்னு நிறைய!

குறிப்பா ஆனை இறவு = பொன்னியின் செல்வன் முதல் நேற்றைய படுகொலைகள் வரை!
ஈழப் பயணம் கூடி விட்டால், அதற்கப்புறம் எனக்கு வேறேதும் வேண்டாம்! அந்த நல்லூர்க் கந்தனோடு உறங்கி விடுவேன்!

இதோ, கா.பி, உங்கள் முன்னே....
சிவாஜி படப் பாடலான மாலே மணிவண்ணா :) Incidentally Itz திருப்பாவை also:))



நன்றி கா.பி:)
அட, இந்த FM ஆளுங்கள பேசச் சொன்னா, BGM எல்லாம் போட்டு podcasting பேசுறாங்கப்பா!:) - வீணை இசையே இசை!



மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்,
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன,
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே


போல்வன சங்கங்கள், போய்ப் பாடு உடையனவே!
சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே!
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய், அருள் ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: திருமாலே, கருநீல மணிவண்ணா! மார்கழி நோன்பு நாங்க எதுக்கு இருக்கோம் தெரியுமா?
உன் பால் வண்ணச் சங்கு, பறை, விளக்கு, கொடி, விதானம் - இதெல்லாம் எங்களுக்கு வேணும்-ன்னு தான்! அதை அருள்வாயே!

* சங்கில் = உன் எச்சில் அமுதம் இருக்கு!
* பறையில் = நீ எங்களுக்குப் படி அளப்பாய்
* கொடி = உன் உலகப் புகழ்! மாயோன் மேய மன்பெரும் சிறப்பின்...
* விளக்கு = இரவில், உனக்கும்-எனக்குமான சாட்சி
* விதானம் = நம் மீது இருக்கும் ஒரே போர்வையாக, மேற் கூரை

இவள் காதலே, என் முருகக் காதலுக்கு உந்து சக்தி!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = மால்!

மால்-ன்னா என்ன? மால் வெட்டு-ன்னு லோக்கலாப் பேசுறோமே அதுவா?:) அல்ல!
திரு.வி.க, முருகன் (அ) அழகு என்னும் நூலில் சொல்வது: "தங்கள் கண்ணுக்கு, பச்சைப்பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, "மால்" என்று பண்டைத் தமிழர்கள் வழுத்தினர்"

மால் = மயக்கம்! ஆசை!
மாலுதல் = ஆசைப்படுதல், மயங்குதல்!

காட்டில், மயக்கம் அதிகம்!
* மலை வெட்டவெளி/உச்சி என்பதால் அங்கு தெளிவு அதிகம்! மேலிருந்து அழகு தெளிவாகத் தெரியும் = அதான் முருகு (அ) அழகு! = முருகன்!
* காடு அடர்த்தி என்பதால் அங்கு மயக்கம் அதிகம்! காட்டின் வளம் துய்க்க, அந்த மயக்கத்தில் இறங்கினால் தான் உண்டு! அதான் மால் = திருமால்!

இப்படி நிலமும், குணமுமே = இயற்கையே பண்டைத் தமிழ்க் கடவுள்கள் ஆயின!
மாயோன் மேயக் காடுறை உலகும்
சேயோன் மேய மைவரை உலகும் - என்பது ஆதித் தமிழ்த் தந்தையான தொல்காப்பியர்!

இப்படிப் பலரையும் மயங்கச் செய்வதால் = மால்!
என் முருகன் தெளிவு குடுப்பான்! இவரு மயங்கச் செய்வாரு:))

இந்த "மயக்கம்" என்பதால்...மால், பல மயக்கங்களைக் குறிக்கத் துவங்கின இலக்கியத்தில்!
* காதல்/காமம் = மால்
* கருமை = மால்
* மாலைப் பொழுது = மால் (மயக்கும் "மாலை"ப் பொழுதே நீ போபோ பாட்டு ஞாபகம் வருதா?:)
* சூடும் மாலை = மால்
* பெருமை = மால் (சின மால் விடைச் சிவன் - மாணிக்கவாசகர்)

மாலுக்கு இளையவள் = மாலினி/ கொற்றவை!
துளசிக்கு = மால்முருகு என்ற பேரும் உண்டு!

மலையும் காடும் ஒன்னோட ஒன்னு சேர்ந்தே இருக்கும்! காடில்லாத மலை இல்லை! மலை இல்லாத காடில்லை!
அதான் முல்லையும் குறிஞ்சியும் = மாலும் முருகும் = சங்கத் தமிழ்!

ஒரு பெண்ணுக்கு என்ன தான் கணவன் மீது கொள்ளை ஆசை-ன்னாலும், அப்பா மேல எப்பமே ஒரு பெருமிதம்!
அது போலத் தான் நானு! முருகன் மீது கொள்ளை ஆசை-ன்னாலும், எந்தை மாலவன் மீது எப்பமே ஒரு மதிப்பு - அப்பா-ன்னு போய் நின்னு அவரு கிட்ட அழ முடியும்! = மாலே மணி வண்ணா!

நாளை பேசப் போவது = யாருமில்லாமையால் யாரோ @kryes ஆம்:) subject to last minute changes:)

8 comments:

  1. கானபிரபா, உங்கள் அழகிய தமிழில் ஆண்டாள் பாசுரத்தை கேட்டதில் பெரு மகிழ்ச்சி! கூட இனிய நாதம், நன்றி :)
    நேற்றைய பாசுரத்தில் "கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருபென்ன நின்ற நெடுமாலே" என்று சொன்ன கோதை, இன்றைய பாசுரத்தில், மாலே மணிவண்ணா என்கிறாள்.
    நாம் அவன் மேல் பித்தாகிறோம். அது இயற்கை. ஆனால் அவனும் நம் மேல் பைத்தியமாக இருக்கிறானே. அது எத்தனை பெரிய பேறு!
    நீல மணி போன்ற திருமேனி உடையவனே என்று ஆண்டாள் கூறுகிறாள்.
    கிடைத்தற்கு அரிய ரத்தின மணியே என்றும் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். கிடைத்த அரிய மாணிக்கத்தை நாம் யாருக்கும் கொடுக்க மாட்டோம். அது போல அவனையே பெற்ற பிறகு நாம் அவன் அன்பை பொத்தி பாதுகாக்க வேண்டும்.
    amas32

    ReplyDelete
  2. நின்று நிதானமாக வீணை இசைக்கு நடுவிலே கொடுக்கப்பட்ட விளக்கம் வெகுவாகக் கவர்ந்தது...லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா இருக்கு .அருமை :)

    ReplyDelete
  3. மாசிலா வீணையின் நாதத்துடன், பிரபா-வின் கானம் போன்ற உரை.

    மாயோன் - விளக்கத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete
  4. பொறுமையான விளக்கம் + வீணை இசை என்னை மிகவும் கவர்ந்தது!

    நன்றி கானாபிரபா! :)

    ReplyDelete
  5. மிக்க நன்றி நண்பர்களே

    ReplyDelete
  6. கானா இப்பத்தான் கேட்டேன் அசத்தல்! தமிழே உங்கள் குரலால் அழகாகிவிட்டதே!

    ReplyDelete
  7. அமைதியும் அழகும் தெளிவும் நிறைந்த பலுக்கல். இனிய இசை. எளிய விளக்கம். நன்றி கானா பிரபா.

    ReplyDelete
  8. மாலும் முருகும் சங்கத் தமிழ். அழகான விளக்கம். நன்றி இரவி.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP