Tuesday, January 03, 2012

கோதைத்தமிழ்18: மாதவிப் பந்தல் @OruPakkam

மக்கா, இன்றைய தாமதத்துக்கு மன்னிக்க! நேற்றிரவு தூக்கமில்லை! அதான்:)

இன்று பேசுபவர் யாரு? = இலக்கியவாதி, எழுத்தாளர், மாற்றுச் சிந்தனையாளர், பின் நவீனத்துவ நிபுணர்...பல சிறுகதைப் போட்டிகளின் நடுவர்
= ஸ்ரீதர் நாராயணன் என்னும் @OruPakkam

எனக்குப் பெரும் உற்சாக ஊட்டி! கோர்வையான பேச்சாளர்! நல்ல நண்பர்...
என்னைக் கலாய்ப்பதில் அன்னாருக்கு அளவிலா ஆனந்தம்...இதோ உங்கள் முன்னே!நன்றி ஸ்ரீதர் அண்ணாச்சி! நீங்க சொன்ன அதே காரணம் தான்! பல குயில்கள் வந்து அவனைக் கூவ வேண்டும் என்பதாலேயே மாதவிப் பந்தல் என்று பெயர் வைத்தேன்:)

இறைவனை நாம் காண்பது ஒரு மகிழ்ச்சி என்றால், பிறரைக் காண வைப்பதில் இன்னொரு மகிழ்ச்சி!
கோயில் தூக்கிகள் அவனைத் தூக்கித் தூக்கி வருவதால் அவர்களால் காண முடியாது! ஆனால் மற்ற எல்லாரும் அந்த ஆனந்த ஆட்டத்தைக் காண முடியும்!

இப்படி, தான் காணாது போயினும், பிறர் காண்பதைக் கண்டே, அந்த மகிழ்ச்சியில் தானும் காண்பது ஒரு தனி ஆனந்தம்! அதுவே மாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில்கள் கூவின காண்!உந்து மத களிற்றன், ஓடாத தோள் வலியன்,
நந்த கோபன் மருமகளே நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி, கடை திறவாய்!
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்பந்தல் மேல், பல் கால் குயிலினங்கள் கூவின காண்!
பந்து ஆர் விரலி, உன் மைத்துனன் பேர் பாடச்,
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப,
வந்து திறவாய் மகிழ்ந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!இன்றைய எழிலான சொல் = மாதவிப் பந்தல்!:)

சிலப்பதிகார டான்சர் மாதவியோட பந்தலா?....இல்லை ராஜ பார்வையில் கமலோட ஜோடி போட்ட மாதவியின் பந்தலா? ஹிஹி!
மாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண்! - என்பது நம் கோதைத் தமிழ்!

மாதவி = வசந்தமல்லி/ குருக்கத்தி என்னும் பூ!

அது கண்ணன் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது!
மாதவிப் பந்தல் மேல், எங்கெங்கு இருந்தோ வரும் குயில்கள் எல்லாம் வந்தமர்ந்து, கீதம் இசைக்கின்றன!

இந்த மாதவிப் பந்தலில் யாவரும் குயில்களே! - அட, நீங்களும் தான்! :)

நாளைய பேச்சாளர் = இளம் வாலிபர்! தில்லித் தமிழர்! என் பால் மிக்க அன்பு கொண்டவர் போலும்:)) வர்ட்டா?

6 comments:

 1. @ஸ்ரீதர் நாராயணன்: ஏன் நடிகர் ராஜ்கிரண் போல mimicry செய்திருக்கிறீர்கள்?! ;>
  தெளிவான பேச்சு. அருமை. :)

  @kryes
  நாளை பேசுபவர் என்னுடைய இளநிலையர் 'பால சுந்தர்' என்று நினைக்கிறேன், சரியா?!

  ReplyDelete
 2. வடமொழியில் ’மாதவி’ என்றால் முல்லை என்று எங்கோ படித்ததாக நினைவு. அது தவறா? ஆனால், கரவீர பத்ரம் என்றும் முல்லையைக் கூறுவதாகவும் படித்ததுண்டு. நான் இரண்டுமே ஒன்று என்று நினத்திருந்தேன். படத்துடன் விளக்கியமைக்கு நன்றிகள்

  //பல குயில்கள் வந்து அவனைக் கூவ வேண்டும் என்பதாலேயே மாதவிப் பந்தல் என்று பெயர் வைத்தேன்//
  என் போன்றத் தேனீக்கள் வந்து, தாங்கள் தரும் தேனைக் குடிப்பதால் என்ற காரணமும் சேர்த்துக் கொள்ளலாம்.

  ReplyDelete
 3. "என் போன்றத் தேனீக்கள் வந்து, தாங்கள் தரும் தேனைக் குடிப்பதால் என்ற காரணமும் சேர்த்துக் கொள்ளலாம்." நன்றி, திரு வேங்கட ஸ்ரீனிவாசன். எனக்காகவும் இதை நீங்க சொல்லியதாக நான் எடுத்துக் கொள்கிறேன் :-)
  ரொம்ப அருமையா பேசியிருக்கீங்க ஸ்ரீதர் நாராயணன்! பந்தார் விரலிக்கு மட்டுமே என்ன விளக்கம்!
  நேற்றைய பாசுரத்தில் முழுக் குடும்பத்தையும், including
  கண்ணபிரானை எழுப்பிவிட்ட கோதை இன்றைய பாசுரத்தில் தான் நப்பின்னையை எழுப்புகிறாள். ஒரு வேளை இவள் எழுந்துவிட்டால், கண்ணன் இவளை miss
  பண்ணுவானோ என்று எண்ணிக் கடைசியாக இவளை எழுப்புகிறாள் என்று நினைக்கிறேன்.
  amas32

  ReplyDelete
 4. //கரவீர பத்ரம் என்றும் முல்லையை//
  தவறாக கரவீர பத்ரம் என்று அடித்துவிட்டேன். கரவீர புஷ்பம் என்றால் அரளி (பத்ரம் என்றால் இலை). அது குந்த புஷ்பம் என்றால் முல்லை.
  மன்னிக்கவும்.

  ReplyDelete
 5. ஆளுக்கு ஏற்ற அருமையான பேச்சு. இதைத் தான் இவரிடம் எதிர்பார்த்தேன். ஏமாற்றவில்லை. :-)

  ஆடற்கலையிலிருந்து பந்தார்விரலிக்குப் பொருள் சொன்னது அருமை. புதுமை.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம் கடவுளுக்கு அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009
* யாவையும் யாவரும் தானாய்,
* அவரவர் சமயம் தோறும்,
* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,
* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
* "பாவனை அதனைக் கூடில்,
* அவனையும் கூட லாமே
"!!!

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP