கோதைத்தமிழ்20: உக்கம்-தட்டொளி @arutperungo
மக்கா, வைகுந்த ஏகாதசி வாழ்த்துக்கள்!
இன்று பேசப் போவது = கவிக்கோ, காதல்கோ, தமிழ்க்கோ!
யாரு? = நான் "கோ" என்று அழைக்கும்....கவிஞரு @arutperungo தான்:)
கோ-வின் காமத்துப்பால் கவிதைகளுக்கு நான் பெரும் ரசிகன்:) இதோ அந்தக் காமம் செப்பாது கண்டது மொழிமோ!:)
அமெரிக்கா விஸ்கான்சினில் வில்லு வண்டியோட்டினாலும், பையனின் வீதி என்னமோ பெங்களூரில் தான்!:)
கோதைத்தமிழில் என்ன சொல்லுறாரு கவிஞரு? நீங்களே கேளுங்க!
நன்றி கோ! கலக்கிட்ட, வழக்கம் போல! காதல் களிப்பான வாழ்த்துக்கள்:)
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்!
செப்பம் உடையாய், திறல் உடையாய், செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா, துயில் எழாய்!
செப்பென்ன மென் முலைச் செவ் வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை, நங்காய், திருவே, துயில் எழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து, உன் மணாளனை,
இப்போதே எம்மை நீராட்டு! ஏல்-ஓர் எம் பாவாய்!
மேலோட்டமான பொருள்: முப்பத்து மூவர் அமரர்களுக்கு என்னென்னமோ பூசைகள்/யாகங்கள் இருக்கு; ஆனா அவர்களா நம்மைக் காக்கிறார்கள்?
அவர்கள் வருவதற்கு முன்பே, அமரர்க்கும் முன் வந்து நிற்பவன், முதல்வன் = பெருமாள்!
எம் துன்பம் தீர்க்கும் பெருமானே துயில் எழாய்!
எம் எதிரிகளை அழிக்காமல், அவர்களுக்கு வெப்பம் மட்டுமே கொடுத்து உணர வைக்கும் முதல்வா துயில் எழாய்!
மென்முலை, செவ்வாய், சிற்றிடை - நப்பின்னைப் பிராட்டியே துயில் எழாய்!
உன் காதலனிடம் விசிறியும் கண்ணாடியும் கொடுத்து அனுப்பு!
எங்களை மார்கழி நீராட்டி, இப்போதே அருள் செய்யுமாறு அவனுக்குச் சொல்லி அனுப்பு!
இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = உக்கம், தட்டொளி
அது என்ன உக்கம்? உக்கம் சந்த்-ன்னு ஒரு அரசியல்வாதி இருந்தாரு எம்.ஜி.ஆர் கூட! அவரா?:))
அது என்ன தட்டொளி? பேரே பயமா இருக்கே!:))
* உக்கம் = விசிறி (Hand Fan)
* தட்டொளி = கண்ணாடி (Hand Mirror)
எதுக்கு கோதை, இதைப் போயி, நோன்புப் பொருளாக் கேக்குறா? அதுவும் தமிழ்மகள் நப்பின்னையைப் பார்த்து?
ஐயா கட்டிலில் இருந்து, தூக்கக் கலக்கத்தில், அப்படியே வந்துடப் போறாரு! பொண்ணுங்க எல்லாரும் வந்திருக்கோம்-ன்னு சொல்லு தாயீ! அப்போ தான் அலங்காரப் ப்ரியன் அலங்காரமா வருவான்!
* அவனுக்குக் கண்ணாடி காட்டி, முகமும் சிகையும் திருத்தி அனுப்பு!
* அவனுக்கு விசிறி விட்டு, அவனை நல்லபடியா குளிர்வித்து எங்ககிட்ட அனுப்பு! கூல் ஆக்கி அனுப்பு! (Our Kannan is a "Cool" Guy! :)
இந்த உக்கம்-தட்டொளி அவனுக்கு மட்டுமல்ல! நமக்கும் தான்!
நோன்பிருக்கும் பெண்கள்/ ஆண்கள், நெற்றியில் திருமண் எழுதிக் கொள்வது வழக்கம்! அதற்கு கண்ணாடியும், நெற்றி வியர்வையால் கலையாமல் இருக்க விசிறியும் தேவை! அதை அவனே வந்து தங்களுக்கு இட்டு விடுமாறு கேக்குறா இந்தப் பொண்ணு! :)
மேலும் நுட்பமான விவரங்களுக்கு, சுவையான உரையாடல் பதிவு = http://madhavipanthal.blogspot.com/2009/01/20.html
நப்பின்னை = (வடமொழி ஆதிக்கத்தால்) தொலைந்து போன தமிழ்ச் சொத்து!
தமிழ்க் குலமகள், நப்பின்னைப் பிராட்டியார் திருவடிகளே சரணம்!
------
* உக்கம் = உக்குதல் = உகுதல்! (சிறிது சிறிதாய்ப் பொழிதல்)
காற்றை உகுப்பதால் விசிறிக்கு=உக்கம் என்று பேரு!
* தட்டொளி = தட்டு + ஒளி!
தட்டு போல் வட்ட வடிவத்தில், ஒளி பட்டுப் பிரதிபலிக்கும் கண்ணாடி! அதனால் தட்டு+ஒளி = தட்டொளி! இது ஈழத்தில் இன்றும் உள்ளது!
நாளை பேசப் போவது ஒரு நல்ல ட்விட்டர் தகப்பன்! வர்ட்டா?:)
பி.கு:
அதிகாலை! ஒரு முக்கியமான இடம் செல்கிறேன்! வர நள்ளிரவாகும்!
அதனால் அவசரம் அவசரமாக எழுதி, Scheduler-இல் பதிவையும் ட்வீட்டுகளையும் இட்டுச் செல்கிறேன்!
ஏதேனும் பிழை இருப்பின் பொறுத்தருள்க!:) ட்விட்டரில் இப்பதிவைச் சொல்லியும் அருள்க!!

அருமையான பேச்சு அருட்பெருங்கோ. அதிலும் குழந்தைகளை எழுப்புற மாதிரி விசிறிவிட்டு எழுப்பி அனுப்பு உன் மணாளனைன்னு சொன்ன விளக்கம் அருமையிலும் அருமை. அசத்திட்டீங்க.
ReplyDeleteஒரு சின்ன குறை: ளகர, ணகர பலுக்கல்கள் இன்னும் தெளிவா இருந்தா நல்லா இருக்கும். இனிமே அதையும் கொஞ்சம் கவனிங்க.
வலையுலக முருகப்பெருமான் புகழ் ஓங்குக! ஓங்குக! :-)
ReplyDeleteபாடலுக்கு நன்றி
ReplyDeleteஅருட்பெருங்கோவிற்கு வாழ்த்துகள்!
ReplyDeleteஉக்கம், தட்டொளி இரண்டின் அர்த்தமும் இன்று நீங்கள் சொல்லி தெரிந்த கொண்டேன்.
நோன்புக்கு வேண்டிய விசிறியும், கண்ணாடியையும், நப்பின்னையின் கணவனையும் அவர்களுக்கு கொடுத்து விட வேண்டும் என்று அவளிடம் கேட்கிறாள் ஆண்டாள்!
amas32