Saturday, January 07, 2012

கோதைத்தமிழ்23: கிரந்தம் தவிர் of ஆண்டாள் @lalitharam

மக்கா, இன்னிக்கி பேச வேண்டியவரு -  நம் இசையாளர், இசை விமர்சகர், இசை எழுத்தாளர் - லலிதாராம் (எ) @lalitharam 

திடீர் வெளிநாட்டுப் பயணத்தால், அவர் ஒலிக்கோப்பு இயலவில்லை! மன்னிக்க!
பதிவின் ஒலியை, இந்த ஆளரிப் பெருமாள் என்னும் சிங்கம் முழங்குவதில் கேட்டுக் கொண்டே படிங்க!:)மாரி மலை முழைஞ்சில், மன்னிக் கிடந்து உறங்கும்,
சீரிய சிங்கம், அறிவுற்றுத் தீ விழித்து,
வேரி மயிர் பொங்க, எப்பாடும் பேர்ந்து உதறி,
மூரி நிமிர்ந்து, முழங்கிப் புறப்பட்டுப்,


போதருமா போலே, நீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில் நின்று, இங்ஙனே போந்தருளிக், கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து, யாம் வந்த
காரியம், ஆராய்ந்து அருள்! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: மழைக்கால முடிவு! மலைக்குகை! இதுநாள் வரை உறங்கிய சிங்கம், இரை தேடிப் புறப்படுகிறது!
அது விழிப்புற்று, தீப்போல் பார்த்து, உடல்மயிர் பொங்க, உடலை உதறி, திமிலை நிமிர்த்து, ஒரு முழக்கம் செய்து புறப்படுமே!

அது போல், நீயும் நடக்கிறாய் கண்ணா! பூவைப்பூ வண்ணா!
உன் கோயிலில் எல்லாரும் குழுமியுள்ளோம்!
நீ வந்து, அரியணையில் அமர்ந்து, எங்கள் குறைகளைக் கேட்டருள்! நாங்கள் எண்ணி வந்த காரியங்களையெல்லாம் ஆராய்ந்து, பின்னர் அருள்வாயாக!
இன்றைய எழிலான சொற்கள் பல! அதில் சிறப்பானது = "முழங்கும்"!

குயில் கூவும், மயில் அகவும், புலி உறுமும், யானை பிளிறும்!
சிங்கம் = ???

பலரும் சொல்வது சிங்கம் = கர்ஜிக்கும்!
ஆனால் கோதை அன்றே கிரந்தம் தவிர்க்கிறாள்! சிங்கம் = முழங்கும்! <கிரந்தம் தவிர் | தமிழ் தவறேல்>

ஏன்??? கர்ஜிக்கும்-ன்னு சொல்லக்கூடாதா-ன்னு கேட்டா, இயன்றவரை தமிழ்ச் சொற்களைப் புழங்கினால் தான், தமிழ்ச் சொற்கள் வாழும்!
இல்லையேல் அப்படி ஒரு சொல் இருக்குது-ன்னு தெரியாமலேயே செத்துப் போகும்! இப்படிப் பறிகுடுத்த சொற்கள் நிறைய்ய்ய.....

வேளாண்மை செத்துப் போயி = விவசாயம்-ன்னு ஆயிருச்சி! சோறு = சாதம் ஆயிருச்சி! விடுதலை = சுதந்திரம் ஆயிருச்சி!
இப்படியாக... ஒவ்வொரு சொல்லாக, தமிழ்ச் சொல் இறப்பு, நம் தமிழுக்குத் தேவையா?

வடமொழி, கிரந்தம் மேல் நமக்கு எந்தக் காழ்ப்பும் இல்லை!
வடமொழியும் செம்மொழி தான்!
அதைக் கற்கலாம்! ஆனால் தமிழோடு கொண்டு வந்து கலக்கக் கூடாது! - Learn Everything, But Dont Mix Everything!

தேங்க்யூ மச்சி, ரூமுக்கு வாடா -ன்னு பேச்சளவில் புழங்கினாலும், ரூம், தேங்க்ஸ் என்பதெல்லாம் தமிழ்-ன்னு சொல்லுறோமா?
இல்லை தானே! ஏன்னா நமக்கே தெரியும், அது ஆங்கிலம்-ன்னு!

ஆனா கர்ஜிக்கும், சங்கோஜம் என்பவை தமிழ் அல்ல-னு சொல்லும் போது மட்டும், சிலருக்குப் பொத்துக் கொண்டு வருகிறது:)
இவர்களுக்கு - வடமொழிக்கு ஏதும் ஆகாத வரை தமிழ் முயற்சிகள் Okay! வடமொழிக்கு ஏதோ ஆகிடுமோ-ன்னு நிலை வந்தா, தமிழ் முயற்சிகளைக் கும்மியடித்து, எள்ளி நகையாடி, விரட்டுவது ஒரு கலை:))

இந்தக் கலை, ஆண்டாளிடம் எடுபடாது! சிங்கம் முழங்கும் என்றே சொல்கிறாள்! கர்ஜிக்கும் அல்ல!!
இது போல, பல தமிழ்ச் சொற்களைத் தொலைத்து விட்டோம்! ஏன் கிரந்தம் தவிர்க்கணும்? = இந்தப் பதிவைப் பாருங்கள், புரியும்!

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வடசொல்லுக்கும்....இணையான, எளிமையான தமிழ்ச் சொல் என்ன?
- என்பதை இந்தத் தளம் = pulveli.com உங்களுக்குக் காட்டும்! முயன்று பாருங்களேன்!


மற்ற அழகிய தமிழ்ச் சொற்கள்:

* முழைஞ்சு = குகை! (முழை = நுழை! குறுகிய நுழைவாயில் உள்ள அறை = முழைஞ்சு)
* வேரி மயிர் = வேர்க் கால் மயிர்
* மூரி = சோம்பல் முரித்தான்-ன்னு சொல்லுறோம்-ல்ல? அந்த முரி தான் மூரி! மூரி என்பது விலங்கின் திமில் (Hunchback)! அதைச் சோம்பல் முரிக்குதாம் சிங்கம்!
* பூவைப்பூ = கருப்பு வண்ணக் காயாம் பூ


சரி..........நாளிக்கிப் பேசப் போவது யாரு?
எவனோ ஒருத்தன் @kryes-ஆமே! சூடான தலைப்பு வேற! முருகா...வர்ட்டா?:)

3 comments:

 1. இன்றைய எழிலான சொற்கள் பல! அதில் சிறப்பானது = "முழங்கும்"!

  எழிலான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. யாரும் பேசவில்லை என்றால் ஏமாற்றமாக உள்ளது!
  ஆண்டாள், கண்ணனை பூவை பூவண்ணா என்கிறாள், ஆனால் மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு என்றும் சொல்கிறாள். வீரமும் கருணையும் ஒருசேரக் கொண்டக் கண்ணன் நம் தீவினைகளை நீக்கி நன்மையைத் தர வல்லவன்!
  amas32

  ReplyDelete
 3. I HAVE BEEN reading your blog for the past two years..All your articles are enchanting and entertaining...! The articles about my thozhi kothai nacchiyar are enjoyable and thought provoking...Thanks..

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP