கோதைத்தமிழ்29: What Time is சிற்றஞ்சிறுகாலே? @kryes
வணக்கம் மக்கா!
இந்தக் கோதைத் தமிழ்த் தேர் நிறைவுறப் போகிறது.....நிலைக்கு வரப் போகிறது.....நாளை க்கு.....தைப்பொங்கல் நாளிலே!
அதுக்கு முன்னால, சின்னதா ஒரு warm down exercise:) யாரு பேசுறா இன்னிக்கி? நீங்களே கேளுங்க!:)
சிற்றம் சிறு காலே, வந்து, உன்னைச் சேவித்து, உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ,
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது!
இற்றைப் பறை கொள்வான் அன்று காண்! கோவிந்தா,
எற்றைக்கும், ஏழ் ஏழ் பிறவிக்கும், உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றை நம் காமங்கள் மாற்று! ஏல்-ஓர் எம் பாவாய்!
மேலோட்டமான பொருள்: சிற்றஞ் சிறு காலையில் வந்து உன்னைச் சேவித்தோம்! உன் திருவடிகளையே பாடுகிறோம்! ஏன் தெரியுமா?
மாடு மேய்த்து உண்ணும் குடியில் பிறந்தோம் நாம் இருவரும்! என்னை நீ உன்னுடன் ஏற்றுக்கொள்! மாட்டேன்-ன்னு சொல்லக் கூடாது! மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேணும்!
ஏதோ நோன்பு-பறை ன்னு சடங்காச் செஞ்சோம்-ன்னு நினைச்சிக்காதே கண்ணா! எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் நீ தான்! உனக்கு நான்-எனக்கு நீ!
இதைத் தவிர வேற எதுவும் எனக்கு வேணாம்!
அப்படியே வேற ஆசை எனக்கு வந்தாலும் அதை மாத்திருடா! அந்த ஆசையெல்லாம் எனக்கு வேணாம்! எனக்கு நீ தான்டா எல்லாம்!
இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = சிற்றஞ் சிறுகாலே!
காலை, சிறுகாலை, சிற்றஞ் சிறுகாலை
Morning, Dawn, PreDawn!
* காலத்தின் துவக்கம் = காலை (Morning)
* காலை-மாலை என ஒரு நாளை இரண்டாகப் பகுப்பதால் = பகல் (Noon)
* ஒவ்வொரு நிமிடமாகப் போவதால் = போது/ பொழுது
இப்படி, தமிழில் காலங்களின் பெயர்களும் காரணப் பெயர்களே!
காலை என்பது காலத்தின் துவக்கம்!
அது விடியலுக்கு முன்-பின் என இரண்டு வகைப்படும்!
சிறுகாலை, வைகறை, விடியல் என பல பெயர்கள் உண்டு! சிற்றஞ் சிறுகாலை = வைகறைக்கும் முன்னே!
நாளை, ஆறாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு மணி நேரங்கள் என்பது தமிழ்க் காலக் கணக்கு!
* வைகறை 2:00 am - 6:00 am
* காலை 6:00 am - 10:00 am
* பகல் 10:00 am - 2:00 pm
(முற்பகல் - நண்பகல் - பிற்பகல்)
* எற்பாடு 2:00 pm - 6:00 pm
* மாலை 6:00 pm - 10:00 pm
* யாமம் 10:00 pm - 2:00 am
வள்ளுவரும், ஒரே குறளில், காலங்களைத் தொட்டுச் செல்வார்!
காலை அரும்பி, பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய் - (காமத்துப் பால்)
காதலில் விழுந்த ஆளுங்களுக்கு, காலங்களும் மாறி விடுகிறதாம்!
வைகறைத் துயில் எழு-ன்னு கூற்றுப்படி, வைகறையில் எழுந்திரிச்சிக்க முடியல! ஒரே கனவு!
* அதனால் விடியலில் பூக்க வேண்டிய பூ, காலையில் தான் அரும்பே விடுதாம்! = காலை அரும்பி
* பகல் முழுக்க, விரியலாமா வேணாமா-ன்னு குழம்பிக் குழம்பி...விரியத் தயாரா இருக்கு, ஆனா விரியல = பகலெல்லாம் போதாகி
* மாலையில், பறவைகள் தத்தம் துணையோடு சேர, கூட்டுக்குத் திரும்பும் வேளையில், அதைக் கண்டு ஏங்கி, பட்டு-ன்னு விரியுது = மாலை மலரும் இந்நோய்
இப்படிக் காதலால் காலமே மாறுது-ன்னு, காலம்+காதலை ஒரு சேரக் காட்டும் அழகுத் தமிழ்க் கவிதை!
நாளை நற்றமிழ் அறிஞர் இராம.கி ஐயாவின் உரையோடு, தைத்தமிழ் நன்னாளில், இந்தக் கோதைத் தமிழ்த் தேர் நிலைக்கு வரும்!

//காதலில் விழுந்த ஆளுங்களுக்கு, காலங்களும் மாறி விடுகிறதாம்!
ReplyDeleteவைகறைத் துயில் எழு-ன்னு கூற்றுப்படி, வைகறையில் எழுந்திரிச்சிக்க முடியல! ஒரே கனவு!
///
ஓஹோ அப்படியா:)
சுருக்கமான விளக்கம் ! இன்னும் எதிர்பார்த்தேன் பரவாயில்லைரவி!:) யார் பேசறா இன்னிக்குன்னு பாத்தா யாரையுமே காணோமே!
சிற்றஞ்சிறுகாலை இப்போது கொஞ்சம் பெரிய காலையில் கேட்கிறது! விளக்கம் குரலில் அருமை..யார்னு பேரை சொல்லகூடாதா?
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசியிருக்கீங்க KRS. அந்த கண்ணன் அருளால் எல்லா வளமும் பெற்று இன்புறுவிர்! நன்றி!
ReplyDeleteமேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ என்று கண்ணனை சொல்கிறாள் ஆண்டாள். நம்மை எல்லாம் மேய்ப்பவன் தானே அவன்.
இறைவன் மேல் உள்ள காதல் தவிர மற்ற எல்லா காமங்களையும் மாற்று என்கிறாள் கோதை. அந்த காமங்களையும் அவன் மேல் திருப்பி விட வேண்டும். அப்படி செய்தால் அந்த அளவிட முடியாத காமம் நம்மை ஆனந்தக் கடலில் மூழ்கடித்து விடும்.
amas32
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
அருமையான விளக்கம் ........முதன் முதலாக குரலும் கேட்டேன் ...அருமை.
ReplyDeleteஅன்புடன்
பொறுமையான அருமையான விளக்கம்! நன்றி @kryes.
ReplyDeleteஇறுதில உங்களுக்கு குளிர் ஆட்டிருச்சோ? ;-)
சைட் அடிக்கிறது தப்பு தான். :) :)
ReplyDelete