கோதைத்தமிழ்21: வள்ளல் @SeSenthilkumar
மக்கா, வணக்கம்! இன்றைய தாமதத்துக்கு மிகவும் மன்னிக்க வேண்டுகிறேன்!
நேற்று அதிகாலை கிளம்பி.......இப்ப தான் வீடு வந்து சேர்ந்தேன்.....இதோ பதிப்பித்து விட்டுத் தூங்கச் செல்கிறேன்!
இன்னிக்கி பேசுறவரு = ஒவ்வொரு நாளும் ட்விட்டரில் இடையறாது Good Morning சொல்பவர்!
பலரையும் தம்பி என்று அரவணைத்து அழைப்பவர்! பிள்ளைப் பாசம் மிக்கவர்! தமிழுணர்வு கொண்டவர் = யாரு?
= செந்தில்குமார் (எ) @SeSenthilkumar தான்! கேளுங்கள்!
நன்றி செந்தில் அண்ணே! நீங்களும் என்னை மன்னிக்க!
நான் இல்லாத வேளைகளில் Tweetகளையும் பதிவையும் Schedulerஇல் கொடுத்து விட்டுச் செல்வேன்! ஆனால் இம்முறை முடியவில்லை!
ஆனாலும் சென்ற இடத்தில் பெரும் நிம்மதி + மகிழ்ச்சி! கண் குளிரக் கண்டேன் என்னவன் வாசலை!:)
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப,
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்!
ஆற்றப் படைத்தான் மகனே, அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்!
மாற்றார் உனக்கு வலி தொலைந்து, உன் வாசற் கண்
ஆற்றாது வந்து, உன் அடி பணியுமா போலே,
போற்றி யாம் வந்தோம், புகழ்ந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!
மேலோட்டமான பொருள்: கலங்களைக் காட்டியவுடனே பால் பொங்கி வழிகிறது! இப்படியான பசுக்களை உடைய நந்தகோபன் மகனே, எழுவாய்!
நீ அன்பு மிக்கவன், பெருமை மிக்கவன், உலகில் மற்றவர் போல் பிறவாது, "தோன்றியவன்"!
மாற்றார்கள், உன் முன்னே வலிமை இழந்து, வாசலுக்கு வந்து, உண்மை உணர்ந்து நிற்பார்கள் அல்லவா! அது போல நாங்களும் நிற்கிறோம்! எங்களுக்காக எழுவாய்!
இன்றைய எழிலான சொல் = வள்ளல்!
அது என்ன வள்-ளல்? வள்-ன்னு எரிஞ்சு விழுவாரா?:)) இல்லை!
வள் என்பதன் வேர்ச் சொல் = வளம்!
வள்/ வளம் = மிகுதி, அதிகம்
நலமா இருக்கேன்-ன்னா = ஏதோ நலமா இருக்கேன்!
வளமா இருக்கேன்-ன்னா? செழிப்போடு இருக்கேன் அல்லவா!
ஆக வள்/வளம் = மிகுதி!
* மிகுதியாகக் குடுப்பது = வண்மை (வள்ளல்)
* பகுதியாகக் குடுப்பது = கொடை!
நாம குடுத்தா கொடை! கர்ணன் குடுத்தா வண்மை!
இப்படி வளமோடு குடுப்பது வள்ளல் ஆகிறது!
இப்படிக் குடுப்பதற்கு முதலில் மன வளம் வேண்டும்! அடுத்துப் பண வளம் வேண்டும்!
இப்படி மனம் + பணம் = இரண்டு வளமும் உள்ளவர் = வள்ளல்!
முதலேழு வள்ளல்கள், இடையேழு வள்ளல்கள், கடையேழு வள்ளல்கள் -ன்னு தமிழ் இலக்கியம் பேசும்!
பாரி, ஓரி, நள்ளி, பேகன்....முதலான கடையேழு பேர்!
* மனவளம் (கருணை) மிக்கவர், பசியால் வாடுவோர்க்கு இடையறாது உணவை வடலூரில் எரித்த வள்ளல் = இராமலிங்க வள்ளலார்
* மனவளம் (கருணை) மிக்கவர், 1000 ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்டோரை ஆலயத்துக்குள் அழைத்துச் சென்ற வள்ளல் = உடையவர் (எ) இராமானுசர்
- பழுத்த நாத்திகர்களான பெரியாரும், பாரதிதாசனும், ஆன்மீக வாதிகளைப் போற்றினார்கள் என்றால், இந்த இருவரை மட்டுமே!
ஆனால்...
மனிதனை வள்ளல்-ன்னு பாடாது....
ஆண்டாள் தான் முதன் முதலாக, ஒரு அஃறிணையை வள்ளல் என்று பாடுகிறாள்!
மாட்டுக்கு மறைக்காது குடுக்கும் மனமும் உண்டு! பால் பொழியும் செல்வ வளமும் உண்டு!
எந்த விலங்கும் ஊருக்கே குடுப்பதில்லை! எனவே மாடு = வள்ளல்!
மாடுன்னாலே செல்வம் தான்! மாடல்ல மற்றையவை!
நாளை பேசப் போவது = ஒரு தமிழ்த் தொழில்நுட்பக் கடல்! வர்ட்டா?:) Sorry again for today's late:)

செந்தில் குமார்,ரொம்ப அருமையா பேசியிருக்கீங்க, வள்ளல் பெரும் பசுக்களைப் பற்றி நல்ல விளக்கம் :-)
ReplyDeleteவேதங்களினாலும் காண முடியாதபடி பெருமையுள்ள திருமாலை, தன் எளிமையான பக்தியால் எப்படி அடைய முடியும் என்று நமக்குக் காட்டிக் கொடுத்த ஆண்டாள் திருவடிகளுக்கு என் வணக்கம்.
amas32
எங்க வீட்டுல என்னையும் கொடைவள்ளல்-னு சொல்லுவாங்க. அது எப்ப எடுத்துச் சென்றாலும் ‘குடை’ திரும்பாது - அதனால்.
ReplyDelete