கோதைத்தமிழ்27: கூடாரை வெல்லும்!
இன்று பேச வேண்டியது ஒரு பிரபல எழுத்தாளர்! அவரின் நேரமின்மையால், ஒலித் துண்டு இல்லாத ஒரு பதிவு இது! Konjam Adjust Maadi:)
இந்த 27ஆம் நாளுக்கு கூடாரவல்லி என்று பெயர்!
பல வீடுகளிலும் இந்தக் காட்சி உண்டு! எங்கள் வீட்டுக் காட்சி இதோ....அம்மா காலையில் செஞ்ச சர்க்கரைப் பொங்கல்:)
ஆனா நான் தான் ரொம்பச் சாப்பிட முடியாம, என்னமோ யோசனையாவே இருக்கேன்!
ஒரு குரலைக் கேட்டா, அது இந்தப் பொங்கலை விட இனிப்பா இருக்கும்! நேற்று சில நொடிகளே கேட்டேன்!
இந்தப் பொங்கலுக்கு, ஊறுகாய் தொட்டுக்கிட்டு சாப்பிட்டேன்! அம்மா ஒரு மாதிரியாப் பார்த்தாங்க:))
இதோ, பாவை நோன்பு முடியப் போகுது! தன் தோழிகளுக்கெல்லாம் கண்ணனிடம் சொல்லி, பரிசு வாங்கிக் கொடுக்குறா கோதை!
ஆண்டாள் ஒரு மிகச் சிறந்த பெண் மேலாளர்! Team Player!
* பாசுரங்கள் 1-5 = நோன்பின் விதிகளைச் சொன்னாள்! Vision Statement! Specifications! அதைக் கொடுத்தாத் தானே நாமும் தெளிவாக வேலை பாக்க முடியுது! Spec இல்லீன்னா எம்புட்டு குழம்ப வேண்டி இருக்கும்?
* பாசுரங்கள் 6-15 = நோன்பு துவக்கம்! அத்தனை பேரையும் வீடு வீடாகப் போய் எழுப்பி, தன்னுடன் சேர்த்துக் கொண்டாள்! Human Resource = Mobilization, Optimization & Motivation!
* பாசுரங்கள் 16-25 = கண்ணன் வீட்டில் Project நடக்குது! வாயிற் காப்போன், நந்த கோபன், யசோதை, பலதேவன், நப்பின்னை-ன்னு மொத்த Team இருக்கு!
* பாசுரம் 26 (நேற்றைய பாசுரம்) = Project Delivery! கருவிகள் எல்லாம் கேட்டு வாங்கி, டெஸ்டிங் எல்லாம் முடிச்சி.....
* பாசுரம் 27 (இன்றைய பாசுரம்) = Success! அதனால் PROJECT PARTY! :) - பாற் சோறு, மூட நெய் பெய்து...முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோ....
* நோன்பு ஆரம்பிக்கும் போது நெய்யுண்ணோம், பாலுண்ணோம்-ன்னு சொன்னாங்க-ல்ல? - இப்போ "பாற் சோறு, மூட நெய் பெய்து"...
* நோன்பு ஆரம்பிக்கும் போது மையிட்டு எழுதோம், மலரிட்டு முடியோம்-ன்னு சொன்னாங்க-ல்ல? - இப்போ "பல்கலனும் யாம் அணிவோம்"...
இப்போ நோன்பு முடிகிறது அல்லவா?
அதனால், நன்றாக அலங்காரங்கள் செய்து கொண்டு, மையிட்டு, மலர் இட்டுக் கொள்கிறார்கள்!
அவன் அலங்காரத்துக்கு ஒப்பாக, அவன் கண்ணுக்கு இனிமையாக, கண்ணனைச் சூழ்ந்து கொள்கிறார்கள்!
பாற் சோறும், பொங்கலும் பொங்கிப் பொங்கி, உள்ளமும் மகிழ்ச்சியால் பொங்கிப் பொங்கி...இதோ...அந்த இனிப்பான பாசுரம்!
கூடாரை வெல்லும் சீர், கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு, யாம் பெறும் சம்மானம்,
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே!
பாடகமே என்று அனைய, பல்கலனும் யாம் அணிவோம்!
ஆடை உடுப்போம்! அதன் பின்னே பாற் சோறு!
மூட நெய் பெய்து, முழங்கை வழி வாரக்,
கூடி இருந்து குளிர்ந்து! ஏல்-ஓர் எம்பாவாய்!
மேலோட்டமான பொருள்: தன்னோடு கூடாதவர்களையும் வெல்லும் கோவிந்தனே, உன்னைப் பாடி நோன்பிருந்து நாங்கள் பெற்ற இன்பம்!
சூடகம் = கைவளை(Bracelet)! தோள்வளை=வங்கி! தோடு=பெண்கள் காதணி! செவிப்பூ=காது மடலில் குத்திக் கொள்ளும் பூ! பாடகம்=கால் வளை
இப்படிப் பல அணிகள் அணிந்து, ஆடை உடுத்தி, தண்ணீரில் பொங்காமல் பாலில் பொங்கிய சோற்றில் நெய் பெய்து, முழங்கையில் நெய் வழியுமாறு, மகிழ்வுடன் உண்போம்! கூடி இருந்து உண்போம்! கூடி இருந்து குளிர்வோம்!
இன்றைய எழிலான சொல் = கூடார்!
அது என்ன கூடார்? எதிரி-ன்னு சொன்னா என்ன?
கூடுதல் = ஒன்றுபடுதல்! கூடார் = ஒன்றுபடாதார்!
கருத்தோடு ஒன்றுபடுதலா? இல்லை அதற்காக ஊரே ரெண்டு படுதலா?:)
கருத்து வேற! மனிதம் வேற!
ஒருவர் கொண்ட கருத்துக்காக, அவர் மேல் வன்மம் வளர்த்துக்கக் கூடாது!
சில சமயம், இந்த வன்மம் மனசுக்குள்ள போய் உட்கார்ந்துகிடும்! சமயம் கிடைக்கும் போது எழுந்து தாண்டவம் ஆடும்!:) அது அறம் அன்று! தமிழ்ப் பண்பும் அன்று!
கூடுமானவரை, அப்படி வன்மம் தரும் சொற்களைத் தவிர்ப்பது நன்று!
எதிரி, பகைவன் ன்னு சொல்லும் போது, ஒரு வெறுப்புத் தன்மை தெரிகிறது! இதெல்லாம் மன்னர்களுக்கு/ நாடுகளுக்கு பொருந்தும்!
நம்ம வாழ்வில் பகைவர்/எதிரி-ன்னு எல்லாம் சொல்லாம, மாற்றார்/கூடார்-ன்னு மென்மையாகவே ஒலிக்கலாம்! என்ன சொல்றீங்க?:)
ஆண்டாளும் அப்படியே ஒலிக்கிறா!
* கூடாரை வெல்லும் = கூடார் = நம்மோடு கூடாதவர்கள்
* மாற்றார் உனக்கு வலி தொலைந்து = மாற்றார் = மாற்று நிலை எடுப்பவர்கள்
இப்படி மென்சொற்களே சரி!
நாளைப் பேசப் போவது, பெயர் குறிப்பிட முடியாத ஒரு பெண் ட்வீட்டர்!:) வர்ட்டா?:)

ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கம் வசிப்பவர்கள், நெல்லைக்காரர்கள், தீதான் சொற்களை சொல்ல மாட்டார்கள். அது தான் ஆண்டாளின் பாசுரங்களில் பல இடங்களில் தெரிகின்றது. அவள் யாரையும் எப்பொழுதும் வைவதில்லை.
ReplyDeleteஎப்பவுமே நோன்பை நல்ல படியா முடிக்கும் போது ஒரு மன நிறைவு ஏற்படும். அந்த மன நிறைவை இந்த பாடலில் நாம் உணரலாம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
amas32