Thursday, January 12, 2012

கோதைத்தமிழ்28: ஓம் என்றால் என்ன? @FamousLadyTwitter

மக்கா வணக்கம்! இன்னிக்கி பேசப் போவது பிரபல பெண் ட்வீட்டர்! ஆனாப் பேரைச் சொல்லக் கூடாது-ன்னு எனக்கு உத்தரவு!:)

விடிய விடியக் கதை கேட்டு, சீதைக்கு இராமன் சித்தப்பா-ன்னு சொன்னாக் கூடப் பரவாயில்லை! ஆனா சின்னம்மா-ன்னு சொல்லலாமா? உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறேன்:))

ஆனா கடினமான Clue குடுக்கலாமாம்! என்னத்த குடுக்க?

* இவிங்க நல்லவுக, வல்லவுக, சேவல் பண்ணைச் சண்டை போடுபவக!
* துரைமாருங்க புத்தகமாவே படிச்சி, Status Update கீச்சிக் கீச்சியே பிரபலமானவங்க!
* கண்ணாலப் பேச்செடுத்தாலே காத தூரம் ஓடுவது போல் சீன் போட்டு, காதல் தூரம் ஓடுபவக....:))
* அப்பாவிகளான என்னையும், @4sn செ.வையும் அடிக்கடி வம்பு பண்ணுபவுக

Any More Difficult Clues??:) கண்டு புடிச்சாச்சா?:)))
அம்மிணி பேசுவதைக் கேளுங்க!
பாசுரத்தின் முதல் வரிக்கு மட்டுமே இத்தனை நுட்ப நுண்ணிய விளக்கம்! மத்த எல்லா வரிக்கும் குடுக்க ஆரம்பிச்சா?



நன்றி அம்மிணி!:) எங்க கிராமத்தின் சாயலை அப்படியே அணுகிப் பேசியமைக்கு!
கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்! பொங்கலுக்கு கிராமத்துக்கு போனது போல் ஒரு Effect இப்பவே கிடைச்சிருச்சி!:)



கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்!
அறிவு "ஒன்றும்" இல்லாத ஆய்க் குலத்து, உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்!
குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா, உந்தன்னோடு,


உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!
இறைவா நீ தாராய் பறை! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: கறவை மாடுகளுக்குப் பின்னாலேயே சென்று, காட்டை அடைந்து, அனைவரும் சேர்ந்து உண்போம்!
இப்படி, மாட்டை நாங்கள் முன் நடத்திச் செல்லாமல், மாடு எங்களைப் பின் நடத்திச் செல்கிறது! இப்படியான அறிவில்லா ஆயர் குடி!

அதில் நீ வந்து தோன்றினாயே கண்ணா! என்ன புண்ணியஞ் செய்தோமோ? குறை ஒன்னுமே சொல்ல முடியாத கோவிந்தனே!
நீ - உறவு - நான்! = இதை யாராலும் ஒழிக்க முடியாது! ஒழித்தாலும் ஒழிக்க ஒழிக்க ஒழுகும்! நம் உறவு என்னைக்கும் இருக்கும்!

ஏதோ ஆயர் குடிப் பசங்க, அறிவில்லாமப் பேசினா, அதையெல்லாம் மனசுல வச்சிக்காதேடா! நீயே எங்களுக்கு எல்லாமும்! நீயே பறை தருவாய்! எங்களை ஏற்றுக் கொள் பெருமானே!



இன்றைய எழிலான சொல் = உன் தன்னோடு-உறவேல்-நமக்கு!

என்னடா இவ்ளோ பெரிய சொல்லா?-ன்னு பாக்குறீங்களா? - இது தமிழ் மந்திரச் சொல்! ஓங்காரத்தைக் குறிப்பது!

ஓம் என்பது வடமொழி அல்ல! அது ஒரு ஒலிக் குறிப்பு மட்டுமே!
அது பல மொழிகளிலும் இருக்கு, சமணம், சீக்கியம் போன்ற சமயங்களிலும் இருக்கு! அதை, கோதை தமிழில் காட்டுகிறாள்!

முன்பு அப்பாவுக்குப் பாடஞ் சொன்ன என் முருகன், என்ன சொன்னான்? = யாரும் சொல்ல மாட்டாங்க!:)
பிரணவப் பொருள் சொன்னான், சொன்னான்-ன்னு சொல்லுவாங்களே தவிர, அது என்ன பொருள்-ன்னு மூச்சு விட மாட்டாங்க!
ஏன்னா ரகசியமாம்! வேதம் படிக்கறவா மட்டும் தான் தெரிஞ்சுக்கணுமாம்!:)

ஆனா, கோதையிடம் இந்தச் சட்ட திட்டம் எல்லாம் வேலைக்காவாது!
எல்லாரும் அவனை அடைய வேணும்-ன்னு நினைப்பவள்!
தான் நரகம் புகினும், மற்ற அனைவரும் திருநாடு புகுவார் அல்லவா என்று பின்னாளில், ஒருவரை, இதுவே கோபுரம் ஏறிப் பேச வைத்தது!

ஓம் = அ + உ + ம்
* அ = 'அ'வன்
* ம் = நா'ம்'
* உ = 'உ'றவு

அவனுக்கும் நமக்கும் உள்ள உறவு என்னைக்கும் இருக்கு! அதை அவனே நினைச்சாலும் ஒழிக்க முடியாது! = அதான் ஓம்!
வேதங்கள்/ தமிழ் மறைகளின் உயிர் நாடி = ஓங்காரம்! மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி...என்பர்!

* அம்மா மேல புள்ளைக்கு ஆத்திரம், நீயெல்லாம் அம்மாவா?-ன்னு புதுப் பொண்டாட்டி பேச்சில் மயங்கி அவளை மறுதலிக்கலாம்!
* புள்ளை மேல் அம்மாவுக்கு கோவம்! உன்னைப் போய் பெத்தேனே-ன்னு அழுவலாம்! ஆனா அம்மா-பிள்ளை உறவு? அதை அழிக்க முடியுமா?

அவ தொடர்பையே அறுக்கணும்-ன்னு, அவன் போய், ஆயிரங் கோடி செலவழிச்சாலும், தன்னோட DNAவை மாத்திக்க முடியுமா?:)

* எப்படி DNA-வை மாத்த முடியாதோ, அப்படி ஓங்காரத்தை மாத்த முடியாது! இறைவனாலும் முடியாத ஒரு செயல்-ன்னா, இது ஒன்னு தான்!
நமக்கும் அவனுக்குமான உறவை, அவனே நினைச்சாலும் அழிக்க முடியாது! ஒழிக்க ஒழியாது என்கிறாள் கோதை!

இதுவே முருகன் சொன்ன ஓங்காரப் பொருள்!
மத்த விளக்கமெல்லாம் சும்மா தத்துவம்! அ-உ-ம=பிரம்மா-விஷ்ணு-சிவன், மேல்பாகம்-வயிறு-அடிப்பாகம், குண்டலினி ன்னு எல்லாம் ஏதோ சொல்லுவாய்ங்க!
Juz Forget It! Those are Latter Day Hypes for Om!
ரொம்ப தத்துவமெல்லாம் இல்லாம, இறைவனிடம் நம் உறவை முன் வைப்பதே ஓம்! = தமிழ்ப் பொருள்!

ஓம் = அ+உ+ம் = அவன்-உறவு-நாம் 
= உன்தன்னோடு + உறவேல் + நமக்கு!

நாளை முத்தாய்ப்பாக நான் முடிக்கிறேன்!
30ஆம் பாசுரத்தை, நற்றமிழ் அறிஞர், இராம.கி. ஐயாவின் உரையோடு, இந்த #TamilTwittersPodcast என்னும் தமிழ்த் தேர், அசைந்து நிலைக்கு வரும்!

26 comments:

  1. Secret admirer மாதிரி identity hidden speaker :-) கிராமத்துக் காட்சி கண் முன்னே விரிகிறது. கண்ணன் எப்படி மாடு மேய்ச்சிருப்பாருன்னு காட்டினதுக்கு நன்றி தோழி :-)
    ஆம், அவனுக்கும் நமக்கும் உள்ளது தொப்புள் கொடி உறவுதான். ஓம் விளக்கம் அருமை. நன்றி KRS
    "சீறி அருளாதே" என்ன அழகான சொற்றொடர்! கோபம் கொள்ளாதே என்பதை கூட ஆண்டாள் எவ்வளவு நயமாக நல்ல வார்த்தைகளில் சொல்கிறாள்.
    "குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா" எவ்வளவு முறை சொன்னாலும் இன்னும் இன்னும் மனமும் நாவும் இனிக்கும்.
    ஆண்டாள் திருவடிகளே சரணம்.
    amas32

    ReplyDelete
  2. Dear KRS, I have been following your tweets and some of the blog posts. I am amazed at your range of interests and depth of knowledge.

    These podcasts - I love them. This particular one, I guess is from Vanathy. So beautiful story telling. She deserves applause

    B'coz it mentioned உறவு - I present a song to you, one of my fav. I had an LP of this long ago. Now yr podcast made me listen to that song again. Thank you. U hv to down load this Murugan song and the hear.

    http://psusheela.org/tam/tamdev_hindu_songs.php?offset=150&ord=song&cos=

    Line 176-enakkum unakkum irukkuthayya uRavu -Murugan paamaalai - Vol II

    (I am @to-pvr in twitter; PV Ramaswamy in FB ... mentioned for info.)

    ReplyDelete
  3. ஆன்லைன் சிக்கிடிச். Have you heard this set of Murugan songs from birth to kalyanam Murugan Pamalai in 2 parts, 1 & 2. Part 1 given below

    http://www.in.com/music/track-murugan-pamalai-part-1-531011.html



    enjoy online

    ReplyDelete
  4. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  5. எனக்கு மிகவும் பிடித்த பாடல்,. நன்றி

    ReplyDelete
  6. எங்களுக்கு எல்லாம் பேச வாய்ப்பு தரமாட்டீர்களா? anyway நல்ல ப்ராஜெக்ட் ;)

    ReplyDelete
  7. நல்ல பாசுரம் இது! கூடாரைவெல்லும் பாடலுக்கு சக்கரைப்பொங்கல் செய்வோம் இதற்கு தயிர்சாதம் கண்ணனுக்கு! ஓம் விளக்கம் புதுமை அருமை! குரலுக்குரியவரை கண்டுபிடிக்க அறிவொன்றுமில்லாத அரங்கநகர்ப்பெண்ணாக இருக்கிறேன்!! பெயரில் என்ன இருக்கிறது கொடுத்த விளக்கத்தில் கீர்த்தி புரிகிறதே! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  8. கே.ஆர்.எஸ், சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    முதலில் தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமே. நாமெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்ததால் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறோம்.
    ஆண்டாளும் தமிழ்நாட்டில் பிறந்ததால் தான் தமிழில் அழகான திருப்பாவை செய்தாள். தமிழ் ஓர் அழகான மொழி.அவ்வளவு தான்
    அதை சிறப்பான மொழி, இது தான் முதலில் தோன்றிய மொழி, தெய்வீக மொழி என்று உணர்ச்சிவசப்பட்டு சண்டைகள் வேண்டாம்.
    தமிழில் ஏன் அர்ச்சனை செய்யக்கூடாது என்றால் அது அப்படித் தான். 'ஜன கன மன' என்ற தேசிய கீதம் வங்காள மொழியில்
    இருக்கிறது. அதை அப்படியே தானே பாடுகிறோம்? நம் மொழியில் நமக்குத் தகுந்தாற்போல் மொழிபெயர்த்துப் பாடுவதில்லையே?

    ஒம் என்பது வெறும் ஒலி தான் என்று சொல்லி விட்டு பிறகு நீங்களே அதை அவன் நாம் உறவு என்றெல்லாம் சொல்வது
    விளையாட்டுத் தனமாக இருக்கிறது.சுலபமாக சொல்கிறேன் பேர்வழி என்று எல்லாவற்றிலும் காமெடியை நுழைக்காதீர்கள்.

    ஒம் என்பது ஒரு ஒலியற்ற ஒலி. ஜென் ஞானி ஒருவர் தன் சீடனை ஒருகை ஓசையை
    கேட்கும் படி சொன்ன கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அது Physical Sound அல்ல.ஆழ்ந்த தியான நிலையில் உயர்
    பரவச அனுபவத்தில் நமக்குக் கேட்கும் ஒரு அசரீர அபௌதீக சத்தம் அது. (well , எனக்கு இந்த அனுபவம் இல்லை!உங்களுக்கும் இருக்காது
    என்ற குருட்டு தைரியத்தில் சொல்கிறேன் :) )பூமியை தாண்டி சென்றால் காற்று கிடையாது.
    எனவே ஒலியும் கிடையாது.இந்த விஷயம் நம் முன்னோர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.எனவே தான்
    ஓமை அசரீர ஒலியாக சித்தரித்தார்கள்.

    பெண்கள் ஒம் சொல்லக்கூடாது என்று சொல்வார்கள். உண்மையில் ஆண்களும் சொல்லக்கூடாது. இறைவனின் பெயரை
    ஞானம் அடையாமல் சொல்லக்கூடாது; சொன்னால் பாவம் என்று கருதும் ஒரு மதமே உண்டு. இன்றோ சிலர்
    தமிழில் நாலு எழுத்து படித்துவிட்டு திருப்பாவை திருவெம்பாவைக்கு தங்கள் ப்ளாக்கில் விளக்கம் சொல்ல புகுந்து விடுகின்றனர்!
    (உங்களை சொல்லவில்லை :) )---தொடர்கிறது

    ReplyDelete
  9. ஹிந்து மதத்தின் நூல்கள் பெரும்பாலும் ஓம் என்று தொடங்கும். அதை நாம் வாயால் ஓம் என்று சொல்லக்கூடாது. எம்.எஸ். விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆரம்பிக்கும் போது ஒம் என்று ஆரம்பிப்பதை என் பாட்டி கடுமையாக ஆட்சேபிப்பார்.எனக்கும் ஆட்சேபனை தான். அவர் பெண் என்பதால் சொல்லவில்லை.ஆண்களும் ஓம் என்பதை விட்டுவிட்டு தான் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.ஏனென்றால் அதை எழுதியவர் உண்மையில் ஞானம் பெற்றவரா, மிக உயரிய விஷயங்களை எழுத அவருக்கு தகுதி இருக்கிறதா என்பதன் அத்தாட்சி தான் அந்த initial ஓம்.அதை தன் ஆழ்ந்த தியானத் தன்மையில் அவர் பிரபஞ்சத்திடமிருந்து
    கேட்டிருக்கிறார் என்பதன் அத்தாட்சி தான் அது.அந்த ஒம் அவர் சொன்னதல்ல. இறைமை நீ இதை எழுதலாம் என்று எடுத்துக் கொடுத்த முதல் அட்சரம் அது. அதை நாம் ஏகாந்தத்தில் கேட்காதவரை
    தெய்வீக விஷயங்களை எழுதவோ கேட்கவோ நமக்கு அருகதை துளியும் இல்லை. கோயிலுக்குப் போனால்
    கல்யாணம் நடக்கும் , திருப்பாவை கேட்டால் செல்வம் பெருகும் என்ற குழந்தைத்தனமான விஷயங்களுக்கு மட்டுமே நாம் ஆன்மீகத்தைப் பயன்படுத்துகிறோம். கல்யாணம் என்பது மனிதனின் கண்டுபிடிப்பு. அதைப் பற்றி இறைவனுக்கு என்ன தெரியும்? அவன் என்ன ப்ரோக்கரா?

    -தொடர்கிறது

    ReplyDelete
  10. தமிழில் அர்ச்சனை செய்யலாம் தான். குற்றம் எதுவும் இல்லை. ஆனால் ஒரு விஷயத்தை சமஸ்கிருதத்தில் மட்டுமே சுருக்கமாக சொல்லி விட முடியும். பர்வதஹ நமஹ என்று சொல்லி விட்டால்
    முடிந்தது.தமிழில் மலையை சுமந்தவனே போற்றி! என்று இழுக்க வேண்டி வரும். ஆங்கிலத்தில் கேட்கவே வேண்டாம். you , who bore the mountain ,salute unto you ! அறிவியல் சூத்திரங்களை
    தமிழில் மொழிபெயர்க்கலாமே என்று சொல்வது போல இருக்கிறது இது. மந்திரங்கள் ஒரு மொழி அல்ல என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவை ஒரு கணிதம். கணிதக் குறியீடு.
    டூ பிளஸ் டூ இஸ் ஃபோர் என்பது போல. அதை தமிழில் சொன்னால் என்ன பெருமை?சுருக்கமாக அதே நேரத்தில்
    சொல்ல வந்த கருத்தை அப்பட்டமாக சொல்லவே முனிகள் சமஸ்கிருதத்தை தேர்ந்தெடுத்தனர்.

    -தொடர்கிறது

    ReplyDelete
  11. தமிழில் காரணப்பெயர்கள் இருக்கின்றன என்று நீங்கள் அடிக்கடி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தொங்குவதால் மாலையை தொங்கல் என்கிறோம் என்று சொல்லி இருந்தீர்கள்.
    சரி. தொங்குதல் (hanging ) என்பதற்கு என்ன உள்ளார்ந்த அர்த்தம் இருக்கிறது? It 's a sound !அதே போல சமஸ்கிருதமும். பிரம்மா என்பதற்கு என்ன அர்த்தம் சொல்ல முடியும்?
    அது அர்த்தமற்ற ஒரு ஒலிக்குறிப்பு மட்டுமே. முதலில் சப்தங்களை உருவாக்கி விட்டு பிறகு அதற்கு ஏற்ற சொற்களை , வார்த்தைகளை தேர்ந்தெடுத்த மொழி சமஸ்கிருதம்.
    நாம் அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்தால் Vibration கண்டிப்பாக கிடைக்காது. இங்கேயும் கிடைக்கிறது என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம். எனவே தமிழில்
    அர்ச்சனை என்பதை கண்டிப்பாக எதிர்க்கிறேன். தமிழில் நாம் இறைவன் மீது காதல் கொண்டு பாடலாம். செய்யுள்கள் இயற்றலாம். 100 % agreed .
    ஆனால் அர்ச்சனையை விட்டுவிடுங்கள். அறிவியல் ரீதியாக யோசியுங்கள்! எல்லா மொழிகளும் ஒலி தான்.பரிச்சயமே இல்லாத ஒரு மொழியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும். ஆனால் இந்த ஒலிக்கும் மொழியின் வார்த்தைகளுக்கும் ஒரு அற்புதமான Symmetry , Synchronization இருப்பது சமஸ்கிருதத்தில் தான்.உதாரணமாக சூர்ய என்று சொல்லும்போது உடல் வெப்பம் ஒரு மில்லி மில்லி மில்லி டிகிரி
    அதிகரிப்பதையும் சந்த்ர என்று சொல்லும் போது அதே அளவு குறைவதையும் ப்ரொபசர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.சமஸ்கிருதம் எல்லாம் தெரியாத ஒரு உயிரியின் மீது நடத்தப்பட்ட ஆய்வு அது.

    ReplyDelete
  12. ஒலி என்பது என்ன? அறிவியல் அதை அதிர்வுகள் என்கிறது. அந்த அதிர்வுகள்
    ஊடகம் ஒன்றின் வழியே கடத்தப்படும்போது ஒலியாக உணரப்படுகின்றன.அப்படியானால் ஓம் எவ்வாறு கடத்தப்படுகிறது? இப்போது நம் கண்கள் குருடாகி விடுவதாக வைத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு நமக்கு கனவே வராதா?வரும். அப்படியானால் கனவில் காட்சிகளை பார்ப்பது எது? இப்போது நம் காதுகள் செவிடாகி விட்டாலும் கனவில் ஒலிகள் கேட்கும். அப்படியானால் அதைக் கேட்பது எது?
    ஆகவே ஒலி ஒளி போன்ற உணர்வுகள் புலன்கள் தாண்டியும் ஊடகம் தாண்டியும்
    இயங்கும் என்பது திண்ணம். ஒலி என்பது அதிர்வு என்றால் பிரம்மத்தின் அதிர்வுதான்
    ஓம் என்ற ஒலியா? பிரம்மத்தின் இந்த சூக்ஷும ஒலியை யாரோ முதன்முதலில் உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள். அதிர்வு என்பது பொருளின் அல்லது ஆற்றலின் அடிப்படைப் பண்பு
    என்கிறது இயற்பியல்.இன்னும் விளக்குகிறேன். -தொடர்கிறது

    ReplyDelete
  13. ஒரு பொருளின் அணுக்கள் அதிர்ந்து கொண்டிருப்பதை அதன் வெப்பம் (வெப்பநிலை) என்கிறோம்.
    முழுவதும் அதிராமல் நிறுத்த முடியாது. அசாத்தியம். அதாவது மைனஸ் 273 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை அடைய முடியாது.சரி. அணுவை எடுத்துக் கொண்டாலும் அதிலும் உள்ளார்ந்த அதிர்வுகள் இருக்கின்றன. அணுவின் கட்டுமானமான எலக்ட்ரானை எடுத்துக் கொள்வோம். அதுகூட
    சிவனே என்று இருப்பதில்லை. அதுவும் அதிர்கிறது. இதை SPIN என்று குறிக்கிறார்கள். மேலும் எலக்ட்ரான்,
    ஸ்ட்ரிங் தியரியின் படி ஒரு மெல்லிய ஒருபரிமாண இழையின் அதிர்வுதான். மொத்தத்தில் அதுவுமே 'சும்மா' இல்லை பிரபஞ்சத்தில். 'சராசரா' என்றால் சரம் மற்றும் அசரம் . நகர்வது மற்றும் நகராமல் இருப்பது. எல்லாமே அதிர்ந்து கொண்டிருந்தால் பின்புலத்தில் ஏதாவது ஒன்று அதிர்வில்லாமல் இருக்கவேண்டும் அல்லவா? (ஜீரோ ஸ்பின்!) அப்படியென்றால் ஜீரோ ஸ்பின் துகள் தான் கடவுளா? ஹிக்ஸ் போசான் அடிப்படைத் துகள்தான் கடவுளா? இப்படியெல்லாம் யோசிக்க வேண்டாம் :) விடுங்கள். கடவுள் என்பவன் நீங்கள் சொல்வதைப் போல இயக்கம் இயக்கமின்மை இரண்டையும் கடந்தவன்.
    He is a particle whose spin is neither zero, nor positive, nor negative.A spin which cannot be determined!

    ReplyDelete
  14. இப்படி பிரபஞ்சத்தின் ஆதாரமான அதிர்வுகள் ஒத்திசைந்து அதிரும் ஒரு
    இன்னிசை தான் ஓம் என்று தோன்றுகிறது. பிரபஞ்ச சங்கீதத்திற்கு
    பின்புல சுருதி தான் இந்த ஓம். ஓஷோ, ஓம் என்று சொல்வதை விட
    (சொல்லியே ஆக வேண்டும் என்று அடம்பிடித்தால்) வெறும் ஒ என்று
    சொல்லுங்கள் என்கிறார். ஒ என்ற ஒலி ஒரு பூமராங் போல, சுய திரும்பல்
    சக்தி கொண்டது. அது திரும்ப வந்து பாலுணர்வு மைய சக்கரத்தை
    தாக்கும்.(slightly inclined return path!) எனவே குண்டலினிக்கும் ஓமுக்கும்
    தொடர்பு இல்லை என்று நீங்கள் சொன்னதை கண்டிக்கிறேன். தமிழ் ஓமின்
    குறியீடு அழகானது. தமிழ் எழுத்து ஒ! அது ஒரு CLOSED CIRCUIT ஐக்
    குறிக்கிறது.நாம் வெளிவிடும் ஆற்றல் பெரும்பாலும் open circuit இல் சுலபமாக வெளியே போய் விடுகிறது.புலன்கள் மூலம்! எனவே இந்த ஆற்றலை எப்படி மீண்டும் உள்ள செலுத்துவது என்ற LOOP-BACK டெக்னிக் தான் இவையெல்லாம்.அதாவது கண்ணாடியில் நம்மை நாமே பார்த்துக் கொள்வது ஒருவித தியானம்
    ஒளி நம்மிடம் மீண்டும் திரும்ப வருகிறது அல்லவா? அதே போல சப்தத்தின்
    loop -back தான் இந்த ஓம். ஒ என்று சொல்லும்போது நம் குண்டலினி தூண்டப்பட்டு பிரபஞ்சத்துக்கு நாம் Receptive ஆகிறோம். அது 'ம்' என்று ஒலியை சேர்த்து ஓம் முழுமை அடைகிறது. எனவே சொல்லியே ஆக வேண்டும் என்றால் ஒ என்று சொல்லுங்கள். பிரபஞ்சம் கண்டிப்பாக 'ம்' என்று Acknowledge செய்யும்.

    ReplyDelete
  15. பதில் போட மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.இருந்தாலும் ஏதோ
    ஓர் உணர்ச்சியில் தெரிந்ததை சொல்லிவிட்டேன். தவறு இருந்தால்
    தயைகூர்ந்து மன்னிக்கவும்.

    ReplyDelete
  16. சமுத்ரா said...
    கல்யாணம் என்பது மனிதனின் கண்டுபிடிப்பு. அதைப் பற்றி இறைவனுக்கு என்ன தெரியும்?//

    ராம ராம சீதா பதி
    ராம ராம சீதா பதி
    ராம ராம சீதா பதி

    ராம ராம நீயே கதி :)

    ReplyDelete
  17. அன்பின் சமுத்ரா
    //பதில் போட மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்//

    :)))
    நிச்சயம் பதில் இடுகிறேன்! உங்கள் ஒவ்வொரு புள்ளியும் நல்ல கேள்விகளே! முன்பே உங்க கேள்விக்கு மட்டும் தானே பதில் சொன்னேன்! cha, sa உச்சரிப்புக்கு:))

    மன்னிப்பு எல்லாம் எதுக்கு கேக்கறீக! பந்தலில் வரும் எந்தக் கேள்வியும் புறம் தள்ளியதே கிடையாது! அனைத்தும் அடியவர் கேள்விகளே!

    ReplyDelete
  18. ஓம்,நமசிவாய,நாராயணாய,ஈஸ்வரன் என்பதெல்லாம்
    ஒரு குறிப்பிட்ட மொழிக்கே உரியது என்பதை விட அழிவற்ற பிரம்மத்தை(consciousness)குறிப்பிடும் சப்தமாகவே நான் கருதுகிறேன்.
    தமிழ் தேவார,பிரபந்தங்களிலும் சமஸ்க்ருத ச்லோகங்களிலும்,வேதத்திலும் இதே சொற்கள் modify செய்யபடாமல் பயன்படுத்தபடுகின்றன.

    காசியில் பரமசிவன் 'ராம' நாமம் சொல்வதாக நினைத்து கொண்டு இருந்தேன்.சமீபத்தில் ஒரு blog இல் அது 'ஓம்' என்று புதிதாக விளக்கி இருந்தார்கள்.ஈஸ்வரனுக்கே வெளிச்சம்.நான் அத்வைதி என்பதால் எனக்கு ராம/ஓம் இரண்டுக்கும் வித்தியாசமில்லை.

    http://mahapashupatastra.blogspot.com/2011/08/sita-rama-tatwam-replica-of-shiva.html

    இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் இங்கு KRS சொன்னது அவருடைய version.There are actually several different versions of the same truth.

    ஒரே பிரம்மசூத்திரதிற்கு சங்கரர்,மாத்வர்,ராமானுஜர் ஆகிய மூவரும் தங்களுடைய சித்தாந்தங்களை ஆதரிக்கும் விதமாக விளக்கவுரை இயற்றி உள்ளனர்.யார் சரி? நாம் யாரை குருவாக ஏற்கிறோமோ அவரே சரி.

    எந்த மந்திரமுமே முறையாக குரு உபதேசம் பெற்றால் மட்டுமே அதனை முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என்று எல்லா சமய குருமார்களும்(மாணிக்கவாசகர்,ராமானுஜர்) ஏற்று கொண்டு இருக்கிறார்கள்.என்னுடைய கருத்தும் அதுவே.Simplified definitions எல்லோருக்கும் புரியாது/ஏற்க மாட்டார்கள்.

    ReplyDelete
  19. @சமுத்ரா
    This was long pending! Sorry for the late reply:)

    //முதலில் தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமே//

    You are grossly mistaken!
    தமிழ் என்பது மொழி! ஆனால் மொழி மட்டுமல்ல!
    மரபு, பண்பாடு, இலக்கியம், நாகரீகம்...ன்னு தமிழின் எல்லை விரிந்த ஒன்று! அந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் தான், நீங்கள் மேலும் பேச முடியும்!

    //தமிழில் ஏன் அர்ச்சனை செய்யக்கூடாது என்றால் அது அப்படித் தான். ’ஜன கன மன’ என்ற தேசிய கீதம் வங்காள மொழியில் இருக்கிறது. அதை அப்படியே தானே பாடுகிறோம்?//

    ஜன கன மன = நாட்டின் அடையாளப் பாடல்!
    எனவே அதை அப்படியே பாடுகிறோம்!

    அர்ச்சனை = அடையாளமா? இல்லையே!
    அர்ச்சனையின் பயனர் யார்? = நாம்!
    பயனர்களுக்கு வழங்கும் சேவை, பயனர்கள் அறிய வேண்டாமா?

    அடையாளப் பாடலைத் தவிர்த்து...எத்தனையோ தேச பக்திப் பாடல்கள் தமிழ், தெலுங்கு, இந்தின்னு பல மொழிகளில் வருகிறது அல்லவா?

    அப்படி இருக்க, ஒவ்வொரு அர்ச்சனையும் வடமொழியிலேயே வைத்துப் பாதுகாப்பது ஏனோ?:) நியாயமான பதில் சொல்லுங்க பார்ப்போம்!
    ----

    //ஒம் என்பது வெறும் ஒலி தான் என்று சொல்லி விட்டு பிறகு நீங்களே அதை அவன் நாம் உறவு என்றெல்லாம் சொல்வது விளையாட்டுத் தனமாக இருக்கிறது//

    அட...
    அ என்பது ஒரு ஒலி!
    அம்மா என்பதும் ஒரு ஒலி!
    ஆனா, ஒலி தான் அம்மாவா?

    அந்த ஒலி அம்மா என்னும் குணத்தை/நபரைக் குறிக்குது!
    அதே போல் ஓம் ஒலி தான்! அது அவன்-உறவு-நாம் என்பதைக் குறிக்குது!

    இது என் "காமெடி" அல்ல!
    இது நீங்க சொல்லும் அதே வேதங்களின் காமெடி!

    அ-காரேன உச்யதே சர்வ பூதோ ஹரி
    உ-காரேன உத்ருத்ய காரணே ததா
    ம-காரேன து தயோர் தாசஹ
    இதி பிரணவ லக்ஷணம்

    போதுமா?:))

    ஏதோ ஜென் கதைகளையும், ஓம் பற்றிய பாட்டிக் கதைகளையும் படித்து விட்டு, பின்னூட்டம் போட்டு விடலாம் என்று நினைக்கிறார்கள் (உங்களைச் சொல்லவில்லை):)))

    ReplyDelete
  20. @சமுத்ரா

    ஓம் என்பதைப் பெண்கள் சொல்லக் கூடாது! ஆனா எம் எஸ் சுப்புலட்சுமி சொல்லிட்டாங்க! அதான் குழந்தையே இல்ல! படாதபாடு பட்டாங்க-ன்னு சில "லூசுகள்" பேசுவதை நானும் கேட்டிருக்கேன்:))

    //கோயிலுக்குப் போனால்
    கல்யாணம் நடக்கும் , திருப்பாவை கேட்டால் செல்வம் பெருகும் என்ற குழந்தைத்தனமான விஷயங்களுக்கு மட்டுமே நாம் ஆன்மீகத்தைப் பயன்படுத்துகிறோம்//

    அது ஒரு படி!
    அது ஒங்களுக்கு கேலியா போயிருச்சி!

    ஞானம் தான் ஒஸ்தி, இது போலப் பக்தியெல்லாம் சும்மா-ன்னு ஒரு மேலாதிக்க எண்ணம்!

    தன் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளையும் (கல்யாணம்/குழந்தை) - கடவுளை ஒட்டியே வைத்துக் கொள்ளும் எளிய பக்தன் பெரியவனா?
    இல்லை ஞானத்துக்கு மட்டும் இறைவனைத் தொட்டுக் கொள்ளும் "விசாரிப்பவன்" பெரியவனா?

    கண்ணன் கீதையில் எனக்குப் பிடித்தமானவன், மம ப்ரியஹ என்பது யாரை?:)

    //கல்யாணம் என்பது மனிதனின் கண்டுபிடிப்பு. அதைப் பற்றி இறைவனுக்கு என்ன தெரியும்? அவன் என்ன ப்ரோக்கரா?//

    ஓ...அப்போ இறைவனுக்குத் தெரியாத ஒன்னும் இருக்கு! அதுக்குப் பேரு கல்யாணம்! சூப்பரு!:)

    கல்யாணம்-ன்னாலே வேணும் ஆனால் வேணாம் ன்னு ஏன் பெரும்பாலானோர் நினைக்கிறாங்க-ன்னு இப்போ தான் புரியுது! :)) ஏன்னா அது கடவுளுக்கே பிடிபடாத ஒன்னாச்சே!:))))

    ReplyDelete
  21. //தமிழில் அர்ச்சனை செய்யலாம் தான். குற்றம் எதுவும் இல்லை//

    நன்றி!

    //ஆனால் ஒரு விஷயத்தை சமஸ்கிருதத்தில் மட்டுமே சுருக்கமாக சொல்லி விட முடியும்//

    என்னவொரு ஆணவப் பேச்சு!

    மீதி மொழியில எல்லாம் நீட்டி முழக்கணும்? ஆனா சம்ஸ்கிருதம் சிம்பிளா முடிச்சிறலாம்! அதானே?

    சம்ஸ்கிருதம் = ஸ்வாமி புஷ்கரிணி
    தமிழ் = கோனேரி
    எதுங்க சுருக்கம்?

    //பர்வதஹ நமஹ என்று சொல்லி விட்டால் முடிந்தது.தமிழில் மலையை சுமந்தவனே போற்றி! என்று இழுக்க வேண்டி வரும். ஆங்கிலத்தில் கேட்கவே வேண்டாம். you , who bore the mountain ,salute unto you !//

    இந்தச் செப்பிடி வேலையெல்லாம் நடக்காது!

    பர்வதஹ நமஹ
    மலையோன் போற்றி
    Hail Mt Bearer

    இப்போ என்ன சொல்லப் போறீங்க?:)
    ----

    //அறிவியல் சூத்திரங்களை
    தமிழில் மொழிபெயர்க்கலாமே என்று சொல்வது போல இருக்கிறது இது//

    யாரும் a^2 + b^2 + 2ab ஐ...
    அ‍^2 + ஆ^2 + 2அ*ஆ
    ன்னு எழுதச் சொல்லலை:)

    அர்ச்சனை அறிவியல் சூத்திரம் அல்ல! அது மக்களுக்குச் செய்யப்படும் ஒன்னு! = சங்ல்பம்! அது மக்களுக்குப் புரியணும் என்பதே கருத்து!

    //மந்திரங்கள் ஒரு மொழி அல்ல என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவை ஒரு கணிதம். கணிதக் குறியீடு.//

    தோடா! புதுசாப் புதுசாக் கெளப்பறீக?:)
    மந் = நினைப்பது த்ர=காப்பாற்றுவது!
    நினைப்பவர்களைக் காப்பாற்றுவது = மந்திரம்!

    அது எந்த மொழியிலும் இருக்கலாம்! இந்த மொழி மட்டுமே அதுக்குச் சரிவரும்-ன்னு சொன்னா...அது ஏகாதிபத்தியம் (அ) சண்டித்தனம்!

    //சொல்ல வந்த கருத்தை அப்பட்டமாக சொல்லவே முனிகள் சமஸ்கிருதத்தை தேர்ந்தெடுத்தனர்//

    எந்த முனிகள்?
    மணவாள மாமுனிகள் தெரியுமா? வேதாந்த தேசிகர் தெரியுமா?
    அவங்க என்ன சொன்னாங்க ன்னு தெரியுமா?

    செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி
    தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!

    - வடமொழி வேத மந்திரங்கள் = தெளியாத மறை நிலமா இருக்கு!
    செய்ய ஆழ்வார் தமிழ் மாலைகள் ஓதினாப் பிறகு தான் தெளிவே கிடைச்சுது!

    Any comments?:))

    ReplyDelete
  22. //முதலில் சப்தங்களை உருவாக்கி விட்டு பிறகு அதற்கு ஏற்ற சொற்களை , வார்த்தைகளை தேர்ந்தெடுத்த மொழி சமஸ்கிருதம்//

    தோடா...

    அப்போ மத்த மொழியெல்லாம், அ-ஆ, A-B ன்னு எழுதிட்டு, அப்பறம் தான் அதுக்கு சவுண்டு குடுத்தாங்களா?:)

    எல்லா மொழியும், ஒலியில் தான் தொடங்குகின்றன!
    ஒலிக்குத் தான், அவரவர் வடிவம் கொடுத்துக் கொள்கின்றனர்!
    ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே என்பது தேவாரத் தெய்வத் தமிழ்!

    சும்மா, Metaphysics, Cosmos, Spinன்னு எல்லாம் பேசினா பயந்துருவோம்-ன்னு நினைச்சிக்காதீங்க!:)
    ---------

    //எனவே தமிழில் அர்ச்சனை என்பதை கண்டிப்பாக எதிர்க்கிறேன்//

    அது உங்கள் உரிமை!
    * ஆனால் உண்மையைச் சபையில் வைப்பது எங்கள் உரிமை!
    * தேர்ந்தெடுத்துக் கொள்வது மக்கள் உரிமை!

    எதிர்க்கிறேன்-ன்னு சொல்லிட்டு, அப்பறம் எதுக்கு இப்படி ஆரம்பிச்சீங்க - //தமிழில் அர்ச்சனை செய்யலாம் தான். குற்றம் எதுவும் இல்லை// Why u wanna contradict yourself?:)

    //தமிழில் நாம் இறைவன் மீது காதல் கொண்டு பாடலாம். செய்யுள்கள் இயற்றலாம். 100 % agreed .
    ஆனால் அர்ச்சனையை விட்டுவிடுங்கள். அறிவியல் ரீதியாக யோசியுங்கள்!//

    கோயில்ல போயி, சும்மா நல்லா இருக்கணும்-ன்னு சங்கல்பம் செஞ்சிட்டு, நாலு கையோனே நமஹ என்பதில் என்னய்யா அறிவியல் இருக்கு?:)

    வுட்டா...வைப்ரேஷன், அறிவியல், Sin θ = nmλ இதெல்லாம் சம்ஸ்கிருத அர்ச்சனையில் இருக்கு டோய்-ன்னு சொல்வீங்க போல இருக்கே:))
    --------

    //ஆனால் இந்த ஒலிக்கும் மொழியின் வார்த்தைகளுக்கும் ஒரு அற்புதமான Symmetry , Synchronization இருப்பது சமஸ்கிருதத்தில் தான்//

    சாரி சார்!
    இதுக்குப் பேரு தான் "திமிர்" -ங்கிறது!

    ஆம்பளையால தான் நிர்வாகம் பண்ண முடியும்! அவன் குணத்தில் அடக்குதல் இருக்கு! பொம்பளையால பண்ண முடியாது-ன்னு சொல்லுறாப் போலத் தான் இதுவும்!

    //உதாரணமாக சூர்ய என்று சொல்லும்போது உடல் வெப்பம் ஒரு மில்லி மில்லி மில்லி டிகிரி
    அதிகரிப்பதையும் சந்த்ர என்று சொல்லும் போது அதே அளவு குறைவதையும் ப்ரொபசர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்//

    உம்ம்ம்ம்...அப்பறம்?

    * தீ என்பதில் நெடில் = ஒரு டிகிரி ஏறுது
    * தண் என்பதில் குறில் = ஒரு டிகிரி கொறையுது
    ஒரு ப்ரொபசர் கண்டு புடிச்சி இருக்காரு!நானும் சொல்லட்டுமா?

    ஒங்க ப்ரொபசர் பேரு என்ன? What is his dissertation? Can u name the journal? Can u indicate whether it was ratified by ISTM (International Society For Testing & Materials)

    சும்மா, திருநள்ளாறு கிராஸ் ஆவும் போது, நாசா கலம், அதிர்வு ஏற்படுது-ன்னு கிளப்பி விடும் சயின்டிபிக் அருள்வாக்கு எல்லாம் செல்லாது செல்லாது:)
    -------

    Every language has a pronunciation & sound pattern!
    The wavelength of sound can be measured at every defined frequencies

    f = c/λ போட்டா, எல்லா மொழிக்கும், எல்லா ஒலிக்கும் அட்டவணை கிடைக்கும்!

    Wave Speed, Acoustic Frequency & Wavelength can be tabulated for all syllables or mantras or sounds whatsoever!
    Never use Science to fool people...like Thirunallaaru Nasa Vibration!:(

    ReplyDelete
  23. அறிவியல்!

    ஒலி = அதிர்வுகளின் ஒரு பரிமாணம்!
    ஊடகம் வழியாக அந்த அதிர்வுகள் கடத்தப்படும் போது, நம் செவிப் புலனக்கு கேட்பது = ஒலி!

    ஒளியும் அதே போலத் தான்!
    இது தான் அறிவியல் பாடம்!

    ஆனா, பிரம்மத்தின் அதிர்வு தான் ஓம் என்கிற ஒலி என்பது அறிவியல் அல்ல! அது வெறும் சமயக் கொள்கை! Dont mix this with that! Do u have scientific proof that Om emanated from Brahmam? or Do u have scientific proof that the 1st primordial sound of cosmos is Om?

    If Om is a Sound, Then what is Light?
    Light travels faster than Sound!
    That means, before the Om sound itself, there is some other "athirvu" which is light energy!
    - Is that also sanskrit "athirvu"? :) Answer to me straight on this question!
    --------

    பிரம்மத்தின் அதிர்வு தான் ஓம் ஆச்சு! சரி, அப்போ மத்த ஒலியெல்லாம் என்னத்தோட அதிர்வு?
    எல்லாம் கடந்த பிரம்மம், ஓம்-ன்னு மட்டுமே ஒலிக்குமா? அ-ஆ, alpha-beta ன்னு ஒலிக்காதா?

    எல்லா ஒலியும், பிரம்மத்தின் ஒலி தான்! அதை அவரவர், அவரவர் பண்பாட்டுக்கு ஏற்ப உணர்கிறார்கள், வாழ்கிறார்கள்!

    என்னமோ பிரம்மத்தின் ஒலி - அடி நாதமே Sanskrit Vibration ன்னு ஓவராக் கதை அளக்க வேணாம்! முடிந்தால் அறிவியல் தரவாக, தேற்றமாக நிரூபியுங்கள்!
    -----------

    Newton's Law states that: Every body continues to be in a state of rest or of uniform motion, unless acted on by an external force!
    All Particles have Zero Spin, or +ve or -ve!

    சராசரம் = சர-அசரம் (அசைவு-அசைவின்மை) ன்னு ஒரு பேரு வச்சாங்க உலகத்துக்கு! அதுனால அந்த மொழி தான் பிரம்மத்தின் மொழி-ன்னு சொல்லீறாதீக!
    உலக இயக்கத்தைக் கண்டுணர்ந்து, ஒரு மொழியில் பேரு வச்சிருக்காங்க! அவ்ளோ தான்! பாராட்டுக்கள்!

    இதே போல, தமிழிலும் சொல்ல முடியும்!
    ஞாலம் = ஞாலுதல்!
    எந்தப் பிடிமானமும் இல்லாமல், தானே தன் ஆற்றலாலும் அண்டை ஆற்றலாலும் தொங்குதல் = ஞாலுதல் ன்னே பேரு!

    அதானே Earth? = அதுக்கு "ஞாலம்" ன்னு பேரு வச்சான் தமிழன்!
    உடனே, உலகம் தோன்றியதே தமிழில் தான்! தமிழ் ஒலியே பிரம்மத்தின் ஒலியா இருந்துச்சி! அதை நுணுக்கமா, முனிவர்கள் தமிழ்-ல எழுதி வச்சாங்க-ன்னு நானும் கதை அளக்கட்டுமா?:)

    ReplyDelete
  24. ஓம் Closed Circuit! Loop Back ன்னா...ஓ-வில் ஓப்பனா Gap இருக்கே! ஆரம்பிச்ச சுழியில் முடியலையே! அப்பறம் என்ன Closed Circuit? க-வில் Gap இல்லாம முடியுதே! அப்போ அது Closed Circuit இல்லீயா?:))

    இப்படி ஏதாச்சும் அறிவியல் + சமஸ்கிருதம் ன்னு கலந்தடிச்சி, மக்களைப் பிரமிக்க வைக்கும் மோடி மஸ்தான் வேலைகளைச் சில "அறிஞர்கள்" பண்ணிக்கிட்டு இருக்காங்க! :))

    //ஒ என்று சொல்லுங்கள். பிரபஞ்சம் கண்டிப்பாக 'ம்' என்று Acknowledge செய்யும்//

    ஹா ஹா ஹா

    ஏ என்று சொல்லுங்கள், பிரபஞ்சம் கண்டிப்பாக ய் என்று Acknowledge செய்யும்:))

    ஏன்னா ஏ சப்தத்திலேயே ய் சப்தமும் இருக்கு! - ஏய்ய்ய்ய்ய்ய்ய் :)))

    போதும் ஆட்டம்!
    -------

    ஐயா...
    ரிக் வேதத்தை எல்லாம் தமிழ்ல மாத்திச் சொல்லுங்க ன்னு இங்கிட்டு யாரும் சொல்லலை!
    தத்வமஸி ன்னு இனி தமிழ்நாட்டுல சொல்லக் கூடாது! ’அது நானாக இருக்கிறது’-ன்னு தான் சொல்லணும்ன்னு யாரும் ஆர்டர் போடலை!:))
    எதுக்கு ஒங்களுக்கு இந்த பதைபதைப்பு? சமஸ்கிருதம் காக்கும் துடிப்பு?

    சொல்ல வந்தது என்னா-ன்னா, அர்ச்சனை பற்றி மட்டுமே!
    அர்ச்சனை = பொது மக்களுக்கு வழங்கப்படும் ஒரு சேவை! சங்கல்பம் செய்து கொண்டு, அவர்கள் நலத்துக்காக, இறைவனை முன்னிறுத்திச் செய்யப்படும் ஒரு சாதாரண போற்றி மாலை!

    அது மக்களுக்கான வழங்கல் என்பதால், மக்களுக்குப் புரியும் மொழியில் இருக்கட்டுமே என்பது தான் கருத்து!

    அதுக்கு, இம்புட்டு குண்டலினி கூடாதய்யா!:) இம்புட்டு பிரம்ம அதிர்வு wavelength கூடாதய்யா!!

    சர்வம் விஷ்ணு மயம் ஜகத்! அந்தச் சர்வத்தில் "தமிழும்" உண்டு! எனவே தமிழும் இறைவன் மயமே!

    செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி...
    தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!

    இதுக்கு மேல எம்பெருமானார் இராமானுசர் கிட்ட பேசிக்கோங்கோ!:)

    ReplyDelete
  25. திரு. சமுத்ரா
    தங்களுக்கான என் பதில்களால், என் மீது கோபிக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்!
    இவை யாவும் தங்களுக்கான பதில் அல்ல! தங்கள் கருத்துக்கான பதில் மட்டுமே!

    தங்களைப் போல இன்னும் சிலர், ஊள்ளூர ஒரு பாசத்தை வைத்துக் கொண்டு, அதற்கு ஈடு கட்ட, அறிவியல் என்பதை அரைகுறையாகத் தொட்டுக் கொள்ள நினைக்கிறார்கள்! அவர்கள் அத்தனை பேருக்குமான மனசாட்சிப் பூர்வமான பதில்! அதை அனைவரும் உணர்ந்து பார்க்குமாறு பொதுவில் வைத்தேன்! அவ்வளவே!

    இந்தப் பதில்களால் தங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டு இருப்பின், என் மன்னிப்பைக் கோருகிறேன்! ஆனால் இதுவே logical discussion!

    பாவைப் பதிவுகள் ஒன்று விடாமல் வந்து, பின்னூட்டிய தங்களுக்கு, என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  26. தன் சிறு வயதிலேயே ஞானப் பால் உண்டு சம்ஸ்க்ருதமும் தேர்ச்சி பெற்று மனம் முடிந்த உடனே மனைவியுடனும் மற்றும்பலர் சூழ பெரிய ஜோதியில் மறைந்த உலகுக்கு தமிழின் புகழை எடுத்து கூறிய சமபந்தர் ஏன் ஒரு சமஸ்க்ருத ஸ்லோகம் கூட சமஸ்க்ருத அர்ச்சனை கூட செய்யாமல் எல்லாவற்றையும் தமிழிலேயே பாடினர் என்று திரு சமுத்ரா அவர்கள் விளக்குவாரா? தமிழ் ஒரு மொழி அவ்வளவே ஆனால் சம்ஸ்க்ருதம் தேவ பாஷை என்ற எண்ணமாயிருக்கலாம்

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP