Saturday, December 24, 2011

கோதைத்தமிழ்09: மாடம் @amas32

மக்கா...இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
இயேசு நாதப் பெருமான் அவதரித்த இந்தக் குளிர் மார்கழி நன்னாளிலே, எளியோரின் மனமெல்லாம் குளிரட்டும்!
கர்த்தரின் திருமகனுக்கு நல்வரவு = என்&முருகன் சார்பாக:)

இன்று கோதையின் பாவையைப் பேசப் போவது, இன்னொரு பெண்! தாய்! = @amas32 என்னும் சுஷிமா சேகர்!

ட்விட்டரில், நம் பலருக்கும் அறிமுகமானவர்! ஒரு இளைஞியைப் போல் துடிப்பாகக் கீச்சுபவர்! தமிழ்ப் பாக்களின் தீவிர வாசகி! பின்னூட்டப் புயல்:)
அவர் கீச்சைக் கண்டிருக்கிறீர்கள்! ஆனா அவர் குரலைக் கேட்டிருக்கீங்களா? இதோ...



நன்றிம்மா! உங்களுக்கு மிகுந்த பொறுமை-ன்னு நினைக்கிறேன்! நிறுத்தி நிதானமா...மென்மையா விளக்குறீங்க! வாழி:)
உங்கள் தமிழ்ப் பலுக்கல் (உச்சரிப்பு) அருமை! chonnaan ன்னு என்னைப் போலவே சொல்றீங்க!:) என்னைச் சொல்ல வைத்தது என் தூத்துக்குடி உயிர்த் தோழன்:)
chol, not sol = அதுவே தொல்காப்பியத் தமிழ் மரபு!



தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரியத்,
தூபம் கமழத், துயிலணை மேல் கண் வளரும்,
மாமான் மகளே! மணிக் கதவம் தாள் திறவாய்!
மாமீர், அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்


ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: வீட்டின் மாடங்களில் நேற்று இராத்திரி வைச்ச விளக்கெல்லாம் இன்னும் லேசா எரிஞ்சிக்கிட்டு இருக்கு! தூபப் புகை வேற லேசா கமழுது!
நல்ல வசதியான வீட்டுப் பொண்ணே, பஞ்சு மெத்தைத் தூக்கம் போதும்! கண்ணைத் தொற, வீட்டையும் தொற:)

மாமி, இவளைக் கொஞ்சம் எழுப்புறீங்களா?
உங்க பொண்ணு என்ன ஊமையா? செவிடா? சோர்வோ? யாராச்சும் மந்திருச்சி விட்டுட்டாங்களோ? இந்தத் தூக்கம் தூங்குறா?

(கன்னிப் பெண்கள் கனவுகளோடு நல்லாவே தூங்குவாங்க!:)
ஆனா கல்யாணம் ஆச்சோ! தூக்கம் போச்சோ!:)
குழந்தை வாய்ச்சோ! தூக்கம் போச்சே போச்சோ! :))

சங்கத் தமிழ்க் கடவுள் = மாயோன், மாதவன், வைகுந்தன் என்று எத்தனை திருப்பெயர்கள் இருக்கு!
அதையெல்லாம் பாடலாமே? ஏன் இப்படித் தூங்கி வழியிறா? எழுந்திருக்கச் சொல்லுங்க-ம்மா!


இன்றைய எழிலான சொல் = மாடம்!

மாடம், மாடம்-ன்னு பேசுறோம்! "மாட" மாளிகை-ன்னு அடிக்கடி சொல்லுறோம்! ஆனா மாடம்-ன்னா என்னாங்க?
பார்த்து இருக்கீங்களா? இன்றைய நகர வீடுகளில், மாடம் என்பதே சுத்தமா ஒழிஞ்சிப் போச்சி!:( இதோ ஒரு கிராமத்து விளக்கு மாடம்!


கிராமத்து வீடுகளிலும், ரேழிகளிலும், மாடம் வச்சித் தான் சுவர் கட்டியிருப்பாங்க! சுவரைக் குடைந்தாற் போல இருக்கும்!
விதம் விதமான Style! விளக்கு வைப்பதற்கென்றே அந்தக் காலத்தில் கட்டப்பட்டவை மாடங்கள்!

பொழுது ஆச்சுன்னா இல்லப் பெண்கள் ஒவ்வொரு மாடமா விளக்கு வைப்பாங்க!
இப்பல்லாம் கிராமத்து மாடங்களில் கூட....கார்த்திகைக்கு மட்டும் தான் மாட விளக்குகளைப் பார்க்க முடிகிறது!

சாமி மாடம், விபூதி மாடம், கோவிந்த மாடம், துளசி மாடம், புறா மாடம்-ன்னு நிறைய இருக்கு!
ஆனா மாடம்-ன்னா...அதுக்குப் பொருள் என்ன?

மாடம் = உயர்வு! 
மாடி-ன்னு சொல்லுறோம்-ல்ல? மாடத்தில் இருந்து தான் மாடி வந்தது!

மாடம் = உயரத் தூக்கி வைக்கப்பட்டு இருக்கும் இடம்!
விளக்கு மாடத்தைச் சுவரில், உயரத் தூக்கி வச்சி இருப்பாங்க! அப்போ தான் வெளிச்சம், வீடு முழுக்கப் பரவும்!

Corridor = உப்பரிகையும் மாடம் தான்! வீட்டின் மேலே உயரமான இடத்தில் உள்ளது!
புறா மாடமும் அப்படியே! சாமி மாடம்/ விபூதி மாடமும் உசரமான இடத்தில் தான் இருக்கும்! மாட மாளிகை = மாடிகள் உள்ள மாளிகை!

வீடுகளில் விளக்கு மாடம் இருந்தா, அதன் அழகே தனி! மாடம் வச்சி வீடு கட்டுவோம்!:))

நாளைக்கி பேசப் போறது....ட்விட்டர் பெரும்புயல்...என்னைப் போலவே சில்க் ஸ்மிதா ரசனையாளர்! இசையாளர்......வர்ட்டா?:)

7 comments:

  1. /chol, not sol = அதுவே தொல்காப்பியத் தமிழ் மரபு!/

    அப்படியா? :)

    ReplyDelete
  2. உங்கள் பதிவில் திருப்பாவையில் ஒரு பாசுரம் பற்றி பேசச்சொல்லி எனக்கு ஒரு வாய்ப்பு தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது :-) நன்றி! ஆண்டாள் திருவடிகளே சரணம்.
    amas32

    ReplyDelete
  3. நல்லா தெளிவா பேசியிருக்கீங்க @amas32. அருமை.

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா பேசியிருக்கீங்க amas32. வளர்க்கிறது எப்பவும் அம்மா பொறுப்பு தானோ? எங்க வீட்டுலயும் பசங்களை நல்லா வளர்க்கணும்னு கவலைப்பட்டுக்கிட்டிருக்காங்க. :-)

    ReplyDelete
  5. ச்சாந்தமான குரல், ச்செறிவான விளக்கம் :-)

    ReplyDelete
  6. திருப்பாவையை இதுவரைக்கும் ஜீயர்கள், பிரபலமான பேச்சாளர்கள், தான் பேசிக் கேட்டிருக்கிறேன்.
    அதைப் பற்றி அதிக வேதாந்தம் இலக்கியம் கலக்காமல் எளிய, day -to -day நடையில் தங்கள் நண்பர்களைப்
    பேச வைத்ததற்கு நன்றிகள்.உங்கள் விளக்கமும் புரியும்படி இருக்கிறது

    ReplyDelete
  7. நல்ல உச்சரிப்பு (பலுக்கல் - பலுகே பங்கார மாயனா ?? குரு) அம்மாவின் குரல் சின்னப் பெண் போலே இருக்கு..
    மாடம் ,மாடவிளக்கு.. நல்லவேளை இன்னும் எங்க வீட்டுல இருக்கு. இந்தத் தூமணி என்பது எதைக்குறிக்குது குருவே..?

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP