Sunday, October 14, 2007

தசாவதாரம் படமும், கமலஹாசப் பெருமாளும்!

கமலஹாசப் பெருமாளா? - இது என்ன மாதவிப் பந்தலில் கூத்துன்னு பாக்கறீங்களா? அய்யோடா! நீங்க தசாவதாரம் படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் பாக்கலீங்களா? அட என்னங்க நீங்க?
உலக நாயகன் கமலுக்காக இல்லீன்னாலும், நம்ம உள்ளத்து நாயகி அசினுக்காக-வாச்சும் பாருங்கப்பு பாருங்க!

அசின் கையில் ஒரு பெருமாள் சிலை! அது எப்படி அவிங்க கைக்கு வந்துச்சு? சரி, கமலோட வருங்கால மாமனார் கொடுத்தாருன்னு வச்சுக்குங்களேன்!
(யாருப்பா அது, கமலுக்கே இன்னும் மாமனார் ஆகும் கடமை ஒண்ணு பாக்கியிருக்கு-ன்னு சவுண்ட் வுடறது?)
அந்தச் சிலையை எடுத்துக்கின்னு ஊர் ஊராச் சுத்தறாங்க இந்த ஜோடி!
ஏன்? எதுக்கு? அட போங்கப்பா...எல்லாம் சிலையைக் கொள்ளைக்காரப் பொண்ணுங்க கிட்ட இருந்து காப்பாத்த தான்! (பொண்ணுங்க, சிலையைத் துரத்தறாங்களா இல்லை கமலைத் துரத்தறாங்களா என்பது தனிக் கதை)
சிலையைப் பாத்து பாத்து அசின் அழுவுறாங்க! அதப் பாத்து பாத்து நம்ம கமல் அழுவுறாரு!
அசின் கண்ணீரில் கமல் பிம்பமாய் ப்ரதிபலிக்க,
கமல் கண்ணீரில் அசின் ப்ரதிபலிக்கறாங்க!

அப்படியே ஒரு ஜூம் ஆங்கிள் ஷாட்! கேமிராவில் காதல் ஆராய்ச்சி செய்யும் கொலையாளிகள்...சாரி...கலையாளிகள் யாராச்சும் வாங்கப்பு!



அசின் செம்பவள வாய் திறந்து அழாதீங்கன்னு சொல்ல வாயெடுக்க,
கமல் அந்த வாயை, வண்ணமாக மூட...கமல் "கமாலு"க்குத் தயாராக...
பூசை வேளையில் கரடியாய் வில்லிகள் துரத்த...அருகில் இருந்த வண்டியில் ஏறிக் குதிக்குது ஜோடி!
ஆனா அது ஒரு காய்கறி வண்டி. அதில் பறந்து பறந்து skiing செய்யுது நம்ம ஜோடி!
அன்னிக்குப் பூரா நம்ம பெருமாளுக்கு Vegetable Skiing Vahanam தான்னு வச்சிக்குங்களேன்! :-)


எனக்கு என்னவோ அந்தச் சிலையைப் பார்த்தா "செல்லா" ஞாபகம் தான் வருது! அட நம்ம மேலக்கோட்டை செல்வப்பிள்ளையைச் சொன்னேங்க! திருநாராயணபுரத்து பெருமாளான செல்வப் பிள்ளையை மீட்டுக் கொண்டு வந்த காதல் கதையைத் தான் துலுக்கா நாச்சியார் இடுகையில் முன்னமேயே படிச்சிருப்பீங்களே!



தசாவதாரம் படம் தீபாளீ ரிலீஸ்-ன்னு சொன்னாய்ங்க!
இப்போ அது புஸ்வாணம் ஆயி, பொங்கல் ரீலீஜு-ன்னு சொல்லுறாய்ங்க!
அது சரி...
அது இன்னா பத்து வேஷம் கட்டுறாரு கமலு? உங்களுக்குத் தெரியுமா?

1 கோயில் அர்ச்சகர்
2 குள்ளன்
3 விஞ்ஞானி
4 சண்டை வீரர்
5 ஆப்பிரிக்கப் பையன்
6 சுற்றுலா கைடு
7 திருடன்
8 மன்னன்
9 வயசான பிகரு
10 இளமையான பிகரு

இது போதாதுன்னு வெள்ளை மாளிகை போல் ஒரு செட் போட்டாங்களாம் சென்னையில்! உடனே ஜார்ஜ் புஷ் போல வேஷம் கட்டப் போறாரு-ன்னு ஒரு வதந்தி பரவிப் போச்சு!
ஈழத் தமிழராகவும், ஜப்பானியராகவும், ஆப்கானிஸ்தான் ஆளைப் போலவும், தலேர் மெகந்தியைப் போலவும்-னு பல வதந்தி உலவுது!


இதுல, மூனு ரோல்-ல கமலை யாருன்னே கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு மேக்கப்பாம்! ஹாலிவுட்டின் மைக்கேல் வெஸ்ட்மூர் தான் இந்த மேக்கப் டகால்டி வேலை எல்லாம் பண்ணறாராம்! கமலே ஹீரோவாகவும், வில்லனாகவும் பின்னிப் பெடல் எடுக்க, அசினுக்கும் டபுள் ரோலாம்!

மல்லிகா ஷெராவத் அக்கா வேற படத்துல ஜோடி போடறாங்களாம். CIA ஏஜென்ட்டாம்!
ஹைய்யா! அப்படின்னா மல்லிக் நியுயார்க் வருவாங்கல்ல?
வெல்கம் டு நியுயார்க், மல்லிக்!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் மல்லிகா பந்தல்-னு ஒரு புது வலைப்பூ தொடங்கலாம்-னு பேசிக்கிட்டு இருந்தோம்! அதுக்குள்ள நீங்களே வரீங்க! வாவ்! :-)
ஜெயப்ரதா ஆண்ட்டி படத்துல ஒரு ரோல் பண்ணறாங்க-ன்னு பேச்சு!

முதல் ஷாட்டுக்கே மூன்று கோடியாச்சாம்!
பாவம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இன்னும் என்னன்னல்லாம் பண்ணப் போறாரோ தெரியலை!
சிதம்பரம் கோவிலை recreate பண்ணி ஒரு செட்டு!
சுனாமி காட்சி - உருவாக்கம்
நெப்போலியன் அரண்மனை-ன்னு மெகா பண முழுங்கிக் காட்சிகள் வேறு இருக்காம்!

சரி...படத்துக்கு மீஜிக் யாரு? ஹிமேஷ் ரசம்சாதம்-ன்னு யாரோ ஒருத்தர் பாலிவுட்ல இருந்து வராராமில்ல!
சும்மா அதிரப் போதாமில்ல! நமக்கும் சும்மா ஒதறப் போதாமில்ல!
அட அதாங்க பாப் மீசிக் ஸ்டார், மீசிக் டைரக்டர், Himesh Reshammiya தான் அவரு! கோலிவுட்-ல மொதல் என்ட்ரி கொடுக்கறாரு! அக்ஷர், தில் தியா ஹை படத்துக்கு மீசிக் போட்டு ஹிட்டாச்சுதே, அவரே தான் இவரு!

நடிகர் திலகம் கொடுத்த நவராத்திரி படத்துக்கு இணையாக கமலின் தசாவதாரம்-னு சொல்லிக்கறாங்க!
பார்க்கலாம்...
கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகணும்!
பொங்கலின் போது தசாவதாரம் பொங்கி விளையாடப் போகுதா-ன்னு, ஹைப் கூடிக்கிட்டே இருக்கு!
மேலும் ஹைப்புக்கு, இந்தாங்க orkut-இல் தசாவதாரம்!
(படங்களுக்கு நன்றி: dasavatharam.info)

28 comments:

  1. படம் வருவதற்கு முன்பே விமர்சனமா?

    ReplyDelete
  2. பயங்கர 'ஜொள்ளூ'பார்ட்டியா இருக்கீங்க போல:-)))))

    ReplyDelete
  3. பெருமாள் சிலை எல்லாம் இருக்கிறதுனால உம்ம கிட்ட இருந்து ஸ்கூப் நியூஸா? நல்லா இரும்வோய்!

    ReplyDelete
  4. இதை விட்டுடுஙகளே. 6. A Business Man(in US)


    //9 வயசான பிகரு
    10 இளமையான பிகரு
    //

    ஆர்குடில் ஒன்னு தானெ இருக்கு. பதினொன்னாவது அவதாரம் உங்களோட படைப்பா :)

    ReplyDelete
  5. //ஆனா அது ஒரு காய்கறி வண்டி//

    அது ஆப்பிள் இருக்கும் பழ வண்டி இல்லையா?? :D :D

    உங்க நக்கல்ஸ் சூப்பர்.. :D :D

    ReplyDelete
  6. பாப்பும் எப்படி இருக்குனு!

    ReplyDelete
  7. அடபாவமே... சிவாஜி லீக் ஆனதால்,தசாவதாரம் அவுங்களே டிட்டெய்ல்ஸ் வெளியிட்டுடாங்க போல...
    நல்லாயிருந்தது.
    நான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க, வந்து சூடா படிச்சு உங்க கருத்த சொல்லுங்க....

    ReplyDelete
  8. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் மல்லிகா பந்தல்-னு ஒரு புது வலைப்பூ தொடங்கலாம்-னு பேசிக்கிட்டு இருந்தோம்! அதுக்குள்ள நீங்க//


    அடுக்குமோ இது.:)))
    நினைக்கவேண்டாம்.இது அப்படியே செல்லா கதையேதான்.ரவி!!

    ReplyDelete
  9. //வடுவூர் குமார் said...
    படம் வருவதற்கு முன்பே விமர்சனமா?//

    குமார் சார்
    இது விமர்சனம் எல்லாம் இல்ல! வெறும் ஹைப்பு தான் :-)

    ReplyDelete
  10. //துளசி கோபால் said...
    பயங்கர 'ஜொள்ளூ'பார்ட்டியா இருக்கீங்க போல:-)))))//

    ஆகா...எதை வச்சி சொல்லுறீங்க டீச்சர்?(இவ்வளவு கர்ரீட்டா:-)

    ReplyDelete
  11. //இலவசக்கொத்தனார் said...
    பெருமாள் சிலை எல்லாம் இருக்கிறதுனால உம்ம கிட்ட இருந்து ஸ்கூப் நியூஸா? நல்லா இரும்வோய்!//

    பின்ன, அடியார்-ன்னா பெருமாள் போற இடமெல்லாம் பின் தொடர்ந்து போக வேணாமா கொத்ஸ்?
    அது அசினா இருந்தாலும் பிசினா இருந்தாலும் சரி! பின் தொடர்வதே லட்சியம்! :-)))

    ReplyDelete
  12. //Anandha Loganathan said...
    இதை விட்டுடுஙகளே. 6. A Business Man(in US)//

    அட, ஆமாம்
    ஆனா இப்படி ஆளாளுக்கு ஏத்திக்கிட்டே போனா தசாவதாரம் சாலீஸ் அவதாரம் ஆயிடும்! :-)

    //ஆர்குடில் ஒன்னு தானெ இருக்கு. பதினொன்னாவது அவதாரம் உங்களோட படைப்பா :)//

    அச்ச்ச்சோ! இது dasavatharam.info ல இருக்கு!

    ReplyDelete
  13. //சிங்கம்லே ACE !! said...
    அது ஆப்பிள் இருக்கும் பழ வண்டி இல்லையா?? :D :D//

    சிங்கமே வாங்க!
    நான் வண்டியில பெருமாள் சிலையை மட்டும் தேன் பாத்துக்கிட்டு இருந்தேன்!

    நீங்க தான் என்னென்னமோ பாத்து இருக்கீக போல! :-)

    //உங்க நக்கல்ஸ் சூப்பர்.. :D :D//

    நீங்க அடிச்சி ஆடறத விடவா? :-)

    ReplyDelete
  14. //Dreamzz said...
    பாப்பும் எப்படி இருக்குனு!//

    பாக்கத் தானே போறோம் தினேஷ்!
    ஆனா எப்போ?

    //ரசிகன் said...
    அடபாவமே... சிவாஜி லீக் ஆனதால்,தசாவதாரம் அவுங்களே டிட்டெய்ல்ஸ் வெளியிட்டுடாங்க போல...//

    அப்படி எல்லாம் இல்ல போல!
    சும்மனாங்காட்டியும் கன்ப்யூஸ் பண்ணி ஹைப்பைக் கூட்டுறாங்களோ, ரசிகன்?

    ReplyDelete
  15. அட்டகாசமான விமர்சனம் - முன்னோட்டம் கூட - பெருமாள்னா போதுமே மாதவிப்பந்தல்லெ பதிவு வந்துடுமே !! (மல்லிகாப் பந்தலா - எப்போ ??)

    நவராத்ரியா - தசாவதாரமா - சபாஷ் சரியான போட்டி

    ReplyDelete
  16. Vanakkam sir,
    nalla rasam saudham, with sweets, swami greedam looks like pandiyan greedam forArangan.enjoyed.
    ARANGAN ARULVANAGA.
    Anbudan
    k.srinivasan.

    ReplyDelete
  17. கொடுமை. எனக்கும் கமல் பிடிக்கும் தான். இருந்தாலும் பெருமாள் பெயரை தேவையில்லாமல் இழுத்துதான் இப்படி பதிவு செய்யவேண்டுமோ? இது அடுக்குமோ?

    பக்திரசம் குன்றா பெருமாளின் பாட்டினிலே
    விக்கிநின்ற வேளையில் மொக்கையில் மோகங்கொள்
    சங்கரக்கு பக்குவமாய் புத்தியதை தட்டாமல்
    ரங்கா அழகாகச் சொல்.

    (வெண்பா விளையாட்டை வேற நிறுத்திட்டாங்க அதனால் அந்த ஆசையையும் இங்க தீத்துக்கறேன் ;-)

    ReplyDelete
  18. மல்லிகா ஷெராவத் பத்தி எழுதின பத்தியில ரொம்பவே கால் வழுக்கிடுச்சி..
    :)

    ReplyDelete
  19. http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்
    http://உதாரணம்.பரிட்சை/தமிழ்

    ReplyDelete
  20. தசாவதாரத்துக்கு மாய்ந்து மாய்ந்து விமர்சனம் எழுதும் நீங்கள் சிவாஜிக்கு விமர்சனம் எழுதாதது ஏன்?:))

    'சிவா'ஜி என்று வருவதாலும் ரஜினி சைவர் என்பதாலும் கமல் படத்தின் பெயர் தசாவதாரம் என்பதாலும் தானே இந்த ஓரவஞ்சனை?:-)))

    இதுக்கு முந்தி பழைய ஆன்மிக படம் ஒண்ணு தசாவதாரம்னு வந்திருக்கே..பார்த்திருக்கீங்களா?

    ReplyDelete
  21. //வல்லிசிம்ஹன் said...
    கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் மல்லிகா பந்தல்-னு ஒரு புது வலைப்பூ தொடங்கலாம்-னு பேசிக்கிட்டு இருந்தோம்! அதுக்குள்ள நீங்க//

    அடுக்குமோ இது.:)))
    நினைக்கவேண்டாம். //

    ச்ச்ச்சும்மானாங்காட்டியும் வல்லியம்மா!

    //இது அப்படியே செல்லா கதையேதான்.ரவி!!//

    ஆனா, படத்துல இது தான் கதையான்னு தெரியலை! எப்படி வருமோ?

    ReplyDelete
  22. //cheena (சீனா) said...
    அட்டகாசமான விமர்சனம் - முன்னோட்டம் கூட - பெருமாள்னா போதுமே மாதவிப்பந்தல்லெ பதிவு வந்துடுமே !! //

    ஹிஹி!
    சிலையைப் பாத்தேன் ஸ்டில்ஸ்-ல! அதான் சீனா சார், உடனே பதிவு போட்டுட்டேன்!

    //(மல்லிகாப் பந்தலா - எப்போ ??)//

    நான் வரலப்பா விளையாட்டுக்கு!

    ReplyDelete
  23. //Anonymous said...
    swami greedam looks like pandiyan greedam for Arangan.enjoyed.//

    வாங்க ஸ்ரீநிவாசன் சார்! பாருங்க உங்க கண்ணுக்கும் கரெக்டாப் பட்டிருக்கு!//

    //Shobha said...
    :))//

    சிரிப்புக்கு நன்றி ஷோபா!

    ReplyDelete
  24. //Sathia said...
    கொடுமை.
    எனக்கும் கமல் பிடிக்கும் தான். இருந்தாலும் பெருமாள் பெயரை தேவையில்லாமல் இழுத்து தான் இப்படி பதிவு செய்யவேண்டுமோ? இது அடுக்குமோ?//

    என்ன சத்தியா, அடுக்காதுங்கறீங்களா?
    அடுக்கியது, அடுக்காதது, தொடுத்தது, தொடுக்காதது - எல்லாம் உமக்குத் தெரியும்! :-)
    நாமளும் அப்ப அப்ப பெருமாள் கூட கொஞ்சம் விளையாடினா தானே ஜாலியா இருக்கும்! :-)

    //பக்திரசம் குன்றா பெருமாளின் பாட்டினிலே
    விக்கிநின்ற வேளையில் மொக்கையில் மோகங்கொள்
    சங்கரக்கு பக்குவமாய் புத்தியதை தட்டாமல்
    ரங்கா அழகாகச் சொல்//

    பக்திக்குத் தேவையாம் பலசமயம் சிரிப்பூ
    முக்திக்குத் தேவையாம் மொக்கை! - யுக்தியைச்
    சங்கரர்க்குச் சடுதியில் சொல்லிடும் சத்தியா
    அங்கவர்க்கு ஆதரவு தா! :-))))

    //(வெண்பா விளையாட்டை வேற நிறுத்திட்டாங்க அதனால் அந்த ஆசையையும் இங்க தீத்துக்கறேன் ;-)//

    கொத்தனாரே!
    வெ.வி.வா ஏனய்யா நிறுத்தினீரு? வருத்தப்படாத வாலிபர் சத்தியா வருத்தப்படறாரு பாருங்க!

    ReplyDelete
  25. //தருமி said...
    மல்லிகா ஷெராவத் பத்தி எழுதின பத்தியில ரொம்பவே கால் வழுக்கிடுச்சி..
    :)//

    ஹிஹி...
    தருமி ஐயா, யாருக்கு வழுக்குச்சு?
    எனக்கு இல்லப்பா! :-))

    ReplyDelete
  26. //செல்வன் said...
    'சிவா'ஜி என்று வருவதாலும்
    ரஜினி சைவர் என்பதாலும்
    கமல் படத்தின் பெயர் தசாவதாரம் என்பதாலும் தானே இந்த ஓரவஞ்சனை?:-)))//

    உக்கும்....ஓரமா உக்காந்து வஞ்சனை பண்ணுறேன்ன்னு சொல்றீங்களா தலைவா? :-))

    யாரு சொன்னா ரஜினி சைவர்-ன்னு! ராகவேந்திரா படத்த நீங்க எப்படி மறக்கலாம்?

    சைவமாவது, வைணவமாவது....நமக்கு என்னிக்குமே கடவுள் யாருன்னா, அது "உலகின் புதிய கடவுள்" தான்! :-))

    //இதுக்கு முந்தி பழைய ஆன்மிக படம் ஒண்ணு தசாவதாரம்னு வந்திருக்கே..பார்த்திருக்கீங்களா?//

    இந்தப் படத்த பாத்து, போன கார்த்திகை தீபத்துக்குப் பதிவும் போட்டாச்சு! அதுல அடி முடி தேடுறதையும், வராக அவதாரத்தையும் லிங்க் பண்ணி இருப்பாய்ங்க!

    ReplyDelete
  27. பில்ட் அப் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. படம் வரட்டும், பார்த்துக்கலாம்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP