திருக்கோட்டியூர் நரசிம்மன்
இதற்கு முந்திய இரண்டு திருமொழிகளில் (4-2, 4-3), திருமாலிருஞ்சோலையில் (மதுரை அழகர் கோயில்) வசிக்கும் எம்பெருமானை ரசித்த பெரியாழ்வார், அடுத்து, திருக்கோட்டியூர் எம்பெருமானை ரசிக்கிறார்.
திருக்கோட்டியூர் எம்பெருமானை, மனம், மொழி, உடலால், 'நாவகாரியம்' (4-4) எனும் திருமொழியில் எம்பெருமானை அனுபவிக்கின்றார் பெரியாழ்வார். இப்படி, தன்னைப் போல் எம்பெருமானை அனுபவிக்காதவரை, பழிக்கவும் செய்கிறார் இத் திருமொழியில்.
இதில், நரசிம்மனை, 2 முறை அழைக்கிறார்.
பூதம் ஐந்தொடு, வேள்வி ஐந்து* புலன்கள் ஐந்து, பொறிகளால்*
ஏதமொன்றும் இலாத* வண் கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்*
நாதனை, நரசிங்கனை* நவின்று ஏத்துவார்கள் உழக்கிய*
பாததூளி படுதலால்* இவ்வுலகம் பாக்கியம் செய்ததே.
ஐந்து பூதங்களாலும், ஐந்து வேள்விகளாலும், ஐந்து புலன்களாலும், ஐந்து பொறிகளாலும், சிறிதும் குற்றமில்லாத உதாரமான கைகளை உடையவர்கள் வாழும் திருக்கோட்டியூரில் எழுந்தருளியுள்ள தலைவனாகிய நரசிம்மனைத் துதிக்கும் அடியவர்களின் திருவடிகள் பட்ட தூசிகள் (உலகத்தில் அங்குமிங்கும்) படுவதால் இந்த உலகம் பாக்கியம் செய்தது.
***
ஏதமொன்றும் இலாத* வண் கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்*
நாதனை, நரசிங்கனை* நவின்று ஏத்துவார்கள் உழக்கிய*
பாததூளி படுதலால்* இவ்வுலகம் பாக்கியம் செய்ததே.
நாவகாரியம் 4-4-6
(ஐந்து பூதங்கள் - நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்; ஐந்து வேள்வி - பிரம்ம, தேவ, பூத, பித்ரு, மனித வேள்விகள்; ஐந்து புலன்கள் - மெய், வாய், கண், மூக்கு, செவி; பொறிகள் - சுவை, ஒலி, ஊறு, ஓசை, நாற்றம்; ஏதம் - குற்றம்; வண்கையினர் - உதாரமான கைகள் உடையவர்கள்; உழக்கிய - மிதித்த; தூளி - தூசி)
***
ஐந்து பூதங்கள் - பஞ்ச 'மஹா' பூதங்கள் - இந்த அகிலத்தின் எந்தப் பொருளும், உயிரும், இந்த ஐந்தின் கலவையே! இவையே உலகின் ஆதாரம் (நம் உடலும் தான்)! எனவே, இந்த ஐந்தைத் தான் முதலில் கூறுவர் பெரியோர்!பிரம்ம வேள்வி - வேதம் ஓதுதல்
தேவ வேள்வி - வேள்வித் தீயில் உணவில் ஒரு பகுதியை இடுதல்
பூத வேள்வி - நாய், பூனை, காக்கைக்கு உணவிடுதல்
பித்ரு வேள்வி - தர்ப்பணம் செய்து உணவின் ஒரு பகுதியை அளித்தல்
மனித வேள்வி - விருந்தினருக்கு உணவளித்தல், தானம் செய்தல்.
தேவ வேள்வி - வேள்வித் தீயில் உணவில் ஒரு பகுதியை இடுதல்
பூத வேள்வி - நாய், பூனை, காக்கைக்கு உணவிடுதல்
பித்ரு வேள்வி - தர்ப்பணம் செய்து உணவின் ஒரு பகுதியை அளித்தல்
மனித வேள்வி - விருந்தினருக்கு உணவளித்தல், தானம் செய்தல்.
புலன்கள் ஐந்து! பொறிகள் எத்தனை? புலன்கள் ஐந்திற்கும், ஒவ்வொரு கடமை! உணர்வது! எனவே, பொறிகளை 'ஐந்து' என்று சொல்லாமல் விட்டு விட்டார்!
ஆழ்வார் ஐந்து பூதங்கள் என்றது, அவைகளால் ஆன நம் உடலையே! இந்த உடலினால் நாம் என்ன செய்ய வேண்டும்?
'இது என்ன அபத்தமான கேள்வி - நல்லா சாப்டு, தூங்கி, 'TV' பார்த்து, 'Party'-களுக்குச் சென்று, 'Enjoy' பண்ணனும்னு தானே!' என்கிறீர்களா?
தொண்டரடிப்பொடியாழ்வார் இதற்குப் பதில் சொல்வார்!
கொண்டல் மீதணவும் சோலை* குயிலினம் கூவும் சோலை*
அண்டர் கோன் அமரும் சோலை* அணி திருவரங்கம் என்னா*
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி* நாய்க்கு இடுமினீரே!
மூன்றாவது வரியின் கடைசியில், 'திருவரங்கம் என்னா மிண்டர்' என்கின்றாரே? இதற்கு என்ன அர்த்தம்?
தொண்டரடிப்பொடியாழ்வார் இதற்குப் பதில் சொல்வார்!
***
வண்டினம் முரலும் சோலை* மயிலினம் ஆலும் சோலை*கொண்டல் மீதணவும் சோலை* குயிலினம் கூவும் சோலை*
அண்டர் கோன் அமரும் சோலை* அணி திருவரங்கம் என்னா*
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி* நாய்க்கு இடுமினீரே!
திருமாலை-14
எம்பெருமான் கொடுத்த வாயினால், நாம் 'அரங்கா!' என்று கூடச் சொல்ல வேண்டாமாம்! அணி அரங்கம் என்று, அவன் இருக்கும் ஊரின் பெயரைச் சொன்னாலே போதுமாம்!
அப்படிச் சொல்லவில்லை என்றால், அவர்கள் நன்றி கெட்டவர்களாம் (மிண்டர்கள்)! அவர்களுக்கு, வாய் இருந்து பயனில்லையாம்! அவன் பெயர் சொல்லாதவர்கள் (வாயினால்) உண்ணும் சோற்றை விலக்கி, நாய்க்கு இடுங்கள் என்கின்றார்!
ஏன் நாய்க்கு இட வேண்டுமாம்? ஒரு நாள் சோறு போட்டாலே நாய், போட்டவரிடம் நன்றியுடன் இருக்குமே! 'மிண்டர்களை விட, நாய்கள் எவ்வளவோ மேல்!' என்கின்றார்!
இனி, குறைந்தது 'அரங்கா' என்று சொல்லி விட்டாவது 'Party'-க¢குச் செல்லலாமே :-)
***
ஐந்து பூதங்களை - உடலை - முதலில் கூறிய பெரியாழ்வார், பிறகு, அவற்றினால் செய்ய வேண்டியதாக, வேள்விகளைச் சொல்லுகிறார்!'உடலைப் பெற்ற நீங்கள், அதனால் எம்பெருமானை வழிபடுங்கள்! நம் முன்னோர்களை நினையுங்கள்! தான தர்மம் செய்யுங்கள்!' என்கின்றாரோ?
வேள்விகளுக்குப் பிறகே, நம் புலன்கள், பொறிகள் செய்யும் மற்ற கடமைகளைக் கூறுகின்றார்!உடலாலும், புலன்களாலும், பொறிகளாலும், செய்ய வேண்டியதைச் செய்து வந்தவர்களே 'குற்றம்' ஒன்றும் இல்லாத நல்ல கைகளை உடையவர்களாம் ('ஏதம் ஒன்றுமிலாத வண்கையினார்கள்' என்று, திருக்கோட்டியூர் செல்வ நம்பியையும் சேர்த்துச் சொல்வதாக ஒரு வியாக்கியானம் உண்டு)!
திருமாலிருஞ்சோலை
திருக்கோட்டியூரில் தேவர்களுக்குத் தலைவனான நரசிம்ம மூர்த்தியும் இருக்கிறான்! இப்படி, 'நல்ல கைகளும்', நரசிம்மனும் சேர்ந்து இருப்பதாலேயே (முந்திய இரு திருமொழிகளில் [4-2, 4-3] பாடிய திவ்ய தேசமான திருமாலிருஞ்சோலையை விட) திருக்கோட்டியூர் திவ்ய தேசம் அதிகம் பெருமை உடையதாயிற்றாம்!
திருக்கோட்டியூர்
திருக்கோட்டியூரில் நரசிம்மனா? இது என்ன புதுக்கதை?
இது ஒன்றும் புதுக் கதை இல்லீங்னா! பெரியாழ்வார், 'நீ முன்னால ஆரம்பிச்சு, நிறுத்தின பழைய கதையை இப்ப 'Continue' பண்ணு; எல்லாம் அடுத்த பாசுரத்தில் 'Adjust' ஆயிரும்' என்று அடியேனுக்குக் கொடுத்த தைரியம் தாங்னா!
***
இது ஒன்றும் புதுக் கதை இல்லீங்னா! பெரியாழ்வார், 'நீ முன்னால ஆரம்பிச்சு, நிறுத்தின பழைய கதையை இப்ப 'Continue' பண்ணு; எல்லாம் அடுத்த பாசுரத்தில் 'Adjust' ஆயிரும்' என்று அடியேனுக்குக் கொடுத்த தைரியம் தாங்னா!
இடம்: இரணியன் அரண்மனை
காலம்: 'Advice' காலம்
நேரடி வருணனை: செவ்வை சூடுவார்
(ஜய விஜயர்கள், இரணியகசிபு, இரணியாட்சன் எனும் பலமுள்ள அசுரர்களாக வளர்கின்றனர். வராக உரு எடுத்து வந்த பரந்தாமன் இரணியாட்சனைக் கொல்கிறார். கோபமடைந்த இரணியன், அசுரர் தலைவர்களைத் தன் அரண்மனைக்கு அழைத்துப் பேசுகின்றான்)
'தரையின் மீது போய், "மாயவன் உரு" எனச் சாற்றும்
அரிய வேள்வியே முதலிய அறங்களை அழித்து,
புரியும் அந்தணர் பொன்று உற புரிமினோ!;
புரியின், கரிய வன் வலி கெடு உலப்பார் கடவுளரே'.
(தேவர்களுக்கு பலம், மனிதர்கள் வேள்வியில் கொடுக்கும் அவிர்பாகம் தான்! அவற்றைத் தடுங்கள்! தேவர்கள் சக்தி குறைந்து விடும்! பின்னர் நாம் அவர்களை வெல்லலாம்!)
அரிய வேள்வியே முதலிய அறங்களை அழித்து,
புரியும் அந்தணர் பொன்று உற புரிமினோ!;
புரியின், கரிய வன் வலி கெடு உலப்பார் கடவுளரே'.
(தேவர்களுக்கு பலம், மனிதர்கள் வேள்வியில் கொடுக்கும் அவிர்பாகம் தான்! அவற்றைத் தடுங்கள்! தேவர்கள் சக்தி குறைந்து விடும்! பின்னர் நாம் அவர்களை வெல்லலாம்!)
மாபுரங்களை அழித்தனர் சிலர்; பல மணி சேர்
கோபுரங்களை தகர்த்தனர் சிலர்; சிலர் குழுமி
தூபுரங்கள் சூழ் பதத்தினர் நொவ்வுற அலைத்தார்;
ஆபுரங்களைக் செகுத்தனர் சிலர், வெகுண்டு அடர்த்தே.
(உடனே அசுரர்கள் பூமியில் உள்ள நகரங்களை அழித்து, கோயில்களைத் தகர்த்தனர்; தேவ மாதரைத் துன்புறுத்தினர்; பசுக்களைக் கொன்றனர்)
இரணியன் அசுரனாயிற்றே? அடுத்து என்ன செய்ததாக நம் வர்ணனையாளர் கூறுகின்றார்?
***
தம்பி மனைவியான ருஷாபானுவும், அவளுடைய 7 மக்களும் அழுகின்றனராம்! இதைப் பற்றிக் கவலைப் படாது, தம்பி மனைவியை அபகரிக்க நினைக்கிறானாம் இரணியன்! ஆனால் தன் தாயான திதியும் அழுவதால், எல்லோரையும் மயக்க, அவர்களுக்கு 'உபதேசம்' செய்கிறானாம் இரணியன்!
'சுயக்ஞன் எனும் அரசன் போரில் கொல்லப்பட, அவன் உறவினர் அழுகின்றனர். யமன் அங்கு தோன்றி அவன் உறவினருக்கு உபதேசம் செய்கிறான் (இதற்குப் பெயர் தான் Advice-க்குள்-Advice)!
'கண்ணி வீழ்ந்து; அதன் பெடையினை கலந்து அழுகுலில், இங்கு அம்
மண்ணின் வீழ் தர, மாய்த்தனன் வாங்குவில் வேடன்;
எண்ணி மாய்ந்தவற்கு இரங்கல் என்? இறக்கும் இவ்வுடல்;' என்று
அண்ணல் நல்லறக் கடவுள் சொற்றனன்; அவர் தெளிந்தார்.
(உடம்பு என்று இருந்தால், என்றாவது இறக்கும். அதனால், 'அழுகாச்சியை' விட்டு, அடுத்த வேலையைப் பார்!)
(மீண்டும் வர்ணனையாளர் தொடர்கிறார்)
'அன்னை நீ துயர் நீங்கு' என அறைதலும், திதிதான்
இன்னல் தீர்ந்தனள்; இருந்தனள்; இரணியன் ஏகி,
மின்னின் மாய் உடல் விளிவுறா வரம் பெறல் வேண்டி,
மன்னு மாதவம் வளர்ப்ப நன் மந்தரத்து அடைந்தான்.
(இதைக் கேட்ட திதிக்கு மனம் தெளிகிறது; இரணியன், இறக்காமல் இருக்க வரம் வேண்டி தவம் செய்ய மந்தர மலை அடிவாரம் செல்கிறான்)
இத்துடன், பெரியாழ்வார் கதையை நிறுத்தச் சொல்கிறார் ... ஹி ... ஹி ...!
***
இந்த நரசிம்ம மூர்த்தியைப் பார்க்க வருகின்றார்களாம் அடியவர்கள்!
ஏற்கனவே திருக்கோட்டியூருக்குச் சிறப்பு நரசிம்மாரால்! அதிகம் சிறப்பு 'நல்ல கைகளால்'! இன்னும் சிறப்பு, நரசிம்மன் பெயரைச் சொல்லும் அடியவர்களின் பாத தூளி திருக்கோட்டியூரில் இருந்து, இந்த உலகத்தில் படுவதால்!
திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்னும் இருக்கிறதா?
- திருக்கோட்டியூர் வைபவம் தொடரும்!
அன்பர்களுக்கு
ReplyDeleteஇந்த வாரம், நமது ஆஸ்தான Photo Director (தேவன் ராகவன்) கொஞ்சம் busy. எனவே, படங்கள் போட இயலவில்லை. மன்னிக்கவும்.
மார்கழியில் இனிய துவக்கம்ணா..
ReplyDeleteஐம்புலன், பொறிகள், பூதம் கேள்விப்பட்டுள்ளேன்.. ஐந்து வேள்விகள் இன்று தான் கேள்விப்படுகிறேன்
//'இது என்ன அபத்தமான கேள்வி - நல்லா சாப்டு, தூங்கி, 'TV' பார்த்து, 'Party'-களுக்குச் சென்று, 'Enjoy' பண்ணனும்னு தானே!' என்கிறீர்களா?//
ReplyDeleteஉண்பதும் உறங்குவதும் அன்றி வேறொன்றறியேன் பராபரமே !!
//'சுயக்ஞன் எனும் அரசன் போரில் கொல்லப்பட, அவன் உறவினர் அழுகின்றனர். யமன் அங்கு தோன்றி அவன் உறவினருக்கு உபதேசம் செய்கிறான்//
ReplyDeleteசுயக்ஞன் யார்? யமன் தோன்றி உபதேசம் அளிக்கும் அளவுக்கு சிறப்பு பெற்றவர் பற்றி சொல்லுங்களேன்
ராகவா
ReplyDelete//சுயக்ஞன் யார்? யமன் தோன்றி உபதேசம் அளிக்கும் அளவுக்கு சிறப்பு பெற்றவர் பற்றி சொல்லுங்களேன்//
பாகவதத்தில் வரும் பல குட்டிக் கதைகளில் இதுவும் ஒன்று. சுயக்ஞனைப் பற்றி அதிகமாக ஒன்றும் இல்லை.
உசீநர தேசத்து அரசன் சுயக்ஞன். இந்த தேசத்தை உருவாக்கியவன். போரில் இவன் கொல்லப்பட, இவன் உறவினர் அழுத அழுகை, யமலோகம் வரை செல்ல, யமன் போர்க்களத்திற்கே செல்கின்றானாம்.
யமன் சுயக்ஞன் உறவினர்களிடம் கூறும் கதை:
காட்டில் தம்பதிகளான குலிங்க பட்சிகள் (கிழங்கு தின்பவை) இருந்தன. ஒரு வேடன், விரித்த வலையில், பெண் பட்சி விழுந்தது. இதைப் பார்த்த ஆண் பட்சி, தன் ஜோடியைக் காப்பாற்ற இயலாமல், வருந்தியது.
‘தம்பதியரில், பாதி ஆத்மா இருந்து என்ன பயன். என் குழந்தைகள் தாயை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. எனவே கடவுள் அவளை விடுத்து, என்னைக் கொண்டு போகட்டும்’ என்று கதறி அழுதது.
அழும் சத்தத்தைக் கேட்ட வேடன், குறி பார்த்து ஆண் பட்சியையும் அடித்துக் கொன்றான். அது அழாமல் இருந்திருந்தால், அதுவாவது பிழைத்திருக்கும்.
நீங்களும் 100 வருடங்கள் அழுதாலும் எதுவும் நேரப் போவதில்லை. எனவே அழுவதை விடுத்து, மற்ற வேலையைப் பாருங்கள்’ என்று யமன் கூற, சுயக்ஞன் உறவினர், நகரத்திற்குச் சென்று, அவன் ஈமக் கிரியைகளை முடித்தனர்.
இந்தக் கதையை இரணியன் தன் தாய், தம்பி மனைவி, மக்களிடம் கூறுகிறான்.
இந்தக் கதை ஸ்ரீமத் பாகவதத்தில் 7.14.2.20-60 ஸ்லோகங்களில் வருகிறது
ராகவா
ReplyDelete//ஐம்புலன், பொறிகள், பூதம் கேள்விப்பட்டுள்ளேன்.. ஐந்து வேள்விகள் இன்று தான் கேள்விப்படுகிறேன்//
திருமழிசை ஆழ்வாரின் பாசுரம் (திருச்சந்த விருத்தம்-2):
ஆறும் ஆறும் ஆறுமாய்
ஓரைந்துமைந்துமைந்துமாய்
ஏறு சீர் இரண்டு மூன்றும்
ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானமாகி
பொய்யினோடு மெய்யுமாய்
ஊறொடோசை ஆயவைந்தும்
ஆயவாய மாயனே.
இதில், முதல் வரியில் வந்துள்ள முதல் 5 - பஞ்ச மஹா யஜ்யஞ்கள் - பெரியாழ்வார் கூறிய 5 வேள்விகள்.
ராகவா
ReplyDelete//இந்த வாரம், நமது ஆஸ்தான Photo Director (தேவன் ராகவன்) கொஞ்சம் busy. எனவே, படங்கள் போட இயலவில்லை. மன்னிக்கவும்.//
நீ வரலைன்னு Post போட்டா, பின்னாடி நீ வந்து Picture போட்டு, கால வாரிட்டியே தல ...
//இனி, குறைந்தது 'அரங்கா' என்று சொல்லி விட்டாவது 'Party'-க¢குச் செல்லலாமே :-)//
ReplyDeleteரெங்கா, ரெங்கா, ரெங்கா!
இப்போ Party-க்கு போறேன்! :)
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி "நாயேனுக்கு" இடுமினீரே!
முதல் படத்தில் நரசிம்மப் பெருமாள் சூப்பர் புலி நகச் சங்கிலி போட்டிருக்காரு! மொத்தம் மூனு புலி நகங்கள்! :)
ReplyDeleteபிரம்ம வேள்வி
ReplyDeleteதேவ வேள்வி
பூத வேள்வி
பித்ரு வேள்வி
மனித வேள்வி
- என்ற பஞ்ச பூதக் கடமைகள் பற்றிச் சொன்னது அருமை ரங்கன் அண்ணா!
அதில் மனித வேள்வியில், அன்னதானம், நிராதரவான குழந்தைகள் நலன் முதலான சமூகக் கடமைகள் மிகவும் முக்கியம்! - ஐயுமும் , பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி என்று அவளும் காட்டிச் செல்கிறாள் அல்லவா?
//தம்பி மனைவியான ருஷாபானுவும், அவளுடைய 7 மக்களும் அழுகின்றனராம்! இதைப் பற்றிக் கவலைப் படாது, தம்பி மனைவியை அபகரிக்க நினைக்கிறானாம் இரணியன்!//
ReplyDelete:)
இரணியன் அண்ணன் அல்லவா? அப்படீன்னா முதலில் கொன்றது தம்பியைத் தானே?
இராமாயணத்திலும் தம்பி மனைவியை ஒருவன் அபகரிக்க...
அதுக்கு முன்னாடி நரசிம்மாயணத்திலும், இப்படியேவா? :)
//ஆனால் தன் தாயான திதியும் அழுவதால், எல்லோரையும் மயக்க, அவர்களுக்கு 'உபதேசம்' செய்கிறானாம் இரணியன்!//
நிஜமாலுமே "சாத்தான்" வேதம் ஓதிற்றா? :)
//இதைக் கேட்ட திதிக்கு மனம் தெளிகிறது; இரணியன், இறக்காமல் இருக்க வரம் வேண்டி தவம் செய்ய மந்தர மலை அடிவாரம் செல்கிறான்//
ReplyDeleteஇந்த சுயக்ஞன் கதை-உபதேசத்தைக் கருவில் உள்ள குழந்தை கேட்டதோ என்னவோ?
அதான் தூணில் பிளந்து தோன்றிய சிம்மம் தந்தையைப் பிளந்ததைப் பார்த்தும், பயந்து மூர்ச்சையடையாமல் இருந்தது போல!
நாரதருக்கு முன்னமேயே பிரகலாதனுக்கு இப்படி ஒரு குருவா? :)
தந்தை சொன்ன "கருவில்" உபதேசம் = ஆத்ம சாக்ஷாத்காரம்!
நாரதர் சொன்ன "கருவில்" உபதேசம் = பரமாத்ம சாக்ஷாத்காரம்!
"கருவாய் உயிராய்"
"குருவாய் வருவாய்"
"அருள்வாய் குகனே"
//திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்னும் இருக்கிறதா?//
ReplyDeleteஹிஹி
பெரியாழ்வார் பல பாசுரங்களில் ஏன் திருக்கோட்டியூரைச் சுற்றியே வருகிறார்? :)
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
-ன்னு கண்ணன் திருக்கோட்டியூரில் பிறந்ததாக ஏன் காட்ட வேணும்?
நாராயண நாமத்துக்கும் திருக்கோட்டியூருக்கும் என்ன தொடர்பு?
எதுக்கு, இராமானுசர் உலகத்துக்கே காட்டிக் கொடுத்த மந்திரப் பொருள், திருக்கோட்டியூரிலேயே அமைந்தது?
இப்போ சொல்லுங்க, திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்னும் இருக்கிறதா? :))
Dear Rangan Anna,
ReplyDeleteWill you be interested in listening to a select set of pasurams(approximately 400 in number) musical form? (But they come with a cost.Each one costs Rs 10/-. Kali yugam allava ! Money rules everywhere. :-))
If yes, please send me a mail.
~
Radha
Dear Rangan Anna,
ReplyDeleteSample here:
http://araiyar.com/html/sample_pasurams/kangulum-pagalum.mp3
~
Radha
//திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்னும் இருக்கிறதா?//
ReplyDeleteஹிஹி
பெரியாழ்வார் பல பாசுரங்களில் ஏன் திருக்கோட்டியூரைச் சுற்றியே வருகிறார்? :)
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
-ன்னு கண்ணன் திருக்கோட்டியூரில் பிறந்ததாக ஏன் காட்ட வேணும்?
நாராயண நாமத்துக்கும் திருக்கோட்டியூருக்கும் என்ன தொடர்பு?
எதுக்கு, இராமானுசர் உலகத்துக்கே காட்டிக் கொடுத்த மந்திரப் பொருள், திருக்கோட்டியூரிலேயே அமைந்தது?
இப்போ சொல்லுங்க, திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்னும் இருக்கிறதா? :))
சொல்லி முடியாது.
அவ்வளவு பெருமை.
அனைவரின் திருவடிகளுக்கும் பல்லாண்டு.
அடியேன்.
அடப் பாவி ராதா, உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா? :)
ReplyDeleteநல்லது தான்!
ரங்கன் அண்ணா, ராதா சொல்லும் பா-சுரங்கள், உங்க கிட்ட முன்பு பேசி இருந்தேனே - காலஞ்சென்ற அரையர் ராமா பாரதி, மற்றும் அவர் துணைவியார் பாடுவது!
இந்த ஆழ்வார் ஆழும் முயற்சி பற்றித் தனி மடலில் இன்னும் சொல்கிறேன்!
KRS
ReplyDelete//முதல் படத்தில் நரசிம்மப் பெருமாள் சூப்பர் புலி நகச் சங்கிலி போட்டிருக்காரு! மொத்தம் மூனு புலி நகங்கள்! :)//
Re-directed to ராகவன்
KRS
ReplyDelete//இரணியன் அண்ணன் அல்லவா? அப்படீன்னா முதலில் கொன்றது தம்பியைத் தானே?//
ஆம்.
//இராமாயணத்திலும் தம்பி மனைவியை ஒருவன் அபகரிக்க...//
தங்கள் Comment புரியவில்லை. சற்று விளக்குகிறீர்களா?
//நிஜமாலுமே "சாத்தான்" வேதம் ஓதிற்றா? :)//
ஆம். அதைப் படித்தால், இரணியன் நன்கு படித்தவன் எனத் தெரியும். ஆனால், படித்ததை ஒழுங்காகப் பயன்படுத்தவில்லை.
KRS
ReplyDelete//இப்போ சொல்லுங்க, திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்னும் இருக்கிறதா? :))//
இன்னும் இருக்கிறது ... ஹி ... ஹி ... இதைப் பற்றி, அடுத்த Post-ல் எழுதுகிறேன்.
KRS
ReplyDelete//இந்த சுயக்ஞன் கதை-உபதேசத்தைக் கருவில் உள்ள குழந்தை கேட்டதோ என்னவோ?
அதான் தூணில் பிளந்து தோன்றிய சிம்மம் தந்தையைப் பிளந்ததைப் பார்த்தும், பயந்து மூர்ச்சையடையாமல் இருந்தது போல!
நாரதருக்கு முன்னமேயே பிரகலாதனுக்கு இப்படி ஒரு குருவா? :)
தந்தை சொன்ன "கருவில்" உபதேசம் = ஆத்ம சாக்ஷாத்காரம்!
நாரதர் சொன்ன "கருவில்" உபதேசம் = பரமாத்ம சாக்ஷாத்காரம்!//
இல்லை. பிரகலாதன் நாரயணன் பக்தனானதற்கு இன்னொரு காரணம் உண்டு. விளக்கம் பின்னால் :-)
ராதா
ReplyDelete//Dear Rangan Anna,
Will you be interested in listening to a select set of pasurams(approximately 400 in number) musical form? (But they come with a cost.Each one costs Rs 10/-. Kali yugam allava ! Money rules everywhere. :-))
If yes, please send me a mail.//
I am definitely interested. ஆனால், தற்போது I have too much in my plate - நரசிம்மாயணம் & கோயிலில் மார்கழி மாத திருப்பாவை பிரவசனம்.
மீண்டும் தை ஹஸ்த நட்சத்திரத்திற்க்குப் பிறகே பிரபந்தம் கேட்க வேண்டும் என்பர் பெரியோர்.
அதற்கப்புறம் கேட்கிறேன்.
//அடப் பாவி ராதா, உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா? :) //
ReplyDeleteMy full name is Radha Ramanuja Dasan. :)
//கோயிலில் மார்கழி மாத திருப்பாவை பிரவசனம். //
ReplyDeleteIn which temple? I will be able to attend if its in Chennai.
My Dear Radha Ramanuja Dhasan
ReplyDelete//In which temple? I will be able to attend if its in Chennai.//
I am doing the discourse this year, in Indira Nagar Sundhara Anjaneya swami Temple, Bangalore, every day between 10:30 AM and 11:30 AM.
//அணி திருவரங்கம் என்னா*
ReplyDeleteமிண்டர்//
In Malayalam MindAthiru = PesAmaliru. so here, can we also interpret "மிண்டர்" as - "those who dont even speak about Srirangam"?
writer Sujatha also mentioned about the usage of some malayalam words in few pAasurams and they could have been tamil words during Alwars period.
பாலாஜி
ReplyDelete//
In Malayalam MindAthiru = PesAmaliru. so here, can we also interpret "மிண்டர்" as - "those who dont even speak about Srirangam"?//
இந்தப் பொருள் வரலாம். ஆனால் ஆழ்வார் இதை அடியேன் எந்தப் புத்தகத்திலும் படித்ததில்லை.
writer Sujatha also mentioned about the usage of some malayalam words in few pAasurams and they could have been tamil words during Alwars period.//
பிரபந்தத்தில், மலயாளம் மட்டுமன்றி, இன்று நாம் கேட்கும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் (தெலுங்கு, கன்னடம், மலயாளம், கொங்கணி) உள்ள வார்த்தைகள் சில உண்டு. ’எதில் இருந்து எது வந்தது?’ என்ற ஆராய்ச்சிக்கு அடியேன் வரமாட்டேன் :-) Too Sensitive a Topic!
தெலுங்கிற்கு உதாரணம்:
-தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!
இங்கு, ‘செப்பு’ என்பது, 'Copper' அல்ல. தெலுங்கில், ‘செப்பு’ என்றால், ‘சொல்’ என்று அர்த்தம்!
Again, இந்த ’மிண்டர்’ தான் ‘மலயாள மிண்டரா’ என்று அடியேனுக்குத் தெரியாது!
//ஆனால் ஆழ்வார் இதை அடியேன் எந்தப் புத்தகத்திலும் படித்ததில்லை.//
ReplyDeleteSorry for the Typo.
’ஆழ்வார் மிண்டர் எனும் வார்த்தையை, இந்த அர்த்தத்தில் கூறியதாக அடியேன் எந்தப் புத்தகத்திலும் ...’
என்று கூற வந்தேன்.
Rangan anna... i did not mean to bring in a different meaning, those are just my 2 cents. bcoz i read sujatha's article on 'divya prabhandam' last week, this kind of interpretation flashed in my mind. Sujatha also clearly mentioned in his article that those are his own thoughts.
ReplyDeletebtw... i would like to comment in tamil, but yet to learn that magic!! :)
//பிரபந்தத்தில், மலயாளம் மட்டுமன்றி, இன்று நாம் கேட்கும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் (தெலுங்கு, கன்னடம், மலயாளம், கொங்கணி) உள்ள வார்த்தைகள் சில உண்டு.//
ReplyDeletewow...nice to know abt this!
// ’எதில் இருந்து எது வந்தது?’ என்ற ஆராய்ச்சிக்கு அடியேன் வரமாட்டேன் :-) Too Sensitive a Topic!//
me too ;-D
பாலாஜி
ReplyDelete//Rangan anna... i did not mean to bring in a different meaning, those are just my 2 cents. bcoz i read sujatha's article on 'divya prabhandam' last week, this kind of interpretation flashed in my mind. Sujatha also clearly mentioned in his article that those are his own thoughts.//
No worries.
At least in the context of this Pasuram, the meaning that you thought of fits.
We can enjoy more when we start thinking and interpret things differently - not just the stereotype meaning!
Rangan Devarajan