Monday, February 08, 2010

நரசிம்ம சரணாகதி - 2


சரணாகத வத்ஸலனின் பெருமைகள் தொடர்கிறது ...

***

(மாவலி படையெடுத்து வர, இந்திரன், சுவர்க்கத்தை விட்டு Vivek Style-ல் Escape! இந்திரன் தாய் அதிதி, பயோ விரதத்தைக் கடைப்பிடிக்க, நாராயணன் தோன்றுகிறார்)

நாராயணன்: நான் பாட்டுக்கு படுத்திருந்தேன்! ஏன் என்னை எழுப்பினாய்!

அதிதி: பிரபோ! மாவலியினால் என் மகன் நாடோடியாகி விட்டான்! நீங்கள் மாவலியை அழிக்க வேண்டும்!

நாராயணன்: முடியாது! பிரகலாதன் வம்சத்தவரை நான் அழிப்பதில்லை என்று வாக்குக் கொடுத்துள்ளேன்!

அதிதி: அவனை சுவர்க்கத்தில் இருந்து விரட்டவாவது முடியுமா?

நாராயணன்: அதுவும் முடியாது!

அதிதி: ஏன்?

நாராயணன்: மாவலி, யாகம் செய்து, முனிவர்கள் ஆசியுடன் இந்தப் பலத்தைப் பெற்றுள்ளான்! தேவர்களின் பலம், அவனிடம் பலிக்காது!

அதிதி: உங்களால் முடியாது என்று உண்டோ? ஏதாவது செய்யுங்கள்!

நாராயணன் ('சூடேத்திக்கிட்டே இருக்காங்களே' என்ற முனகலுடன்): இழந்த சுவர்க்கத்தை வேறு விதமாகத் தான் பெற வேண்டும். இதற்கு நானே வழி செய்கிறேன்!'

(மறைந்து விடுகிறார் நாராயணன்)

***

இடம்: அதிதியின் மாளிகை
நேரம்: புரட்டாசி மாதம், சுக்கில பக்ஷம், துவாதசி, சிரவண நட்சத்திரம்

(காசியப முனிவருக்கும், அதிதிக்கும், மகனாகப் பிறக்கிறான் நாராயணன்)

காசியபர்: பிரபோ! உமக்குக் கோடி நமஸ்காரங்கள்! நீர் மாவலியிடம் இப்படியே சென்றால், அவனுக்கு உங்களை அடையாளம் தெரிந்துவிடும்!

நாராயணன்: தெரியாதா எனக்கு! நான் வேறு Uniform-ல் தான் செல்லப் போகிறேன்!


(உடனே வாமனனாக மாறிய நாராயணனுக்கு, காசியபர் பிரம்மோபதேசம் செய்து, முஞ்சியைக் கொடுக்கிறார்; பிரகஸ்பதி பிரம்ம சூத்திரத்தைக் கொடுக்க, சூரியன் காயத்ரி மந்திரத்தை உபதேசிக்க, சந்திரன் தண்டம் கொடுக்க, தாய் கோவணத்தைக் கொடுக்க, பிரம்மன் கமண்டலம் கொடுக்க, குபேரன் பிச்சைப் பாத்திரத்தைக் கொடுக்கிறான்!)

பிரமன்: பிரபோ! கொடுத்தே பழக்கப் பட்டவர் நீர்! யாசிப்பது உமக்குப் புதிது! எதற்கும் ஒரு 'Trial' பார்த்துக் கொள்ளுங்கள்!


(யார் முதல் பிச்சை அளிப்பது என்பதில் அங்கு பெரும் போட்டி! எம்பெருமானுக்கே கொடுப்பது பாக்கியமல்லவா? அடிக்கிறது Lottery, வருங்காலத் தங்கை பார்வதிக்கு!)

(வாமனன் புறப்பட எத்தனிக்க, ஸ்ரீதேவி ஜம்மென்று அவன் மார்பில் ஏறி அமர்ந்து கொள்கிறாள்!)

சூரியன் (ஸ்ரீதேவியைப் பார்த்து): ஐயோ! நீங்கள் செல்லாதீர்கள்! காரியம் கெட்டு விடும்!

ஸ்ரீதேவி: அதெல்லாம் முடியாது! அவரை விட்டு நான் விலக மாட்டேன்.!நான் கட்டாயம் உடன் செல்வேன்!

குபேரன் (ஸ்ரீதேவியிடம்): தாயே! நீங்கள் சென்றால், உங்கள் கருணைப் பார்வை மாவலி மேல் பட்டு விடும்! பின்னர் அவனிடம் இருக்கும் சொர்க்கத்தை பிடுங்க நாராயணனாலும் முடியாது!

(அங்கு வாக்குவாதம் முற்ற, திடீரென்று, 'Idea' என்று யாரோ கத்த, எல்லோரும் திரும்பிப் பார்க்கின்றனர்)

பூமாதேவி: பிரபோ! உங்கள் மேல், ஸ்ரீதேவியை மறைக்கும்படி, மான் தோலை அணிந்து செல்லுங்கள்!


(அனைவருக்கும் இந்த எண்ணம் பிடித்துப் போக, பூமாதேவியே க்ருஷ்ணாஜனம் அணிவிக்க, அவர் புறப்படுகிறார்!)

***

லியிடம் வாமனன் மூன்றடி நிலம் யாசித்து, உலகளக்கிறான்! வளர்ந்த போது கடுஞ்சொற்களைப் பலர் அள்ளி வீச, அதையும் பொறுத்துக் கொள்கிறான்!

மறைந்திருந்த ஸ்ரீதேவி, திருவடி வளரும் விதத்தை சற்று எட்டிப் பார்க்க, அவள் பார்வை, திருவடியில் நீர் வார்க்கும் பலியின் மீதும் படுகிறது! இதனாலேயே, அவனுக்கு இந்திர பதவி - சாவர்ணி மனுவில்!


(ஸ்வாமி தேசிகன் திருக்கோவலூர் உத்தமன் ஸ்ரீ தேஹளீஸன் மேல் 28 அற்புதமான ஸ்லோகங்கள் இயற்றியுள்ளார்! முடிந்தால் படியுங்கள்!)

தான் பிச்சை எடுத்தாவது, திட்டு வாங்கியாவது, பிறருக்கு உதவி செய்யும் அவனல்லவோ உத்தமர்களில் உத்தமன் - ஸர்வோத்தமன் - ஓங்கி உலகளந்த உத்தமன்?

தன்னைத் தேடி வருபவர்களின் பிரச்சனைகளை, தன்னுடையதாகவே நினைத்துக் கொள்கிறானாம்! அவற்றைத் தீர்த்து வைப்பதைத் தன் பேறாக நினைக்கிறானாம் அவன்!

இவன் உத்தம குணத்தை (ஸர்வ ஸ்வாமித்வத்தை), 'உலகேழும் அளந்தாய்' என்ற வார்த்தை (கதை) மூலம் சொல்கின்றார் பெரியாழ்வார்!

***

மார்க்கண்டேய முனிவர், நாராயணனைத் தரிசிக்கத் தவம் செய்கிறார். விஷ்ணு தோன்றி, 'என்ன வரம் வேண்டும்' என்று கேட்க, 'உன்னைக் கண்ட பின் எதுவும் வேண்டாம்' என்கிறார் முனிவர். வற்புறுத்தலின் பேரில் 'உலகத்தின் அறிவுக்கும், இயற்கைக்கும், பேதத்திற்கும் காரணமான உன் மாயையைக் காண வேண்டும்' என்று கேட்க, விஷ்ணு, OK சொல்கிறார்.

(மார்க்கண்டேயர், விஷ்ணு மாயையைக் காணவே தவம் செய்ததாகவும் கதை உண்டு)

சில நாள் கழித்து, திடீரென இடி, மின்னலுடன் பயங்கர மழை! தொடர்ந்து பெய்த மழையால், சமுத்திரங்கள் பொங்கி, எங்கும் வெள்ளக் காடு! இவர் ஆசிரமமும் முழுகியது! முனிவர், நீரில் இழுத்துச் செல்லப் பட்டு, பல நாட்கள் நீரில் அலைக்கழிக்கப் படுகிறார்.


ஓரிடத்தில், ஒரு பெரிய ஆல மரம். அதன் ஈசான்ய திசையில் ஒரு கிளையின் இலை மீது, ஒரு சின்னஞ்சிறு குழந்தை!

தாமரை மலர் முகம், சங்கு போன்ற கழுத்து, விசால மார்பு, அழகிய மூக்கு, கருணை ததும்புப் கண்கள், பவள வாய்! முத்தாய்ப்பாக, வலது கால் கட்டை விரலை, வாயில் வைத்துச் சுவைத்துக் கொண்டிருக்கிறது!

குழந்தையின் அழகில் தன்னை மறந்த முனிவர், திடீரென்று ஒரு குகைக்குள்ளே இழுக்கப் படுகிறார்! முடிவில், அண்ட சராரங்களும், தேவர்களும், பூமியும் தென்படுகின்றன! பூமியில், ஒரே வெள்ளம்! அதில் முனிவரின் ஆசிரமமும்! காட்சியை ரசிப்பதற்குள், மீண்டும் குகைக்குள் இழுத்துச் செல்லப் படுகிறார்! மீண்டும் ஒரே வெள்ளக் காடு!

சற்று நேரம் கழித்து, தான் கண்ட காட்சி மெதுவாகப் புரிகிறது முனிவருக்கு - குழந்தை, நாராயணனே என்றும், அவன் மூச்சுக் காற்றில் அவன் வயிற்றினுள்ளே சென்றதும், பின்னர் வெளியே வந்ததும்!

பிரளயத்தின் போது உலகங்களைத் தன் வயிற்றில் வைத்துக் காத்த காட்சி, எளிதில் கிடைக்காதது! மெய் சிலிர்க்கிறார்! குழந்தையைக் கட்டி அணைக்கத் தன் கையை நீட்ட, காட்சி மறைகின்றது! மீண்டும் தம் ஆசிரமத்தில் இவர் அமர்ந்திருக்கிறார்!

எம்பெருமான் வயிற்றில் 7 முறை உள்ளே சென்றதன் பலன் - 7 கல்பங்கள் உயிர் வாழும் பேறு மார்க்கண்டேயருக்கு!

(மீண்டும் நாராயணன் தோன்றி, முனிவர் இதுவரை அனுபவித்தது விஷ்ணு மாயையே என்று சொல்லி மறைந்ததாகக் கதை)

இப்படி, எல்லாம் தெரிந்தவனை, நம் அறிவையும், புலன்களையும், மறைக்கக் கூடிய மாயனை, எல்லாக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் - உலகமே முழுகினாலும் - நம்மைக் காப்பாற்றக் கூடிய ஸர்வக்ஞனை - அவன் சிறு குழந்தையாய் இருந்தாலும் சரி - சரணடைகின்றார் பெரியாழ்வார்!

அவனை, 'ஊழியாயினாய்' என்றழைக்கின்றார்!

***

துர்வாசர் கொடுத்த பூமாலையை இந்திரன் ஐராவதத்தினிடம் கொடுக்க, அது மாலையைக் காலால் நசுக்குகிறது!


வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம்! இன்னொன்று கொடுக்கிறார்! மாலை அல்ல - சாபம்!

வழக்கம் போல் இந்திரன் Care of Platform! அவனும் மற்ற தேவர்களும் வழக்கம் போல் பிரமனிடம் செல்கின்றனர்!

வழக்கம் போல் பிரமன் எல்லாருடனும் சிவனிடம் செல்கின்றனர்!

வழக்கம் போல் சிவனும், Redirect to நாராயணன்!

வழக்கம் போல் அவரும், 'நான் பார்த்துக் கொள்கிறேன்! நீங்கள் பாற்கடலைக் கடையுங்கள்!' என்கிறார்!

***

தேவர்களுக்குத் தேவை, நாடும், வீடும்! அசுரர்களுக்குத் தேவை அமிர்தம்! பாற்கடலைக் கடைய, எலிக்கும், பூனைக்கும் சமாதானம்!

அனைவரும் மந்தர மலையைத் தூக்கிச் செல்கின்றனர்! கனத்தைத் தாங்காமல் மலையை அவர்கள் கீழே போட, அடியில் இருந்த பலர் (இட்டிலிக்குத் தொட்டுக் கொள்ள முடியாத) சட்டினி ஆயினர்!

நாராயணன், தானே களம் இறங்குகிறார்! அவர் பல அவதாரச் செயல்களைச் செய்திருந்தாலும், அமுதம் கடந்த பொழுது அவர் செய்தவை கணக்கிலடங்காது!

நசுங்கியவர்களுக்கு, முதலில் உயிர் கொடுக்கிறார்!

தானே மலையைக் கையில் தாங்கி, பாற்கடலில் இறக்குகிறார்!

மலையைக் கடையக் கயிறானான் வாசுகி! (மலை போல், பல மூலிகைகளும், வாசனைத் திரவியங்களும் போடப் பட்டாதாக விஷ்ணு புராணம் கூறும்)

அசுரர்கள், பாம்பின் வாலைப் பிடிப்பது அவமானம் என நினைக்க, ஆரம்பிக்கிறது சண்டை! கடைசியில், தேவர்கள் வாலையும், அசுரர்கள் தலையையும் பிடிக்கின்றனர். கடைகின்றனர்!

மலை நிற்காது அங்குமிங்கும் ஆட, வாசுகியும் தவிக்கிறான். அவன் விடும் மூச்சுக் காற்றினால், தலைப் பக்கம் நின்ற அசுரர்கள் தவிக்கின்றனர். இதை முன்னமேயே அறிந்து தான் நாராயணன் ஒரு பெரும் உருவம் கொண்டு தேவர்கள் பக்கம் நின்றாரோ?

பகவான், ஆமை உருவெடுத்து, மலையைக் கீழே தாங்க, மலை மேல்புறம் ஆடுகின்றது!

(பகவான் யாரும் காண முடியாத இன்னொரு உருவம் எடுத்து, மலையின் உச்சியையும் பிடித்துக் கொள்வதாக, விஷ்ணு புராணம் கூறும்)

***

வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி,
கடல் வண்ணன் பண்டொரு நாள்
கடல் வயிறு கலக்க,

கடலில் இருந்து, முதலில் ஆலகால விஷம் தோன்ற, கருணையுடன் அதனை 'நீல கண்டன்' உட்கொள்கிறார்!

பின்னர் காமதேனு தோன்ற, முனிவர்கள் அதை எடுத்துக் கொள்கின்றனர். உச்சைசிரவஸ் எனும் வெள்ளைக் குதிரை வெளியே வர, பலி எடுத்துக் கொள்கின்றான்.

(ஸ்ரீமத் பாகவதம், அடுத்து ஐராவதம் எனும் யானை வெளி வந்தாகவும், இந்திரன் அதை எடுத்துக் கொண்டதாகவும் கூறுகிறது!

இந்த ஐராவதம் மாலையை மிதித்ததால் தானே கடல் கடைய வேண்டிய நிர்பந்தம்! மீண்டும் எப்படி இந்த யானை வெளியே வரும்? ஒரு வேளை இது வேறு யானையோ?

விஷ்ணு புராணத்தில், இந்த யானை வெளி வந்ததாகச் சொல்லப் படவில்லை)

பின்னர் கற்பக மரம் தோன்ற, அதையும் இந்திரன் எடுத்துக் கொள்கிறான்.

அடுத்து மிகவும் அழகான, மதி மயக்கம் செய்யக் கூடிய வாருணீ தேவி வெளிவர, அசுரர்கள் அவளை எடுத்துக் கொள்கின்றனர்!


(அடுத்து சந்திரன் தோன்றியதாகவும், சிவன் அவனை ஏற்றுக் கொண்டு, 'சந்திரசேகரன்' எனும் பெயர் பெற்றதாகவும் விஷ்ணு புராணம் கூறுகிறது)

அடுத்து, ஊர்வசி தோன்றுகிறாள். அவள் தேவர்களுடன் சென்று விடுகிறாள்!


பல அழகான தேவதைகளின் நடுவில் மஹாலக்ஷ்மி வெளி வர, அனைவரும் வாசுகியை விட்டு, அவளை அடைய ஆசைப்படுகின்றனர்! அவளோ, நாராயணனுக்கு மாலையிட்டு, அவன் மார்பில் சேர்கின்றாள்!

(சந்திரனைத் தொடர்ந்து அவதரித்ததாலேயே, மஹாலக்ஷ்மிக்கு, ‘சந்த்ர சகோதரி’ என்ற பெயர் உண்டு - லக்ஷ்மி அஷ்டோத்தர நாமம் 59)

அனைவரும் கடலைத் தொடர்ந்து கடைய, விஷ்ணு தன்வந்திரி அவதாரம் எடுத்து, அமிர்தத்துடன் வெளி வருகின்றார்!

இமைப் பொழுதில் அசுரர்கள் அமிர்தத்தைத் தட்டிச் செல்கின்றனர்! அதை மீட்க, மீண்டும் ஒரு அவதாரம்! இம்முறை, மோகினியாக!


மோகினியின் மாயையில் சிவனே மயங்கும்போது, அசுரர்கள் எம்மாத்திரம்! அவர்கள் மயங்க, மோகினி, தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கொடுக்கிறார்!

ராகு, கேது, தேவர்கள் வேடமிட்டு அமிர்தம் பெற்றதால், சக்ராயுதத்தால் அவர்கள் தலையை அறுக்கிறார் எம்பெருமான்!

அமிர்தம் உட்கொண்டதால் அவர்கள் சாகவில்லை! பிரம்மன் அவர்களை கிரகங்களாகச் செய்கிறார்!


(ராகு, கேது கதை, சற்றே வித்தியாசமாகவும் சொல்லப் படுவதுண்டு)


தேவேந்திரன், மஹாலக்ஷ்மியைத் துதிக்க அவள் அருளால் மீண்டும் ஐஸ்வர்யமும், ராஜ்ஜியமும் கிடைக்கின்றது.

(இந்த மஹாலக்ஷ்மி துதி, மிகவும் சக்தி வாய்ந்தது! நீங்களும் முடிந்தால் சொல்லுங்கள்!)

***

ரணடைந்தவர்களுக்குத் துன்பம் எனும்போது, தானே, கௌரவம் பார்க்காமல், பெரியவன், சிறியவன் என்ற வித்தியாசம் பார்க்காமல்,

கூர்மமாக, தன்வந்திரியாக, மோகினியாக, வேறு இரு ஸ்வரூபங்களாக (ஆணாக, பெண்ணாக, மிருகமாக, மற்றும் இருவராக),

எத்தனை அவதாரங்கள் தேவை என்றாலும் எடுத்து, தானே நேரில் வந்து, செய்ய வேண்டியதைச் செய்து முடிக்கிறான்! என்னே அவன் ஸெளசீல்யம்! இவனிடம் சரணடைந்து விட்டால் நமக்குக் கவலை இல்லையே!

பெரியாழ்வார், எம்பெருமானின் ஸெளசீல்ய குணத்தை, கடலைக் கடைந்த (கடலைக் கடைந்தானே) வைபவத்தின் மூலம் சொல்கின்றார்!

***

ருவரிடம் சரணடையச் செல்கிறோம்!

அவர் நம்மைப் பார்த்து, 'நீ ஏழை. உனக்கு உதவ மாட்டேன்!' என்றோ, 'உனக்குத் தகுதி இல்லை! எனவே உனக்கு உதவ மாட்டேன்!' என்றோ சொன்னால், எப்படி இருக்கும்?

நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கும்! குறையும், தேவையும் இருப்பதால் தானே, நாம் இன்னொருவரிடம் உதவிக்குச் செல்கிறோம்? இந்தக் குறையைக் காரணமாகக் கூறி, அவர் நம்மை நிராகரித்தால்?

மற்ற மனிதர்களும், மற்ற தேவதைகளும், நம்மை நிராகரிக்கலாம்! ஆனால், எம்பெருமான்?

கன்று தரையில் அமர்ந்து, புரண்டு, பின் தாயிடம் வருகின்றது! தாய்ப் பசு, 'நீ அழுக்கு' என்று அதனை ஒதுக்குவதில்லை. தன் நாவினால், தடவிக் கொடுக்கின்றது! அழுக்கையும் சேர்த்து! கன்றின் அழுக்கு, தாய்க்கு உதவி செய்யக் கிடைத்த பாக்கியம்!

அதே போல், நம்மிடம் எதுவும் இல்லாவிட்டாலும், 'எதுவும் இல்லை' என்ற தகுதியையே தகுதியாகக் கொண்டு, சரணடைந்தவர்களைக் காப்பவன் நாராயணன்! நம் குறையே நம் அதிருஷ்டம்! அவன் அதிருஷ்டம்!

இந்த வாத்ஸல்ய குணம், அவனுக்கு இருப்பதால், அவனை, ’பிரான்’ (பிறருக்கு உதவுபவன்) என்றழைக்கின்றார் பெரியாழ்வார்!

***

சாலையில் ஒரு விபத்து! ரத்த வெள்ளத்தில் ஒருவன்!

அந்த வழியில் செல்லும் பெரும்பாலோர், 'ஐயோ! பாவம்' என்று இரக்கப் படுவர்! சற்றே தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பர்!

99% பேர், இரக்கப்படுவதோடு நின்று விடுவர்! வெள்ளத்தில் கிடப்பவனுடைய பிரச்சனையை, தன்னுடையதாக எடுத்துக் கொள்வதில்லை! 'நமக்கேன் வம்பு?' என்று!

மேலும் சிலருக்கு, இரக்கம் இருக்கும்! ஆனால், ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அவனுக்கு உதவுவதால், ‘பின்னால் வரும்’ பிரச்சனைகளைச் சமாளிக்கச் சக்தி இருக்காது!

பிரம்மன் வரம் கொடுத்தாலும், வதைக்க நரசிம்மன் ஒருவனால் தானே முடிந்தது!

சரணடைபவன் மோட்சத்தைக் கேட்டு விட்டால்? நாராயணன் ஒருவனாலேயே மோட்சத்தைக் கொடுக்க முடியும்!

ஆகவே, சொல்லப் பட்ட 9 குணங்களில் ஒன்று குறைந்தாலும், ஒருவன் 'சரணாகத வத்ஸலன்' எனும் தகுதியை இழந்து விடுகிறான்!

***

நம்பனே! நவின்றேத்த வல்லார்கள்* நாதனே நரசிங்கமதானாய்!*
உம்பர்கோன்! உலகேழுமளந்தாய்!* ஊழியாயினாய்! ஆழி முன்னேந்தி*

கம்ப மா கரி கோள் விடுத்தானே!* காரணா! கடலைக் கடைந்தானே!*

எம்பிரான்! என்னை ஆளுடைத் தேனே!* ஏழையேன் இடரைக் களையாயே!


'நானோ ஏழை (ஏழையேன்)! உன்னிடம் அனைத்து குணங்களும் இருப்பதால், நீயே சரணாகத வத்ஸலன்! என்னைப் போன்றோருடைய குறைகளையே நீ உன் அதிருஷ்டமாகக் கொள்வாய்! நீ தான் என் தலைவன் (என்னை ஆளுடைத் தேனே)! என் துன்பத்தை நீக்கு (என் இடரைக் களையாயே)!

என்று பெரியாழ்வார் நரசிம்மனிடம் சரணடைகிறார்!

- நரசிம்மன் தொடர்வார்!

37 comments:

  1. Vanakkam sir,
    while churning parkadal,Srimahalakshmicame.Itmeans earlier there is no srimahalakshmi?you explained deeply about saranamadaidhal,good.
    ARANGAN ARULVANAGA.
    anbudan,
    k. srinivasan.

    ReplyDelete
  2. (காசியப முனிவருக்கும், அதிதிக்கும், மகனாகப் பிறக்கிறான் நாராயணன்:)

    இந்திரனின் தாய் அதிதி ?

    ReplyDelete
  3. மார்க்கண்டேய முனிவர், நாராயணனைத் தரிசிக்கத் தவம் செய்கிறார்:))


    பெற்றவரை (பெருமாளை) காண தவம் செய்யா வேண்டாம் . என்றெல்லாம் சொல்லிருக்காங்க .

    முனிவர் தவம் செய்யவில்லையென்றால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்து இருக்குமா!

    ReplyDelete
  4. முனிவருக்கு - குழந்தை, நாராயணனே என்றும், அவன் மூச்சுக் காற்றில் அவன் வயிற்றினுள்ளே சென்றதும், பின்னர் வெளியே வந்ததும்!:)))


    ஈரேழ் உலகமும் நாராயணன் வயிற்றுக்குள்ளே என்று தெரிகிறது .

    உண்டு உமிழ்ந்தவன் ---- . இப்போ நாம் இருப்பது நாராயணன் வயிற்றுக்குள்ளேயா! இல்லை வெளியிலா !

    ReplyDelete
  5. குடையை யாரு கொடுத்தது!
    முஞ்சி என்பது குடையா!

    ----------------------------------
    இந்த ஐராவதம் மாலையை மிதித்ததால் தானே கடல் கடைய வேண்டிய நிர்பந்தம்!:))))
    கடல் கடைந்தது உண்மைதான் . ஆனால் அதற்கான காரணம் ஐராவதம் மாலையை மிதித்ததால்தான் என்பது சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது

    ReplyDelete
  6. kalavai

    பதிவில் எளிமையான விளக்கம் . கொடுக்கறீங்க. உங்கள் பதிவு ஒவ்வொன்றும் வைரத்திற்கு மேலும் மேலும் மெருகூட்டுவது போல உள்ளது
    ----------------------------------
    thanks & buy
    Rajesh Narayanan.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. // வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம்! இன்னொன்று கொடுக்கிறார்! மாலை அல்ல - சாபம்!

    வழக்கம் போல் இந்திரன் Care of Platform! அவனும் மற்ற தேவர்களும் வழக்கம் போல் பிரமனிடம் செல்கின்றனர்!

    வழக்கம் போல் பிரமன் எல்லாருடனும் சிவனிடம் செல்கின்றனர்!

    வழக்கம் போல் சிவனும், Redirect to நாராயணன்!//

    வழக்கம் போல் அருமையான பதிவு :)

    ReplyDelete
  9. //முனிவர் தவம் செய்யவில்லையென்றால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்து இருக்குமா!//

    துருவனும் தவம் செய்தான். பிரகலாதனும் நாராயணனுக்குப் பிரியமானவன்! மேலும் பலர் தவம் செய்து அவனைத் தரிசித்துள்ளனர்.

    ஆனால், மார்க்கண்டேயரும், யாசோதையும், ஏதோ புண்ணியம் செய்துள்ளனர்! அவருக்கும், யசோதைக்கும் மட்டும் தனிக் காட்சி!

    மார்க்கண்டேயர் தான், ப்ரளயத்தில் நாராயணன் உலகங்களைத் தன் வயிற்றில் வைத்துக் காப்பதற்கு ஒரே சாட்சி!

    ReplyDelete
  10. //இந்திரனின் தாய் அதிதி ?//

    ஆமாம்!

    வாமனன், கசியபருக்குப் பிறந்த பிள்ளைகளில் கடைசி. இந்திரனுக்குத் தம்பி. எனவே, வாமனனுக்கு, உபேந்திரன் என்ற பெயர் (விஷ்ணு சஹஸ்ரநாமம் 153)

    ReplyDelete
  11. //ஈரேழ் உலகமும் நாராயணன் வயிற்றுக்குள்ளே என்று தெரிகிறது .

    உண்டு உமிழ்ந்தவன் ---- . இப்போ நாம் இருப்பது நாராயணன் வயிற்றுக்குள்ளேயா! இல்லை வெளியிலா !//

    பிரளயத்தில் மட்டும் தான் வயிற்றில். மற்ற சமயத்தில், வெளியில்.

    ReplyDelete
  12. //குடையை யாரு கொடுத்தது!
    முஞ்சி என்பது குடையா!//

    முஞ்சி என்றால் பூணூல்! இன்றும், கர்னாடக மாநிலத்தில் இந்தச் சொல்லே வழக்கத்தில் உள்ளது!

    இன்னொரு முஞ்சி உண்டு! Afganisthan-ல் உள்ள Paamir மலைகளில், மக்கள் பேசும் மொழி, முஞ்சி! இந்தியாவின் வட மேற்குப் பகுதியிலும் இந்த மொழியை, சில இஸ்லாமியர்கள் பேசுகின்றனர்!

    ReplyDelete
  13. //குடையை யாரு கொடுத்தது!//

    ஆகாசத்தின் அதி தேவதை!

    (The Preciding Deity of he Heavens)

    ReplyDelete
  14. ராஜேஷ்

    //பதிவில் எளிமையான விளக்கம் . கொடுக்கறீங்க. உங்கள் பதிவு ஒவ்வொன்றும் வைரத்திற்கு மேலும் மேலும் மெருகூட்டுவது போல உள்ளது//

    நன்றி!

    ReplyDelete
  15. ஸ்ரீனிவாஸன்

    //parkadal,Srimahalakshmicame.Itmeans earlier there is no srimahalakshmi?//

    கடினமான கேள்வி. ஆனால், இந்தக் கேள்விக்கு பதில், அதிர்ஷ்டவசமாக, விஷ்ணு புராணத்திலேயே சொல்லப் பட்டிருப்பதால், நான் பிழைத்தேன். இதோ அந்த உரையாடல் (1-9):

    மைத்ரேயர்: பாற்கடலில் அமுதம் கடையும் போது ஸ்ரீதேவி தோன்றினாள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், நீங்கள் ஸ்ரீதேவி, பிருகு முனிவருக்கு மகளாகப் பிறந்தாள் என்கிறீர்களே? இது எப்படிப் பொருந்தும்?

    பராசர முனிவர்: ஜகன்மாதா மஹாலக்ஷ்மி, நித்ய ஸ்வரூபி. விஷ்ணுவை விட்டு என்றும் பிரிய மாட்டாள். எப்படி விஷ்ணு ஸர்வ வ்யாபியோ, அப்படியே மஹாலக்ஷ்மியும். அதற்குச் சில உதாரணங்களைச் சொல்கிறேன் கேள்:

    விஷ்ணு ‘அர்த்தம்’ ஆனால், லக்ஷ்மி, ‘வாக்கு’!

    அவர் தர்மம் ஆனால், லக்ஷ்மி, நற்செயல்!

    அவர் காமம், இவள் இச்சை!

    அவர் யஞ்ஜம், இவள் தக்ஷிணை!

    அவர் ஸாம வேதம், இவள் உத்கீதி!

    அவர் அக்னி, இவள் ஸ்வாஹா தேவி!

    அவர் ஸங்கரர், இவள் அம்பிகை!

    அவர் ஸூர்யன், இவள் ஒளி!

    அவர் வ்ருக்ஷம், இவள் கொடி!

    சுருங்கச் சொன்னால், உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் மறைந்திருக்கும் புருஷ ஸ்வரூபம் விஷ்ணு, ஸ்த்ரீ ஸ்வரூபம் ஸ்ரீதேவி!

    அவ்வப்பொழுது, விஷ்ணு தோன்றுவார்! இவளும், கூடவே அவதரிப்பாள்! கூர்மாவதார சமயத்தில், மஹாலக்ஷ்மி, பாற்கடலில் இருந்து அவதரித்தாள்! அவ்வளவே! இதற்கு மேல் கூறுவதென்ன?

    (விஷ்ணு புராணம் உரையாடல் முடிகிறது)

    தங்கள் கேள்விக்கு பதில் கிடைத்ததா?

    ReplyDelete
  16. //இந்த மஹாலக்ஷ்மி துதி, மிகவும் சக்தி வாய்ந்தது! நீங்களும் முடிந்தால் சொல்லுங்கள்//

    லிங்க் ப்ளீஸ். :))

    ஐராவதம் மாலையை மிதித்ததும் உன் இந்திர பதவி, ஐஸ்வர்யம் எல்லாம் உன்னை விட்டு நீங்கட்டும்னு துவாசர் சாபம் குடுத்தார். அழியட்டும்னு குடுக்கலை.

    எனவே தான் கடலை கடையும் போது டொயிங்க் டொயிங்க்னு மறஞ்ச எல்லாம் வெளி வந்ததுனு நான் நினைக்கறேன். :))

    ReplyDelete
  17. //கடல் கடைந்தது உண்மைதான் . ஆனால் அதற்கான காரணம் ஐராவதம் மாலையை மிதித்ததால்தான் என்பது சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது//

    துர்வாசர் சாபமும், அம்ருத மதனமும், விஷ்ணு புராணத்தில் விரிவாக உள்ளது (1-9). அதில் ஐராவதம் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், பாவதத்தில் அத்தனை விரிவாக இல்லை.

    வால்மீகி ராமாயணத்திலும், அம்ருத மதனம் பற்றி, சற்றே விரிவாக உள்ளது. ஆனால், துர்வாச (கோ)சாபத்தைப் பற்றிக் குறிப்பிடப் படவில்லை.

    வால்மீகி ராமாயணம், வாருணீ தேவியை தேவர்கள் எடுத்துக் கொண்டதாகக் கூறும். ஆனால், பாகவதம் அவளை அசுரர்கள் எடுத்துக் கொண்டதாகச் சொல்லும்!

    ReplyDelete
  18. பதிவில் நடக்கும் உரையாடல் அனைத்தும் பிரமாதம்ணா.. அருமையானதொரு நாடகம் பார்ப்பது போல் இருக்கு.. ஒவ்வொரு காட்சியை விவரிக்கும் விதம் அழகோ அழகு

    ReplyDelete
  19. //எம்பெருமானுக்கே கொடுப்பது பாக்கியமல்லவா? அடிக்கிறது Lottery, வருங்காலத் தங்கை பார்வதிக்கு!)//

    அது என்ன வருங்காலத் தங்கை?? இது குறித்து முன்பு குமரனிடம் கேட்டிருந்தேன், எந்த விதத்தில் பார்வதி தேவி, திருமாலுக்கு தங்கை முறைன்னு.. நீங்க வருங்காலத் தங்கைன்னு சொல்றீங்களே எப்படி?

    ReplyDelete
  20. //தான் பிச்சை எடுத்தாவது, திட்டு வாங்கியாவது, பிறருக்கு உதவி செய்யும் அவனல்லவோ உத்தமர்களில் உத்தமன் - ஸர்வோத்தமன் - ஓங்கி உலகளந்த உத்தமன் //

    ம்.. ஆண்டாளே சான்றிதழ் தந்த பிறகு வேறேன்ன வேண்டும். அதுவும் இல்லாமல் வாமன அவதாரத்தில் மட்டுமே எந்த சம்ஹாரமும் இல்லாததால் அவன் உத்தமன் என்று சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.

    ReplyDelete
  21. ”வழக்கல் போல்” நிகழ்வு அருமைண்ணா..

    //உச்சைசிரவஸ் எனும் வெள்ளைக் குதிரை வெளியே வர, பலி எடுத்துக் கொள்கின்றான்.//

    இந்த பலி யார்?? மஹாபலி சக்ரவர்த்தியா?

    ReplyDelete
  22. // 'எதுவும் இல்லை' என்ற தகுதியையே தகுதியாகக் கொண்டு, சரணடைந்தவர்களைக் காப்பவன் நாராயணன்!//

    கடந்த பதிவிலும், இப்பதிவிலும் சரணாகதி பற்றிய விளக்கம் எளிமையாக, தெளிவா இருக்கிறது.

    ReplyDelete
  23. ராகவா

    //இந்த பலி யார்?? மஹாபலி சக்ரவர்த்தியா?//

    ஆமாம்.

    ReplyDelete
  24. //மஹாபலி சக்ரவர்த்தியா?//

    ஆமாம்.//

    அது எப்புடிண்ணா?? வாமன அவதாரத்தின் போது தானே பலி வருகிறார்.. பாற்கடல் கடையும் நேரத்தில் எப்படி..?

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. ராகவா

    //அது எப்புடிண்ணா?? வாமன அவதாரத்தின் போது தானே பலி வருகிறார்.. பாற்கடல் கடையும் நேரத்தில் எப்படி..?//

    கூர்மாவதாரம் நடைபெற்றது, 6-வது மனுவின் போது (சாட்சுச மனு). அப்போது இருந்த அசுரர்களின் தலவன் பெயர் பலி (அவன் அரசனாதலால், பலிச் சக்கரவத்தி என்பர்)

    வாமனாவதாரம் நடைபெற்றது, 7-வது மனுவில் (வைவஸ்வத மனு). அப்போது அசுரர் தலவன், பலி (இவனையும் பலிச் சக்கரவர்த்தி என்பர்).

    ஆனாலும், இருவரும் வேறு பலிக்கள். வேறு மனுவில் வாழ்ந்தவர்கள்.

    ’மஹா’ என்பது, வாமனாவதார பலிக்குக் கொடுக்கப் பட்ட அடைமொழி.

    ReplyDelete
  27. //ஆனாலும், இருவரும் வேறு பலிக்கள். வேறு மனுவில் வாழ்ந்தவர்கள்.//

    இன்னொரு சிறு விஷயம்: இரு பலிக்களுக்கும் இடையில், 3 அவதாரங்கள் நடந்தேறின:

    முதல் பலிச் சக்கரவர்த்தி, கூர்மாவாதாரம். இரண்டாம் பலிச் சக்கரவர்த்தி, வாமன அவதாரம்.

    இடையே, வராஹ அவதாரமும், நரசிம்ம அவதாரமும் நடைபெற்றன. எனவே, இவர்கள் கட்டாயமாக வேறு தான். குழப்பம் வேண்டாம்!

    ReplyDelete
  28. //இன்னொரு சிறு விஷயம்: இரு பலிக்களுக்கும் இடையில், 3 அவதாரங்கள் நடந்தேறின//

    வயதாகி விட்டதால், இப்போதெல்லாம் சரியாக எண்ண முடியவில்லை :-))

    உண்மையில், இடையில் இரண்டு அவதாரங்கள் தான் - வராஹ, நரசிம்ம அவதாரங்கள்!

    ReplyDelete
  29. ஒவ்வோரு பதத்திற்கும் ஒரு கதை தங்கள் எழுத்துத் திறமை அருமை. வளர்க தங்கள் தொண்டு.

    ReplyDelete
  30. //தாயே! நீங்கள் சென்றால், உங்கள் கருணைப் பார்வை மாவலி மேல் பட்டு விடும்! பின்னர் அவனிடம் இருக்கும் சொர்க்கத்தை பிடுங்க நாராயணனாலும் முடியாது// excellent narration.....

    ReplyDelete
  31. அன்பரே

    //ஒவ்வோரு பதத்திற்கும் ஒரு கதை தங்கள் எழுத்துத் திறமை அருமை. வளர்க தங்கள் தொண்டு.//

    நன்றி!

    ReplyDelete
  32. அன்பரே

    //excellent narration.....//

    நன்றி!

    ReplyDelete
  33. அம்பி

    //லிங்க் ப்ளீஸ். :))//

    தேடியவரை லிங்க் கிடைக்கவில்லை! நேரம் கிடைக்கும்போது Type செய்கிறேன். வேறு யாரிடமிருந்தும் தங்களுக்குக் கிடைத்தால், எனக்கும் கொடுங்கள்!

    ReplyDelete
  34. ராகவா

    //ம்.. ஆண்டாளே சான்றிதழ் தந்த பிறகு வேறேன்ன வேண்டும். அதுவும் இல்லாமல் வாமன அவதாரத்தில் மட்டுமே எந்த சம்ஹாரமும் இல்லாததால் அவன் உத்தமன் என்று சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.//

    வாமன அவதாரத்தில், சில அசுரர்கள் சண்டை போட்டதாகவும், ஆனால், மாவலி தடுத்ததாகவும் கதை.

    பெரியாழ்வார், வாமனனை, நமுசி போன்றோர் எதிர்த்ததாகவும், நமுசியை எம்பெருமான் ஆகாசத்தில் தூக்கி எறிந்ததாகவும் பாசுரமிட்டிருக்கிறார்.

    ’என்னிது மாயம்?* என்னப்பன் அறிந்திலன்*
    முன்னை வண்ணமே* கொண்டளவாய்!’ என்ன*
    மன்னு நமுசியை* வானில் சுழற்றிய*
    மின்னு முடியனே அச்சோ! அச்சோ!*
    வேங்கட வாணனே அச்சோ! அச்சோ!

    எனும் பெரியாழ்வார் திருமொழிப் பாசுரம் (1-9-8) இந்தக் கதையைக் குறிக்கும்!

    எனவே, வாமனன் வதம் செய்தானா? இல்லையா? என்பது சர்ச்சைக்குரியது.

    ReplyDelete
  35. அஷ்டலக்ஷ்மி (தேவிஸூக்த) துதி

    http://lakshas.blogspot.com/2010/01/blog-post_20.html

    ReplyDelete
  36. written like simple but full of matter.
    Very good knowledge presented to understand layman language.
    Superb!!!

    ReplyDelete
  37. Hi

    //written like simple but full of matter.
    Very good knowledge presented to understand layman language.
    Superb!!!//

    Thanks!!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP