Friday, February 26, 2010

(பழைய * பதிவு) - "அவள்" கண்களா? "அவன்" கண்களா? - 2

அவள் கண்ணைக் காட்டிலும் அழகிய சிறை உலகத்தில் வேறு இல்லவே இல்லை என்று சாதித்தான் தனுர்தாசன்! என்ன நினைச்சாரோ தெரியலை! அவன் கையைப் படக்-கென்று பிடித்து...இழுத்துக் கொண்டு வருகிறார்...கூடவே அவளும்...ஈடு கொடுத்து ஓடி வருகிறாள்!

சிலர் பதறுகிறார்கள்! "ஐயோ, இவன் மல்யுத்தம் செய்யும் முரடானாச்சே! இவனைத் தொட்டதும் இல்லாமல், ஆலயத்துக்கு வேறு ஜோடியா இழுத்துக்கிட்டு வராரே! இவர் வந்ததில் இருந்து எல்லாமே தலைகீழா-ன்னா நடக்கிறது??? இவரைக் கேட்பார் எவருமே இல்லியா?"

இந்தக் கதையின் முந்தைய பாகம் இங்கே!
அந்தப் பதிவு வந்து ஒன்னரை வருஷம் ஆச்சு! அப்போ அடியேனின் தமிழ்மண நட்சத்திர வாரம்! :)
அந்தப் பதிவில் நடைபெற்ற ஒரு சிலரின் கும்மிகளால், கதையை எழுதி வைத்திருந்தாலும், அப்போது வெளியிடவில்லை! இன்று...இதோ...அந்தப் (பழைய)நட்சத்திரப் பதிவு! :)

இதை இன்னிக்கி வெளியிட வேண்டிய அவசியம் என்னா-ன்னு கேட்கறீங்களா?
இன்று தான் அந்தக் கதை நாயகனின் பிறந்த நாள்! (மாசி ஆயில்யம்! Feb 26, 2010) - Happy Birthday Dhanur Daasa! :)
பிள்ளை உறங்கா வில்லி தாசனே! - பின்னாளில் திருவரங்க ஆலயத்துக்கே "மேலாளன் ஆன வேளாளனே"! உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!



இருள் மயங்கும் வேளை! அருள் முயங்கும் வேளை!
அவன் கையைப் படக்-கென்று பிடித்துக் கொண்டார்...விறுவிறு என்று இழுத்துக் கொண்டு வருகிறார்...கிடுகிடு கிடுவென்று...

தெற்கு வாசல் தாண்டி, ஆலிநாடன் வீதி தாண்டி,
ரெங்க விலாச மண்டபம் தாண்டி, கருட மண்டபம் தாண்டி,
ஆர்ய படாள் வாசல் தாண்டி, சந்தனு மண்டபம் தாண்டி,
மேலப் படிகள் ஏறி, கிளி மண்டபம் தாண்டி,

இதோ வந்தாகி விட்டது காயத்ரி மண்டபத்துக்கு!
24 காயத்ரி எழுத்துக்களும் 24 தூண்களாய்த் தாங்கும் பேரமைதிக் கருவறை!
அதன் மேல் அந்த ஓங்கார விமானம்!
ஓம் என்பது போலவே வளைந்து நெளிந்த....பிரணவாகார ரங்க விமானம்!

குறுகிய வாசல்! உள்ளம் உருகிய வாசல்!
நெய் தீப மணமும், துளசீ மணமும் துளைக்கின்றது!
வட-தென் காவேரிக் குளிர்ச்சி உள்ளேயும் சிலிர்க்கிறது!
வீணை ஏகாந்தம் இந்த இரவிலும் இசைக்கிறது!

ஆயர்ப்பாடி வெண்ணெய் வீச்சம் கருவறையில் வீசுகிறது!
பச்சைக் கர்ப்பூர நெடி...அன்று கோதையின் பச்சை உடம்பை என்னமோ பண்ணியதே! இன்று என் உடம்பையும் என்னமோ செய்கிறதே!!!

தனுர்தாசனுக்கு ஒன்றுமே புரியவில்லை!
"அவளை விட அழகிய கண்ணைக் காட்டுறேன்-ன்னு சொன்னவரு, இங்கே கூட்டிக்கிட்டு வராரே! மாடத் தெரு ஆடலாளியைக் காட்டுவாரு-ல்ல நினைச்சோம்"! - அந்தப்புரம் என்று எண்ணி வந்தவன் நொந்தப்புரம் ஆனான்!
ஆனால்...ஒரே விநாடி தான்....திரை விலகியது.....அய்யோ.....

கரிய..பெரிய..உரிய..விரிய..சரிய..தெரிய..அரிய..உருவம்!!
ஜென்ம ஜென்மத்துக்கும்....
மெல்லிய தீபம், அசைத்து அசைத்துக் காட்டப்படுகிறது!
பாதத்தில் ஜொலிக்கும் தீபம்....சிறிது சிறிதாக மேலேறுகிறது!!

* திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
* சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே
* உந்தி (தொப்புள்) மேலதன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே
* திருவயிற்று உதர பந்தனம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

"தனுர்தாசா...என்ன சிலையாக நின்று விட்டாய்? என்ன காண்கிறாய், சொல்?"

* ஆர மார்பு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே
* கண்டம் (கழுத்து) கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே
* செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

"என்ன தடுமாறுகிறாய்? அருகில் இதற்கென்றே உள்ள இரண்டு திருமணத் தூண்களைப் பிடித்துக் கொள்! விழுந்து விடாதே! சொல், சொல்...என்ன செய்கிறது?"

பெரிய வாய கண்கள்..........என்னைப் பேதைமை செய்தனவே!
பெரிய வாய கண்கள்..........என்னைப் பேதைமை செய்தனவே!!





அரங்கனின் பெருந்தாமரைக் கண்களின் நேராக நேத்ர தீபம் சுழல்கிறது!
நாமும் சுழல்கிறோம்!
நம் மனசென்னும் ஆழியுட் புக்கு...முகந்து கொண்டு ஆர்த்து ஏறி, ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழையாய்...
நேத்ரானந்த தீப சேவை!

ஒன்று மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்,
இன்று மறப்பேனோ ஏழைகாள்? - அன்று
கருவரங்கத்து உட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கத்து மேயான் திசை!!!

"என்னது? பெரியவாய கண்களா?
அடேய்....நீ கண்டாயா? கண்டு என்ன செய்தாய்? சொல்! தனுர்தாசா....சொல்!"

"கண்டேன்! கண்டேன்! நாடி நான் கண்டு கொண்டேன்!
என்னையே பார்க்கும் கண்கள்! என்னையே விழுங்கும் கண்கள்!
இல்லை இல்லை! உலகையே விழுங்கும் கண்கள்!
ஐயோ! கரியவனின் பெரிய வாய கண்கள்!"

கோல மாமணி ஆரமும், முத்துத் தாமமும், முடிவில்லதோர் எழில்
நீலமேனி...ஐயோ....நிறை கொண்டது என் நெஞ்சினையே!


"என்னது ஐயோ-வா? எதற்கு ஐயோ என்று சொல்கிறாய்?"

"தாங்க முடியவில்லை சாமீ! நடுங்குகின்றேன்! என்ன செய்தீர்கள் என்னை?
என் கண்கள் அந்தக் கண்களோடு ஒட்டிக் கொண்டது போல் இருக்கே!
வைத்த கண்ணை மீண்டும் எடுக்க முடியவில்லையே!
அந்தக் கண்களே வெள்ளைப் பாற்கடல் போல் இருக்கே!
அந்த வட்ட விழி - நட்ட நடு - கருமணியில்.....நானும் தெரிகிறேனே!"

"ஓ! அந்தக் கண் மேல் உந்தன் கண்ணை வைத்து விட்டாயா?
இனி, அவனும் உன் மேல் கண்ணை வைத்து விட்டான்!
இனி, உன்னைக் கன்ணுள் வைத்துத் தாங்குவான்!
இனி, என்ன செய்யப் போகிறாய் தனுர்தாசா?"

என் அமுதினைக் கண்ட கண்கள்,
மற்று ஒன்றினைக் காணாவே!
மற்று ஒன்றினைக் காணாவே!!
மற்று ஒன்றினைக் காணாவே!!!

திரையிடப்பட்டது! முறையிடப்பட்டது!
அரங்கனில் கிறங்கினான்! அங்கேயே உறங்கினான்!


மல்யுத்த வீரன், மல்லாண்ட திண்தோள் தனுர்தாசன், இராமானுசரின் சீடர்களுள் ஒருவனாகச் சேர்ந்து கொண்டான்!
குருவை...அவன் தேடிப் போகவில்லை! அவனைத் தேடி...குரு வந்தார்!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

இன்று போலி குருக்களைத் தேடி, போலியாய் அலையும் பலரும் கவனத்தில் கொள்ள வேண்டியது இது!
குருவைத் தேடித் தேறவும் முடியுமா? குரு போலியா இல்லையா என்று கண்டுபிடிக்கும் ஞானம் இருந்திருந்தால் நீயே குருவாக ஆகியிருப்பாயே!
அந்த ஞானமே இல்லாத போது, நீ எதை வைத்து ஒரு குருவைச் சோதிக்க முடியும்?

உன் பேராசைகள் நிறைவேறுமா என்று மை போட்டுப் பார்க்கவல்ல குருவைத் தேடி அலைகிறாயா?
பேராசையாக அலைந்தால், பேராசிரியர் தான் கிடைப்பார்!
பேர் ஆசிரியர் - பேருக்கு ஆசிரியர் - பேராசைப் பேராசிரியர்!


அதனால் "நல்ல" குருவை எடை போட்டுத் தேடி "அலையாதே"!
தாகமாய் இரு! தண்ணீர் கிடைக்கும்!!
மாணவனாய் இரு! ஆசான் கிடைப்பார்!!
குரு இல்லை என்றால்...வாழ்க்கைப் பாடங்களையே...இறைவன் உனக்கு குருவாக ஆக்குவான்!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


தனுர்தாசன் பெரிய பண்டிதன் கிடையாது! முரட்டு மல்லன்!
அவனைச் சேர்த்துக் கொண்டு் அரசவை வாதப் போரில் எல்லாம் வெல்ல முடியாது!
ஆனாலும் குழாத்தில் அவனையும் சேர்த்துக் கொண்டார் இராமானுசர்!
பயன் அன்று ஆகிலும், பாங்கு அல்லன் ஆகிலும், திருத்திப் பணி கொள்வது தானே குருவின் சிறப்பு!

சீடனின் உள்மனம் குருவுக்குத் தெரியும்! அங்கு கொடுக்கல் வாங்கல் கணக்குகள் இல்லவே இல்லை! இது தெரியுமா, அதைப் படிச்சிருக்கியா என்றெல்லாம் ஒன்னுமே கேட்கவில்லை!
முக்கியமாக "உன் குலம்-கோத்திரம் என்ன? கலை-ஆசார்யன் என்ன?" என்ற கேள்வி எல்லாம் எழவே இல்லை!
சீடர்களுள் சீடராய்ச் சேர்த்துக் கொண்டார்!
தனுர் தாசன் என்று இருந்தவனை, "பிள்ளை உறங்கா வில்லி" என்னும் தூய தமிழ்ப் பெயராக மாற்றிக் கொடுத்து, தீட்சையும் அளித்து விட்டார்!

ஆனால் அவனுக்கு குடும்பம்-ன்னு ஒன்னு இருக்கே!
என்ன தான் அவள் நடன மங்கையாக இருந்தாலும்,
சாத்திரத் திருமணம் செய்து கொள்ளவில்லை ஆயினும்...
அவள்-அவன்...இருவரும் ஆருயிர் காதல் துணைகள் ஆயிற்றே!
ஹேமாம்பா என்ற அவளுக்கும் "பொன்னாச்சி" என்று தீட்சை அளித்து விட்டார்!

இருவரையும் இராமானுசர் பிரிக்கவில்லை! அதே சமயத்தில் தம்பதிகளை மடத்திற்குள்ளே சேர்க்காமல், தனி இல்லத்தில் குடியிருத்தினார்!
காதலன்-காதலி இருவருமே தொண்டில் சிறந்து, சிறிது நாளில் பலரின் நன்மதிப்பையும் பெற்றனர்!


என்ன தான் வில்லியைச் சேர்த்துக் கொண்டாலும், அவன் கட்டை உருவம், நாலாம் வருணம் என்ற எண்ணம் சில சீடர்கள் மனத்தில் உறுத்தலாகவே இருந்தது போலும்!

அவனிடம் அதிகம் பேசிக் கொள்ளாமல் ஒட்டி உறவாடாமல், "தங்களுக்குள் மட்டும் தனிக் கோஷ்டியாக" இருந்தனர்!
மனதுக்குள் சிரித்துக் கொண்ட இராமானுசர், அவர்களை அடக்கித் திருத்த வேறு வழிகளைக் கையாண்டார்...

தினமும் ஆற்றில் குளிக்கப் போகும் முன், அந்தணச் சீடனின் தோள் பற்றி நடப்பார்!
குளித்து முடித்த பின், வில்லியின் தோள் பற்றி நடந்து வருவார்!
அச்சோ...குளிச்சி முடிச்ச பிறகும் இப்படித் தீட்டாயிடுத்தே-ன்னு சொல்லாத முடியாத படிக்கு,
பேச்சால் பேசிக் கொண்டிராமல், செய்கையால் சாதியின் வாயை அடைப்பது, இராமானுசருக்கு, கை வந்த கலை!

"சுவாமி, நீங்க அந்த வில்லிக்கு ரொம்பவே இடம் கொடுக்கறீங்க"

"ஏன்? கொடுத்தா தப்பா சிஷ்யர்களே? வில்லியின் பண்பட்ட மனம் இங்கே யாருக்காச்சும் இருக்கா?"

"அப்படி என்ன பண்பட்டுட்டான் அவன் மட்டும்?"

"சொல்கிறேன்...இப்போது போய்த் தூங்குங்கள். பின்னிரவு ஆகி விட்டது!"

சீடர்கள் தூங்கச் சென்றார்கள்! சிறிது நேரம் கழித்து உடையவர் தானே சென்று, அத்தனை பேரின் மேலாடையிலும் கத்திரிக்கோலால் சிறு சிறு துண்டுகள் போட்டார்!
தீராத விளையாட்டுப் பிள்ளை! உடையவர் மடத்திலே சீடருக்கு ஓயாத தொல்லை! :)

மறுநாள் காலை...மடத்தில் சுப்ரபாதமா ஒலித்தது? இல்லையில்லை!
கேட்கக் கூசும் வசவு வார்த்தைகள் ஒலித்தன!
சீடர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே இருந்தனர்.

"சீடர்களே, சாதாரண ஒரு நூல் துண்டுக்கா இத்தனை பேச்சு பேசுகிறீர்கள்? தகுமா இது?
பல நூல் கற்ற நீங்கள், சில "நூலுக்கு", உயர் நூலை அடகு வைத்தீர்களே!
ஆக, உங்கள் யாவருக்கும் இது நாள் வரை.......
வாய் தான் மறையோதிற்றா? மனம் ஓதவில்லையா?"

"குருவே!"

"சரி சரி, உங்களைச் சோதிக்க நான் தான் ஆடைகளைக் கத்தரித்தேன்! நீங்கள் பேசிய இழிசொல் அத்தனையும் என்னையே சேரட்டும்!
உம்ம்ம்..முரட்டு மல்லன் வில்லி கூட இப்படி எல்லாம் பேசியதில்லை!"

"ஆசார்யரே...அய்யோ...மதி இழந்தோம்! கேவலமாய் நடந்து கொண்டோம்! மன்னியுங்கள்! இப்போதே வில்லியிடம் சென்று மன்னிப்பு கோருகிறோம்!"

"வேண்டாம்! அவன் லட்சணம் என்ன என்பதையும் ஒரு கை பார்த்து விடுவோம்!
இன்று இரவு வில்லியை நான் மடத்துக்கு அழைத்துப் பேசப் போகிறேன்!
அந்தச் சமயம் பார்த்து நீங்கள் அவன் வீட்டுக்கு மாறுவேடத்தில் சென்று, பொன்னாச்சியின் நகைகளை திருடிக் கொண்டு வாருங்கள்!"

"என்ன! திருட்டா? குருவே..."

"உம்...சொன்னதைச் செய்யுங்கள்! ஆசார்யரின் ஆக்ஞை!"



வில்லி அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான்! கையில் நகை மூட்டை!

"சாமீ, உங்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, என் வீட்டில் யாரோ சில கொள்ளையர்கள் புகுந்து களவாடியுள்ளனர்!
உறங்கிக் கொண்டிருந்த பொன்னாச்சி எழுந்து பார்த்து அலற நினைத்தாள் போலும்!
ஆனால் கொள்ளையர்கள் நாமம் தரித்து, திருச்சின்னங்கள் தாங்கி இருப்பதைப் பார்த்து அமைதியாகி விட்டாள்!

படுத்துக் கொண்டிருந்தவள், சரி தன் மேலுள்ள நகைகளையும் எடுத்துக் கொள்ளட்டுமே என்று திரும்பிப் படுத்தாள் போல!
ஆனால் அவள் அசைவு கண்டு அவர்களோ பயந்து ஓடி விட்டார்கள்!

இது என்ன சோதனை சுவாமி? பூலோக வைகுந்தம் என்று சொல்வீர்களே!
அரங்கத்திலா இப்படித் திருட்டு நடக்கிறது?
அதுவும் அடியார்கள் போல் தோற்றம் அளிப்பவர்கள் இப்படிச் செய்வது நமக்கு அல்லவா இழுக்கு??

அதான் பொன்னாச்சியின் சம்மதத்தோடு அத்தனை நகைகளையும் மூட்டை கட்டி எடுத்து வந்து விட்டேன்! இதை ஏற்றுக் கொண்டு அந்த ஏழைப்பட்ட அடியார்களிடம் கொடுத்து விடுங்கள்!
அன்னதானம் போன்ற திருப்பணிகளும் செய்ய வேணுமாறு கேட்டுக் கொள்கிறேன்! அப்படிச் செய்தால் திருட்டு ஒழிந்து, நம் இயக்கம் காப்பாற்றப்படும்".

இராமானுசர் மற்ற அத்தனை சீடர்களையும் திரும்பி ஒரு பார்வை பார்க்க...
அனைவருக்கும் வெட்கம் பிடுங்கித் தின்றது!
இத்துப் போன மேல் துண்டுக்குச் சத்தம் போட்ட நாம் எங்கே?
சத்தம் போட்டுத் தாக்குவதே தொழிலாகக் கொண்டிருந்த வில்லி எங்கே?

சீடர்கள் அத்தனை பேரும்...குலம் பார்க்காது...
வில்லி தாசனின் காலில்...
நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்க,
நடந்த நாடகத்தை ஏதுமறியா வில்லி விழி விழியென விழித்தான்!

இராமானுசர் நடந்தது அத்தனையும் அவனுக்கு விவரித்தார்! இனி அடியவர் கூட்டத்தில் எவரும் குல விசாரிப்பு செய்யக் கூடாது என்பதை அப்போதே சட்டமாக இயற்றினார்!

"அடியவரைக் குலப் பரிசோதனை செய்பவன், பெற்ற தாயை...யோனிப் பரிசோதனை செய்தவனுக்கு ஒப்பாவான்!!!"
என்று அவர் அதிரடியாக முழங்கியதைக் கேட்டு ஸ்ரீரங்கமே அதிர்ந்து போனது!
அப்படி ஒரு வார்த்தை எம்பெருமானார் இராமானுசர் வாயில் இருந்து வரும் என்று எவரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்!

கொஞ்ச நாளில், வில்லி சிறந்த மாணாக்கனாகத் தேறி வைணவ நூல்களை இயற்றும் அளவுக்குத் திறமை பெற்றான்! திருவரங்க கோயில் கொத்தின் மேலாளன் ஆனான்!
பொன்னாச்சியோ மகளிர் இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்து, ஊர் ஊராகச் சென்று ஆழ்வார் பாசுரங்களை நாட்டியம் செய்து பாடிப் பரவினாள்! அவர்கள் காதல் ஈரப் பாசுரம் போல் ஈரமாகவே வளர்ந்தது!

மேலிருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் - கீழிருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர்!


எம்பெருமானார் திருவடிகளே சரணம்!
பொன்னாச்சி உடனுறை பிள்ளை உறங்கா வில்லி தாசன் திருவடிகளே சரணம்!!

37 comments:

  1. kanden kanden kannuku iniyavai kanden

    ReplyDelete
  2. படம் ரொம்ப அழகு கேஆரெஸ்

    //அந்தப் பதிவில் நடைபெற்ற ஒரு சிலரின் கும்மிகளால், கதையை எழுதி வைத்திருந்தாலும், அப்போது வெளியிடவில்லை! இன்று...இதோ...அந்தப் (பழைய)நட்சத்திரப் பதிவு! :)//

    அவங்கெல்லாம் இப்ப எழுதறதே இல்லையே. :)

    ReplyDelete
  3. //LK said...
    kanden kanden kannuku iniyavai kanden//

    :)
    கண்ணுக்கு இனியவன் கண்ணன்!
    கண்டீர் கண்டீர் கண்டீர்!

    ReplyDelete
  4. //சின்ன அம்மிணி said...
    படம் ரொம்ப அழகு கேஆரெஸ்//

    அரங்கன் க்ளோஸ்-அப் பத்திச் சொல்றீங்களா-க்கா?

    //அவங்கெல்லாம் இப்ப எழுதறதே இல்லையே. :)//

    அட! அப்படியெல்லாம் சொல்லாதீங்க!
    அதான், எனக்கும் ராகவனுக்குமே உள்ள இனியது கேட்கின்-இல்லில் அவ்வப்போது எழுதறேனே! யார் எழுதினாலும் ஒன்னு தான்! :)

    மற்ற அன்பர்களும் அவரவர் பதிவுகளில் எழுதறாங்க-ன்னு தான் நினைக்கிறேன்! ஓகை ஐயா மின் தமிழ்க் குழுமத்தில் எழுதுகிறார்!

    ReplyDelete
  5. இதற்கும் அடுத்த பகுதி உண்டா? அதனை எப்போது எழுதப் போகிறீர்கள்?

    ReplyDelete
  6. கதைக்கு நன்றி...அந்த பழைய பதிவு பக்கம் போயிட்டு வந்தேன்...அந்தநாள் ஞாபகம்...ம்ம்ம் ;)

    ReplyDelete
  7. // குமரன் (Kumaran) said...
    இதற்கும் அடுத்த பகுதி உண்டா? அதனை எப்போது எழுதப் போகிறீர்கள்?//

    குமரன் அண்ணா, கிண்டலா? :)
    சரி, இந்தப் பதிவுல யாராச்சும் வந்து என்னை அரங்கன் காமாலை-ன்னு திட்டினா, அடுத்த பகுதி போடறேன்! :)

    முருகா...
    சரி, பதிவைப் பற்றிச் சொல்லுங்க!

    ReplyDelete
  8. // கோபிநாத் said...
    கதைக்கு நன்றி...//

    அதை ஒரு வருஷம் முன்னாடியே சொல்லிட்டியே கோபி! :)

    //அந்த பழைய பதிவு பக்கம் போயிட்டு வந்தேன்...அந்தநாள் ஞாபகம்...ம்ம்ம் ;)//

    ஹா ஹா ஹா!
    என்சாய் பண்ணாச் சரி தான்! :)

    ReplyDelete
  9. கண்டேன் அரங்கத்தின் ஓர் அழகை!
    கண்டு கொண்டேன் அவன்நயனப்பேரழகை!

    (தொடரும்!)

    ReplyDelete
  10. //இந்தக் கதையின் முந்தைய பாகம் இங்கே!
    அந்தப் பதிவு வந்து ஒன்னரை வருஷம் ஆச்சு! அப்போ அடியேனின் தமிழ்மண நட்சத்திர வாரம்! :)
    அந்தப் பதிவில் நடைபெற்ற ஒரு சிலரின் கும்மிகளால்,./////<<<>>>>>

    கும்மி கண்டார் கோபுரம் போல் புகழ் உயரக்கண்டார்!

    ////கதையை எழுதி வைத்திருந்தாலும், அப்போது வெளியிடவில்லை! இன்று...இதோ...அந்தப் (பழைய)நட்சத்திரப் பதிவு! :)
    ////>>>

    அப்பாடி !பந்தலுக்கு புத்துயிர் ஊட்ட மனசு வந்ததா? இங்க என்னரங்கனைக்காணாமல் நான் தவிச்சதை யாரிடம் சொல்வது?

    ReplyDelete
  11. //இதை இன்னிக்கி வெளியிட வேண்டிய அவசியம் என்னா-ன்னு கேட்கறீங்களா?
    இன்று தான் அந்தக் கதை நாயகனின் பிறந்த நாள்! (மாசி ஆயில்யம்! Feb 26, 2010)
    Happy Birthday Dhanur Daasa! :)
    பிள்ளை உறங்கா வில்லி தாசனே! - பின்னாளில் திருவரங்க ஆலயத்துக்கே "மேலாளன் ஆன வேளாளனே"! உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    ////

    மேலாளன் ஆன வேளாளனைப்பற்றி இங்கு கூறவந்த
    தாராள மனசாளனே!
    மாலோலன் அருளாலே மனம்போல
    மகிழ்ந்து வாழ்வாய்!

    (தொடரும்)

    ReplyDelete
  12. //தெற்கு வாசல் தாண்டி, ஆலிநாடன் திருவீதி தாண்டி,
    ரெங்க விலாச மண்டபம் தாண்டி, கருட மண்டபம் தாண்டி,
    ஆர்ய படாள் வாசல் தாண்டி, சந்தனு மண்டபம் தாண்டி,
    மேலப் படிகள் ஏறி, கிளி மண்டபம் தாண்டி,
    /////<<<<>>

    அடேயப்பா எங்க ஊரைப்பற்றி நல்லா தெரிஞ்சிவச்சி அடுக்கடுக்கா இடங்களை கரெக்டா எழுதிட்டீங்களே!
    வேகத்தாண்டல்போலும் பல இடங்களை சொல்லாமல் தாண்டிட்டீங்க !

    (தொடரும்!)

    ReplyDelete
  13. ரங்கனது திருவடிகளுக்கே இழுத்துச்செல்லும் திறன் வாய்ந்த தங்களது
    பதிவும் தனுர்தாசனின் சரித்திரமும் வியக்கத்தக்கது.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  14. //பெரிய வாய கண்கள்..........என்னைப் பேதைமை செய்தனவே!
    பெரிய வாய கண்கள்..........என்னைப் பேதைமை செய்தனவே!//

    ரங்கா ரங்கா

    ReplyDelete
  15. Most beautiful shots of Arangan alias Brindhavana Krishnan. Thanks a ton !! :)
    ~
    Radha

    ReplyDelete
  16. //சரி, இந்தப் பதிவுல யாராச்சும் வந்து என்னை அரங்கன் காமாலை-ன்னு திட்டினா, அடுத்த பகுதி போடறேன்! :)//
    அரங்கன் காமாலை
    அரங்கன் காமாலை
    அரங்கன் காமாலை
    :)

    ReplyDelete
  17. // Radha said...
    அரங்கன் காமாலை
    அரங்கன் காமாலை
    அரங்கன் காமாலை
    :)
    //

    அடப் பாவி! நிஜமாலுமே என்னைத் திட்டறியா? இல்லை வாழ்த்துறியா? :)

    அரங்கன் கா மாலை = அரங்கன் தோட்டத்து மாலையா நானு? வாவ்!
    என் தோழி, என்னைத் தான் சூடி, அவனுக்கும் சூட்டினாளா? வாரே வாவ்! :)

    ReplyDelete
  18. //அரங்கன் கா மாலை //
    என்ன ஒற்றுமை ! மூன்றாவது முறை காப்பி-பேஸ்ட் செய்த பொழுது எனக்கும் அவ்வாறே தோன்றியது. :)

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. . 2nd picture மூலஸ்தானம் போட்டோ - ஸ்ரீரங்கத்தில் இது எந்த கோவில்
    5th picture ஸ்ரீரங்க பெருமாளின் கவசமா?

    ReplyDelete
  22. சிறிது நேரம் கழித்து உடையவர் தானே சென்று, அத்தனை பேரின் மேலாடையிலும் கத்திரிக்கோலால் சிறு சிறு துண்டுகள் போட்டார்!:)))


    இவ்வளவு உன்னிப்பா ராமானுஜரின் வாழ்க்கை கதைகள் எப்படி வந்தது . யாராச்சும் ராமானுஜர் கூட இருந்தவங்க எழுதினாங்களா !

    ReplyDelete
  23. வில்லி சிறந்த மாணாக்கனாகத் தேறி வைணவ நூல்களை இயற்றும் அளவுக்குத் திறமை பெற்றான்! திருவரங்க கோயில் கொத்தின் மேலாளன் ஆனான்!
    பொன்னாச்சியோ மகளிர் இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்து, ஊர் ஊராகச் சென்று ஆழ்வார் பாசுரங்களை நாட்டியம் செய்து பாடிப் பரவினாள்! அவர்கள் காதல் ஈரப் பாசுரம் போல் ஈரமாகவே வளர்ந்தது!::))


    முதலில் பெண்ணின் மேல் உள்ள தூய அன்பு வைத்திருந்த வில்லி தாசனை அப்படியா அந்த தூய்மையை பெருமாள் மீது திருப்பி விட்டார் ராமானுஜர். என்றுமே நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் பெருமாள் திருடி கொள்வார் என்று இதிலிருந்து தெரிகிறது

    ReplyDelete
  24. //Radha said...
    //அரங்கன் கா மாலை //
    என்ன ஒற்றுமை !
    மூன்றாவது முறை காப்பி-பேஸ்ட் செய்த பொழுது எனக்கும் அவ்வாறே தோன்றியது. :)//

    ஹிஹி!
    அதான் நம்மளோட அத்யந்த ஒற்றுமை ராதா! :)
    டகால்ட்டியின் கால் டகால்ட்டி அறியும்! :))

    ReplyDelete
  25. //Sri Kamalakkanni Amman Temple said...
    முதலில் பெண்ணின் மேல் உள்ள தூய அன்பு வைத்திருந்த வில்லி தாசனை அப்படியா அந்த தூய்மையை பெருமாள் மீது திருப்பி விட்டார் ராமானுஜர்//

    ஹா ஹா ஹா
    இராமானுசரே - நீங்க பண்ணது நியாயமா? :)

    //என்றுமே நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் பெருமாள் திருடி கொள்வார் என்று இதிலிருந்து தெரிகிறது//

    ஹா ஹா ஹா
    அதான் போல, என்னை இன்னும் திருடிக் கொள்ளாமல் இருக்கான்! :)

    ReplyDelete
  26. //ஷைலஜா said...
    கண்டேன் அரங்கத்தின் ஓர் அழகை!
    கண்டு கொண்டேன் அவன்நயனப்பேரழகை!//

    இது நீங்களே எழுதிப் பாடிக் கொடுத்த கவிதை - கண்ணன் பாட்டு 99க்கு! ஞாபகம் இருக்கா-க்கா? :)

    ReplyDelete
  27. //மேலாளன் ஆன வேளாளனைப்பற்றி இங்கு கூறவந்த
    தாராள மனசாளனே!
    மாலோலன் அருளாலே மனம்போல
    மகிழ்ந்து வாழ்வாய்!//

    என்ன-க்கா இது...பந்தலில் ரொம்ப நாள் கழிச்சிப் பின்னிப் படல் எடுக்கறீக போல! :)

    Actually piLLai uRanga villi-ponnachi is an ideal couple! made for each other! I guess they didnt marry...but living together :)
    Even then raamanusar didnt shun them or shy them away!

    இப்படிச் சொன்னா ரெண்டு பக்கத்தில் இருந்தும் என் மேல பாஞ்சிக்கிட்டு வருவாய்ங்க! அதுனால நான் கொய்ட் ஆயிடறேன்! :)

    ReplyDelete
  28. //ஷைலஜா said...

    //தெற்கு வாசல் தாண்டி, ஆலிநாடன் திருவீதி தாண்டி,
    ரெங்க விலாச மண்டபம் தாண்டி, கருட மண்டபம் தாண்டி,
    ஆர்ய படாள் வாசல் தாண்டி, சந்தனு மண்டபம் தாண்டி,
    மேலப் படிகள் ஏறி, கிளி மண்டபம் தாண்டி,////<<<<>>

    அடேயப்பா எங்க ஊரைப்பற்றி நல்லா தெரிஞ்சிவச்சி அடுக்கடுக்கா இடங்களை கரெக்டா எழுதிட்டீங்களே!//

    எங்கப் பொண்ணை உங்கூர்ல தானே கொடுத்துருக்கோம்? அதான்-க்கா அதெல்லாம் அத்துப்படியா இருக்கு!

    நாளைக்கு ஏதாச்சும் கண்ணைக் கசக்கிக்கிட்டு அவ நின்னா, நாங்க வந்து உங்கூரானைக் கொஞ்சணும்-ல்ல? அதான்! :)

    //வேகத்தாண்டல்போலும் பல இடங்களை சொல்லாமல் தாண்டிட்டீங்க !//

    Yessu! முக்கியமான ஸ்டாப்-ல மட்டும் தான் பஸ் நிக்கும்! :)

    ReplyDelete
  29. // sury said...
    ரங்கனது திருவடிகளுக்கே இழுத்துச்செல்லும் திறன் வாய்ந்த தங்களது பதிவும் தனுர்தாசனின் சரித்திரமும் வியக்கத்தக்கது//

    வாங்க சூரி சார்! நீங்களும் அம்மாவும் நலமா?

    இழுத்துச் செல்லும் திறன் என் பதிவுக்கு இல்லை!
    இழுத்துச் செல்வது என்னமோ அரங்கன் திருவடி Gravitational Pull தான்! :)

    ஆழ்வாரும் தான் "சென்ற"தாகப் பாடாமல்...கமல பாதம் "வந்து" என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே!-ன்னே பாடறாரு!:)

    ReplyDelete
  30. //Kailashi said...
    //பெரிய வாய கண்கள்..........என்னைப் பேதைமை செய்தனவே!
    பெரிய வாய கண்கள்..........என்னைப் பேதைமை செய்தனவே!//

    ரங்கா ரங்கா//

    என்ன கைலாஷி ஐயா...
    உங்களையும் அந்தக் கண்கள் பேதைமை செய்தனவா? :))

    ReplyDelete
  31. //Radha said...
    Most beautiful shots of Arangan alias Brindhavana Krishnan. Thanks a ton !! :)//

    என்னாது அரங்கன் பிருந்தாவனக் கண்ணனா? ஒத்துக்க மாட்டோம்! :)
    அவன் எங்க ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணன்! :))

    ReplyDelete
  32. என்ன கலவை...
    எதுக்கு கேள்வியை Delete பண்ணிட்டீங்க? :)
    ஒன்னும் தப்பாக் கேக்கலையே நீங்க?
    நான் தான் பதில் சொல்ல வருவதற்கு ரொம்ப லேட் ஆயிரிச்சி! சாரி! :)

    ReplyDelete
  33. //Sri Kamalakkanni Amman Temple said...
    . 2nd picture மூலஸ்தானம் போட்டோ - ஸ்ரீரங்கத்தில் இது எந்த கோவில்//

    :)
    அது தான் பெரிய பெருமாள் என்னும் அரங்கனின் கருவறை!
    மாலை விளக்கீடு நேரம்! அதான் காயத்ரி மண்டபத்துக்கு வெளியே பக்தர்கள் நிக்கறாங்க!

    கொஞ்சம் உத்துப் பார்த்தா, உற்சவர் நம்பெருமாள் பொன்மேனி தெரியும்! பின்னாடி கருப்பா இருப்பது மூலவர் பெரிய பெருமாள்!

    மூன்றாம் படம்:
    கருவறைப் புகைப்படங்கள் முன்பெல்லாம் கிடைக்காது! இப்போது கிடைக்கிறது! :)
    அதைக் கொஞ்சம் நுணிப்பாக்கி (Zoom செய்து) அந்தப் பெரியவாய கண்களைப் பதிவில் இட்டேன்! :)

    //5th picture ஸ்ரீரங்க பெருமாளின் கவசமா?//

    அதுவும் மூலவர் அரங்கன் தான்!
    வெள்ளிக் கவசம் ஆதி சேஷனுக்கு அணிவிச்சி இருக்கு!
    அரங்கனுக்கு கவசம் இல்லை! கருப்பன் தான்! :)
    கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே என்பது சமணப் பெருந்தகையான இளங்கோவடிகள் வாக்கு!

    * கைகளுக்கு மட்டும் கவசமும்
    * நெற்றியில் திருமண்காப்பு சார்த்தும்
    * திருமார்பிலே என்றுமே பிரியாத வியூஹ லக்ஷ்மி பதக்கம் மட்டும் தரித்துக் கொண்டு இருக்கிறான்!

    பொதுவா அரங்கனுக்கு அதிக அலங்காரங்கள் இருக்காது! சங்கு சக்கரம் கூட இல்லை! மாலைகள் அது இது-ன்னு திருமேனியை மறைத்து விடாமல்...முழுக்க முழுக்க அந்தக் கரியவன் மிகவும் எளியவன்!

    அதனால் தான் என் அலங்காரத் தோழி கோதை...எளியவன் அவனை ஆசைப்பட்டாள்! :)

    ReplyDelete
  34. //Sri Kamalakkanni Amman Temple said...
    இவ்வளவு உன்னிப்பா ராமானுஜரின் வாழ்க்கை கதைகள் எப்படி வந்தது . யாராச்சும் ராமானுஜர் கூட இருந்தவங்க எழுதினாங்களா !//

    ஆமாம்
    வடுக நம்பி
    திருமலை அனந்தாழ்வான்
    போன்ற அருகிலிருந்த சீடர்கள் வாழ்க்கைக் குறிப்பு எழுதினார்கள்!

    இன்னும் பலர் ஆங்காங்கே பாசுர வியாக்யானங்களில், சில நிகழ்ச்சிகளைக் குறித்து வைத்துப் போயிருக்கிறார்கள்! அதை "நிர்வாகம்"-ன்னு சொல்லுவாய்ங்க! வெட்கப்படாம அப்படியே உண்மையைக் குறித்து வைத்துச் செல்வாங்க!
    அதில் ஒன்னு தான், ஆழ்வார் திருநகரிச் சிறுமி, இராமானுசரையே கேள்வியால் மடக்கினது! :)

    ReplyDelete
  35. //Sri Kamalakkanni Amman Temple said...
    முதலில் பெண்ணின் மேல் உள்ள தூய அன்பு வைத்திருந்த வில்லி தாசனை அப்படியா அந்த தூய்மையை பெருமாள் மீது திருப்பி விட்டார் ராமானுஜர்//

    உம்...தூய அன்பு-ன்னும் டோட்டலாச் சொல்லீற முடியாது! ஆனால் விட்டுவிடாத கவர்ச்சி இருந்தது! ஆனால் பின்னாளில் விவாகரத்து போல ஒரு பிணக்கு வந்த போது, அதையும் இராமானுசரே தீர்த்து, சேர்த்து வைத்தார்!
    இதோ:http://madhavipanthal.blogspot.com/2008/10/blog-post_22.html

    //என்றுமே நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் பெருமாள் திருடி கொள்வார் என்று இதிலிருந்து தெரிகிறது//

    ஹா ஹா ஹா
    உள்ளம் கவர் "கள்வன்"! :)

    சொத்து அவருடையதாக இருக்கும் பட்சத்தில், உரிமையும் அவருக்கே! சொத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் கவலையும் அவருக்கே!

    நாம தான் சொத்து!
    நம்மைப் பத்திரமா காப்பாத்திக்கும் கவலை அவருக்குத் தான்! நமக்கு இல்லை! :))

    ReplyDelete
  36. KRS Said..,,
    எதுக்கு கேள்வியை Delete பண்ணிட்டீங்க? :)

    உறங்கா வில்லி தாசருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !
    இதுதான் அந்த பின்னூட்டம். இதனுடன் வந்த ஒரு சில வரிகள்
    எமக்கு விருப்பமில்லை என்பதால் delete செய்து விட்டேன்.
    அவை கேள்வி அல்ல!

    ------
    KRS Said....
    நான் தான் பதில் சொல்ல வருவதற்கு ரொம்ப லேட் ஆயிரிச்சி! சாரி! :)

    பின்னூட்டம் எதிர்பார்த்து பதிவிட கூடாது.
    பதிலை எதிர்பார்த்து பின்னூட்டம் இட கூடாது.
    என்பது My Concept.

    (But பதிவோ பின்னூட்டமோ படிக்கும் அன்பர்களுக்கு பயன்படுமாறு அமையனும்)
    -------------
    சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே!
    கோல விளக்கே, கொடியே, விதானமே,
    ஆலின் இலையாய், அருள் ஏல்-ஓர் எம் பாவாய்!
    Thanks

    ReplyDelete
  37. //உறங்கா வில்லி தாசருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !//

    பார்த்தீங்களா? இப்போ மறுபடியும் பிறந்தநாள் வாழ்த்தை மட்டும் உங்க கிட்ட இருந்து வாங்கிட்டேன்! :)

    //KRS Said....
    நான் தான் பதில் சொல்ல வருவதற்கு ரொம்ப லேட் ஆயிரிச்சி! சாரி! :)

    பின்னூட்டம் எதிர்பார்த்து பதிவிட கூடாது.
    பதிலை எதிர்பார்த்து பின்னூட்டம் இட கூடாது.
    என்பது My Concept.//

    :)
    மொதல்ல சொன்னதுக்கு முழு உடன்பாடு! பதிவு உள்ளத்துப் பதிவா இருக்கணும்!
    ஆனா ரெண்டாவது சொன்னதுக்கு..???

    பின்னூட்டத்தில் நீங்க கேள்வி-ன்னு எழுப்பினா, இயன்றவரை பதில் தர வேணும்! அதுவே அடியார்கள் குணானுபவத்தில், நல்லொழுகு (Etiquette)! அதைக் கூடுமானவரை அடியேனும், ரங்கன் அண்ணாவும் கடைப்பிடிக்க முயல்வோம்!

    அதனால் பதிலை நீங்க தாராளமா எதிர்பார்க்கலாம்! எங்கே பதில்-ன்னு உரிமையுடன் கூடக் கேட்கலாம்! :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP