Tuesday, January 11, 2011

மார்கழி-28: கடவுளாலும் முடியாத காரியம்...DNA!

முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பான்! அன்பினால் சிறுபேர் அழைத்தனமும் சீறி-"அருளுவான்"! = எதுக்கு திட்டியவனைப் போய் வாழ வைக்கணும்?

இது திருப்பாவை - மீள்பதிவு தான்! 2008 இல் எழுதியது! இந்த மார்கழியில் சில பல காரணங்களுக்காக, ஒன்னும் எழுதலை! அதான் இப்படி!
பொங்கலுக்கு முன்னுள்ள மூன்று நாளும், மார்கழி முத்துக்கள்! அன்று வரும் பாசுரங்களில் ஒரு காதல் வேள்வியே அடங்கி இருக்கு! சும்மா வாசிச்சிப் பாருங்க, தெரியும்! :)


அன்னிக்கு அப்படித் தான், அடுத்த வீட்டுக் குழந்தை ஓடிவந்து மேலேறிக்கிச்சி! புதுசா வந்த Samsung Behold T919 வேணுமாம் விளையாட! நான் தரவில்லை! முடியைப் பிடிச்சி இழுக்குது! கன்னத்தில் கடிக்குது! சரி, படவா என்று திட்டுவோம், ஆனால் சனியனே- செத்துப் போ-ன்னு திட்டுவோமா?

தலைமுடியைப் பிடிச்சி இழுத்தாக்கா, சோறு கிடையாது என்று தெரிஞ்சா குழந்தை இழுக்குமா?
இழுத்த குழந்தை அன்று சாப்பிடாவிட்டால் மாறி மாறிக் கெஞ்சியும், கொஞ்சியும் ஊட்டுகிறோமே?
* "அன்பினால்" "சிறுபேர் அழைத்தனமும்", "சீறி"-"அருளுவான்"!

கடவுளை.....ஏதோ.....சர்வ சக்தன், சர்வ சுதந்திரன், சர்வ ஈசன்(சர்வேசன்), சர்வ சுவாமி, சர்வ லோக பாலகன், சர்வ சிரேஷ்டன், சர்வ அந்தர்யாமி-ன்னு.....பல "சர்வ" போடுகிறோம்! ஆனால் அப்பேர்ப்பட்ட கடவுளாலும் முடியாத ஒரே காரியம்.....ஒன்னு இருக்கு!

ஆகா...என்ன அது? அதைக் கோதை வெட்ட வெளிச்சமா ஆக்குறா! பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்!
அறிவு "ஒன்றும்" இல்லாத ஆய்க் குலத்து, உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்!
குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா, உந்தன்னோடு,

உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!
இறைவா நீ தாராய் பறை! ஏல்-ஓர் எம் பாவாய்!


பாடலின் விளக்கத்துக்குப் போவோம்!

ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு தாய்! மாறிக்கிட்டே இருக்காய்ங்க! ஒரு பிறவித் தாய்க்கே இம்புட்டு பாசம்-ன்னா, எல்லாப் பிறவிக்கும் தாயான தாய்க்கு எம்புட்டு பாசம் இருக்கும்?

உறவுகள், ரெண்டு வகை = சரீர பந்துக்கள் (உடல் உறவினர்)! ஆத்ம பந்து! (உயிர் உறவினர்)
சரீர உறவினர்கள் எப்ப வேணும்னாலும் வருவாங்க! எப்ப வேணும்னாலும் போவாங்க! யாருக்கு எப்போ பிடிக்காமப் போகும்-ன்னு, யாருக்குத் தெரியும்? :)
* அவங்களைப் பொறுத்த வரை = நீ முதலில் ஒரு சரீரம்! அப்பறம் தான் உன் உள்ளம்!
* ஆனா ஒரே ஒருத்தருக்குத் தான் = நீ முதலில் உள்ளம், அப்பறம் தான் உன் சரீரம்!

சும்மா கற்பனை பண்ணிப் பாருங்க! இந்த அறிவியல் காலத்தில் கூட, அட்ரெஸ் தெளிவா இல்லீன்னா ஒரு பொருளைக் கொண்டு போய் கொடுப்பது சிரமமா இருக்கு! பின் கோடு, சிப் கோடு, யூனிக் கோடு-ன்னு பல கோடுகள்! அதில்லாம தபால் அனுப்பினா திவால் தான்!
ஆனால் பிறவிகள் தோறும்...உன் கர்மாக்கள்...உன் வினைகள்...கரெக்டா உன் கிட்ட வந்து சேருதே? எப்படி?

* முகத்தைப் பார்த்து கொடுக்க முடியாது - புது உடம்பு வந்தாச்சி!
* பேரைப் பார்த்து கொடுக்க முடியாது - ஜீவன் நாம ரூபம் இல்லாதவன்!
* அட்ரெஸ் பார்த்து கொடுக்க முடியாது - ஆளுக்கு அட்ரெஸ் இருக்கான்னே தெரியாது! எங்காச்சும் காட்டுக்குள்ள கூட பொறந்திருக்கலாம்!
* பேங்க் அக்கவுன்ட் பார்த்து கொடுக்க முடியாது - அதைச் சொந்தக்காரவுங்க, எப்பவோ சாப்பிட்டு, வெத்தலை-பாக்கும் போட்டிருப்பாங்க!:)

எப்படி, ஒரு அடையாளம், Identification, Embedded Chip கூட இல்லாம, புண்ய-பாவக் கணக்குகள், கரெக்ட்டா பட்டுவாடா ஆகுது? ஹா ஹா ஹா!
* இறைவனைப் பற்றி இறைவனே தான் அறிந்து கொள்ள முடியும்!
* ஒரு குழந்தையை, அதன் தாயே தான் அடையாளம் காட்ட முடியும்!


பிறந்து ரெண்டு நாளே ஆன குழந்தை...
பார்ப்பதற்கு மத்த குழந்தைகளைப் போலவே இருந்தாலும், அதன் தாய்க்குத் தன் குழந்தையை எளிதில் அடையாளம் காண முடியும் அல்லவா!
* நாம் காட்சியை மட்டும் வைத்து அடையாளம் கண்டால்...
* அம்மா வாசனை, காட்சி, குரல், சுவை, தீண்டல்-ன்னு ஒரே நொடியில் சொல்லிடுவா!

அப்படித் தான் பிறவிகள் தோறும், நம்மை இறைவனும் அடையாளம் கண்டு கொள்கிறான்! Embedded Chip எல்லாம் எதுவும் வைக்காமலேயே! :)

இப்பேர்ப்பட்ட இறைவன்...அவனாலும் முடியாத ஒரே காரியம்...
* நாம்-அவன் என்கிற இந்த உறவை அழிக்கவே முடியாது!
* அதை நம்மாலும் அழிக்க முடியாது! அவனாலும் அழிக்க முடியாது!


பொறந்தாச்சு! இனி "நான் அம்மா இல்லை"ன்னு அவ சொன்னாலும் அம்மா, அம்மா தான்!
"ச்சீ நான் உன் புள்ளை இல்லை"ன்னு சொன்னாலும் புள்ளை, புள்ளை தான்!
= DNA மகத்துவம் அப்படி!!! அம்மாவோ/புள்ளையோ காசு கொடுத்து, அறுவை சிகிச்சை பண்ணி DNA-வை மாத்திக்க முடியுமா? :))

சர்வ சக்தன், சர்வ சுதந்திரன், சர்வ ஈசன் (சர்வேசன்), சர்வ சுவாமி, சர்வ லோக பாலகன், சர்வ சிரேஷ்டன், சர்வ அந்தர்யாமி-ன்னு...பல "சர்வ" போட்டாலும்...கடைசியில்.....
* அவன் சர்வ சரண்யன்! சர்வ சரண்யன்! சர்வ சரண்யன்!
* உன் தன்னோடு - உறவேல் நமக்கு - இங்கு ஒழிக்க ஒழியாது!!!

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! உனக்கும் எனக்குமான DNA-வை நீயே நினைச்சாலும் ஒன்னுமே பண்ண முடியாது! :)
அடுத்த முறை நீ ரொம்ப மக்கர் பண்ணேன்னு வையி, ஏய் பெருமாளே! DNA Test-க்கு வரீயா-ன்னு கூப்பிடுவேன்! :)

கோதை சொல்லிக் கொடுக்கும் இந்த சூப்பர் உத்தியைப் பார்க்கலாமா? வாங்க, விளக்கத்துக்குப் போகலாம்!



கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம் = கறவை மாட்டுக்குப் பின்னாலேயே போய், காட்டிலே மேய விட்டு, பின்னர் சாப்பிடுவோம்!

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து = இப்படி மாடு மேய்க்கும் கூட்டம்! ரொம்ப பெருசா அறிவெல்லாம் இல்லாத ஒரு ஆயர் குலம்!
அந்தக் குலத்துக்கு ஜப-தப-ஹோமம் எல்லாம் ஒன்னும் செய்யத் தெரியாது! வியாபாரம் கூட பெருசா ஒன்னும் தெரியாது! ஞான நூல்கள் எல்லாம் படிக்கத் தெரியாது! ஆன்மீகப் பதிவு கூடப் போடத் தெரியாது! :)

உன் தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் = அந்த மாதிரியான ஒரு கூட்டத்துக்கு நடுவில், நீ வந்து பொறந்தீயே! என்னைப் பெத்த ராசா! என்ன புண்ணியம் செஞ்சோமோ நாங்க?

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா = வெறுமனே "குறை இல்லாத கோவிந்தா"-ன்னு சொல்ல மனசு ஒப்பலையே! இன்னிக்கி வேணும்னா குறை இல்லாம இருக்கலாம்! ஆனா நாளைக்கு மாறிடுவாங்களே!
நீயோ, குறை "ஒன்றுமே" இல்லாத கோ-விந்தன்!

சென்ற பாட்டில் சொன்னது போல், இனி திருப்பாவை முடியும் வரை கோவிந்த கோஷம் தான்! கோவிந்த நாமம் மிக மிக மங்களகரமானது என்று நேற்றே பார்த்தோம்! நோன்பு முடிந்த வெற்றியில், ஒவ்வொரு பாட்டிலும், கோவிந்தனை வலிய இழுத்து, கொண்டாடுகிறார்கள்! கோவிந்த நாம சங்கீர்த்தனம்...கோவிந்தா கோவிந்தா!

* ஆபாட மொக்குல வாடா, அடுகடுகு தண்ணல வாடா = கோவிந்தா கோவிந்தா!
* வட்டிகாசுல வாடா, வேங்கட ரமணா = கோவிந்தா கோவிந்தா!
* ஏடு கொண்டல வாடா, வேங்கட ரமணா = கோவிந்தா கோவிந்தா!
* ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா = கோவிந்தா கோவிந்தா!



உந்தன்னோடு+உறவேல்+நமக்கு = நீ+உறவு+நாங்கள் = அ+உ+ம = ஓம்!
அகரம்=அவன்; மகரம்=நாம்; உகரம்=(அவன்-நாம்)உறவு!

பிரணவ சொருபத்தை இப்பாசுரத்தில் மிக அழகாகக் காட்டுகிறாள் கோதை!
* எல்லாரும் பிரணவப் பொருள், பிரணவப் பொருள்-ன்னு சும்மா பேசறோமே தவிர, முருகப் பெருமான் அப்பாவுக்குச் சொன்ன பொருள் தான் என்ன?
* அதை யாரும் சொல்ல மாட்டேங்குறாங்களே? ஏன்? பிரணவம் என்பது ரகசியமா?
* ஆனால் கோதை இதோ சொல்கிறாளே! ஊர் அறியப் போட்டு உடைத்து விட்டாளே!

ஓம் என்னும் பிரணவத்துக்குப் பொருள் தெரியாமல் தானே பிரம்மா அவதிப்பட்டார்? ஆசை முருகன் தலையில் குட்டினான்? தெரியாத பிரம்மனுக்குப் பிறகு சொல்லிக் கொடுத்தானா?
சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் "இரு செவி" மீதிலும் பகர் என்று ஆனதுவே! எப்படி ஒரே நேரத்தில், இரண்டு செவி மீதிலும் சொல்ல முடியும்? அருணகிரி பொய் சொல்ல மாட்டாரே! - தனிப் பதிவாய் தான் இட வேணும்! யாரேனும் தைப் பூசத்தின் போது அடியேனுக்கு ஞாபகப் படுத்துங்கள்!


இங்கு ஒழிக்க ஒழியாது
= அந்த, "நீ-நான்" உறவு, பிரணவ மயமானது! அதை நீயே ஒழிக்க நினைச்சாலும் ஒழியாது! ஏன் தெரியுமா?
(ஓம்)+நமோ+நாராயணாய = 1+2+5 = 8 = அஷ்டாட்சரம் என்னும் திருவெட்டெழுத்து!
ஓம் என்பது தமிழில் எழுதும் போது, பார்க்க ஈரெழுத்து போல இருப்பினும், அது ஒரே எழுத்து தான்! அ+உ+ம சப்தம் சேர்ந்த ஏகாட்சரம்!
* உந்தன்னோடு+உறவேல்+நமக்கு = அ+உ+ம = ஓம்!
அந்த உறவை, அந்த "ஓம்"-ஐ, உன்னால் கூட அழிக்க முடியுமா? அழித்தால் உன் அஷ்டாட்சரத்துக்கே பொருள் இல்லாமல் போய் விடுமே?

ஏன்னா, அந்த "ஓம்" என்பதைச் சேர்த்தா தான் எட்டு எழுத்து! "ஓம்"-ஐ நீக்கிப் பாருங்கள்! ஏழாகி விடும்! சப்தாட்சரம்-ன்னு ஆயிரும்! :)

இப்படி ஓங்காரம் சேர்ந்தே இருக்கும் "ஒரே" மந்திரம் என்பது அஷ்டாட்சரத்துக்கு மட்டுமே உரிய ஒன்று!
"ஓம்" என்பதைச் சேர்த்தால் தான் அஷ்டாட்சரப் பூர்த்தி! உலகில் வேறு எந்த மந்திரத்துக்கும் இப்படி ஓங்காரத் த்வனி, பிரணவ மயம் இல்லை!

* நம+சிவாய = 5 = பஞ்சாட்சரம்! திருவைந்தெழுத்து! - "ஓம்" என்பது அதில் இல்லை! ஓம் என்பதைப் பஞ்சாட்சரத்துடன் தனியாகக் கோர்த்து தான் சொல்லணும்!
* சரவண+பவ = 6 = சடாட்சரம்! திருவாறெழுத்து! - "ஓம்" என்பதைச் சடாட்சரத்துடன் தனியாகக் கோர்த்து தான் சொல்லணும்!
* (ஓம்)+நமோ+நாராயணாய = 8 = அஷ்டாட்சரம்! திருவெட்டெழுத்து! - "ஓம்" என்பதைக் கோர்க்கவே தேவையில்லை! தானாகவே அமைந்து விடுகிறது!

ஓங்காரமாகிய பிரணவம், மந்திரத்துக்குள்ளேயே இயைந்து ஒலிப்பது இதன் தனித்துவம்! அதை மந்திரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது!
அதனால் தான் பிரணவாகாரம் என்று சொன்னான் "குரு"குகனான எங்கள் முருகப் பெருமான்! அரங்க விமானமும் பிரணவாகார விமானம் என்றே வழங்கப்படுகிறது!

(குறிப்பு: இதனால் பஞ்சாட்சர, சடாட்சர, ஏனைய மந்திரங்கள் எல்லாம் தாழ்ச்சி என்றோ, திருவெட்டெழுத்து மட்டுமே உசத்தி என்றோ, தெளிவொன்றில்லாத குறுகுறு மனமாய்க் கணக்கு போடக் கூடாது! ஒவ்வொரு மந்திர சப்த மாத்திரமும் ஒவ்வொரு நன்மைக்கு ஏற்பட்டது! இது பிரணவாகாரம் என்பதைக் காட்ட வந்த மந்திரம்! அவ்வளவே! இதற்கு மேல் வீண் கற்பனைகளை, அவரவர் மனசுக்கு ஏத்தாப் போலே, உயர்ச்சி/தாழ்ச்சி-ன்னு வளர்த்துக்க வேணாம்!)

* இப்படியான பிரணவம் = உந்தன்னோடு+உறவேல்+நமக்கு! = அ+உ+ம!
* அடே பெருமாளே, இப்போ அந்த உறவை=ஓம், அதை ஒழியேன் பார்ப்போம் என்று கோதை சவடால் விடுகிறாள்! புடிச்சாப்பா பாயின்ட்டை! அவன் ஒன்னுமே பண்ண முடியாது! ஹா ஹா ஹா! :)



அறியாத பிள்ளைகளோம் = நாங்கள் அறியாத பிள்ளைகள்! அப்பாவிச் சிறுவன் சிறுமிகள்! :)
எங்க நல்லது எது-ன்னு எங்களுக்கே தெரியாது! எங்கள் நல்லது நாடும் உள்ளங்களை நாங்களே போட்டுத் தாக்குவோம்! ஒரு பொருள் - நேற்று நல்லதாகத் தெரியும்! ஆனா இன்னிக்கு மாறிடும்! நாளை மீண்டும் நல்லதாத் தெரியும்! இப்படி "நல்லது" அறியாக் கூட்டம் நாங்க!

அன்பினால் உன் தன்னை = ஏதோ, அன்பாலேயும், உரிமையாலேயும், உன்னை
சிறு பேர் அழைத்தனமும் = என்னென்னமோ சொல்லி இருக்கோம்! எப்படி எப்படியோ திட்டி இருக்கோம்!

சீறி அருளாதே = பூச்சாண்டி காட்டுவது போல் சீறுவாயே! அப்படிச் சீறக் கூடச் சீறாதே! சீறினாலும் அருள்வாய் அல்லவா! முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பாய் அல்லவா!

இறைவா, நீ தாராய் பறை = இறைவா! குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா! நீ தான் அபயம்! அபயம்!

நேற்றைய பாசுரத்திலேயே பறை என்னும் நோன்புப் பொருளைக் கொடுத்து விட்டாய்! இருந்தாலும் இன்னிக்கும் பறை தாராய்-ன்னு கேட்கிறோமே-ன்னு பாக்குறியா? கேட்டுக் கேட்டுப் பழக்க தோஷம் ஆயிருச்சா? ஹிஹி! ஏன்-ன்னு அடுத்த பாசுரத்தில் சொல்கிறோம்! உனக்கே இன்ப அதிர்ச்சி கொடுக்கிறோம்!

இப்போதைக்கு, இன்றைய பாட்டில்...."நீ-நாங்கள்" உறவைப் பிரிக்கவே முடியாது! அதனால் தான்
* "உன்" தன்னைப் பிறவி பெறுந்தனை
* "உன்" தன்னோடு உறவேல் நமக்கு
* "உன்" தன்னைச் சிறு பேர் அழைத்தனமும்
என்று மூன்று முறை "உன், உன், உன்" என்று ஒரே பாட்டில் சொல்லி,
"நம்-அவன்" உறவைக் கல்வெட்டு போல வெட்டி வைக்கிறாள் இந்த அறியாப் பெண்! அப்பாவிச் சிறுமி!

குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா - இறைவா, நீ தாராய் பறை!
எங்களை ஏல் கொள் பெருமாளே! ஏற்றுக் கொள்!
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!


ஆண்டாள் திருவடிகளே சரணம்!


எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடிய "குறையொன்றுமில்லை" என்னும் அழியாக் காவியமான பாடலின் கரு, இந்தப் பாசுரத்தில் இருந்தே எடுக்கப்பட்டது!
குறையொன்றுமில்லை கண்ணா, குறையொன்றுமில்லை கோவிந்தா = குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு....

26 comments:

  1. //அறியாத பிள்ளைகளோம் = நாங்கள் அறியாத பிள்ளைகள்! அப்பாவிச் சிறுவன் சிறுமிகள்! :)//
    //அன்பினால் உன் தன்னை = ஏதோ, அன்பாலேயும், உரிமையாலேயும், உன்னை
    சிறு பேர் அழைத்தனமும் = என்னென்னமோ சொல்லி இருக்கோம்! எப்படி எப்படியோ திட்டி இருக்கோம்!

    சீறி அருளாதே = பூச்சாண்டி காட்டுவது போல் சீறுவாயே! அப்படிச் சீறக் கூடச் சீறாதே! சீறினாலும் அருள்வாய் அல்லவா! முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பாய் அல்லவா!
    //
    //குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா - இறைவா, நீ தாராய் பறை!
    எங்களை ஏல் கொள் பெருமாளே! ஏற்றுக் கொள்!//
    romba azhagaana post!
    Tear-inducing post!
    rasithen! rasithen!
    This post helped me a lot, thankyou :)

    ReplyDelete
  2. //எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடிய "குறையொன்றுமில்லை" என்னும் அழியாக் காவியமான பாடலின் கரு, இந்தப் பாசுரத்தில் இருந்தே எடுக்கப்பட்டது!//
    i really like the song.
    There's something about the voice which makes you cry.
    But, how can one be happy without Him, without seeing Him?

    ReplyDelete
  3. @KRS:
    //பூச்சாண்டி காட்டுவது போல் சீறுவாயே! //
    Appadi-na avar kovamum பூச்சாண்டி dhaana?
    Avar pesaamal irupadhum பூச்சாண்டி velai dhaana?
    avar kovamum poi dhaana?
    pls. reply.

    ReplyDelete
  4. //புதுசா வந்த Samsung Behold T919 வேணுமாம் விளையாட!//
    புதுசா வந்த???????

    ReplyDelete
  5. //DNA மகத்துவம் அப்படி!!! //
    but, DNA kooda biological/materialistic concept dhaana??

    ReplyDelete
  6. //இப்போதைக்கு "நீ-நாங்கள்" உறவைப் பிரிக்கவே முடியாது! அதனால் தான்
    * "உன்" தன்னைப் பிறவி பெறுந்தனை
    * "உன்" தன்னோடு உறவேல் நமக்கு
    * "உன்" தன்னைச் சிறு பேர் அழைத்தனமும்
    என்று மூன்று முறை "உன், உன், உன்" என்று ஒரே பாட்டில் சொல்லி,//


    ippadi ellame avan-nu irukka edhaavudhu "qualification" undaa?
    "maatrar vandhu...adipaniyum"
    ippadi daily thirupaavai solra madhiri daily "maatrar" pole behave pannikite irundhaalum, ellame avan dhaan-nu sollalaama?

    ReplyDelete
  7. //நீ தாராய் பறை!//
    "பறை" appadinna?

    ReplyDelete
  8. //In Love With Krishna said...
    "பறை" appadinna?//

    பறை = Drums!
    அப்பவே, பொண்ணுங்க எல்லாம் சவுண்ட் பார்ட்டி போல! அதான் Drums கேக்குதுங்க! பேசறது போதாதுன்னு, இப்படி பறை கொட்டிப் பேசினா மனுசன் என்னத்துக்கு ஆவான்? :)))

    ReplyDelete
  9. //But, how can one be happy without Him, without seeing Him?//

    மருந்தாம் என்று தம் மனத்தே
    வைத்தக் கொண்டு வாழ்வார்கள்
    பிரியாது என்றும் இருப்பாரே - அவனைப்
    பிரியாது என்றும் இருப்பாரே!

    Seeing Him?
    I always see him, his photos, his pictures, his archai thirumeni in temples....and above all...

    When I make up myself in the mirror...I see not me, but him! Thatz why I take extra time before the mirror...PurinjikOnga ma, dont shout and ask me to come soon for brkfast! :)

    ReplyDelete
  10. //avar kovamum poi dhaana?
    pls. reply.//

    lemme reply from a previous post...
    கோதையின் பிறந்தநாள்: Kissing for Dummies

    பெண் மனசின் சுபாவம்: ஆசை இருந்தாலும், இல்லாதது போல் காட்டிக் கொள்வது!
    ஆண் மனசின் சுபாவம்: கோபம் இல்லையென்றாலும், இருப்பது போல் காட்டிக் கொள்வது!

    இந்தக் காட்டிக் கொள்வதில் இருக்கும் சுவை தான்...மீண்டும் மீண்டும் சுவைக்குக் காரணம்! :)

    ReplyDelete
  11. //In Love With Krishna said...

    //புதுசா வந்த Samsung Behold T919 வேணுமாம் விளையாட!//
    புதுசா வந்த???????//

    ஹா ஹா ஹா
    இந்தப் பதிவு 2008 மார்கழியில் எழுதியது! இது மீள்பதிவு என்பதையே வாசிக்கும் போது மறந்துட்டீங்களா? :)

    ReplyDelete
  12. // In Love With Krishna said...
    but, DNA kooda biological/materialistic concept dhaana??//

    There is nothing called "materialistic"!
    Itz a reflection of nature! - whether one's own nature or His nature!

    DNA is nature personified! It just exists! Its code is the basis of nature!

    ReplyDelete
  13. //"maatrar" pole behave pannikite irundhaalum, ellame avan dhaan-nu sollalaama?//

    :)
    மாற்றார் போல நடந்து கொண்டாலும், DNA மாறி விடுமா என்ன?
    --------------------

    எல்லாமே அவன் என்பது அடி மனசு அவனுக்கு ஏங்குவது! அடி மனசு ஏங்குவது போலெல்லாம் வெளியில் இருக்க முடியுமா? = அது அடி மனசுக்கும்-உடம்புக்கும் உள்ள ஒப்பந்தத்தைப் பொறுத்து! :)

    ReplyDelete
  14. //பேசறது போதாதுன்னு, இப்படி பறை கொட்டிப் பேசினா மனுசன் என்னத்துக்கு ஆவான்?//
    Koil-la Perumal eluvadhukku munnadi oru "drums" vaasipaanga, people alert panna..
    ippadi kaadhal parai kondu vaa en kanna, i mean PSP, nnu solraala kothai??

    ReplyDelete
  15. //lemme reply from a previous post...//
    Beautiful post!
    Azhaga solli irukeenga!

    ReplyDelete
  16. //DNA is nature personified! It just exists! Its code is the basis of nature!//
    No, biologically, a DNA is very specific to a person.
    It determines all the bodily aspects of him/her.
    DNA's are so unique even a little inversion may bring about speciation.
    Or, cause unsaid harm to the individual.
    The DNA is very much the determiner/marker of bodily concepts.
    That He decides them is a totally different issue!
    But, ofcourse, given that we are all His kids, we do have a common strand of DNA somewhere, which science will never figure out: our ability to connect with Him. Our ability to shout His name out loud to the winds, and proclaim our love for Him. :)

    ReplyDelete
  17. Talking about DNA, Darwin was an atheist who was a great cynic of spritual beliefs.
    But, his "survival of the fittest" also put forward something else: that man came from other primates and especially next in line to chimpanzees.
    Recent chromosomal findings came well after Darwin. (the study of chromosomes and genes is well after Darwin, Mendel, who did some mind-blowing work at Darwin's time, was largely ignored, but his work was rediscovered at the beginning of the 20th century by Johannsen and others).
    Chromosomal findings have found some striking, undeniable evidences in favour of atleast that postualte of Darwin.
    But, by his so-propogated-there-is-no-God theory, Darwin merely reconfirmed what had been said in our scriptures for ages.
    i remember reading the Srimad Bhagavatam (just flipping through), where it is mentioned that the "vanaras" were the ancestors of men. i found a whole chapter describing how man originated from monkeys!

    ReplyDelete
  18. Another point are the evolution theories.
    Most modern biologists and other researchers would agree that life originated from the water. The theory goes something like a cell being formed close to the surface of sea water, where it recieved optimum exposure to air as well.
    Anyways, there is no debate that water-dependent animals came first, then the amphibious, and finally the terrestrial forms from reptiles to mammals and man, all beginning from the first terrestrial adaptation: amniota (covering of egg layers). ditto for plants as well.
    But, if one sees the Dasavatharam, it starts from Macham (fish), Koormam (amphibious), Varaham (terrestrial, still attached to marshes), Narasimha and so on, till Rama (human being), and finally coming down to Earth as God Himself (Krishna, in His original form)
    p.s: i know i reasoned too much, but i must smile here :))))))))))

    ReplyDelete
  19. //No, biologically, a DNA is very specific to a person.
    It determines all the bodily aspects of him/her//

    :)
    அதையே தான் நானும் சொன்னேன், கொஞ்சம் வேற மாதிரி!
    DNA is nature personified! It just exists! Its code is the basis of nature - one's own nature (குணம்)! :)

    //but, DNA kooda biological/ materialistic concept dhaana??//

    வைணவத்தில் Materialistic என்பதே இல்லை!
    சித்-அசித்-ஈஸ்வரன் என்பதில் அசித்=Matter, Material! அதிலும் எம்பெருமானே கரந்துறைகிறான்! அதனால் தான் உலகம் மாயை என்பதை வைணவம் ஒப்புக் கொள்வதில்லை! உலகம் உண்மை! உணர்ச்சிகளும் உண்மை! அது அவனோடு சம்பந்தம் ஏற்படுத்திக் கொடுப்பது!

    //No, biologically, a DNA is very specific to a person.
    It determines all the bodily aspects of him/her//

    Yes!
    DNA is very unique to a person, but it also has the traces & strands of his parents!
    Thatz why DNA tests are so much a convincing evidence!

    Imagine someone breaks up with his/her mother! He dislikes her to the core!
    * Can he go and change the initial that carries his mother's name? = Yes!
    * Can he go and change the DNA bcoz he hates her? = No :)

    அது போலத் தான் எம்பெருமான்-நம் உறவும்!
    * Can we disown him? = Yes, you can say so, but really CANNOT!
    * Can he disown us? = No way! May be, to frighten us for the sins, but he also really CANNOT!

    உன் தன்னோடு-உறவேல்-நமக்கு = DNA
    அ - உ - ம் = ஓம் = DNA!
    அதை ஒழிக்க ஒழியாது! ஒழிக்க ஒழியாது!

    ReplyDelete
  20. //Darwin merely reconfirmed what had been said in our scriptures for ages.
    i remember reading the Srimad Bhagavatam (just flipping through), where it is mentioned that the "vanaras" were the ancestors of men//

    Wow!
    We have a scientist-student here with us in Kannan Songs! :)
    எப்பவாச்சும் அறிவியல் சந்தேகம் கேட்கப் பயன்படும்! குறிச்சி வச்சிக்கறேன்!

    ReplyDelete
  21. //Most modern biologists and other researchers would agree that life originated from the water//

    ஆபோ நாரா
    இதி ப்ரோக்தா
    ஆபோ வை
    நர சூனவஹ
    ஆயனம் தஸ்யதா பூர்வம்
    தேன நாராயண இதி ஸ்ம்ருதஹ!

    //The theory goes something like a cell being formed close to the surface of sea water, where it recieved optimum exposure to air as well.
    Anyways, there is no debate that water-dependent animals came first//

    யோ அக்னைர் ஆயதனம் வேதா
    ஆயதனவான் பவதி!
    யே யேவம் வேதா
    யோபாம் ஆய தனம் வேதா
    ஆயதனவான் பவதி!

    //p.s: i know i reasoned too much, but i must smile here :))))))))))//

    Not at all!
    You are the source of inspiration!
    Hats off KK!
    My personal hats-off too, but with a smile :)

    ReplyDelete
  22. கோதைத் தமிழில் எனக்கு ஒரு மயக்கம் உண்டு. இப்பொழுது உங்கள் விளக்கங்களில், கருத்துக்களில் இந்த திருப்பாவைக் காதல் இன்னும் அதிகரிக்கின்றது. மிக்க நன்றி

    ReplyDelete
  23. @KRS: Liked ur thoughts on DNA. :))
    //
    //p.s: i know i reasoned too much, but i must smile here :))))))))))//\
    :))
    No, actually,my face was very rigid, and stern, as i was thinking.
    And, then, i ended up typing "Krishna". That made me smile :))
    i'd rather think of Him than reason out all this.
    But, i guess thinking of Him when you are holding your biology book in hand has such consequences :)
    //வைணவத்தில் Materialistic என்பதே இல்லை!
    சித்-அசித்-ஈஸ்வரன் என்பதில் அசித்=Matter, Material! அதிலும் எம்பெருமானே கரந்துறைகிறான்! அதனால் தான் உலகம் மாயை என்பதை வைணவம் ஒப்புக் கொள்வதில்லை! உலகம் உண்மை! உணர்ச்சிகளும் உண்மை! அது அவனோடு சம்பந்தம் ஏற்படுத்திக் கொடுப்பது!//
    Yes, u r right.
    ---
    "It is not in our capability to break free from the swing of Maya. So, we must swim along in it, and find Perumal."
    "This is perhaps the essence of Vishishtadvaitam, which lies in between Madhavacharya's Dvaitam and Shankaracharya's Advaitam"
    ---
    Not my words, but someone who i was talking to abt this, told me.
    Your thoughts???

    ReplyDelete
  24. வந்துவிட்டேன் மார்கழிக்கு சின்னதாய் ஊர் சுற்றப்போய்விட்டதால் பதிவை உடனே வாசிக்க இயலவில்லை.

    //குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! உனக்கும் எனக்குமான DNA-வை நீயே நினைச்சாலும் ஒன்னுமே பண்ண முடியாது! :)
    அடுத்த முறை நீ ரொம்ப மக்கர் பண்ணேன்னு வையி, ஏய் பெருமாளே! DNA Test-க்கு வரீயா-ன்னு கூப்பிடுவேன்! :)

    கோதை சொல்லிக் கொடுக்கும் இந்த சூப்பர் உத்தியைப் பார்க்கலாமா? //
    <<>>>அதானே தோழி இல்லேன்னா தம்பிக்கு எதுவும் எழுத வராதே:)

    ReplyDelete
  25. //* இப்படியான பிரணவம் = உந்தன்னோடு+உறவேல்+நமக்கு! = அ+உ+ம!
    * அடே பெருமாளே, இப்போ அந்த உறவை=ஓம், அதை ஒழியேன் பார்ப்போம் என்று கோதை சவடால் விடுகிறாள்! புடிச்சாப்பா பாயின்ட்டை! அவன் ஒன்னுமே பண்ண முடியாது! ஹா ஹா ஹா! :)

    ////

    <<<>>>>>>>>அவ பிடிச்சபாயிண்டை அழகா நீஙக்ளும் பிடிச்சி விளக்கற நேர்த்தி அற்புதம்!

    ReplyDelete
  26. இது திருப்பாவை - மீள்பதிவு தான்! 2008 இல் எழுதியது! இந்த மார்கழியில் சில பல காரணங்களுக்காக, ஒன்னும் எழுதலை! அதான் இப்படி!
    பொங்கலுக்கு முன்னுள்ள மூன்று நாளும், மார்கழி முத்துக்கள்! அன்று வரும் பாசுரங்களில் ஒரு காதல் வேள்வியே அடங்கி இருக்கு! சும்மா வாசிச்சிப் பாருங்க, தெரியும்! :)
    //////


    ஆனாலும் புதுசுபோலவே தான் இப்போவும் இருக்கு ரவி..ரசிச்சி படிச்சேன்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP