புதிரா? புனிதமா?? - தசாவதாரம் வினாடி வினா!
சரியான விடைகள் கீழே போல்ட் பண்ணியிருக்கு! பாத்துக்குங்க! படம் இது வரை பாக்காதவங்க, ஒரு முறையாச்சும் கண்டிப்பா பார்க்கலாம்!
ஆனா எப்போ? இப்பவே-வா? இல்லை டிவிடி வரும் போதா-ன்னு நீங்களே முடிவு கட்டிக்கோங்க!
எல்லாரும் கொஞ்ச நாள் இதையே தான் பேசிக்கிட்டுத் திரிவாய்ங்க! So jus' be a part of the crowd and have fun...at the expense of Kamal!:-)
வெற்றியாளர்கள்:
உலக நாயகன்கள்: கொத்ஸ், கப்பி, கோபி, ராயல் ராம்
உலக நாயகிகள்: ஜெயப்ரதா, மல்லிகா ஷெராவத், ஜாக்கெட் போடாத அசின், ஜாக்கெட் போட்ட அசின்!
என்னா கேக்கறீங்க? வழக்கம் போல் பரிசா?
அதான் உலக நாயகிகள்-ன்னு பட்டியல் போட்டு, நம்ம உலக நாயகன்களுக்கு ஈடாக அறிவிச்சிருக்கோம்-ல? அப்பறம் என்னவாம்? வாழ்த்துக்கள்!!! :-)
லாஸ்ட் நிமிட்-ல வந்து, ஜாக்கெட் போட்ட அசினைப் பிடிச்ச ராயலின் மகிமையே மகிமை!:-)
கமல் சார், வாட் நெக்ஸ்ட்???
பிகு:
படம் பார்க்க இலவச டிக்கெட், சரவண பவன் குலுக்கல் சீட்டில் கிடைச்சிருக்கு!
மூனாவது முறை படம் பார்த்தா தப்பா மக்கா? சொல்லுங்க மக்கா சொல்லுங்க! :-)
மக்கள்ஸ்! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா, எல்லாரும் தசாவதார விமர்சனம் படிச்சிட்டு, ஜாலியா இருக்கீங்களா?
யாராச்சும் ஒருத்தரோட விமர்சனத்துல, ஏதோ ஒன்னைப் படிச்சிப்புட்டு,
ஐயோ இதை நாம சரியா நோட் பண்ணலியே-ன்னு, ரெண்டாம் தபா தசாவதாரம் பார்த்த நல்லவங்க யார் யாருப்பா?
கையைத் தூக்குங்க பார்ப்போம்!(மொதல்ல, நான் கையைத் தூக்கி விடுகிறேன்!:-)
எத்தனை முறை தான் விமர்சனமே படிச்சிக்கிட்டு இருக்கறது? அதான் பார் ஏ சேஞ்ச்!
இன்னிக்கி ஸ்பெசல் தலைப்பு! தசாவதாரம் - புதிரா? புனிதமா??! Dasavatharam Quiz Show!

"புதிரா? புனிதமா??" கடைசியா நட்சத்திர வாரத்தில் போட்டதோட சரி! So, Thank You மிஸ்டர் தாமரை நகையான் (நம்ம ஜிரா கமலுக்கு வச்ச பேரு)!
* கமலே, உனக்கு 34.50$ கொடுத்தேனே-ன்னு அழுகுறாரு ஒரு கொத்தரு!
* ஹ"றி" ஓம்ன்னு படம் பாக்கச் சொல்றாரு இந்த ஹாரி புத்தரு!
* Hurry Om! படத்துக்கு லேட்டா மட்டும் போயிறாதீங்க மக்கா-ன்னு "ஹரி"-வுரை கொடுக்காரு இந்த ஜித்தரு!
தசாவதாரம் படம், புதிரா? புனிதமா??! ஆடலாம் வாங்க!
விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!
டிஸ்கி-1
இந்தப் போட்டியில் கலந்துக்கிட்டு, விடைகளைத் தப்பாச் சொன்னதுக்காக, இல்லை மேற்கண்ட படத்துக்காகவோ, இல்லை வேறு எதற்காகவோ....இன்னோரு தபா தசாவதாரத்தைச் சரியா பார்க்கணும்-னு நீங்க ஏதாச்சும் முடிவெடுத்தீங்கன்னா, அதுக்கு எல்லாம், பாவம் கேஆரெஸ் தானா பொறுப்பு?
டிஸ்கி-2
ரங்கராஜ நம்பி கற்பனை! சிலையைக் கடலில் தூக்கி வீசியது உண்மை!கற்பனையை உண்மையோடு கலக்கும் போது, விழிப்பும், அதை விட பொறுப்பும் தேவை!
படத்தில் தெளிவாக டிஸ்கி போட்டுச் சொல்லி விடுங்களேன்!
- என்று முன்னொரு பதிவில் சொல்லி இருந்தேன்!
கமல் ரசிகர்கள் எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து, அப்பாவிச் சிறுவனான கேயாரெஸ்ஸைப் போட்டுத் தாக்கி, ஒரே நாளில் மாதவிப் பந்தலை அகில இந்திய ரேஞ்சுக்கு பிரிச்சி மேஞ்சி, அன்பைக் காட்டினாலும்...
கமல் மட்டும், நல்ல பிள்ளையா, நம்ம கேஆரெஸ் பேச்சைக் கேட்டுக்கிட்டு அதே போல நடந்துகிட்டாருப்பா! :-)
உலக நாயகன் கமலே, நீ வாழ்க! வாழ்க!
படம் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்! மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மல்டிப்பிள் பாத்திரப் படைப்புகளையும், வழக்கமான ஆத்திக-நாத்திக குழப்பத்தையும் தாண்டி,
உலக அளவில் வைத்துப் பேசப்படும் ஒரு தமிழ்ப் படத்தை உருவாக்க வேண்டும்!
அந்த வெறியை, இந்த வெ"ற்"றி உங்களுக்குக் கொடுக்கட்டும்!
உலக நாயகன் சாதனை அடைய, உலகளந்த உலகநாயகன் அருளட்டும்!!
மீண்டும் வாழ்த்துக்கள்!!!
| 1 | கமல் பாட்டியின் பேர் என்ன? (அசின், மல்லிகா ஷெராவத், அட ஜெயப்ரதாவைக் கூட இந்த முறை கமல் "சரியாவே" காட்டலை! இதுல பெருசா பாட்டி பேரை எல்லாம் ஏண்டா கேக்கறீங்க? -ன்னு தானே கேக்குறீங்க :-) | 1 அ) ராதாபாய் ஆ) கிருஷ்ணம்மாள் இ) ஆண்டாள் ஈ) கிருஷ்ணவேணி |
| 2 | படத்தின் பின்னணி இசையமைப்பாளர் யார்? (கமல் தோன்றும் காட்சியில் "சாரே ஜஹான் சே அச்சா" போட்ட அந்த பச்சா-ன்னு யாருப்பா சவுண்ட் வுடறது? :-) | 2 அ) ஹிமேஷ் ரெஷாமியா ஆ) கமலஹாசன் இ) தேவி ஸ்ரீ பிரசாத் ஈ) பாபி தூத்துல் |
| 3 | முன்னாள் CIA ஏஜென்ட்டாக (?) வரும் மல்லிகா ஷெராவத்தின் படப் பெயர் என்ன? அவள் கணவன் பெயர் என்ன? (சாரி, நோ சாய்ஸ்! ரெண்டுமே சரியாச் சொல்லணும் :-) | 3 Jasmine/Christian Fletcher |
| 4 | பலராம் நாயுடு-கோவிந்த் இரண்டு கமல்களின் சந்திப்பு முதலில் எங்கு நடக்கிறது? (தெலுங்கு டப்பிங்-ல இவரு பலராம் நாடாராமே? :-) | 4 அ) சென்னை விமான நிலையம் ஆ) RAW இன்டலிஜென்ஸ் அலுவலகம் இ) கார்கோ விமானம் ஈ) Immigration(குடியுரிமை) கவுன்ட்டர் |
| 5 | படத்துல ஒரு பட்டாம்பூச்சி பறந்துக்கிட்டே இருக்கும்! கவனிச்சீங்களா? (கமல் உலக நாயகனாச்சே! இதெல்லாம் தமிழ் சினிமாவுல அவரு சொல்லாட்டி வேற யார் சொல்வாங்களாம்? :-) அந்தப் பட்டாம்பூச்சியும், அது பற்றிக் கமல் எடுத்துக்காட்டும் கொள்கையும் - அவற்றின் பெயர்கள் என்ன? | 5 அ) Chaos Theory-Lava Effect ஆ) Chaos Theory-Butterfly effect இ) Tectonic Theory-Butterfly Effect ஈ) Quantum Theory-Lava Effect |
| 6 | படத்தின் மொத்த ஓடும் நேரம் எவ்ளோ? (அசினும் கமலும் ஓடுன ஓட்டத்தை எல்லாம் கணக்குல எடுத்துக்காதீங்க :-) | 6 அ) 03:05 ஆ) 02:55 இ) 03:15 ஈ) 02:45 |
| 7 | படத்தில் தன்னையும் ஒரு கிருமி கண்ட சோழன் என்று சொல்லிக் கொள்கிறார் கோவிந்த் ராமசாமி என்னும் விஞ்ஞானி கமல்! அந்தக் கிருமியைச் சாப்பிட்டு உயிர் துறக்கும் குரங்கின் பேர் என்ன? (கோவிந்த்-"ராம"சாமி என்பதால் சிம்பாலிக்கா ராமாயணக் குரங்கினமா? :-) | 7 அ) வினு ஆ) அனு (அனு-மான்?) இ) சிம்பா ஈ) கபீஷ் |
| 8 | படத்தில் வரும் அவ்தார் சிங்-கின் "ஓ ஹோ சனம்" என்ற பாடலை எழுதியது யார்? பாடியது யார்? (இந்தப் பாட்டு புடிச்சி இருந்துச்சா? ரஹ்மான், ஹாரிஸ், யுவன் இன்னும் நல்லா போட்டிருப்பாங்களோ?) | 8 அ) வாலி-ஹிமேஷ் ஆ) வைரமுத்து-கமல் இ) வைரமுத்து-ஹிமேஷ் ஈ) வாலி-கமல் |
| 9 | மண்ணின் மைந்தர் பூவராகவன்! அவர் கூட இருப்பவர்களுக்கு எல்லாம் தண்ணி காட்டிய பின்னும், தான் மட்டும் சற்றும் அசையாத பாத்திரம். என்னை மிகவும் கவர்ந்த பாத்திரமும் கூட! (நீ என்ன பெரிய உலக நாயகனா-ன்னு அவரைக் கேட்கும் போது, "அட ஆமாண்டா"-ன்னு சொல்லிட்டு அவர் பேசும் வசனம் ஞாபகம் இருக்கா?) அவர் முதல் பெயர் (First Name) என்ன? (சாரி, நோ சாய்ஸ்!) | 9 வின்சென்ட் பூவராகவன் |
| 10 | கோவிந்த் சயன்டிஸ்ட்டும், இன்னும் பல சயன்டிஸ்ட்டுகளும் ஆபிசுக்கு உள்ளாறயே சைக்கிள் ஓட்டுறாங்க! (நாமளும் நம்ம பாஸ் கூப்பிடும் போது அப்படிப் போயி நின்னா எப்படி இருக்கும்?) நின்னுக்கிட்டு ஓட்டும் "அந்த" சைக்கிள் வகையறாவுக்கு என்ன பெயர்? | 10 அ) Scarpar(ஸ்கார்பார்) ஆ) Segway (செக்வே) இ) Wheelman (வீல்மேன்) ஈ) Glider(க்ளைடர்) |

என்னாங்க? எங்க ஓடுறீங்க?...மீண்டும் சினிமா தியேட்டருக்கா? அட! கேள்வி எல்லாம் அம்புட்டு கஷ்டமா என்ன?
இருங்க! ஈசியான ஆறுதல் கேள்வி ஒன்னு இருக்குல்ல!
*** ஜாக்கெட் போடாத அசின் அக்கா பேர் என்ன? - கோதை (ராதா)
ஜாக்கெட் போட்ட அசின் அக்கா பேரு என்ன?? *** ஆண்டாள்
(கரெக்டா சொல்றவங்களுக்கு கமல்-அசின் பேசிக் கொள்ளும் கடி-ஜோக்குகள் கேட்டதற்காகவே இலவச பர்னால் வழங்கப்படும் :-)
இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!
1 அ) ராதாபாய் ஆ) கிருஷ்ணம்மாள் இ) ஆண்டாள் ஈ) கிருஷ்ணவேணி |
2 அ) ஹிமேஷ் ரெஷாமியா ஆ) கமலஹாசன் இ) தேவி ஸ்ரீ பிரசாத் ஈ) பாபி தூத்துல் |
| 3 |
| 4 அ) சென்னை விமான நிலையம் ஆ) RAW இன்டலிஜென்ஸ் அலுவலகம் இ) கார்கோ விமானம் ஈ) Immigration(குடியுரிமை) கவுன்ட்டர் |
| 5 அ) Chaos Theory-Lava Effect ஆ) Chaos Theory-Butterfly effect இ) Tectonic Theory-Butterfly Effect ஈ) Quantum Theory-Lava Effect |
| 6 அ) 03:05 ஆ) 02:55 இ) 03:15 ஈ) 02:45 |
| 7 அ) வினு ஆ) அனு இ) சிம்பா ஈ) கபீஷ் |
| 8 அ) வாலி-ஹிமேஷ் ஆ) வைரமுத்து-கமல் இ) வைரமுத்து-ஹிமேஷ் ஈ) வாலி-கமல் |
| 9 |
| 10 அ) Scarpar(ஸ்கார்பார்) ஆ) Segway (செக்வே) இ) Wheelman (வீல்மேன்) ஈ) Glider(க்ளைடர்) |
Results of the Poll:







