Monday, September 24, 2007

ராமர் பாலமும், ராமானுசரும்!

ராமர் பாலத்தைப் பற்றிப் பலரும் பேசி விட்டார்கள்! ஆனால் அது பற்றி ராமன் பேச வேண்டாமா? இதோ! இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வு! இதைப் படிக்க வேண்டியவர் படிக்கட்டும்! பிடிக்க வேண்டியவர் பிடிக்கட்டும்!!

முன் குறிப்பு:
பாலம்-ராமானுசர்-அதை அவர் இடிக்கச் சொன்னாரா?-ன்னு "அந்தக்" கண்ணோட்டத்தில் மட்டும் தேடினா இந்தப் பதிவு அதற்குத் தீனி போடாது! :-)
பாலம் சம்பந்தமா ஆன்மீகத் தலைவர்கள் எப்படி நடந்து கொள்ளணும்? - அப்படின்னு தேடினா அப்போ நிச்சயம் புரியும்! :-))


மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர். கிராமம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்.
அழகிய இராமர் கோவில்! கோவில் மட்டுமா அழகு?
கோவிலுக்குள் குடியிருந்த இராமனும் கொள்ளை அழகு! வித்தியாசமான விக்ரகமும் கூட! தலையைச் சாய்த்தாற் போல், குறி பார்த்து பாணம் விடத் தயாராய் இருக்கும் இராமன்!
பொதுவா கூடவே சீதை, இலக்குவன், அனுமன்-மூவரும் இருப்பார்கள்.
இங்கு இன்னும் கூடச் சேர்ந்து சுக்ரீவன், அங்கதன் என்று காண்பதற்கு அரிய இராம விக்ரகம்!

அந்நியர் படையெடுப்பு! சூறையாடல்!
அகந்தையால் ஊரையும் கோவிலையும் அழித்தார்கள்! கிராம மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை!
இராமன் திருமேனியையாவது காப்பாற்றினால், அடுத்த தலைமுறைக்குத் தரலாம் அல்லவா? தூக்கிக் கொண்டு ஊர் ஊராய், அந்நியரின் கண்ணில் படாமல் ஓடினார்கள்! கடைசியில் வந்து சேர்ந்த இடம் திருமலை திருப்பதி அடிவாரம்!

அந்த சமயத்தில், அங்கு பாடம் பயின்று கொண்டிருந்தார் ஒரு பிரபல மதத்தலைவர்!
என்ன பாடம்? இராமாயணப் பாடம்!
பாடம் நடத்தியவர் பெயர் திருமலை நம்பி. பாடம் கேட்டவர் பெயர் இராமானுசர்!
அப்போது இராமானுசர் செம பாப்புலர் ஆகியிருந்த நேரம். அவர் பேச்சுக்கு மறுப்பேது? "உம்" என்று சொல்லும் முன் உருண்டோடி வரக்கூடிய தொண்டர் படை எல்லாம் அவருக்கு அமைந்து வி்ட்டது! அவரை விட வயதில் பெரியவர்களுக்கு எல்லாம் அவர் தலைவர்!

அன்று இராமாயணப் பாடத்தில், வீடணன் அடைக்கலப் படலம்!
சுக்ரீவன் எதிரியைச் சேர்க்க வேண்டாம் என்று சொல்ல, அனுமனோ சேர்க்கலாம் என்று சொல்ல, அங்கதன் வானத்தில் வீடணனைக் கைகாட்ட....
அதே நேரம் பார்த்து நம்ம மதுரை மக்கள், சிலைகளை எல்லாம் தூக்கிகிட்டு ஓடீயாறாங்க!
இராமானுசரை அங்கு கண்டதும் பணிந்து வணக்கம் சொல்லினர். அவருக்கோ உற்சாகம் கொள்ளவில்லை!
சுக்ரீவன் மறுத்துரைக்கும் படலம் கேட்கும் தருணத்தில், இப்படி சுக்ரீவனோடு, அங்கதனோடு, அனுமனோடு, இராமன் திருவுருவம் வந்து சேர்கிறதே!


திருமலையில் இராமன்

அனுமன்


சாமீ...எப்படியாச்சும் எங்க ஊருக்கு வந்து, கோவிலை மீண்டும் கட்டித் தர வேணுமுங்கோ!
இந்த இராமன் சிலையை திருப்பி வைக்க வேணுமுங்கோ!
நீங்க பெரிய மகான்! நீங்க மனசு வச்சா முடியாதது இல்ல!
நீங்க சொன்னா ராசா, அப்பறம் அந்த நவாப் கூடக் கேப்பாருங்க சாமீ!

சரி ஜனங்களே, ஆவன செய்யலாம்! மதச் சண்டைகள் மிகுந்து இப்படி நம் இராமன் ஊர் ஊராய் அல்லாடும் படி ஆகி விட்டதே! என்று கவலையுற்றார். உபவாசம் இருந்தார்.
(யார் அங்கே, நவாப்பை மாறு கால், மாறு கை வாங்கு என்றெல்லாம் சவடால் விட, பாவம் அவருக்குத் தெரியவில்லை :-)

நிலைமையைப் பார்த்து வரத் தன் சீடர்களை ஊருக்கு அனுப்பினார்!
அவர்கள் திரும்பி வந்து, "குருவே! கோவில் இப்போ இருந்த இடம், தடம் தெரியாமல் ஆகி விட்டது! அந்நியர்கள் அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள்! படை திரட்டி அப்போதே தடுத்திருக்க வேண்டும்! இப்போது காலம் கடந்து விட்டது!
அங்கே ஊர்ச் சந்தை ஏற்பட்டு, மக்கள் வணிக மண்டலமாக மாறி விட்டது, ஆசார்யரே!" என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார்கள்!

யோசித்தார் இராமானுசர். சந்தையை இடிக்கச் சொல்லி, மறுபடியும் ஆலயம் கட்டலாமா?
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்! - இந்த "ராமா" என்னும் ரெண்டு எழுத்துக்குச் சந்தையைக் கொடுக்கட்டுமே!
- சந்தையைக் கொடுக்காவிட்டால் சண்டை போடுவோமா? இல்லை சாபம் கொடுப்போமா? இல்லை அடித்து நொறுக்குவோமா?

மதுரைக் கிராமத்து மக்களே! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்!
உங்க ஊர் பேரே எனக்கு மறந்து போச்சு! அவ்வளவு சின்ன ஊர்! நம் இராமனை மீண்டும் அங்கே வைக்கலாம் தான்! ஊருக்குப் பொதுவான சந்தையை இடித்து விட்டுச் சிலை வைக்க வேண்டும் என்று அரசனிடம் சொல்ல என்னால் முடியும்!

ஆனால், அரசனையும் அரசியலையும் நம்பி சமயம் வளர்ப்பது மிகவும் கொடுமை! மக்கள் மனத்தில் தான் சமயம் வளரவேண்டுமே தவிர, அரசியலை நம்பி அல்ல!
சமயம்-ன்னா என்ன? சமைத்தல் தான் சமயம்!
அரிசியைச் சமைத்தால், அது பக்குவப்பட்டு, குழைந்து சாதம் ஆகும்!
அது போல் வைணவ சமயம் நம்மை எல்லாம் சமைக்க வேண்டும்! பக்குவப்படுத்த வேண்டும்!


ராமானுசர்


அறிந்தோ அறியாமலோ இவ்வாறு ஆகி விட்டது! ஊரையும் சந்தையையும் இடிக்க வேண்டாம்! அது பொது மக்கள் பயன்பாடு ஆகி விட்டது! வேண்டுமானால் ஒன்று செய்யலாம்!
இந்த விக்ரகங்களைக் கலியுக வைகுந்தம் என்று போற்றப்படும் திருமலையில் அடியேன் ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்கிறேன்! திருமலையில் திருவேங்கடமுடையான் கருவறையிலேயே இந்தச் சிலைகளை வைத்து விடலாம்!

எங்கோ ஊர் பேர் தெரியாது இருந்த இந்த அழகு விக்ரகம், இனி சகலரும் அறியுமாறு, புகழ் பெற்ற திருப்பதி மலையில் இருந்து அருள் பாலிக்கட்டும்! அர்ச்சகர்களையும் மற்றவர்களையும் இதற்கு ஒத்துக் கொள்ள வைப்பது என் பாடு!
ஆனால் அதற்கு முன் நீங்கள் நான் சொல்வதை ஒப்புக் கொள்கிறீகளா?
மக்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
ஒரு புறம் தங்கள் ஊர் இராமனைப் பிரிய வேண்டுமே என்ற கலக்கம்! இன்னொரு புறம் திருவேங்கட மலையில் இராமன் இருக்கப் போவதை எண்ணி ஆனந்தம்! - இராமானுசர் பேச்சைக் கேட்டனர்!
வில்லாளி இராமனை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை! விளங்கக் கொடுத்தனர்!
இடையில் வந்த விக்ரகத்தை, இடையறாது வழிபட ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்தார் அண்ணல் இராமானுசர்!

இன்றும் திருமலையில் இராமன் திருக்கோலத்தைக் கருவறைக்குள் செல்லும் வழியில் காணலாம்!
இராமர் மேடை என்றே அதற்குப் பெயர்.
எங்கிருந்தோ வந்த இராமன், இன்று நீங்காது நிற்கிறான்!

இராமானுசர் நினைத்திருந்தால், அரசியல் செய்திருக்கலாம் = இப்போது பாலத்தில் செய்வது போல!
அரசனிடம் தன் செல்வாக்கைக் காட்டி, ஊர்ச்சொத்தை இடித்து விட்டு இன்னொரு ஆலயம் எழுப்பி இருக்கலாம்!
மக்கள் கேட்கா விட்டாலோ, தன் தொண்டர் படையை ஏவி விட்டிருக்கலாம்! = இப்போதைய கல்வீச்சு கலாட்டா போல!

ஊரே கூச்சலில் மூழ்கியிருக்க, கலங்கிய குட்டையில் மீன் பிடித்து இருக்கலாம்! அறிக்கைப் போர் நடத்தி இருக்கலாம்! = நீ என்ன பாலம் கட்டும் இன்ஜினியரா / தப்பாப் பேசும் நாவை அறுத்துக்கிட்டு வாங்கடா! என்று இப்போது இரு தரப்பும் பேசிக் கொள்வது போல!
இப்படி எல்லாம் செய்திருந்தால், ஒரு அஞ்சு வருடத்துக்குள் மறுபடியும் அந்தக் கோவில் கட்டி, பத்தோடு பதினொன்னா போயிருக்கும்!
ஆனால் இராம நாமமும், வைணவமும் இந்தத் தலைமுறை வரை தழைத்திருக்குமோ?

துலாபாரம் என்று எடைக்கு எடை வெல்லமும் சர்க்கரையும் தருவார்கள், குழந்தையின் நேர்த்திக் கடனுக்கு! தலையை வெட்டிக் கொண்டு வந்தால் எடைக்கு எடை தங்கம் என்று ஆன்மீகம் பேசவே பேசாது!
ஆக்கத் தான் எடைக்கு எடை! அழிக்க அல்ல!
இதை மதத் தலைவர்கள் மனத்தில் இருத்த வேண்டும்! மதத் தலைவர்கள் என்று கூறிக் கொள்வோரும், மதம் காக்கப் புறப்பட்டவர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்!
இராமானுசர் சமயத்தைக் கட்டிக் காத்து நமக்குத் தந்தது போல், தம்மால் தர முடியுமா என்று அவரவர் மனசாட்சியைக் கேட்கட்டும்!

இராமனை உணர்ந்தவர் இராமானுசர்!
இராமனையும் இராமானுசரையும் உணர்ந்தவர் யாரோ?References:
1. திருமலைக் கோவில் ஒழுகு
2. அனந்தாழ்வான் அருளிய வேங்கடாசல இதிகாச மாலை

49 comments:

 1. என்ன சொல்ல வறீங்கனே புரியல :-(

  இதுல எங்க ராமர் பாலம் வருது?

  ReplyDelete
 2. சண்டை போட்டு உண்மையிலேயே மண்டைகள் உருளும் நிலயில்,உஙகள் பதிப்பு மிகவும் நெகிழ்சியாக இருந்தது.

  ராமனுக்காக வாதிடுபவர்களெல்லாம் சிறிதளவேனும் அவனுடய குணங்கககளைப்பெறாமல் இப்படியா தீய வார்த்தைகள் பேசுவார்கள்?

  ராமன் இருந்தது உண்மையோ தெரியாது,ஆனால் ராமாயணம் சொல்வதெல்லாம் நந்னெறியே அன்றி வேறு ஒன்றும் இல்லயே?

  ReplyDelete
 3. இந்த இடுகையை யாராவது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தர முடியுமா? ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின் மின்னஞ்சல்களிலும் ஆங்கில வலைப்பதிவுகளிலும் இந்த இடுகையை இடலாம். வேண்டுமானால் இதனை 20 பேருக்கு அனுப்பினால் இராமனின் அருள் பூரணமாகக் கிடைக்கும் என்று கூட இறுதியில் சொல்லலாம். இந்தச் செய்தி தான் இராம பக்தர்கள் என்று சொல்லிக் கொண்டு அழிவினைத் தூண்டும் மத அரசியல்வாதிகளும் அவர்கள் தொண்டர்களும் படிக்க வேண்டியது; சிந்திக்க வேண்டியது.

  ReplyDelete
 4. இரவிசங்கர். இராமானுஜரின் தெய்வீகத் திருச்செயல்கள் எவ்வளவோ கேட்டிருந்தும் இந்த நிகழ்ச்சியை இப்போது தான் கேட்டறிகிறேன். இராமானுஜரின் 'காரியம் பெரிது நமக்கு; வீரியம் பெரிதில்லை' என்ற செய்தியும் அவர் எப்படி எல்லோருக்கும் (பார்ப்பனருக்கோ மேல்சாதியினருக்கோ மட்டுமில்லை - எல்லோருக்கும்) எப்படி உகந்த ஆசாரியர் ஆனார் என்பதற்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகளே அடிப்படை.

  இந்தத் தலை சாய்த்த இராமபிரானின் திருவுருவத்தை இப்போது தான் முதன்முதலில் தரிசிக்கிறேன். திருமலையில் இருக்கும் பெருமான் இவர்தானே. இப்போது புரிகிறது ஏன் சுப்ரபாதம் 'கௌசல்யா சுப்ரஜா இராம' என்று தொடங்குகிறது என்று. எங்கள் ஊர் இராமபிரானை அல்லவா எழுப்புகிறது அந்தத் தொடக்க வரிகள்.

  மக்கள் மனத்தில் அன்பை ஊட்ட வேண்டிய சமயத்தை அரசியல் காரணங்களுக்காக வெறுப்பை ஊட்ட இந்த மத அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்களே. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று தொலைக்காட்சியில் பார்க்கும் போது ஏற்பட்டக் கலக்கம் மீண்டும் இப்போது ஏற்படுகிறது. இராமா! எங்கள் திருநாட்டை என்ன செய்யத் திருவுளம் கொண்டிருக்கிறாய்?

  ReplyDelete
 5. மனிதனை மாக்களாக்குவது சமயம் அன்று.வாழ்வை நெறிபடுத்தி அனைவரும் நல்ல முறையில் வாழ வழி
  வகுக்கவே மதங்கள்.
  சமய பிணக்கினால் மனிதன் ஒருவரை ஒருவர் சாடுவதும் ஒருவரின் நம்பிக்கைகள இழிவுபடுத்துவதும்,ஏற்புடைய நெறியன்று.
  ஆனால் ராமர் பாவம்.
  அவரின் அவதாரம் ராசி போலும்.ராமாயாணக் காலத்திலிருந்தே சர்ச்சைகளும்,சங்கடங்களும் அவருக்கு ஒன்றும் புதிது அல்லவே..

  //துலாபாரம் என்று எடைக்கு எடை வெல்லமும் சர்க்கரையும் தருவார்கள், குழந்தையின் நேர்த்திக் கடனுக்கு!
  ஆக்கத் தான் எடைக்கு எடை! அழிக்க அல்ல!
  இதை மதத் தலைவர்கள் மனத்தில் இருத்த வேண்டும்! மதத் தலைவர்கள் என்று கூறிக் கொள்வோரும், மதம் காக்கப் புறப்பட்டவர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்!
  இராமானுசர் சமயத்தைக் கட்டிக் காத்து நமக்குத் தந்தது போல், தம்மால் தர முடியுமா என்று அவரவர் மனசாட்சியைக் கேட்கட்டும்//
  யார்தாம் உணர்வர் இதை.

  ReplyDelete
 6. நெக்குருகும் படைப்பு.

  உங்களுக்கு நன்றிகள் பல

  ஸ்ரீராமஜெயம்

  ReplyDelete
 7. இப்போதைய காலசூழலுக்கு ஏற்ற பதிவுதான்!!
  சுவாரஸ்யமான மற்றும் கருத்தாழம் மிக்க நிகழ்வு!!

  உங்களுக்கே உரித்தான சுவையான நடையில் பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி!! :-)

  ReplyDelete
 8. பதிவும், நடந்த கதையும் அழகுன்னா அந்த ராமர் விக்கிரகமும், ஹனுமனும் கொள்ளை அழகு.

  ஆமாம்.....இதுலே 'பாலம்' எங்கே வந்துச்சு?

  ReplyDelete
 9. ஓஹோ! திருமலை ராமருக்கு இப்படி ஒரு தலப்புராணமா? கேள்விப்பட்டதில்லை.
  ராமரின் தலைச்சாய்வு வித்தியாசமாக/அழகாக இருக்கு.

  ReplyDelete
 10. //வெட்டிப்பயல் said...
  என்ன சொல்ல வறீங்கனே புரியல :-(//

  ஹிஹி, சரி பாலத்தை விடுங்க! கதையும் அது சொல்லும் கருத்தும் புரிஞ்சுச்சா பாலாஜி?

  //இதுல எங்க ராமர் பாலம் வருது?//

  இந்தக் கதை ராமர் பாலத்தைக் கையிலும் வாயிலும் எடுத்து குதறுபவர்கள் உணர்வதற்காகச் சொல்லப்பட்ட கதை!

  வன்முறைகள் இன்றி, சமயம் எப்படி வளர்த்தார்கள்! இப்போது வன்முறைப் பேச்சுகள் எல்லாம் எப்படி இருக்குன்னு காட்டுவதற்காகச் சொன்னேன்!

  மற்ற பின்னூட்டங்களையும் பாருங்க! பல பேர் புரிஞ்சிக்கிட்டு இருக்காங்க!

  பாலம்-ராமானுசர்-இடிக்கச் சொன்னாரா?-ன்னு அந்தக் கண்ணோட்டத்தில் மட்டும் தேடினா புரியாது தான்!

  பாலம் சம்பந்தமா ஆன்மீகத் தலைவர்கள் எப்படி நடந்து கொள்ளணும்? - அப்படின்னு தேடினா புரியும்! :-))

  ReplyDelete
 11. அனுமன் கொள்ளை அழகு...

  தினமும் திருஷ்டி சுத்தி போடனும்...

  ReplyDelete
 12. பாலாஜி புரியலை-ன்னு சும்மா எல்லாம் சொல்ல மாட்டார்!

  அதனால் பதிவைச் சற்றே திருத்தி, இன்னும் வெளிப்படையாக தற்காலத்து ராமர் பாலம் சர்ச்சையும் -அதை இராமானுசர் எப்படி கையாண்டிருப்பார் என்பதையும் இன்னும் சிறிதளவு பதிவில் பேசியுள்ளேன்!

  பார்த்துச் சொல்லுங்கள் பாலாஜி!

  ReplyDelete
 13. ஆனால் கண்ணா,நான் முன்,பின் குறிப்பின்றி மிக நேர்த்தியாக புரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 14. Ravi
  Atimely post.Pinkuripu illamale purigiradu.

  "(யார் அங்கே, நவாப்பை மாறு கால், மாறு கை வாங்கு என்றெல்லாம் சவடால் விட, பாவம் அவருக்குத் தெரியவில்லை :-)"
  Nachnu irukku :)
  Theriyada vivarangal therindu konden, Nandri

  ReplyDelete
 15. நண்ப !!
  ஒரு இனம் புரியாத கவலை மனதை அரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் - ஒரு ஆறுதலாக - மகான் ராமானுசரைப் பற்றியும் மதுரை ராமரைப் பற்றியும் ஒரு அருமையான பதிவு - அந்த மனத்தெளிவும் துணிவும் இக்கால உண்மையான ஆத்திகர்களுக்கே குறைவாக இருக்கிறது. அரசியல் மிகுந்த ஆத்திகம் - ஒன்றும் சொல்வதற்கில்லை

  ReplyDelete
 16. //அரசனையும் அரசியலையும் நம்பி சமயம் வளர்ப்பது மிகவும் கொடுமை! மக்கள் மனத்தில் தான் சமயம் வளரவேண்டுமே தவிர, அரசியலை நம்பி அல்ல!//

  எல்லா ஆன்மிக அன்பர்களும் மனத்திருத்திக் கொள்ள வேண்டிய வார்த்தைகள். உண்மையான பக்தனுக்கு வளர்க்க எல்லாம் தெரியாது... யார் வளர்க்க கிளம்புகிறார்களோ அங்கு தவறுகளும் உடன் கிளம்பும் களைகளாக.  /இந்தச் செய்தி தான் இராம பக்தர்கள் என்று சொல்லிக் கொண்டு அழிவினைத் தூண்டும் மத அரசியல்வாதிகளும் அவர்கள் தொண்டர்களும் படிக்க வேண்டியது; சிந்திக்க வேண்டியது. /

  உண்மை குமரன், ஆனால் இவங்க இதெல்லாம் படிப்பாங்கன்னு நினைக்கறீங்க?.....
  இந்த மதத்தை ஒழுங்கா படித்து தெரிந்து கொள்ளாததால் தானே இப்படியெல்லாம் பேசுகிறார்கள்?

  ReplyDelete
 17. தெரியாத செய்தி, அறிய தந்தமைக்கு நன்றி கே.ஆர்.ஸ்..

  ReplyDelete
 18. நல்லதொரு தகவல். இதைத்தான் ஒரு பதிவில் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன். உண்மையான அன்பு...தன் தலையைக் கொடுக்கும். இல்லையென்றால் அடுத்தவர் தலையைத் தானே எடுக்கும். போய் வெட்டு குத்துன்னு தண்டோரா போடாது.

  நீங்கள் குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வு ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு பாடம். அட்டூழியம் செய்றவங்க ஆன்மீகவாதிகள் அல்லர். அரசியல்வாதிகள்.

  ReplyDelete
 19. Hai K.R.S,

  சூப்பர். தெரியாத புது செய்தி. ஆனாலும் அதுல நீங்க சொல்லியிருக்கற காலம் மக்கள் பெரியவங்க சொல்லுக்கும் மதத் தலைவருக்கும் மரியாதை கொடுக்கும் காலம்.

  ஆனா இது, அதே மதத்தையும் தலவர்களும் சுயநலத்துக்காக கடவுளை எப்படி வேனாலும் நடத்துற காலம் இல்லையா? இவங்களுக்கு இப்படியெல்லாம் சொன்னா புரியுமா தலவரே...

  ReplyDelete
 20. நல்ல படைப்பு.

  ராமானுஜர் மாதிரி நடந்துக்கலாம்னு அவங்களுக்கும் தெரியும். அது நாட்டுக்கு ரொம்ப நல்லதுன்னு நல்லாவே தெரியும். இதெல்லாம் தெரிஞ்சும் அவங்க மோசமா நடந்துக்க பணம், பதவி, பலம் இப்படின்னு பல ஆசைகள் காரணங்களா இருக்கே..

  அவங்க போடுறது வேஷம்னு அவங்களுக்கே தெரியுமே. தூங்கறவங்களை எழுப்ப முடியும். தூங்கற மாதிரி நடிக்கறவங்களை???

  ReplyDelete
 21. அன்பின் கேஆரெஸ்,

  ராமானுஜர் சரிதத்தில் வருகிற வேங்கட ராமனைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறீர்கள். நல்லது.

  ஆனால், ராமானுசர் இப்படிச் செய்தாரா அப்படி செய்தாரா என்று கேட்டிருக்கும் கேள்விகள் பக்குவம் இல்லாததாகவும், சரித்திரம் பற்றிய அறியாமையாலும் எழுந்தவை போலத் தோன்றுகின்றன.

  அந்தக் கட்டத்தில், அந்த இடத்தில் ஸ்ரீராமானுஜர் ஆபத்துக் கால தர்மத்தின் படி ஒரு யோசனையை வழங்கியிருக்கிறார் என்றே இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆசாரியார்களுடைய சகல செய்கைகளையும் நாம் எப்படி பொதுமைப் படுத்த முடியும்?

  வீர கிருஷ்ணதேவராயர், வீர சிவாஜி மற்றும் அவர்களது சைன்யங்கள் போராடியிருந்திராவிட்டால் இன்று நாம் ராமானுஜரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கவே முடிந்திருக்குமா என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!

  ஸ்ரீரங்கத்தை உலூக்கான் படைகள் சூறையாடுகையில் நகர மக்கள் வீரத்துடன் போரிடவும், அரங்கன் திருவுருவம் மறைத்துக் கொண்டுசெல்லப் படவும் ஆணையிட்டவர் யார்? ராமானுஜரது சீடர் மரபில் வந்த பிள்ளை லோகாசாரியார் தானே? பிறகு வீர கம்பண உடையார் மதுரை வரை சென்று மாலிக்காபூர் விட்டுச் சென்ற துருக்கப் படைகளை வென்று அரங்கனை அவனது இருப்பிடத்திலேயே ஸ்தாபித்த வீர வரலாறை மறந்து விட்டீர்களா? பயந்து போய் அரங்கன் ஒளிந்து கொண்டே ஏதாவது ஊரில் இருக்கட்டும் என்றா வைணவ ஆசாரியர்கள் அறிவுறுத்தினார்கள்? எண்ணிப் பாருங்கள்.

  ராம சேது பிரசினை பற்றியும், ஸ்ரீராமன் பற்றி தமிழகத்தின் சாபக்கேடுகள் கூறும் அபத்தங்கள் பற்றியும் எந்த ஒரு பார்வையும் அளிக்காமல் எல்லாத் தரப்புகளையும் ஒரேயடியில் அடித்து குட்டையைக் குழப்புகிறீர்கள்.

  இது பற்றிய எனது மற்றும் அரவிந்தனின் இந்த பதிவுகளைப் படிக்குமாறு வேண்டுகிறேன் -

  http://jataayu.blogspot.com/2007/09/rama-sethu-sacred-geography-and.html

  http://jataayu.blogspot.com/2007/09/blog-post.html

  http://arvindneela.blogspot.com/2007/09/blog-post.html

  அன்புடன்,
  ஜடாயு

  ReplyDelete
 22. pleasure in the mind
  and the joy in the heart .. thks

  ReplyDelete
 23. உங்களோட ஆதங்கம் புரிகிறது. ஆனால் அடிப்படையே சரியில்லையோனும் தோணுது! சரியான முறையில் ராமாயணமோ, மகாபாரதமோ யாரும் படிக்கலையோனும் தோணுது! :(((((((((((((((((

  ReplyDelete
 24. நான் அறிந்திராத செய்தி. அருமையான பதிவுக்கு நன்றி.

  //நல்லதொரு தகவல். இதைத்தான் ஒரு பதிவில் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன். உண்மையான அன்பு...தன் தலையைக் கொடுக்கும். இல்லையென்றால் அடுத்தவர் தலையைத் தானே எடுக்கும். போய் வெட்டு குத்துன்னு தண்டோரா போடாது.//

  ஆமாம். 'இராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார், என்று சொல்லியதைக் கண்டித்துப் போடப்பட்ட பதிவில். அதற்கான எதிர்வினையைக் கண்டித்து இவர் இவ்வாறு சொல்லியிருந்தார்.

  ReplyDelete
 25. //குமரன் (Kumaran) said...
  இந்த இடுகையை யாராவது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தர முடியுமா?
  //

  Kumaran
  If somebody comes forward, I would be happy too!
  If there are no takers, I will squeeze in some time this weekend.

  ReplyDelete
 26. //ஜடாயு said...
  ராமானுஜர் சரிதத்தில் வருகிற வேங்கட ராமனைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறீர்கள். நல்லது.//

  வாங்க ஜடாயு சார்! நலமா?

  //ஆசாரியார்களுடைய சகல செய்கைகளையும் நாம் எப்படி பொதுமைப் படுத்த முடியும்?//

  பொதுமைப்படுத்த வில்லை ஜடாயு சார்! ஆசார்யர்களுடைய approach எப்படி இருந்தது என்பதைத் தான் சுட்டிக் காட்டினேன்!

  இந்தப் பதிவில் ராமர் பாலத்தின் வரலாற்றுத் தன்மை பற்றியோ, அதைத் தாராளமாக இடிக்கலாம் என்றோ, நான் துளியும் சொல்லவில்லை! மிகுந்த ஆராய்ச்சிக்குரிய விஷயம் அது!

  நான் சொல்ல வந்தது, ஆன்மீகவாதிகள் இந்தப் பிரச்னையை எப்படி சாத்வீக முறையில் கையாள வேண்டும் என்பதையே!

  சேதுக்கரையில் இருந்து பாலம் துவங்கப்பட்டதாகச் சொல்லப்படுவதும், தனுஷ்கோடியில் வில்லேற்றிப் பாலத்தை ராமனே மூழ்கடித்ததாகச் சொல்லப்படுவதும் எல்லாம் தனியாக ஆராய வேண்டும்!
  வால்மீகியிலும் கம்பனிலும் பாலம் மூழ்கடிக்கப்படவில்லை! திரும்பும் வழியில் ராமன் சீதைக்கு விமானத்தில் இருந்து பாலத்தைக் காட்டுகிறான்!

  பாலத்துக்கு என்று தற்போது வழிபாடுகள் எதுவும் கிடையாது! இருப்பினும் அது உண்மையாலுமே நினைவுச் சின்னம் என்று நிரூபிக்கப்பட எத்தனையோ வழிமுறைகள் இருக்கு! நீதிமன்றம், பன்னாட்டுக் ஆய்வுக் குழு என்று பல வழிகள்!

  போதாக்குறைக்கு இயற்கைச் சீற்றம், பவழப்பாறைகள் பிரச்சனை வேறு!
  Re-alignment என்று மாற்று வழியையும் பேசுகிறார்கள். இதில் இவ்வளவு சிக்கல் இருக்கு!

  அப்படி இருக்க, இன்னும் தீவிரவாதமாகப் பேசிப் பேசி, கல்லு முடிச்சு போல் போடலாமா? ஒவ்வொரு சிக்கலாய் விடுவிக்க அல்லவா முயல வேண்டும்! அவர்கள் செய்தார்களா என்று கேட்பதற்குப் பதில், ஆன்மீக அன்பர்கள் இதற்கு ஆக்கப்பூர்வமான வழிகளை நாடலாம்! - ராமானுசரைப் போல!

  ReplyDelete
 27. //வீர கிருஷ்ணதேவராயர், வீர சிவாஜி மற்றும் அவர்களது சைன்யங்கள் போராடியிருந்திராவிட்டால் இன்று நாம் ராமானுஜரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கவே முடிந்திருக்குமா//

  சிவாஜியும், ராயரும் ஆயுதம் ஏந்திப் போராடிய காலகட்டம் வேறு!
  அன்று தர்மம் காக்க வன்முறை வீரலட்சணம்! - ராமதாசர் குருவாய் இருந்தும் அறிவுறுத்தினார்!
  ஆனால் இன்றைய காலகட்டத்தில் வன்முறை என்பதே இல்லாமல், அறப் போராட்டங்கள் தான் நெறிமுறை என்று ஆனபின்...ஆன்மிகத் தலைவர்கள் வன்முறை பேசுதல் அழகல்லவே!

  //பிறகு வீர கம்பண உடையார் மதுரை வரை சென்று மாலிக்காபூர் விட்டுச் சென்ற துருக்கப் படைகளை வென்று அரங்கனை அவனது இருப்பிடத்திலேயே ஸ்தாபித்த வீர வரலாறை மறந்து விட்டீர்களா?//

  மறக்க முடியுமா? கண்ணீர் பெருகிடாதா? ஆனால் முன்பே சொன்னது தான்! யுகதர்மம், காலகட்டம் வேறு!
  சமயம் காக்க, சமயத்துக்கு ஏற்றவாறும் தொண்டாற்ற வேண்டும்! அதுவே நான் குறிப்பிடுவது!

  //பயந்து போய் அரங்கன் ஒளிந்து கொண்டே ஏதாவது ஊரில் இருக்கட்டும் என்றா வைணவ ஆசாரியர்கள் அறிவுறுத்தினார்கள்? எண்ணிப் பாருங்கள்//

  அரங்கன் ஊர் ஊராய்ச் சுற்றினாலும், அரங்கத்துக்கே மீண்டும் எழுந்தருள வேண்டும் என்பதில் மார்றுக் கருத்து இல்லையே! ஆனால் அது வரை சமுதாயம் பற்றி எரியுமாறு நாளொரு வன்முறைப் பேச்சு, வீண் சண்டை என்று சமூக ஒழுங்கைக் குலைக்கவில்லையே அவர்கள்!

  முடிந்த போது எதிரிப்படைகளுடன் நேரடியாகப் போராடினார்கள்!
  முடியாது போது பொறுமை காத்தார்கள்! அரங்கனும் எதிரிகள் மாண்ட பின் வெற்றிகரமாக ஏகினான்!

  //ராம சேது பிரசினை பற்றியும், ஸ்ரீராமன் பற்றி தமிழகத்தின் சாபக்கேடுகள் கூறும் அபத்தங்கள் பற்றியும் எந்த ஒரு பார்வையும் அளிக்காமல்//

  அது பற்றி அறிஞர்களும் நீங்களும் கூட விளக்கமான பதிவு போட்டிருக்கீங்களே!
  என் பதிவு ஆன்மிகத் தலைவர்களின் நடத்தை கண்டு, பொதுவான மக்களும் ச்சீ என்று ஒதுக்கி விடாமல் இருக்க வேண்டும் என்ற உந்துதலால் போட்டது தான்! மற்றபடி ராமர் பாலத்தைக் கண்ணை மூடிக் கொண்டு தாரை வார்த்து விடுங்கள் என்று சொல்லவில்லை! நியாயமாகப் போராடி, பொதுமக்கள் ஆதரவோடு பெறுங்கள் என்பது தான்!

  //இது பற்றிய எனது மற்றும் அரவிந்தனின் இந்த பதிவுகளைப் படிக்குமாறு வேண்டுகிறேன் //

  அரவிந்தனின் கட்டுரையை முன்பே படித்தேன். உங்கள் பதிவையும் இதோ படிக்கிறேன்!

  ReplyDelete
 28. //cgs said...
  சண்டை போட்டு உண்மையிலேயே மண்டைகள் உருளும் நிலயில்,உஙகள் பதிப்பு மிகவும் நெகிழ்சியாக இருந்தது.//

  வாங்க cgs! ஆன்மிக நோக்கம் கொண்ட அன்பர்கள் ஆத்திரத்தில் மனம் கலையாது, யோசித்துப் பார்க்கவே இந்தப் பதிவை இட்டேன்!

  //ராமனுக்காக வாதிடுபவர்களெல்லாம் சிறிதளவேனும் அவனுடய குணங்கககளைப் பெறாமல்//

  ஆத்திரம் (சில சமயம் நியாயமான ஆத்திரமாகவே இருந்தாலும் கூட) கண்ணை மறைக்கும்... :-)

  ReplyDelete
 29. //குமரன் (Kumaran) said...
  இராமானுஜரின் ... எப்படி எல்லோருக்கும் (பார்ப்பனருக்கோ மேல்சாதியினருக்கோ மட்டுமில்லை - எல்லோருக்கும்) எப்படி உகந்த ஆசாரியர் ஆனார் என்பதற்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகளே அடிப்படை//

  உண்மை தான் குமரன். அவரைப் போன்று ஒரு தொலைநோக்குள்ள ஆன்மிகப் பெரியவர் தான் இப்போதைய காலத்தின் கட்டாயமாகக் கூட இருக்கலாம். பல மாயாவாதங்கள், தாய்மொழிக்கு கோவில்களில் மதிப்பின்மை, சமூக ஏற்றத்தாழ்வு, அதைச் சொல்லியே அரசியல் என்று எல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போகும்!

  //இந்தத் தலை சாய்த்த இராமபிரானின் திருவுருவத்தை இப்போது தான் முதன்முதலில் தரிசிக்கிறேன்.//

  இன்னொரு படமும் அப்பறம் சேர்த்தேன். பாருங்க!

  //எங்கள் ஊர் இராமபிரானை அல்லவா எழுப்புகிறது அந்தத் தொடக்க வரிகள்//

  ஆமா, ஒங்க ஊரே தான்! நீங்க விட்டுக் கொடுத்தவன் தான் இன்று திருமலையில் காட்சி கொடுக்கிறான்!:-)

  ReplyDelete
 30. //ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...
  ஆனால் ராமர் பாவம்.
  அவரின் அவதாரம் ராசி போலும்.ராமாயாணக் காலத்திலிருந்தே சர்ச்சைகளும்,சங்கடங்களும் அவருக்கு ஒன்றும் புதிது அல்லவே..//

  ஹிஹி! ஆமாங்க புஷ்பலதா!
  ராமனால் பல ஆண்களுக்குத் தர்மசங்கடம்! அதான் பல பேருக்கு பரிசுத்தமான குணத்தானைப் பிடிக்காமல் போகிறது! :-)
  ஆனால் இலக்கியங்கள் அவனை மனித குணங்கள் கொண்ட புருஷர்களில் உத்தமன் =புருஷோத்தமன் என்றே பேசுகிறது!

  ReplyDelete
 31. //எழில் said...
  நெக்குருகும் படைப்பு.//

  நன்றி எழில்! ஸ்ரீ ராம ஜெயம்!

  //CVR said...
  இப்போதைய காலசூழலுக்கு ஏற்ற பதிவுதான்!!//

  ஆமாம் CVR! கருத்தாழம் மிக்க நிகழ்வு தான்!! Lead by Example என்பது தான் சமயத்தின் வெற்றி!
  முதலில் இ.வாய்த்தனமாகத் தோனும்!

  ஆனால் ரோம, கிரேக்க கடவுளர் எல்லாம் போன பின்னாலும் இன்றும் நம் சமயம் மட்டும் உறுதியாய் நிற்கிறதுன்னா அதுக்குத் தத்துவம் மட்டும் காரணமல்ல! இந்த பரம காருண்யமே மூலாதாரம்!

  ReplyDelete
 32. //துளசி கோபால் said...
  பதிவும், நடந்த கதையும் அழகுன்னா அந்த ராமர் விக்கிரகமும், ஹனுமனும் கொள்ளை அழகு//

  ஆமாங்க டீச்சர்! வித்தியாசமான தலைசாய்ப்பு!

  //ஆமாம்.....இதுலே 'பாலம்' எங்கே வந்துச்சு?//

  பதில் சொல்லிட்டேன், பாருங்க டீச்சர்!

  //வடுவூர் குமார் said...
  ராமரின் தலைச்சாய்வு வித்தியாசமாக/அழகாக இருக்கு.//

  கொள்ளை அழகு குமார் சார்!
  வடுவூர் ராமன் ஒரு அழகுன்னா...இந்தத் தலை சாய்ப்பு ராமன் இன்னொரு அழகு!

  ReplyDelete
 33. கதையைச் சொல்ல வ்ந்த இடத்தில் கருத்தையும் கவனமாக சொன்னதற்கு ந்ன்றி.

  ReplyDelete
 34. ஆன்மிகம் அரசியலாவது நல்லதுக்கில்லை.ஆன்மிகம் மனதை சுத்தப்படுத்த வேன்டும் . ஆறுதல் படுத்த வேன்டும். ஆன்மீகத்தையே வைத்து எப்பவும் வன்முறை செய்வது நமது நாட்டில் வழக்கமாகி விட்டது. அவர்களை அந்த ராமாயணம் படிக்கவைத்து மூளைச்சலவைதான் செய்ய வேண்டும்.

  ReplyDelete
 35. 150-year dream for 150-year old ships
  By Swaminathan S. Anklesaria Aiyar

  Religion and history do not mix well. I shrug my shoulders at those opposing the Sethusamunda-ram canal because it will damage the remains of the bridge that Ram’s army used in the Ramayana.

  Now, i too oppose the canal, but on economic and environmental grounds. Its rationale is more political than economic. It will become one more public sector white elephant.

  The Palk Straits, between Tamil Nadu and Sri Lanka, are so shallow that only small boats can pass through. So, east-west coastal ships have to go around Sri Lanka. So do ships from Europe and Africa to the east coast.

  Sethusamundaram will be a furrow dredged in the sea-bed of the Straits, deep enough to accommodate ships of 20,000 DWT. The canal will save ships both distance (saving fuel) and time (saving daily charges for chartering ships). So, it should be able to charge ships for passage, like the Suez and Panama Canals. This revenue is supposed to make the project economic.

  The project is a political gift for Tamil Nadu. It will hugely help Tuticorin port, which today can receive ships only from the west, and not the east. It will improve the viability of existing and planned minor ports in the state. Hence, Tamils call the canal a 150-year dream about to come true (it was first proposed around 1850).

  Dreams are costless, but canals are not. Project documents claim that the canal will save ships 36 hours of time and 570 nautical miles of distance. But a recent study by Jacob John in Economic and Political Weekly exposes these claims as highly exaggerated. Up to 70% of the traffic through the canal is projected to come from Europe and Africa. And John estimates that the time saving from Europe to Kolkata will be only eight hours, and the distance saving 215 nautical miles. From Africa to Kolkata, the time taken will actually increase by 3.5 hours (being piloted through the canal is a slow process), and distance reduced will be only 70 nautical miles.

  John calculates that ships could lose up to $4,992 per passage if they are charged the tariff laid down in project documents. In which case ships will find it cheaper to go round Sri Lanka. If the government cuts the proposed tariff to attract traffic, John estimates that the project’s rate of return could fall to an uneconomic 2.5%. I expect that the project will also suffer cost overruns in capital and maintenance dredging, and hence be in the red.

  The canal is supposed to be ready by November 2008, not far off. So why has the project not been able to sign up potential users? The finance minister has appealed to private shipping companies to participate in a project that will benefit them, yet no shipping company has come forward. The economics of the canal look much too dicey.

  The Suez and Panama Canals save ships thousands of miles, and that makes them profitable. Sethusamundaram is not remotely comparable. It is designed for small ships (the project documents talk of 20,000 DWT), whereas the Panama Canal takes ships of up to 65,000 DWT and Suez takes ships up to 150,000 DWT.

  The Suez and Panama canals were dug through land corridors, and once dug stayed dug - they did not face sand inundation from the sea. However, Sethusamundaram will be a furrow in the sea-bed, at the constant mercy of currents bearing sand.

  The government’s environmental assessment has cleared the project on ecological grounds. Yet, much of that assessment was not about sand incursion, but about fears of possible damage to coral reefs, coastal erosion, oil spills, and changes in ocean salinity and temperature. Besides, the ecological studies were done from the Indian side of the Palk Straits, and not the Sri Lankan side, and so are technically incomplete.

  My own major fear is not so much that the project will ruin the environment, but that the environment will ruin the project. I fear that ocean currents will keep dumping fresh sand in the furrow of the canal. The Palk Straits are shallow not by accident but because sand-bearing currents have made them so. Combating the full force of nature is perilous, expensive and sometimes impossible.

  The project envisages maintenance dredging of two million cubic metres per year, infinitely more than required by the Suez and Panama canals. Jacob suspects (and so do i) that actual maintenance dredging will far exceed project projections, rendering the canal uneconomic. An extreme event (like the 2005 tsunami) could dump enough sand to close down the canal.

  Finally, global shipping is shifting to ever-larger vessels. Bulk carriers and tankers often exceed 200,000 DWT, and those under 60,000 DWT are being phased out as uneconomic. Old general cargo vessels have been replaced by container ships, which started small but now exceed 35,000 DWT, and may soon touch 75,000 DWT. Such vessels cannot use the canal.

  So, Sethusamundaram will be unsuitable for the large vessels of the 21st century. It is a 150-year old idea for 150-year old ships. That may be its epitaph.

  http://www.swaminomics.org/

  ReplyDelete
 36. //இராமனை உணர்ந்தவர் இராமானுசர்!
  இராமனையும் இராமானுசரையும் உணர்ந்தவர் யாரோ?//

  நான் சொல்லட்டுமா?
  KRS!
  :-)

  ReplyDelete
 37. நண்பரே சமரசமாகப் போகவேண்டும் என்று சொல்லவருகிறீர்கள். நல்லதுதான். ஆனால் காலம் மற்றும் இடம் அறிந்து தான் ஒரு பிரச்சினையின் தீர்வு தீர்மானிக்கப்படுகிறது. மதுரை ராமருக்கு ராமானுஜர் கோவிலை திருமலையில் கட்டியது அந்த சம்பவத்திற்கான தீர்வாக ராமானுஜர் கொண்டது. ஆனால் அதையே அவர் எல்லா சமயத்திலும் கையாளவில்லையே ?. திருவரங்கத்து நம்பெருமானின் சிலை டில்லி சுல்தானிடம் இருந்த போது என்ன செய்தார். சுல்தானின் மகள் அதை அன்போடு பூஜை செய்கிறாள், அதை அங்கேயே விட்டுவிடலாம் என்று முடிவெடுத்தாரா ? எப்படியாவது போராடி அதை மீட்டு மீண்டும் அரங்கம் கொணர்ந்தாரல்லவா. ஆக அந்த பிரச்சனைக்கு அது, தீர்வு இந்தப் பிரச்சனைக்கு இது தீர்வு. இது மக்களின் உணர்வுபூர்வமானது என்பதால் மிகவும் எச்சரிக்கையோடு கையாளவேண்டிய விஷயம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இரு தரப்பும் பேசுவதால் பிரச்சனை பெரிதாகுமே தவிர தீராது.

  பி.கு : ராமபிரானின் படங்கள் மிக அருமை.

  ReplyDelete
 38. கேஆரெஸ், நன்றி.

  ராமர் பாலத்துக்கு வழிபாடு இல்லை என்று சொல்வது தவறு. ராமேஸ்வரம் கோவில் வழிபாட்டு முறைகளில், கடலுக்கடியில் இருக்கும் சேதுவுக்கு தினந்தோறும் வழிபாடு நடந்து கொண்டு தான் வருகிறது. குழந்தை பாக்கியம் வேண்டி செய்யப்படும் சம்பிரதாயங்கள் உட்பட எல்லா பரிகாரங்களும் சேதுக் கரையில் தான் செய்யப் படுகின்றன.

  // ஆனால் அது வரை சமுதாயம் பற்றி எரியுமாறு நாளொரு வன்முறைப் பேச்சு, வீண் சண்டை என்று சமூக ஒழுங்கைக் குலைக்கவில்லையே அவர்கள்! //

  ராமர் பாலம் பற்றிய செய்திகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதே "சமுதாயம் பற்றி எரியுமாறு" செய்வதா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

  "மதுரா விஜயம்" மற்றும் "திருவரங்கன் உலா" படித்துப் பார்த்தால் எப்படி தமிழகம் முழுதும் இருந்த வீரர்கள் ஒன்றுதிரண்டு அன்னை மீனாட்சியின் அருளுடன் அந்தப் போரில் வென்றார்கள் என்பது தெரியவரும். ஒரு மிகப் பெரிய சமூக எழுச்சி இல்லாமல் இது எப்படி சாத்தியமாகி இருக்க முடியும்? யோசியுங்கள்.

  இன்றைக்கு இந்து தர்மத்தையும், மக்களையும், அதன் கலாசாரச் சின்னங்களையும் சூழ்ந்திருக்கும் ஆபத்துக்கள் பற்றி யோசித்துப் பாருங்கள். எத்தகைய அணுகுமுறை தேவை என்பது தானாகவே விளங்கும்.

  ராமசேது பாதுகாப்பு பற்றி இப்போது காங்கிரசே பச்சைக் கொடி காட்டி விட்டது. பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் தலைவர் தீவிரவாத எதிர்ப்பில் முன் நிற்கும் வீரர் பிட்டாஜி ராமர் பாலம் காக்க உயிர் தருவேன் என்கிறார் -
  http://www.newkerala.com/oct.php?action=fullnews&id=5733

  ராமனுக்கே என்றும் ஜெயம்! அவனை இழித்துரைக்கும் அறிவீனர்களுக்கு அழிவு நிச்சயம்.

  ReplyDelete
 39. நல்லதொரு பதிவு ரவி!

  ஆனால், ஒப்புமை சரியில்லை எனவே படுகிறது.

  வன்முறை ஆன்மீகத்தில் தேவையில்லை என்பதில் மாற்ருக் கருத்தில்லை.

  இன்னும் இருப்பதாகச் சொல்லப்படுகின்ற ராமர் பாலத்தை எப்ப்படி இடித்து அழிக்கப்பட்டு சந்தையான இடத்தோடு ஒப்பிடுகிறீர்கள்?

  இல்லையென்பது உறுதியான பின்னர்தானே இராமானுஜர் அப்படியொரு முடிவைச் சொன்னார்?

  இதன் மூலம் ராமர் பாலம் என ஒன்றில்லை எனச் சொல்ல வருகின்றீர்களா?

  ராமரே பொய் எனச் சொல்லும் அரசியல்வாதிகளுக்கு எந்த வகையில் தாங்கள் சொல்வது தீர்வாய் இருக்க முடியும்?

  நல்ல கருத்தைச் சொல்ல வந்திருக்கிறீர்கள் என்பதில் ஐயமில்லை.
  எனக்கு அதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

  ஆனால், சொல்லிய களம் தவறோ எனப் படுகிறது.

  சிலைகள் கொள்ளை அழகு!!!

  ReplyDelete
 40. //Anonymous said...
  நண்பரே சமரசமாகப் போகவேண்டும் என்று சொல்லவருகிறீர்கள். நல்லதுதான். ஆனால் காலம் மற்றும் இடம் அறிந்து தான் ஒரு பிரச்சினையின் தீர்வு தீர்மானிக்கப்படுகிறது.//

  மிகவும் உண்மைங்க!

  //மதுரை ராமருக்கு ராமானுஜர் கோவிலை திருமலையில் கட்டியது அந்த சம்பவத்திற்கான தீர்வாக ராமானுஜர் கொண்டது. ஆனால் அதையே அவர் எல்லா சமயத்திலும் கையாளவில்லையே ?. திருவரங்கத்து நம்பெருமானின் சிலை டில்லி சுல்தானிடம் இருந்த போது என்ன செய்தார். சுல்தானின் மகள் அதை அன்போடு பூஜை செய்கிறாள், அதை அங்கேயே விட்டுவிடலாம் என்று முடிவெடுத்தாரா?//

  இல்லைங்க! போராடி மீட்டு வந்தார். அது பற்றிய அடியேன் பதிவு இதோ!
  http://madhavipanthal.blogspot.com/2007/04/2_22.html
  ஆனா ஒரு விஷயம் கவனிக்கனும்.
  சுல்தான் ராமப்ரியனைக் கவர்ந்து சென்றதால், அவனை வெட்டவோ, குத்தவோ இவர் ஆணை பிறப்பிக்க வில்லை! எதிரியின் கூடாரத்துக்குத் துணிவுடன் சென்று, சாத்வீகமான முறையில் வாதாடிப் பெற்று வந்தார்.

  அந்தப் பெண்ணிடம் இருந்து வம்பாகப் பிடுங்கிக் கொண்டு வரவில்லை. நமக்குக் காரியம் தாங்க பெரிது. வீரியம் அல்ல!

  ஆன்மீக அன்பர்கள், ராமர் பாலத்துக்குப் போராடி மீட்கலாம்! ஆனால் எதிரில் இருப்பவர்களின் வெறும் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்து...நம் அணியை நாமே வலுவிழக்கச் செய்யக் கூடாது. ஆன்மீக அன்பர்கள், ராமர் அடிப்பொடிகள் வன்முறைக் கும்பல்-னு தட்டி விட ரெடியாக் காத்துக்கிட்டு இருக்காங்க. அதைச் சொல்ல வந்தேன்!

  //இது மக்களின் உணர்வுபூர்வமானது என்பதால் மிகவும் எச்சரிக்கையோடு கையாளவேண்டிய விஷயம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இரு தரப்பும் பேசுவதால் பிரச்சனை பெரிதாகுமே தவிர தீராது.//

  மிகவும் உண்மை!

  //பி.கு : ராமபிரானின் படங்கள் மிக அருமை//

  நன்றி: திருமலை திருப்பதி தேவஸ்தானம்!

  ReplyDelete
 41. சென்ற வாரம் கம்போடியா போய் வந்தேன். ஒவ்வொருமுறை போய் வரும் போதும் அதே உணர்வு. ஒரு காலத்தில் இந்து சாம்ராஜ்ஜியமென்பது இந்தோசைனாவரை செழித்து வளர்ந்திருந்தது என்ற பெருமையான உணர்வு. ஆனால், அந்த இந்து மதம் இப்போது எங்கே? அந்த வேதக் கலாச்சாரம் எப்போது, யாரால் துண்டிக்கப்பட்டது? இப்போது தெருவுக்குத் தெரு நாராயணன் இருக்கிறார். ஆனால் நாராயணீயமில்லை. கோயில்கள் இருக்கின்றன, இந்து வழிபாடு இல்லை. இராமானுசரின் மிகப்பெரிய வரலாற்றுப் பங்களிப்பு என்பது அவர் "கோயில் ஒழுங்கு" செய்ததுதான். கோயிலை மக்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பெற வைத்ததுதான். இல்லையெனில் கம்போடியா போல் இந்தியாவிலும் கோயிலிருக்கும், ஆனால் இறைவன் இருக்க மாட்டான். தயோ சிந்தோ இராமானுஜாய நமஹ!

  ReplyDelete
 42. உண்மை யாருக்கு தெரிகிறது திரு கே ஆர் எஸ். கருத்துக்கள் நிறைந்த நல்ல பதிவு.

  ReplyDelete
 43. Nice Article about the History of Rama Idols at Tirumala. If this information is authentic then please also update website. http://en.wikipedia.org/wiki/Tirumala_Rama_Idol

  Thanks

  ReplyDelete
 44. Well narrated article about the Ramar idols at Tirumala. Standing Ovation to you Ravishankar.

  Mr. Kumaran, Please refer to the following link.

  http://en.wikipedia.org/wiki/Tirumala_Rama_Idol

  Thanks

  ReplyDelete
 45. Thanks Mr. Mohan Raman for the link to the wikipedia article. This shows that there are so many things I do not know about our Swami.

  ReplyDelete
 46. I am a little confused about the chronology of the events surrounding the temple vigrahams brought to Tirumalai and the Muslim invasion. Ramanujar's period was 1017-1137 CE (right?) The episode cited must have supposedly happened around the late 1000s or early 1100s.. My history knowledge tells me that the Turkish rule in North India started around 1192 when Pritvi raj was defeated. As for Malik Kafur (the Indian general who worked for Alauddin Kilji) invaded South India (Srirangam and Madurai) around 1309-1311.
  Can you reconcile the chronology here with the episode you related regarding the village folks coming to talk to Ramanujar?

  ReplyDelete
 47. //nAradA said...//

  வாங்க சேதுராமன் சார்! ஏதேது பந்தலைப் பிரிச்சி மேயறீங்க போல இருக்கே! :)
  FYI - என் மின்னஞ்சல் முகவரி ப்ரொஃபைல் பக்கத்தில் இருக்கு!

  //Ramanujar's period was 1017-1137 CE (right?)//

  90% yes! :)

  //the Turkish rule in North India started around 1192 when Pritvi raj was defeated. As for Malik Kafur (the Indian general who worked for Alauddin Kilji) invaded South India (Srirangam and Madurai) around 1309-1311//

  Yes! Malik Kafur (1296 - 1316)

  //Can you reconcile the chronology here with the episode you related regarding the village folks coming to talk to Ramanujar?//

  ஆனால் மாலிக் காபூருக்கு முன்னரே அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்நியப் படைத் தளபதிகள் ஊர்களில் சில ஆர்ப்பாட்டங்களைச் செய்து கொண்டு தான் இருந்தனர்.
  இராமானுசர் மேலக்கோட்டை செல்வப் பிள்ளையை மீட்டு வர வட இந்தியா செல்லவில்லியா? அப்போது தானே துலுக்கா நாச்சியார் என்னும் சூரத்தானி பீவியும் உடன் வந்தார்?

  Itz not that the whole invasion spree was started by Malik Kafur or Khilji. They became more popular bcoz of the bloodshed.
  But there were few invasions by the local chieftans here and there, even in samayapuram. These chieftans need not be Turks. I only referred to as "anniyars". This includes even the kakatiyas, who "respectfully" plundered local temples.

  The one I narrated was from Tirumalai Koil Ozhugu, which doesnt give dates...So sort of non-chronological.

  ReplyDelete
 48. I am indebted to you, dear. Emmiraamaanujar adi potri.
  Adiyaen Raamaanujadaasan

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP