Wednesday, April 09, 2008

PIT போட்டிக்கு அல்ல! ராயல் ராமின் "தனிமை"!

மக்களே! ரொம்ப நாளா PIT போட்டியில கலந்துக்கணும்-னு நெனச்சிக்கிட்டு இருந்தேனா? கடந்த வாரயிறுதியில் பெங்களூர் பதிவர் சந்திப்புக்குப் போனேனா? அங்கிட்டு ஒரு ஷாட்!
அட நம்ம சங்கத்தின் நிரந்தரச் சிங்கத்தைப் பாருங்க! இதுக்கு மேல நான் என்னத்த சொல்ல!

PIT-இன் இந்த மாதத் தலைப்பு ஏதோ "தனிமை" யாம்-ல!
சிங்கம் இப்படித் "தனிமை"யில இருக்குறத பார்த்து, எனக்கு ரத்தக் கண்ணீரே வந்துருச்சி! வாடிய புலியைக் கண்ட போதெல்லாம் வாடினேன்! ஓடிய சிங்கத்தைக் கண்ட போதெல்லாம் ஓடினேன்!
நீங்களே பாருங்க மக்கா, ராயலின் தனிமையும் ஏக்கத்தையும்! :-(

ராயலுக்கு என்ன ஒரு ஏக்கம்! என்ன ஒரு பார்வை! என்ன ஒரு தவிப்பு! என்ன ஒரு சலிப்பு!
இதைப் பார்த்துவிட்டு நீங்க சும்மா போக மாட்டீங்களே? அதுக்கு ஒங்க மனச்சாட்சி எடம் கொடுக்காதே? ராயலுக்கு உதவிக் கரம் நீட்ட துடிக்குமே! தலைக்குள்ளாற ஆயிரம் சிவகாசி பட்டாசு வெடிக்குமே?

அந்தச் சேப்புச் சொக்காக்காரன் மட்டும் பெஞ்சில் ஒக்காந்துக்கிட்டு் ஜாலியா இருக்க,
எங்கள் தங்கம், சங்கத்தின் சிங்கம், நம்ம ராயலு தரையில் உட்கார்ந்து தவிப்பதும் தகுமோ? முறைப்பதும் முறையோ?
ராயலுக்கு என்ன சொல்லணுமோ சொல்லுங்க! என்ன செய்யணுமோ செய்யுங்க!

தனிமையிலே ராமைக் காண முடியுமா?
லால்-பாக்கினிலே லவ்வு செய்யத் தெரியுமா? ஓஓஓ :-))


(பிற்சேர்க்கை:
பதிவில் அவையடக்கம் கருதிக் கீழ்க்கண்ட படத்தை முதலில் வெளியிட மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்!
ஆனா புலிப் பால் கறந்த சபரிமலை PIT நிபுணரு, சிங்கப் பாலையும் கறந்தே ஆகணும்-னு கனவுல அருள் வந்து ஆடுனாரா? அதான்...கீழ்க்கண்ட படம்...ஹே ராம்!

பாவம், எங்க ராயலு நல்லவரு! ரொம்பவே கும்மிறாதீங்க மக்கா! :-)))

அடுத்து எதிர்பாருங்கள்...."ராமின் ரூமு" - ராயலின் பேச்சிலர் அறை பற்றிய ஒரு வரலாற்றுப் புதினத் தொடர்!


(அட! பெங்களூர் சந்திப்பு - பதிவு இன்னும் போடலை! அதுக்குள்ளாற அடுத்துடுத்து சென்னைச் சந்திப்புகள்! இப்ப தான் பிக்காசாவுல படம் எல்லாம் போஸ்ட் ப்ரொடக்சன் பண்ணிக்கிட்டு இருந்தேனா! இந்தப் படத்தைப் பார்த்ததும் அப்படியே பத்திகிச்சி! :-) அதான் அடுத்த பதிவு போடுறத்துக்குள்ளாற...
ச்சும்மா ஒரு Fill in the Blank...I mean, Fill in the Blog...என்சாய் மாடி!)

28 comments:

 1. இது ராயலுக்காக போட்ட மாதிரி தெரியலையே :))

  சீக்கிரம், பிளாங்க ஃபில் பண்ணுங்கப்பூ :)))

  ReplyDelete
 2. படம் தெரியல்ல! தயவு செய்து மீண்டும் போடவும்...:)

  ReplyDelete
 3. ராமின் போஸை பாக்கும் போது "எங்கே செல்லும் இந்த பாதை?னு சேது விக்ரம் மாதிரியே இருக்காரு.

  (ராம் அண்ணே! கோச்சுகாதீங்க சும்மா!) :D


  @KRS, ஹலோ அண்ணாத்தே! உங்க தனிமை படத்தையும் ராயல் எங்களுக்கு அனுப்பி இருக்காரு.

  போஸ்ட் புரடக்ஷன் பண்ணி நான் ரிலீஸ் பண்ணிடவா? :))

  ReplyDelete
 4. தன் இரண்டு கையையும் கோர்த்துக் கூட ஏதோ கேட்க விழைகிறார் போல இருக்கு ;-)

  ReplyDelete
 5. //மதுரையம்பதி said...
  படம் தெரியல்ல! தயவு செய்து மீண்டும் போடவும்...:)//

  படம் சரியல்ல! தயவு செய்து மீண்டும் போடவும்...:) -ன்னு சொல்ல வரீங்களோ மெளலி அண்ணா!

  ReplyDelete
 6. //ambi said...
  ராமின் போஸை பாக்கும் போது "எங்கே செல்லும் இந்த பாதை?னு சேது விக்ரம் மாதிரியே இருக்காரு//

  டூ மச்!
  அம்பியின் கமெண்ட்டைப் பாத்து எனக்கே கோவம் வருது! எங்க ராயலுக்கு வராதா என்ன? :-)

  விக்ரமாம் விகரம்! ஏன் ஒரு டாம் க்ரூஸ்...அட...ஒரு லியனார்டோ டிகாப்ரியோ இதெல்லாம் சொல்ல மாட்டீங்களோ?

  //@KRS, ஹலோ அண்ணாத்தே! உங்க தனிமை படத்தையும் ராயல் எங்களுக்கு அனுப்பி இருக்காரு.
  போஸ்ட் புரடக்ஷன் பண்ணி நான் ரிலீஸ் பண்ணிடவா? :))//

  இது வேறயா? நான் என்னிக்கிய்யா தனியா இருந்தேன்! கோபிகைகள் கிட்ட கேட்டுப் பாருங்க! :-)

  ReplyDelete
 7. //கானா பிரபா said...
  தன் இரண்டு கையையும் கோர்த்துக் கூட ஏதோ கேட்க விழைகிறார் போல இருக்கு ;-)//

  கானா அண்ணாச்சி
  புதசெவி :-))
  என்ன கேட்க வெழையறாரு?

  ReplyDelete
 8. //தஞ்சாவூரான் said...
  இது ராயலுக்காக போட்ட மாதிரி தெரியலையே :))//

  தலைவரே! திஸ் போஸ்ட் இஸ் டெடிகேட்டட் டு ராயல் ராயல் ராயல்! :-))

  ReplyDelete
 9. பொய் சொல்லிக் கொண்டுத் திரியும் கண்ணபிரானுக்கு கண்டனங்கள். உடனடியாக உண்மை நிலவரத்தை ( உண்மை நிலவரம் குறித்த மடல் காண்க ) வெளியிடவும்.

  ReplyDelete
 10. வேண்டாம் மாப்பி பாவம்..அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 11. //Jeeves said...
  பொய் சொல்லிக் கொண்டுத் திரியும் கண்ணபிரானுக்கு கண்டனங்கள்.//

  ஜீவ்ஸ் அண்ணாச்சி
  கண்ணனுக்குப் பொய் சொல்லவும் தெரியுமோ?
  அது பொய் இல்லீங்க அண்ணாச்சி! அவையடக்கம்! அவையடக்கம்!

  //உடனடியாக உண்மை நிலவரத்தை ( உண்மை நிலவரம் குறித்த மடல் காண்க ) வெளியிடவும்.//

  மடலைப் பார்த்தேன்!
  மாடலைப் பதித்தேன்!
  பதிவுல போட்டாச்சுங்கோ...உண்மை நெலவரத்தை!
  நெலவரம் கலவரம் ஆகாம இருந்தாச் சரி! :-))

  ReplyDelete
 12. என்னத்த சொல்ல??? என்னோட கேமராவிலே என்னைய எடுத்து மட்டுமில்லாமே அப்புறம் நான் எடுத்த போட்டோவோட ஒட்டு வேலை பார்த்து இப்பிடியெல்லாம் ஆப்பு வைக்கீறிங்க..... :(

  //அடுத்து எதிர்பாருங்கள்...."ராமின் ரூமு" - ராயலின் பேச்சிலர் அறை பற்றிய ஒரு வரலாற்றுப் புதினத் தொடர்!//
  ஒன்னும் சொல்லுறதுக்கில்லை.... :(

  ReplyDelete
 13. //இராம்/Raam said...
  என்னத்த சொல்ல??? என்னோட கேமராவிலே என்னைய எடுத்து மட்டுமில்லாமே//

  வாங்க மாப்பி வாங்க!
  என்னோட கேமரா, உன்னோட கேமரா-ன்னு எல்லாம் பேசலாமா? டீம் வொர்க் அண்ணாச்சி! எல்லாமே நம்மளோட கேமரா! :-))

  //ஒன்னும் சொல்லுறதுக்கில்லை.... :(//

  ஹிஹி!
  இதான் எங்க ராயலு!
  ஒன்னுமே சொல்ல மாட்டாரு! :-)

  ReplyDelete
 14. //கோபிநாத் said...
  வேண்டாம் மாப்பி பாவம்..அவ்வ்வ்வ்வ்வ்வ்//

  மாப்பி-ன்னு என்னையத் தானே சொன்னீங்க கோபி?
  ஹிஹி Dankees!

  ReplyDelete
 15. :-(((

  ராமை விடுங்கள், அவரது புகைப்படம் வெளியிட அனுமதி பெற்றிருப்பீர்கள். அவரது படத்தை எதில் ஒட்டினாலும் அவர் ஒன்றும் சொல்லமாட்டார் உங்களை.அது அவரைப் பாதிக்காத வரையில்.....

  முதல் படமாவது ஜோடிகளின் முகம் தெரியவில்லை. (http://bp1.blogger.com/_e2k9ic_4a9g/R_xpJxdEvLI/AAAAAAAABhQ/nXHk1j-gifc/s320/royal_thanimai1.jpg)

  ஆண்-பெண் இணையாக இரண்டாவது படத்தில் ( http://bp0.blogger.com/_e2k9ic_4a9g/R_xqghdEvMI/AAAAAAAABhY/UwI50YSaOew/s320/rams.JPG) இருக்கும் ஜோடியின் படத்தை வெளியிட்டது தவறு.

  அடுத்தவருக்கு தெரியாமல் அவர்களை படம் பிடிப்பது தவறு.

  ஆர்வக் கோளாறில் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக நீங்கள் (அல்லது யரோ )எடுத்து இருந்தாலும், இப்படி பொதுவில் சம்பந்த்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் வெளியிடுவது கேவலமான செயல். கடற்கரையில் உள்ள காதல் ஜோடி என்று மூன்றாம்தர பத்திரிக்கைகள் படம் போடுவது போல் உள்ளது இது. :-(((((

  தாஜ்மஹால் முன் நீங்கள் உங்களை படம் பிடிக்கும் போது Frame-ல் அடுத்தவர்கள் வந்துவிட்டால் தவறு இல்லை , ஆனால் இப்படி அடுத்தவர்களின் தனிமையை அவர்கள் அறியா வண்ணம் படம்பிடித்து பொது வெளியில் வைப்பது ......

  :-(((


  ***

  படத்தில் உள்ள அந்த ஜோடிகளின் அனுமதியுடன் படம் எடுக்கப்பட்டு, வெளியிடப்பட்டு இருந்தால் என்னை மன்னிக்க!

  ReplyDelete
 16. ஹாய் கேஆரெஸ்,

  ஆமாம் அது சரி, இந்த ராம் ஏன் இவ்ளோ வெக்கப் படுராரு?

  ஆனா அன்னிக்கு அந்த மாதிரி தெரியலையே... ஓஒ நான் இந்த பக்கமா வந்ததுக்கப்பறமா இவ்ளோ வெக்கம்? ஆஹா ராமுக்கு கூட வெக்கப் பட தெரியுமா?

  ReplyDelete
 17. சங்கத்து சிங்கத்த சீண்டறதே வேலையாய் போயிருச்சு. வேணாம் இதோட நிறுத்திக்குங்க. அழுதுறுவோம்..

  ReplyDelete
 18. வாங்க கல்வெட்டு ஐயா!
  இரண்டு படங்களுமே நான் எடுக்கவில்லை!
  ஆனால் பதிவிட்டது நான் தான்! ஒப்புக் கொள்கிறேன்!

  //முதல் படமாவது ஜோடிகளின் முகம் தெரியவில்லை//

  அதனால் தான் அது மட்டுமே முதலில் இடப்பட்டது. யாரையும் எப்படியும் பாதிக்கா வண்ணம்!

  //ஆண்-பெண் இணையாக இரண்டாவது படத்தில் இருக்கும் ஜோடியின் படத்தை வெளியிட்டது தவறு//

  இது பின்னால் சேர்க்கப்பட்டது!
  அதுவும் அந்தப் பெண்மணி முகம் தெரியாது இருப்பதனால் தான்! இல்லை என்றால் தந்தவரிடம் நானே மறுத்திருப்பேன்!

  இதில் சரி தவறு விவாதத்துக்குள் நான் இப்போது செல்லவில்லை!
  இன்றைய காலகட்டத்தில் வெளியிடங்களில் privacy என்பது, ஒரு எல்லைக் கோட்டைத் தாண்டி விட்டது.
  மீடியா, கண்காணிப்புக் காமிராக்கள் என்று பல வகைகள். அவற்றில் சில அறிந்தோ அறியாமலோ மூலையில் ஏதாவது ஒரு மீடியாவில் வந்து விடுகின்றன!

  இங்கே கவனிக்கப்பட வேண்டியது இரண்டு!
  1. இதன் மூலமாக அவர்களை ஒரு செய்தியோடு தொடர்புபடுத்தி இழிவு படுத்தாமை.
  2. தவறான நோக்கத்துடன் ஒரு சிலரை மட்டும் டார்க்கெட் செய்து வெளியிடுவது!

  இரண்டுமே இதில் இல்லை!
  எனினும் உங்களுக்கு உறுத்தலாய்ப் பட்டு விட்டதால், இப்போதே இரண்டாம் படத்தைப் பதிவில் இருந்து நீக்குகிறேன்!
  உங்களுக்கு உறுத்தலாய் அமைந்ததற்கு என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

  ReplyDelete
 19. இது ராயல் ராமா! பெரிய ஆளாத் தெரியுறான். பள்ளிக்கூடப் பயலாட்டாம் இருந்த சின்னப் பையனை பெங்களூரு எவ்வளவு கெடுத்து வெச்சிருக்கு.. அடக்கொடுமையே!

  // இரண்டுமே இதில் இல்லை!
  எனினும் உங்களுக்கு உறுத்தலாய்ப் பட்டு விட்டதால், இப்போதே இரண்டாம் படத்தைப் பதிவில் இருந்து நீக்குகிறேன்!
  உங்களுக்கு உறுத்தலாய் அமைந்ததற்கு என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! //

  அடிச்சிட்டு அஞ்சு ரூவா குடுக்குறீங்க போல! :D

  ReplyDelete
 20. //அடிச்சிட்டு அஞ்சு ரூவா குடுக்குறீங்க போல! :D//

  இது நல்லா இருக்கே :-))

  ReplyDelete
 21. //அடிச்சிட்டு அஞ்சு ரூவா குடுக்குறீங்க போல! :D//

  அடிச்சிட்டு அஞ்சு ரூவா, அடிக்காமப் பத்து ரூவா எல்லாம் இல்லை :-)
  உறுத்தல் எனப்பட்டதால் உடனே வருத்தம்! அவ்வளவு தான்!

  ReplyDelete
 22. அடப்பாவிங்களா..

  சும்மா "தேமே" உட்கார்ந்திருந்த அந்த புள்ளையை (வாயில்லா பூச்சி)நல்லா புல்லு புடுங்கறியேன்னு சொல்லி சொல்லி போட்டோ எடுத்துட்டு இப்ப விவகாரம் செய்யறிங்களே..இது நியாமா..

  அன்புடன்
  அரவிந்தன்

  ReplyDelete
 23. kannabiran, RAVI SHANKAR (KRS)

  //1. இதன் மூலமாக அவர்களை ஒரு செய்தியோடு தொடர்புபடுத்தி இழிவு படுத்தாமை.//

  //2. தவறான நோக்கத்துடன் ஒரு சிலரை மட்டும் டார்க்கெட் செய்து வெளியிடுவது!//

  இதே படத்தில் உங்களை வைத்துப் பாருங்கள்.

  உங்கள் பதிவில் நீங்கள், உங்கள் முகம் தெரிய , உங்களின் இணை முகம் தெரியாவண்ணம் , இதே நிலையில்,எந்த செய்தியோடும் தொடர்புபடுத்தாமல், தவறான நோக்கம் இல்லாமல் ஒரு படம் வெளியிடுங்கள்.

  அல்லது உங்களின் உறவினரின் திருமண ஆல்பத்தில் இருந்து எந்த நோக்கமும் இல்லாமல் ஒரு படம் ஆண் முகம் தெரிய-பெண்முகம் தெரியாமல் இங்கே வெளியிடுங்கள்.

  தனக்குச் செய்து கொள்ளாததை அடுத்தவருக்குச் செய்யக்கூடாது. தன்னால உண்ணமுடியாத வீணாய்ப்போன உணவை பிறருக்கு அளித்து அதையும் புண்ணியம் என்று நினைத்துக் கொள்ளும் மக்கள் உள்ள நாடு இது.

  **

  அப்படியே பிறரை எடுத்துவிட்டாலும், அவர்களின் தனிமை மதிக்கப்படவேண்டிய ஒன்று. எந்த செய்தியோடும் தொடர்புபடுத்தாமல், தவறான நோக்கம் இல்லாமல் கூட வெளிச்சம் போட்டுக் காட்டத் தேவையில்லை.

  **
  படத்தை நீக்கியமைக்கு நன்றி !!

  ReplyDelete
 24. //உங்களின் உறவினரின் திருமண ஆல்பத்தில் இருந்து எந்த நோக்கமும் இல்லாமல் ஒரு படம் ஆண் முகம் தெரிய-பெண்முகம் தெரியாமல் இங்கே வெளியிடுங்கள்//

  இதற்கு மேல் இதை வளர்த்த விரும்பவில்லை!
  இங்கு ஃபோகஸ் அவர்கள் இல்லை! அது படமெடுத்தவர் செய்யும் போது எதேச்சையாய் அப்படி அமைந்து விட்டது போலும்!
  அதே போல் நானோ இல்லை என் உறவினர் படமோ எதேச்சையாய் அமைந்துவிட்டால், அதை அவ்வளவாகப் பொருட்படுத்த மாட்டேன் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் ஐயா!

  //தனக்குச் செய்து கொள்ளாததை அடுத்தவருக்குச் செய்யக்கூடாது//

  இதை முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்!
  ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற்பின்
  தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

  //தன்னால உண்ணமுடியாத வீணாய்ப்போன உணவை//

  இந்த கருத்து இங்கே எவ்வளவு பொருந்தும் என்று தெரியவில்லை!
  வீணாய்ப் போன உணவைத் தருதல் மகா பாவம்!
  ஆனால் மிகுந்த நல்ல உணவை வீணாக்காமல் தருவது நல்லது தான்!

  நோக்கம் முதலிலேயே பிறர்க்கு உணவளித்தல் இல்லை தான்! தனக்குச் செய்து கொண்ட உணவு தான்!
  ஆனால் எப்போது மிகுதி என்று தெரிந்துவிட்டதோ, நல்ல உணவை வீணாக்கமல் வேண்டியவர்க்கு அளித்தல் என்பது புண்ணியமா தெரியாது, ஆனால் நல்லதே!

  //படத்தை நீக்கியமைக்கு நன்றி !//

  தங்கள் புரிந்துணர்வுக்கும் நன்றி ஐயா!

  ReplyDelete
 25. ஏதோ பாவமா புல் தரையை பார்த்து ஆராட்சி பண்ணிக்கிட்டிருக்குற ராமை மாட்டி விட்டுட்டிங்களே மாம்ஸ்.:P

  ReplyDelete
 26. //ராயலுக்கு என்ன ஒரு ஏக்கம்! என்ன ஒரு பார்வை! என்ன ஒரு தவிப்பு! என்ன ஒரு சலிப்பு!
  இதைப் பார்த்துவிட்டு நீங்க சும்மா போக மாட்டீங்களே? அதுக்கு ஒங்க மனச்சாட்சி எடம் கொடுக்காதே? ராயலுக்கு உதவிக் கரம் நீட்ட துடிக்குமே! தலைக்குள்ளாற ஆயிரம் சிவகாசி பட்டாசு வெடிக்குமே?//

  என்ன ஆச்சாம் ரஞ்சனிக்கு? இல்லை புதுசா வந்த செங்கமலத்துக்கு? இரண்டு பேருக்கும் தகராறாமா? :P

  ReplyDelete
 27. //என்ன ஆச்சாம் ரஞ்சனிக்கு? இல்லை புதுசா வந்த செங்கமலத்துக்கு? இரண்டு பேருக்கும் தகராறாமா? :P//

  என்னாப்பா ராயலு?
  ரஞ்சனி, செங்கமலம்....ஏதோ சாண்டில்யன் ரேஞ்சுக்கு ஹீரோயினி எல்லாம் சொல்றாங்க கீதாம்மா! என்ன நடக்குது அவிட? :-))

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP