Thursday, July 02, 2009

வைணவத்தைத் "தழுவிய" திருச்செந்தூர் முருகன்!

திருச்சீர் அலைவாய்! வெள்ளை அலைகள் முப்போதும் தாலாட்டும் என் முருகச் சிற்றூர்! "அலைபாயுதே கந்தா - என் மனம் அலைபாயுதே" என்னும் படிக்கு திருச்செந்தூர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா இன்று! (Jul-02, 2009)

திருச்செந்தூர் கொஞ்சம் வித்தியாசமான படை வீடு!
மற்ற படை வீடுகளெல்லாம் மலைகளில் இருக்க, இப்படை வீடு மட்டுமே, கடலோரத்தில்! குறிஞ்சிக் கடவுளான முருகன், நெய்தற் கடவுளாய் மாறிய மர்மம் என்னவோ? :)
அலையாழி அறிதுயில் மாயவனின் அலையாழிகளால் சீராட்டி விடும் சீராளன் தான் என் முருகப் பெருமானோ?

என்னுடைய "திருமாலும் தமிழ்க் கடவுளே!" - பதிவுகளுக்காக, சில முருக பக்தர்கள் என்னை விரட்டி விட்டாலும், செந்தூர் முருகன் என்னை விரட்டி விடுவானோ?
அன்று அப்படித் தானே பகழீ, பகழீ என்று ஓர் வைணவனை ஓடி வந்து "தழுவிக்" கொண்டான் பைந்தமிழ்ப் பெருமான்?
சைவமும் வைணவமும் மனிதருக்குத் தான்! மனசுக்கு அல்லவே! என் மனசுக்கு அல்லவே! பார்க்கலாமா கதையை?


சேதுபதிகள் ஆண்ட இராமநாதபுரம்! அங்கு சன்னாசி எனும் கிராமத்தில் ஒரு வைணவக் கொழுந்து! காமங்-கோட்டைச்-சேகரம் என்னும் சதுர்வேதி மங்கலத்தில் அந்த வாலிபன் வட வேதமும் சொல்லுவான்! ஆழ்வார்கள் ஆழ்ந்து அருளிய, தீந்தமிழ்ப் பாசுரமும் தெளிய ஓதுவான்! அவன் பெயர் = பகழி!

அது என்ன பகழி? புகழி-ன்னு ஒரு பொண்ணு எனக்குப் பள்ளிக்காலத்தில் தோழியா இருந்தா! இன்னிக்கு ஐரோப்பாவின் அரண்மனையில் புகழ் பெற்று இருக்குறா புகழி! ஆனா அது என்ன பகழி? பகழி??

வான் எலாம் பகழி! வானின் வரம்பு எலாம் பகழி! மண்ணும்
தான் எலாம் பகழி! குன்றின் தலை எலாம் பகழி! சார்ந்தோர்
ஊன் எலாம் பகழி! நின்றோர் உயிர் எலாம் பகழி! வேலை
மீன் எலாம் பகழி! ஆக வித்தினன் வெகுளி மிக்கோன்
- என்று கம்பன் கவி!

பகழி = அம்பு!
இன்னும் வெவரணையாச் சொல்லணும்-ன்னா, அம்புக்குக் கீழே, அடிப் பாகத்தில் இறக்கை இருக்குமே! பார்த்து இருக்கீயளா? அதுக்குப் பேரு = பகழித் திரள்!
அம்பை, காற்றுக்கு எதிரா விரைந்து செலுத்த உதவும் அந்த இறக்கைக்குப் பேரு தான் பகழி!

"பகழிக் கூத்து" நடக்கிறதாம்!
ஒரு பகழி, ரெண்டு பகழி அல்ல! வான் எலாம் பகழி! வானின் வரம்பு எலாம் பகழி-ன்னு ஒரு பகழிக் கூத்தே நடக்கிறது! வெள்ளை இறகுகள் களமெங்கும் அப்படிப் பறக்குது!

* இப்பேர்ப்பட்ட பகழிக் கூத்தை நடத்துவன் யார்? = என் இராகவப் பெருமாள்!
அவனே "பகழிக் கூத்தன்"! அந்த அழகான தமிழ்ப் பெயரையே, நம்ம வாலிபனுக்கும் இட்டார்கள் பெற்றோர்!

புள்ள, அருமையாத் தமிழ் கற்று வளருது! பின்னே நம்மாழ்வாரைப் படித்து வளரும் புள்ளையாச்சே! தமிழுக்குச் சொல்லவா வேணும்? திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார் அல்லவா!



பகழி, தமிழைப் பயிலும் போதே, தமிழ்க் கடவுளரான மாயோனையும், சேயோனையும் சேர்த்தே பயில்கிறான்! அதுவும் அவிங்க ஊரான, சேதுபதி ஆண்ட, திருச்செந்தூர் பட்டினத்துக் கடலின் மேல் பகழிக்குக் கொள்ளை ஆசை! அந்தக் கடலுக்குச் சொந்தக்காரனான "கந்தக்காரன்" மீதும் கொள்ளை ஆசை!
வைணவப் பையனாச்சே, செந்தூரு இவனுக்குச் சொந்தூரு ஆகுமா? சரிப்படுமா-ன்னு எல்லாம் பகழி வீட்டுலயும் யாரும் கேட்கலை! சும்மா ஜாலியா விட்டுட்டாங்க போல! :)
ஆனா என்ன ஒன்னு, தமிழையும் பாசுரத்தையும் நல்லாக் கவனிச்சிக்கிட்ட பகழிக்கு, வயிற்றைத் தான் கவனிச்சிக்கிடத் தெரியலை! வேளைக்குச் சாப்பிட்டாத் தானே?

எப்பவும் பாட்டு-ன்னு உட்கார்ந்து கிட்டு இருந்தா, பசி அடங்கீருமா?
"வாய்க்கு வடை இல்லாத போது, வயிற்றுக்கும் பொங்கல் ஈயப்படும்"-ன்னு இருக்க வேணாமோ? அதானே மடப்பள்ளி வைணவ லட்சணம்? :)
அல்சர் கணக்கா, பெரும் வயிற்று நோய் வந்துரிச்சி நம்ம பகழிக்கு!

என்னென்னமோ மருத்துவம் பார்த்தும், மூலிகை அரைச்சிக் குடிச்சியும் போகலை!
அம்மா அப்பா பெருமாளுக்கு வேண்டிக்கறாங்க! வைத்திய வீரராகவப் பெருமாளோ சென்னைத் திருவள்ளூர் பக்கம் இருக்காரு! பகழியோ எங்கேயோ தென்கோடியில இருக்கான்! யார் தான் மருத்துவன்?

அப்போ தான் பகழி நினைப்புக்கு ஒரு வாசம் வருகிறது, திருச்செந்தூர் "இலைத் திருநீறு"!

பன்னீர் விபூதி என்று நீட்டு நீட்டு பன்னீர் மரத்து இலையில் மடித்துத் தரப்படும் செந்திலாண்டவனின் மருந்து!
திருமுருகனோ கண்ணுக்கு விருந்து! அவன் திருநீறோ புண்ணுக்கு மருந்து!

பகழி கடலில் விளையாடும் போதெல்லாம், கோயில் அந்தணர்கள், பல பேருக்குப் பன்னீர்-இலை விபூதி கொடுப்பதைப் பார்த்து இருக்கிறான் அல்லவா?
அந்த ஞாபகம் வந்து விட, வயிற்று வலி இன்னும் அதிகம் ஆகியது! பின்னே, வழி தெரிந்து விட்டால், அதை உடனே அடையத் தோணும்-ல? சென்றான் பகழி செந்தூர்!


செந்தூர் முருகப் பெருமானே ஒரு Baby Beauty! அவன் மீது Baby Tamizh பாடத் துவங்கி விட்டான் நம்ம பகழி! :)
திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் என்னும் அழகு தமிழ்க் கவிதை தோன்றிற்று! இலைத் திருநீறும் அவன் வயிற்றிலே ஊன்றிற்று!
பாலையாய் எரிந்த வயிற்றில் பால் வார்த்தான் பால முருகன்! குளிர்ந்தான் பகழி!

ஆனா ஒரே ஒரு தப்பு நடந்து போச்சு! மருந்து வாங்கப் போன பகழி சாதாரணமாப் போயிருக்கணும்! ஆனா வைணவராச்சே! ஐயா நாமத்தோட போயிட்டாரு!
அதுவும் ஒரு நாமம் இல்ல! பன்னிரெண்டு நாமம் போடறவங்க போல! மேனியின் ஒவ்வொரு மூலையிலும் நாமம்!

கூட்டத்தில் பகழி மட்டுமே வித்தியாசமாகத் தெரிகிறார்! சரி, போனாப் போவுதுன்னு, போத்திமாருங்க (அர்ச்சகர்), எல்லாருக்கும் கொடுக்கறாப் போல, பன்னீர் விபூதி மட்டும் கொஞ்சம் கொடுத்து வுட்டுட்டாங்க!
இவரும் போனதுக்குச் சிம்ப்பிளா ஒரு பாட்டு பாடிட்டு வந்திருக்கலாம்! ஆனால் ஒரே தமிழ்ப் பாட்டில் அடங்கிடுமா ஆறு முகமும்? நம்ம பகழிக்கு அப்ப தான் பாட்டு பிச்சிக்கிட்டு வருது!

கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர் முத்தினுக்கு விலை உண்டு!
கொண்டல் தரு நித்திலம் தனக்குக்
கூறும் தரம் உண்டு, உன் கனிவாய்

முத்தம் தனக்கு விலை இல்லை!
முருகா முத்தம் தருகவே!!முத்தம் சொரியும் கடல் அலைவாய்
முதல்வா முத்தம் தருகவே!!


என் முருகனின் தேனிதழ் இதழோடு-இதழ் கலக்கும் இன்பத்தை வாயால் சொல்லவும் முடியுமா? இதழ் மெல்லவும் முடியுமா? மெண்டு அள்ளவும் முடியுமா?


இவ்வளவு அழகான பிள்ளைத் தமிழை, அங்கு ஏறெடுத்தும் பார்க்கவில்லை! "நாமக்காரன் பாடியது நமக்கு எதுக்கு-ங்காணும்?" என்று ஒரு வித வெறுப்பு! உதாசீனம்!

திருச்செந்தூர் ஆலய நிர்வாகத்தைக் கைக்குள் வைத்திருக்கும் போத்திமார்கள் மற்றும் திரி-சுதந்திரர்கள் (முக்காணிகள்) பகழியின் நெற்றி நாமத்தை மதிக்கா விட்டாலும், தமிழை மதிக்கலாம்! ஆனால், "உம், உம், நடையைக் கட்டு" என்று பகழியை "ஜருகண்டி" செய்கிறார்கள்! பகழிக்கோ அருகில் சென்று பார்க்க ஆசை! ஆனால் நெட்டித் தள்ளுகிறார்கள்!

காசுள்ளவர்களை எல்லாம் முன்னே அனுப்பும் போது, தமிழுள்ள பகழியை முன்னே அனுப்ப மட்டும் மனம் வரவில்லை! போதாக்குறைக்கு "நாம" பயம் வேறு!
முருகப் பெருமானை மனங்குளிரத் தரிசனம் செய்யக் கூட முடியவில்லை! ஏதோ எட்டக்க இருந்து ஏங்கி ஏங்கிப் பார்த்ததோடு சரி!
பகழிக்கு கோயில் மரியாதையா தேவை? அவரு தான் முருகனின் இதழ் மயக்கத்தில் இருக்காரே! யாருக்கு வேணும் மரியாதையும் மதிப்பும்?
பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை மொத்தமாகப் பாடி முடித்து, வெளியில் சென்று விட்டார் பகழி! நோய் நீங்கிய அசதியில், அடியார் கூட்டத்தோடு கூட்டமாக, அப்படியே மண்டபத்தில் படுத்தும் விட்டார்!

முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பவன், இங்கே வையாத பாச உள்ளத்தைக் கண்டு கொள்ள மாட்டானோ? உள்ளத்தில் நல்ல உள்ளம் என்றுமே உறங்காதோ? முருகாஆஆஆஆஆஆஆ!
செந்தூரான் வங்கார மார்பில் அணி மாணிக்கப் பதக்கம், உறங்கும் பகழியின் மார்பில் வந்து ஏறியது! அவரோ ஆழ்ந்த குறட்டையில்!
உதய மார்த்தாண்ட பூசைக்கு நடையைத் திறந்தவர்கள், முருகனைக் கண்டார்களோ இல்லையோ, பெரிய மாணிக்கப் பதக்கத்தைக் காணவில்லை என்பதை மட்டும் நன்றாகவே கண்டார்கள்! ஊரெங்கும் ஆள் போட்டுத் தேடி அலுத்துப் போய், சண்முக விலாச மண்டபத்துக்கு வந்தால்........

தூங்கும் பகழியின், வங்கார மார்பில், அணியாக மின்னுகிறது!
பகழியின் மேனி எங்கும் முருகன் சூடிக் களைந்த மாலைகள்! - உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்தது உண்டு! தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்!
"ஆகா, அண்ட வந்த இந்த நாமக்காரனைக் கிட்டக்க கூட விடாம, வெரட்டு வெரட்டு-ன்னு விரட்டினோமே! அப்படி இருக்க, எப்படி இப்படி?"-ன்னு போத்திகள் விழிக்க...
நல்ல வேளை திருட்டுப் பட்டம் கட்டாமல், உண்மையைப் புரிந்து கொண்டார்கள்! நல்ல எடையுள்ள புஜங்க மாணிக்கப் பதக்கத்தைக் கழட்டணும்-ன்னாலே, அந்தத் திருகாணிக்கு-ன்னே செஞ்ச பிரத்யேக சாவி வேணுமே! அப்படி இருக்க, இவன் மார்பில் பதக்கம் வந்தது என்றால்........?

பகழியை எழுப்பி, மன்னிப்பும் கேட்டனர்! சாவி போட்டு அந்தப் பதக்கத்தை மீட்டு எடுத்துக் கொண்டனர்! பகழி வேண்டாமென மறுத்தும், வீதியுலா நடத்தி, செந்தூர்க் காதலனிடம், மிக அருகில் கொண்டு போய்ச் சேவித்தும் வைத்தனர்!
சந்தனம், பன்னீர் இலைத் திருநீறு, மாலை, பரிவட்டம் என்று ஆரவாரம் காட்ட, பகழியோ வேறு விதமான வெட்கத்தில் நெளிந்தார்! என்ன வெட்கமா? ஹிஹி...

முயலும் படிவாழ் திருச்செந்தூர், முருகா முத்தம் தருகவே!
மொழியும் சமயம் "அனைத்தினுக்கும்" முதல்வா முத்தம் தருகவே!!



முருகப் பிள்ளைக்கு இன்று குடமுழுக்கு இனிதே நடந்தேறட்டும்!

அவன் திருமுகத்தை ஆசை ஆசையாகப் பார்க்கும் போதெல்லாம்,
அந்தச் சந்தனக் காப்பை இதழோரம் வழித்து எடுக்க,
அந்த வழிப்பில் வழிந்து, அப்படியே என்னை ஊடுருவிப் பார்த்துச் சிரிப்பான்!

போதும்-ப்பா ராசா! செந்தூர் முருகா, என்னைச் சேர்த்துக் கொள்!

54 comments:

  1. //என் தமிழ்க் கடவுள்-திருமால் பதிவுகளுக்காக, முருக பக்தர்கள் என்னை விரட்டி விட்டாலும், செந்தூர் முருகன் என்னை விரட்டி விடுவானோ?//

    அது எப்படி, மாலோன் மருகன் மாமனை கும்பிட்டதுக்காக கோபப்படுவானா என்ன? குடமுழுக்கு காணும் வரம் நமக்கு அவன் தரவில்லையே

    ReplyDelete
  2. செந்தூர் உறை செங்கனிவாய்க் குமரனின் திருக்குடமுழுக்கு விழாவிற்கு சிறப்புப் பதிவு நல்லா இருந்ததுண்ணா..

    இப்பதான் தினமலர்ல கும்பாபிஷேக சிறப்புச் செய்தி படிச்சேன்.. அதில், ஆவணி மற்றும் மாசித் திருவிழா அன்று முருகன் சிவனாகவும், பெருமாளாகவும், பிரம்மனாகவும் காட்சி அளிப்பார்னு படிச்சு இங்க வந்தா முருகனை வைணவர் ஆக்கிட்டீங்க :)

    ReplyDelete
  3. //வாய்க்கு வடை இல்லாத போது, வயிற்றுக்குப் பொங்கல் ஈயப்படும்-ன்னு இருக்க வேணாமோ//

    ஆஹா.. அட்டகாசம்.. ரொம்ப நேரம் சிரிச்சேன்.

    ReplyDelete
  4. //அவன் திருநீறு புண்ணுக்கு மருந்து!//

    சிறு வயதில் எனக்கு வயிற்று வலி வந்தால் என் பாட்டி வயிற்றில் திருநீறு தடவி சுதர்சன மந்திரம் உச்சரிப்பார்.. மருத்துவரிடம் செல்லாமலே குணமாகிவிடும்.. இப்போதும் உடம்புக்கு ரொம்ப முடியாமல் போனால் நண்பர்களிடம் திருநீறு கொண்டு வரச் சொல்லி இட்டுக் கொள்வேன்.. (வீட்டில் ஒரு வீரவைணவர் இருப்பதால் வீட்டில் வைத்துக் கொள்ள முடியவில்லை :)

    ReplyDelete
  5. ஆஹா..... இப்ப நல்லாவே புரிஞ்சு போச்சு.

    பகழிக்கு அருள் செஞ்சவந்தான் சமீபத்தில் துளசிக்கும் இத்துனூண்டு அருள் செஞ்சுட்டான்.

    அந்தப் பதக்க மாலை இல்லாட்டாலும் ஒரு காசுமாலையாவது போட்டுருக்கலாம்.
    அவனைச் சொல்லியும் பயன் இல்லை,
    நாந்தான் மண்டபத்தில் தூங்காம வந்துட்டேனே:-))))

    பதிவு வழக்கம்போல் அருமை.

    ReplyDelete
  6. //போதும்-ப்பா ராசா! செந்தூர் முருகா, என்னைச் சேர்த்துக் கொள்!//

    நோ! நோ! முருகா..பதிவுக் கர்மாவிலிருந்தி இவரை அவ்வளவு எளிதில் அகற்றி விடாதே.. இதுதான் என் வேண்டுகோள்.

    ReplyDelete
  7. what a fantastic post !! liked it very much !

    ReplyDelete
  8. //வாய்க்கு வடை இல்லாத போது, வயிற்றுக்குப் பொங்கல் ஈயப்படும்-ன்னு இருக்க வேணாமோ//
    hahhahaaa..ithu toppu..chaanceleenga..engayo oru roti desathula ukkanthu potti thatikitrukarapa ethechaya kannula patuthu...unga puniathula kudamuzhuku kathai kittiathu...mikka nanri...engenthu intha kathaikelam source pudiakreenga..romba nallarku

    ReplyDelete
  9. "வைணவத்தைத் "தழுவிய" திருச்செந்தூர் முருகன்!"
    erkanavay tirupathi saami venky ila namma murugan thaanu kelapitrukaanga..neenga muruganukay naamam podrele..ithu nyayama

    ReplyDelete
  10. Hey KRS , charming writeup :)
    Neryaaa padichiruke pola erukkey..
    ennai poruthavarai kannanum muruganum onnu dhaan, oruthar mayil valathar innoruthar pili vachikittar avlo dhaan ;)

    Enkkey puriyara maari cho chimple :) evlo information..super appu .. kakka kakka kanaga vel kakka..Muruganin velum mayilum thunai!

    ReplyDelete
  11. // திருச்செந்தூர் கொஞ்சம் வித்தியாசமான படை வீடு!
    மற்ற படை வீடுகளெல்லாம் மலைகளில் இருக்க, இப்படை வீடு மட்டுமே, கடலோரத்தில்! குறிஞ்சிக் கடவுளான முருகன், நெய்தற் கடவுளாய் மாறிய மர்மம் என்னவோ? :) //

    இல்லை. இன்று காலையில் தினமலரில் இதை பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள். இதும் ஒரு மலை மீதே அமைந்திருக்கிறதாம். சந்தன மலை என்று படித்ததாக ஞாபகம். மேலும் கடலில் இருந்து பார்த்தால் கோவில் ஒரு குன்றின் மேல் இருப்பது போல் இருக்குமாம்.

    ஸ்ரீஜா.

    ReplyDelete
  12. KRS உங்க இடுகை என் அறிவுக்கு எட்டலை.. :-) நம்ம தலைவரை பற்றிய இடுகை என்பதால் ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்

    ReplyDelete
  13. //சின்ன அம்மிணி said...
    அது எப்படி, மாலோன் மருகன் மாமனை கும்பிட்டதுக்காக கோபப்படுவானா என்ன?//

    வாங்க-க்கா!
    மருகன் கோவப்பட மாட்டான்! ஆனா மருகறவங்க தான் கோவத்தில் இருக்காங்க! :(

    // குடமுழுக்கு காணும் வரம் நமக்கு அவன் தரவில்லையே//

    அட! ஸ்ரீதர் அண்ணாச்சி மின்னஞ்சல்-ல அனுப்பி இருந்தாரே!
    www.tiruchendurmurugantemple.com

    ReplyDelete
  14. //Raghav said...
    ஆவணி மற்றும் மாசித் திருவிழா அன்று முருகன் சிவனாகவும், பெருமாளாகவும், பிரம்மனாகவும் காட்சி அளிப்பார்னு//

    அரி எனவாகி அயன் எனவாகி அரன் எனவாகி, அவர் மேலாய்!

    //படிச்சு இங்க வந்தா முருகனை வைணவர் ஆக்கிட்டீங்க :)//

    :)
    அப்போ அது உண்மை இல்லீயா? பொண்ணு கொடுத்தவங்க வீட்டு வழக்கம் தானே புள்ளைக்கும்? :)

    ReplyDelete
  15. Raghav said...
    //வாய்க்கு வடை இல்லாத போது, வயிற்றுக்குப் பொங்கல் ஈயப்படும்-ன்னு இருக்க வேணாமோ//

    ஆஹா.. அட்டகாசம்.. ரொம்ப நேரம் சிரிச்சேன்.//

    :)
    இதெல்லாம் அப்பப்ப சல்லீசா வரும்! என்னடா இவன் வைணவத்தைத் தாழ்த்தறானே-ன்னு நினைச்சிக்காதீங்க!

    ReplyDelete
  16. //Raghav said...
    சிறு வயதில் எனக்கு வயிற்று வலி வந்தால் என் பாட்டி வயிற்றில் திருநீறு தடவி சுதர்சன மந்திரம் உச்சரிப்பார்..//

    கரிய மேனி மிசை
    வெளிய நீறு
    சிறிதே இடும் பிரான்! :)

    //வீட்டில் ஒரு வீரவைணவர் இருப்பதால் வீட்டில் வைத்துக் கொள்ள முடியவில்லை :)//

    நைசா அவரைக் கொறை சொல்லாதப்பா! பழி ஓரிடம், பாவம் ஓரிடமா? :)

    ReplyDelete
  17. //துளசி கோபால் said...
    ஆஹா..... இப்ப நல்லாவே புரிஞ்சு போச்சு.
    பகழிக்கு அருள் செஞ்சவந்தான் சமீபத்தில் துளசிக்கும் இத்துனூண்டு அருள் செஞ்சுட்டான்.//

    எக்ஜாக்ட்லி! :)

    //அந்தப் பதக்க மாலை இல்லாட்டாலும் ஒரு காசுமாலையாவது போட்டுருக்கலாம்//

    ஹிஹி! டீச்சருக்குக் காசு மாலையில் தான் கண்ணா? முருகன் கையில் ஒரு ஜப-மாலை இருக்குமே? அதுல கண்ணு இல்லையா? :))

    //அவனைச் சொல்லியும் பயன் இல்லை, நாந்தான் மண்டபத்தில் தூங்காம வந்துட்டேனே:-))))//

    இது நியாயமான பேச்சு! நான் அடுத்த முறை போகும் போது தூங்கிட்டே வரேன்!

    //பதிவு வழக்கம்போல் அருமை//

    :)

    ReplyDelete
  18. //Raghav said...
    //போதும்-ப்பா ராசா! செந்தூர் முருகா, என்னைச் சேர்த்துக் கொள்!//

    நோ! நோ! முருகா..பதிவுக் கர்மாவிலிருந்தி இவரை அவ்வளவு எளிதில் அகற்றி விடாதே.. இதுதான் என் வேண்டுகோள்//

    :)
    என் மேல உங்களுக்கு ஏன் இம்புட்டு கோவம்? கொலைவெறி?
    நிம்மதியா இருக்க விடுங்கப்பா! :)

    ReplyDelete
  19. //Radha said...
    what a fantastic post !! liked it very much !//

    :)
    என்ன நீங்களும் ஸ்ரீவத்ஸ் மாதிரி ஆயிட்டீங்க ராதா? :)
    எல்லாம் உங்க கிரிதாரி மருமவன் தான்! :)

    ReplyDelete
  20. //Suddi said...
    Very good post.. Thanks.//

    நன்றிங்க!

    ReplyDelete
  21. //gils said...
    //வாய்க்கு வடை இல்லாத போது, வயிற்றுக்குப் பொங்கல் ஈயப்படும்-ன்னு இருக்க வேணாமோ//
    hahhahaaa..ithu toppu..chaanceleenga..//

    :)
    என்ன கில்ஸ்? உன் வாயில் வடை இல்லீயா? :)

    //engayo oru roti desathula ukkanthu potti thatikitrukarapa ethechaya kannula patuthu...//

    அடப்பாவி! என்னைய பாத்தா உனக்கு எதேச்சையா இருக்கா? :)

    //unga puniathula kudamuzhuku kathai kittiathu...mikka nanri...engenthu intha kathaikelam source pudiakreenga..//

    ஸோர்சும் இல்ல! நர்சும் இல்ல! நீ வேற! பகழியின் கதை அடியார் கதையாச்சே! அதான் என் கண்ணுல எப்படியாச்சும் பட்டுரும்! :)

    ReplyDelete
  22. //gils said...
    erkanavay tirupathi saami venky ila namma murugan thaanu kelapitrukaanga..//

    அதெல்லாம் கெளப்பனவங்க எப்பவோ அடங்கிப் போயிட்டாங்க!
    அருணகிரியே "திருமலை வேங்கடவா, உமை அண்ணா, சங்கு சக்கரனே"-ன்னு எல்லாம் பாடிட்டாரு! கெளப்பனவங்க ஓடிட்டாங்க! :))

    //neenga muruganukay naamam podrele..ithu nyayama//

    :)
    நான் எங்கப்பா நாமம் போட்டேன்?
    நாமம் போட்டவனை அணைத்த பெருமான்-ல்ல சொன்னேன்?

    நானும் நாமம் போட்டுக்க மாட்டேன்! எங்க குல தெய்வமான முருகனுக்கும் நாமம் போட மாட்டேன்! :)

    ReplyDelete
  23. //Srivats said...
    Hey KRS , charming writeup :)
    Neryaaa padichiruke pola erukkey..//

    ஹிஹி! நீ தான் மெச்சிக்கணும்! ஆனா எனக்கு படிக்காதவங்களைத் தான் புடிக்கும்!
    கற்றாரை யான் வேண்டேன்!
    கற்பனவும் இனி அமையும்!

    //ennai poruthavarai kannanum muruganum onnu dhaan, oruthar mayil valathar innoruthar pili vachikittar avlo dhaan ;)//

    முருகன் மயில் வளர்த்தானா? சொல்லவே இல்ல? :)
    அப்ப கோழி வளர்க்கலையா? :)

    அதெல்லாம் மாமன்-மச்சான் ஸ்ரீ! அவிங்களுக்குள்ள கொடுத்துப்பாங்க! வாங்கிப்பாங்க! :)

    ReplyDelete
  24. //கிரி said...
    KRS உங்க இடுகை என் அறிவுக்கு எட்டலை.. :-)//

    அட கதை தானே கிரி? இதுல எங்க அறிவு வந்துச்சு?
    இதுக்குத் தான் சிங்கப்பூரில் நடு ராத்திரி ஓவராச் சுத்தக் கூடாது-ன்னு சொல்றது! :)

    //நம்ம தலைவரை பற்றிய இடுகை என்பதால் ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்//

    :)

    ReplyDelete
  25. //sreeja said...
    இல்லை. இன்று காலையில் தினமலரில் இதை பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள். இதும் ஒரு மலை மீதே அமைந்திருக்கிறதாம். சந்தன மலை என்று படித்ததாக ஞாபகம்//

    உம்...சற்று மேடான இடம்! ஆனால் குன்று இல்லை!
    சுவாமிமலை கூட செயற்கைக் குன்று தான்! ஆனால் கொஞ்சமாச்சும் உசரமா இருக்கும்!

    //மேலும் கடலில் இருந்து பார்த்தால் கோவில் ஒரு குன்றின் மேல் இருப்பது போல் இருக்குமாம்//

    அடுத்த முறை போகும் போது பார்க்கிறேன்! தகவலுக்கு நன்றி ஸ்ரீஜா:)

    ReplyDelete
  26. வைணவ முருகன்
    --------------------
    "குரைக்கருங்கடல் திருவணை
    அடைத்திலங்கையின் அதிபதி நிசிசரர்
    எனமுனம் குலத்தொடும்பட ஒரு கணை விடுமரிமருகன் ",
    "திருமக ளுலாவு மிருபுய முராரி திருமருக நாமப் பெருமாள் "
    முருகப்பெருமானுக்கு முற்பிறப்பும் இருந்துள்ளது.
    ப்ரம்ம ஸூத்ரபாஷ்யத்தில் ஆதி சங்கரர் தெரிவிக்கும் செய்தி இது.

    ஸனகாதியரில் நான்காமவரான ஸனத்குமாரரின் அவதாரமே குமார ஸ்வாமி.ஸனத்குமாரரின் சரிதம் திருமழிசை ஆழ்வாரின் வரலாற்றை
    ஒத்திருக்கும்.இருவரும் ஈசனாரிடமிருந்து வரம் பெற மறுத்தவர்கள். அரனார் வரம் தர முன்வந்தபோது, ‘நான் தருகிறேன்; என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்’
    என்றாராம் ஸனத்குமாரர்.
    அதை ஏற்ற அரனார் அவரையே மகனாகப் பிறக்குமாறு வேண்டினார்.
    ஸனத்குமாரர் குமார ஸ்வாமியாகத் தோன்றினார்.

    ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்பதைச் சாந்தோக்ய உபநிஷத்தும்,த்ரிபுரா ரஹஸ்யமும் தெரிவிக்கின்றன. ஸனத்குமாரரும் ஞான பண்டிதர்தான்.
    நாரத பகவான் ஞானோபதேசம் பெற்றது ஸனத்குமாரரிடம்.
    'ஸனத்குமாரர் இருள் கடந்த நிலை காட்டினார்;அவருக்கு ஸ்கந்தன் என்று பெயர்;ஸ்கந்தன் என்று பெயர்’ – உபநிஷத் இரண்டு முறை முத்தாய்ப்பு வைக்கிறது.
    (ஆதாரம் : தெய்வத்தின் குரல் – முதற்பகுதி)

    ஸனத் குமாரரை ஹரி தாஸராகப் புராணங்கள் தெரிவிக்கும்.

    தேவ்

    ReplyDelete
  27. http://www.youtube.com/watch?v=vMtv7uEnFq4
    subbu rathinam
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  28. // இதழோடு-இதழ் கலக்கும் இன்பத்தை வாயால் சொல்லவும் முடியுமா? இதழ் மெல்லவும் முடியுமா?
    மெண்டு அள்ளவும் முடியுமா? //

    அனாவசியமா, பக்தி பிரளயமா கடல் அலை போல பெருக்கெடுத்து ஓடி வரும் இடத்திலே போய்
    அனாசாரமா, அடல்ட்ஸ் ஒன்லி மேட்டரை கொண்டு வந்துவிட்டீரே !

    சயின்ஸ் வாத்தியாரை ஹிஸ்டரிக்கு கொஸ்சின் பேப்பர் செட் பண்ணச் சொன்ன அந்த ஜோக்
    நினைவுக்கு வர்றது. வயசான காலத்துலே இதெல்லாம் வரலாமோ ?


    " முருகா ! செந்தில் ஆண்டவா ! திருக்குமரா ! என் செய்வேன்! என் செய்வேன் !!!"

    அசரீரி.

    " பயப்படாதே ! 'சட்டியை நோக்கிச் சரவண பவனார் ..." ஒரு ஆறு தரம் சொல்லு,
    எதுக்கும் இங்க போய் வேண்டிக்க ... இந்த சுட்டியை க்ளிக் பண்ணு."

    http://www.youtube.com/watch?v=vMtv7uEnFq4

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  29. தல

    அருமை..அருமை..;) பகழி கதையும் முருகனின் படமும் கலக்கல் ;)

    நானும் போகும் போது தூங்கிட்டு வரேன் ;)

    ReplyDelete
  30. //கோபிநாத் said...
    தல
    அருமை..அருமை..;) பகழி கதையும் முருகனின் படமும் கலக்கல் ;)//

    ஆகா! பிறந்தநாள் மாப்பி, வாப்பா கோப்பி! :))
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    முருகப் பெருமான் ஒனக்கு நாளும் நலமெலாம் நல்கட்டும்!

    //நானும் போகும் போது தூங்கிட்டு வரேன் ;)//

    பதக்கத்து மேல ஆசை வச்சு படுத்தா ஒதை தான் கிடைக்கும்! :)
    முருகன் மேல ஆசை வச்சி படுத்தா தான் பதக்கம் கிடைக்கும்!

    ReplyDelete
  31. //sury said...
    // இதழோடு-இதழ் கலக்கும் இன்பத்தை வாயால் சொல்லவும் முடியுமா? இதழ் மெல்லவும் முடியுமா?
    மெண்டு அள்ளவும் முடியுமா? //

    அனாவசியமா, பக்தி பிரளயமா கடல் அலை போல பெருக்கெடுத்து ஓடி வரும் இடத்திலே போய்
    அனாசாரமா, அடல்ட்ஸ் ஒன்லி மேட்டரை கொண்டு வந்துவிட்டீரே !//

    மன்னிச்சுக்குங்க சூரி சார்!
    என் முருகனைப் பார்க்கும் போது மனதில் என்ன தோன்றியதோ அதை எழுதி விட்டேன்!

    ReplyDelete
  32. //என் முருகனைப் பார்க்கும் போது மனதில் என்ன தோன்றியதோ அதை எழுதி விட்டேன்//

    அடடே ! என்ன இதெல்லாம் !!
    ஒரு லைட்டர் வீன் லே in humour எழுதியதெல்லாம் பெரிசா எடுத்துட்டீக !!

    அது கிடக்கட்டும். சிரமப்பட்டு ஒரு ஸாங் செந்தில் ஆண்டவன் பத்தி ஒரு சுட்டி கொடுத்திருக்கேனே !
    அதைப் பார்த்து இருப்பீர்களென நினைத்தால்,

    உங்கள் பதில் எதிர்பாரா ரூட்டில் இருக்கிறதே !

    அந்த திருமால் மருகன் முருகனிடம் கொண்ட அன்பு ஒவ்வொருவருக்கும் யுனீக்.
    உங்கள் அனுபவம் எனக்கு இருக்காது. என் அனுபவம் உங்களுக்கு இருக்காது.
    நீங்கள் சொல்லிய பகழியின் அனுபவமோ, அந்த முருகனருள் பெற்றவருக்கே சாத்தியம்.
    அப்பகழியின் பக்கத்தில் நிற்கக்கூட எனக்கெல்லாம் தகுதியில்லை.

    சுட்டியைப் பாருங்கள். இல்லை. கேளுங்கள்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  33. அதி அற்புதம். நல்லதொரு கட்டுரையைப் படித்த திருப்தி இருந்தது. பகழி பற்றிய புகழினைப் படித்துத் தெரிந்து கொண்டேன்.

    தமிழ்ச்சுவையுடன் நகைச்சுவையும் கலந்து எழுதப்பட்ட அழகிய கட்டுரை. மிக்க நன்றி.

    ReplyDelete
  34. //sury said...
    அடடே ! என்ன இதெல்லாம் !!
    ஒரு லைட்டர் வீன் லே in humour எழுதியதெல்லாம் பெரிசா எடுத்துட்டீக !!//

    Thatz ok! No Issues Suri Sir! :)

    வீடியோ அருமை! அலைபாயுதே கந்தா - என் மனம் அலைபாயுதே-வா? :))
    கவி அக்காவுக்கு ஆஸ்தான யூ ட்யூப் மேலாளரான நீங்க, பந்தல் முருகன் பதிவுக்கு அமைத்துத் தந்த காணொளிக்கு மகிழ்ச்சி! நன்றி! :)

    ReplyDelete
  35. கண்ணபிரான் ஐயா, கும்பாபிஷேக சுபநாளில் சைவ வைஷ்ணவ ஒருமையைக் கோடிட்டுக் காட்டி அழகான பதிவிட்டிருக்கிறீர்கள்.. அருமை, பாராட்டுக்கள்!

    செந்தூரின் வரலாறு, அத்தலத்தின் மீது டச்சுக்காரர்கள் ஆக்கிரமிப்பு, கல்வெட்டுக்கள் போன்ற சுவையான செய்திகளுடன் எனது கட்டுரை -

    காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்
    http://www.tamilhindu.com/2009/07/thiruchendur-in-waves-of-time/

    படித்துக் கருத்துக் கூறுங்கள்.

    பி.கு : அதிலும் பகழிக் கூத்தரின் இதே பாடலை நானும் கொடுத்தேள்ளேன் (முழுமையாக). என்ன ஒற்றுமை!

    ReplyDelete
  36. dei ravi anna :)
    innum post padichu mudikala..padichutu vanthu innoru comment poduren :)
    sis ku velaiku time aachu :(( byebye

    ReplyDelete
  37. மாலும் வேலும்
    ===================

    மால்

    மாலை தொடுப்பார் மகளை மணங்கொண்டார்
    வேலை துயில்கொண்ட மால்

    வேல்

    வேலை துயில்கொண்ட விஷ்ணு மருமகனார்
    கோலத் திருக்கையில் வேல்

    சௌந்தர் (சந்த வசந்தம்)

    தேவ்

    ReplyDelete
  38. //R.DEVARAJAN said...
    வைணவ முருகன்
    "திருமக ளுலாவு மிருபுய முராரி திருமருக நாமப் பெருமாள் "//

    இது எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழ், தேவ் சார்!
    அருணகிரியார், பல திருப்புகழ் வரிகளில், மாலவன் சம்பந்தத்தையே முருகனுக்கு ஏற்றிப் பாடுவதன் மர்மம் தான் என்னவோ?

    //முருகப்பெருமானுக்கு முற்பிறப்பும் இருந்துள்ளது.
    ப்ரம்ம ஸூத்ரபாஷ்யத்தில் ஆதி சங்கரர் தெரிவிக்கும் செய்தி இது//

    உம்ம்ம்ம்.

    //ஸனகாதியரில் நான்காமவரான ஸனத்குமாரரின் அவதாரமே குமார ஸ்வாமி//

    இதைக் கேள்விப் பட்டிருக்கேன்! தமிழ் மரபின் படி முருகன் தனித்தமிழ்க் கடவுள் தான்! ஆனால் வட இலக்கியங்களில் சனத்குமாரரே, குமரனாகத் தோன்றினார் என்று வாரியார் சுவாமிகளும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன்!

    //அரனார் வரம் தர முன்வந்தபோது, ‘நான் தருகிறேன்; என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்’
    என்றாராம் ஸனத்குமாரர்.
    அதை ஏற்ற அரனார் அவரையே மகனாகப் பிறக்குமாறு வேண்டினார்.
    ஸனத்குமாரர் குமார ஸ்வாமியாகத் தோன்றினார்//

    தகவலுக்கு நன்றி தேவ் சார்! இது ஸ்காந்த புராணத்தில் உள்ளதா?

    //ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்பதைச் சாந்தோக்ய உபநிஷத்தும்,த்ரிபுரா ரஹஸ்யமும் தெரிவிக்கின்றன//

    ஓ...உபநிடதமே சொல்கிறதா?

    //'ஸனத்குமாரர் இருள் கடந்த நிலை காட்டினார்;அவருக்கு ஸ்கந்தன் என்று பெயர்;ஸ்கந்தன் என்று பெயர்’ – உபநிஷத் இரண்டு முறை முத்தாய்ப்பு வைக்கிறது//

    முடிந்தால், உபநிடத வரிகள் தர முடியுமா தேவ் சார்?

    ReplyDelete
  39. //வெ.இராதாகிருஷ்ணன் said...
    அதி அற்புதம். நல்லதொரு கட்டுரையைப் படித்த திருப்தி இருந்தது. பகழி பற்றிய புகழினைப் படித்துத் தெரிந்து கொண்டேன்//

    பகழியின் கதையை அதிகம் பேர் அறிய மாட்டார்கள்! அதான் இன்று இதைச் சேர்த்துக் கொண்டேன்! :)

    //தமிழ்ச்சுவையுடன் நகைச்சுவையும் கலந்து எழுதப்பட்ட அழகிய கட்டுரை//

    நன்றி இராதாகிருஷ்ணன்!

    ReplyDelete
  40. / இதழோடு-இதழ் கலக்கும் இன்பத்தை வாயால் சொல்லவும் முடியுமா? இதழ் மெல்லவும் முடியுமா?
    மெண்டு அள்ளவும் முடியுமா? //

    மறுமுறையும் அதே வரிகளுக்காக வந்தமைக்கு எனை க்ஷமிக்கவேண்டும்.

    திருப்புகழ் திருவேரகம்(சுவாமிமலை) நான்காவது படைவீடு 36 வது பாடலில் :

    செகமாயை யுற்றெ நக வாழ்வில் வைத்த
    திருமாது கெர்ப்ப முடலூறித்


    தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்
    திரமாய ளித்த பொருளாகி
    மகவாவினுச்சி விழியாத நத்தில்
    மலை நேர்புயத்தில் உறவாடி
    மடிமீதடுத்து விளையாடி நித்த‌
    மணிவாயின் முத்தி தரவேணும்
    முகமாயமிட்ட குறமாதினுக்கு
    மலைமேலணைக்க வரு நீதா
    முதுமாமறைக்குளொருமா பொருட்குள்
    மொழியேயுரைத்த குரு நாதா
    தகையாதெனக்குனடிகாண வைத்த‌
    தனியேரகத்தின் முருகோனே
    தருகாவிரிக்கு வட பாரிசத்தில்
    சமர் வேலெடுத்த பெருமாளே

    இதற்கு உரை எழுதிய திருமுருக கிருபானந்த வாரியார்:

    கவர்ச்சியுள்ள முகமுடைய வள்ளிபிராட்டியின் தனங்களில் பொருந்த வந்தருளிய நீதிபதியே ! பழைய சிறந்த வேதத்தின் ஒப்பற்ற பெரும்
    பொருள்களுக்கு உட்பொருளாகிய ஓம் எனும் ஒரு மொழிப்பொருளை சிவமூர்த்திக்கு உபதேசித்து அருளிய குரு நாதரே ! தடையொன்றும்
    இன்றி, அடியேனுக்கு, உமது திருவடியைக் காணுமாறு அருள் செய்த ஒப்பற்ற திருவேரகத்தில் உறையும் முருகக்கடவுளே! தருக்களுடன்
    கூடிய காவிரி நதிக்கு வடபுறத்தில் போருக்குரிய வேலைத் தாங்கி நிற்கும் பெருமிதம் உடையவரே !

    உலக மாயையில் சேர்ந்து, என் இல்லற வாழ்வில் அமைந்த அழகிய மனைவியின் கருவில் தங்கி உடம்பில் பத்து மாதம் ஊறி முதிர்ச்சியுற்று
    அழகுடன் நிலத்தில் நன்கு தோன்றிய குழந்தை போல,

    தேவரீர் ! எனக்கு அமைந்து, அடியேன் பிள்ளைப் பாசத்துடன் உம்மை உச்சி மோந்தும், கண்ணில் ஒத்தியும்
    முகத்துடன் முகஞ் சேர்த்தும் மகிழுமாறு,
    நீர் என் மலையன்ன புயத்தில் உறவு செய்து,
    என் மடியில் அமர்ந்து,
    விளையாடி,
    நாள்தோறும்
    உமது மணிவாயால்
    முத்தம் தந்தருள வேண்டும்.

    " மடிமீ தடுத்து விளையாடி நித்தம் மணிவாயின் முத்தி தரவேணும்."
    என அருணகிரி நாதர் விண்ணப்பித்ததும்
    பகழிக்கூத்தரின் " முதல்வா ! முத்தன் தருகவே " என்ற கோரிக்கையுடன்
    ஒத்துப்போகும் விதம் தான் என்னே !!

    நிற்க. இன்னொரு செய்தியும் கிடைக்கப்பெற்றேன்.
    பாம்பனடிகள் தம் முதுமைப் பருவத்தில் கால் முறிந்து சென்னை பெரிய மருத்துவ விடுதியில் (இப்போதைய ஜி.ஹெச் தான்)
    கட்டிலில் படுத்திருந்தார். அதிகாலை ஆங்கில துரை மகனாராகிய மருத்துவத் தலைவர் வந்த பொழுது, அடிகளார்
    படுத்திருந்த கட்டிலில் அவர் அருகில் ஒரு குழந்தை படுத்திருக்கக் கண்டார். துணுக்குற்றார்.
    " சன்னியாசியாகிய அடிகளார் அருகில் குழந்தை இருக்கக் காரணம் யாது ? " என வியப்புற்று அருகில் சென்றார்.
    குழந்தை மறைந்து விட்டது.
    ஆக, பாம்பனடிகளுடன் முருகன் குழந்தையாக விளையாடினார்.
    ( திருப்புகழ் விரிவுரை பக்கம் 155)

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  41. பகழிக்கூத்தரின் வரலாற்றை அறியத் தந்ததற்கு நன்றி 'டேய்' இரவி.

    ReplyDelete
  42. //குமரன் (Kumaran) said...
    பகழிக்கூத்தரின் வரலாற்றை அறியத் தந்ததற்கு நன்றி 'டேய்' இரவி.//

    ஆகா! என்ன இது குமரன்? நீங்களும் துர்காவுக்குப் போட்டியா கெளம்பிட்டீகளா என்ன? :))

    ReplyDelete
  43. //υnĸnown вlogger™ said...
    dei ravi anna :)//

    see what kumaran says now :)

    //innum post padichu mudikala..//

    oh...athellam vera nee padichi irukkiya sis? :)

    //padichutu vanthu innoru comment poduren :)//

    theeratha vilayaattu pillai
    theruvile annanukku oyaatha thollai :)

    //sis ku velaiku time aachu :(( byebye//

    enna oru kadamai unarchi....tata :)

    ReplyDelete
  44. //ஜடாயு said...
    கண்ணபிரான் ஐயா, கும்பாபிஷேக சுபநாளில் சைவ வைஷ்ணவ ஒருமையைக் கோடிட்டுக் காட்டி அழகான பதிவிட்டிருக்கிறீர்கள்.. அருமை, பாராட்டுக்கள்!//

    நன்றி ஜடாயு சார்! நான் ஐயா எல்லாம் இல்லை! பையா தானே! உங்களுக்குத் தெரியாததா? :)

    //http://www.tamilhindu.com/2009/07/thiruchendur-in-waves-of-time
    படித்துக் கருத்துக் கூறுங்கள்//

    வாசித்தேன்! நன்றாக இருந்தது! பல தகவல்கள்! விஷ்வா என்பவரின் கேள்விக்கும் அங்கு பதில் சொல்லி உள்ளேன்! :)

    //பி.கு : அதிலும் பகழிக் கூத்தரின் இதே பாடலை நானும் கொடுத்தேள்ளேன் (முழுமையாக). என்ன ஒற்றுமை!//

    :)
    பகழியைத் தெரியாமல் இருக்கலாம்! ஆனால் திருச்செந்தூரின் ஆத்மாவில் இருந்து பகழியைப் பிரிக்கவே முடியாது!

    ReplyDelete
  45. //R.DEVARAJAN said...
    மால்
    மாலை தொடுப்பார் மகளை மணங்கொண்டார்
    வேலை துயில்கொண்ட மால்//

    "மாலை தொடுப்பார்" மகள் யாருங்க தேவ் சார்? :)
    வேலை என்னும் கடலில் துயில் கொண்ட மால்

    //வேலை துயில்கொண்ட விஷ்ணு மருமகனார்
    கோலத் திருக்கையில் வேல்//

    பாட்டு நல்லா இருக்கு! சந்த வசந்தம்! செளந்தர் என்பவர் எழுதியதா? சுட்டி கொடுங்களேன்!

    ReplyDelete
  46. //sury said...
    மறுமுறையும் அதே வரிகளுக்காக வந்தமைக்கு எனை க்ஷமிக்கவேண்டும்//

    ஆகா! என்ன வார்த்தை இது?

    //மலை நேர்புயத்தில் உறவாடி
    மடிமீதடுத்து விளையாடி நித்த‌
    மணிவாயின் முத்தி தரவேணும்//

    சூப்பரு! :)

    //"மடிமீ தடுத்து விளையாடி நித்தம் மணிவாயின் முத்தி தரவேணும்."
    என அருணகிரி நாதர் விண்ணப்பித்ததும்
    பகழிக்கூத்தரின் "முதல்வா ! முத்தன் தருகவே " என்ற கோரிக்கையுடன்
    ஒத்துப்போகும் விதம் தான் என்னே !!//

    நன்றி சூரி சார், திருப்புகழுடன் இந்தப் பாடலை ஒப்பு நோக்கியமைக்கு!

    //சன்னியாசியாகிய அடிகளார் அருகில் குழந்தை இருக்கக் காரணம் யாது ? " என வியப்புற்று அருகில் சென்றார்.
    குழந்தை மறைந்து விட்டது.
    ஆக, பாம்பனடிகளுடன் முருகன் குழந்தையாக விளையாடினார்//

    Yes, Babies dont have any inhibitions! Same is with the Lord!

    Babies don’t come with manual - So is love
    Before we are ready to handle it, it smiles
    -ன்னு நம்ம கவிஞர் ஸ்ரீவத்ஸ் சொல்லுவாரு! :)

    குழந்தையாய் மறைந்த முருகன் தான், பாம்பன் சுவாமிகளுக்கு வேலும் மயிலுமாய், மயூர வாகன சேவை காட்டி, எலும்பு முறிவையும் வேல் நிறுத்திச் சரி செய்தான் என்பது வழக்கு!

    ReplyDelete
  47. பாம்பனையும் விட்டுவைக்காம சில ஆண்டுகளுக்கு முன் எழுதுனதுக்கு சுட்டி இதோ.

    http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_07.html

    ReplyDelete
  48. //அறியத் தந்ததற்கு நன்றி 'டேய்' இரவி..//

    kumaran sir,ennai thavira en chellathai yaarume dei nu solla kudathu :) gottcha??

    ReplyDelete
  49. naan varathukulla rendu post ah??awww...sari methuva padikiren :)

    ReplyDelete
  50. mudhalil vanavaththai thazhuviya murugan enbathe thavaru, saivathai thazhuviya vainavan enbathe sariyana thalaippu - porut kutra - ungalin thamizharivin aazhaminmaiyai kurikkirathu. melum sila karuththukkal
    ungalin thevai enna? edharkaaga neengal vainavar aaneergal?

    thamizh thediya
    thaththuvam matrum iraimaiyai thediya

    iraimayai thedi endral - edharkku indha kuzhappam - neengal vainavar athil irundhu angeye ungal thedalai nigazhthungal. kaduvul vainavar aanaar enbathu sirumaithanam, keezhthanamaana sindhanai. Oru manithan aalayathil pani seivathal andtha kadavulin pirathinithiyaaga mattan. kadavut thanmai is a inner developement. G U Pope pondrorgalin aaraychigalai aayndhu parungal, thiruppugazh matrum thirumandhiram padiyungal - saivam theriya vendumanal. Vainavargalin iranthu pona kadavul avatharangalin kathaigalai matrume nambi vazhum neengal endha aanmiga munnetramum illamal-naamam pottukkondu- matravargalukkum poda muyarchikkatheergal - dhayavu seithu -ithu pondra porutkutra thalaippugalai koduthu kirusthavargal pondra keezhtharamana matha parappu muyarchigal ungal varungala sandhathigalukku perum unmai ilakkiyangalai kidaikkamal seidhuvidum. kristhavargal romaniya matrum Greak purathana mathangalai yesuvin kathaigalai kondu azhithuvittanar. Ellorum inputru irukka ninaippathuve allamal verondrariyen paraparame.

    ReplyDelete
  51. //Sundar said...
    mudhalil vanavaththai thazhuviya murugan enbathe thavaru, saivathai thazhuviya vainavan enbathe sariyana thalaippu - porut kutra - ungalin thamizharivin aazhaminmaiyai kurikkirathu//

    அட அறிவே! தங்கள் "தமிழறிவை"க் கண்டு மெச்சினேன் சுந்தர் அவர்களே! :)

    "தழுவிய"-ன்னு மேற்கோள் குறிகளில் போட்டிருக்கேனே! பார்க்கலையா? "தழுவிய"-ன்னு சொன்னால் மதம் மாறுவது-ன்னு தான் பொருளா? காதலியைக் காதலன் அன்புடன் "தழுவுதற்கு" பேர் என்னவோ? :)

    முருகப் பெருமான், வைணவன் என்று சொல்லப்பட்ட அன்பன் பகழியை, அன்புடன் "தழுவிக்" கொண்டான்! அரவணைத்துக் கொண்டான்! இதுல எங்கய்யா பொருட் குற்றம்? பொல்லாத குற்றம்? வந்துட்டாங்க தலைப்பு சரியில்லை! தலைப்பாகை சரியில்லை-ன்னு! பதிவைப் படிச்சீங்க-ல்ல?

    //ungalin thevai enna? edharkaaga neengal vainavar aaneergal?
    thamizh thediya
    thaththuvam matrum iraimaiyai thediya//

    அது எதுக்குங்க உமக்கு?

    //iraimayai thedi endral - edharkku indha kuzhappam. kaduvul vainavar aanaar enbathu sirumaithanam, keezhthanamaana sindhanai//

    தோடா, சிறுமைத்தன இலக்கணம் படிக்க வந்துட்டாரு!
    எவன்-யா சொன்னா கடவுள் வைணவர் ஆனாரு-ன்னு?
    வைணவ அன்பன் ஒருவனின் முருக அன்பினை ஏற்று, அவனைத் "தழுவிக்" கொண்ட முருகன் என்ன சிறுமைத்தனம் செய்தவனா?

    //endha aanmiga munnetramum illamal-naamam pottukkondu- matravargalukkum poda muyarchikkatheergal//
    //kadavut thanmai is a inner developement.Vainavargalin iranthu pona kadavul avatharangalin kathaigalai matrume nambi vazhum neengal//

    சாத்தான் வேதம் ஓதுதா?
    கடவுட் தன்மை அகவொழுக்கம் என்றால், உங்கள் பேச்சு என்ன? அக ஒழுங்கா?

    அவதாரங்கள் இறந்து போனவையா? நல்லாத் தெரியுமா? நீங்கள் சொன்ன ஜி.யு.போப், திருமூலர், அருணகிரியைக் கேட்போம் வாரீங்களா? அவதாரம் = இறங்கி வருதல்! அனைவருக்காகவும், தன்னிலை தாழ்ந்தாலும், இறங்கி வருதல்! "இறந்து போதல்" அல்ல!

    //dhayavu seithu -ithu pondra porutkutra thalaippugalai koduthu kirusthavargal pondra keezhtharamana matha parappu muyarchigal//

    அவங்க பண்ணுறது "கீழ்த்தரமா"? நீங்க பேசுறது "கீழ்த்தரமா"?
    அவர்களைப் போல வீதியில் இறங்கி, தொழு நோயாளியைத் தொடுவீரா? பட்டையைப் போட்டுக்கிட்டு பஜனை தானே பண்ணுவீரு?

    ஆவுரித்து தின்றுழலும் புலையர் ஏனும்
    அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே-ன்னு அப்பர் சுவாமிகளின் வாக்கைச் செயலில் காட்ட முடியுமா? எதுக்கு இந்த வெட்டி ஜம்பம் உமக்கு?

    //Ellorum inputru irukka ninaippathuve allamal verondrariyen paraparame//

    தோ, நல்லாவே அறிஞ்சீங்களே! எல்லாரும் இன்புற்று இருக்க, சமயங்களைக் "கீழ்த்தரம்", "செத்து போன அவதாரம்"-ன்னு இன்பமாப் பேசின பேச்சை!.....
    மேன்மை கொள் சைவ நெறியை, கிறிஸ்தவர்கள் யாரும் அழிக்க மாட்டார்கள்! உங்களைப் போல சாரமில்லாப் பாரங்கள் தானே அழித்து விடும்! :(

    இவ்ளோ தான் மரியாதை! வேற மாதரி என்னைப் பேச வைக்க வேணாம்-ன்னு எச்சரிக்கிறேன்!

    ReplyDelete
  52. இதைப் படிக்க அடியேனுக்கு முருகன் இன்று தான் அருள் செய்துளன்.எனினும் கண்கள் குளமானது.முருகா....

    ReplyDelete
  53. இன்றைக்கேனும் இதனை வாசிக்க வரமளித்த எம் பெருமானுக்கு எனது நன்றிகள் கோடி.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP