2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-1)
நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டை நெருங்கும் இந்த வேளையில் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! இறைவன் எம்பெருமானுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! நமக்குப் புத்தாண்டு உறுதிமொழிகள்-னு இருப்பது போல், அவனுக்கும் ஏதாச்சும் இருக்காதா என்ன? :-)
திருக்கோவில்கள் திருந்த வேண்டுமா? அப்படின்னா, இனி மேல் கோவில் உண்டியலில் காசு போடாதீங்க!
என்னடா இது மாதவிப் பந்தலில் அக்ரமம்-ன்னு பாக்கறீங்களா? வரும் 2008-இலாவது ஆலயங்கள் திருந்துமா?
இல்லை...நமக்கென்ன வந்தது, கோயிலுக்குப் போனோமா, சும்மானா (இல்லை அம்பது ரூவா டிக்கெட் வாங்கி) சாமியப் பாத்தோமா, பாக்கெட் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமா, அப்படியே பக்தர்களை/பக்தைகளை நோட்டம் விட்டோமா... வீட்டுக்கு வந்த பின்,
ஆகா ஆலயத்தில் என்னமா தரிசனம், முருகப் பெருமானை என்னமா அலங்காரம் பண்ணியிருந்தாக-ன்னு பதிவு போட்டோமா...மேட்டர் ஓவர்!
இந்த ஆண்டின் துவக்கத்தில் என் இனிய நண்பன் ராகவன் ஒரு பதிவு போட்டிருந்தான். 2007 இல் ஆவது திருக்கோயில்கள் திருந்துமா என்று! - அதில் அவன் தனிப்பட்ட ஆசைகளை மட்டுமே சொல்லி இருந்தானே அன்றி, சமூக நடைமுறை வழிகளைச் சொல்லவில்லை!
இதோ ஆண்டு முடியப் போகிறது! ஆலயங்கள் திருந்தி விட்டனவா?
ஹிஹி! அது எல்லாம் நடக்கிற விஷயமா என்ன? அப்ப இதுக்கு என்ன தான் வழி? - திருத்தங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்! எப்படி? மேலே படிங்க.
ஆலயங்கள் திருந்தணும்னா ரெண்டு பேரு மனசு வைக்கணும்!
ஒன்னு நிர்வாகம்! இன்னொன்னு நாம்! - நிர்வாகத்தின் பங்கு 60% என்றால் நம் பங்கு 40%.
நிர்வாகம் பற்றிய மாற்று எண்ணங்கள் குறித்து அடுத்த பதிவில் பலவற்றைச் சொல்கிறேன்! இன்னிக்கி நம்மளால முடிஞ்சது என்னென்ன பண்ணலாம்-னு பார்ப்போமா?
ஜனவரி முதல் நாள், முதல் வேலையாக இறைவனைத் தரிசத்து விட்டுத் தான் புத்தாண்டை ஆரம்பிக்க வேண்டும் என்று பல பேர் நினைப்பார்கள்!
அதற்காக மார்கழிக் குளிரில், கால் கடுக்க பெரிய வரிசையில் நிற்பார்கள்! - நல்லது தான்! இறைவன் திருமுகம் நம் மனத்தைக் கனியச் செய்யக் கூடியது! அவசியம் சென்று சேவித்து விட்டு வாருங்கள்!
ஆனால் அப்படி வரிசையில் நிற்கும் போது, கொஞ்சம் கீழ்க்கண்ட சிந்தனைகளையும் அசை போட்டுக் கொண்டே நில்லுங்கள்! இறைவனுக்கு நீங்கள் செய்யும் சிறு பங்களிப்பாக, சில புத்தாண்டு உறுதிமொழிகள் அமையட்டுமே!
1. எக்காரணம் கொண்டும், ஸ்பெஷல் டிக்கட் எடுத்து தரிசனம் செய்யாதீர்கள்! - முதலில் ஈசியா சேவிக்கலாம் என்ற எண்ணத்தைக் கைவிடப் பழகிக் கொள்ளுங்கள்!
பிசினஸ் க்ளாஸ், எகானமி க்ளாஸ், முதல் வகுப்பு, ஏசி சேர் கார் என்றெல்லாம் சொகுசுப் பயணம் செய்ய, ஆலயம் என்பது விமானப் பயணமோ, இரயில் பயணமோ அல்ல!
இறையருளில் இப்படியான சொகுசுகள், ஊருக்குக் கொண்டு போய் சேர்க்காது! :-)
கூட்டமாக இருக்கு! டைம் ஆகும்! ரொம்ப பிசி என்று நினைக்கிறீர்களா?
அப்படின்னா கோயிலுக்குப் போகவே வேண்டாம்!
காலத்தைக் கடந்தவனைக் காணக் கூட உங்களுக்குக் காலம் இல்லை-ன்னா, அப்படி ஏன் போக வேண்டும்? இல்லத்தில் இருந்தே, குடும்பமாக வழிபடலாமே?
தயவு செய்து இந்தச் சொகுசுப் போக்கு வேண்டவே வேண்டாம்! முடிந்த வரை இதைத் தவிர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்! உங்க கால வசதிக்கு ஒத்து வருவது போல் ஆலய யாத்திரைக்கு முன்பே திட்டமிட்டுக் கொண்டு செல்லுங்கள்!
(சிறப்புத் தரிசனம் இருப்பதால் தானே போகிறோம்; நான் ஒருவர் மட்டும் மாறினால் போதுமா? என்பதெல்லாம் விதண்டாவாதம் தான்! அரசு இந்தப் பணம் கொழிக்கும் திட்டத்தை அவ்வளவு சீக்கிரம் கலைக்காது! அதற்கு மாற்று வழிகளை அடுத்த பதிவில் பார்ப்போம்)
2. ஆலய உண்டியல்களில் காசைக் கொட்டும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்!
நினைவில் நிறுத்துங்கள்!
* ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரியும் எத்தனை சல்லிக்காசு உண்டியலில் போட்டார்கள்?
** பணம் போடுவதால் பாவங்கள் கரைவதில்லை!
*** இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது!!!
நம் அம்மா அப்பா கூட பெற்ற பிள்ளைகளிடம் வேண்டுமானால், பணம் எதிர்பார்க்காமல் இருக்கலாம்! ஆனால் அதே அம்மா அப்பா, பணத்தை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பார்கள்!
இறைவனோ நம் அனைவருக்குமே தாயும் தந்தையும் ஆனவன்! எனவே அவன் யாரிடம் இருந்தும் உண்டியல் பணத்தை எதிர்பார்ப்பதில்லை!
அச்சோ, தெய்வ குற்றம் ஆகி விடுமே-ன்னு அச்சமா? வேண்டுதல் நிறைவேத்தனும்-னா சாங்கியத்துக்கு மஞ்சள் துணியில் ஒத்தை ரூபாய் சுற்றிப் போடுங்கள்! போதும்!
அப்படின்னா ஆலயச் செலவுக்கும், வளர்ச்சிக்கும் என்ன செய்வதாம்?-னு கேள்வி வரும். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்!
எல்லாப் பக்தர்களுமே குற்ற உணர்ச்சியில் தான் உண்டியலில் பணம் போடுறாங்கன்னு சொல்ல மாட்டேன்! அவர்களால் முடிந்த தர்மத்தை, அவர்கள் அடிக்கடி போகும் இடத்தில் செய்யறாங்க! அது புரிகிறது!
ஆனா அந்த உதவி, சரியாகப் பயன்படுதா?....இல்லை முதலை வாயில் போய் விழுதா? சரியாகப் பயன்படாத போது, ரூட்டை லேசா மாத்திக்கிடணும்! அதுக்கு என்ன பண்ணலாம்?
கோவில் உண்டியல் அருகே உட்கார்ந்து கொண்டு, ஒரு காசோலையில் பணம் மட்டும் நிரப்பிக் கொள்ளுங்கள்! உண்டியலில் எவ்ளோ பணம் போட நெனச்சீங்களோ, அதைக் காசோலையில் எழுதிக் கொள்ளுங்க!
ஒவ்வொரு முறை கோவிலுக்குப் போகும் போதும், பழம் பூ தேங்காய் போல, இந்தக் காசோலைப் புத்தகத்தையும் எடுத்துச் செல்லுங்க! காசோலைப் புத்தகம் நிரம்பிய பின், அதை ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கோ, தர்ம காரியத்துக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்!
3. முடிந்த வரை புதுப்புது ஆலய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
இருக்கும் பல கோயில்களை நல்ல முறையில் பராமரிக்க உதவுங்கள்! கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள்! கோயில்களையே ஊர் முழுதும் குடி வைக்கச் சொல்லவில்லை! :-)
4. ஆலய வளாகத்தில் நடைபெறும் சிறுவர் வகுப்புகள், தமிழ் இலக்கிய முயற்சிகள், விரிவுரைகள், இசை வகுப்புகள் ஆகியவற்றில் பங்கு கொள்ள முயலுங்கள்.
இதுவும் ஒரு யோகா பயிற்சி போலத் தான்! கோயிலில் கண்ணை மூடிக் கொள்ள வேண்டாம். திறந்து வைத்துக் கொண்டு, இது போல் பயிற்சிகள் இருக்கா-ன்னு விசாரியுங்கள்.
5. நீங்கள் செல்லும் ஆலயத்தில் தமிழ் அர்ச்சனை வசதி இருந்தால், கண்டிப்பாக ஒரு முறை,
தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கேட்டுத் தான் பாருங்களேன்.
அவர்களாகச் செய்யும் காலம் வரும் வரை, நீங்கள் தான் ஒரு காலை முன் வைக்க வேண்டும். உங்கள் பிறந்த நாளன்று முயன்று பாருங்கள். புரிந்து செய்யும் வழிபாட்டில் நிச்சயம் உங்கள் மனம் லயித்துக் கரைந்து போகும்.
வெளி மாநிலங்களில் நீங்கள் யாத்திரை போனால் பரவாயில்லை! நம்ம ஊரில், நம்ம ஆழ்வார்கள் இறைவனோடு தமிழில் உரையாடினதை, உங்கள் காதுகள் கேட்கக் கசக்குமா என்ன?
பூபாலக திரிவிக்ரமாய நமஹ= அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
லங்காபுரி சமர்த்தனாய நமஹ= சென்று அங்குத் தென்னிலங்கைச் செற்றாய் திறல் போற்றி!
சகடாசுர காலாந்தகாய நமஹ= பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கோவர்த்தன கிரி ஆதபத்ராய நமஹ= குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!
என்று அவ்வளவு அழகாக மொழியாக்கிக் கொடுத்துட்டுப் போயிருக்காங்க!
யாரு? தமிழக அரசு அறநிலையத் துறை அமைச்சர்களா? சேச்சே! இல்லையில்லை! இதுக்கெல்லாம் அவிங்களுக்கு நேரம் இருக்குமா? இதுக்கெல்லாம் நேரத்தை வீணாக்கினா, அப்புறம் டமிள் வாள்க-ன்னு கூட்டணி மேடைகளில் முழங்க நேரம் இல்லாம் போயிடுமே!:-)
இதைச் செய்தவள் தமிழகத்தை ஆண்ட ஒரு பெண்! ....
தமிழ்த் தெய்வத்தையே ஆண்ட ஒரு பெண்!.....ஆண்டாள் என்னும் கோதை, இவ்வளவு இனிமையா மொழியாக்கிக் கொடுத்திட்டுப் போயிருக்கா! அதைப் பயன்படுத்திக்குங்க!
6. பெருமை வாய்ந்த பல ஆலயங்கள் மிக மிகப் பழமையானவை. இன்று அவற்றுள் பல கேட்பார் அற்றுக் கிடக்கின்றன. அவற்றின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
ஒரே இடத்தில் பணம் கொட்டுவதால் பெரிய நன்மைகள் ஆலயத்துக்கோ, உங்களுக்கோ எதுவுமே அல்ல! அரசின் முதலை வாய்க்குத் தான் போகும்.
எனவே இப்படி மாற்று வழியில் காணிக்கைகள் செலுத்துங்கள். தமிழ்ப் பதிகங்கள், பாசுரங்கள் பெற்ற தலங்கள் எல்லாம் ஓரளவு சீரடையும்.
கட்டாயம் இந்த வலைப்பூவுக்குப் போங்கள்;
Temple Cleaners என்ற அவர்கள் yahoo group-உம் உள்ளது. அவர்கள் இது போன்ற உதவி தேவைப்படும் தொன்மையான ஆலயங்களை அந்த வலைப்பதிவில் அடிக்கடி பட்டியல் இடுவார்கள். அதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்திருந்தால் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்!
7. ஆலயத்துக்கு அருகிலேயே உள்ள, குழந்தைகள் இல்லம் அல்லது முதியோர் விடுதியில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!
ஆலய தரிசனம் முடிந்து வரும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்!
இறைவனைக் கண்ணாரக் காண்பதும் ஒன்று தான்! எளிய உள்ளங்களின் வாழ்த்தைக் காதாரக் கேட்பதும் ஒன்று தான்! முதல் முறை பழகும் போது கடினமாக இருக்கும்! மாற்றத்தை மனம் பழகிக் கொண்டால், அதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களுக்குத் தானாகப் புரியும்!
முன்பெல்லாம் ஆலயத்தை ஒட்டி ஆதுரச் சாலைகள் (மருத்துவமனைகள்), கல்வி நிலையங்கள், பாலர் பள்ளிகள் இருக்கும். பொன்னியின் செல்வனில் கூடப் படிச்சிருப்பீங்க!
திருவரங்கத்தில் இராமானுசர் தானியக் கொப்பரை உண்டியல், மருத்துவ நிதி எல்லாம் ஏற்படுத்தினார். மறைந்த காஞ்சிப் பெரியவர் பிடி அரிசித் திட்டம் கொண்டு வந்தார்.
தினமும் சமைக்கும் முன்னர், பல குடும்பங்கள், ஒரு பிடி அரிசியை, வீட்டில் உள்ள உண்டியல் பாத்திரத்தில் கொட்டினர். பின்னர் அவை தர்ம காரியங்களுக்குச் சேகரிக்கப்பட்டன.
ஆனா, இப்போது ஆலயங்கள் எல்லாம் வணிக வளாகங்களாக மாற்றப்பட்ட பின், இவை எல்லாம் போக்கொழிந்தன. எனவே நீங்களாக அருகில் உள்ள ஒரு காப்பகத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுடன் ஆலயம் செல்லும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்!
இயந்திர கதி வாழ்வில், குழந்தைகளுக்குத் தங்களை ஒத்த Lesser Fortunate குழந்தைகளைப் பார்க்கும் போது தானாகப் பொறுப்பு கூடும்! நீங்க எவ்ளோ அட்வைஸ் பண்ணியும் கேக்காத பசங்க, இதப் பாத்து தானா மாறுவாங்க!
சும்மா டிவிப் பொட்டி, கம்ப்யூட்டர் கேம்ஸ், ஆர்க்குட் சாட், சினிமாவிலேயே இந்தக் காலத்துப் பசங்க மூழ்கிக் கிடக்குதுங்க-ன்னு சலிச்சிக்காதீங்க. இப்படி முயன்று பாருங்க. குழந்தைகளுக்குப் பிடித்துப் போகும்.
அடுத்த தலைமுறைக்கு நம்ம ஆன்மீகம், பண்பாடு, மனித நேயப் பார்வையைக் கொண்டு கொடுத்த புண்ணியம் உங்களுக்குக் கிட்டட்டும்!
8. ஆலயத்தில், குளங்களில் தூய்மை பேணுங்கள். திருநீறு, குங்குமம், சந்தனம், துளசி என்று மீதியைக் கொட்ட இடமில்லை என்றாலும், தேடிப் போய் அதற்கென்று இருக்கும் இடத்தில் கொட்டுங்கள். எல்லாக் கோவில்களிலும் அபிஷேக/திருமஞ்சன நீர் வந்து விழும் ஒரு தொட்டி இருக்கும். கொட்ட இடமே இல்லை என்றால், அதில் போய்க் கொட்டுங்கள்! ஒரு பாவமும் அறியாத தூண்களையும் மாடங்களையும் விட்டு விடுங்களேன், ப்ளீஸ்! :-)
9. ஆலயத்தில் இரைந்து பேசலாம்! ஓடி ஆடலாம்! ஒருவரை ஒருவர் விசாரிக்கலாம்! குடும்பங்கள் கலந்துரையாடலாம்! எந்தப் புடைவை எங்கே வாங்கினீங்க-ன்னு கேட்கலாம்! யாருக்கு எங்கே பொண்ணு பாத்து இருக்கீங்க-ன்னு விசாரிக்கலாம்! நம் போன்ற வாலிபர்கள்/இளைஞிகள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழலாம்! தப்பே இல்லை! :-)
நம் ஆலயங்கள் சமூகக் கூடங்கள்! தியான மண்டபங்கள் அல்ல! அதனால் தாரளமாகப் பேசுங்கள்!
ஆனால் முடிந்தவரை சுடு சொற்களை, ஆலய வளாகத்தில் தவிர்க்கவும்! அடுத்தவரைப் புறங்கூறிப் பேசுதல், மட்டம் தட்டிப் பேசுதல் முதலான செயல்களைத் தவிர்க்கவும்!
கருவறைக்குள் மட்டும் அமைதி காத்து, வழிபடுங்கள்!
பிற இடங்கள் எல்லாம் உங்கள் வீட்டு அறைகள் தான்! கருவறை மட்டும் தான் நூலக அறை! அங்கு அமைதி பெறுங்கள்!
10. எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! - உங்களுக்காக அல்ல! உங்கள் குழந்தைகளுக்காக!
நம் குழந்தைகள் இன்று மாறுபட்ட காலகட்டத்தில் வளர்கின்றன. எதை ஒன்றையும் கேள்வி கேட்டு அறியும் குணம் இன்று அதிகம்! அது நல்லதும் கூட! அப்போது தான் உடைமைக் குணம் (sense of ownership) வளரும்!
இப்படி வளரும் குழந்தைகளின் முன், இறைவனைக் கூடப் பணமும் அதிகாரமும் இருந்தால் தான் பார்க்க முடியும் என்று தவறான யோசனைக்கு நாமே தள்ளிவிடலாமா?
இதனால் ஒட்டு மொத்த பண்பாடும் மாறித் தான் போகும். மன அமைதிக்கு ஆன்மீகம் என்ற நிலை போய், மன அழுத்தங்களைத் தான் அடுத்த தலைமுறைக்குப் பரிசாக விட்டுச் செல்வோம்!
அதனால்
எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! - உங்களுக்காக அல்ல! உங்கள் குழந்தைகளுக்காக!
(அடுத்த பதிவில், தமிழ் வழிபாடு, ஆலய நிர்வாகச் சீர்திருத்தம்-னு அவங்க கையில் இருக்கும் ஐட்டங்களைப் பார்க்கலாம்! )
அனைவருக்கும்
இனிய, வளமான புத்தாண்டாக 2008 அமையட்டும்! இறையருள் கனியட்டும்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புதுமணத் தம்பதிகளுக்கு Happy Thala New Year :-)
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
திருக்கோவில்கள் திருந்த வேண்டுமா? அப்படின்னா, இனி மேல் கோவில் உண்டியலில் காசு போடாதீங்க!
என்னடா இது மாதவிப் பந்தலில் அக்ரமம்-ன்னு பாக்கறீங்களா? வரும் 2008-இலாவது ஆலயங்கள் திருந்துமா?
இல்லை...நமக்கென்ன வந்தது, கோயிலுக்குப் போனோமா, சும்மானா (இல்லை அம்பது ரூவா டிக்கெட் வாங்கி) சாமியப் பாத்தோமா, பாக்கெட் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமா, அப்படியே பக்தர்களை/பக்தைகளை நோட்டம் விட்டோமா... வீட்டுக்கு வந்த பின்,
ஆகா ஆலயத்தில் என்னமா தரிசனம், முருகப் பெருமானை என்னமா அலங்காரம் பண்ணியிருந்தாக-ன்னு பதிவு போட்டோமா...மேட்டர் ஓவர்!
இந்த ஆண்டின் துவக்கத்தில் என் இனிய நண்பன் ராகவன் ஒரு பதிவு போட்டிருந்தான். 2007 இல் ஆவது திருக்கோயில்கள் திருந்துமா என்று! - அதில் அவன் தனிப்பட்ட ஆசைகளை மட்டுமே சொல்லி இருந்தானே அன்றி, சமூக நடைமுறை வழிகளைச் சொல்லவில்லை!
இதோ ஆண்டு முடியப் போகிறது! ஆலயங்கள் திருந்தி விட்டனவா?
ஹிஹி! அது எல்லாம் நடக்கிற விஷயமா என்ன? அப்ப இதுக்கு என்ன தான் வழி? - திருத்தங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்! எப்படி? மேலே படிங்க.
ஆலயங்கள் திருந்தணும்னா ரெண்டு பேரு மனசு வைக்கணும்!
ஒன்னு நிர்வாகம்! இன்னொன்னு நாம்! - நிர்வாகத்தின் பங்கு 60% என்றால் நம் பங்கு 40%.
நிர்வாகம் பற்றிய மாற்று எண்ணங்கள் குறித்து அடுத்த பதிவில் பலவற்றைச் சொல்கிறேன்! இன்னிக்கி நம்மளால முடிஞ்சது என்னென்ன பண்ணலாம்-னு பார்ப்போமா?
ஜனவரி முதல் நாள், முதல் வேலையாக இறைவனைத் தரிசத்து விட்டுத் தான் புத்தாண்டை ஆரம்பிக்க வேண்டும் என்று பல பேர் நினைப்பார்கள்!
அதற்காக மார்கழிக் குளிரில், கால் கடுக்க பெரிய வரிசையில் நிற்பார்கள்! - நல்லது தான்! இறைவன் திருமுகம் நம் மனத்தைக் கனியச் செய்யக் கூடியது! அவசியம் சென்று சேவித்து விட்டு வாருங்கள்!
ஆனால் அப்படி வரிசையில் நிற்கும் போது, கொஞ்சம் கீழ்க்கண்ட சிந்தனைகளையும் அசை போட்டுக் கொண்டே நில்லுங்கள்! இறைவனுக்கு நீங்கள் செய்யும் சிறு பங்களிப்பாக, சில புத்தாண்டு உறுதிமொழிகள் அமையட்டுமே!
1. எக்காரணம் கொண்டும், ஸ்பெஷல் டிக்கட் எடுத்து தரிசனம் செய்யாதீர்கள்! - முதலில் ஈசியா சேவிக்கலாம் என்ற எண்ணத்தைக் கைவிடப் பழகிக் கொள்ளுங்கள்!
பிசினஸ் க்ளாஸ், எகானமி க்ளாஸ், முதல் வகுப்பு, ஏசி சேர் கார் என்றெல்லாம் சொகுசுப் பயணம் செய்ய, ஆலயம் என்பது விமானப் பயணமோ, இரயில் பயணமோ அல்ல!
இறையருளில் இப்படியான சொகுசுகள், ஊருக்குக் கொண்டு போய் சேர்க்காது! :-)
கூட்டமாக இருக்கு! டைம் ஆகும்! ரொம்ப பிசி என்று நினைக்கிறீர்களா?
அப்படின்னா கோயிலுக்குப் போகவே வேண்டாம்!
காலத்தைக் கடந்தவனைக் காணக் கூட உங்களுக்குக் காலம் இல்லை-ன்னா, அப்படி ஏன் போக வேண்டும்? இல்லத்தில் இருந்தே, குடும்பமாக வழிபடலாமே?
தயவு செய்து இந்தச் சொகுசுப் போக்கு வேண்டவே வேண்டாம்! முடிந்த வரை இதைத் தவிர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்! உங்க கால வசதிக்கு ஒத்து வருவது போல் ஆலய யாத்திரைக்கு முன்பே திட்டமிட்டுக் கொண்டு செல்லுங்கள்!
(சிறப்புத் தரிசனம் இருப்பதால் தானே போகிறோம்; நான் ஒருவர் மட்டும் மாறினால் போதுமா? என்பதெல்லாம் விதண்டாவாதம் தான்! அரசு இந்தப் பணம் கொழிக்கும் திட்டத்தை அவ்வளவு சீக்கிரம் கலைக்காது! அதற்கு மாற்று வழிகளை அடுத்த பதிவில் பார்ப்போம்)
2. ஆலய உண்டியல்களில் காசைக் கொட்டும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்!
நினைவில் நிறுத்துங்கள்!
* ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரியும் எத்தனை சல்லிக்காசு உண்டியலில் போட்டார்கள்?
** பணம் போடுவதால் பாவங்கள் கரைவதில்லை!
*** இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது!!!
நம் அம்மா அப்பா கூட பெற்ற பிள்ளைகளிடம் வேண்டுமானால், பணம் எதிர்பார்க்காமல் இருக்கலாம்! ஆனால் அதே அம்மா அப்பா, பணத்தை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பார்கள்!
இறைவனோ நம் அனைவருக்குமே தாயும் தந்தையும் ஆனவன்! எனவே அவன் யாரிடம் இருந்தும் உண்டியல் பணத்தை எதிர்பார்ப்பதில்லை!
அச்சோ, தெய்வ குற்றம் ஆகி விடுமே-ன்னு அச்சமா? வேண்டுதல் நிறைவேத்தனும்-னா சாங்கியத்துக்கு மஞ்சள் துணியில் ஒத்தை ரூபாய் சுற்றிப் போடுங்கள்! போதும்!
அப்படின்னா ஆலயச் செலவுக்கும், வளர்ச்சிக்கும் என்ன செய்வதாம்?-னு கேள்வி வரும். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்!
எல்லாப் பக்தர்களுமே குற்ற உணர்ச்சியில் தான் உண்டியலில் பணம் போடுறாங்கன்னு சொல்ல மாட்டேன்! அவர்களால் முடிந்த தர்மத்தை, அவர்கள் அடிக்கடி போகும் இடத்தில் செய்யறாங்க! அது புரிகிறது!
ஆனா அந்த உதவி, சரியாகப் பயன்படுதா?....இல்லை முதலை வாயில் போய் விழுதா? சரியாகப் பயன்படாத போது, ரூட்டை லேசா மாத்திக்கிடணும்! அதுக்கு என்ன பண்ணலாம்?
கோவில் உண்டியல் அருகே உட்கார்ந்து கொண்டு, ஒரு காசோலையில் பணம் மட்டும் நிரப்பிக் கொள்ளுங்கள்! உண்டியலில் எவ்ளோ பணம் போட நெனச்சீங்களோ, அதைக் காசோலையில் எழுதிக் கொள்ளுங்க!
ஒவ்வொரு முறை கோவிலுக்குப் போகும் போதும், பழம் பூ தேங்காய் போல, இந்தக் காசோலைப் புத்தகத்தையும் எடுத்துச் செல்லுங்க! காசோலைப் புத்தகம் நிரம்பிய பின், அதை ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கோ, தர்ம காரியத்துக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்!
இருக்கும் பல கோயில்களை நல்ல முறையில் பராமரிக்க உதவுங்கள்! கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள்! கோயில்களையே ஊர் முழுதும் குடி வைக்கச் சொல்லவில்லை! :-)
4. ஆலய வளாகத்தில் நடைபெறும் சிறுவர் வகுப்புகள், தமிழ் இலக்கிய முயற்சிகள், விரிவுரைகள், இசை வகுப்புகள் ஆகியவற்றில் பங்கு கொள்ள முயலுங்கள்.
இதுவும் ஒரு யோகா பயிற்சி போலத் தான்! கோயிலில் கண்ணை மூடிக் கொள்ள வேண்டாம். திறந்து வைத்துக் கொண்டு, இது போல் பயிற்சிகள் இருக்கா-ன்னு விசாரியுங்கள்.
5. நீங்கள் செல்லும் ஆலயத்தில் தமிழ் அர்ச்சனை வசதி இருந்தால், கண்டிப்பாக ஒரு முறை,
தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கேட்டுத் தான் பாருங்களேன்.
அவர்களாகச் செய்யும் காலம் வரும் வரை, நீங்கள் தான் ஒரு காலை முன் வைக்க வேண்டும். உங்கள் பிறந்த நாளன்று முயன்று பாருங்கள். புரிந்து செய்யும் வழிபாட்டில் நிச்சயம் உங்கள் மனம் லயித்துக் கரைந்து போகும்.
வெளி மாநிலங்களில் நீங்கள் யாத்திரை போனால் பரவாயில்லை! நம்ம ஊரில், நம்ம ஆழ்வார்கள் இறைவனோடு தமிழில் உரையாடினதை, உங்கள் காதுகள் கேட்கக் கசக்குமா என்ன?
பூபாலக திரிவிக்ரமாய நமஹ= அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
லங்காபுரி சமர்த்தனாய நமஹ= சென்று அங்குத் தென்னிலங்கைச் செற்றாய் திறல் போற்றி!
சகடாசுர காலாந்தகாய நமஹ= பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கோவர்த்தன கிரி ஆதபத்ராய நமஹ= குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!
என்று அவ்வளவு அழகாக மொழியாக்கிக் கொடுத்துட்டுப் போயிருக்காங்க!
யாரு? தமிழக அரசு அறநிலையத் துறை அமைச்சர்களா? சேச்சே! இல்லையில்லை! இதுக்கெல்லாம் அவிங்களுக்கு நேரம் இருக்குமா? இதுக்கெல்லாம் நேரத்தை வீணாக்கினா, அப்புறம் டமிள் வாள்க-ன்னு கூட்டணி மேடைகளில் முழங்க நேரம் இல்லாம் போயிடுமே!:-)
இதைச் செய்தவள் தமிழகத்தை ஆண்ட ஒரு பெண்! ....
தமிழ்த் தெய்வத்தையே ஆண்ட ஒரு பெண்!.....ஆண்டாள் என்னும் கோதை, இவ்வளவு இனிமையா மொழியாக்கிக் கொடுத்திட்டுப் போயிருக்கா! அதைப் பயன்படுத்திக்குங்க!
6. பெருமை வாய்ந்த பல ஆலயங்கள் மிக மிகப் பழமையானவை. இன்று அவற்றுள் பல கேட்பார் அற்றுக் கிடக்கின்றன. அவற்றின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
ஒரே இடத்தில் பணம் கொட்டுவதால் பெரிய நன்மைகள் ஆலயத்துக்கோ, உங்களுக்கோ எதுவுமே அல்ல! அரசின் முதலை வாய்க்குத் தான் போகும்.
எனவே இப்படி மாற்று வழியில் காணிக்கைகள் செலுத்துங்கள். தமிழ்ப் பதிகங்கள், பாசுரங்கள் பெற்ற தலங்கள் எல்லாம் ஓரளவு சீரடையும்.
கட்டாயம் இந்த வலைப்பூவுக்குப் போங்கள்;
Temple Cleaners என்ற அவர்கள் yahoo group-உம் உள்ளது. அவர்கள் இது போன்ற உதவி தேவைப்படும் தொன்மையான ஆலயங்களை அந்த வலைப்பதிவில் அடிக்கடி பட்டியல் இடுவார்கள். அதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்திருந்தால் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்!
7. ஆலயத்துக்கு அருகிலேயே உள்ள, குழந்தைகள் இல்லம் அல்லது முதியோர் விடுதியில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!
ஆலய தரிசனம் முடிந்து வரும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்!
இறைவனைக் கண்ணாரக் காண்பதும் ஒன்று தான்! எளிய உள்ளங்களின் வாழ்த்தைக் காதாரக் கேட்பதும் ஒன்று தான்! முதல் முறை பழகும் போது கடினமாக இருக்கும்! மாற்றத்தை மனம் பழகிக் கொண்டால், அதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களுக்குத் தானாகப் புரியும்!
முன்பெல்லாம் ஆலயத்தை ஒட்டி ஆதுரச் சாலைகள் (மருத்துவமனைகள்), கல்வி நிலையங்கள், பாலர் பள்ளிகள் இருக்கும். பொன்னியின் செல்வனில் கூடப் படிச்சிருப்பீங்க!
திருவரங்கத்தில் இராமானுசர் தானியக் கொப்பரை உண்டியல், மருத்துவ நிதி எல்லாம் ஏற்படுத்தினார். மறைந்த காஞ்சிப் பெரியவர் பிடி அரிசித் திட்டம் கொண்டு வந்தார்.
தினமும் சமைக்கும் முன்னர், பல குடும்பங்கள், ஒரு பிடி அரிசியை, வீட்டில் உள்ள உண்டியல் பாத்திரத்தில் கொட்டினர். பின்னர் அவை தர்ம காரியங்களுக்குச் சேகரிக்கப்பட்டன.
ஆனா, இப்போது ஆலயங்கள் எல்லாம் வணிக வளாகங்களாக மாற்றப்பட்ட பின், இவை எல்லாம் போக்கொழிந்தன. எனவே நீங்களாக அருகில் உள்ள ஒரு காப்பகத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுடன் ஆலயம் செல்லும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்!
இயந்திர கதி வாழ்வில், குழந்தைகளுக்குத் தங்களை ஒத்த Lesser Fortunate குழந்தைகளைப் பார்க்கும் போது தானாகப் பொறுப்பு கூடும்! நீங்க எவ்ளோ அட்வைஸ் பண்ணியும் கேக்காத பசங்க, இதப் பாத்து தானா மாறுவாங்க!
சும்மா டிவிப் பொட்டி, கம்ப்யூட்டர் கேம்ஸ், ஆர்க்குட் சாட், சினிமாவிலேயே இந்தக் காலத்துப் பசங்க மூழ்கிக் கிடக்குதுங்க-ன்னு சலிச்சிக்காதீங்க. இப்படி முயன்று பாருங்க. குழந்தைகளுக்குப் பிடித்துப் போகும்.
அடுத்த தலைமுறைக்கு நம்ம ஆன்மீகம், பண்பாடு, மனித நேயப் பார்வையைக் கொண்டு கொடுத்த புண்ணியம் உங்களுக்குக் கிட்டட்டும்!
8. ஆலயத்தில், குளங்களில் தூய்மை பேணுங்கள். திருநீறு, குங்குமம், சந்தனம், துளசி என்று மீதியைக் கொட்ட இடமில்லை என்றாலும், தேடிப் போய் அதற்கென்று இருக்கும் இடத்தில் கொட்டுங்கள். எல்லாக் கோவில்களிலும் அபிஷேக/திருமஞ்சன நீர் வந்து விழும் ஒரு தொட்டி இருக்கும். கொட்ட இடமே இல்லை என்றால், அதில் போய்க் கொட்டுங்கள்! ஒரு பாவமும் அறியாத தூண்களையும் மாடங்களையும் விட்டு விடுங்களேன், ப்ளீஸ்! :-)
9. ஆலயத்தில் இரைந்து பேசலாம்! ஓடி ஆடலாம்! ஒருவரை ஒருவர் விசாரிக்கலாம்! குடும்பங்கள் கலந்துரையாடலாம்! எந்தப் புடைவை எங்கே வாங்கினீங்க-ன்னு கேட்கலாம்! யாருக்கு எங்கே பொண்ணு பாத்து இருக்கீங்க-ன்னு விசாரிக்கலாம்! நம் போன்ற வாலிபர்கள்/இளைஞிகள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழலாம்! தப்பே இல்லை! :-)
நம் ஆலயங்கள் சமூகக் கூடங்கள்! தியான மண்டபங்கள் அல்ல! அதனால் தாரளமாகப் பேசுங்கள்!
ஆனால் முடிந்தவரை சுடு சொற்களை, ஆலய வளாகத்தில் தவிர்க்கவும்! அடுத்தவரைப் புறங்கூறிப் பேசுதல், மட்டம் தட்டிப் பேசுதல் முதலான செயல்களைத் தவிர்க்கவும்!
கருவறைக்குள் மட்டும் அமைதி காத்து, வழிபடுங்கள்!
பிற இடங்கள் எல்லாம் உங்கள் வீட்டு அறைகள் தான்! கருவறை மட்டும் தான் நூலக அறை! அங்கு அமைதி பெறுங்கள்!
10. எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! - உங்களுக்காக அல்ல! உங்கள் குழந்தைகளுக்காக!
நம் குழந்தைகள் இன்று மாறுபட்ட காலகட்டத்தில் வளர்கின்றன. எதை ஒன்றையும் கேள்வி கேட்டு அறியும் குணம் இன்று அதிகம்! அது நல்லதும் கூட! அப்போது தான் உடைமைக் குணம் (sense of ownership) வளரும்!
இப்படி வளரும் குழந்தைகளின் முன், இறைவனைக் கூடப் பணமும் அதிகாரமும் இருந்தால் தான் பார்க்க முடியும் என்று தவறான யோசனைக்கு நாமே தள்ளிவிடலாமா?
இதனால் ஒட்டு மொத்த பண்பாடும் மாறித் தான் போகும். மன அமைதிக்கு ஆன்மீகம் என்ற நிலை போய், மன அழுத்தங்களைத் தான் அடுத்த தலைமுறைக்குப் பரிசாக விட்டுச் செல்வோம்!
அதனால்
எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! - உங்களுக்காக அல்ல! உங்கள் குழந்தைகளுக்காக!
(அடுத்த பதிவில், தமிழ் வழிபாடு, ஆலய நிர்வாகச் சீர்திருத்தம்-னு அவங்க கையில் இருக்கும் ஐட்டங்களைப் பார்க்கலாம்! )
அனைவருக்கும்
இனிய, வளமான புத்தாண்டாக 2008 அமையட்டும்! இறையருள் கனியட்டும்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புதுமணத் தம்பதிகளுக்கு Happy Thala New Year :-)
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
chumma nachunu solli irukeenga! ktpaangalaanu parpom! naan ready!
ReplyDeleteadutha post aiyum ethirpakiren!
ReplyDeleteBTW, Happy NEw year!
KannabirAn,
ReplyDeleteVery good post ! My thoughts in detail, later !
Happy 2008 to you and family :)
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteGreaaaat ya
ReplyDeleteTons and tons of thanks and wishes to you.
There are many people now are refering to bad elemental activities in religion and temples and saying I dont want to follow religion or dont want to go to temples itself or bcoz of these I want to be an aethist. Those talks are encouraged as முற்போக்கு அல்லது புரட்சி சிந்தனை.
I believe what you said is only முற்போக்கு அல்லது புரட்சி சிந்தனை.
I dont understand one thisng. Why you say don't put money in Undiyal. Those money I beleive are used for temple maintenance. If not so, pls let me know. I have the practice of putting money in Undiyal thinking that, that is used for temple maintenance, annathanam and other good activities w.r.t to temple.
கேயாரெஸ் - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - இருப்பினும் மனம் ஒப்பவில்லை - இரு தினங்களுக்கு முன்னர் தான் எனது மேலதிகாரி கூறினார் : இறைவனிடம் நாம் சிறப்பு அனுமதி (Special Appointment ) பெறக்கூடாது . அதைத் தொடர்ந்து தாங்கள். சிந்திக்கலாம். உண்டியலில் காசு போடாமல் இருக்கமுடியுமா என்ன ?
ReplyDelete//பக்தர்களை/பக்தைகளை நோட்டம் விட்டோமா...
நம் போன்ற வாலிபர்கள்/இளைஞிகள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழலாம்! தப்பே இல்லை! :-)//
என்ன இது புரிய வில்லை - கோவிலா அல்லது பீச்சாங்கரையா - என்ன சொல்ல வருகிறீர்கள்
//இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது!!!//
ReplyDeleteஅருமை சொல்லி புரியவைக்க முடியாது நம்ம மக்களுக்கு ஒரு ரூபாய் போட்டுவிட்டு லாட்டரியில் 1கோடி வேண்டும் என்று வேண்டி பழக்கபட்டவர்கள் சுலபத்தில் மாற்ற முடியாது:)
Good. Happy New Year.
ReplyDeleteVenkatesh
//என்ன இது புரிய வில்லை - கோவிலா அல்லது பீச்சாங்கரையா - என்ன சொல்ல வருகிறீர்கள் //
ReplyDeleteஇப்ப சீனா ஐயாவுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டுப் போகிறேன். அப்புறமா வந்து இடுகையைப் பத்தி சொல்றேன். :-)
சீனா ஐயா,
நாம என்ன தான் சொன்னாலும் கோவில்கள்ல இது கால காலமா நடந்துக்கிட்டு தான் இருக்கு. சுந்தரர் பரவை நாச்சியாரை எங்கே பார்த்தார்? சங்கிலி நாச்சியாரையும் எங்கே பார்த்தார்? தம்பிரான் தோழரா ஆகி இறைவனையே எப்படி தூது விட்டார்? கோவிலில் தானே? நம் ஊரிலும் எத்தனை வீடுகளில் முறைப்படி பெண் பார்க்க வரும் முன்னர் மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பெற்றவர் முன்னிலையில் பார்த்துக் கொள்வதும் கோவிலில் தானே? கடற்கரை போல் கண்ணியமின்றி நடந்து கொள்ளாத வரை இவை எல்லாம் தவறில்லையே? கண்ணியம் இன்றிப் போய்விடும் என்ற உங்கள் கவலை நியாயமானது தான். ஆனால் சமுதாயக் கூடம் என்ற வகையில் இரவிசங்கர் சொன்னது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் அத்னை கண்ணியமாகத் தொடரலாம் என்று அவர் சொல்கிறார் - என்று நினைக்கிறேன்.
மங்கை, சீனா சார்
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஆலய மேம்பாட்டுக்காகவும், பல நல்ல அறச் செயல்களுக்காகவும் உதவி செய்ய வேண்டாம் என்று அடியேன் சொல்லவில்லை!
பணத்தை உண்டியலில் "கொட்ட" வேண்டாம் என்று தான் சொன்னேன்!
பல எளிய மக்கள் ஒரு ரூபாய், அஞ்சு ரூபாய் போடுவதை வேண்டாம்-னு சொல்லலை! நூறும் ஆயிரமுமாக் கொட்டாதீங்க என்று தான் சொன்னேன்.
அப்படிக் கொட்டும் பணம், ஆலய வளர்ச்சிக்கோ, அன்னதானத்துக்கோ செலவழிக்கப் படுவதில்லை! அரசின் கஜானாவுக்கு ஓடி, அது விளம்பரம், மேடை, தோரணம், விழா-ன்னு தான் போகுது!
ஆலய வருவாயில் 20-30% தான் ஆலயத்துக்கான செலவழிப்பு! அடுத்த பதிவில் பார்ப்போம்.
பழனி ஆலயம் தமிழகக் கோவில்களிலேயே அதிக வருவாய் உள்ள ஆலயம்! தமிழ்க் கடவுள் முருகனின் சொத்துக்கள் தமிழ் வளர்க்கப் பயன்படுகின்றனவா?
இங்கே எத்தனை அருணகிரியார் பாடல்கள் டிஜிட்டைஸ் செய்யப்பட்டுள்ளன? முத்தமிழ் வளர்க்க உதவியுள்ளன? நலிந்த தேவார, நாதசுரக் கலைஞர்கள் சீர் பெற்றுள்ளனர். மருந்தகங்கள், தரமான கல்வி என்று நிலை பெற்றுள்ளன! சமயபுரம் ஆத்தாளின் நாட்டுப்புறப் பாடல்கள் திரட்டப்பட்டுள்ளனவா?
ஒன்றும் இல்லை! படோபட விழாக்கள், உற்சவங்கள், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகளுக்கு மரியாதைகள் போக...வளர்ச்சிப் பணிகள் என்ன? அடுத்த பதிவில் காண்போம்!
நீங்கள் ஆலயத்துக்கு உதவுங்கள்! கட்டாயம் உதவ வேண்டும்! ஆனால் பாத்திரம் அறிந்து காணிக்கை போடுங்கள்! பொருளாகக் கொடுங்கள்! பணமாகக் கொட்டாதீர்கள்! அதை தேவைப்படும் ஆலயத்துக்கு கொடுங்கள் என்று தான் சொல்ல வந்தேன்!
வடபழனியில் ஆயிரம் ரூபா போடுவதற்குப் பதிலா, உத்திரமேரூர் முருகன் கோவில் இடிபாடுகளுக்கு ஐநூறு ரூபா பேருதவியா இருக்கும்!
பாராட்டுக்கிறேன்... நல்ல சிந்தனை
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
//நம் போன்ற வாலிபர்கள்/இளைஞிகள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழலாம்! தப்பே இல்லை! :-)//
ReplyDeleteஎன்ன இது புரிய வில்லை - கோவிலா அல்லது பீச்சாங்கரையா - என்ன சொல்ல வருகிறீர்கள்//
சீனா சார்.
நான் சொல்ல நினைத்ததைக் குமரன் சொல்லிவிட்டார்.
ஆலயத்தில் காதல் இன்று நேற்றல்ல! காலம் காலமாய் நடந்துகிட்டுத் தான் இருக்கு! காதலைத் தான் குறிப்பிடுகிறேன் - காமத்தை அல்ல!
ஆண்டாள்-அரங்கன்
ராதை-கண்ணன்
பரவை, சங்கிலி நாச்சியார் - சுந்தரமூர்த்தி சுவாமிகள்
குமுதவல்லி-திருமங்கை ஆழ்வார்
என்று பல தெய்வீகக் காதல்கள்!
அதான் கருவறையை மட்டும் விட்டு விடச் சொன்னேன். குளத்தாங்கரை, மண்டபம் எல்லாம் சமூகக் கூடம் தான்! இப்போவெல்லாம் பெண் பார்க்கும் படலத்தைக் கூட கோயிலில் வச்சிகிறாங்க!
ஆலயத்தில் எவரையும் கண்ணெடுத்தும் பாக்காதே! சதா சரவண பவா-ன்னு ஜபிச்சிக்கிட்டே இரு-ன்னு சொன்னா, சில பேர் தான் கேட்டுக்குவாங்க!
மத்த பசங்க எல்லாம் காதல் வல்லவங்க! ஆனா நல்லவங்க!! அவங்க ஒருத்தரை ஒருத்தர் ஓரக் கண்ணால் பாத்துக்குறதும், குறுகுறு-ன்னு பேசிக்கறதும் எல்லாம் தப்பே இல்லை!
அதுக்காக மடியில் துயில் கொள்ளறது, இன்னும் பலான பலான பீச்சாங்கரை விஷயம் எல்லாம் ஓவரு! 80% இளைஞர்கள் அதெல்லாம் அவிங்களே பண்ண மாட்டாங்க! :-)
கோயில்-ல சொந்தக்காரங்க கிட்ட மாட்டிப்பம்-னு ஒரு பயம் இருக்கும்! :-)
ஆலயத்தில் நாட்டியம் ஆடும் போது, காணாத கண்களா? இதெல்லாம் தலைமுறைக்கு தலைமுறை இருந்துகிட்டே தான் இருக்கும்! வெவ்வேறு வடிவத்தில்!
தலைமுறைக்கு வரைமுறை உருவாக்கித் தரது தான் ஆலயச் சான்றோரின் பொறுப்பு!
அன்புள்ள கண்ணபிரான் ரவிசங்கர்,
ReplyDeleteசிறப்பான சிந்தனையின் விளைவான உயர்ந்த தேவையான பதிவு. உங்களின் இறைமைப்பணி, பெருமாளை நம்பி நல்ல தொண்டு ஆற்றும் செயல் மகிழ்ச்சி தருகின்றது. போற்றுகின்றேன். நன்றி.
இனிய, வளமான புத்தாண்டாக 2008 அமையட்டும்! இறையருள் கனியட்டும்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்பு, மகிழ்ச்சி, மனநலம், உடல்நலம்
நீங்காத செல்வம் நிறைந்து சிறப்புடன் வாழ்க.
அன்புடன் ராதாகிருஷ்ணன்
ஜனவரி 1, 2008
இனிய (ஆங்கில) புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇங்கே உள்ள உங்கள் கருத்துக்கள் பலவற்றில் உடன்பாடு உண்டு; முடிந்தவரை அவற்றை பயன்படுத்தியும் வந்திருக்கிறேன்.
கோவில் நிர்வாகங்களில் உள்ள குழப்பங்களை/குறைபாடுகளை நேரடியாக அறிந்தவள் என்ற முறையில், "கோயில் உண்டியலில் போடாதே" என்று சொல்லுவதோ, "எளியவர் போடலாம்.." என்ற முறையில் சொல்லுவதோ தவறு என்று கருதுகிறேன். கோயில் உண்டியலில் இடுபவர்கள் எளியவர்களே!!!!! இது தான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கண்கண்ட உண்மை. பெரும் கோவில்களைத் தவிர்த்து. இந்த ஆண்டவன் பணத்தில் எவ்வளவு ஆள்பவருக்கும், "ஆட்டுபவிப்ப"ருக்கும் என்பது ஒரு வருத்தத்துக்குரிய விஷயம் (அதைப் பற்றி பிறிது எழுதப்போகிறீர்கள் போலிருக்கிறது). இங்கே கோயிலில் அர்ச்சனை செய்தால், அர்ச்சகருக்கான கட்டணம் என்று நினைத்து உண்டியலில் $1ஓ $2ஓ போட்டு விடுவது உண்டு; அவர்களும் வாங்குவதில்லை.
காசோலைப் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள், கோயிலில் நடக்கும் மராமத்து, திருப்பணி வேலைகளுக்கும் (என்ன ஏது என்று விசாரித்து அல்லது கேயாரெஸ் சொல்வது போல் எந்த கோவில்களுக்கு வேண்டுமோ) வருடத்துக்கு ஒருமுறை கொடுங்கள். காப்பகங்களுக்குக் கொடுப்பது இன்றைய காப்புக்கு; கோயிலுக்குக் கொடுப்பது நேற்றைய காப்புக்கு (கர்ம வினை தீர்ப்பது என்றும் வேண்டுபவர்கள் வைத்துக் கொள்ளலாம்). சேமிப்பதும் நாட்டுக்குக் கொடுப்பதும் நம் நாளைக்கு..?
அர்ச்சகருக்குக் கொடுக்கவே கொடுக்காதீர்கள். எத்தனை கோயில்களில் அர்ச்சகர்கள் வருமானம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்:( சமுதாய மாற்றம் பொருளாதாரத்தில் இருந்து தான் விளையும். அற நிலையத் துறையால் அல்லது அரசு_கட்டுப்பாடற்ற_இந்து_அறநிலைய_ஆணையத்தால் (சாதி கட்டுப்பாடற்ற) அர்ச்சகர்களுக்கு வருமானம் வர வேண்டும். அந்த நாள் வருமா!
சரி "ரொம்ப" பேசி விட்டேனாயிருக்கும். எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கண்ணபிரான்
ReplyDelete2007 முடியும் சமயத்தில் கண்திருஷ்டி மாதிரி ஒரு பதிவு:-(
திருக்கோயில்கள் திருந்த அரசு நிர்வாகத்தை அதிலிருந்து தூக்கினால் போதும்.அரசு நிர்வாகத்தில் வரும் எதுவுமே உருப்படாது எனும்போது கோயில்கள் மட்டும் விதிவிலக்கா? ஆந்திராவில் கோயில் நிலத்தை விற்பதையும், அவை கொடையாளிகள் தானம் கொடுத்த பலனுக்கு மட்டுமே பயன்படவேண்டும் என்பதற்கும் சட்டம் போட்டிருக்கிறார்கள். கோயில்களை புரபஷனல் நிர்வாகத்திடம் ஒப்படைத்து பராமரித்தால் இந்தியாவில் ஏழ்மையான கோயில்கள் என்று எதுவுமே இருக்காது.பணக்கார கோயில்களில் வரும் வருமானம் இந்தியா முழுக்க உள்ள எல்லா கோயில்களையும் கைதூக்கிவிட போதுமானது.
புதுகோயில் கட்டவேண்டாம் என்பதும் சரியில்லை.புதிதாக பல குடியிருப்புகள் உருவாகின்றன.பல மைலுக்கு எங்கேயும் கோயில்கள் கிடையாது எனும்போது புதுகோயில் கட்டுவதுதான் வசதியானது.
திருக்கோயில் உண்டியலுக்கு காசு போடவேண்டாம் என்பதும் கைதட்டலை பெற்றுத்தருமேயன்றி வேறு எந்த பயனையும் பெற்றுதராது.ஏழை எளியவருக்கு தான தருமம் செய்யுங்கள்,ஏழ்மையான கோயிலுக்கு நிதி கொடுங்கள் என்று சொல்லுங்கள், பெரிய கோயில்களுக்கு கொடுக்கவேண்டாம் என்று சொல்லாதீர்கள். அது வேறு, இது வேறு. ஏழைகளுக்கு உதவுவதில் ஆன்மிக உணர்வு நிரம்பியவர்கள் தான் முண்ணனியில் இருப்பார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து.ஏழைகளுக்கு மேலும் கொடுங்கள் என்று சொல்லலாமே தவிர, கோயில் காசை அவர்களுக்கு கொடுங்கள் என்று கேட்பதில் எந்த பொருளும் இருப்பதாக தெரியவில்லை.
ஆழ்வார்களும் நாயன்மார்களும் உண்டியலில் காசு போட்டார்களா என கேட்கிறீர்கள். திருமங்கை ஆழ்வார் திருடி கோயில் கட்டினார்.பத்ராசல ராமதாசர் அரசு கஜானா காசை எடுத்து பத்ராசலம் கோயிலுக்கு கொடுத்து ஜெயிலுக்கு போனார்.
காசு கொடுத்து ஸ்பெஷல் தரிசனம் வேண்டாம் என்பதும் தவறு. அந்த காசு மற்ற பக்தர்களுக்கு வசதிகளை அதிகரிக்கத்தான் பயன்படுகிறது.அம்பானியாலும், ஐஸ்வர்யாராயாலும் எந்த காலத்திலும் கூட்டத்தோடு நின்று சாமி கும்பிட முடியாது.சாமியை பார்ப்பதை விட ஐஸ்வர்யாராயை பார்ப்பதில்தான் கூட்டம் ஆர்வத்துடன் இருக்கும்.அது யாருக்கும் நல்லதில்லை.அதுக்காக அம்பானியையும் ராயையும் கோயிலுக்கு போகாதே என்று சொல்லவும் முடியாது.அவர்கள் மன அழுத்ததுக்கும் ஆன்மிகதேடலுக்கும் அது ஒரு வடிகால். டிஸ்னிலாண்டில் ஃபாஸ்ட் பாஸுக்கு ஐம்பது டாலர், தனிவரிசை. (கோயிலும் டிஸ்னிலாண்டும் ஒன்றா என சர்வீஸ் மேனேஜ்மெண்ட் பற்றி தெரியாமல் சிலம்பமாடுபவர்கள் தனிடிராக்கில் ஆடிக்கொள்ளலாம்)
உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நல்ல நகைச்சுவை செறிந்த பதிவு!
ReplyDeleteஆனால் வகைப்படுத்துதல், லேபிள் ஆகியவற்றில் வேற மாதிரிப்போட்டுடிங்க, அடுத்த முறை நகைச்சுவை/நையாண்டி என்று வகைப்படுத்தவும்! :-))
அன்புள்ள கண்ணபிரான் ரவிசங்கர்,
ReplyDeleteசிறப்பான சிந்தனையின் உயர்ந்த விளைவான, நிகழ்காலத்துக்குத் தேவையான, பயனுள்ள பதிவு. உங்களின் இறைமைப்பணி, பெருமாளை நம்பி நல்ல தொண்டு ஆற்றும் செயல் மகிழ்ச்சி தருகின்றது. போற்றுகின்றேன். நன்றி.
தலைப்பை “புத்தாண்டில் உணர, உய்க்க உறுதிமொழிகள்” என்று மாற்றலாம்.
இனிய, வளமான புத்தாண்டாக 2008 அமையட்டும்! இறையருள் கனியட்டும்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்பு, மகிழ்ச்சி, மனநலம், உடல்நலம்
நீங்காத செல்வம் நிறைந்து சிறப்புடன் வாழ்க.
அன்புடன் ராதாகிருஷ்ணன்
ஜனவரி 1, 2008
நல்ல சீர்திருத்த சிந்தனைகளுக்கு என் வாக்குகளும், வாழ்த்துகளும் உரித்தாகுக.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
//வவ்வால் said...
ReplyDeleteநல்ல நகைச்சுவை செறிந்த பதிவு!//
வாங்க வவ்வால்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நகைச்சுவையா? மகிழ்ச்சி!
புத்தாண்டில் நீங்க சிரித்து மகிழ்ந்தமைக்கு! :-)
//ஆனால் வகைப்படுத்துதல், லேபிள் ஆகியவற்றில் வேற மாதிரிப்போட்டுடிங்க, அடுத்த முறை நகைச்சுவை/நையாண்டி என்று வகைப்படுத்தவும்! :-))//
இது தொடர்பான அடுத்த பதிவு ஒன்னு பாக்கி இருக்கே! அப்போ நீங்க சொல்றா மாதிரி போட்டுட்டாப் போச்சுது! :-)
அப்புறம் எது உங்களுக்கு நகையின் சுவையை ஊட்டியதுன்னு சொன்னா தெரியாதவங்க தெரிந்து கொள்வோமே!
//செல்வன் said...//
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தார்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் செல்வன்!
//திருக்கோயில்கள் திருந்த அரசு நிர்வாகத்தை அதிலிருந்து தூக்கினால் போதும்.அரசு நிர்வாகத்தில் வரும் எதுவுமே உருப்படாது எனும்போது கோயில்கள் மட்டும் விதிவிலக்கா?//
அரசு நிர்வாகத்தில் ISRO, BAPS எல்லாம் உருப்படுதே செல்வன்?
நீங்கள் சொல்வது போல் Professional Temple Management என்று தனிப் பிரிவே கண்டு செயலாற்றலாம். அதுக்குத் தான் அடுத்த பதிவில் சொல்கிறேன்-னு சொன்னேன்.
இந்தப் பதிவில் நம்மால் முடிந்தவை மட்டுமே சொன்னேன்.
சட்டம் போட்ட பின், சிறப்பு வரிசையில் யாரும் போகப் போவதில்லை! அது ஒரு நாள் வரும்!
ஆனால் இப்போதே அப்படித் துணியும் சில பக்தி உள்ளங்கள் கொஞ்சம் தேறினால் அதுவும் சிறப்பு தானே!
அடுத்த பதிவில் அறநிலையத் துறை கட்டுப்பாடுகள் நீக்கித் தன்னாட்சி நிறுவனமாக செயல்பட்டால் எப்படி இருக்கும் என்றும் சொல்கிறேன்! அது போன்ற அமைப்பில் யாரெல்லாம் பங்கு கொள்ளணும்-னும் கருத்தை வைக்கிறேன். நீங்களும் வந்து சொல்லுங்கள்!
இந்தப் பதிவை எழுதக் காரணமே, ஒரு பழைய அறநிலையத் துறை ஆட்சியருடன் உரையாடியதால் ஏற்பட்ட தாக்கத்தில் தான்! அவர் IIM மாணவர்களுடன் ஒரு project-இல் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
//புதுகோயில் கட்டவேண்டாம் என்பதும் சரியில்லை.//
கட்டவே வேண்டாம்-னு சொல்லலை!
முடிந்த வரை தவிர்க்கவும்-னு தான் சொன்னேன். இதுக்கு அங்கங்கு உள்ள பெரியோர் ஒத்துழைப்பு தேவை!
பல காலனிகள் உருவாகும் போது, அடுத்து அடுத்து உள்ள ஐந்து காலனிகளுக்கும் சேர்த்தாற் போல் ஒரு ஆலயம் செய்யலாம்!
அதை விடுத்து, முதல் தெரு காலனியில் விநாயகர் கோவில், பத்தாம் தெருவில் பெருமாள் கோவில், டி-ப்ளாக்கில் ராமாஞ்சனேயே சுவாமி-ன்னு வளர்த்திக்க வேண்டாம்! ஒரே ஆலயத்தில் அனைத்துமே சமூக மன்றமாக இருக்கலாம்!
காலாற நடந்து போகும் தொலைவில் கோயில் இருக்கணும்-னு யாரும் எதிர்பார்க்கலை. ஆட்டோவில் பத்து நிமிஷம் போய் வர பலர் ரெடி!
ஆனா அவரவர், தத்தம் பக்திப் பெருமிதத்துக்காக ஆலயம் செய்ய வேண்டாம் என்பது தான் என் வேண்டுகோள். இதுக்கு அந்தந்த ஏரியாப் பெரியவர்கள் ஒருங்கிணையனும்!
புத்தாண்டு வாழ்த்துக்கள். :))
ReplyDelete//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ReplyDeleteஇனிய (ஆங்கில) புத்தாண்டு வாழ்த்துக்கள்!//
வாங்க கெக்கேபிக்குணி! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தார்க்கும்.
//முடிந்தவரை அவற்றை பயன்படுத்தியும் வந்திருக்கிறேன்//
சூப்பரு! பொலிக! பொலிக!!
//கோயில் உண்டியலில் இடுபவர்கள் எளியவர்களே!!!!! இது தான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கண்கண்ட உண்மை.//
எளியவங்க போடறது அஞ்சோ, பத்தோ தானுங்க!
ஆனா Pareto 80-20 விதிப்படி பார்த்தா, 80% of the collection comes from 20% of the people!
//இங்கே கோயிலில் அர்ச்சனை செய்தால், அர்ச்சகருக்கான கட்டணம் என்று நினைத்து உண்டியலில் $1ஓ $2ஓ போட்டு விடுவது உண்டு; அவர்களும் வாங்குவதில்லை//
தட்டில் போட்டாலும், அவர்களே உண்டியலில் போட்டு விடுவார்கள் நம் கண் முன்னரே!
இதை எல்லாம் professionally managed ஆலயங்களில் வேணுமானா நம்மூரில் நடைமுறைப்படுத்தலாம்!
ஆனா கூட்டம் அதி அதிகமா, இல்லை மிகவும் குறைவா இருக்குற இடங்களில் செய்ய இயலாது. அடுத்த பதிவில் சொல்கிறேன்.
//காசோலைப் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள், வருடத்துக்கு ஒருமுறை கொடுங்கள்.//
மிகவும் புண்ணியமாப் போகும்!
அரசுச் சீர்திருத்தம் வரும் வரை காத்திராமல், நம் பங்குக்கு இது போன்று செய்யலாம்! சிறு துளி தான் பெரு வெள்ளம்!
//அர்ச்சகருக்குக் கொடுக்கவே கொடுக்காதீர்கள். எத்தனை கோயில்களில் அர்ச்சகர்கள் வருமானம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்:(//
ஹூம்...இதைத் தனியா விவாதிக்கணும். சில ஆலயங்களில் ஒத்தை ஆளு அர்ச்சகரும், இறைவனும் மட்டும் தான்! வழிபாட்டுக்கு அவர் கிட்ட கொடுத்து வாங்கி வைக்கச் சொல்லும் சூழல் வரலாம்! This is case by case basis!
//(சாதி கட்டுப்பாடற்ற) அர்ச்சகர்களுக்கு வருமானம் வர வேண்டும்.//
இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள்ளாவது வரும்! மாறும் தலைமுறையில் விதிகள் மாறும்!
இந்த மாதிரி ப்ளாக் கொஞ்ச நாளா தேடிக்கிட்டு இருந்தேன். மகிழ்ச்சி!
ReplyDeleteஉங்கள் இடுகையில் எனக்கு சில வேற்று கருத்துக்கள்
//1.எக்காரணம் கொண்டும், ஸ்பெஷல் டிக்கட் எடுத்து தரிசனம் செய்யாதீர்கள்! -//
எக்காரணம் கொண்டும்? நிச்சயமாக சில பொருத்தமான காரணங்கள் இருக்கவே செய்யும். வயோதிகர், உடல்நிலை சரியில்லாதவர்... இவர்களை கொவிலுக்கு வர வேண்டாம் என்றும் சொல்ல முடியாது. எங்கும் உள்ள இறைவன் வீட்டிலும் இருக்கிறான் என்ற ஞானம் எல்லார் மனதுக்கும் பொருந்தாது.
//தயவு செய்து இந்தச் சொகுசுப் போக்கு வேண்டவே வேண்டாம்! முடிந்த வரை இதைத் தவிர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்! //
ஆகா, இந்த முடிந்தவரைதான் வேண்டுவது.
3.// முடிந்த வரை புதுப்புது ஆலய முயற்சிகளைத் தவிர்க்கவும்.//
பிரச்சினையே எல்லாருக்கும் ஒரே தெய்வ வடிவம் ஒத்துப்போகாது. புது நகர் பகுதிகளில் புது ஆலயங்கள் தேவைதான். அவை நீங்கள் சொல்வது போல பல சன்னதிகளுடன் இருக்காலாம்.
5.// நீங்கள் செல்லும் ஆலயத்தில் தமிழ் அர்ச்சனை வசதி இருந்தால், கண்டிப்பாக ஒரு முறை, தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கேட்டுத் தான் பாருங்களேன்.
இதைச் செய்தவள் தமிழகத்தை ஆண்ட ஒரு பெண்! //
சரி ஆனால் மற்ற இடங்களில் அரசு தூண்டுதலால் அரசை திருப்திபடுத்த புதிதாக புனைந்தவற்றை என்ன சொல்வது? ஐம்பது வயது அர்ச்சகர் புதிதாக மனப்பாடம் செய்ய முடியுமா?
7. //ஆலயத்துக்கு அருகிலேயே உள்ள, குழந்தைகள் இல்லம் அல்லது முதியோர் விடுதியில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!
ஆலய தரிசனம் முடிந்து வரும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்!//
காப்பகங்கள் இருப்பதும் வளருவதும் நாம் அவமானப்பட வேண்டிய ஒன்று. இதை இங்கு விவாதிக்க மனமில்லை.
8. //ஆலயத்தில், குளங்களில் தூய்மை பேணுங்கள். திருநீறு, குங்குமம், சந்தனம், துளசி என்று மீதியைக் கொட்ட இடமில்லை என்றாலும், தேடிப் போய்க் கொட்டுங்கள். எல்லாக் கோவில்களிலும் அபிஷேக/திருமஞ்சன நீர் வந்து விழும் ஒரு தொட்டி இருக்கும். கொட்ட இடமே இல்லை என்றால், அதில் போய்க் கொட்டுங்கள்! //
அந்த இடம் எவ்வளவு நறுமணம் கமழும் இடம் என்பது அறிந்திருப்பீர்களே? கையில் பேப்பர் எடுத்து போங்கள். அதில் விபூதி குங்குமங்களை போட்டு பொட்டலம் செய்து கொண்டு வீட்டில் மற்றவர்களுக்கும் அக்கம் பக்கமும் கொடுங்கள். இந்த முன் தயாரிப்பு இல்லாததுதான் பிரச்சினை.
9. //ஆலயத்தில் இரைந்து பேசலாம்! ..... தப்பே இல்லை! :-)
நம் ஆலயங்கள் சமூகக் கூடங்கள்! தியான மண்டபங்கள் அல்ல! அதனால் தாரளமாகப் பேசுங்கள்!//
ஊஹும்! நிச்சயம் ஒத்து போகவில்லை. இறைவனிடம் மனசை செலுத்த முயற்சிக்கும் மற்றவர்களுக்கு இது எவ்வளவு தொந்திரவு என எண்ணிப்பாருங்கள். எப்படியும் இது நடக்கத்தான் போகிறது. அதை நீங்க வேறு ஆதரிக்கனுமா?
//எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! - உங்களுக்காக அல்ல! உங்கள் குழந்தைகளுக்காக!//
சரிதான்.
சில கருத்துகலில் ஒத்து போகாவிட்டாலும் நல்ல பதிவு. உருப்படியான கருத்துக்கள். புத்தாண்டு வாழ்த்துகள்!!!
ReplyDeleteஅருமையான கருத்துக்கள்.உண்மையான ஆன்மிகத்தை காசேதான் கடவுளடா சமூகத்தில் மீட்டெடுக்க வந்த பதிவு.உங்கள் புரட்சி வெல்லுமாயின் நாத்திகர்கள் பாடு கடினம்தான் :))
ReplyDelete//திவா said...
ReplyDeleteஇந்த மாதிரி ப்ளாக் கொஞ்ச நாளா தேடிக்கிட்டு இருந்தேன். மகிழ்ச்சி!
உங்கள் இடுகையில் எனக்கு சில வேற்று கருத்துக்கள்//
புத்தாண்டு வாழ்த்துக்கள் திவா! நீங்கள் அடியேன் வலைப்பூவை விரும்புவதும் மகிழ்ச்சியே!
//எக்காரணம் கொண்டும்? நிச்சயமாக சில பொருத்தமான காரணங்கள் இருக்கவே செய்யும். வயோதிகர், உடல்நிலை சரியில்லாதவர்...//
ஹூம்; ஏழைகளாக இருக்கும் வயோதிகர், உடல் நலம் இல்லாதவர்கள் கதி என்ன திவா? அவர்களால் 100ரூபாய் கொடுத்துச் சிறப்புத் தரிசனம் செய்ய இயலுமா?
வயோதிகர்கள், உடல் நலமில்லாத அன்பர்கள், ஊனமுற்றோர், கைக்குழந்தைகள் உள்ளோர்-னு இவர்களுக்கு மட்டும் தனி நேரங்களில் திருமலையில் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது! அப்படிச் செய்யலாமே? எதற்கு குறுக்கு வழியில் செல்ல வேண்டும்?
//பிரச்சினையே எல்லாருக்கும் ஒரே தெய்வ வடிவம் ஒத்துப்போகாது//
ஆமா, இது தான் நம் சமயம் நமக்குத் தரும் சுதந்திரம். அதை செவ்வனே பயன்படுத்தலாம். ஒரே ஆலயத்தில் பல சன்னிதிகளை அமைக்கலாம்.
//அரசை திருப்திபடுத்த புதிதாக புனைந்தவற்றை என்ன சொல்வது?//
உங்கள் மூலமாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அர்ச்சனை என்பது முழுக்க முழுக்க இறைவன் திருப்பெயர்களைச் சொல்வது தான். அஷ்டோத்திர சத நாமாவளின்னா 108 திருப்பெயர்கள். இதில் பழசு புதுசு-ன்னு என்ன இருக்கு?
புதிதாகக் கட்டப்பட்ட ஆலயம் ஒன்றில் அந்தத் தெய்வத்துக்கு என்றே புதிய அஷ்டோத்திரத்தை வடமொழியிலும் செய்து கொள்கிறார்கள். குமரன் குன்றம் முருகனுக்குன்னே தனி அர்ச்சனை! அமெரிக்காவில் Bridgewater பெருமாளுக்குன்னே தனி அர்ச்சனை நாமங்கள்! ஜலசேது நாயகாய நமஹ-ன்னு Bridgewater ஐ verbal translation செய்கிறார்கள்! இது சுமார் அஞ்சு வருஷம் கூட இருக்காது வடமொழியில் செய்யப்பட்டு!
சங்கல்பம் செய்யும் போது, கிரெளஞ்ச தீபே, கபில கண்டே, அமெரிக்கா வர்ஷே, Missisippi-Missouri ஜீவ நதினாம் ச்மீப ஸ்திதா-ன்னு சொல்லுறாங்களே! இது எல்லாம் எந்த மந்திர நூலில் உள்ளது? :-))
இவை பெயர்ச் சொற்கள்! நாமாவளி என்னும் திருப்பெயர்கள் வரிசையைப் புதுச், பழசு-ன்னு எல்லாம் பேதம் பார்க்கத் தேவையில்லை!
புருஷ சூக்தம், ருத்ரம் சமகத்தை எல்லாம் தமிழ்-ல மாத்து-ன்னு நான் சொல்ல வரலை! அவை எல்லாம் அப்படியே ஜபிக்கட்டும்.
ஆனால் அர்ச்சனை என்பது பக்தன் சொல்லும் சாதாரண போற்றி தான்! அது தமிழ் மட்டுமில்லை, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி-ன்னு எல்லா மொழிகளிலும் வரலாம்! தப்பே இல்லை! சங்கல்பம் (உறுதி) செய்தவருக்காக அவர் மொழியிலேயே சொல்வது இன்னும் சிறப்பு
//ஐம்பது வயது அர்ச்சகர் புதிதாக மனப்பாடம் செய்ய முடியுமா?//
வேலை-ன்னு வந்தா சில சமயம் செய்து தான் ஆக வேண்டும். முதலில் புத்தகம் வைத்துக் கொண்டு செய்யலாம்!
//காப்பகங்கள் இருப்பதும் வளருவதும் நாம் அவமானப்பட வேண்டிய ஒன்று. இதை இங்கு விவாதிக்க மனமில்லை//
சரி, பரவாயில்லை!
காப்பகங்கள் சமூகப் பேராசையின் அவலம்! ஆனால் நிஜம்! இதை எதிர்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்!
//அந்த இடம் எவ்வளவு நறுமணம் கமழும் இடம் என்பது அறிந்திருப்பீர்களே? கையில் பேப்பர் எடுத்து போங்கள்.//
பேப்பர் கொண்டு செல்பவர்கள், கிண்ணத்தில் போடறவங்களுக்குப் பிரச்சனையே இல்லை! ஆனால் எதுவுமே இல்லாத போது தான் அந்த ஐடியா!
கோமுகம் என்னும் அந்தத் தொட்டியில் ஏற்கனவே நீறு, மஞ்சள், துளசி என்று நீர் கலந்து தான் விழுகிறது. அதனால் தான் அங்கு போடச் சொன்னேன்.
சில ஆலயங்களில் நாமே எடுத்து இட்டுக் கொள்ளலாம்! ஆனால் இது எச்சில் விரல்கள் போன்ற அசுத்தம் வர வாய்ப்பிருக்கு! மேலும் முக்கியமான பிரசாதங்கள் கொடுக்கப்பட வேண்டும். கைகள் தாழ்ந்து பெற்றுக் கொள்ள வேண்டும்!
//ஊஹும்! நிச்சயம் ஒத்து போகவில்லை. இறைவனிடம் மனசை செலுத்த முயற்சிக்கும் மற்றவர்களுக்கு இது எவ்வளவு தொந்திரவு என எண்ணிப் பாருங்கள்//
குளக்கரையில், மண்டபங்களில் பேசத் தான் செய்வார்கள்!
அதான் கருவறை மட்டும் நூலகம் என்றேன். மனம் குவிந்து ஜபம் செய்ய விரும்பும் அன்பர்கள் கருவறை சுற்றுப்பாதையில் (உட்பிரகாரம்) அமர்ந்து தியானிக்கலாம்! பெரிய கோவில்களில் கட்டாயம் இருக்கும்.
இல்லாத இடங்களில், அமைதியான இடங்களை ஈசியாத் தேடிக் கண்டுபிடிக்கலாம்! பள்ளியறை வாசல் இதில் ஒன்று!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDelete/R. said...
ReplyDeleteபெருமாளை நம்பி நல்ல தொண்டு ஆற்றும் செயல் மகிழ்ச்சி தருகின்றது.//
நன்றி ராதா சார்.
//தலைப்பை “புத்தாண்டில் உணர, உய்க்க உறுதிமொழிகள்” என்று மாற்றலாம்//
எல்லோரையும் சென்றடைய வேண்டும்-னு தான் அப்படி வைத்தேன். கொஞ்சம் நெகட்டிவாகப் போய் விட்டிருந்தால் என்னை மன்னியுங்கள்!
//இனிய, வளமான புத்தாண்டாக 2008அமையட்டும்! மனநலம், உடல்நலம்
நீங்காத செல்வம் நிறைந்து சிறப்புடன் வாழ்க//
உங்க ஆசிக்கும் அன்புக்கும் அடியேன் நன்றி!
//செல்வன் said...
ReplyDelete//பெரிய கோயில்களுக்கு கொடுக்கவேண்டாம் என்று சொல்லாதீர்கள். அது வேறு, இது வேறு//
பெரிய கோவில்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதைத் தவிர்க்கலாம் என்று தான் சொன்னேன் செல்வன்.
அங்கேயே கொட்ட வேண்டாம். சீனா சாருக்கும் மங்கைக்கும் அளித்த பதிலைப் பாருங்கள்! பெரிய ஆலயங்களுக்கு உதவி செய்ய வேறு பல வழிகள் உள்ளன! பணக் கொட்டலால் பயன் விளைவதை விட, பொல்லார் பெருகவே வகை செய்கிறது!
//ஏழைகளுக்கு உதவுவதில் ஆன்மிக உணர்வு நிரம்பியவர்கள் தான் முண்ணனியில் இருப்பார்கள்//
இது முற்றிலும் உண்மை!
சமூகப் புரட்சியாளர்கள் மேடையில் தான் பேசுவார்கள்!ஆனா எம்.எஸ் அம்மா கொடுப்பது கூடத் தெரியாமல், மேடையிலேயே சன்மானம் நல்ல பணிகளுக்கு காலியாகி விடும்!
//ஆழ்வார்களும் நாயன்மார்களும் உண்டியலில் காசு போட்டார்களா என கேட்கிறீர்கள். திருமங்கை ஆழ்வார் திருடி கோயில் கட்டினார்//
அப்போதும் பாருங்க! அவர் உண்டியலில் காசு போட்டுட்டு அப்பாடான்னு ஒதுங்கிக்கலை! ஒரு project போல் எடுத்து திருவரங்கத்தில் செயல்படுத்தினார். அது முடிந்தவுடன் பல திவ்யதேசங்களுக்குப் போன போதெல்லாம் அப்படியேவா எல்லா இடத்திலும் செஞ்சார்? இல்லையே!
இவர்கள் ஓரிருவர் விதிவிலக்கு! எல்லா ஆழ்வார்களும் அப்படிச் செய்யவில்லை! மாணிக்கவாசகர் செய்தார் என்பதற்காக, அப்பர் சுவாமிகளும் உழவாரப் பணி எதுக்கு? பேசாம அரசாங்கத்துலயே கை வைக்கலாம்-னு எண்ணவில்லையே!
மாணிக்கவாசகர் எப்படியும் பணத்தைக் கருவூலத்தில் பின்னர் திருப்பிச் செலுத்தத் தான் இருந்தார்.
திருமங்கை மன்னன் கொள்ளை கொண்டதும், தன் நாட்டில் உள்ள ஏமாற்றும் அமைச்சுகள், வணிகர்கள் - இவர்களிடம் இருந்து தான்.
//காசு கொடுத்து ஸ்பெஷல் தரிசனம் வேண்டாம் என்பதும் தவறு. அந்த காசு மற்ற பக்தர்களுக்கு வசதிகளை அதிகரிக்கத்தான் பயன்படுகிறது//
பெருமானின் திருவுள்ள உகப்பிற்குப் பக்தனைத் தயார் செய்வது தான் ஆலயத்தின் பணி!
பக்தனது உகப்புக்காக ஆகா ஓகோ வசதிகள் செய்து தருவது ஆலயத்தின் முதன்மைக் குறிக்கோள் இல்லை!
இங்கே பக்தனின் ஆகோ ஓகோ வசதிகள் முக்கியமில்லை!
எல்லார்க்கும் எளிவந்தனாம் பெருமானின் நீர்மையும், அதை சமூகத்துக்கு எடுத்துக் காட்டி ஆன்மீகச் சிந்தனையை வளர்ப்பதும் தான் முக்கியம்!
//அம்பானியாலும், ஐஸ்வர்யாராயாலும் எந்த காலத்திலும் கூட்டத்தோடு நின்று சாமி கும்பிட முடியாது//
கூட்டத்தோடு நிற்க வேண்டாம்! பிரதமர் முதற்கொண்டு தலைவர்கள், பிரபலங்கள், மற்ற எல்லாரும் மக்கள் அதிகம் புழங்காத விடியற்காலை / நள்ளிரவு சேவையில் சேவிக்கட்டுமே!
இது போன்ற தியாகங்களை அவர்கள் செய்யத் தான் வேண்டும்! மக்கள் புழங்காத பகுதிகளில் வீடு கட்டிக் கொள்பவர்கள், அதே போல் மக்களுக்குத் தடை இல்லாதவாறு வந்து, குறிப்பிட்ட காலத்தில் மட்டும் சேவிக்கட்டுமே!
திருவிழாக் காலங்களில் இராமானுசர், வேதாந்த தேசிகர் எல்லாம் ஏகாந்த சேவை மட்டும் தான், அதற்கென்று இருக்கும் நேரத்தில் காத்திருந்து கண்டார்களாம்! மக்களின் தரிசனத்துக்குத் தொல்லை தர அவர்கள் விரும்பவில்லை!
தேசிகருக்கே இப்படி என்றால் திருபாய் அம்பானிக்கும் இப்படியே இருக்கட்டுமே!
அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் காசியில் அதிகாலை 2:30 மணிக்கு வந்து வணங்கவில்லையா என்ன?
அம்பானி சொன்னால் புரிந்து கொள்வார். ஆனால் சொல்லாமல் ஓவரா ஆடுவது ஆலய நிர்வாகம் தான்!
இதில் முக்கியம் என்னன்னா, திரண்டிருக்கும் பக்தர்கள் மத்தியில் வெளிப்படையாகப் படோபடங்கள் பேதங்கள் கூடாது என்பது தான்!
அனைவரும் கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-னு இருக்கணும்!
சென்றவருடம் ஜீரா எழுதிய பட்டியலுடன் ஒத்துப் போகிறது.
ReplyDelete:))
//கோவி.கண்ணன் said...//
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் கோவி அண்ணா!
//சென்றவருடம் ஜீரா எழுதிய பட்டியலுடன் ஒத்துப் போகிறது.:))//
ஒத்துக் போகாது! பாக்கத் தானே போறீங்க! :-)
ஜிரா கொடுத்தது, அவங்க நமக்கு என்ன என்னவெல்லாம் செய்யணும்-ங்கிற விருப்பப் பட்டியல்.
இது நமக்கு நாமே என்னென்ன செஞ்சிக்கணும்-ங்கிற சுய பட்டியல்!
அடுத்த பதிவில், அவர்களை எப்படி எல்லாம் செய்ய வைக்கலாம் என்ற மாற்றுப் பட்டியல்! :-)
உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ரவி.
ReplyDeleteபுத்தாண்டில் மிகச் சிறப்பான பதிவு ரவி. நல்ல கருத்துகள். இவை நடைபெற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete// செல்வன் said...
கண்ணபிரான்
2007 முடியும் சமயத்தில் கண்திருஷ்டி மாதிரி ஒரு பதிவு:-( //
திருஷ்டிதான். ஆனா யாருக்குங்குறதுதான் கேள்வியே :)
// திருக்கோயில்கள் திருந்த அரசு நிர்வாகத்தை அதிலிருந்து தூக்கினால் போதும்.அரசு நிர்வாகத்தில் வரும் எதுவுமே உருப்படாது எனும்போது கோயில்கள் மட்டும் விதிவிலக்கா? //
அட அரசாங்கங்குறது என்னங்க? நம்ம பிரதிநிதிகள்தான். உள்ளபடிக்குச் சொன்னா...இன்னைக்கு இருக்குற அரசாங்கம் இப்பிடி தாந்தோனியாவும் தன்னலத்தோடயும் இருக்குறது நம்மளாளதான். ஏன்னா..நம்மளே அப்படித்தான இருக்கும். அப்ப நம்ம திருந்துனா...அரசாங்கம் திருந்தும். அடுத்தவன் சரியில்லைன்னு சொல்றதுக்கு முன்னாடி நம்ம மாறீருவோமே.
// ஆந்திராவில் கோயில் நிலத்தை விற்பதையும், அவை கொடையாளிகள் தானம் கொடுத்த பலனுக்கு மட்டுமே பயன்படவேண்டும் என்பதற்கும் சட்டம் போட்டிருக்கிறார்கள். கோயில்களை புரபஷனல் நிர்வாகத்திடம் ஒப்படைத்து பராமரித்தால் இந்தியாவில் ஏழ்மையான கோயில்கள் என்று எதுவுமே இருக்காது.பணக்கார கோயில்களில் வரும் வருமானம் இந்தியா முழுக்க உள்ள எல்லா கோயில்களையும் கைதூக்கிவிட போதுமானது. //
அதாகப்பட்டது கோயில்கள் எல்லாம் இஸ்கான் மாதிரி பிசினஸ் செண்டராயிரனும். ஏற்கனவே பாதிக்குப்பாதி அப்படித்தான் இருக்குன்னு வெச்சுக்குங்களேன்.
// புதுகோயில் கட்டவேண்டாம் என்பதும் சரியில்லை.புதிதாக பல குடியிருப்புகள் உருவாகின்றன.பல மைலுக்கு எங்கேயும் கோயில்கள் கிடையாது எனும்போது புதுகோயில் கட்டுவதுதான் வசதியானது. //
புதுசு கட்டவே கூடாதுன்னு ரவி சொன்னதா நான் நினைக்கலை. புதுசு தேவைதான். ஆனா அதுக்காக ஊரு முழுக்கக் கோயிலா நெரப்பி வைக்கிறதும் நல்லதில்லை. பழசையும் பாத்துக்கிட்டு தேவையான புதுசையும் கெட்டிக்கிருவோம்.
// திருக்கோயில் உண்டியலுக்கு காசு போடவேண்டாம் என்பதும் கைதட்டலை பெற்றுத்தருமேயன்றி வேறு எந்த பயனையும் பெற்றுதராது.ஏழை எளியவருக்கு தான தருமம் செய்யுங்கள்,ஏழ்மையான கோயிலுக்கு நிதி கொடுங்கள் என்று சொல்லுங்கள், பெரிய கோயில்களுக்கு கொடுக்கவேண்டாம் என்று சொல்லாதீர்கள். அது வேறு, இது வேறு. ஏழைகளுக்கு உதவுவதில் ஆன்மிக உணர்வு நிரம்பியவர்கள் தான் முண்ணனியில் இருப்பார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து.ஏழைகளுக்கு மேலும் கொடுங்கள் என்று சொல்லலாமே தவிர, கோயில் காசை அவர்களுக்கு கொடுங்கள் என்று கேட்பதில் எந்த பொருளும் இருப்பதாக தெரியவில்லை. //
அப்படியா? மொதல்ல உண்டியல்ல ஏன் காசு போடனும்? அதைச் சொல்லுங்க? பக்தியில அது எந்த வகை?
// ஆழ்வார்களும் நாயன்மார்களும் உண்டியலில் காசு போட்டார்களா என கேட்கிறீர்கள். திருமங்கை ஆழ்வார் திருடி கோயில் கட்டினார்.பத்ராசல ராமதாசர் அரசு கஜானா காசை எடுத்து பத்ராசலம் கோயிலுக்கு கொடுத்து ஜெயிலுக்கு போனார்.//
அத்தன நாயன்மார்லயும் ஆழ்வார்லயும் அடியார் கூட்டத்துலயும் ரெண்டுதானா கெடைச்சது செல்வன். பூசலார் தெரியுந்தானே? அரசன் கோடிக்கோடியா கொட்டி கோயில் கட்டினான். சாமி பூசலாரோட உள்ளக்கோயில்ல குடி போயிருச்சு.
// காசு கொடுத்து ஸ்பெஷல் தரிசனம் வேண்டாம் என்பதும் தவறு. அந்த காசு மற்ற பக்தர்களுக்கு வசதிகளை அதிகரிக்கத்தான் பயன்படுகிறது.அம்பானியாலும், ஐஸ்வர்யாராயாலும் எந்த காலத்திலும் கூட்டத்தோடு நின்று சாமி கும்பிட முடியாது.சாமியை பார்ப்பதை விட ஐஸ்வர்யாராயை பார்ப்பதில்தான் கூட்டம் ஆர்வத்துடன் இருக்கும்.அது யாருக்கும் நல்லதில்லை.அதுக்காக அம்பானியையும் ராயையும் கோயிலுக்கு போகாதே என்று சொல்லவும் முடியாது.அவர்கள் மன அழுத்ததுக்கும் ஆன்மிகதேடலுக்கும் அது ஒரு வடிகால். டிஸ்னிலாண்டில் ஃபாஸ்ட் பாஸுக்கு ஐம்பது டாலர், தனிவரிசை. (கோயிலும் டிஸ்னிலாண்டும் ஒன்றா என சர்வீஸ் மேனேஜ்மெண்ட் பற்றி தெரியாமல் சிலம்பமாடுபவர்கள் தனிடிராக்கில் ஆடிக்கொள்ளலாம்) //
well...service management is very much appreciable in service industry but not in temples. காசு குடுக்கலைன்னா டிஸ்னிலேண்டுக்குள்ளயே விட மாட்டான். அதுதான் கோயில்லயும் நடக்கனுமா என்ன? டிஸ்னிலாண்ட் பொழுது போக்கு இடம். அதோட ஏங்க கோயில ஒப்பிடுறீங்க? Usage of the term serive management wont justify your idea.
ஐஸ்வர்யாராய் வந்தா பல்லக் காட்டிக்கிட்டு எட்டிப்பாக்குறத நம்மதான் நிப்பாட்டனும். அதுனாலதான் மாத்தம் மொதல்ல நம்மகிட்ட இருந்து வரனும்னு சொல்றது. நினைவிருக்கா? பெண்களின் உடை பற்றிய ஏதோ ஒரு பதிவில்....பாக்குறவன் பார்வைல தப்பு இல்லைன்னா...தொறந்திருந்தா என்ன மூடிருந்தா என்ன? அதேதான் இங்கயும்.
// உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். //
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
// வவ்வால் said...
ReplyDeleteநல்ல நகைச்சுவை செறிந்த பதிவு!
ஆனால் வகைப்படுத்துதல், லேபிள் ஆகியவற்றில் வேற மாதிரிப்போட்டுடிங்க, அடுத்த முறை நகைச்சுவை/நையாண்டி என்று வகைப்படுத்தவும்! :-)) //
வணக்கம் வவ்வால். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
நகைச்சுவைதான். சிரிப்பாத்தான் சிரிக்குது நெலமை. அதுனாலதான் மாத்தனும்னு சொல்றது. இருந்தாலும் நீங்க எதுக்கு விழுந்து விழுந்து சிரிச்சீங்கன்னு சொன்னா...நாங்களும் கூடச் சேர்ந்து சிரிப்பம்ல. :)
எல்லாஞ்சரிதான். வெங்கடநாராயணா ரோடு திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் அர்ச்சகர் தட்டில் காசு போடவே போடாதீங்க.
ReplyDelete500 போட்டால், சாமியைத் தொட்டுப்பார்க்கலாம். அவ்வளவு கிட்டே கொண்டுபோயிருவாங்க.
அடப் போங்கப்பா......
உங்கள் அனைவருக்கும் இந்த ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
குமரன், கேயாரெஸ் - மறுமொழியின் பதிலாக கூறப்பட்ட கருத்துக்களுக்கு உடன்பட மனம் மறுக்கிறது. நடப்பவை நடந்து கொண்டே இருக்கட்டும். அவைகளைச் செய்ய இளைஞர்களைத் தூண்ட வேண்டாமே!! இவைகளைச் செய்வது ஒரு கடமை போல் தெரிகிறது தங்களின் பதில்களில். தேவை இல்லாதது. கடவுள் சன்னதியில், பெண் பார்ப்பது - ஒரு பொது இடத்தில் பெண் பார்ப்பது என்பது ஒரு சடங்கு - சம்பிரதாயம். அங்கீகரிக்கப் பட்ட ஒன்று. அச்சடங்கிலும், சுற்றம் சூழ, ஒரு ஒழுங்குடன் பையன் பெண்ணையும், பெண் பையனையும் பார்ப்பார்கள். அப்க்கு காதலோ காமமோ எதுவும் கிடையாது. தாங்கள், காதல் செய்வது தவறில்லை காமம் தான் செய்யக் கூடாது என்று கூறுவது ஒஉப்புக் கொள்ளக்கூடிய கருத்தல்ல. காதலுக்கும் காமத்துக்கும் உள்ள வேறுபாடு ஒரு மெல்லிய இடைவெளி தான்.
ReplyDeleteஇக்கருத்துகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிய வில்லை.
கோவிலுக்கு நிறைய பணம் அளிக்கவேண்டும்.ஆழ்வார் திருடவில்லையா? பகவான் office போய் வேலை செய்வாரா!பணத்திற்க்கு? கைங்கர்யத்திற்க்கும்,நிர்வாக செலவிற்க்கு யார் தருவார்கள்....
ReplyDeleteDear KRS,
ReplyDeleteIts good and nice.
thanks
p.kumar
//G.Ragavan said...
ReplyDeleteபுத்தாண்டில் மிகச் சிறப்பான பதிவு ரவி. நல்ல கருத்துகள். இவை நடைபெற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்//
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜிரா.
இவற்றில் பல நடைபெற ஆண்டவனை வேண்டிக் கொள்வதற்கு நன்றி.
ஆனா நாம் அனைவரும் வேண்டிக் கொள்வதோடு மட்டும் நின்று விடாது, முடிந்தவரை நாமே கடைப்பிடிக்க வேண்டும்.
நம் குடும்பத்திலும் நண்பர்க்கும் எடுத்துச் சொல்லவும் வேண்டும். அப்போது தான் இதற்கெல்லாம் ஒரு வழி பிறக்கும்!
இங்கு சொன்னவற்றில் ஒரு சிலவற்றை நானும் இதுவரை கடைப்பிடிக்கவில்லை. நியூயார்க்கில் இருந்து சென்னை செல்லும் போதெல்லாம்...
ஆலயம் போகும் போது, உண்டியல் விஷயத்தில் நானும் இதுவரை இப்படிக் கடைப்பிடித்ததும் இல்லை! அப்படித் தோனவும் இல்லை!
ஓய்வு பெற்ற அந்த அறநிலையத் துறை ஐயாவிடம் பேசும் போது தான் அடப் பாவமே என்று இருந்தது. காசோலை எண்ணமும் அப்போது தான் தோன்றிற்று!
இனி தவறாது கடைப்பிடிப்பேன்.
மற்றபடி சிறப்பு வரிசை எனக்கு அறவே பிடிக்காத ஒன்று! வீட்டில் என் கூட வருவதற்கே ரொம்ப யோசிப்பாங்க! :-)
காப்பக தரிசனம், தமிழ் அர்ச்சனை, நலிவுற்ற ஆலய உழவாரப் பணி எல்லாம் சிறு சிறு துளி! அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்!
@Dreamzz
ReplyDeleteநீங்க ரெடி-ன்னு சொன்னதே மகிழ்ச்சி! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
@பாலா
உங்க எண்ணங்களை பின்பு வந்து சொல்லுங்க பாலா! உங்கள் அனுபவம் மிகுதியானது!
@வெட்டி
புத்தாண்டு வாழ்த்துக்கள், தம்பி :-)
தங்கச்சிக்கும் சொல்லிடுங்க!
@Venkatesh - நன்றிங்க
@குசும்பன்
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணாச்சி!
ஒரு ரூபாய் போட்டு விட்டு லாட்டரியில் 1கோடி வேண்டும் என்று வேண்டி பழக்கபட்டவர்களை மாத்துறது கட்டம் தான்!
ஆனா இப்போ கல்வியறிவு வளர வளர, இது போன்று யோசிக்கும் ஆட்கள் கொறைஞ்சிக்கிட்டு தான் வராங்க! ஆனா கோவிலுக்குப் போகும் போது தன்னை அறியாம அதே தப்பை இவிங்களும் வேற மாதிரி செஞ்சிடறாங்க! அவிங்களுக்குத் தான் இந்தப் பதிவு!
@குமரன்
புத்தாண்டு எப்படிப் போகுது? :-)
சீனா சாருக்கு தந்த மறுமொழிக்கு நன்றி குமரன்.
உங்கள் கருத்தையும் பொறவு வந்து சொல்லுங்க!
அர்ச்சகருங்க வயித்துல அடிக்காதே அம்பி. மானம்கெட்ட மஞ்சதுண்டு திராவிட கோஷ்டிங்கதான் சதா மூச்சுக்கு முன்னூறு தரம் ப்ரமனாளை குத்தம் சொல்றான்னா நம்ம ஆத்து அம்பி நீயுமா இப்படி?
ReplyDeleteஎந்த அர்ச்சகர் கோடீஸ்வரனா இருக்கா? எல்லாமே சோத்துக்கே கஷ்ட ஜீவனம் நடத்தறா. ப்ரமனா உஞ்சவிருத்தி செய்துதான் பொழப்பை நடத்தனும்னு சொன்ன மனுஸ்மிருதிமேல எனக்கு இப்போ ஆத்திரம் வருது.
உண்டியல்ல காசு போடவேனாம்னு சொல்றேள். அந்த வருமானமும் இல்லேன்னா அவா எப்படி ஜீவனம் நடத்துவா? அவாள்லாம் எங்கே போவா?
தயவுசெய்து பதிவை மீட்டுக் கொள்ளவும்.
// செல்வன் said...
ReplyDeleteகண்ணபிரான்
2007 முடியும் சமயத்தில் கண்திருஷ்டி மாதிரி ஒரு பதிவு:-(
//
செல்வன் சொல்றது சரி. இதனை நான் வழிமொழிகிறேன்.
2007 முடிந்து 2008 ஆரம்பிக்கும்போது கோவில்களையும் தெர்ய்வத்தையும் இறைச்சேவை செய்யும் ப்ராமனாளையும் வாழ்த்தி ஒரு பதிவு போட்டிருக்க வேண்டாமோ?
அன்னிக்கு ஜிராவுக்கு சொன்ன அதே பதில்தான் இன்னிக்கு உங்களுக்கும். எல்லா கருத்துக்களோட ஒத்துப் போகலைன்னாலும் நல்லா எழுதி இருக்கீங்கன்னு சொல்லிக்கறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிந்திக்க வேண்டிய கட்டுரை ரவி... இதில் பெரும்பாலும் உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன்...
ReplyDeleteதூய்மையான மனம் தவிர இறைவனுக்கு வேறு ஒன்றையும் நாம் அர்ப்பணிக்கத்தேவை இல்லைதான்..
சில ஆலய விழாக்களில் சினிமாபாடல்களை அலற விடுகிறார்கள் அதுவும் சகிக்க முடியாத பாடல்களை..அதை தவிர்க்க சொல்லலாம்.
மற்றபடி பதிவின் ஒவ்வொரு வரியும் முத்துக்கள்...பாராட்டுக்கள்!
ஷைலஜா
//@ஜீவா (Jeeva Venkataraman) said...
ReplyDeleteநல்ல சீர்திருத்த சிந்தனைகளுக்கு என் வாக்குகளும், வாழ்த்துகளும் உரித்தாகுக//
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜீவா!
தத்துவம், மெய்யியல் என்று ஆழ்ந்து நோக்கும் உங்களைப் போன்றவர்கள் பங்களிப்பது, நல்ல மாற்றங்களுக்கு வகை செய்யும் ஜீவா! நன்றி வாக்குக்கும் வாழ்த்துக்கும்!
@ ரசிகன், @ அரைபிளேடு
ReplyDeleteநன்றி...புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//nandan said...
சில கருத்துகலில் ஒத்து போகாவிட்டாலும் நல்ல பதிவு. உருப்படியான கருத்துக்கள்.//
புத்தாண்டு வாழ்த்துகள் நந்தன்!
எந்தச் சில கருத்துக்கள் ஒத்துப் போக வில்லை? தவறுகள் இருந்தால் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள்!
ஒரு நல்ல பயன் விளையும் கருத்துன்னா, என் கருத்தைத் திருத்திக் கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே!
//மணியன் said...//
ReplyDeleteமணியன் சார்
புத்தாண்டு வாழ்த்துக்கள்! எப்படி இருக்கீங்க?
//உண்மையான ஆன்மிகத்தை காசேதான் கடவுளடா சமூகத்தில் மீட்டெடுக்க//
ஆமாங்க...ஆன்மீக வளர்ச்சியை நாத்திகர்கள் கையில் கொடுத்தாலும் கொடுக்கலாம், அரசியல்வாதி கையில் மட்டும் கொடுக்கவே கூடாது!
வெளியில் இருந்து திணிக்கப்படும் மாற்றங்கள் ஆன்மீகத்தில் வெற்றி பெறுவதில்லைங்க! வேணும்னா பேருக்கு இருக்கும்.
ஆனால் உள்ளிருந்து கிளைக்கும் மாற்றம் தான் நிலைத்து நிற்கும்!
பாருங்க, இராசராசன் ஆணையிட்டும் தில்லையில் தமிழ்ப் பதிகங்களின் கதி!
ஆனா நாதமுனிகள், இராமானுசர், மணவாள மாமுனிகள்-னு உள்ளிருந்து மாற்றங்கள் கொண்டு வந்தாங்க! இன்னிக்கும் தமிழ் எல்லாப் பெருமாள் கோயில்களிலும் நிலைத்து, தனித்துப் பெருமையுடன் நிற்கிறது!
@துரியோதனன்
ReplyDelete@ஜெயஸ்ரீ
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
//துளசி கோபால் said...
கோபால் சார், உங்களுக்கு, ஜிகே, ஜிக்குஜூ எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.
எல்லாஞ்சரிதான். வெங்கடநாராயணா ரோடு திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் அர்ச்சகர் தட்டில் காசு போடவே போடாதீங்க//
ஹிஹி! சென்னை TTD சென்ட்டரைச் சொல்லுறீங்களா டீச்சர்?
ஹூம் சாமிக்கும் நமக்கும் உள்ள distance வெறும் 500ரூ தானா? :-)
மனுசனுக்கு மனுசன் மாறிக்கிட்டே தான் இருப்பான் டீச்சர். அந்த ஒரு அர்ச்சகரைத் திருத்தி ஒன்னும் வரப்போவதில்லை!
அதுக்குத் தான் ஒரு சிஸ்டம் வேணுங்கிறது! ஆலயம் தழுவிய அமைப்பு கட்டாயம் தேவை!
//அடப் போங்கப்பா......//
எங்க போனாலும் இதே நெலமை தான்! எங்கிட்டு போகச் சொல்லறீங்க? பேசாம ChristChurch, NZ வந்துறட்டுமா? :-)
This comment has been removed by a blog administrator.
ReplyDelete//cheena (சீனா) said...
ReplyDeleteகுமரன், கேயாரெஸ் - மறுமொழியின் பதிலாக கூறப்பட்ட கருத்துக்களுக்கு உடன்பட மனம் மறுக்கிறது//
சீனா சார்! தப்பா சொல்லலை! தப்பா தொனிச்சிருந்தா ஃபீல் பண்ணாதீங்க!
இளைஞர்களைத் தூண்ட அடியேன் எதுவும் சொல்லலை!
ஆதலினால் ஆலயத்தில் காதல் செய்வீர்-ன்னு சொல்லலை! :-)
கருவறை தவிர்த்து பிற இடங்களில் சமூகக் கூடம்-னு சொன்னேன்! அம்புட்டு தான்.
உங்கள் ஆதங்கம் புரியுது; காதல்-காமம் நூலிழை வித்தியாசம் தான்!
புடைவை, நகைன்னு மத்தது எல்லாம் பேசுவது போல், இதையும் சொன்னேன்.
தூண்டி இதையே ஆலயத்தில் பண்ணுங்கள் ன்னு சொல்ல வரவில்லை! அப்படித் தொனித்திருந்தால் அடியேனை மன்னியுங்கள்!
//நாட்டுகோழி said...
ReplyDeleteபகவான் office போய் வேலை செய்வாரா!பணத்திற்க்கு? கைங்கர்யத்திற்க்கும்,நிர்வாக செலவிற்க்கு யார் தருவார்கள்....//
நாட்டுக்கோழி,
கருத்துக்கு நன்றி
//Anonymous said...
Dear KRS,
Its good and nice.
thanks
p.kumar//
குமார்...புத்தாண்டு வாழ்த்துக்கள்! நன்றி!
//நாட்டுகோழி said...
ReplyDeleteபகவான் office போய் வேலை செய்வாரா!பணத்திற்க்கு? கைங்கர்யத்திற்க்கும்,நிர்வாக செலவிற்க்கு யார் தருவார்கள்....//
நாட்டுக்கோழி,
கருத்துக்கு நன்றி
//Anonymous said...
Dear KRS,
Its good and nice.
thanks
p.kumar//
குமார்...புத்தாண்டு வாழ்த்துக்கள்! நன்றி!
//உங்கள் ஆதங்கம் புரியுது; காதல்-காமம் நூலிழை வித்தியாசம் தான்!//
ReplyDeleteசீனா ஐயா சரியாகத்தான் சொல்லி இருக்கார். நீங்களும் வழிமொழிந்திருக்கிறீர்கள். சரிதான்.
காதலுக்கும் காமத்துக்கும் இடை வெளிதான் வேறுபாடு!
:)
//ராகவன் ஐயங்கார் said...//
ReplyDeleteராகவன் ஐயா...வணக்கம்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
//அர்ச்சகருங்க வயித்துல அடிக்காதே அம்பி.//
பெருமானுக்கு கைங்கர்யம், பணி செய்து கிடக்கும் அர்ச்சகர்களை அடித்துப் பார்க்க இப்பதிவை எழுதல்லைங்க!
இது நம்மளவில் நாமே எப்படி மாறினால், ஆன்மீகம் தழைக்கும்-ன்னு யோசனைகள்! அம்புடு தான்!
//நம்ம ஆத்து அம்பி நீயுமா இப்படி?//
FYI, நான் அம்பி இல்லை! :-))))
//எந்த அர்ச்சகர் கோடீஸ்வரனா இருக்கா? எல்லாமே சோத்துக்கே கஷ்ட ஜீவனம் நடத்தறா//
ஏழை அர்ச்சகர்கள் பலர் தினப்படி உணவுக்கு கடினப்பட்டாலும், இறைவனுக்கு எப்பாடாகிலும் நிவேதனம் செய்யத் தவறாத மனப்பான்மையை நானும் பார்த்துள்ளேன்.
அவர்கள் எல்லாம் ஏழ்மை நிறைந்த ஆலயங்களில் பணி செய்பவர்கள். அங்கு தான் உண்டியல் கொட்டுதல் என்ற கான்செப்டே இல்லியே!
நினைவில் இருத்துங்கள்: ஆலய ஒருங்கிணைப்பும் சீர்திருத்தங்களும் நடந்தால், இது போன்ற நல்ல அர்ச்சகர்களின் நிலையும் தானாக உயரும்!
மீண்டும் சொல்கிறேன்!
ஆலயங்கள் தனி மனிதர்களின் வசதிக்காக அல்ல!
இறைவனை எல்லோர் வாழ்விலும் முன்னிறுத்தல் தான் ஆலயத்தின் முதல் கடமை!
பக்தர்கள் வசதி, அர்ச்சகர் வசதி இவை எல்லாம் அதன் byproduct தான்! இதை மட்டுமே பிடித்துக் கொண்டு, நோக்கம் எதுவோ எதை விட்டுவிடக் கூடாது!
முதலுக்கே மோசம் என்ற நிலைமை தான் ஆகி விடும்!
//தயவுசெய்து பதிவை மீட்டுக் கொள்ளவும்//
மன்னிக்கவும்!
அடுத்த பதிவையும் வாசியுங்கள்!
உங்கள் அக்கறையான கருத்துக்களுக்கு நன்றி.
//வடுகப்பட்டி ராசேந்திரன் said...
ReplyDeleteசெல்வன் சொல்றது சரி.
2007 முடிந்து 2008 ஆரம்பிக்கும்போது கோவில்களையும் தெர்ய்வத்தையும் இறைச்சேவை செய்யும் ப்ராமனாளையும் வாழ்த்தி ஒரு பதிவு போட்டிருக்க வேண்டாமோ?//
நன்றி ராசேந்திரன். புத்தாண்து வாழ்த்துக்கள்!
செல்வன் வாழ்த்துப் பதிவேதும் போடச் சொல்லவில்லை!
அவர் service offering (பயனளிப்பு), ஆலய நிர்வாகம் என்ற கோணத்தில் இருந்து தன் கருத்துக்களை முன்வைத்தார்.
இதை துறை சார்ந்த சீர்திருத்தங்களாக மட்டும் பார்க்க வேண்டுகிறேன். சாதீயம் போன்றவை இங்கு வேண்டாமே!
// இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteஅன்னிக்கு ஜிராவுக்கு சொன்ன அதே பதில்தான் இன்னிக்கு உங்களுக்கும்//
கொத்ஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்னிக்கு ஜிரா போட்ட பதிவு வேற பரிமாணம்-ங்க! ஆலயத்தின் விதிமுறைகள், ஆண்-பெண் ஊழியர்கள் என்று தன் விருப்பப் பட்டியலைத் தந்தார்.
இங்க, அதெல்லாம் இது வரை வரவே இல்லியே!
இப்பதிவு "நமக்கு நாமே" திட்டம் போல், பக்தர்களாகிய நாம் நமக்கு என்ன செய்து கொள்ளலாம்ங்கிற self regulation தான்!
சரி, அடுத்த பதிவும் பார்த்து விட்டுச் சொல்லுங்க!
//எல்லா கருத்துக்களோட ஒத்துப் போகலைன்னாலும் நல்லா எழுதி இருக்கீங்கன்னு சொல்லிக்கறேன்.//
நன்றி கொத்ஸ்.
ஒவ்வாத கருத்துக்கள் எவை-ன்னு சொல்லுங்க! சீர் தூக்கிப் பார்த்து மாத்திக்கலாம். நல்லது நடக்கத் துவங்கினாலே போதும்!
//ஷைலஜா said...
ReplyDeleteசிந்திக்க வேண்டிய கட்டுரை ரவி... இதில் பெரும்பாலும் உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன்...//
நன்றி ஷைலஜா!
நாம சிந்திக்க ஆரம்பிச்சா தான் நிர்வாகமும் சிந்திக்க ஆரம்பிக்கும்! அதான்!
//சில ஆலய விழாக்களில் சினிமாப் பாடல்களை அலற விடுகிறார்கள் அதுவும் சகிக்க முடியாத பாடல்களை..அதை தவிர்க்க சொல்லலாம்//
ஆமா...கரெக்டாச் சொன்னீங்க!
கட்டாயம் தவிர்க்கப் படணும்!
இது நிர்வாகத்தின் கையில் இருக்கும் விசயம். அடுத்த பதிவில் சேர்த்துக் கொள்கிறேன்.
லகுடபதி..
ReplyDeleteமன்னிக்க! உங்கள் பின்னூட்டத்தில் கொத்தனாருக்கு நீங்கள் கேட்கும் கேள்வியின் கடைசி வரியை மட்டும் மட்டுறுத்துகிறேன்.
லகுடபதி has left a new comment on your post "2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க!
// இலவசக்கொத்தனார் said...
அன்னிக்கு ஜிராவுக்கு சொன்ன அதே பதில்தான் இன்னிக்கு உங்களுக்கும். எல்லா கருத்துக்களோட ஒத்துப் போகலைன்னாலும் நல்லா எழுதி இருக்கீங்கன்னு சொல்லிக்கறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
இலவச கொத்தனார்,
எந்தெந்த கருத்து பிடிக்குது, எந்தெந்த கருத்து பிடிக்கலைன்னு தெளிவா சொல்லனும்ல ரவிசங்கருக்கு?
ஏன் சொல்ல மனம் வலிக்குதா? இல்லை *************?
//கோவி.கண்ணன் said...
ReplyDelete//உங்கள் ஆதங்கம் புரியுது; காதல்-காமம் நூலிழை வித்தியாசம் தான்!//
...
காதலுக்கும் காமத்துக்கும் "இடை" வெளிதான் வேறுபாடு!
:) //
சரியாக் கண்ணன்-னு பேரு வச்சிக்கிட்டு, என்னமா வியாக்யானம் கொடுக்கறீங்க கோவி அண்ணா! :-)
அதான் காற்று வெளி "இடைக்" கண்ணம்மா-ன்னு பாடினாரோ?
ஐ ஆம் தி எஸ்கேப்! :-)))
பதிவில் காரசாரமான விவாதங்களில் இதை யாராச்சும் பாத்தீங்களா?
ReplyDeleteTemple Revival / Temple Cleaners வலைப்பூவின் சுட்டி கொடுத்திருந்தேனே! பார்த்தீர்களா? உங்கள் கருத்து என்ன?
யாஹூ குழுமத்தில் சேர்ந்து புத்தாண்டு வாழ்த்து சொல்லி வந்து விட்டேன். இனி கவனிக்கிறேன்.
ReplyDeleteவலைப்பூவையும் பார்த்தேன் - நல்ல தொரு சேவை - தொடரட்டும் - வாழ்த்துகள் - என்னால் முடிந்தவற்றை செய்கிறேன்.
//யாரு? தமிழக அரசு அறநிலையத் துறை அமைச்சர்களா? சேச்சே! இல்லையில்லை! இதுக்கெல்லாம் அவிங்களுக்கு நேரம் இருக்குமா? இதுக்கெல்லாம் நேரத்தை வீணாக்கினா, அப்புறம் டமிள் வாள்க-ன்னு மேடைகளில் முழங்க நேரம் இல்லாம் போயிடுமே! :-)//
ReplyDeleteநண்பரே, அரசியல் ரீதியாக குற்றம் குறை ஏகப்பட்டது இருந்தாலும், டமிள் வாழ்க டமிள் வாழ்க என்று திராவிடக் கட்சிகள் கத்திக் கத்திதான் கொஞ்சமாவது தமிழ் மிச்சம் இருக்கிறது. இல்லையென்றால் மணிப்பிரவாளத்தின் மணியாட்டிப் பிரவாகத்தில் ஒரேயடியாக அடித்துக்கொண்டு போயிருக்கும். பிறகு ஆண்டாளாவது மாணிக்க வாசகராவது அவர்களின் தமிழாவது. அரசியல்வாதி தமிழைக் கெடுத்தான் என்பதும், அரசியல் தமிழைக் கிண்டலடிப்பதும், அரசியல் மூலமாக உருப்பெற்றிருக்கும் தமிழை சோடா குடித்துவிட்டுப் பேசும் தமிழ் என்பதும் அரசியலே ஒரு கேவலமான வஸ்து, அதில் ஒருத்தன் கூட யோக்கியம் இல்லை என்பதும், காரியம் ஆகும்வரை காலைப் பிடி காரியம் முடிஞ்சா கழுத்தைப் பிடி என்று இயங்கும் ஆசாமிகள் கால காலமாகச் செய்து வரும் மோடி மஸ்தான் வித்தைகள். அனைத்துத் தரப்பினரும் அர்ச்சகர் ஆக வாய்ப்புக் கொடுத்ததும், அனைத்து இந்துக்களும் கோயிலுக்குள் சென்று வழிபட வாய்ப்பேற்படுத்திக் கொடுத்ததும் அரசியல் சட்டங்களா, இல்லை ஆண்டாளா? தன் மதத்துக் கடவுளைப் பார்க்கவும் வழிபடவும், சேவைசெய்யவும், நேர்ந்துகொள்ளவுமே அரசியல் ரீதியிலான சட்டங்கள் தேவைப்படும் இழி நிலை இருக்கும்போது, அதைக் குறைக்க அரசியல்வாதிகள் கொஞ்சம் கூட எதுவுமே செய்யவில்லை என்கிறீர்களா? இதுபோன்ற குயுக்தியான பிரச்சாரங்கள் மூலமாக சாமானியனின் ஆன்மீகத்தின் கழுத்தை நெறிப்பதில் இந்த கழுத்தைப் பிடி கோஷ்டிகள் அளவுக்கு அரசியல் கட்சிகள் கூட எதுவும் செய்திருக்காது என்பது மனசாட்சியுடன் யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்கும். தூங்குவது போல நடிப்பவன் என்றைக்கு எழுந்திருக்கிறான்?
உங்களைப்போன்று ஆக்கப்பூர்வமாக ஆன்மீகத்தைக் குறித்து எழுதுபவர்களும் இப்படி அஜெண்டாக்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் போன்று மேம்போக்காக எழுதுவதைப் பார்த்தால் வருத்தமாக உள்ளது.
இது ஒன்று தவிர, உண்டியலில் போடுவதற்கு பதிலாக நற்காரியங்களுக்கு காசை செலவழிக்கச்சொல்வது உட்பட உங்கள் பிற அனைத்துக் கருத்துக்களும் ஒப்புதல் உடையனவே.
இல்லை...நமக்கென்ன வந்தது, கோயிலுக்குப் போனோமா, சும்மானா (இல்லை அம்பது ரூவா டிக்கெட் வாங்கி) சாமியப் பாத்தோமா, பாக்கெட் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமா, அப்படியே பக்தர்களை/பக்தைகளை நோட்டம் விட்டோமா... வீட்டுக்கு வந்த பின்,
ReplyDeleteஆகா ஆலயத்தில் என்னமா தரிசனம், முருகப் பெருமானை என்னமா அலங்காரம் பண்ணியிருந்தாக-ன்னு பதிவு போட்டோமா...மேட்டர் ஓவர்!
கந்தகோட்டம் போனோமே அந்த குத்தாஇது எனக்கு.
வழி மொழிகிறென்
பதிவினைப் படித்தேன்னு மட்டும் சொல்லிக்கறேன். :-)
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரவி.
ReplyDeleteஇதைப் பார்த்து வாயடைத்துப் போய்த் தான் உங்களைப் புத்தாண்டு சபதத்துக்கு அழைக்கவில்லை, முன்னர் வந்தப்போ பதிவும் சரியாப் படிக்க முடியலை, அதனால் பின்னூட்டம் இடவில்லை. உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் முழு மனதோடு ஆதரிக்கிறேன்.
ReplyDelete//கூட்டமாக இருக்கு! டைம் ஆகும்! ரொம்ப பிசி என்று நினைக்கிறீர்களா?
ReplyDeleteஅப்படின்னா கோயிலுக்குப் போகவே வேண்டாம்!
காலத்தைக் கடந்தவனைக் காணக் கூட உங்களுக்குக் காலம் இல்லை எனில், அப்படி ஏன் போக வேண்டும்? இல்லத்தில் இருந்தே, குடும்பமாக வழிபடலாமே?//
நம்ம ஊரிலேயே பணம் கொடுத்துக் கூடக் கூட்ட நெரிசலில் தவிக்கிறோம், பிரபலமான கோவில்களில் என்ன செய்வது? உதாரணமாய்த் திருப்பதி, பழனி, திருச்செந்தூர், மதுரை இங்கெல்லாம் சிறப்புத் தரிசனம் கூட நெரிசல் தான்!
கண்ணபிரான்,
ReplyDeleteஇப்பதிவுக்கு பின்னூட்டம் போடப் போய், அது சற்று நீண்டு விட்டதால் அதை தனிப்பதிவாக இட்டு விட்டேன் !
http://balaji_ammu.blogspot.com/2008/01/407.html
மேலும், இப்பதிவுக்குத் தான் எக்கச்சக்க பின்னுட்டங்கள் அந்து விட்டனெவே :)
எ.அ.பாலா
அடுத்த பதிவு எப்ப?
ReplyDeleteநான் வேற சண்டைக்கு ரெடியாகனும் ;)
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteஅடுத்த பதிவு எப்ப?//
திங்கட்கிழமை ங்கண்ணா!
//நான் வேற சண்டைக்கு ரெடியாகனும் ;)//
இவ்ளோ நல்லவரா இருக்கீங்க!
என் பரம சிஷ்யன் VCR
கராத்தேயில் அண்ணாத்தே
என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளேன்! :-))
//cheena (சீனா) said...
ReplyDeleteயாஹூ குழுமத்தில் சேர்ந்து புத்தாண்டு வாழ்த்து சொல்லி வந்து விட்டேன். இனி கவனிக்கிறேன்.//
நன்றி சீனா சார்!
உங்கள் கண்களுக்காச்சும் பட்டுச்சே!
//வலைப்பூவையும் பார்த்தேன் - நல்ல தொரு சேவை என்னால் முடிந்தவற்றை செய்கிறேன்//
தங்கள் எண்ணம்,
அறிந்தேன்! மகிழ்ந்தேன்!
நன்றி! நன்றி!!
//தி. ரா. ச.(T.R.C.) said...
ReplyDeleteகந்தகோட்டம் போனோமே அந்த குத்தா இது எனக்கு.//
அச்சோ, அப்படி எல்லாம் இல்லை திராச! எந்தக் குத்தும் இல்லை!
குத்துக் குத்துக் கூர்வடி வேலால்! என்று என் சிந்தனையைத் தான் அடியேன் குத்திக் கொண்டேன்! நெல்லைக் குத்தினாத் தானே அரிசி வரும்! அதான்!
//வழி மொழிகிறென்//
மிகவும் நன்றி!
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteஇதைப் பார்த்து வாயடைத்துப் போய்த் தான் உங்களைப் புத்தாண்டு சபதத்துக்கு அழைக்கவில்லை//
அச்சோ...எனக்குத் தண்டனை கொடுத்தீங்களோ-ன்னு நினைச்சேன் கீதாம்மா! :-)
//உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் முழு மனதோடு ஆதரிக்கிறேன்//
நண்பர்களுக்குச் சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன! அடுத்த பதிவும் வரட்டும்!
நல்லது நடக்கணும்! அவ்ளோ தான்!
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteநம்ம ஊரிலேயே பணம் கொடுத்துக் கூடக் கூட்ட நெரிசலில் தவிக்கிறோம்//
கூட்ட நெரிசலை முறைப்படுத்தினாலே போதும் கீதாம்மா! அடுத்த பதிவில் சொல்கிறேன்!
வயதானவர்கள், நோயாளிகள், கைக்குழந்தைகள் விதி விலக்கு!
திருமலையில் உள்ளதே!
புத்தாண்டில் நியூயார்க் டைம் ஸ்கொயரில் இல்லாத நெரிசலா? இருந்தாலும் மேயர் முதற்கொண்டு பிரபலங்கள் எல்லாம் வரிசை கட்டி நிக்கலையா என்ன?
//பிரபலமான கோவில்களில் என்ன செய்வது? உதாரணமாய்த் திருப்பதி, பழனி, திருச்செந்தூர், மதுரை இங்கெல்லாம் சிறப்புத் தரிசனம் கூட நெரிசல் தான்!//
உண்மை!
நெரிசலுக்கு ஏற்றாற் போல் நெத்தியடி!
40ரூ, 50ரூ, 100ரூ, 500ரூ...ன்னு சொகுசு லெவல்கள்!
பணப்புழக்கம் அதிகமாக, 40ரூ எல்லாம் 100ரூ தாவும் காலம் வரும்! இப்படியே ஒரு தவறு, வளர்ந்து வளர்ந்து பெருசாத் தான் போகுமே தவிர, இறையன்பு மட்டும் வளராது அப்படியே நிக்கும்!
Crowd Management is a technique. Instead of managing crowd, they are exploiting crowd! அவ்ளோ தான்!
//மதுரையம்பதி said...
ReplyDeleteபதிவினைப் படித்தேன்னு மட்டும் சொல்லிக்கறேன். :-)//
நன்றி மெளலி அண்ணா!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
//enRenRum-anbudan.BALA said...
ReplyDeleteகண்ணபிரான்,
இப்பதிவுக்கு பின்னூட்டம் போடப் போய், அது சற்று நீண்டு விட்டதால் அதை தனிப்பதிவாக இட்டு விட்டேன்!//
சூப்பரு! வாரேன் இருங்க அங்கிட்டு! :-)
வீரப்பா ஸ்டைலில் படிக்கவும்...
எப்படியோ, பதிவுக்கு எதிர்ப்பதிவு போட்டுட்டீங்க! சபாஷ், சரியான போட்டி:-)
//மேலும், இப்பதிவுக்குத் தான் எக்கச்சக்க பின்னுட்டங்கள் அந்து விட்டனெவே :)//
இது குணா ஸ்டைலில் படிங்க! :-)
இது வேறயா? பின்னூட்டக் கணக்கு - அதையும் தாண்டி ஓடுவது ஆன்மீகப் பதிவு!
//Anonymous said... //
ReplyDeleteவாங்க நண்பரே! அனானியாய் அருமையான வாதங்களை முன் வைத்திருக்கீங்களே! பெயரையாவது பின்னூட்டத்தின் இறுதியில் சொல்லி இருக்கலாமே!
//நண்பரே, அரசியல் ரீதியாக குற்றம் குறை ஏகப்பட்டது இருந்தாலும், டமிள் வாழ்க டமிள் வாழ்க என்று திராவிடக் கட்சிகள் கத்திக் கத்திதான் கொஞ்சமாவது தமிழ் மிச்சம் இருக்கிறது//
நான் திராவிடக் கட்சிகள்-ன்னு சொல்லவே இல்லையே! அவிங்க யாரும் டமிள்-னு உச்சரிக்கறாங்களா என்ன? :-)
தமிழின் அரசியல் தகைமைக்குத் திராவிடக் கட்சிகளின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுபவன் நான் அல்ல! அண்ணா கொண்டு வந்த தமிழ்நாடு தீர்மானம் பற்றிய என் பதிவை இதே வலைப்பூவில் பாருங்கள்!
//இல்லையென்றால் மணிப்பிரவாளத்தின் மணியாட்டிப் பிரவாகத்தில் ஒரேயடியாக அடித்துக்கொண்டு போயிருக்கும்.//
போயிருக்காது!
வடமொழி ஆதிக்கத்தை ஒரளவுக்குக் குறைத்தது மணிப்பிரவாளம். அது ஒரு பை-பாஸ் தான்! சேர்ந்தாற் போல் பத்து இலக்கியங்களைக் காட்ட முடியுமா மணிப்பிரவாளத்தில்?
தமிழ்ப் பிரவாகம் பெருகப் பெருக, மணிப்பிரவாளம் என்னும் கூழாங்கல் தானே ஒதுங்கி இருக்கும்!
தமிழ் வைணவ ஆலயங்களில் பதினோராம் நூற்றாண்டில் இருந்து, விம்மிதமாக ஒலித்துக் கொண்டு தான் இருக்கு! இதுக்குத் தமிழ்ப் பெரியார்களான ஆழ்வார்களும், பின் வந்த ஆசிரியர்களும் தான் காரணமே அன்றி...அரசியல் தலைவர்களால் இன்றும் தில்லையில் அதைச் சாதித்துக் காட்ட முடியவில்லையே! ஏன்?
எனவே ஆண்டாளாவது மாணிக்க வாசகராவது ன்னு சொல்லாதீங்க! அவர்கள் தந்தது தெய்வத் தமிழ்! அதைக் காத்து வளர்த்தது அவர்களே தான்! அரசியல் அல்ல!
அரசியல் தலைவர்கள் சாதித்தது அரசியலில் ஆட்சித் தமிழ்! மறுக்க வில்லை!
ஆனால் ஆன்மீகத் தமிழுக்கு அவர்கள் பங்களிப்பு பெரிதாக இல்லை! வேதம் தமிழ் செய்தது, தமிழ் வழி வழிபாடு என்றெல்லாம் விரும்பினார்கள் அவ்வளவு தான்! சாத்தியமாக்கியது இறையாளர்கள் தான்!
//அனைத்துத் தரப்பினரும் அர்ச்சகர் ஆக வாய்ப்புக் கொடுத்ததும்//
இதுக்கு இன்னமும் போராட்டம் தான்!
ஆனா இதை ஐநூறு ஆண்டுக்கு முன்பே செய்து காட்டி விட்டார்கள் ஒரு சில ஆலயங்களிலாவது!
திருக்கோவிலூர், திருப்பேர் நகர், திருவரங்கம், திருமெய்யம் ன்னு பல ஆலயங்கள் சத்தம் போடாமல் புரட்சி செய்துள்ளன. இராமானுசர் ஆகமத்தையே இதுக்காக மாற்றிக் காட்டிய நிகழ்வுகளை நீங்க மாதவிப் பந்தலில் காணலாம்!
//கோயிலுக்குள் சென்று வழிபட வாய்ப்பேற்படுத்திக் கொடுத்ததும் அரசியல் சட்டங்களா, இல்லை ஆண்டாளா?//
கோயில் நுழைவு முதல் முதல் மேலக்கோட்டையில்!
துலுக்கா நாச்சியார் என்று பிற மதத்தினர் நுழைவுக்கும் மரியாதை தந்தது அருளாளர்கள் தான்!
நுழைவை அரசியல் சட்டம் சாதிக்கும் முன்னரே, தன் தன்னலமில்லா ஆன்ம பலத்தால் தந்தை பெரியார் சாதித்து விட்டார்.
சட்டமாக்கி வரைமுறைகளை உருவாக்கியது மட்டும் தான் அரசியலார் பணி!
ஏதோ அரசியலார் இல்லை என்றால் தமிழ்க் குமுகாயம் ஆண்டாளையும் திருப்பாணாழ்வாரையும், அப்பரையும், மணிவாசகரையும் மறந்து போயிருக்கும் என்பதெல்லாம் மிகையே!
//உங்களைப்போன்று ஆக்கப்பூர்வமாக ஆன்மீகத்தைக் குறித்து எழுதுபவர்களும் இப்படி அஜெண்டாக்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் போன்று மேம்போக்காக எழுதுவதைப் பார்த்தால் வருத்தமாக உள்ளது//
வருத்தப்படாதீர்கள்!
ஒரு போதும் மூளைச் சலவைக்கு என்னைத் தள்ளிக் கொள்ள மாட்டேன்! அடியேன் பயின்று வந்த இடமான சென்னைப் பெரியார் திடல் தந்த பாடங்கள் அப்படி!
ஆன்மீகத்தை ஆக்கப்பூர்வமாக கருதுவதாய்ச் சொன்னமைக்கு நன்றி! நாடலும் அஃதே! :-)
அன்புள்ள கண்ணபிரான் ரவிசங்கர்
ReplyDeleteஅனானி நண்பரின் கருத்தாடலும் அதற்கு உங்கள் பதிலும் அருமையாக இருந்தது :)
கேஆர்எஸ்,
ReplyDeleteஉங்களது கருத்துக்கள் ஏற்புடயவை போல தோன்றினாலும், பலவற்றை கோவில்கள் எதற்க்காக தோன்றின என்பதனுடன் ஒப்பிட்டு நோக்கினால் முரணாக இருக்குமோ என தோன்றுகிறது.
ஆனால் கால மாற்றத்திற்கு ஏற்ப கோவில்களிலும் மாற்றம் வேண்டும் , ஏற்படும், ஏற்பட்டுக் கொண்டும் இருக்கிறது என்றும் தோன்றுகிறது.
என்ன தெளிவா குழப்பிட்டேனா :)
இனிய 2008 வாழ்த்துக்கள்
//// 2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க! ////
ReplyDeleteசரி. இனிமே எடுத்துக்குறோம். :)
உண்மைதான்...புத்தாண்டு என்ற பெயரில் மக்களும் கோவில் நிர்வாகங்களும் கோவிலில் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை..
ReplyDeleteஉங்களுக்கு சேதி தெரியுமா? பக்தர்கள் கூட்ட்ம் அதிகமென்று புத்தாண்டு அன்று மதுரை மீனாட்சியம்மன் கோவில் ந்டை சாத்தவில்லையாம்...என்ன கொடுமை சார் இது?
//ச.சங்கர் said...
ReplyDeleteஅனானி நண்பரின் கருத்தாடலும் அதற்கு உங்கள் பதிலும் அருமையாக இருந்தது :)//
ஹிஹி! நன்றி சங்கர்.
அவர் கருத்தாடல் அருமை! அரசியல் முயற்சிகளால் ஆன்மீகத் தமிழ் மட்டும் தான் மறுத்துப் பேசினேன்! மத்தபடி அவரும் சூப்பரா சொல்லியுள்ளார்!
////// 2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க! ////
சரி. இனிமே எடுத்துக்குறோம். :)//
So Sorry! அதை நீங்க பண்ண முடியாது! அதுக்குன்னு ஆட்கள் இருக்காங்க! நீங்க புதுசா கட்சி வேணும்னா ஆரம்பிக்கலாம்! :-))
//ச.சங்கர் said...//
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தார்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சங்கர்!
//உங்களது கருத்துக்கள் ஏற்புடயவை போல தோன்றினாலும், பலவற்றை கோவில்கள் எதற்க்காக தோன்றின என்பதனுடன் ஒப்பிட்டு நோக்கினால் முரணாக இருக்குமோ என தோன்றுகிறது//
உம்...எங்கே முரண்படுகிறது-ன்னு சொல்லுங்க சங்கர். தப்பான/அபாயமான கருத்தா இருந்தா திருத்திக்குவேன்!
கோயில்கள் எதற்காகத் தோன்றினவோ, அது இப்போ சுத்தமா இல்ல-ன்னு தான் நானும் பதிவில் சொல்லியுள்ளேன். இறையருள் என்பதே ஆலயங்களில் இல்லாமல் போய் விடும் அபாயம் அதிகமாகி விட்டது!
//ஆனால் கால மாற்றத்திற்கு ஏற்ப கோவில்களிலும் ... ஏற்பட்டுக் கொண்டும் இருக்கிறது என்றும் தோன்றுகிறது//
அப்படிக் காலத்துக்கு ஏற்றாற் போல் மாறி, மக்களை இன்னும் எளிமையாச் சென்றடைவது போல் தெரியலையே! கால மாற்றத்துக்கு ஏற்றவாறு ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் தான் மாறி இருக்கு! Maximise profits and Minimise Devotion! :-) இது நல்லதுக்கா என்பது தான் கேள்வி!
//என்ன தெளிவா குழப்பிட்டேனா :)//
நான் இந்த விஷயத்துல குழம்பறதா இல்லை-ன்னு உறுதியா இருக்கேன்! :-))
//பாச மலர் said...
ReplyDeleteஉங்களுக்கு சேதி தெரியுமா? பக்தர்கள் கூட்ட்ம் அதிகமென்று புத்தாண்டு அன்று மதுரை மீனாட்சியம்மன் கோவில் ந்டை சாத்தவில்லையாம்...என்ன கொடுமை சார் இது?//
வாங்க பாசமலர்!
இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரா? நடை சாத்தலைன்னா தப்பே இல்ல!
போராட்டத்தின் போது கடை சாத்தலைன்னா தான் தப்பு! :-)
இந்த நடை சாத்தும் பிரச்சனை திருமலையில் கூட ரொம்ப நாளா இருக்குங்க! ஆனா ஒப்புக்காச்சும் ஒரு அரை மணி நேரம் சாத்திடுவாங்க!
புத்தாண்டு அன்னிக்கு, 00:00 மணியில் தரிசிச்சே ஆகணும்-னு மக்கள் இப்பல்லாம் பக்திப் பழமாக் கெளம்பிட்டாங்க, பணம் கொடுத்து, அதிகார ஆள் புடிச்சி, இறைவனைப் பார்க்க! :-)
ஆகம வல்லுநர்கள், இதுக்கு ஒரு நல்ல மாற்று சொல்லணும்!
கண்ணபிரான் உங்கள் திட்டங்களுடன் நான் முன் வைக்கும் ஆஸ்திக்கு ஒரு ஆலயம் ஆசைக்கு ஒரு அம்பலம் எனும் திட்டத்தையும் முன் வையுங்கள். வெளிநாட்டுத்தமிழர்கள் இத்திட்டத்தின் மூலம் தமிழகக் கோயில் புணரமைப்பில் நேரடியாகப் பங்கு கொள்ள முடியும். இது சம்மந்தாமாக ஏதாவது நடந்தால் எனக்குச் சொல்லுங்கள். சேர்ந்து செயல்படுவோம்.
ReplyDeleteஉண்டியலில் பணம் போடாமல் இருப்பது கடினம்.
ReplyDeleteமுக்கியமாக திருப்பதி.
மற்றபடி அர்ச்சகர்களில் சிரமப்படுபவர்களுக்கு உதவலாம்.
ரவி, நல்லதொரு கருத்தை வைத்திருக்கிறீர்கள்.
பழைய கோவில்கள் பராமரிப்பு பற்றிய அறிவிப்பு ஒரு கண்திறப்பு.
நன்றி.
புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
கோவிந்தா கோவிந்தா
ReplyDelete//N.Kannan said...
ReplyDeleteகண்ணபிரான் உங்கள் திட்டங்களுடன் நான் முன் வைக்கும் ஆஸ்திக்கு ஒரு ஆலயம் ஆசைக்கு ஒரு அம்பலம் எனும் திட்டத்தையும் முன் வையுங்கள். வெளிநாட்டுத்தமிழர்கள் இத்திட்டத்தின் மூலம் தமிழகக் கோயில் புணரமைப்பில் நேரடியாகப் பங்கு கொள்ள முடியும். இது சம்மந்தாமாக ஏதாவது நடந்தால் எனக்குச் சொல்லுங்கள். சேர்ந்து செயல்படுவோம்.//
நன்றி கண்ணன் சார்!
ஆஸ்திக்கு ஒரு ஆண்பிள்ளைன்னு சொல்லுவாங்க!
நீங்க ஆஸ்திக்கு ஒரு ஆலயம்ன்னு சொல்லறீங்க!
அருமை! தனி மடலில் இது பற்றி விரிவாகப் பேசுகிறேன் உங்களிடம்! பதிவுலகில் இதைப் பற்றிய பலர் அறியத் தரலாம்! நல்ல முயற்சிகள் சீரடைய வேண்டுவோம்!
//வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஉண்டியலில் பணம் போடாமல் இருப்பது கடினம்.
முக்கியமாக திருப்பதி//
செண்டிமென்ட் ஆச்சே! :-)
//மற்றபடி அர்ச்சகர்களில் சிரமப்படுபவர்களுக்கு உதவலாம்//
உண்மை தான் வல்லியம்மா!
//ரவி, நல்லதொரு கருத்தை வைத்திருக்கிறீர்கள்.
பழைய கோவில்கள் பராமரிப்பு பற்றிய அறிவிப்பு ஒரு கண்திறப்பு//
அந்தச் சுட்டியைப் பார்த்துச் சொல்லுங்க வல்லியம்மா! குறுங்குடிக்கு அருகில் உள்ள கிராமத்துக் கோயில்களையும் நீங்க கூட அங்குப் பரிந்துரைக்கலாம்!
//நாமக்கட்டி said...
ReplyDeleteகோவிந்தா கோவிந்தா//
வாங்க அனானி நண்பரே!
இதுக்காக நீங்க கட்டப்பட்டு நாமக்கட்டியா மாறனுமா என்ன?
நேரடியவே சொல்லலாமே!
கோபிகா ஜீவன ஸ்மரணம், கோவிந்தா கோவிந்தா!
திருவேங்கடமுடையானுக்கு ஒரு கோவிந்தா கோவிந்தா!
மலைக்குனிய நின்றானுக்கு ஒரு கோவிந்தா கோவிந்தா!
தலைப்பைப் பாத்தவுடனே இதென்ன புதுசா ஒன்னைக் கிளப்புறாரேன்னு நினைச்சேன் இரவிசங்கர். தலைப்பைப் பாத்தா உண்டியல்ல காசு போடவே போட வேண்டாம்ன்னு சொல்ற மாதிரி தான் தோணிச்சு.
ReplyDeleteபார்த்தசாரதியின் தரிசனம் அருமை.
ஸ்பெஷல் டிக்கெட் எடுத்துத் தரிசிப்பதால் தான் கோவிலில் அக்கிரமம் கூடுகிறது என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இறைவனைத் தரிசிக்க சொகுசாகச் செல்லக்கூடாது என்ற கருத்தை விட இறைவன் திருமுன் எல்லோரும் சமமாக இருக்க வேண்டியிருக்க காசில்லாத காரணத்தால் சிலரைப் பின்னுக்குத் தள்ளி நாம் முன்னேறி அவனைத் தரிசிப்பது தவறு என்ற கருத்தைச் சொல்லியிருக்கலாம்.
புதுசு புதுசாக போட்டி மனப்பான்மையோட கோவில்களைக் கட்டுவதைத் தவிர்க்கத் தான் வேண்டும். கோவிலே சுற்று வட்டாரத்தில் இல்லாத இடத்தில் வேண்டுமானால் புதிதாகக் கட்டலாம். வேறு இடங்களில் கட்டுவது தேவையற்றது தான்.
குழந்தைகளுக்கு ஆர்வம் வரச்செய்ய சொன்ன வழிமுறை நல்லா இருக்கு.
***
அப்பாடா. மூச்சு விடாம எல்லா பின்னூட்டத்தையும் படிச்சு முடிச்சாச்சு. இதுக்கு மேல நான் என்னத்தை சொல்ல? :-)அடுத்து எ.அ.பாலாவோட மாற்றுக்கருத்துள்ள இடுகையைப் படிக்கணும். அங்கேயும் பின்னூட்ட எண்ணிக்கை அதிகமோ?
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteதலைப்பைப் பாத்தவுடனே இதென்ன புதுசா ஒன்னைக் கிளப்புறாரேன்னு நினைச்சேன் இரவிசங்கர்.//
புதுசு எல்லாம் ஒன்னுமில்லை குமரன். பலநாள் சிந்தனை தான்!
//தலைப்பைப் பாத்தா உண்டியல்ல காசு போடவே போட வேண்டாம்ன்னு சொல்ற மாதிரி தான் தோணிச்சு//
பரபரப்புக்காக அந்தத் தலைப்பை வைக்கலை! போடவே போடாதீங்க-ன்னு சொல்லலை! அதான் ஒத்தை ரூபா மஞ்சத் துணியில முடிச்சி போடச் சொல்லி இருந்தேனே!
இரண்டாம் பாகம் வாசிச்சீங்களா? இன்னும் விரிவா சொல்லி இருக்கேன்!
வயலுக்கு நீர் இறைக்கிறேன்-னு நினைத்துப் பணம் போடுகிறார்கள்! ஆனா அது விழலுக்கு இறைக்கத் தான் போகிறது! அதான் போட வேண்டாம்-னு சொன்னேன்! எப்போ வயலுக்குத் தான் போகுது-ன்னு தெளிவாத் தெரியுதோ எப்போ மீண்டும் காசு போடத் துவங்கலாம்!
அது வரை ஆலயச் செலவுகளுக்கு என்ன பண்றது? அதுக்கு வேற திட்டங்கள் கொடுத்திருக்கேனே!
//பார்த்தசாரதியின் தரிசனம் அருமை//
ஒத்தை ரோஜா மாலையா? ஏகாந்த சேவை! பாலாவைக் கேளுங்க! விரிவாச் சொல்லுவாரு! :-)
//இறைவனைத் தரிசிக்க சொகுசாகச் செல்லக்கூடாது என்ற கருத்தை விட இறைவன் திருமுன் எல்லோரும் சமமாக இருக்க வேண்டியிருக்க//
சொகுசு என்பது ஒரு பரிமாணம் தான்!
பத்துடை அடியார்க்கு எளியவன் - இது அடிப்படை!
அதனால் பணத்தால் அடியாரைப் பிரித்து பேதம் பார்ப்பது, அடிப்படைக்கே வைக்கப்படும் வேட்டு என்பதையும் சொல்லி இருக்கேனே!
//குழந்தைகளுக்கு ஆர்வம் வரச்செய்ய சொன்ன வழிமுறை நல்லா இருக்கு.//
இதை நம்மில் பல பேர் செய்து கொண்டு இருக்காங்க குமரன்! அது மிகவும் மகிழ்ச்சியா இருக்கு!
***
//அடுத்து எ.அ.பாலாவோட மாற்றுக்கருத்துள்ள இடுகையைப் படிக்கணும். அங்கேயும் பின்னூட்ட எண்ணிக்கை அதிகமோ?//
பாலா அங்கிட்டு கலக்கி இருக்காரு!
என்னை விடப்போவதில்லை-ன்னு சொல்லி இருக்காரு! :-)
ரெண்டாம் பகுதிக்கு இன்னும் தலைவர் வரல! வந்து பட்டைய கெளப்பவாருன்னு நினைக்கிறேன்!
மிக நல்ல பதிவு. தாமதமாக வந்ததைத் தப்பாக உணர்கிறேன். பலவற்றில் உடன்பட்டாலும் சிலவற்றில் மாறுபடுகிறேன். பிறகு விரிவாக எழுதுகிறேன்.
ReplyDeleteஅந்த அரசியல் அனானிக்கு நீங்கள் சொன்ன பதிலும் விதமும் அற்புதம்.
//பாருங்க, இராசராசன் ஆணையிட்டும் தில்லையில் தமிழ்ப் பதிகங்களின் கதி!//
இரண்டு மாதங்களுக்குமுன்ன் தில்லை சென்றிருந்தபோது கருவறையில் ஆராதனையின்போது தேவாரம் பாடியதைக் கேட்டேன்.