Monday, December 24, 2007

கிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள்; இன்று அதே கொண்டாட்டங்கள் உலகெங்கும்! எத்தனை மகிழ்ச்சி!

சிறு வயதில் இருந்தே கிருஷ்ண ஜெயந்திக்கும், கிறிஸ்து ஜெயந்திக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம் வீட்டில்;
அன்று சீடை,முறுக்கு என்றால், இன்று ரோஸ்கொத்து மற்றும் ப்ளம் கேக்!

வீட்டில் பல இடங்களில் நட்சத்திரம் தொங்கும்; அதன் ஓட்டைகளில் பல வண்ண ஒளி சுற்றும்!
அட்டைப்பெட்டியால் ஆன அழகிய குடில். அதற்குள் மின் விளக்கு பொருத்தித் தருவார் எங்கள் சித்தப்பா. ஒன்று மின்னி இன்னொன்று மறையும்!




முனுசாமி அண்ணா கடையில் இருந்து வைக்கோல் கட்டு கொண்டு வருவோம்;
யோசோப்பு, மரியாள், ஆயர் எல்லாரும் இருப்பர்;
பின்னாளில் பக்கத்து வீட்டு மோகன் அண்ணா-ஷீலா ஆண்ட்டி, தேவதூதர், மூன்று ஞானிகள் போன்ற பொம்மைகளை வாங்கிக் கொடுத்தார்கள்.
குழந்தை இயேசு பொம்மை, தன் இரு கைகளை மேலுக்கு விரித்தபடி சிரித்துக் கொண்டு இருக்கும்.

வைக்கோல் குழந்தைக்குக் குத்துமே!
ஆண்ட்டி வெல்வெட் துணியில் குட்டி மெத்தை தைத்துக் கொடுத்தார்கள், குட்டிப் பாப்பாவிற்கு!

செந்தில் என்ற சிறுவன், பொம்மை இடத்தை விட்டு அந்தாண்ட இந்தாண்ட வரமாட்டான்! கேட்டால் கெட்டவர்கள் குழந்தையைக் கொல்ல வந்து விடுவார்கள் என்று சொல்லுவான்! எப்போதோ கேட்ட கண்ணன் கதையை இதோடு கலந்து விடுவான்! அப்படியே கெட்டவர்கள் வந்தாலும் குழந்தை அவர்களை எல்லாம் உதைத்து விடும்; வண்டிச் சக்கரத்தை நொறுக்கி விடும்! பேயிடம் பால் குடிப்பது போல் அவளை அழித்து விடும் என்றெல்லாம் சொல்லுவான்!
நாங்களும் அவன் சொல்வதைக் கேட்டுக் கொள்வோம்; ஏன் என்றால் அவன் தான் எங்களை விடப் பெரியவன்.

ஆடு, பசு மாடு பொம்மைகள் நிறைய! மயில் பொம்மைகளும் உண்டு!
இந்தப் பொம்மைகள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணனுக்கு அருகில் சிரித்துக் கொண்டு இருக்கும்.
கிறிஸ்துமஸ் அன்றோ, குழ்ந்தை இயேசுவின் பக்கத்தில் சிரித்துக் கொண்டு இருக்கும்.

இப்படி பொம்மைகளாகவோ, ஆடு மாடுகளாகவோ இருந்து விட்டால், உலகில் பிரச்சனை என்பதே இருக்காதோ! :-)
அவற்றுக்கு ஆயர்ப்பாடியும் ஒன்றே! நல்ல மேய்ப்பனும் ஒன்றே!
மேய்ப்பனாகிய சிறுவன் கண்ணன்!
அன்பு ஒன்று தான் இந்தப் பசுக்களுக்கு எல்லாம் வேதம்.
அவன் வேணு கானமே கீதம்!

இரவில் தூங்கும் போதும், குடிலில் விளக்கு எரிந்து கொண்டே இருக்கும்!
அப்பப்ப எழுந்து அந்தக் குழந்தை பத்திரமாக உள்ளதா என்று ஒரு எட்டு எட்டிப் பார்த்துக் கொள்வோம்!
நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!



கவிஞர் கண்ணதாசனின் இயேசு காவியத்தில், குழந்தை இயேசுவின் பிறப்பு:

துல்லிய பட்டுப் போன்ற தூயவள் மரியாள் கையில்
மெல்லிய பாலன் இயேசு விளக்கெனப் புன்ன கைத்தான்!
நல்லவர் உள்ளம் போல நலம்பெறப் பிறந்த செல்வன்
இல்லை என்னாத வாறு இருகரம் விரித்து நின்றான்!

மாளிகைச் செல்வம் தோற்கும் மாணிக்கத் தொட்டில் தோற்கும்
தூளி இல்லாத போதும் தூங்கினான் பாலன் இயேசு!
வாழிய என்றார் தூதர்! வணங்கியே நின்றார் ஆயர்!
நாழிகை செல்லச் செல்ல, நல்லொளி மேலும் பல்கும்!

மத்தேயு 1:23

அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.


சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் போது இட்ட பதிவின் மீள்பதிவு இது!
பழைய பதிவும், பின்னூட்டங்களும் இங்கே!

10 comments:

  1. நானே வழியும் சத்ய ஜீவனுமாயிருக்கிறேன்..ஆமென்.

    ReplyDelete
  2. பண்டிகையில் பழசாவது புதுசாவது?

    அவனுக்கு வேண்டியது மாடு. இவனுக்கோ ஆடு.

    எப்படியோ எதையாவது மேய்ச்சே ஆகணும்!

    எல்லாம் ஒன்றுதாங்க.

    குழந்தை மனசுதான் எத்தனை பளிங்கு.

    ReplyDelete
  3. என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்.
    - யேசு

    கிறித்துவ பதிவர்கள் அனைவருக்கும் யேசு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. //மதுரையம்பதி said...
    நானே வழியும் சத்ய ஜீவனுமாயிருக்கிறேன்..ஆமென்//

    மெளலி அண்ணா
    எனக்கு மிகவும் பிடித்த விவிலிய வரிகள். கண்ணன் கீதையில் சொல்வதும் இதே!

    இறைவனே காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறான்.
    நீரே உணவாகவும் உணவை விளைவிப்பதாகவும் இருக்கு! தீர்த்தம் சுப்ரபாதப் பதிவில் பார்த்தோமே!

    ReplyDelete
  5. //துளசி கோபால் said...
    அவனுக்கு வேண்டியது மாடு. இவனுக்கோ ஆடு.
    எப்படியோ எதையாவது மேய்ச்சே ஆகணும்!//

    டீச்சர்-னாலே நஒபி
    அட நச்-ன்னு ஒரு பின்னூட்டம்! அதைச் சொன்னேன்!

    //குழந்தை மனசுதான் எத்தனை பளிங்கு//

    ஆமாம் டீச்சர்! என்னை விட்டாக்கா முதல் ஆளா ஓடிப் போயிடுவேன் குழந்தை வயதுக்கு!
    ஒரே ஒரு சங்கடம்! இந்தப் பரீட்சை வருசத்துக்கு மூனு முறை எழுதணும்! சரி, பாத்துக்கலாம்! :-)

    ReplyDelete
  6. //கோவி.கண்ணன் said...
    கிறித்துவ பதிவர்கள் அனைவருக்கும் யேசு பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

    அட
    எனக்கும் சேர்த்து வாழ்த்து சொல்லுங்கண்ணே! எனக்கும் கொண்டாட்டம் தான்!

    ReplyDelete
  7. // Dreamzz said...
    Nice one! Merry Christmas!//

    Merry Christmas to you too, Dinesh!
    Enjoy the Holidays!!

    ReplyDelete
  8. வைகுண்ட ஏகாதசிக்கு விரதம் இருந்து, திருவாதிரைக்குக் களியும், குழம்பும் சாப்பிட்டு, இப்போ கிறிஸ்துமஸுக்குக் கேக்கும் சாப்பிட்டாச்சு, நல்லாவே இருக்கு எல்லாம். நேரமும் இல்லை, கணினி இணைப்பும் சரி இல்லை, அதனால் ரொம்பவே தாமதமான பின்னூட்டம் வருதோ என்னமோ தெரியலை, பார்க்கணும். :(

    ReplyDelete
  9. கிருஷ்ணனாகட்டும் - கிறிஸ்துவாகட்டும். ஒற்றுமைகள் அதிகம்.
    மாடு மேய்ப்பவன் - ஆடு மேய்ப்பவன்
    மாரி அம்மன் - மேரி மாதா
    ம்ம்ம்ம் - கொண்டாட்டம் எனில் எல்லாம் கொண்டாட்டம்தான்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP