குறுக்குப் புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன்!
குறுக்கும் நெடுக்குமாய் ஓடி, வெற்றி பெற்றவர்கள் இதோ!
அறிவன்
அரைபிளேடு
மோகன்தாஸ்
தங்கம்
லஷ்மி
பொன்ஸ்
ஜெயஸ்ரீ
அனைவருக்கும் வாழ்த்துக்கள் மக்களே!
புதிரா புனிதமாவில், முதல் முறை நிறைய பேர் 100/100 அடித்துள்ளார்கள்! மகிழ்ச்சியாய் இருக்கு!
ஆர்வமுடன் பங்கு பெற்ற மற்றவர்களுக்கும், வாழ்த்துக்கள்!
பரிசு எப்படியும் உங்களுக்கும் சேர்த்து தானே! :-)
இதோ பரிசேலோ ரெம்பாவாய்.... ஆசிரியர் கல்கியுடன், பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களின் Group Photo. ஏற்கனவே நீங்கள் பார்த்தும் இருக்கலாம்! யார் யார் எந்தெந்த பாத்திரம் தெரிகிறதா? (நன்றி பொ.செ யாகூ குழுமம்)
புதிரா புனிதமாவில், குறுக்கெழுத்து ஸ்டைல் நல்லா இருக்கா, இல்லை பழையபடி மல்டிபிள் சாய்ஸ் தான் பிடிச்சிருக்கா?
மேலாக்க ஒரு வாக்குப் பெட்டி இருக்கு பாருங்க! அங்கன சொல்லுங்க மக்கா! அடுத்த முறை அப்படியே பின்னிடலாம்!
சரியான விடைகள் இதோ: (பெருசாப் பாக்கணும்னா, கிளிக்குக)
மக்களே
நண்பர்கள் ஜிடாக்கில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நியூயார்க் நேரப்படி, நாளை மாலை (Dec 19) வரை வாய்தா போட்டாச்சே!
அலோ மக்களே, ஏதோ மார்கழி மாசம் பொறந்துடுச்சாமே! குளிருல நடுங்கிக்கிட்டே என்ன பண்றீங்க? - தெருவுல கலர் கலரா, கலர்கள் போடும் கலர் கோலங்களைப் பார்க்க கலரலையா நீங்க?...ச்சே கிளம்பலையா நீங்க? :-)
என்னாது, ஓவராக் குளிருதா?
அதுக்காக அப்படியே போத்திக்கிட்டு தூங்கிட முடியுமா என்ன? குளிர் பாத்தா கலர் பாக்க முடியுங்களா? கெளம்புங்க மக்கா!
முட்டைய ஒடைச்சாத் தான் ஆம்லெட்டு! ஆட்டையைப் போட்டாத் தான் ஆள் செட்டு! :-)
சரி...மேட்டர் இன்னான்னா, மார்கழி மாசம் பெண்கள் எல்லாம் பாவை நோன்பு நோற்பாங்களாம்! விளையாட்டு போல விளையாடிக்கிட்டே செய்வாங்களாம், பாட்டுக்குப் பாட்டு ஸ்டைல்-ல!
அப்ப, ஆண்கள் மட்டும் சும்மாவா? - நாங்க சிங்கம்-ல!
அவங்க பாட்டுக்குப் பாட்டுன்னா,
நாங்க வார்த்தைக்கு வார்த்தை! - தெரியும்-ல!
அதான் நாமளும் மார்கழி வார்த்தை விளையாட்டைத் தொடங்கிடலாம்-னு...
இதோ அடுத்த புதிரா? புனிதமா??
இந்த முறை ஆட்டம் கொஞ்சம் வித்தியாசம்.....குறுக்கெழுத்துப் புதிர்!
மார்கழி மாசம் கோலம் போடுறா மாதிரி, கட்டம் கட்டமா போட்டு ஒரு மார்கழி ஸ்பெசல்!!
டாபிக் - எல்லாருக்கும் புடிச்ச எவர் க்ரீன்...பொன்னியின் செல்வன்!
மார்கழி ஆட்டம் ஆடுங்க மக்கா...விடைகள் நாளை மாலை நியூயார்க் நேரப்படி!
என்னாது....பேப்பர், பென்சில் எல்லாம் வேணுமா?...
அந்தா...அந்தப் பொட்டிக் கடையில வாங்கிக்குங்க, பழுவேட்டரையர் அக்கவுண்ட்-ல! :-)
விடைகளைப் பொட்டிக்குள்ளாரயே போட்டுப் பாக்கலாம்!
பின்னூட்டம் இடும் போது மட்டும், கீழே உள்ள காப்பி பேஸ்ட்-ஐ யூஸ் பண்ணிக்கங்க மக்கா!
இடமிருந்து வலம்:
1. அப்பர் சுவாமிகள் கண்ட காட்சி, திருவிழாவாக நடக்கும் ஊர். இங்கு தான் ரெண்டு சீனத்து வர்த்தகர்கள் வாராங்க! (5)
2. புயல் அடித்த பின் இங்கு பழுவேட்டரையர் வருகிறார், இளவரசரைப் பிடித்துக் கொண்டு போக!
ஊரின் முதல் பாகம் பத்து மில்லியன். இரண்டாம் பாகம் தான் புதிரின் விடை (2)
3. தேவாரம் மீட்ட திருநாரையூர் இளைஞரின் கடைசிப் பெயர் - last name (3)
4. //இவன் என்னைச் சிநேகத்துரோகி என்று சொன்னான். ஆனால் இவன் சிநேகத்துரோகி மட்டுமல்ல; எஜமானத் துரோகி// -
இவ்வாறு கந்தமாறனைக் கரிகாலனிடம் போட்டுக் கொடுப்பது யார்? (8)
5. பூங்குழலியின் அண்ணி. முதல் நான்கு எழுத்து மட்டும் (4)
6. கல்கியில் நாவல் வந்த போது, பத்திரிகையில் முதலில் படம் வரைந்தவர் (4)
7. (வலமிருந்து இடம்) ஒற்றனுக்கே ஒற்றன் வைக்கும் இவரின் பெயர், பட்டப் பெயர் நீங்கியுள்ளது (5)
8. இளவரசர் அருண்மொழியைப் படகோட்டி, நாகை சூடாமணி விகாரத்தில் இருந்து காத்தவன் (6)
9. இலங்கையில் இருந்து இளவரசர், நேரே இந்தச் சோழ நாட்டு ஊருக்குத் தான் வரவேண்டும் என்று வந்தி அடம் பிடிக்கிறான் (4)
10. மழபாடித் தென்னவன். மாதேவியின் அப்பா (6)
கீழிருந்து மேல்:
1. ஜோதிடர் வீட்டுக் கூரையைப் பிடித்துக் கொண்டு தப்பிய வானதி, வெள்ளத்தில் இந்த ஊருக்கு வந்து கரை சேர்ந்தாள் (6)
2. சிறையிருந்த பைத்தியக்காரனின் உண்மைப் பெயர் (7)
4. (கீழிருந்து மேல்) இந்த ஆற்றில் தான் வேல் எறிந்து வந்தியத்தேவனை மூழ்கடித்ததாக கந்த மாறன் நினைத்துக் கொண்டான் (4)
11. பிரம்மராயர், ஊமை ராணி்யைத் தஞ்சைக்குப் பிடித்துக் கொண்டு வர அனுப்பும் ஆள் யார்? (5)
12. இடும்பன்காரியைச் சந்திக்கும் இன்னொரு சதிகாரன், மீன் முத்திரையைச் செய்து காட்டுவான். இவன் பெயர் என்ன? (8)
13. சுரங்கப்பாதைகளும், பொக்கிஷமும், புலிகளும் இருக்கும்....பழுவேட்டரையரின் இதற்குள் தள்ளப்பட்டால், அதோ கதி தான்! (4)
14. (கீழிருந்து மேல்) செம்பியன் மாதேவியின் கணவர் (8)
15. சோழனுடன் வணிகம் செய்த கிரேக்க நாட்டவர் (4)
16. இந்தப் புதர்களின் பின்னால் இருந்து தான் பூங்குழலி, பழுவூர் இளையராணியும் மந்திரவாதியும் பேசுவதை ஒட்டுக் கேட்டாள் (2)
விடைகளைக் காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளுக்கு ஈசியா....
Across
1
2
3
4
5
6
7
8
9
10
Down
1
2
4
11
12
13
14
15
16
Results of the Poll:
நான் வாய்தா கேட்டுக்கறேன் தல.
ReplyDeleteஇந்த ஆட்டைக்கு நான் வர்லே - பேசாம இழுத்துப் போத்திட்டுப் படுத்துக்குறேன் ( கலரெ கனவுலே பாத்துக்குறேன்)
ReplyDeleteசூப்பர் போட்டி. அசத்திட்டிங்க போங்க. கொஞ்சம் கஷ்டம்தான் இருக்கு. இந்த போட்டிய சாக்கா வச்சிகிட்டு இன்னொரு வாட்டி படிக்கலாம்னு ஆசைதான். ஆணி நிறைய இருக்கே.
ReplyDeleteமுடிஞ்சவரை போட பாக்கறேன். :-)
என்ன பரிசு தருவீங்கய்யா?
ReplyDeleteAcross
1.திருவையாறு
2.கரை
3.நம்பி
4.வந்தியத்தேவன்
5.ராக்கம்
6.மணியம்
7.அநிருத்த(ர்)-ர் விட்டுட்டிங்க
8.முருகய்யன்
9.பழையாறை
10.மழபாடியார்
Down
1.திருநல்லம்
2.கருத்திருமன்
4.வடவாறு
11.பிநாகபாணி
12.சோமன்சாம்பவன்
13.நிலவறை
14.கண்டாராதித்தர்
15.யவனர்
16.தாழை
என்னது? முதல் பின்னூட்டமே வாய்தாவா?
ReplyDeleteவிடிஞ்சமாதிரி தான். :-))
எனக்கு தெரியாது என்று எப்படி சொல்வது? அதனாலேதான்.
பேப்பர் பென்சில் தேவைப்படவில்லை. நீங்கள் கொடுத்த கட்டத்திலேயே டைப் செய்து சரிபார்க்க முடிந்தது :))
ReplyDeleteவிடைகள்.
Across
1. திருவையாறு.
2. கரை. ("கோடி"க்கரை)
3. நம்பி. (நம்பியாண்டார்)
4. வந்தியத்தேவன்
5. ராக்கம் (மாள்)
6. மணியன்.
7. அநிருதர். (அநிரு"த்"தர். "த்"க்கு இடமில்லையே.)
8. முருகய்யன்
9. பழையாறை.
10. மழவரையர்
Down
1. திருநல்லம்
2. கருத்திருமன்
4. வடவாறு
11. பினாகபாணி
12. சோமன்சாம்பவன்
13. நிலவறை
14. கண்டராதித்தர்
15. யவனர்
16. தாழை
(ஒண்ணு ரெண்டு தப்பா இருந்தா கரெக்ட் பண்ணுங்க. :))
இப்பதான் அஞ்சாவது முறையா பொன்னியின் செல்வனை படிச்சி முடிச்சேன் சூட்டோடு சூடா உங்க குறுக்கு எழுத்துப் போட்டி. :))
ReplyDeleteAcross
ReplyDelete1 திருவாரூர்
2 கோடிக்கரை
3
4
5
6
7
8
9
10
Down
1
2
4
11
12
13
14 கண்டராதித்தர்
15
1
I'm sorry the answer for ACROSS 1 is திருவையாறு
ReplyDeletehttp://mohandoss.i.googlepages.com/puthir.JPG
ReplyDeletedone.
நான் ஸ்கூல் போறப்ப படிச்சது.
ReplyDeleteகீதா பாட்டி காலத்துல நடந்த விஷயங்களை இப்படி போட்டியா வெச்சா அவங்களால தான் சொல்ல முடியும். :p
அதுவும் அவங்களுக்கே இப்ப ஞாபக மறதியா இருக்கும். :))
தள்ளி இருந்து வேடிக்கை பாக்கறேன்.
Across
ReplyDelete௧ திருவையாறு
௨ (கோடி) கரை
௩ நம்பி
௪ வந்தியதேவன்
5
௬ மணியம்
7
8
9
௧0 மழவரையர்
Down
1
௨ கருத்திருமன்
௪ வடவாறு
11
௧௨ சோமன்சாம்பவன்
௧௩ நிலவறை
௧௪ கண்டராதித்தர்
இது நினைவிருந்தவரை முதல் தவணை . மற்றவை பொ. செ. பார்த்து காப்பி அடித்து அடுத்த தவணை விடை அளிக்கப்படும் . காப்பி அடித்தால் மார்க் உண்டுதானே ?
ஷோபா
கடைசியா படிச்சது 4 வருஷம் முன்னால...அவ்வளவா ஞாபகம் இல்லிங்கண்ணா. நானும் ஜூட்.
ReplyDeleteவிடைகள்:
ReplyDeleteAcross
1 திருவாரூர்
2 கரை
3 நம்பி
4 வந்தியத்தேவன்[ நம்ம கதாநயகன்]
5 ராக்கம்
6 மணியன்
7 அநிருத்த
8 முருகய்யன்
9 பழையறை
10 மழவரையர்
Down
1 திருநல்லம்
2 கருத்திருமன்
4 வடவாறு
11 பினகபானி
12 சோமன் சாம்பாவன்
13 நிலவறை
14 கண்டராதித்தர்
15 யவனர்
16 தாழை
சரியா தவறா என எப்போ சொல்லுவீங்க
Across
ReplyDelete௫ ராக்கம்
௭ அநிருத்தர்
௮ முருகய்யன்
௯ பழையாறை
Down
௧ திருநல்லம்
௧௧ பினாகபாணி
௧௫
௧௬ தாழை
all but one attempted.
Shobha
Across
ReplyDelete1 திருவையாறு
2 கரை
3 நம்பி
4 வந்தியத்தேவன்
5 ராக்கம்
6 மணியம்
7 அநிருத்த
8 முருகய்யன்
9 பழையாறை
10 மழவரையன்
Down
1 திருநல்லம்
2 கருத்திருமன்
4 வடவாறு
11 பினாகபாணி
12 சோமன்சாம்பவன்
13 நிலவறை
14 கண்டராதித்தர்
15 யவனர்
16 தாழை
மக்களே...சாரி...
ReplyDeleteகொஞ்சம் ஆணி ஜாஸ்தியா இருந்திச்சு காலையில்....
அதான் உடனே பின்னூட்டங்களை பப்ளீஷ் பண்ண முடியலை!
அறிவன்...முதல் ஆளா வந்து...முதல் ஆளா அடிச்சி ஆடி...முதல் ஆளா முதல் மார்க்கு வாங்கி இருக்காருண்ணே!
ReplyDeleteதல பின்னிட்டீங்க! எல்லா விடைகளும் சரி! வாழ்த்துக்கள்! :-)
அடுத்து அரைபிளேடு!
ReplyDeleteஅட முழுபிளேடு ப்பா! அவரும் எல்லாம் கரீட்டா சொல்லிக்கீறாரு!
தல, வாழ்த்துக்கள்!
என்னாது அஞ்சு தபா தான் படிச்சீங்களா? மோகன்தாஸ், பொன்ஸக்கா எல்லாரையும் கேளூங்க...எத்தன வாட்டி படிச்சாங்கன்னு...பிளேடுக்கே ரத்தம் வந்துடும்! :-)
வெங்கடாசலம்
ReplyDeleteஉங்க 1,2,14 சரியே!
2 ஆம் விடைக்கு, பின் பகுதி மட்டும் சொன்னாப் போதும்....நீங்க முழுக்கச் சொல்லி இருக்கீங்க. பரவாயில்லை!
மோகன்தாஸ் அண்ணே!
ReplyDeleteபின்னிப்புட்டீங்க...ஆல் கரீட்டு்!
அந்த சிறைப்பிடித்துக் கொண்டு வரும் ஊர்/பாதாள இடம் மட்டும் இடையின "ர" போட்டுட்டீங்க! போனாப் போகுது! மார்க்கு கொடுத்திடலாம்!
ஒங்க விடையை Screenshot போட்டு காட்டி இருக்கீயளே! நியாயமா?எவனா களவாணிப் பையன் பிட் அடிச்சா என்ன பண்ணுவீங்க?
என்னாது, அதுக்குத் தான் பப்ளிக்கா screen shot போட்டீங்களா? ஹிஹி! நல்லா இருங்க! :-))
ஷோபாக்கா...
ReplyDeleteரெண்டு தவணையில் ஆடி இருக்கீங்க!
காப்பி அடித்தால் மார்க் உண்டு தான்! அதுக்காக இப்படி எழுத்துப் பிழை எல்லாம் வச்சா எப்படி?
குறுக்கெழுத்துல எழுத்துப் பிழை வராதே! கட்டத்தை ஒவ்வொன்னாத் தானே நிரப்பி ஆவணும்! சரி பரவால்லை!
All but one சொல்லி இருக்கீக!
அந்த ஆல் பட் ஒன்-ல ஆலும் கரீட்டே! :-)
தங்கம்...
ReplyDeleteசூப்பர்! எல்லா விடைகளும் சரி!
கலக்கிட்டீங்க! வாழ்த்துக்கள்! :-)
லக்ஷ்மி...கிரேட்! எல்லா விடைகளும் சரியே! வாழ்த்துக்கள்!!
ReplyDelete//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteநான் வாய்தா கேட்டுக்கறேன்//
தல
எதுக்கு ஒமக்கு வாய்தா?
சரி...வாய்தான்னா..கொஞ்சம் பின்னாடி வந்து ஆடறது! மாலைக்குள் ஒழுங்கா ஆடிடுங்க! சரி வேர் இஸ் திஸ் பினாத்தலார்?
சீனா...சார்
ReplyDeleteநீங்களுமா வாய்தா? கலரைக் கனவுல பாத்துக்கறீங்களா? ஐயகோ! இது ரொம்ப அநியாயம்!
This comment has been removed by the author.
ReplyDelete//Sridhar Venkat said...
ReplyDeleteசூப்பர் போட்டி. அசத்திட்டிங்க போங்க.//
தல
பொட்டி வரையறத்துக்குள்ளார போதும் போதும்-னு ஆகிப் போச்சு!
மாலை வரை டைம் இருக்கு! வேணும்னா இன்னும் கொஞ்சம் வாய்தா போட்டுக்கலாம்! அடிச்சி ஆடுங்க!
ஈசியாத் தான் இருக்கு போல! பல பேரு நூத்துக்கு நூறு வாங்கிட்டாங்க...பாருங்க!
//Sridhar Venkat said...
ReplyDeleteசூப்பர் போட்டி. அசத்திட்டிங்க போங்க.//
தல
பொட்டி வரையறத்துக்குள்ளார போதும் போதும்-னு ஆகிப் போச்சு!
மாலை வரை டைம் இருக்கு! வேணும்னா இன்னும் கொஞ்சம் வாய்தா போட்டுக்கலாம்! அடிச்சி ஆடுங்க!
ஈசியாத் தான் இருக்கு போல! பல பேரு நூத்துக்கு நூறு வாங்கிட்டாங்க...பாருங்க!
// வடுவூர் குமார் said...
ReplyDeleteஎன்னது? முதல் பின்னூட்டமே வாய்தாவா?
விடிஞ்சமாதிரி தான். :-)//
ஹிஹி
இதுக்குத் தான் மொத பின்னூட்டத்த நாமளே போட்டுக்கினும்-ங்கிறது! சரி தானே கொத்ஸ்? :-)
அட, குமார் அண்ணா, நீங்களும் வாய்தாவா?
//ambi said...
ReplyDeleteநான் ஸ்கூல் போறப்ப படிச்சது//
அலோ அம்பி
அப்ப அரை பிளேடு இப்ப தான் ஸ்கூலுக்குப் போறாரா? நக்கலுய்யா உமக்கு!
பொன்னியின் செல்வன் எவர் க்ரீன் தல! கீதாப் பாட்டி மட்டும் இல்ல, ஒங்க பேரப் புள்ளையும் இதப் படிப்பான் பாருங்க! :-)
//தள்ளி இருந்து வேடிக்கை பாக்கறேன்//
தள்ளி வுட்டு வேடிக்கை பாக்காம இருந்தா சரி! :-))
//மதுரையம்பதி said...
ReplyDeleteகடைசியா படிச்சது 4 வருஷம் முன்னால...அவ்வளவா ஞாபகம் இல்லிங்கண்ணா. நானும் ஜூட்
//
மெளலி அண்ணா...இப்படி மார்கழிக் கோலம் போடாமப் போனா எப்படி? சும்மா புள்ளி மட்டும் வையுங்க! :-)
இடமிருந்து வலம்
ReplyDelete1.திருவையாறு
2.கரை
3.நம்பி
4.வந்தியத்தேவன்
5.ராக்கம் (ராக்கம்மாள்)
6.மணியம்
7.அநிருதர் (அநிருத்தர் என்றல்லவா வரவேண்டும்)
8.முருகய்யன்
9.பழையாறை
10.பராந்தகர்
மேலிருந்து கீழ்
1. திருநல்லம்
2. கரியதிருமால் ( இன்னொரு பெயர் கருத்திருமகன்)
4. வடவாறு
11. பினாகபாணி
12. சோமன்சாம்பவன்
13. நிலவறை
14. கண்டராதித்தர்
15. யவனர்
16. தாழை
சில விடைகளுக்காக மீண்டும் புத்தகத்தைப் புரட்டவேண்டி இருந்தது.
இடமிருந்து வலம்
ReplyDelete1 திருவையாறு
2. கரை
3. நம்பி
4. வந்தியத்தேவன்
5. ராக்கம்
6. மணியம்
7. அநிருத்த
8.முருகய்யன்
9. பழையாறை
10. மழவரையர்
மேலிருந்து கீழ்
1. திரு நல்லம்
2. கருத்திருமன்
4. வடவாறு
11. பினாகபாணி
12. சோமன் சாம்பவன்
13. நிலவறை
14. கண்டராதித்தர்
15. யவனர்
16. தாழை
Ineractiveஆன அந்தக் கட்டம் ஐடியா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
என்னவோ ரெண்டு நாளா ரொம்ப போர் அடிக்கிற மாதிரி ஒரு feeling.. நல்ல வேளை நினைவுப்படுத்திட்டீங்க.. அண்ணன் வந்தியத்தேவனை follow பண்ணா போதுமே.. எல்லா சோர்வும் காணாம போய் ஹார்லிக்ஸ் குடிச்சா மாதிரி ஆகிடும்.. !
எனக்கு எப்பவுமே குறிக்கெழுத்து போட்டின்னா கொஞ்சம் அலர்ஜி தான். ஆனாலும் பரவாயில்லைன்னு தொடங்குனேன். இடமிருந்து வலம் 2,3க்கு விடை தெரிஞ்சது. தொடரலாம்ன்னு பாத்தா கொஞ்சம் தலை சுத்திச்சு. அடடா குறுக்கெழுத்துனால்லே எப்பவும் வர்ற தலைசுத்தல் வந்தாச்சு; இத்தோட நிறுத்திக்கலாம்ன்னு நிறுத்திட்டேன். :-)
ReplyDeleteநமக்கெல்லாம் மல்டிபிள் சாய்ஸ் தான் வேலைக்காகும் போல இருக்கு. :-)
வந்தியத்தேவன்
ReplyDeleteவிடைகள் எல்லாம் கரெக்டுங்க! - ஒன்னே ஒன்னைத் தவிர
அது பராந்தகர் இல்லியே! - Across 10
சில பாத்திரங்களுக்கு ஒரே ஆளுக்கு ரெண்டு மூனு பேர் இருக்கு! அதுனால் அதுக்கும் கொடுத்திடறேன். கட்டத்தில் பொருத்தினா கரெக்டான பேரு உங்களுக்கே வந்திடுமே! :-)
பொன்ஸ் அக்கா
ReplyDeleteகலக்கிட்டீயளே! ஆல் வடைகள் சரியே! :-)
ஓ ரெண்டு நாளா போர் அடிச்சி,
இப்ப வந்தியைப் பார்த்தவுடன் ரூட் வுட ஆரம்பிச்சிட்டீங்க போல! என்சாய்!
Interactive கட்டம் ஐடியா புடிச்சிருக்கா! நன்றி!!ஆனா அதான் கொஞ்சம் நம்மள வேலை வாங்கிடுச்சி!
This comment has been removed by the author.
ReplyDeleteAcross
ReplyDelete1 திருவாரூர்
2 கரை
3 நம்பி
4 வந்தியத்தேவன்
5
6 மணியம்
7 அநிருதத
8 கருதிருமன்
9 பழையாறை
10
Down
1
2
4
11 பினாகபாணி
12
13 நிலவறை
14
15
16 தாழை
வாங்க, ஜிரா
ReplyDeleteAcross
2,3,4,6,7,8,9 சரி!
1st ஈசி தலைவா! திருவாரூர் இல்ல! இவங்க ரெண்டு பேரும் சீனாக்காரன் கணக்கா வேஷம் கட்டிக்கினு துணி விக்க வருவாங்களே! அந்த ஊரு!
Down
11,13,16 சரி!
வீட்டுக்குப் போய் attempt பண்ணாததையும் ட்ரை பண்ணுங்க!
பெனாத்தலாரு மற்றும் மக்கள்ஸ் வேறு வாய்தா கேட்டிருக்காக! மேலும் ஒரு நாளைக்கு வாய்தா கொடுத்திடலாமா? என்ன சொல்றீங்க
//தல
ReplyDeleteஎதுக்கு ஒமக்கு வாய்தா?
சரி...வாய்தான்னா..கொஞ்சம் பின்னாடி வந்து ஆடறது! மாலைக்குள் ஒழுங்கா ஆடிடுங்க! சரி வேர் இஸ் திஸ் பினாத்தலார்?//
நாங்க எல்லாம் வாய்தா வாங்குனோமுன்னா கேஸ் முடிய ஒரே ஒரு வழிதான் தெரியுமில்ல. அதனால எங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக்காதீங்க. தெரியாதுன்னு சொல்ல முடியுமா. அதான் இப்படி! :))
அப்புறம் அண்ணா இந்த கட்டம் எல்லாம் அற்புதமா போட்டு இருக்கீங்க. இந்த கலையை தனியா கிளாஸில் கத்துக்கறேன். நமக்கு உபயோகமாகும் பாருங்க. :)
ReplyDeleteAcross
ReplyDelete1. திருவையாறு
2. கரை
3. நம்பி
4. வந்தியத்தேவன்
5. ராக்கம்
6. மணியம்
7. அநிருத்த
8. முருகய்யன்
9. பழையாறை
10. மழவரையர்
Down
1. திருநள்ளாறு
2. கருத்திருமன்
4. வட்டாறு
11. பினாகபாணி
12.சோமன் சாம்பவன்
13.நிலவறை
14.கண்டராதித்தர்
15.யவனர்
16. தாழை
வாங்க ஜெயஸ்ரீ
ReplyDeleteரொம்ப நாளாச்சுது! நலமா?
குறுக்கால எல்லாமே சரி!
நெடுக்கால
1. திருநள்ளாறு இல்ல! ஆனா அப்படித் தான் ஆரம்பிக்கும்! ;-)
4. வட்டாறு இல்ல...கிட்டத்தட்ட க்ளோஸ்!
மத்த எல்லாம் சரி தான்!
2nd round?
ஆமாம் ரொம்ப நாளாச்சு. நீங்க நலமா? சுப்ரபாதம் ஒரு பகுதி முடிஞ்சு போச்சு போலயிருக்கே ! படிக்காத பதிவெல்லாம் படிச்சுட்டு வரேன்.
ReplyDelete1. திருநல்லம்
2. வடவாறு
Ravi
ReplyDeleteIf I write there will not be any ezhuthupizhai. but the google transliteration is new to me & though I edited it has ditched me. Adudan, thambi yen mistakes chutti kaatum nilamai.
So from now on I'll stick to Englipees.
Shobha
இவ்வளவுதான் முடிந்தது, KRS:
ReplyDeleteAcross
1 திருவையாறு
2 கரை
7 பாதாளம்
9 புரையூர்
Down
12 சோமன் சாம்பவன்
16 கோரை
ஜெயஸ்ரீ...2nd roundஇல் எல்லாமே சரி! வாழ்த்துக்கள்! :-)
ReplyDeleteவாங்க ஜீவா! பூர்வி கல்யாணி கச்சேரி களை கட்டுது போல! ;-)
ReplyDeleteAcrossல 1,2 கரெக்டு
Down-la 12 சரி தான்!
மெள்ள ட்ரை பண்ணுங்க! அதான் நாளை வரை வாய்தா போட்டாச்சே!
மக்களே
நண்பர்கள் ஜிடாக்கில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க,
நியூயார்க் நேரப்படி, நாளை மாலை (Dec 19) வரை வாய்தா போட்டாச்சே!
//
ReplyDeleteஅறிவன்...முதல் ஆளா வந்து...முதல் ஆளா அடிச்சி ஆடி...முதல் ஆளா முதல் மார்க்கு வாங்கி இருக்காருண்ணே!
தல பின்னிட்டீங்க! எல்லா விடைகளும் சரி! வாழ்த்துக்கள்! :-)
//
அதுசரி,ஆனா நீங்க ஒரு விடையில் ஒரு எழுத்து பொருந்தாமல் என்னை ஊகம் பண்ண வச்சீங்களே,அத கோர்ட்'ல ஒத்துக்குங்க :-)
சரி என்ன பரிசு தருவீங்க?
//அதுசரி,ஆனா நீங்க ஒரு விடையில் ஒரு எழுத்து பொருந்தாமல் என்னை ஊகம் பண்ண வச்சீங்களே,அத கோர்ட்'ல ஒத்துக்குங்க :-)//
ReplyDeleteஅட, இது என்ன வம்பாப் போச்சுது?
ஒரு எழுத்து பொருந்தலையா?
அந்த ஒற்றனுக்கே ஒற்றன் கேள்வியா?
அதுல பட்டப்பெயரை நீக்கினாப் பொருந்துமே! மரியாதை விகுதி எல்லாம் போடாம, கதைல வர ஃபுல் பெயரில், பட்டப் பெயர் நீக்குங்க! பொருந்தும்! :-)
//சரி என்ன பரிசு தருவீங்க?//
எத்தனை பேரு ஜெயிச்சு இருக்காங்க பாருங்க! அத்தனை பேரோடும் நீங்க பகிர்ந்துக்கனும்...பொதுவா புதிரா புனிதமாவில் தரப்படும் பரிசு தான் இம்முறையும்! :-))
Across
ReplyDelete1திருவையாறு
2கரை(கோடிக்கரை)
3நம்பி
4வந்தியதேவன்
5ராக்கம்(மா)
6மணியம்
7அநிருதர்
8முருகய்யன்
9பழையாறை
10மழவராயர்
Down
1திருநல்லம்
2கருத்திருமன்
4வடவாறு
11பிநாகபாணி
12சோமன் சாம்பவன்
13நிலவறை
14கண்டராதித்தர்
15யவணர்
16 தாழை
அகில் பூங்குன்றன்...சாரிங்க
ReplyDeleteஒங்க விடைகள் எல்லாம் சரி தான்!
ஆனா ரிசல்ட் போட்டவுடன், அடுத்த ஒரு நிமிடத்திற்குள்ளார ஒங்க பின்னூட்டம் வந்திடுச்சு! அதனால கணக்குல எடுத்துக்க முடியாமப் போச்சுது! அடுத்த முறை அடிச்சி ஆடுங்க, வாழ்த்துக்கள் :-)
நண்பரே,அநிருத்தர் என்பதே சரி,அநிருத்த.. தவறு,அதைத்தான் சுட்டினேன்.
ReplyDeleteஎனினும் ஒரு சுவாரசியமான போட்டிக்காக வாழ்த்துக்கள் பல.
ரவி,
ReplyDeleteமன்னிச்சுக்கங்க.. லாங் வீக்கெண்டுல நம்ம நேரம் நம்ம கையில இல்லைன்னு தெரிஞ்சும் குறுக்கெழுத்துக்கு வரேன்னு வாக்கு கொடுத்ததுக்கு :-(
நல்ல முயற்சி. அப்பப்ப இது மாதிரி எதாச்சும் வந்தாதான் மூளை கொஞ்சம் ரெப்ரஷ் ஆகுது. மல்டிபிள் சாய்ஸ், குறுக்கெழுத்து அப்படின்னு எந்த ஒரு பார்மட்லேயும் நிக்காம மாத்திகிட்டே இருந்தா சுவாரஸ்யம் குறையாம இருக்கும்.
அட, தெரியாமப் போச்சே? எப்படி வேணாலும் கொடுங்க, புதிரா, புனிதமா ஆனால் முன்னாலேயே சொல்லிடுங்க, 2,3 நாளா கணினி பக்கம் வர முடியலை, மெயில் எல்லாம் சேர்ந்து போய்ப் பார்க்கவே இல்லை! இப்போத் தான் பார்க்கிறேன். :(((((((((((((((((((((
ReplyDeleteஹலோ ரவி
ReplyDeleteநான் எழுத்துப்பிழை செய்யவில்லையே! numbers ஒன் டூ என்று டைப் செய்ததை கூகிள் தமிழில் க ரூ என்று மாற்றியிருக்கிறது :)
ஷோபா
//Shobha said...
ReplyDeleteஹலோ ரவி
நான் எழுத்துப்பிழை செய்யவில்லையே!//
யக்கா...கோச்சிக்காதீங்க! நான் சும்மானாத் தான் சொன்னேன்!
உங்க விடையில்..."வந்தியதேவன்" இல் "த்" ஐ வுட்டுட்டீங்களா?
அதுனால அந்த ஃபுல் கட்டமும் ஃபில் ஆகி இருக்காதேன்னு கேட்டேன்! அம்புட்டு தான்!
எழுத்துப் பிழை எல்லாம் நீங்க செய்வீங்களா? அப்படித் துணிஞ்சி நான் சொல்லத் தான் முடியுமா? அடிச்சிக் கவுத்திட மாட்டாங்களா? ச்ச்ச்சும்மா! :-))
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteஅட, தெரியாமப் போச்சே? எப்படி வேணாலும் கொடுங்க, புதிரா, புனிதமா ஆனால் முன்னாலேயே சொல்லிடுங்க//
வாங்க தல (தலைவி)! :-)
மெயில் தட்டி வுட்டேன், புதிர் போட்டவுடன்!
ஆனா நீங்க தான் கணினி பக்கம் வரலைன்னு சொல்லிட்டீங்களே!
இனிமே ரெண்டு நாளைக்கு முன்னாடியே வெளம்பரம் போட்டுடறேன்! காவிய புதன் மாதிரி...புதிரா புனிதமா புதன்-ன்னு! :-))
//அறிவன் /#11802717200764379909/ said...
ReplyDeleteநண்பரே,அநிருத்தர் என்பதே சரி,அநிருத்த.. தவறு,அதைத்தான் சுட்டினேன்.//
அநிருத்தப் பிரம்மராயர்-ல பட்டப் பெயர் நீக்கினா அநிருத்த-ன்னு வருது இல்லீங்களா. அதான் அப்படி ஒரு குறிப்பு கொடுத்தேன்!
இனி முழு வார்த்தையும் கட்டத்துக்கு உள்ள வரா மாதிரி பாத்துக்கறேன்!
உங்கள் ஆர்வத்துக்கு என் வாழ்த்துக்கள்! ;-)
//பினாத்தல் சுரேஷ் said...
ReplyDeleteரவி,
மன்னிச்சுக்கங்க.. லாங் வீக்கெண்டுல நம்ம நேரம் நம்ம கையில இல்லைன்னு தெரிஞ்சும் குறுக்கெழுத்துக்கு வரேன்னு வாக்கு கொடுத்ததுக்கு :-(//
ஹிஹி
பரவாயில்லை பெனாத்தலாரே!
wifeology exam வேறு இருக்கே! எத்தனை பரீட்சை-ன்னு தான் எழுதறது ஒரு மனுசன்! :-)))
//நல்ல முயற்சி. அப்பப்ப இது மாதிரி எதாச்சும் வந்தாதான் மூளை கொஞ்சம் ரெப்ரஷ் ஆகுது. மல்டிபிள் சாய்ஸ், குறுக்கெழுத்து அப்படின்னு எந்த ஒரு பார்மட்லேயும் நிக்காம மாத்திகிட்டே இருந்தா சுவாரஸ்யம் குறையாம இருக்கும்.//
தல நீங்களே சொன்னதுக்கு அப்பறம், இனி அப்பீல் ஏது? மாத்தி மாத்தி ஆடிடலாம்! அடுத்த தபா வாங்க! :-)
Fantastic!!!
ReplyDeleteவாழ்த்துகள்,
பாராட்டுகள்.
ரொம்ப தாமதமாத்தான் பார்த்தேன்.
அதற்குள்ளே எல்லாம் முடிந்து போய்விட்டது.
என்றாலும் மீண்டும் ஒரு முறை படிக்காவிட்டால், ஒன்றும் செய்ய முடியாது என்றே நினைக்கிறேன்.
ரொம்ப சிரமம் எடுத்து செய்ததற்குப் பாராட்டுகள், KRS.