Wednesday, December 19, 2007

பொய் சொல்க! அரங்கன் அருள்வான்!!

வைகுண்ட ஏகாதசி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது எது?
திருவரங்கம். திவ்ய தேசங்களிலே முதல் திருப்பதி. "கோயில்" என்று சிலாகித்துச் சொன்னாலே, அது வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கம் தான்! நடந்தாய் வாழி காவிரி இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலையாக ஓடும் ஊர்.


ஒரே ஆறாக ஓடும் காவிரி, திருவரங்கத்துக்குச் சற்று முன்பாக, முக்கொம்பு என்ற ஊரில் இரண்டாகப் பிரிகிறாள்.
அரங்கனின் அழகிய தோள்களில் மாலையாய் விழுந்து,
அப்படியே ஆனைக்காவில் அப்பனுக்கும் அந்த மாலவன் மாலை தனையே சூட்டி மகிழ்கிறாள்.
பின்னர் கல்லணைக்குச் சற்று முன்னர் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரே ஆறாக ஓடுகிறாள்!
அதனால் கங்கையினும் புனிதமான காவிரி என்று பெரும் சிறப்பு பெறுகிறாள்!

கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,
பொங்கு நீர் பரந்துபாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்,
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே!
(- தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

அரங்கன் அரங்கத்துக்கே அரசன்! எந்த அரங்கம்?
திருவரங்கமா? இல்லை இல்லை!
உலகம் என்பதே பெரும் நாடக அரங்கம்;
அந்த அரங்கத்துக்கு அரசன்! அவன் குடிகள் நாம் எல்லோரும்!

ரங்கராஜன் என்று அவனை அழைப்பதில் தான் அரங்கவாசிகளுக்கு அப்படி ஒரு சுகம். ஏதோ தன் வீட்டுப் பிள்ளை தான், ஊருக்கே ராஜா என்று சொல்லிக் குதிக்கும் ஒரு கோலாகலம். அதுவும் மார்கழியில் பகல் பத்து, ராப்பத்து உற்சவங்களில் இதை கண்கூடாகக் காணலாம்;

அழைப்பு ஏதும் இன்றி, தன் வீட்டு விழா போல் இதைச் சிறப்பிக்கிறார்கள் ஊர் மக்கள். சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இன்றி உரே கொண்டாடி மகிழும் விழா! மாற்று மதத்து வழக்கமாகவும் சில பூசைகள் நடக்கும்!

அதுவும் தமிழுக்குச் சிறப்பு செய்யும் திருவிழா!
என்ன... இப்போதெல்லாம் கூட்டத்தைச் சமாளிக்க சரியான வழியை அரசும் தொண்டு நிறுவனங்களும் கொஞ்சம் கடைப்பிடித்தால், எல்லாரும் இந்தத் தமிழ் விழாவைப் புரிந்து கொண்டு ரசிக்க ஏதுவாகும்!


சரி, நாம் கதைக்கு வருவோம். அரங்கனின் திருக்கோவிலில்,
குட திசை முடியை வைத்துக், குண திசை பாதம் நீட்டி,
வட திசை பின்பு காட்டி, தென் திசை இலங்கை நோக்கி

பள்ளி கொண்டுள்ளான் அரங்கநாதன்.

அவனுக்கு அர்ச்சனை செய்வதையே தர்மமாகக் கொண்டுள்ளார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்பவர். ஒரு குழந்தைக்குச் செய்வது போல அவனுக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துச் செய்வார். மற்றபடி ஒரு எளிய பக்தர். அவ்வளவு தான்.

அவருக்கு மனதில் வெகு நாளாய் ஒரு ஆசை, ஆனால் பெருமாளிடம் சொல்லத் தயக்கம்.
தன் அர்ச்சனை போய், அவன் கர்ச்சனை ஆகி விடுமோ என்ற மயக்கம்.
ஆனால் அன்று மட்டும் தட்டைக் கீழே வைத்து விட்டு, எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்.

ரங்கா, எனக்கும் மோட்சம் கொடேன்!
* என்ன சுவாமி இன்று திடீர் என்று உங்களுக்கு மோட்சத்தில் ஆசை வந்தது?
எனக்கு அதில் ரொம்ப நாள் ஆசை ரங்கா! எல்லாப் பக்தர்களுக்கும் அதன் மேல் ஒரு காதல் அல்லவா? எனக்கு நீ கொடுக்க மாட்டாயா?
* சரி யோசிக்கலாம்; நீங்கள் கர்ம யோகம் ஏதாச்சும் செய்திருக்கிறீரா?
இல்லை, சுவாமி!

* சரி, ஞான யோகம்?
அதுவும் இல்லை சுவாமி, நான் சுத்த ஞான சூன்யம்!
* சரி விடுங்கள், பக்தி யோகம் பண்ணியுள்ளீரா?
அந்தப் பக்கமே அடியேன் போனதில்லையே!

* ஹூம்; சரணாகதி செய்திருக்கிறீரா?
அச்சச்சோ, எனக்குத் செய்யத் தெரியாதே சுவாமி.
* சரி போகிறது! ஒரு நாளாவது என் பக்தனுக்கு அன்னம் இட்டு உள்ளீரா?
பசித்த பலருக்குச் சாப்பாடு கொடுத்துள்ளேன், ஆனால் பக்தனா என்றெல்லாம் தெரியாது சுவாமி.

* என்ன இது இப்படிச் சொல்கிறீர்? சரி, என் கதை சொல்லப்படும் இடத்திலாவது போய்க் கேட்டதுண்டா?
இல்லை சுவாமி! நான் உண்டு என் வேலையுண்டு என்று இருந்து விடுவேன்!



வந்ததே கோபம் ரங்கநாதருக்கு! எழுந்து உட்கார்ந்தார்!
நாம் எல்லாரும் சயனத் திருக்கோலம் மட்டும் தானே சேவித்துள்ளோம்! அவனுடைய உட்கார்ந்த திருக்கோலம் கண்டவர் பிள்ளைப் பெருமாள் ஐயா மட்டுமே!
* எதற்கெடுத்தாலும் இல்லை, இல்லை என்றே பதில் சொல்கிறீர்கள்?
என்ன அக்ரமம்! மோட்சத்தை இவ்வளவு சுலபமாக விரும்புகிறீரே!
மோட்சம் என்ன கிள்ளுக் கீரை என்று நினைத்தீரா?
ஒன்றுமே செய்யாத உமக்கு எப்படி ஐயா கொடுப்பது மோட்சம்?

இதைக் கேட்டவுடன், பிள்ளைக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது!
பெருமாள் அவரிடம் சினந்து பாத்ததே இல்லையா, அதனால் மிகவும் கழிவிரக்கம் வந்து கோபமாய் மாறி விட்டது!
அடியவருக்கும் அவனுக்கும் உள்ள உறவைப் பாருங்கள்! இருவரும் என்னவெல்லாம் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள்!

பிள்ளை இடுப்புத் துண்டை இறுக்கி இழுத்துக் கட்டிக் கொண்டார்.
ரங்கா, உன்னை ஒரு குழந்தை போல் கவனிக்கும் என்னிடமா கோபப்படுகிறாய்?
உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?...
அன்று பொய் சொன்னவனுக்கு மோட்சம் கொடுத்தவன் தானே நீ!... என்று கேட்டாரே ஒரு கேள்வி!

அதைக் கேட்டுப் படுத்தவன் தான் அரங்கன்!
இன்று வரை எழுந்திருக்கவே இல்லை!
அப்படி என்ன தான் கேள்வி கேட்டார்?....சற்றுப் பொறுங்கள்! அடுத்த பதிவில்!!
வைகுந்த ஏகாதசி Dec 20 (மார்கழி 4) அன்று வருகிறது!
இந்தக் கதையை ஒட்டி அழ்வார்கள் உற்சவம், இராப்பத்து திருநாள்,
இறைவன் பல்லக்கில் இருந்து கொண்டு எல்லார்க்கும் அள்ளு தமிழில் இடும் ஆணைகள்.
இப்படித் திருவரங்கத்தில் தமிழ் கொடி கட்டிப் பறக்கும் பல சுவையான நிகழ்ச்சிகளையும் காணலாம், வாங்க!



சென்ற ஆண்டு ஏகாதசிக்கு இட்ட தொடர் பதிவின் மீள்பதிவு இது! - திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக் காட்சிகளின் படங்களும் பதிவில் உள்ளன. இதோ மற்ற தொடர்கள்.....
பொய் சொல்க! அரங்கன் அருள்வான்!! - 1
ரங்கா - அடியேன் உனக்கு அடியேன்! - 2
தமிழ் வேதம் மட்டுமே கேட்பான் அரங்கன்! - 3
2006-இல் பகல்பத்து, 2007-இல் ராப்பத்து! - 4
முனியே! நான்முகனே!! முக்கண்ணப்பா!!! - 5

18 comments:

  1. எனக்கும்தான் ஒரு தீராத(??) ஆசை இருக்கு.
    108வது திவ்யதேசம் சீக்கிரம் காணனுமுன்னு.

    இன்னிக்கு 'வாசல்கதவு' திறந்திருக்கும்.ஹூம்.....

    ReplyDelete
  2. aaaha! suspensela mudichuteenga enna matternu seekiram sollunbga.. appadi yaaruku motcham pa?

    ReplyDelete
  3. காவிரியே மாலையாக-- நல்ல கற்பனை.
    இன்று நாகை சௌந்திராஜ பெருமாள் கோவிலில் கலரில் இருந்து நாடகம் ( இன்னும் நடக்குதா?) வரை பார்க்கலாம்.இன்று தான் அந்த கோவிலில் அதிகமான மக்களை பார்க்கலாம்.

    ReplyDelete
  4. இந்த பதிவிலிருந்து எல்லா பதிவுகளுக்கும் சென்று ஒரு முறை படித்து வந்தேன். பதிவுகளோடு பின்னூட்டங்களும், அதனொட்டி பல நன்பர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களூம்...அழகு! அற்புதம்! அரிய தகவல்கள்... வாழ்க உங்கள் தொண்டு!

    எத்துனை முறை படித்தாலும் தெவிட்டாத இன்பம்.

    உங்கள் பதிவுகளை அதுனுடைய பின்னூட்டங்களோடு புத்தகமாக வெளியிட வேண்டும்.

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

    ReplyDelete
  5. கேயாரெஸ்ஸின் பதிவாகட்டும் - குமரனின் பதிவாகட்டும் - பதிவை விட மறுமொழிகளில் அதிக செய்திகள் - புதிய செய்திகள் இருக்கும். ஆன்மீக நண்பர்களின் அலசல் விவாதம் இருக்கும். உண்மை.

    பொய் சொன்னதற்கு மோட்சமில்லை. தக்க தருணத்தில் காப்பாற்றியதற்கு பரிசு- அவ்வளவுதான்.

    ReplyDelete
  6. எத்துணைதரம் படித்தாலும் சலிக்காத பதிவுத்தொடர். மீள்பதிவுக்கு நன்றி ரவியண்ணா.. ::

    ReplyDelete
  7. //எத்துணைதரம் படித்தாலும் சலிக்காத பதிவுத்தொடர். மீள்பதிவுக்கு நன்றி ரவியண்ணா.. :://
    ரிப்பீட்டுடுடு...

    ReplyDelete
  8. //துளசி கோபால் said...
    எனக்கும் தான் ஒரு தீராத(??) ஆசை இருக்கு.
    108வது திவ்யதேசம் சீக்கிரம் காணனுமுன்னு//

    டீச்சர்...என்ன பேச்சு இது? சும்மா இருங்க! உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!
    108 வது திவ்யதேசமும் இங்கிட்டே காணலாம்!
    நாச்சியார் கோவில்ல 108 எம்பெருமான்களுக்கும் சன்னிதி இருக்கு! ஒரே இடத்தில் அத்தனை பேரையும் சேவிக்க இங்கு முடியும்!

    ReplyDelete
  9. //aaaha! suspensela mudichuteenga enna matternu seekiram sollunbga.. appadi yaaruku motcham pa?//

    தல
    இது மீள்பதிவுப்பா...சஸ்பென்ஸ் சென்ற ஆண்டு வச்சது. Part 2 சுட்டி கீழே கொடுத்திருக்கேன் பாருங்க! அங்கிட்டு படிச்சிடுங்க அண்ணாச்சி! :-)

    ReplyDelete
  10. // வடுவூர் குமார் said...
    காவிரியே மாலையாக-- நல்ல கற்பனை.//

    காவிரி அணி கருந் தோள்கள்-ன்னு பாட்டு கூட வரும் குமாரண்ணா!

    //இன்று நாகை சௌந்திராஜ பெருமாள் கோவிலில் கலரில் இருந்து நாடகம் ( இன்னும் நடக்குதா?) வரை பார்க்கலாம்.//

    ஆகா, நாடகமா?
    நம்ம புலிக்குத் தெரிஞ்சிருக்குமே!
    நானும் கேட்டுப் பார்க்கிறேன்!

    ReplyDelete
  11. //Sridhar Venkat said...
    இந்த பதிவிலிருந்து எல்லா பதிவுகளுக்கும் சென்று ஒரு முறை படித்து வந்தேன். பதிவுகளோடு பின்னூட்டங்களும், அதனொட்டி பல நன்பர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களூம்...அழகு! அற்புதம்!//

    ஆமாங்க ஸ்ரீதர்
    இந்தப் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்கள் அவ்வளவும் அழகு!
    எனக்கு மிகவும் பிடித்தமான, மனநிறைவு தந்த தொடர் இது!

    //உங்கள் பதிவுகளை அதுனுடைய பின்னூட்டங்களோடு புத்தகமாக வெளியிட வேண்டும்//

    ஹே! எனக்கு ஒரு பப்ளிஷர் கிடைச்சாச்சே! :-))

    ReplyDelete
  12. //மதுரையம்பதி said...
    மீள்பதிவுக்கு நன்றி ரவியண்ணா.. :://

    என்னது ரவி - அண்ணாவா?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
    அண்ணனே, அடியேனை அடிக்கலாமா?
    மதுரையே, அடியேனை மடிக்கலாமா?

    அண்ணா காட்டிய வழியில் செல்லும் தம்பியல்லவோ நான்!

    ReplyDelete
  13. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    //எத்துணைதரம் படித்தாலும் சலிக்காத பதிவுத்தொடர். மீள்பதிவுக்கு நன்றி ரவியண்ணா.. :://
    ரிப்பீட்டுடுடு...
    //

    ஜீவா
    அண்ணா-ன்னுதுக்கு ரிப்பீட்டூ போடறாரா இல்லை சலிக்காத பதிவுத்தொடருக்கு ரிப்பீட்டு போடறாரா? :-)
    பேசாம, ஜீவாவையும் ஜீவாண்ணா-ன்னு கூப்புட்டுற வேண்டியது தான்! :-)

    ReplyDelete
  14. //cheena (சீனா) said...
    கேயாரெஸ்ஸின் பதிவாகட்டும் - குமரனின் பதிவாகட்டும் - பதிவை விட மறுமொழிகளில் அதிக செய்திகள் - புதிய செய்திகள் இருக்கும். ஆன்மீக நண்பர்களின் அலசல் விவாதம் இருக்கும். உண்மை.//

    நன்றி சீனா சார். நம்ம நண்பர்கள் அலசி விளையாடுவது ஒரு தனி கலை!

    //பொய் சொன்னதற்கு மோட்சமில்லை.
    தக்க தருணத்தில் காப்பாற்றியதற்கு பரிசு- அவ்வளவுதான்//

    பொய் சொன்ன ததிபாண்டனுக்கு மோட்சம் உண்டு...அந்த 2nd part ஐப் படிங்க! நான் முதல் பகுதி மட்டுமே மீள் பதிவு செஞ்சேன்!

    ReplyDelete
  15. அடியேன்.

    இன்னுமொரு முறை எல்லா இடுகைகளுக்கும் சென்று சேவித்து வந்தேன். பின்னூட்டங்களையும் இன்னொரு முறை படித்தேன். நம் நண்பர் ஒருவரின் உள்ளத்தை அன்றே நான் தந்த ஒரு பின்னூட்டத்தால் காயப்படுத்தியிருப்பது தெரிந்தது. முதல் இடுகையில் வந்து பின்னூட்டம் இட்டவர் பின்னர் திரும்பி வரவே இல்லை. அதற்கு நான் சொன்ன ஒரு வார்த்தை தான் காரணம் என்று தோன்றுகிறது. அப்போது அது தெரியவில்லை. இப்போது தனி மடல்களில் அவர் அதனைப் பற்றிப் பேசுவதால் இப்போது புரிந்தது. :-(

    ReplyDelete
  16. //குமரன் (Kumaran) said...
    அடியேன்.
    இன்னுமொரு முறை எல்லா இடுகைகளுக்கும் சென்று சேவித்து வந்தேன்.//

    ஆகா...இடுகையைக் கூடச் சேவிக்க முடியுமா என்ன?
    குமரன் - பெரிய ஆளு நீங்க!

    //பின்னூட்டங்களையும் இன்னொரு முறை படித்தேன். நம் நண்பர் ஒருவரின் உள்ளத்தை அன்றே நான் தந்த ஒரு பின்னூட்டத்தால் காயப்படுத்தியிருப்பது தெரிந்தது//

    இல்லை, குமரன்! நீங்கள் காயம் எல்லாம் படுத்தவில்லை! வாதங்களில் இது வழக்கமானதே! நம் நண்பரும் இதை விட சூப்பராக எல்லாம் கேட்டு இருக்கார்! அதற்காக அவர் காயப்படுத்திவிட்டார் என்று எடுத்துக் கொள்ள முடியுமா?

    // முதல் இடுகையில் வந்து பின்னூட்டம் இட்டவர் பின்னர் திரும்பி வரவே இல்லை. அதற்கு நான் சொன்ன ஒரு வார்த்தை தான் காரணம் என்று தோன்றுகிறது//

    அச்சோ...அதுக்கு அது காரணம் இல்லை! நண்பர் அதுக்கு அப்புறம் வெளிநாட்டுச் சுற்றுலா போய்விட்டார்...பத்துமலை அங்கு இங்கு என்று....அதனால் தான் வரவில்லை! இப்போ படிச்சிருப்பார்-னு நினைக்கிறேன்! :-)))

    ReplyDelete
  17. "அதுவும் இல்லை சுவாமி, நான் சுத்த ஞான சூன்யம்!
    * சரி விடுங்கள், பக்தி யோகம் பண்ணியுள்ளீரா?
    அந்தப் பக்கமே அடியேன் போனதில்லையே!"

    நான் சொல்ல வேண்டியது பிள்ளைப் பெருமாள் சொல்லிட்டார். நல்லா இருக்கு! சஸ்பென்ஸை உடைச்சுடலாமானு ஒரு ஆசை! வேணாம்னு விட்டுட்டேன்! உங்க நடையிலேயே எழுதுங்க! அப்புறம் எல்லார் கிட்டேயும் யார் அடி வாங்கறது? :))))))

    ReplyDelete
  18. //கீதா சாம்பசிவம் said...
    "அதுவும் இல்லை சுவாமி, நான் சுத்த ஞான சூன்யம்!
    * சரி விடுங்கள், பக்தி யோகம் பண்ணியுள்ளீரா?
    அந்தப் பக்கமே அடியேன் போனதில்லையே!"

    நான் சொல்ல வேண்டியது பிள்ளைப் பெருமாள் சொல்லிட்டார். நல்லா இருக்கு! சஸ்பென்ஸை உடைச்சுடலாமானு ஒரு ஆசை!//

    கீதாம்மா..சஸ்பென்சு போன வருசமே ஒடைச்சாச்சு! :-)

    //வேணாம்னு விட்டுட்டேன்! உங்க நடையிலேயே எழுதுங்க! அப்புறம் எல்லார் கிட்டேயும் யார் அடி வாங்கறது? :))))))//

    நீங்க தான் வாங்கணும் அடி! :-)
    அட...நான் திருவடியைச் சொன்னேன்! :-))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP