Sunday, October 01, 2006

காந்தியால் கிடைத்த outsourcing பணம்

வாங்க நண்பர்களே! காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
எனக்குத் தெரிந்த காந்தி ஜெயந்தி:

பள்ளிப் பருவத்தில் காந்தி ஜெயந்தி:
பள்ளியில் assembly-இல் பாட்டுப் பாடி, காந்தியின் படத்துக்கு முன்னர் உறுதி மொழி எடுப்போம். என்ன உறுதி மொழின்னு கேட்காதீங்க, ப்ளஸ் ஒன்லேயே அதெல்லாம் மறந்துட்டோம்!

கல்லூரியில் காந்தி ஜெயந்தி:
ஹாஸ்டல் நண்பர்கள் பலர் லீவு நாள் அதுவுமா அவஸ்தைப் பட்ட நாள்.
பின்ன என்னாங்க எல்லாக் கடையும் லீவு! முன்னாடியே வாங்கி வைக்காத ப்ளானிங்கே இல்லாத மக்கள் எல்லாம் - ஒண்ணு சினிமா போகணும்; இல்லை பிளாக்-ல வாங்கணும்!
இரண்டாம் சாய்ஸ் பசையுள்ள பார்ட்டிகளுக்கு மட்டும்!

வேலைக்குச் சேர்ந்த பின் காந்தி ஜெயந்தி:
ச்சே! ஒரு நாள் லீவு கிடச்சாக் கூட இந்த பிராஜக்ட் மேனேஜர் பய ரவுசு தாங்க முடியல; இன்னிக்கும் வரணுமாம் ஆபீசுக்கு!
போங்கடா! அப்பா காந்தி, சுதந்திரம் நீ நெஜமாலுமே வாங்கிக் கொடுத்தியா?

மணமான பின் காந்தி ஜெயந்தி:
அடையாறில் இருந்தா கிஷ்கிந்தா,மாயாஜால்;
அட்லாண்டாவில் இருந்தா நல்ல நண்பன் எவனா மெயில் பண்ணாத் தெரியும்! நினைவுக்கு வந்துடும். ஓ இன்னிக்கி Oct 2! ச்சே காந்தி is great-ல்ல? ஏதோ பண்ணாலும் நல்லா போல்டாவே பண்ணாருப்பா!

குழந்தைகள் வந்த பின் காந்தி ஜெயந்தி:
கண்ணா, சொல்லு "Gandhiji is the Father of Our Nation"!

காந்தி அண்ணலே!
உன் வழிமுறை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். பிற்போக்குத்தனம் என்று கூடக் கருதலாம். உன்னால் விளைந்த நன்மைகள், தீமைகளை லிஸ்ட் போடலாம்.
ஆனாலும் நீயும், உன் தலைமையில் திரண்ட பலரும் நிச்சயம் உழைத்தீர்கள். வெறும் கோஷத்தோடு நின்று விடவில்லை! இந்தியாவைப் பற்றிக் கனவு கண்டீர்கள்!

நான் தான் கொடியேற்றுவேன் என்று ஓடி வந்து நிற்கவில்லை! மரியாதை கொடுக்கவில்லை என்று கடைசி நேரத்தில் அணிகள் மாறவில்லை!உன்னைச் சுட்டதால் நீ தியாகி ஆனாய் என்றெல்லாம் பேச எனக்கு மனம் வரவில்லை. நீ நிச்சயம் வித்தியாசமான மனிதன். புரட்சித் தலைவர் என்றும் உன்னைச் சிலர் சொன்னாலும் சொல்லலாம்.

எங்கள் மீசைக் கவிஞன் சொன்னான், உன்னைப் பார்த்து,
வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!


ஆனால் நான்,
ஒன்று மட்டும், இன்று சொல்கிறேன்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! Happy Birthday to you, from your Nation!

காந்தியால் கிடைத்த outsourcing பணமா? எப்படி? (கவனிக்கவும்; 'காந்தியால் மட்டும்' என்று சொல்லவில்லை!)
இல்லாக்காட்டி துரைகளே இந்தியாவிலும், குத்தகை எடுத்து, hourly rate கொடுத்து, மிச்சத்தையெல்லாம்....என்ஜாய்!
ஆக நம் மக்கள்ஸ் உழைக்கும் நம் பணம், நம் நாட்டுக் கருவூலம் சென்று சேர்கிறதே! அதற்கு நன்றி!

10 comments:

 1. வாழ்க நீ எம்மான்....

  ReplyDelete
 2. செல்வன் பதிவுகள் நிறைய படிப்பீர்களோ? தலைப்பு அப்படி சொல்லுதே.... :-)

  ReplyDelete
 3. // குமரன் (Kumaran) said...
  செல்வன் பதிவுகள் நிறைய படிப்பீர்களோ? தலைப்பு அப்படி சொல்லுதே.... :-) //

  குமரன் என்ன கேட்கிறார் பாத்தியா?
  செல் வா,
  சொல், வா!

  ReplyDelete
 4. செல் வா,
  சொல், வா! /////

  :-))))))

  My 2 cents

  அமெரிக்காவில் சிவில் உரிமை போராட்டம் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற போராட்டமாகும்.கறுப்பரின் உரிமையை மீட்டெடுத்த அந்த போரில் மார்ட்டின் லூதர் கிங்குடன் சேர்ந்து போரிட்ட ஜான் லூயி என்ற அமெரிக்க செனெட்டர் அந்த இயக்கத்தில் காந்தியின் பங்கு பற்றி கூறுகிறார்.

  "சிவில் உரிமை போராட்டம் காந்தியின் வழிமுறையின் பாதிப்பை ஆழமாக உணர்ந்தது.நாங்கள் ஒரு தேசத்தையோ,தனிமனிதனையோ,நகரத்தையோ அழிக்க விரும்பவில்லை.காந்தியின் வழிமுறையில் சென்று நாட்டை இன வேற்றுமையிலிருந்து விடுவிக்க விரும்பினோம்.உண்மைக்கு சாட்சியாக உன் உடல் இருக்கட்டும் என காந்தி சொன்னார்.

  உரிமைக்கு போராடிய கறுப்பின மாணவர்கள் மீது கொதிக்க காய்ச்சிய சுடுதண்ணீரை ஊற்றினார்கள்.சிகரட் லைட்டரால் சுட்டார்கள்.லத்தியால் மிருகத்தை அடிப்பது போல் அடித்தார்கள்.காறி உமிழ்ந்தார்கள்.நாங்கள் அப்போது அவர்களை அடிக்கவில்லை.அடி வாங்கிக்கொண்டோம்.அந்த காட்சிகளை காணக் கான அமெரிக்கரின் மனம் மாறியது.

  காந்தியின் வழிமுறை இல்லாவிட்டால் சிவில் உரிமை இயக்கம் தோல்வி அடைந்திருக்கும்.காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய போரையும்,இந்தியாவில் நடத்திய போரையும் கண்டதும் அவர் மானுட விடுதலைக்கான மகத்தான சின்னமாக எங்களுக்கு தெரிந்தார்.ஒரே நாள் இரவில் ஆயிரக்கணக்கான கறுப்பின மாணவர்கள் மந்திரம் போல் காந்தியின் பெயரை சொன்னார்கள்.

  காந்தியின் வழிமுறையை மார்ட்டின் லூதர் கிங் பின்பற்றியிருக்காவிட்டால் லெபனானை போல்,வட அயர்லாந்தைபோல், தெனாப்பிரிகாவை போல் அமெரிக்க இன்று இருந்திருக்கும்.ஆனால் காந்தியின் வழிமுறை அமெரிக்காவை காப்பாற்றியது.

  இப்போது அமெரிக்க இளைஞர்கள் காந்தியின் பால் ஈர்க்கப்படுகின்றனர்.இன்றைய அமெரிக்க இளைஞர்கள் போராலும்,வன்முறையாலும் வெறுத்து போயுள்ளனர்.மார்ட்டின் லூதர் கிங் அன்று காந்தியின் வழிமுறையை பின்பற்றி ஒரு "அன்பான சமூகத்தை" உருவாக்க முடிந்தது குறித்து இன்று அவர்கள் பெருமிதப்படுகின்றனர்.

  வன்முறையை ஆயுதமாக கொண்டு அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை கட்டமைக்கப்பட்டுள்ளது.அது முட்டாள்தனமான கோட்பாடு.அன்றைய நிலையை விட இன்றைக்கு காந்தியின் வழி மிக பொருத்தமானது.தனிமனிதனோ,சமூகமோ அதை பின்பற்றூவதை விட தேசங்கள் அதை பின்பற்ற வேண்டும்.

  ReplyDelete
 5. //நான் தான் கொடியேற்றுவேன் என்று ஓடி வந்து நிற்கவில்லை! மரியாதை கொடுக்கவில்லை என்று கடைசி நேரத்தில் அணிகள் மாறவில்லை!//

  நல்லா இருக்கு ரவி சங்கர் !
  கலக்கல் காந்தி !
  :)

  ReplyDelete
 6. //குமரன் (Kumaran) said...
  வாழ்க நீ எம்மான்.... //

  நல்வரவு குமரன்.
  வாழ்த்துக்கு நன்றி; செல்வனாரின் 2 cents பாத்தீங்களா?

  ReplyDelete
 7. //செல்வன் said...
  உண்மைக்கு சாட்சியாக உன் உடல் இருக்கட்டும் என காந்தி சொன்னார்.//

  நச்!

  //வன்முறையை ஆயுதமாக கொண்டு அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை கட்டமைக்கப்பட்டுள்ளது.அது முட்டாள்தனமான கோட்பாடு.அன்றைய நிலையை விட இன்றைக்கு காந்தியின் வழி மிக பொருத்தமானது.தனிமனிதனோ,சமூகமோ அதை பின்பற்றூவதை விட தேசங்கள் அதை பின்பற்ற வேண்டும்//

  மிகவும் உணர வேண்டிய ஒன்று! Larry King Live-இலோ, இல்லை வேறு ஒரு டாக் ஷோவிலோ, gandhi foundation ஒரு முயற்சி செய்யலாம். பல அமெரிக்க இல்லங்களைச் சென்றடையும்!

  ReplyDelete
 8. //நல்லா இருக்கு ரவி சங்கர் !
  கலக்கல் காந்தி !//

  நன்றி GK; காந்தி அன்றும் இன்றும் கலக்கல் தான்! நாளையும் கலக்குவார் பாருங்க நம்ம இளைய தலைமுறை கிட்ட!

  ReplyDelete
 9. இன்னும் நெறைய இருக்குங்க. தவறுகள் இல்லாத மனிதன் இல்லை. ஆனால் முடிந்த வரை நல்லவைகளை எடுத்துச் சொல்லிய மனிதராக இருந்தார் என்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். அவரை எதிர்ப்பவர்கள் கூட அவரை எதிர்க்கின்ற இன்னொரு கூட்டத்தைச் சொல்ல அவரின் நல்ல பழக்கத்தைச் சொல்வதுதான் நடக்கின்றது. இது அவரை எதிர்க்கின்ற எந்தக் கூட்டத்திற்கும் பொருந்தும்.

  இன்றைக்கு காந்தீயம் என்பது ஒரு அடையாளம். அகிம்சையை போதிக்கும் ஒரு வழி. ரிஷிமூலமும் நதிமூலமும் பார்த்து ஒரு நல்ல வழியை அடைத்து விடக்கூடாது. அப்படி அடைக்க நினைப்பவர்களின் கருத்தில் கயமைத்தனம் உள்ளது என்பதே என் கருத்து.

  ReplyDelete
 10. //G.Ragavan said...
  அவரை எதிர்ப்பவர்கள் கூட அவரை எதிர்க்கின்ற இன்னொரு கூட்டத்தைச் சொல்ல அவரின் நல்ல பழக்கத்தைச் சொல்வதுதான் நடக்கின்றது. இது அவரை எதிர்க்கின்ற எந்தக் கூட்டத்திற்கும் பொருந்தும்//

  வாங்க ஜிரா. நூத்துல ஒரு வார்த்தை சொன்னீங்க! இல்லையென்றால், நாகரீக மோகத்தில் உள்ள அமெரிக்க இளைஞர்களுக்கு காந்தி வழியைக் காண்பிப்பாரா Dr. Martin Luther King?

  //ஒரு நல்ல வழியை அடைத்து விடக்கூடாது. அப்படி அடைக்க நினைப்பவர்களின் கருத்தில் கயமைத்தனம் உள்ளது என்பதே என் கருத்து//
  மிகவும் சரி!

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP