Saturday, January 03, 2009

மார்கழி-20: நீங்க குளிக்கணும்னா கண்ணாடி தேவையா?

உக்கம்-னா விசிறி, தட்டொளி-ன்னா கண்ணாடி! நீங்கள் குளிப்பதற்கு இவை இரண்டும் தேவையா? ஆம் என்றால் ஏன்? - இது தான் இன்றைய கேள்வி!

அட குளிக்கறத்துக்கு எதுக்குங்க விசிறி? கண்ணாடி? முகம் கழுவிக்கவோ, இல்லை ஷேவ் பண்ணிக்கவோ வேணும்னா கண்ணாடி தேவைப்படும்! குளிக்கும் போது கண்ணாடி தேவை இல்லையே!

கேள்வியை வேணும்னா கொஞ்சமா மாற்றி யோசிச்சுப் பாருங்க! நம்மைக் காலங்-கார்த்தால அம்மா எழுப்பி வுடறாங்க...என்ன செய்வீங்க?
அடப் போம்மா-ன்னு முரண்டு புடிச்சித் திரும்பிப் படுப்பீங்க! விடாப்பிடியா எழுப்பறாங்க!...சரி...எழுந்தாச்சு!

"டேய் சங்கரா, சந்து முனையில் போய் ஒரு குடம் தண்ணி புடிச்சிக்கிட்டு வாடா"-ன்னு சொல்லுறாங்க! இப்போ என்ன செய்வீங்க?
தண்ணி புடிக்க பெண்கள் பல பேரு வருவாய்ங்க! காலேஜ் பொண்ணுங்க! குறிப்பா அந்தக் கொய்யா மர வீட்டுல இருந்து, அமலாவும் கட்டாயம் வருவா! - இப்போ, காலங்கார்த்தால, கண்ணாடி முன்னாடி போய் நிப்பீங்களா, மாட்டீங்களா? மறைக்காம உண்மையச் சொல்லுங்க! :-)

இந்தப் பாசுரம் பற்றிய ஒரு சுவையான விவாதம் முன்னர் நடந்தது! சில பதிவர்களின் அம்மா-அப்பா கூட ஆர்வமாக் கலந்துக்கிட்டாங்க! ஒரு கோயில் பட்டர் கூட கலந்துக்கிட்டாரு! இங்கே!

பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்!
செப்பம் உடையாய், திறல் உடையாய், செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா, துயில் எழாய்!


செப்பென்ன மென் முலைச் செவ் வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை, நங்காய், திருவே, துயில் எழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து, உன் மணாளனை,
இப்போதே எம்மை நீராட்டு! ஏல்-ஓர் எம் பாவாய்!



உக்கம் = விசிறி, தட்டொளி = கண்ணாடி!
விசிறியும் கண்ணாடியும் கொடுத்து, எங்களை நீராட்ட, அவனை அனுப்பி வை, தாயே!
1. நீராடுவதற்கு எதற்கு விசிறியும் கண்ணாடியும்?
2. அப்படியே தேவை என்றாலும், யாருக்குத் தேவை?
உக்கமும் தட்டொளியும் தந்து = யாருக்கு தந்து? - அவனுக்கா? எங்களுக்கா?


எழுந்தவுடன் தருவதற்குப் பல பொருட்கள் உள்ளன! பெட் காபி, பல் குச்சி, குளிக்க எண்ணெய், முகப் பூச்சு, நெற்றித் திலகம்....இதை எல்லாம் சொல்லாமல், உக்கமும் தட்டொளியையும் மட்டும் ஏன் ஆண்டாள் சொல்ல வேண்டும்?

ஏய் கோதை! என் இனிய தோழியே! எதுக்குடீ இதையெல்லாம் நீ கேட்டே?
* உக்கம் = விசிறி = Hair Dryer/Hand fan
* தட்டொளி = கண்ணாடி = Hand Mirror
அட, சின்னப் பொண்ணு, Makeup kit போலக் கேட்டிருப்பா-ன்னு சிஸ்டர்ஸ் எல்லாம் சொல்லறாங்க! இத நான் எங்க போய் சொல்ல! நீங்களே சொல்லுங்கப்பு! :-)


முப்பத்து மூவர் அமரர்க்கு = முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு! அட, அடிக்கடி சொல்றது தான்! யார் இந்த முப்பத்து முக்கோடி?
* அஷ்ட வசுக்கள் = 8
* ஏகாதச ருத்ரர்கள் = 11
* துவாதச ஆதித்யர்கள் = 12
* அஸ்வினி தேவர்கள் = 2
-----------------------------------
* மொத்தம் = 33, இவர்களே முப்பத்து மூவர்கள்! அவங்க ஆட்கள், கோடியால் பெருக்கினால் முப்பத்து முக்கோடி!

முன் சென்று = இப்படி அவர்களுக்கும் முன்னமேயே சென்று காப்பவன் பரமாத்மா!
யாகங்களிலும், ஹோமங்களிலும் மற்ற தேவதைகள் எல்லாம் வணங்கப் பெறுகிறார்கள்! முப்பத்து முக்கோடியில் இந்திரன், அக்னி, ஈசானன், நவக்கிரகங்கள் என்று பலருக்கும் வணக்கம் செலுத்தப்படுகிறது!
இவர்கள் எல்லாரும் அரசாங்க அதிகாரிகள் போல் தத்தம் கடமைகளைச் செய்ய நியமிக்கப் பட்டுள்ளார்கள்! இவர்கட்குத் தனியான ஆயுட்காலமும் உண்டு!

இவர்கள் அருளை வேண்டியோ, இல்லை வேற எதுக்கோ, நமக்குச் சில காரியம் ஆகணும்-ன்னு இவர்களை வேதியர்கள் கும்பிடறாங்க!
அக்னையே ஸ்வாஹா, இந்திராய ஸ்வாஹா, இந்திராய நமஹ - இப்படிச் சாந்தி, ப்ரீதி-ன்னு ஹோமங்கள் செய்யறாங்க! சரி, நல்லது தான்!

ஆனால் நமக்கு-ன்னு ஏதாச்சும் ஒரு கஷ்டம் வந்தா, யார் ஓடியாருவாங்க? யாருக்கு மனசு அடிச்சிக்கும்? கூட்டத்தில் பலரும் வந்து தூக்குவாங்களா? அம்மா, அப்பா, மனைவி, உடன் பிறந்தோர், இல்லீன்னா உற்ற நண்பன் தானே வருவான்?

ஹோமங்களிலும் யாகங்களிலும் கொடுத்த ஆஹூதிகளுக்காக, இந்தத் தேவர்கள் வேண்டுமானால் சில பேரு, கூட்டத்தில் இருந்து வரலாம்!
ஆனால் அவர்கள் வர ஆயத்தமாகும் "முன்"பாகவே, ஓடியே வந்து, முதல் ஆளாய் "முன்" நிற்பான் ஒருவன்! யார்? = "கோவிந்தா! கோவிந்தா!"

* யார் யாரையோ அழைத்தும், சபையில் ஒருவரும் வராத போது, மானத்துக்குப் போராடிய பெண்ணுக்கு, "முன்" வந்தது எது? = "கோவிந்தா! கோவிந்தா!"
* எவ்வளவோ போராடியும், முதலையிடம் மீள முடியாமல், போராடிய ஆனைக்கு "முன்" வந்தது எது? = "ஆதிமூலமே! கோவிந்தா! கோவிந்தா!"

இறைவனின் திருநாமம், இறைவனைக் காட்டிலும் உசத்தி! அதனால் தான் கப்பம் தவிர்க்கும் கடவுளே-ன்னு சொல்லாது, கப்பம் தவிர்க்கும் "கலியே"-ன்னு சொல்லுறா கோதை! கலி = சத்தம், ஒலி, ஓசை!

கப்பம் தவிர்க்கும் கலியே, துயில் எழாய்! = நடுக்கம் தீர்க்கும் ஒலியே! துயில் எழாய்!
* பக்தனின் வீட்டுக்கு, முப்பத்து மூவர் அமரர்க்கும் "முன்" சென்று, முதல் ஆளாய் நிற்கும்!
* அடியார்கள் நடுக்கம் தீர்க்கும்!
* அடியார் படு துயர் ஆயின எல்லாம் நிலந்தரம் செய்யும்! மண்ணோடு மண்ணாக்கும்!
* "நாராயணா" என்னும் நாமம்!

கப்பம் தவிர்க்கும் கலியே = நாராயண நாமமே, துயில் எழாய், துயில் எழாய்!!
கப்பம் தவிர்க்கும் கலியே = கோவிந்த நாமமே, துயில் எழாய், துயில் எழாய்!!
பொதுவா இறைவனுக்குத் தான் சுப்ரபாதம் பாடுவார்கள்!
இப்படித் திருநாமத்துக்கே திருப்-பள்ளி-எழுச்சி பாடிய ஒரே உள்ளம், கோதையின் உள்ளம்!

நம்மை எழுப்பி திருமந்திர உபதேசம் சொல்லாது, திருமந்திரத்தையே எழுப்பி நம்மிடம் அனுப்புகிறாள்-ன்னா பார்த்துக்கோங்க!
* மற்ற எந்த பாட்டைக் காட்டிலும், பாவைக்கு மட்டும் ஏற்றம் இதனால் தான்!
* திருப்பாவை வேதம் அனைத்துக்கும் வித்து, இதனால் தான்!
ஹரி-ஓம்!


செப்பம் உடையாய், திறல் உடையாய் = நேர்மையும் உடையாய், திறமையும் உடையாய்!
செப்பம் = நேர்மை, செங்கோல்-ன்னு சொல்றோம்-ல? அதே போல் செப்பம்! வழுவாத நேர்மை! பல சமயங்களில், நேர்மையா இருந்தா திறமை அவ்வளவா இருக்காது! சாந்தமாப் போயிருவாங்க! திறமை இருக்குறவன் கிட்ட நேர்மை அவ்வளவா இருக்காது!
ஆனால் கண்ணன் = நேர்மை+திறமை ஒருங்கே உள்ளவன்!! (கண்ணன் போரில் செய்தது எல்லாம் நேர்மையா? என்றால் ஆம்! நேர்மையே! - அது தனிப் பதிவு :)

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா = எதிரிகளுக்கு வெப்பம் கொடுக்கும் விமலனே! துயில் எழாய்! (செறு = பகை/போர்/எதிரி)
இறைவனுக்கு எதிரி இருக்க முடியுமா? ஹிஹி! யார் அவன் எதிரே நிற்க முடியும், எதிரியாய்? அவனுக்கு எதிரி-ன்னு யாருமே அல்ல! அவன் அனைவருக்கும் சம-புத்தி உடையவன்!
* தன்னை மிகக் கேவலமாய் இகழ்ந்த போதெல்லாம், இரண்யகசிபுவை ஒன்னும் செய்யலை!
* தன் அடியாரை, அடியாள் வைத்து அடித்த போதெல்லாம், பக்தனைக் காப்பாற்றினான்! இரண்யனை ஒன்னும் செய்யலை!
* ஆனால் தூணில் நிரூபிக்கா விட்டால், அடியாள் இல்ல, தந்தை-நானே உன்னைக் கொல்வேன் என்று அலறினான். அப்போது தான், சீரிய சிங்கம் பொங்கி எழுந்தது!

அவனுக்குச் செற்றார் என்று யாரும் இல்லை! அடியவர்களுக்குச் செற்றார்கள்! அந்தச் செற்றவருக்கு வெப்பம் கொடுக்கும் விமலன்! அது என்ன வெப்பம்?
செற்றவர்கள் = இறந்தவர்கள்! அந்த இறந்த உடல்களுக்கு வெப்பம் கொடுத்து நல்-உலகுக்குக் கடைத் தேற்றுகிறான் இறைவன்!

பாகவதா-அபசாரம் செய்தவர்களுக்கும் அறவருள் செய்யாது, மறவருள் செய்து, வெப்பம் கொடுத்து அனுப்புகிறான் அந்த விமலன்!
விமலன் = குற்றம் அற்றவன் = செற்றாரைக் கொன்றாலும், அந்தக் குற்றம் குறைகள், பிரம்மஹத்தி தோஷங்கள், எதுவும் இம்மி கூட அண்டாது! அவன் ஒரு விமலன்!


உக்கமும் தட்டொளியும் தந்து = நோன்புக்கு வேண்டிய விசிறி-கண்ணாடி, இரண்டையும் கொடு!
உன் மணாளனை = அதோடு உன் மணாளனையும் கொடு!

* ஆலயங்களில் பெருமாளுக்கு விசிறி விடுவது திருவாலவட்டம் = திரு+ஆல+வட்டம்! திருக்கச்சி நம்பிகள் என்னும் (ஸோ-கால்ட்) தாழ்ந்த குலத்தவர்! அவருக்கு இந்தக் கைங்கர்யத்தில் மிகுந்த ஈடுபாடு! இவரே இராமானுசரின் முதல் குரு!
* அதே போல் பெருமாளுக்கு ஷோடச உபசாரம் முடிந்த பின்னர், கண்ணாடி காட்டுவது வழக்கம்! தட்டொளி சேவை-ன்னு பெயர்!

* அடியவர்களுக்கும் கண்ணாடி தேவை! நெற்றியில் திருமண்காப்பு என்னும் நாமம் தரித்துக் கொள்ள! அதுக்குன்னே ஒரு பேழை இருக்கும்! அதில் கண்ணாடியும் இருக்கும்!
* கூடவே விசிறியும் தேவை! வியர்வையில் நாமம் காயும் வரை, கலையாதிருக்க, விசிறிக் கொள்வார்கள்!
இப்படி, பெருமாளுக்கும் உக்கம்-தட்டொளி தேவை! அடியார்களுக்கும் உக்கம்-தட்டொளி தேவை!
அதை உன் மணாளனிடம் கொடுத்தனுப்பு தாயே! அதையும் வாங்கிக் கொள்கிறோம், மணாளனையும் வாங்கிக் கொள்கிறோம்!
அவனையும் தரணும், அவனை அடையும் வழியை-யும், நீ தானேம்மா எங்களுக்குத் தரணும்? அவனையும் தா! உக்கம்-தட்டொளியும் தா!

ஐயா கட்டிலில் இருந்து, தூக்கக் கலக்கத்தில், அப்படியே வந்துடப் போறாரு! பொண்ணுங்க எல்லாரும் வந்திருக்கோம்-ன்னு சொல்லு தாயீ! அப்போ தான் அலங்காரப் ப்ரியன் அலங்காரமா வருவான்!
* அவனுக்குக் கண்ணாடி காட்டி, முகமும் சிகையும் திருத்தி அனுப்பு!
* நாமம் கலையாது அவனுக்கு விசிறி விட்டு, அவனை நல்லபடியா குளிர்வித்து எங்ககிட்ட அனுப்பு! கூல் ஆக்கி அனுப்பு! (Our Kannan is a "Cool" Guy! :)

தமிழ்க் குலமகள், நப்பின்னைப் பிராட்டியார் திருவடிகளே சரணம்!


செப்பென்ன மென் முலை = செம்பைப் போல் மென்மையான முலைகளை உடையவளே!
செவ் வாய் = சிவந்த இதழ்,
சிறு மருங்குல் = குறுக்கு சிறுத்தவளே!

செப்பு=செம்பு! இலக்கணக் குறிப்பு சொல்லுங்க பார்ப்போம்!
செம்பைப் போல், சிறு குடத்தைப் போல் மெல்லிய முலை, செவ்விதழ், சிறுத்த குறுக்கு! ஒயில் இடையாளே! அம்மா நப்பின்னைப் பிராட்டியே! துயில் எழாய்!

நப்பின்னை, நங்காய், திருவே = நீளா, பூ, ஸ்ரீ - தேவிகளின் உருவே!
கண்ணனுக்கு முதன் முதலில் வாய்த்த நப்பின்னையை, தமிழ்க்குடி மகளை, முதலில் சொல்கிறாள் பாருங்கள் கோதை!

நான் முன்பே சொன்னது போல் பெருமாள் ஏகபத்னி விரதன் தான்! :) = "ஸ்ரீ"-மன்-நாராயணன்!
பலருக்கும் ஸ்ரீதேவி (லக்ஷ்மி-திருமகள்), பூ-தேவி (பூமிதேவி-மண்மகள்) தெரியும்! நீளா தேவியைச் சிலர் அறிந்திருப்பார்கள்!
முல்லை நிலத்தின் தமிழ்த் தலைமகள், தமிழ்க் கடவுள் மாயோனின் குடும்ப விளக்கு, ஆயர் குலத்து ஆய் மகள் = நப்பின்னையைத் தான் நீளா தேவி என்று குறித்தார்கள் என்று சொல்வாரும் உண்டு!

ஆனால் இவர்கள் எல்லாம் ஒரே உருவம், உருவகம் தான்! அதான் "ஸ்ரீ" = மகாலஷ்மி!
* அலைமகள் + மண்மகள் + ஆய்மகள் = "ஸ்ரீ"
* லக்ஷ்மி + பூமிதேவி + நீளாதேவி = "ஸ்ரீ"

* அறம் + பொருள் + இன்பம் = வீடு!
* அலைமகள் + மண்மகள் + ஆய்மகள் = "ஸ்ரீ"-மன்-நாராயணன்!


* அதான் கோதை, இந்தப் பாட்டில், அவள்-அவன் என்று இருவரையும் எழுப்பி விடுகிறாள்!
* நப்பின்னை, நங்காய், திருவே, விமலா என்று நால்வரையும் ஒரு சேர எழுப்பி விடுகிறாள்!
* இவர்கள் இத்தனை பேருக்கும் மூலமான = "ஓம் நமோ நாராயணாய" என்னும் கலியே(ஒலியே), திருநாமமே, துயில் எழாய்! துயில் எழாய்!

அந்தத் திருமந்திரப் பொருளால், நலம் தரும் சொல்-நாராயணா என்னும் நாமத்தால்...
ஒருவர் விடாது, எங்கள் எல்லாரையும் நீராட்டு!
இப்போதே எம்மை நீராட்டு! ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

34 comments:

  1. நான் குளிக்கணும்னா.. முதல்ல பெட் காஃபி தேவை :)

    ReplyDelete
  2. அருமையாக இருக்கு,விளக்கம்.

    ReplyDelete
  3. //கப்பம் தவிர்க்கும் கலியே, துயில் எழாய்! //

    நாராயணா என்று கேளா செவி என்ன செவியே!

    நாராயணா என்று சொல்லா நாவென்ன நாவே !

    ReplyDelete
  4. //திருமந்திரத்தையே எழுப்பி நம்மிடம் அனுப்புகிறாள்-ன்னா பார்த்துக்கோங்க!
    * மற்ற எந்த பாட்டைக் காட்டிலும், பாவைக்கு மட்டும் ஏற்றம் இதனால் தான்!
    * திருப்பாவை வேதம் அனைத்துக்கும் வித்து, இதனால் தான்!
    ஹரி-ஓம்!//

    இப்போ கொஞ்சம் கொஞ்சம் புரியுது.. முப்பது பாடலும் புரியும் போது தெளிவடைந்து விடுவேன்.

    ReplyDelete
  5. //Raghav said...
    நான் குளிக்கணும்னா.. முதல்ல பெட் காஃபி தேவை :)
    //

    காலை வணக்கங்கள் அரங்க நகரோனே!
    அரங்க நகரில் இருந்து நகர்ந்தாச்சா?
    குளிச்சிட்டுத் தானே நகர்ந்தீங்க? :)

    ReplyDelete
  6. //பெருமாளுக்கு விசிறி விடுவது திருவாலவட்டம் = திரு+ஆல+வட்டம்! //

    அண்ணா, திருவாலவட்டமும், கண்ணாடியும் பெருமாளுக்கு காட்டும் போது சொல்லும் பாசுரத்தையும் சொல்லுங்களேன்..

    ReplyDelete
  7. //காலை வணக்கங்கள் அரங்க நகரோனே!
    அரங்க நகரில் இருந்து நகர்ந்தாச்சா?
    குளிச்சிட்டுத் தானே நகர்ந்தீங்க? :) //

    இல்லை இல்லை.. உறையூர் நாச்சியாரையும், மதில் திருவெள்ளறை புண்டரிகாக்ஷ் பெருமாளையும் தரிசித்து விட்டு தான் பெங்களூர் கிளம்ப போகிறேன்.

    ReplyDelete
  8. அற்புதமான பதிவு. உக்கத்தை இத்தனை நாளா ஊக்கம் என்றும் என்னை போல எழுத்துபிழை விட்டுடாங்கன்னு நினைச்சி இருந்தேன்.
    //ஆலயங்களில் பெருமாளுக்கு விசிறி விடுவது திருவாலவட்டம்//
    ஆஹா
    //பெருமாள் ஏகபத்னி விரதன் தான்! :)//
    ஹாஹாஹா ம்ம்ம்ம் வாழ்க

    மண்ணையும்(அலை,மண்),விண்ணையும்(நீளா) ஓங்கி அளந்தவன் அல்லவா. அவர்கள் யாவரும் ஒன்றென்பதால் தானே அளக்க முடிந்தது, அல்லது அவை யாவும் ஒன்றென்பதை காட்டவே அளக்கப்பட்டது. பெருமாள் பேராசையற்றவன் ஆச்சே எல்லாம் அவனது ஆகட்டும். அவன் ஏகபத்தினி விரதனாகவே இருக்கட்டும்.

    வாழ்க என் ரங்கன் வாழ்க

    ReplyDelete
  9. :)

    எங்க வீட்டில் குளியல் அறை இரண்டிலுமே 3 x 4 அடிக்கு மிகப் பெரிய கண்ணாடி வாஷ்பேஷனுடன் இருக்கிறது. வசதிதான்.

    ReplyDelete
  10. // கோவி.கண்ணன் said...
    3 x 4 அடிக்கு மிகப் பெரிய கண்ணாடி இருக்கிறது. வசதிதான்//

    வசதியா?
    எதுக்கு-ண்ணே?
    நாமம் போட்டுக்கறதுக்கா? :))

    ReplyDelete
  11. //Raghav said...
    உறையூர் நாச்சியாரையும்//

    உறையூர் திருப்பாணாழ்வாரின் திருவடியில் என் சென்னியைக் கிடத்தினேன்-ன்னு சொல்லுங்க!

    //மதில் திருவெள்ளறை புண்டரிகாக்ஷ பெருமாளையும் தரிசித்து விட்டு//

    அருமை! அருமை!
    நேத்து அரங்க வீட்டக்கா கிட்ட பேசும் போது நீங்க பக்கத்தில் இல்லை! தங்களின் அரங்க நகர ப்ரவேசம் பற்றி ஒரு முன்னுரை மட்டும் கொடுத்தாய்ங்க! :)

    ReplyDelete
  12. //Raghav said...
    அண்ணா,
    திருவாலவட்டமும், கண்ணாடியும் பெருமாளுக்கு காட்டும் போது சொல்லும் பாசுரத்தையும் சொல்லுங்களேன்..//

    பாசுரமா???
    என்ன கேக்கறீங்க-ன்னு புரியலையே ராகவ்!

    திருமஞ்சனக் கட்டியம் கேக்கறீங்களா? ஆலவட்டம்/தட்டொளி காட்டும் போதும் கட்டியம் சொல்வாங்க! காட்டிய பின் திருமஞ்சனம் நடக்கும்! அதைக் கேக்குறீங்களா?

    ReplyDelete
  13. தலைப்புக்கு மட்டுமான பதில்: தேவை.

    அப்படீன்னு நினைச்சுத்தான் பாத்ரூமில் கண்ணாடி , ஃபேன் எல்லாம் வச்சுருக்கு:-))))

    ReplyDelete
  14. இன்னொன்னு சொல்லணுமுன்னு ரொம்ப நாளா நினைக்கிறேன்.

    இந்தப் பதிவுகளில் பாவை பாட்டுக்குப் போட்டுருக்கும் படங்கள் எல்லாம் அற்புதம். குடம், கட்டில், கொசுவலை, கதவு, அறை அமைப்பு, பாவாடை, தாவணி, கச்சை எல்லாம் தூள் கிளப்புது.

    பாட்டைவிடவும் தினமும் படங்களை வெகுவாக ரசிக்கிறேன்.

    ReplyDelete
  15. //துளசி கோபால் said...
    குடம், கட்டில், கொசுவலை, கதவு, அறை அமைப்பு, பாவாடை, தாவணி, கச்சை எல்லாம் தூள் கிளப்புது//

    ஹா ஹா ஹா!
    உங்க ரசனைக்கு ஒரு ஷொட்டு டீச்சர்!

    எனக்கும் இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்! கிராமத்தான் பாருங்க! அதான்! :)

    செங்கழுநீர்/அல்லிப் பூ இதெல்லாம் நம்ம மக்கள் ரொம்ப க்ளோசப்பில் பாத்து இருக்க மாட்டாங்க! நான் குதிச்சி எல்லாம் விளையாடி இருக்கேன். தாமரைத் தண்டை வச்சி எத்தனையோ மேஜிக்! :)

    அதான் எல்லாரும் ரசிக்கட்டுமே கொஞ்சம் படத்துக்கும் மெனக் கெடறேன்! இதுக்கே மூச்சு முட்டுது! :)

    பதிவைத் தினம் தினம் எழுதிச் சுடச் சுட பப்ளீஷ்! சூடா கீரை/முந்திரிப் பக்கோடா மாதிரி! :)

    பாவாடை/தாவணி பற்றி மட்டும் நோ கமென்ட்ஸ்! என் வாயைக் கிளறாதீங்க! என்னைய விட்டுருங்க டீச்சர்! விட்டுருங்க! :)))

    ReplyDelete
  16. //துளசி கோபால் said...
    அப்படீன்னு நினைச்சுத்தான் பாத்ரூமில் கண்ணாடி , ஃபேன் எல்லாம் வச்சுருக்கு:-))))//

    ஓ...ஆமாம்-ல! சில பேரு பாத்ரூம்-ல ஃபேன் கூட வைப்பாங்க! பாத்திருக்கேன்! சிறுசா இருக்கும்! (Not Fresh Air Fan, but Real Fan)

    சங்கிலி தொங்கும்! பிடிச்சி இழுத்தா சுத்தும்! :)

    உக்கமும் தட்டொளியும் ஃபாலோ பண்ற டீச்சர் வாழ்க! வாழ்க! :)

    ReplyDelete
  17. //இப்போ என்ன செய்வீங்க?
    தண்ணி புடிக்க பெண்கள் பல பேரு வருவாய்ங்க! காலேஜ் பொண்ணுங்க! குறிப்பா அந்தக் கொய்யா மர வீட்டுல இருந்து, அமலாவும் கட்டாயம் வருவா! - இப்போ, காலங்கார்த்தால, கண்ணாடி முன்னாடி போய் நிப்பீங்களா, மாட்டீங்களா? மறைக்காம உண்மையச் சொல்லுங்க! :-).//

    ஆமா அண்ணா,உண்மையைச் சொல்லுங்க எனக்கு அந்த உண்மை தெரிஞ்சு ஆகனும் :D


    //(Our Kannan is a "Cool" Guy! :)//

    our KRS anna is a hot guy :))


    //பாவாடை/தாவணி பற்றி மட்டும் நோ கமென்ட்ஸ்! என் வாயைக் கிளறாதீங்க! என்னைய விட்டுருங்க டீச்சர்! விட்டுருங்க! :)))//

    டீச்சர் விட்டாலும் நான் விட மாட்டேன் :D
    தனியா பேசிக்கலாம் அண்ணா ;)

    ReplyDelete
  18. பாடலின் ஒலிச்சுட்டிகள் இன்னும் 'குத்துவிளக்கெரிய'ன்னு பாடிகிட்டு இருக்கு. கொஞ்சம் பாருங்க.

    முப்பத்து முக்கோடின்னு நிஜமாவே ஒவ்வொரு கோடி பேர்கள் இந்த முப்பத்து மூவருக்கும் இருக்கிறார்களா? எனக்கென்னவோ கோடி என்பது மங்கலச் சொல் போலவே தோன்றுகிறது. அதனால் தான் வழக்கத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றாலும் இந்தப் பாசுரத்தில் கோடி என்பது மங்கலச் சொல் என்று அறிந்த கோதை நாச்சியார் முப்பத்து மூவர் என்று சொல்லி அதோடு நிறுத்திக் கொள்கிறார் (என்று தோன்றுகிறது).

    ReplyDelete
  19. பிராட்டியாரைத் தூக்கிச் சென்று பாகவதாபசாரம் புரிந்தவனுக்கு வெப்பம் கொடுத்த பின்னர் பிரம்மஹத்தி தோசம் நீங்க மணலால் இலிங்கம் செய்து வழிபட்டதாய் ஒரு உலக வழக்கு இருக்கிறதே. ஆண்டாள் அப்படிப்பட்டவனையா விமலன் என்கிறாள்?

    ReplyDelete
  20. ரொம்ப வலிச்சா விகாரமா தான் இருக்கும் முகபாவம். அதனைத் தானே செம்பு செப்பு ஆன போது வலித்தல் விகாரம்ன்னு சொன்னாங்க. :-) மெல்லினமான ம் இங்கே வல்லினமான ப் - ஆக திரிந்ததால் இது வலித்தல் விகாரம்ன்னு சொல்லிக்குவாங்க.

    ReplyDelete
  21. //முல்லை நிலத்தின் தமிழ்த் தலைமகள், தமிழ்க் கடவுள் மாயோனின் குடும்ப விளக்கு, ஆயர் குலத்து ஆய் மகள் = நப்பின்னையைத் தான் நீளா தேவி என்று குறித்தார்கள் என்று சொல்வாரும் உண்டு!//

    என்ன 'சிலர்' சொல்வார்கள்ன்னு சொல்லிட்டீங்க. வைணவ குலமுதல்வன் நம்மாழ்வார் சொல்வது இது தான். அவரே சொல்வதால் இது வைணவர்கள் எல்லோருடைய கருத்தும் என்று தான் கொள்ள வேண்டும்.

    என் திருமகள் சேர் மார்வனே என்னும்
    என்னுடை ஆவியே என்னும்
    நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
    நிலமகள் கேள்வனே என்னும்
    அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
    ஆய்மகள் அன்பனே என்னும்
    தென் திருவரங்கம் கோவில் கொண்டானே
    தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே

    பாருங்கள் மிகத் தெளிவாக நாராயணின் மனைவியர் திருமகள், நிலமகள், ஆய்மகள் (நப்பின்னை) என்று சொல்லியிருக்கிறார். நீளா என்றால் ஆய்மகள் தான்.

    இன்னொரு பாசுரமும் பார்ப்போம்.

    அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
    எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி
    அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்
    சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே

    இங்கே அவனே பரம்பொருள் என்று தேவரும் அசுரரும் அவனது சங்கு சக்கரக் கைகளையும் அவன் மனைவியரையும் கொண்டே அறிகிறார்கள் என்று சொல்லும் போது திருமகளைப் பூமகள் என்று சொல்லிவிட்டு மண்மகள் (பூமி), ஆய்மகள் (நப்பின்னை, நீளை) என்று சொல்கிறார் ஆழ்வார்.

    ReplyDelete
  22. நல்ல விளக்கங்கள் இரவிசங்கர்.

    ReplyDelete
  23. //குமரன் (Kumaran) said...
    பாடலின் ஒலிச்சுட்டிகள் இன்னும் 'குத்துவிளக்கெரிய'ன்னு பாடிகிட்டு இருக்கு. கொஞ்சம் பாருங்க//

    Oops, Thanks for bringing to it to attention. Now fixed Kumaran!

    ReplyDelete
  24. குமரன் (Kumaran) said...
    //முல்லை நிலத்தின் தமிழ்த் தலைமகள், தமிழ்க் கடவுள் மாயோனின் குடும்ப விளக்கு, ஆயர் குலத்து ஆய் மகள் = நப்பின்னையைத் தான் நீளா தேவி என்று குறித்தார்கள் என்று சொல்வாரும் உண்டு!//

    என்ன 'சிலர்' சொல்வார்கள்ன்னு சொல்லிட்டீங்க//

    "சிலர்"-ன்னு சொல்லலையே!
    சொல்வாரும் உண்டு-ன்னு தானே சொல்லியிருக்கேன்! "பலர்" சொல்வாரும் உண்டு! :))

    //வைணவ குலமுதல்வன் நம்மாழ்வார் சொல்வது இது தான். அவரே சொல்வதால் இது வைணவர்கள் எல்லோருடைய கருத்தும் என்று தான் கொள்ள வேண்டும்//

    ஆம்! நப்பின்னையை ஆழ்வார்கள் பலப்பலர் போற்றிப் பரவியுள்ளனர்!
    இதை முன்பே இன்னொரு பதிவிலும் சொன்னேன்! ஆழ்வார்கள் அதுவும் கோதையின் ஈர உள்ளம் எப்படியெல்லாம் நப்பின்னையைக் குறித்துப் பாடுகின்றது-ன்னு!

    பெரியாழ்வாரின் நப்பின்னைப் பாசுரங்கள்ய்ம் கொடுங்க குமரன்! :)
    பெரியாழ்வார் சொன்னா பெருமாளே சொன்னா மாதிரி! :)

    ReplyDelete
  25. //நீளா என்றால் ஆய்மகள் தான்//

    தமிழில் நப்பின்னைக்கு மிகவும் ஏற்றம் உண்டு குமரன்!
    ஆனால் வடமொழியில் நப்பின்னையைப் போற்றுகிறார்களா?

    போற்றுகிறார்கள் என்றே தோன்றுகிறது! நீளா சூக்தம் என்ற ஸ்லோகத் தொகுப்பைப் கேள்விப்பட்டேன்!

    புருஷ சூக்தம் என்ற பெருமாளைப் பர்றிய வேத கோஷம் முடிந்தவுடன், வரிசையாக
    * ஸ்ரீ சூக்தம்
    * பூ சூக்தம்
    * நீளா சூக்தம்
    என்று நீளா சூக்தம் ஓதுகிறார்கள்.

    This is there in the TTD cassettes too, along with Suprabhatam & Morning Rituals.

    இது பற்றிய மேலதிக தகவல்களைக் கொஞ்சம் பேசுங்களேன்! நீளா சூக்தம் சுட்டியை நானும் வாசித்துக் கொண்டு இருக்கேன்!

    ReplyDelete
  26. //நீளா என்றால் ஆய்மகள் தான்//

    நீளை ஆலயங்களில் அதிகம் காணப்படுகிறாளா? இல்லை ஸ்ரீ-பூ தேவிகள் மட்டும் தானா?

    எனக்குத் தெரிந்து, திருச்சேறை தலத்தில் நீளா தேவி உண்டு! அடியேன் வணங்கி மகிழ்ந்துள்ளேன்! படமும் திருச்சேறை படம் தான்!
    குடந்தை-நாகை வழியில் உள்ள திவ்யதேசம்!

    வேறு ஆலயங்கள் உள்ளனவா நீளைக்கு?

    ReplyDelete
  27. //முப்பத்து முக்கோடின்னு நிஜமாவே ஒவ்வொரு கோடி பேர்கள் இந்த முப்பத்து மூவருக்கும் இருக்கிறார்களா? எனக்கென்னவோ கோடி என்பது மங்கலச் சொல் போலவே தோன்றுகிறது//

    Rudra
    by Dr. K. Parvathi Kumar
    The World Teacher Trust – Global, Einsiedeln, Switzerland: dhanishta@wtt-global.org
    ISBN-10: 3-9523145-1-X
    ISBN-13: 978-3-9523145-1-7
    http://www.worldteachertrust.org/books_kpk_rudra_e.htm

    Rudra is the foremost of the Devas that are tangible entities emerging out of the intangible and the absolute God. He is the Lord that sprouts as the cosmic fire, as the first spur and leads the Devas for their manifestation. He permeates the three ethers beyond the five elements and brings forth the whole universe from the seeming nothingness. It is again He who withdraws the whole creation into naught. He is the passage between the negative zero to positive zero and again from positive zero to negative zero.

    He emerges like a roar and is therefore called Rudra in the Veda. The Vedas chiefly classify the Devas into three categories.

    a. The Adityas – these are the twelve qualities of the twelve sun signs. These are Lords of Radiation. They are expressed through the rays of the sun globe during the twelve months of the year. The cause for their expression is Rudra.

    b. The Rudras – these are the Devas of Vibration that transmit force through the ethers. The transmission is through sound and light.

    c. The Vasus – these are the Devas of Materialization.

    The Adityas are 12 in number. The Rudras are 11 in number and the Vasus are 8 in number. Thus they are 31 in all. With the left and right principles, they are 33. Thus 33 are the Devas that function in all the seven planes and hence the number is 330,000,000. The Vedas call them 33 crores of Devas.

    11 is the number of Rudras. It is the number of the Master, and thrice 11 are 33 that bring forth the creation causing triangles with the Devas of Radiation and Materialisation.

    ReplyDelete
  28. புட்டபர்த்தி சத்ய சாயி பாபாவும், முப்பத்து முக்கோடி பற்றிப் பேசுகிறார்
    http://www.saibaba.ws/teachings/sarvadeviswarupini/ssvg.htm#CHAPTER%20V

    //கோடி என்பது மங்கலச் சொல் போலவே தோன்றுகிறது//

    வடமொழியில்
    கோடி = வகை/பிரிவு/Category என்று இன்னொரு பொருளும் இருப்பதாய் அறிகிறேன்!

    ReplyDelete
  29. //குமரன் (Kumaran) said...
    பிராட்டியாரைத் தூக்கிச் சென்று பாகவதாபசாரம் புரிந்தவனுக்கு வெப்பம் கொடுத்த பின்னர் பிரம்மஹத்தி தோசம் நீங்க மணலால் இலிங்கம் செய்து வழிபட்டதாய் ஒரு உலக வழக்கு இருக்கிறதே. ஆண்டாள் அப்படிப்பட்டவனையா விமலன் என்கிறாள்?//

    இராமன் செய்த பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் = சிவ பூஜை!

    இராவணன் = பிராமணன்! (பகுத்தறிவாளர்களுக்கும் தெரியும் :)
    அவனைக் கொன்றதில் அதிக நியாயங்கள் இருப்பினும், கொல்லப்பட்டவர் மனக்கேதம் தீர வேண்டும் அல்லவா? அதான் இராமேஸ்வரத்தில் சிவ பூஜை!

    மனிதனாய் வாழ்ந்து காட்டியதால், மனித சட்டங்களுக்கு எல்லாம் தன்னை ஆட்படுத்திக் கொண்டான்!

    மனிதனாய் வாழ்ந்து காட்டும் போது, நல்லது மட்டுமே செய்து காட்ட முடியுமா? தப்பும் செஞ்சி, தப்பு-ன்னு தெரிஞ்சவுடன் மனிதன் ரியாக்ஷன் என்னவா இருக்கணும்-ன்னும் காட்ட வேண்டாமா?

    வாலி வதம்-ன்னு தப்பு செஞ்சா அதைத் தப்பு-ன்னு ஒத்துக்கிட்டு, அதுக்குக் கழுவாய் தேடணும்-ன்னும் காட்டிக் கொடுத்தான்!
    அந்த வினையை அடுத்த அவதாரத்தில் தானே வலிய ஏற்றுக் கொண்டான்! வினைச் சுழற்சிக்கு அப்பாற்பட்டவர் கிடையாது என்று அப்பாற்பட்டவனே நடந்து காட்டினான்!

    இராமனாய் முதலில் நடந்து காட்டி விட்டு, பின் கண்ணனாய் ஊருக்கு உபதேசம் செய்தான்!

    அதனால் தான் இராமனை மனத்துக்கு இனியான் என்றாள் கோதை!
    எப்பமே ஒத்துக்கற ஆண்களைப் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்! :))

    இராமன் விமலன் தான்!
    கோதை லேசுப்பட்ட பொண்ணு அல்ல! அம்புட்டு சீக்கிரம் யாரையும் மனத்துக்கு இனியான்-ன்னு சொல்லீற மாட்டா :))


    ராகவன் இதுக்கு என்ன சொல்லுறாரு-ன்னு பார்ப்போம்! :))

    ReplyDelete
  30. புதுமையான விளக்கங்கள் நன்றி கண்ணன்

    Mani Pandi

    ReplyDelete
  31. //கோபிநாத் said...
    அருமை..;)//

    எது மாப்பி?
    மார்கழி மாசம் குளிரா? இல்லை பதிவில் விசிறிப் படத்தில் ஒரு சைனீஸ் பொண்ணு இருக்கே! அதுவா? :)

    ReplyDelete
  32. //
    மணி said...
    புதுமையான விளக்கங்கள் நன்றி கண்ணன்//

    வாங்க மணியண்ணே!
    விளக்கம் புதுமை-ன்னாலும், சாராம்சம் ஆச்சார்ய மரபுப் படி தான்!

    ReplyDelete
  33. //மின்னல் said...
    அற்புதமான பதிவு. உக்கத்தை இத்தனை நாளா ஊக்கம் என்றும்//

    ஹா ஹா ஹா!
    ஊக்கமும் தட்டொளியும் = ஊக்கம் கொடுத்து, ரெண்டு தட்டு தட்டி....
    இது சூப்பர் விளக்கமா இருக்கே மின்னல்? :)

    //மண்ணையும்(அலை,மண்),விண்ணையும்(நீளா) ஓங்கி அளந்தவன் அல்லவா. அவர்கள் யாவரும் ஒன்றென்பதால் தானே அளக்க முடிந்தது//

    நல்ல வித்தியாசமான பார்வை!
    ஒரே அளவைகளைத் தான் ஒரே கருவியால் அளக்க முடியும் அல்லவா?

    //அவன் ஏகபத்தினி விரதனாகவே இருக்கட்டும்.
    வாழ்க என் ரங்கன் வாழ்க//

    ஹிஹி!
    பெண்களுக்கு ஏகபத்தினி விரதத்தில் எம்புட்டு சென்ட்டி! :))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP