Monday, December 19, 2011

கோதைத்தமிழ்04: கரடி விடாதே @rsGiri

மக்கா, இன்னிக்கி ஒரு பிரபல பாடகர் பாடப் போறாரு, பேசப் போறாரு!
யாரு? = நம்ம கிரி ராமசுப்பிரமணியன் என்னும் @rsGiri யே தான்!:)

ஐந்து மாசம் முன்பு, நான் ட்விட்டருக்கு வந்த புதுசில், கிரி-யின் புகைப்படம் கண்டு, அவர் கூடப் பேசவே பயந்தேன்! நம்மைப் பாத்து மொறைக்குறாப் போலவே போஸ் இருக்கும்:)
அப்பறம் அவர் குரலைக் கேட்ட பின்னாடித் தான்...இந்த மனுசன் மென்மையானவரு-ன்னு புரிஞ்சுது:))

கிரியின் இன்-குரலில், மென்-குரலில், நன்-குரலில் கேளுங்க:



நன்றி கிரி! ஒங்களுக்குத் தெரியாததா? 6 அடிகளில், 3 அடிகள் அவனைப் பத்தியே பேசுறது...சில லூசுங்க வழக்கம்!:)
எதைப் பேசினாலும், அவன் வந்து உக்காந்துருவான்! முருகா!


இந்தப் பாசுரம்...தமிழ்க் கடவுளான திருமாலுக்கு, தமிழாய் நிற்கும் பாட்டு!
மொத்தம் 11 இடத்தில், தமிழுக்கே உரிய "ழ" வரும் பாட்டு! நீங்களே எண்ணிப் பாருங்க:)

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்!
ஆழி உள் புக்கு, முகந்து கொடு, ஆர்த்து ஏறி,
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்துப்,
பாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில்


ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சாரங்கம் உதைத்த சர மழை போல்,
வாழ உலகினில் பெய்திடாய்! நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: டேய் கண்ணா, எங்க கிட்ட நைசா எதையும் மறைக்காதே!
* கடலில் புகு!
* அள்ளி எடு!
* மேல் ஏறு!
* அவன் உடம்பு போல், கருமேகம் ஆகு!
* அவன் சக்கரம் போல் மின்னு!
* அவன் சங்கு போல் இடி இடி!
* அவன் வில்லில் புறப்பட்ட அம்பு போல், சரம் சரமாய் மழை பொழி!

எதுக்கு-ன்னு கேக்குறியா? = உலகத்தில் எல்லாரும் வாழணும்-டா!
மார்கழி நீராடும் உன் காதலி, உனக்கு ஆணை இடுகிறேன்! பெய் எனப் பெய்யும் மழை!



இன்றைய எழிலான சொல் = "கை கரவேல்"!

அது என்ன கர-வேல்? முருகன் கரத்தில் வேல்! அப்படித் தானே?:))
எனக்கும் அப்படிச் சொல்ல ஆசை தான்! ஆனா இவ முன்னாடி ஒரு "கை" போட்டு, கை-கரவேல்-ன்னு எழுதிட்டா:)
போடீ, உன் ஆளை நீ பாடினா, என் ஆளை நான் பாடிக்கிறேன்...இல்ல முருகா?:)

கரத்தல் = ஒளித்தல், மறைத்தல்
காக்கை கரவா கரைந்து உண்ணும் = ஒரே வடை-ன்னாலும் காக்கை ஒளிக்காது! எல்லாக் காக்கையும் சத்தம் போட்டுக் கூப்பிட்டு உண்ணும்!

"கரடி விடாதே"-ன்னு சொல்லுறோம்-ல்ல?
அது என்ன கரடி?
கரடி என்ற விலங்குக்கும் இதுக்கும் என்னாய்யா தொடர்பு?

ஒரு தொடர்பும் இல்ல!:))
* கரடி = கர + டி
உண்மையை ஒளித்து (கர) + திரித்துக் கூறுவதால் = கர+டி = கரடி!
களவறிந்தார் நெஞ்சிற் கர-வு என்பது குறள் அல்லவா?

"பூசை வேளையில் கரடி நுழைஞ்சாப் போல்" - இந்தப் பழமொழியும் இதே கதி தான்!:)
ஏன்...சிங்கம், நரி புகுந்தா மட்டும் பூசை நல்லாவா இருக்கும்?
பூசை வேளையில் புலி புகுந்தாப் போல்-ன்னு சொன்னா, பு-பூ-ன்னு எகனை மொகனையா இன்னும் நல்லா இருக்குமே!
எதுக்குப் போயும் போயும் கரடியை இழுக்கணும்?:))

இறைவனை வணங்கும் வேளையிலாவது, உண்மையை மறைக்காது, தன் தவறுகளை ஒப்புக் கொண்டு, உள்ளொன்றி வழிபட வேணும்!
பூசை வேளையில், கர-டி கூடாது! ஒளிப்பும் திரிப்பும் கூடாது! 

மத்தபடி, பாவம்...விலங்கு கரடிக்கும், பூசைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லா!:))
இனி யாரும், கரடி-ன்னு கரடி விடாதீங்க!:))

நாளை Podcast-க்கு, மதுரை மீனாட்சிக்குச் சொந்தக்கார ட்வீட்டர் ஒருவங்க பேசப் போறாங்க! வர்ட்டா?:)

7 comments:

  1. நப்பின்னையின் குணமே திருமாலை எங்கெங்கும் காண்பதே தான். பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா! கிரி சுப்ரமண்யம் அவர்களே நாராயணன் மேல் இருக்கும் ஆண்டாளின் காதலை மிகவும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். KRS உங்கள் புண்ணியத்தில் தினம் ஒரு திருப்பாவை சுவைக்கிறோம்.
    amas32

    ReplyDelete
  2. // பாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில்//

    இன்று காலை அண்ணன் சாம்ராஜ் பேசினார்.(காட்சி வலைப்பூவில் தன் எழுட்த்ஹ்

    பத்மம் என்றால் தாமரை என்று பொருள்.. பத்மநாபன் என்றால் நாபியில் தாமரை மலரைக் கொண்டவன் என்று பொருள்...

    ஏன் வள்ளுவர் பத்மநாபனை "மலர்மிசை ஏகினான்" என்று குறிப்பிட்டிருக்கக் கூடாது...

    ReplyDelete
  3. //சாரங்கம் உதைத்த சர மழை போல்//

    பஞ்சாய்த ஸ்தோத்திரம் சாரங்கத்தை ’பாண வர்ஷி’ என்று கூறும், நாச்சியாரோ அதை மாற்றி சாரங்கத்திலிருந்து வந்த மழைப் போல என்று திருப்பி உவமை படுத்தியதும் நன்றாகத்தான் இருக்க்கிறது.

    ReplyDelete
  4. கேயாரெஸ் என்னவோ சொல்லப் போறார்னு சொன்னாரே... அதுக்காக வெயிட் பண்ணினா, ஒண்ணையும் காணுமே :)

    (சரி சரி புரியுது :)

    நல்ல விளக்கம்(ங்கள்).

    ReplyDelete
  5. நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்
    www.rishvan.com

    ReplyDelete
  6. இந்த பாசுரத்தில் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன் KRS

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP