Sunday, January 08, 2012

கோதைத்தமிழ்24: தமிழ் அர்ச்சனை தேவையா? @kryes

மக்கா, வணக்கம்! இன்னிக்கிப் பேசப் போவது நானு! நானே நானு:) @kryes
So, No Intro! Just listen & Have Fun:)
கோதை 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே செய்யும் தமிழ் அர்ச்சனை - நாம எல்லாரும் தெரிஞ்சிக்கலாமா?



நன்றிடா @kryes :))
நன்றியை @dagalti க்கு தான் சொல்லணும்! "எல்லாரையும் பேச வைக்கறீக, நீங்களும் பேசுங்களேன்"-ன்னு சொன்னது அவரு தான்:)


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கன்று-குணில்-ஆ எறிந்தாய் கழல் போற்றி!


குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்!
இன்று யாம் வந்தோம் இரங்கு! ஏல்-ஓர் எம் பாவாய்!


எனக்கு மிகவும் பிடித்த பாசுரம் இதுவே!
நின் கையில் "வேல் போற்றி"-ன்னு சொல்லுறாளே! பெருமாள் கையில் வேலா? என்னவன் முருகவன் கையில் வேலா? :)))
- கோதை எனக்குன்னு எழுதி இருப்பதாகவே நினைச்சிக்குவேன்!:)




நன்றாக நினைவில் இருத்துங்கள்: சங்கல்பம் + அர்ச்சனை = இறைவனுக்கு அல்ல! நமக்குத் தான்!
யார் பேருக்குச் சங்கல்பம் பண்ணிக்குறாங்களோ, அவங்களுக்குப் புரியணும்-ல? வீர்ய, வீஜய, ஆயுர், ஆரோக்ய, அபிவிருத்தயர்த்தம்-ன்னு, என்ன வேண்டிக்கறோம்-ன்னு நமக்கே தெரியணும்-ல?

இந்த அர்ச்சனைப் பாட்டை, வெண்பாவில்-செப்பல் ஓசையில் அமைக்காமல், கலிப்பாவில்-துள்ளல் ஓசையில் அமைச்சி இருக்கா இந்தப் பொண்ணு! மந்திரமா ஓதுவதற்கு என்றே இப்படி!
* முந்தைய பாட்டு - யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்-ன்னு சங்கல்பம்
* இந்த பாட்டு - தமிழ் அர்ச்சனை!

அரசு சட்ட திட்டங்கள் போட்டு விட்டது! = இங்கு தமிழி"லும்" அர்ச்சனை செய்யப்படும்! :)
ஆனால் கருவறையில் தமிழ் அர்ச்சனை மெய்யாலுமே முழு மூச்சாக நடக்கிறதா?

சரி, இவ்வளவு  பதிவில் எழுதி விளாசுகிறோமே!  ஆலயத்துக்குச் செல்லும் போது, எத்தனை பேர், தமிழில் அர்ச்சனை செய்யுமாறு நாமளே கேட்டுக் கொள்கிறோம்? கையைத் தூக்குங்க பார்ப்போம்:)

வெறுமனே அரசு சட்ட திட்டங்களால், இது போன்ற மன-மலர்ச்சிகள் உருவாவதில்லை!
* மக்களை உணர வைக்கணும்!
** கொஞ்சம் கொஞ்சமா உணர வைக்கணும்!
*** நாம தான், எடுத்துச் சொல்லி, கொஞ்சம் கொஞ்சமா உணர வைக்க வேணும்!

அப்படி உணரச் செய்தவர் = இராமானுசர்!
அதனால் தான் இன்றும், திருமால் ஆலயக் கருவறைகளில் தமிழ்ப் பாசுரம்-சாற்றுமறை முழங்குகிறது!
* புறப்பாடுகளில், இறைவனுக்கும் முன்னே, தமிழ் ஓதிச் செல்கிறார்கள்!
* இறைவன் தமிழுக்குப் பின்னால் தான் வருவான்!
* அவனுக்கும் பின்னால் தான், வடமொழி வேதங்கள் ஓதி வருவார்கள்!

மக்களே,
அடுத்த முறை ஆலயம் செல்லும் போது, சும்மாவாச்சும்.....தமிழ் அர்ச்சனை செய்யச் சொல்லி, ஒரு முறை கேட்டுத் தான் பாருங்களேன்!
அப்புறம் நீங்களே விட மாட்டீங்க! ஆ+லயம் = லயம், லயம்-ன்னு லயித்துப் போவீர்கள்! கோதைத் தமிழ் போலவே! :)




இன்றைய எழிலான சொல் = குணில்!

Angry Birds Game-இல் பார்த்து இருப்பீங்களே?:))
உண்டிகோல்-ன்னு சொல்றோம்-ல்ல? மரத்தில் இருந்து கனியை வீழ்த்த, கல்லெறியும் கருவி! அதன் அழகிய தமிழ்ப் பெயர் = குணில்!

கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்-ன்னு புறநானூறு!
குணித்தல் = அளவிடுதல்! அளவிட்டு எறிந்து கொய்வதால் = குணில்!

நாளைக்குப் பேசப் போவது, கப்பற் படைத் தளபதி! வர்ட்டா?:)
தமிழ் அர்ச்சனையை நினைவில் நிறுத்துங்கள்!!

23 comments:

  1. பட்டையக்கிளப்பிட்டீங்க மக்கா! :) தமிழின்பம்.

    ReplyDelete
  2. அருமையான கருத்தாழமிக்க விரிவுரையை அனுபவித்து ரசித்தேன்! அதனூடே சிரித்தேன், சிரித்தேன், சிரித்துக்கொண்டே இருந்தேன், தங்களின் நகைச்சுவை உணர்வு மிகுந்த தமிழ்த் தேனை சுவைத்தேன்.

    செந்தில் கூறியது போல (நானும் அவரும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் தமிழின்பம் podcast வழியாக நுகர்ந்தோம்) பட்டையக்கிளப்பிட்டீங்க மக்கா! :)

    You are an amazing talent, KRS. God bless you!

    ReplyDelete
  3. நல்ல பாடம் எடுத்துள்ளீர்கள்! இராமானுசர் இப்பூவலகுக்கு அனுப்பியுள்ள ஷ்ரவனே போற்றி!
    தெலுங்கு கீர்த்தனைகளும், ஹிந்தி பஜன்களும் எனக்குப் புரியாது. சங்கீத ஞானம் இருந்தால் ராகம் தாளம் என்று ரசிக்கலாம். ஆனால் அதுவே தமிழில் வரும் கர்நாடக இசை என் மனதை உருக்கும். இதை உணர்ந்தும் நான் கோவிலில் தமிழில் அர்ச்சனை பண்ணுங்கள் என்று கேட்டதில்லை.
    என்ன அருமையா வித்தியாசத்தை காட்டியிருக்கிறீர்கள்! நாம மனசுல வேண்டிக் கொள்வது தாய் மொழியில தானே, வட மொழியில் இல்லையே.
    நன்றி KRS.
    இந்தப் பாசுரம் எனக்கும் ரொம்பப் பிடித்தப் பாசுரம், நீங்க சொன்ன அதே காரணத்துக்காகத் தான் :-)
    ஆனா இந்த போற்றி விளக்கத்துக்குப் பிறகு இன்னும் அனுபவித்து இந்தப் பாசுரத்தை சொல்வேன், நன்றி.
    amas32

    ReplyDelete
  4. அருமையான விளக்கம் ரவி.

    நன்றிகள்.

    ReplyDelete
  5. ஆபீசில் கேட்க முடியவில்லை. வீட்டில் போய்க் கேட்கிறேன்..
    நன்றி கே.ஆர்.எஸ்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. //சங்கல்பம் + அர்ச்சனை = இறைவனுக்கு அல்ல! நமக்குத் தான்!
    யார் பேருக்குச் சங்கல்பம் பண்ணிக்குறாங்களோ, அவங்களுக்குப் புரியணும்-ல? வீர்ய, வீஜய, ஆயுர், ஆரோக்ய, அபிவிருத்தயர்த்தம்-ன்னு, என்ன வேண்டிக்கறோம்-ன்னு நமக்கே தெரியணும்-ல?//

    அது நல்ல புரியது. ஆனா வயசானப்புறம் இன்னொரு சந்தேகமும் வந்துடுத்து.

    சங்க்ருதி கோத்ரம், மேஷ ராசி, அஸ்வினி நக்ஷத்ரம், சுப்ப ரத்ன சர்மா என்னு சொல்லும்பொழுது
    அடடா ! இதே கோத்ரத்திலே, இதே ராசிலே இதே நக்ஷத்ரத்திலே, இன்னொரு சுப்பரத்ன சர்மா
    இருந்துவிட்டா, பகவானுக்கு கன்ஃப்யூஸ் ஆயிடுமே,

    அப்படின்னு, இந்தக் கிழவன் இப்ப எல்லாம், அர்ச்சகர் சங்கல்பம் செய்யும்பொழுதெல்லாம்,

    73, மூன்றாம் குறுக்கு வீதி, திருபுரசுந்தரி நகர், தஞ்சாவூர் 613007 ல் இருக்கிற சங்க்ருதி கோத்ரம்...இத்யாதி..இத்யாதி...

    அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிக்கறேன்.

    அது சரி. பகவானுக்கு முன்னாடி நிக்கும்போதே ' நான் ' அழிஞ்சுபோயிடனுமே !! இந்த ' நானு' க்குத்தானே சர்மா, கோத்ரம், நக்ஷத்ரம் எல்லாம் !!

    அப்பறம் என்ன கோத்ரம் !! சர்மா பெயர் !! நக்ஷத்ரம் எல்லாம் !!

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. அருமையான அத்வைத வேதாந்தம் ... அந்த கதியை அடைவதர்க்குத்தானே இந்தப்பாடெல்லாம்

      Delete
  8. அருமை அருமை ரவி..உங்கள் குரல் உங்கள் எழுத்தை போல வசீகரமாக இருக்கிறது.

    ReplyDelete
  9. வர வர தமிழ் பேசினாலே கேவலாமா நினைக்கிறாங்க தமிழ் நாட்டுல
    இதெல்லாம் நினைச்சா கோபம்தான் வருது :)

    ReplyDelete
  10. அருமை முருகா தமிழில் நீங்க அர்ச்சனை செய்த விதம் அவ்வளவு அருமை.ஒருமுறையேனும் இது போல கேட்க உத்தேசித்து இருக்கிறேன் அடுத்த முறை கோவிலுக்கு செல்லும் பொழுது .பட்டையை கிளப்பிட்டீங்க.:)

    ReplyDelete
  11. நல்ல பேச்சு. நல்ல தகவல்கள்.
    ஆனால் எல்லாவற்றையும் 'Cha ' என்று உச்சரிக்கிறீர்கள்.
    chirippu , channidhi , chiva ..இதை கொஞ்சம் திருத்திக் கொள்ளவும்.

    ReplyDelete
  12. நல்ல பேச்சு. நல்ல தகவல்கள்.
    ஆனால் எல்லாவற்றையும் 'Cha ' என்று உச்சரிக்கிறீர்கள்.
    chirippu , channidhi , chiva ..இதை கொஞ்சம் திருத்திக் கொள்ளவும்.

    ReplyDelete
  13. அன்பின் சமுத்ரா
    Thanks for the feedback!
    Actually thatz the right pronunciation, as per thol kaapiyam:)
    I was also not aware of this before; But my dearest thOzhan corrected me!
    He didnt quote any tholkaapiyam but said it was தெக்கத்தி வழக்கு and I accepted him!

    தொல்காப்பிய விதிகளின் படி, எழுத்தை ஒலிக்கும் விதம் உண்டு!
    "சகார ஞகாரம் இடை நா அண்ணம்" என்பது தொல்காப்பிய - எழுத்ததிகாரம்!

    அதாச்சும், ச எப்படி ஒலிக்கும்-ன்னா நாவின் இடைப்பகுதி, மேல் அண்ணத்தைத் தொடும் போது வரும் ஓசை! செஞ்சிப் பாருங்க! cha-ன்னு தான் வரும்:)

    சுந்தரரை, chuntharar என்று தான் தேவாரத் தளங்களிலும் எழுதுவார்கள்! இதோ, http://www.shaivam.org/nachundh.html

    ReplyDelete
  14. விளக்கத்துக்கு நன்றி.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. விளக்கத்துக்கு நன்றி.

    ReplyDelete
  17. அருமை நண்பரே :-))))))))))))))))

    ReplyDelete
  18. தங்களின் வியப்புறும் தமிழ்ப்பற்று கண்டு மிகவும் மகிழ்ந்தோம் ..
    தணிகை தமிழ்க்குமரன் தங்களை காப்பானாக

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP