புதிரா? புனிதமா?? - பாகம் 2
விடைகள் பதிப்பிக்கப்பட்டன! (அப்பாடா, நியுயார்க் போக்குவரத்து நெரிசலில் தப்பித்து, இதோ வீடு வந்து சேர்ந்து, நேரே தமிழ்மணம்!)
சரியான விடைகளைக் காணப் பதிவின் இறுதிக்கு scroll செய்யவும்!
முடிவுகள் இதோ!
10/10
குமரன், ஜெயஸ்ரீ
9/10
வெட்டிபையல் (பாலாஜி)
7/10
இராமநாதன், சிவமுருகன், கீதாம்மா
வெற்றிக் கனி பெற்றவர்க்குப் பரிசை இரவு, மின்-மடல் வழியாக அனுப்பி வைக்கிறேன்.......
பங்கேற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வென்றவர்க்குச் சிறப்பு வாழ்த்துக்கள்!!
இது போல் அடுத்தது தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றித் தொடரலாமா?
நீங்க என்ன நினைக்கிறீங்க?
----------------------------------------------------------------------------------------------
இந்த முறை, தலைப்பைப் பாத்துட்டு, யாரும் வலையில் வந்து விழ மாட்டார்கள் என்ற நம்பிக்கை! என்ன சொல்றீங்க :-)
இதோ இராமாயணக் கேள்விகள்;
வெட்டிப்பையலாரின் இட்(ஷ்)டப்படி!!
ஒவ்வொரு கேள்விக்கும் ஒரே சரியான விடை மட்டுமே.
கலந்து பேசலாம்; பிட் அடிக்கலாம்;
ஆனா கூகுளாண்டாவரை மட்டும் வேண்டக் கூடாது!
....என்று சொல்லலாம் என்று இருந்தேன்!
ஆனா இதெல்லாம் நடக்கற விஷயமா?
"பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைந்திருக்கும் கூகுள் ஆனந்தமே", ன்னு பெரியவங்களே பாடியிருக்காங்களே! :-)
சரியான விடைகள் நாளை மாலை 07:00 மணிக்கு (நியுயார்க் நேரப்படி) அறிவிக்கப்படும்!
//வாங்க வடூவூர் குமார் சார்,
ஆஆஆம், உங்க பின்னூட்டம் பாத்தப்புறம் ஒரு ஐடியா!
பரிசாக:
முதல் மூவருக்கு,
வடூவூர் ராமனின் அழகுத் திருமுகம், படமாக!
ஓகே-வா?
//
| 1 | இராம காவியம் என்ற நூலை இயற்றிய முருகன் அடியவர் யார்? | 1 அ) அருணகிரி |
| 2 | இராவணன் சேனையின் கொடி எது? | 2 அ) சிம்மம் |
| 3 | ஆஞ்சநேயர், யோக நிலையில் அமர்ந்து, ராமனுக்கு இன்றி, இன்னொரு அவதார மூர்த்திக்குப் பணி புரியும் தலம் எது? | 3 அ) ராமேச்வரம் |
| 4 | கம்ப ராமாயணம் எங்கு அரங்கேற்றப்பட்டது? | 4 அ) திருப்பதி |
| 5 | "கெளசல்யா சுப்ரஜா ராமா", என்று ராமனைப் பாட்டு பாடித் துயில் எழுப்பியவர் யார்? | 5 அ) கோசலை |
| 6 | போரில் தோற்று விடுவோம் என்று எண்ணி, இந்திரசித்து கடைசி நேரத்தில் செய்த யாகத்தின் பெயர் என்ன? | 6 அ) அஸ்வமேதம் |
| 7 | இராமன் முறித்த சிவ துனுசின் பெயர் என்ன? | 7 அ) கோதண்டம் |
| 8 | இலங்கைப் பாலத்தைக் கட்டும் பணியை இராமன் யாருக்கு அளித்தான்? | 8 அ) விஸ்வகர்மா-வருணன் |
| 9 | இலக்குவனைப் பிழைக்க வைத்த சஞ்சீவினி மூலிகையைப் பறித்தவர் யார்? | 9 அ) ஜாம்பவான் |
| 10 | பொதுவாக, இராமனைக் குடும்ப சகிதமாக, நின்ற நிலையில் உள்ள உருவமாகத் தான் ஆலயங்களில் காண முடிகிறது. இலக்குவன் அருகில் நிற்க, இராமனும், சீதையும் அமர்ந்த நிலையில் உள்ள ஆலயம் எது? | 10 அ) மதுராந்தகம் |
இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!
1 அ) அருணகிரி ஆ) நக்கீரர் இ) வாரியார் ஈ) பாம்பன் சுவாமிகள் |
2 அ) சிம்மம் ஆ) சூர்ய சந்திரன் இ) வீணை ஈ) பனை மரம் |
3 அ) ராமேச்வரம் ஆ) சோளிங்கபுரம் இ) காசி ஈ) துவாரகை |
4 அ) திருப்பதி ஆ)தஞ்சை இ) திருவரங்கம் ஈ) தேரழுந்தூர் (கம்பன் பிறந்த ஊர்) |
5 அ) கோசலை ஆ) கைகேயி இ) வசிட்டர் ஈ) விசுவாமித்திரர் |
6 அ) அஸ்வமேதம் ஆ) நிகும்பலை இ) சத்ரு சங்காரம் ஈ) பிராயச்சித்தம் |
7 அ) கோதண்டம் ஆ) சாரங்கம் இ) பினாகம் ஈ) தனுர்தரம் |
8 அ) விஸ்வகர்மா-வருணன் ஆ) அனுமன்-அங்கதன் இ) அனுமன்-ஜாம்பவான் ஈ) நளன்-நீலன் |
9 அ) ஜாம்பவான் ஆ) அனுமன் இ) சுசேணன் ஈ) விபீஷணன் |
10 அ) மதுராந்தகம் ஆ)அயோத்தி இ) பத்ராசலம் ஈ) திருப்புல்லணை (திருப்புலாணி) |
----------------------------------------------------------------------------------------------
இதோ விடைகள்:
| 1 | இராம காவியம் என்ற நூலை இயற்றிய முருகன் அடியவர் யார்? | 1 இ) வாரியார் சுவாமிகள் எளிய உரைநடையில், குறிப்பாக இளைஞர்கள் ராமாயண நுட்பங்களை அறிய உதவும் நூல் |
| 2 | இராவணன் சேனையின் கொடி எது? | 2 இ) வீணை "வீணைக் கொடியுடைய வேந்தனே" பாட்டு நினைவுக்கு வருதுங்களா? இராவணன் சிறந்த வீணை இசைக் கலைஞன்; சாம கானம் இசைத்து சிவனாரை மகிழ்வித்தவன்; அவன் கொடியிலும் வீணை தான்! |
| 3 | ஆஞ்சநேயர், யோக நிலையில் அமர்ந்து, ராமனுக்கு இன்றி, இன்னொரு அவதார மூர்த்திக்குப் பணி புரியும் தலம் எது? | 3 ஆ) சோளிங்கபுரம் அரக்கோணம் அடுத்துள்ள சோளிங்கபுரம்; 108 திவ்ய தேசங்களில் ஒன்று; இங்கு தான் ஆஞ்சநேயர் சிறிய மலையில், யோக நிலையில் அமர்ந்துள்ளார்; அவர் கையில் சங்கு சக்கரங்கள்! பெரிய மலையில் உள்ள நரசிம்மரைப் பார்த்தவாறு அவர் பணி செய்து வீற்றிருக்கிறார். |
| 4 | கம்ப ராமாயணம் எங்கு அரங்கேற்றப்பட்டது? | 4 இ) திருவரங்கம் அரங்கத்தான் கோவிலில், சிரக்கம்பம் செய்த நரசிம்மர் சந்நிதியின் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. மூல நூலில் கூறாத பிரகலாதன் கதையைக் கம்பர் இதில் கூறுவதால் ஆட்சேபம் எழுந்தது. ஆனால் இறைவன் அருளால், நரசிம்மர் சிரக் கம்பம் செய்து இதற்கு ஒப்புதல் அளித்தார். அரங்கேற்றம் தடையின்றி நிறைவேறியது! |
| 5 | "கெளசல்யா சுப்ரஜா ராமா", என்று ராமனைப் பாட்டு பாடித் துயில் எழுப்பியவர் யார்? | 5 ஈ) விசுவாமித்திரர் யாகம் காக்க சென்ற இடத்தில் தான், விசுவாமித்திரர் இவ்வாறு பாடித் துயில் எழுப்பினார். இன்று பெரும்பாலும், பல ஊர்களின் பெருமாள் குறித்து பாடப்படும் சுப்ரபாதங்களும், இந்த வரிகளைத் தான் முதல் அடியாக இட்டுத் தொடங்குகின்றன. |
| 6 | போரில் தோற்று விடுவோம் என்று எண்ணி, இந்திரசித்து கடைசி நேரத்தில் செய்த யாகத்தின் பெயர் என்ன? | 6 ஆ) நிகும்பலை நிகும்பலா தேவியின் மேல் செய்த யாகத்தைத் தான் பாதியில் நிறுத்தி, ஹனுமன் சொல்ல, இலக்குவன் போரிலே இந்திரசித்தைக் கொன்றான். |
| 7 | இராமன் முறித்த சிவ துனுசின் பெயர் என்ன? | 7 இ) பினாகம் சிவானாரின் வில்லுக்கு "பினாகம்" என்பதே பெயர். பினாகபாணி = சிவன்; கோதண்டபாணி = இராமன்; சாரங்கபாணி = பெருமாள் |
| 8 | இலங்கைப் பாலத்தைக் கட்டும் பணியை இராமன் யாருக்கு அளித்தான்? | 8 ஈ) நளன்-நீலன் இவர்கள் பெற்ற சாபத்தால் தான், நீரில் போட்டது எல்லாம் மிதக்க, இவர்களையே பாலத்தின் பணிக்கு இராமன் பெரிதும் பயன்படுத்தினான்; மற்ற வானரப்படைகளும், அணிலும் கூட உதவி செய்தன. |
| 9 | இலக்குவனைப் பிழைக்க வைத்த சஞ்சீவினி மூலிகையைப் பறித்தவர் யார்? | 9 இ) சுசேணன் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தது என்னவோ அனுமன் தான்; ஆனால் எது அந்த மூலிகை என்று தெரியாததால் தானே அவ்வாறு செய்தான்! சுசேணன் வானரப் படையின் மருத்துவன்; அவன் தான் மலையில் உள்ள மூலிகையைப் பறித்து, இலக்குவனை எழுப்பியது! |
| 10 | பொதுவாக, இராமனைக் குடும்ப சகிதமாக, நின்ற நிலையில் உள்ள உருவமாகத் தான் ஆலயங்களில் காண முடிகிறது. இலக்குவன் அருகில் நிற்க, இராமனும், சீதையும் அமர்ந்த நிலையில் உள்ள ஆலயம் எது? | 10 இ) பத்ராசலம் ஆந்திராவில் உள்ள தலம்; இங்கு தான் சீதா ராம கல்யாணம் மிகப் பிரபலம். இங்கு தான் இராமன், சீதையை அணைத்தவாறு, தம் மடியில் இருத்தி, அமர்ந்த நிலையில் உள்ளான் |














































