Tuesday, September 19, 2006

அண்ணனுக்கு வணக்கம்!

உலகம் முழுமைக்கும் முதற் பொருளாய், முழுமைப் பொருளாய் விளங்கும் வேழ முகத்தான் பாதங்களைப் பற்றிக் கொண்டேன்.
இந்த புரட்டாசி மாதத்தில் என் தமிழ் பதிவுகளுக்குப் பிள்ளையார் சுழி போடுகிறேன்.
மங்கள நாயகனே, பக்கத் துணை இருந்து கூட்டிச் செல்வாய், எமைக் காப்புச் செய்வாய்!










நீ ரொம்ப சமத்து.
உலகத்தின் முழு முதல் கடவுளா இருந்தாலும் மஞ்சளைப் பிடிச்சு வெச்சா, வந்து இறங்கி விடுவாய்.
குழந்தைகளுக்குக் குதூகலமான நண்பனே! சிறுவருடன் சிறுவராய் விளையாடவும் செய்வாய்; பெரிய ஞானிகளைக் கைதூக்கி விடவும் செய்வாய்!

அப்படித் தான் ஒளவையாரை அலேக்காகத் தூக்கி, கயிலாய மலையின் மேல் நிறுத்திய உன் கருணையைச் சொல்வதே எனது அடுத்த பதிவு.

கதை மட்டும் போதுமா? தமிழும் வேண்டுமே! விநாயகர் அகவல் பற்றியும் பார்ப்போம்!

உயர்ந்த ஞான யோகத்தை, எளிய தமிழில், "கிடுகிடு" எனச் சொல்கிறாள் இந்த "குடுகுடு" ஒளவை.
ஏன் அவளுக்கு இந்த “கிடுகிடு” அவசரம்?

10 comments:

  1. கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்
    குணமுயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்திடுவே
    என்ற பாரதியின் வழிகாட்டலோடு ஆரம்பித்துவிட்டீர்கள் இனி வல்லமை வந்து சேர்ந்துவிடும்.நிறைய எழுதுங்கள் நிறைவாக எழுதுங்கள்

    ReplyDelete
  2. தி.ரா.ச, மிக்க நன்றி.

    ஆரம்பித்தவுடனேயே, கிடைத்த தங்கள் பின்னூட்டத்தை ஆசியாகவே கருதுகிறேன்.
    //நிறைய எழுதுங்கள் நிறைவாக எழுதுங்கள்//
    அவ்வண்ணமே செய்கிறேன். தங்கள் ஆலோசனைகளையும் கேட்டுப் பெறுகிறேன்!

    ReplyDelete
  3. கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
    கணபதி என்றிடக் காலமும் கைதொழும்
    கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
    கணபதி என்றிடக் கவலைகள் தீருமே

    ரவிசங்கர். முதல் பதிவு அருமையாக இருக்கிறது. சுருக்கமாக நன்கு சொல்லியிருக்கிறீர்கள். படங்களும் சிறப்பு.

    ReplyDelete
  4. வாங்க குமரன்.
    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!
    //
    கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
    கணபதி என்றிடக் கவலைகள் தீருமே//

    குமரன் அண்ணனாச்சே கணபதி! அண்ணனை விட்டுக் கொடுப்பீங்களா? :-)
    பாடல் கொடுத்ததற்கு மீண்டும் நன்றி!

    ReplyDelete
  5. சின்ன வயசுல இருந்து கதை கேக்கறதுனாவே எனக்கு ரொம்ப இண்ட்ரெஸ்ட்... உங்க கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    One more thing, my blog url is http://vettipaiyal.blogspot.com/

    U have missed "i" in vettipa"i"yal

    I - நான் என்ற அகங்காரம் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம் ;)

    "நான் மறையை கற்றவனா ஞானி,
    நான் மறையக் கற்றவனே ஞானி" ;)

    ReplyDelete
  6. வாருங்கள் பாலாஜி.
    உங்களின் சரியான சுட்டியைக் கொடுத்து விட்டேன். "சுட்டிக்" காட்டியமைக்கு நன்றி!

    Lowell எப்பதி இருக்கு? பிடிச்சிருக்கா? Tsongas Arena-வில் நம்ம கலை நிகழ்ச்சிகள்-ல்லாம் நடக்குமே. நீங்க இந்நேரம் பின்னி எடுத்திருப்பீங்க. தெரியாதா? :-)

    //நான் மறையை கற்றவனா ஞானி,
    நான் மறையக் கற்றவனே ஞானி" ;)//
    ஆகா; நீரல்லவோ புலவர்! (திருவிளையாடல் ஸ்டைலில் படிக்கவும்)

    ReplyDelete
  7. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    வாருங்கள் பாலாஜி.
    உங்களின் சரியான சுட்டியைக் கொடுத்து விட்டேன். "சுட்டிக்" காட்டியமைக்கு நன்றி!
    //
    மிக்க நன்றி KRS...

    //Lowell எப்படி இருக்கு? பிடிச்சிருக்கா? //
    பிடிச்சிருக்குங்க!!! முன்ன Nashuanu NHல இருந்தன்... அது ரொம்ப நல்லா இருந்துச்சு.

    //Tsongas Arena-வில் நம்ம கலை நிகழ்ச்சிகள்-ல்லாம் நடக்குமே. நீங்க இந்நேரம் பின்னி எடுத்திருப்பீங்க. தெரியாதா? :-)
    //
    நமக்கு அதெல்லாம் தெரியாதுங்க... விசாரிக்கறேன்...

    //ஆகா; நீரல்லவோ புலவர்! //
    கேள்வி கேக்கமலே சொல்லிட்டீங்களே!!! மிக்க நன்றி

    ReplyDelete
  8. கண்ணபிரான்,
    சொல் வலிமையும் ஆளுகையும் நன்றாக இருக்கிறது.
    உங்கள் பதிவில் நல்ல தமிழில்
    (நான்) எழுத கணபதி அருளட்டும்.
    மிக மிக நன்றி.

    ReplyDelete
  9. வாங்க வள்ளி.
    //சொல் வலிமையும் ஆளுகையும் நன்றாக இருக்கிறது//
    பெற்றோர் செய்த உதவி, இறைவன் கொடுத்த சிறு கொடை. என்னாலானது பெரிதாக ஒன்றுமில்லை. இருப்பினும் தங்கள் ஊக்கத்துக்கு நன்றி!

    //நல்ல தமிழில் (நான்) எழுத//
    ஆகா...ஆசான் நீங்க இப்படி சொன்னா, நாங்க-ல்லாம் எங்க போறது :-)

    ReplyDelete
  10. இந்த இடுகை உங்களுக்கு ஆச்சரியமாயிருந்தால்!... ஆம் அது உண்மை தான் , உங்கள் பதிவு கீழிருந்து மேலாக படிக்க தொடங்கியிருக்கிறேன்

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP