Saturday, December 17, 2011

கோதைத்தமிழ்02: பைய @ChPaiyan

வாங்க, வாங்க...கோதைத் தமிழ்த்தேரில் இன்று கன்னடமும் கொஞ்சிப் பேசுகிறது:)

இன்னிக்கி @ChPaiyan (ச்சின்னப் பையன்) பேசுறாரு!
அது என்ன ச்ச்ச்ச்சின்ன?:)
கேட்டுட்டு நீங்களே சொல்லுங்க; இவரு சின்னப் பையனா, இல்லை பல விடயங்கள் அறிந்த பெரிய பையனா-ன்னு?:))



நன்றி ச்சின்னப்பையரே:)
கன்னடமும் களிதமிழும் சேர்த்துக் குடுத்த சுவைக்கு நன்றி!


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ? பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன், "அடி" பாடி,
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாள் காலே நீராடி,



மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக் குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆ(கு)ந் தனையும் கை காட்டி,
உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்து, ஏல்-ஓர் எம் பாவாய்
.


மேலோட்டமான பொருள்: நேற்றிலிருந்து காதலிக்கத் துவங்கியாச்சி! அவனே எனக்கு வரணும்-ன்னு நோன்பு!
நான் மட்டும் தனியாவா நோன்பு? சேச்சே! நீங்க நண்பி-கள்! நீங்களும் என் கூட விரதம் இருக்கணும்டீ! (ஐயோ பாவம், காதலர்களின் நண்பர்கள்:)))

* நெய், பாலு-ன்னு கலந்து கட்டித் திங்காம,
* காலையிலேயே நீராடி,
* மை,மலர்-ன்னு புற அலங்காரம் ரொம்ப இல்லாம, அக-அலங்காரம் செய்துகிட்டு...

* யாரு பத்தியும் குறளை (கோள்) சொல்லாம = பொண்ணு உசாரு:) தன் காதலை ஊரெல்லாம் பேசிப் பரப்பிடுவாங்களோ-ன்னு பயந்து, கோள் சொல்லாமையை நோன்புக்குள் கொண்டாந்து வைக்குறா:)

* ஐயமும், பிச்சையும் = மற்றவர்களுக்கு இயன்ற வரை உதவி செய்வோம்! அதையும் கடமையே-ன்னு செய்யாம, "உகந்து" செய்வோம்!

=>ஐயம் = ஒரே நிலையில் உள்ளவர்களுக்கு குடுப்பது!
=>பிச்சை = தன்னிலும் மேலான/ கீழான நிலைக்கு குடுப்பது!
துறவி/ பெரியவர்கள் எடுத்துக் கொள்வதும் பிச்சை தான்! ஏழைகள் எடுத்துக் கொள்வதும் பிச்சை தான்!
எனவே யாரையும் "பிச்சை" என்று கேவலமாகப் பேசுவது வேண்டாம்!



இன்றைய எழிலான சொல் = பைய
கோயமுத்தூரு, கொங்கு, தென் தமிழ்நாட்டுல அதிகம் புழங்கும் சொல் = "பைய"! பையப் பேசுங்க-ப்பு!

பைய = மெல்ல...
இது நற்றமிழ்ச் சொல் தானா? ஏதோ பேச்சு வழக்கு சொல்லு மாதிரி-ன்னா இருக்கு?
அட போங்கய்யா! சென்னைக்காரங்களுக்குச் செந்தமிழ் வாசம் என்னிக்குத் தான் புரிஞ்சிருக்கு?:)))
தென்பாண்டித் தமிழாலத் தான், இன்னிக்கும் பல நல்ல சொற்கள், தமிழில் உயிர்ப்போடு உள்ளன!

* பைம்மை = மென்மை
* பையப் போ = மெல்ல போ!

...........யான் நோக்கப்/  பசையினள் "பைய"   நகும்!
-ன்னு குறளே, "பைய"ன்னு தான் சொல்லுது! ஆண்டாளும் சொல்லுறா! தெக்கத்திக்காரங்க, கொங்கு மக்கள் இன்னிக்கும் சொல்லுறாங்க!

நகும்-ன்னாலே மென் சிரிப்பு! அப்போ, பைய நகும்-ன்னா...எவ்வளவு மெல்லிய சிரிப்பு? கணக்கு போட்டுக்குங்க!
பையத் துயின்ற பரமன் = இறைவனுக்குத் தூக்கம் ஏது? அறி துயில்! அதுவும் மெல்ல்ல்ல்ல்லிய துயில்! அதுக்கு கவிஞர். ஆண்டாள் ஆளும் சொல் = "பைய"!

வாய் விட்டுச் சொல்லிப் பாருங்க = பைய்ய்ய்ய்யத் துயின்ற....அப்படியே மெத்தென்ற கட்டிலில்...மெல்லிய தூக்கம் வருது-ல்ல?:)

பைய = உரிச்சொல்!
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்-ன்னு உங்க காதில் எப்பவோ விழுந்திருக்குமே?:)

கார்க்கி தோழியொடு பைய வந்தான்!
* கார்க்கி & தோழி = பெயர்ச்சொல்
* வந்தான் = வினைச்சொல்
* (தோழி) ஒடு = இடைச்சொல்
* பைய = உரிச்சொல்!

கார்க்கியை உரிச்சி வச்சாச்சி, போதுமா?:)
நாளைக்கி பார்ப்போம், மயில் மேல வரும் ட்வீட்டர் ஒருவர் Podcast-இல் பேசுவதை:)

14 comments:

  1. அருமை, பெரிய பையன்

    ReplyDelete
  2. ஸ்ரீ பாத ராயரையும் ஆண்டாளையும் எவ்வளவு அழகா ஒப்பிட்டு சொல்லியிருக்கார் சின்னப் பையன். நோன்பில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் எதை எல்லாம் விலக்க வேண்டும் என்பதும். இந்த இரண்டாவது பாசுரம் அதை விளக்குகிறது. பைய்ய தின்னால் பனையும் தின்னலாம் என்பதும் ஒரு பழமொழியாச்சே :-)
    amas32

    ReplyDelete
  3. :clap: @ChPaiyan நீங்கள் குறிப்பிடும் ஶ்ரீபாதராயர் பாட்டுக்கு லிங்க் கொடுங்களேன். அந்த இடம் சரியாக கேட்கவில்லை.

    ReplyDelete
  4. பை தி வே, Ch - என்ற ச் பற்றி ஒரு குறிப்பு:

    இங்க தீக்குறளைச் சென்றோதோம்னு போட்டிருக்காங்க.

    எனக்குத் தெரிஞ்சவரை அது தப்பு. நீங்க இங்க கொடுத்திருக்காமாதிரி ஒற்று இல்லாம தான் வரணும்.

    ச் போட்டா, தீமையான குறளைச் (குறள் + ஐ) சென்று ஓதோம்-னு பொருள் வருது.

    ஆனா இங்க 'குறளை' என்பது தான் சொல் (புறம் பேசுவது). அதுனால ச் தேவையில்ல்லை.

    ReplyDelete
  5. There is a typo in my earlier comment. It should read as பைய, not பைய்ய.
    amas32

    ReplyDelete
  6. Very nice! பைய போன்ற வார்த்தைகள் இன்னும் பேச்சு வழக்கில் இருப்பது சந்தோஷம்.

    Shruthi

    ReplyDelete
  7. பக்தி பேகு என்னும் அந்த பாடல் இங்கு கேட்கலாம்.
    http://www.youtube.com/watch?v=pbvrWIMbWIc

    பாடல் வரிகள் இங்கு உள்ளது. பொருள் விளக்கம் எங்கேயும் கிடைக்கவில்லை.
    http://www.aarshavani.org/mainpage/lyrics/bhakthibekuvirakthibekuenglish.html

    விரைவில் http://dasar-songs.blogspot.com தளத்தில் பொருள் போட்டுவிடுகிறேன். நன்றி.

    Sathya (@ChPaiyan)

    ReplyDelete
  8. சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பயன்படுத்த படும் வார்த்தை "பைய". மெதுவா மெதுவா என்பதையே "பைய பைய"ன்னு தான் சொல்லுவாங்க.

    ReplyDelete
  9. மிக அருமையான பதிவு. மார்கழியில் கண்ணனைக் காதலிப்போம்.

    ReplyDelete
  10. கோள் சொல்லக்கூடாது வீட்டுக்கு வர்றவங்ககிட்ட மட்டும் இல்லை வீடு வீடா தேடிப் போயும் சொல்லக்கூடாது. (ஒரு பெண் மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான தெரியும்)
    பையத் துயின்ற இந்த பைய என்பது மதுரை பக்கமும் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்..சம்பந்தரும் பையவே சென்று பாண்டியனுக்காகவேன்னார் ..(சம்பந்தர் சீர்காழிக்காரர்)..
    சின்னப்பையன் சார் ஆண்டாளுக்குத்தான் சின்னப்பையன்.நமக்கு பெரியவரே...நல்லா இருந்தது..

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP